Thursday, April 15, 2010

இட்ட அடி நோக..

‘ராணி! இங்க வாம்மா. வாயெல்லாம் வறண்டு போவுது. ஜில்லுன்னு ஃபிரிட்ஜ்ல இருந்து தண்ணியெடும்மா. இங்க வா! குனி! ம்ம்ம்ம்.ப்ச்.ப்ச்ச்.ப்ச்ச். நல்லாயிருப்படிம்மா. ஒரு குறையும் இருக்காது உனக்கு. மணி பத்தாக போகுதே. சாப்புடும்மா.
‘ஏ வேலக்கார முண்ட. நீயாருடி என்ன தடுக்கறது? கொன்னு போட்டுடுவேன் தெரிஞ்சிக்கோ. குளிப்பாட்ட, சாப்பாடு குடுக்கத்தான் உன்ன கூலிக்கு வச்சிருக்கு. என்னைஅதிகாரம் பண்ற வேல வெச்சிக்காத! 
‘ஏம்மா? கலியாணமாகி 3 வருஷமாச்சிங்கறியே. டாக்டர்ட போய் பாரும்மா. வயசானா புள்ள நிக்கறது கஷ்டம் ராணி.’

இது ஒரு உதாரணம். என்றோ எப்போதோ பேசியவை அல்ல. குறைந்தபட்சம் 2 நிமிட இடைவெளிமுதல் 20 நிமிஷ இடைவேளைகளில் பேசியவை.

டேய்! எழுந்திருடா. திருடன் வந்து பணத்தையெல்லாம் எடுத்துண்டு போய்ட்டாண்டா. நான் பார்த்து சத்தம் போட்டேன். சன்னலுக்கா பூந்து ஓடிட்டான்.

அம்மா தூங்கும்மா. யாரும் வரலை. சன்னல் வழியா எப்படிம்மா ஓடுவான். இது மாடிம்மா. கனவு கண்டிருப்ப தூங்கு.

கட்டேல போறவனே. பொணமாட்டம் தூங்குவ. உனக்கென்ன தெரியும். எடுத்த காச வீசிட்டு போயிட்டான் பாரு. நான் பொய்யா சொல்றேன்.

உடனே எழுந்து, விளக்குப் போட்டு பார்த்து, இல்லைம்மா. எங்கையும் காசு இறையலம்மா. நீயே பாரு. கனவுதான் கண்டிருக்க என்றாலே ஒழிய தூங்க முடியாது. ஒரு நாள், இரண்டுநாள் இந்த விளையாட்டு விளையாடலாம். தினமும் என்றால்? தோ! சத்தம் போடாம படு. எல்லாரும் சண்டைக்கு வராங்க. அம்மால்ல! முடியலைம்மா எனக்கு. கொஞ்சம் தூங்கணும்மா என்றாவது தூங்கத் தோணும்.

ஒரு நாள் ரகசியமாக, ஏய்! இங்க வாடா. திருட்டுக் கடங்காரன் நான் தூங்கறேன்னு என் செயினைத் திருடி வெளிய போட்டு ஒளிஞ்சிருக்கான். அசந்தா ஓடிடுவான். மெதுவா அறைக்கதவை இழுத்து பூட்டிட்டு கத்து என்பவளை என்ன சொல்ல? விடிய விடியக் காத்திருந்து சர்வீஸ் ஏரியாவில் பார்த்தால் செயின் கிடக்கும். தானே போட்டிருப்பாள். அடுத்த நாள் கழுத்தில் செயின் இருக்கும் போதே நாசமாப் போறவனே. என் செயினைத் திருடி வித்துட்டியே. நீ உருப்படுவியா என்றழுபவளை எப்படி சமாதானம் செய்ய?

ஒரு அடி எடுத்து வைக்க முடியாது. நிற்க முடியாது. சிறுநீர் கழிக்க வேண்டுமெனச் சொல்லத் தெரியாது. ஏதோ ஒரு நொடியில், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய், சீராக நடந்து, ஸ்டூல் இழுத்துப் போட்டு, தாழ்ப்பாளைத் திறந்து விட்டு லேட்ச் திறக்கத் தெரியாத, முடியாத தருணங்களில், என் பொண்ணு கலியாணத்துக்கு போகவிடாம அடைச்சி வெச்சிருக்காளே இந்த வேலைக்கார முண்ட இவளைக் கேட்பாரே இல்லையா என்று அலறியபடி வெட்டிய மரமாய் விழுந்து தலையில் அடிபட்டு ரத்த காயம் உண்டாகும்.

பணிப்பெண் என்ன செய்வாள்? குழந்தை மாதிரி தூக்கியெடுத்து துடைத்து மருந்திட்டு ஏம்மா இப்புடி காயம் பட்டுக்கறீங்க? எவ்வளவு வலிக்கும் என்றால் அழுவதோ அல்லது சலிப்பாய் திட்டிவிட்டால் அடியேய்! ஆடதடி. ஒரு நிமிஷம்! ஒரே ஒரு நிமிஷம். ஊரக்கூட்டி என்ன தடியால அடிச்சி மண்டைய பொளந்துட்டான்னு கத்தினா போலீஸ் என்னைத்தான் நம்பும். தெரிஞ்சிக்கோ என்பவளை என்னதான் செய்ய?

கால் ஊன்றி நிற்பதைப் பார்த்தால் அவ்வளவு லகுவாக இருக்கும். சுவற்றில் ஊன்றியிருக்கும் கை மெதுவே தொட்டாற்போல்தான் இருக்கும். அந்தக் கையை அசைப்பதோ, காலை நகர்த்துவதோ இயலாத காரியம். பின்புறமாக அணைத்து, பாதங்களின் கீழ் மண்ணுளிப் பாம்புபோல் நம் பாதத்தை நுழைத்துத் தாங்கி ஒரே ஒரு இஞ்ச் நகர்த்திவிட்டால் போதும். அப்புறம் நம் பாதத்தை நகர்த்திக் கொண்டுவந்து படுக்கையில் விடலாம்.
ஒரு புறம் ப்ரயத்தனத்தாலும், மறுபுறம் நைந்து நாரான உடம்பை, எங்கேயோ விழுந்து எங்கு ஊமைக்காயம் பட்டுக் கொண்டு, எங்கு வலிக்கிறது என்று கூடச் சொல்லத் தெரியாதவளை குண்டுக்கட்டாய் இப்படி தூக்கிப் போட வேண்டியிருக்கிறதே என்ற வலியாலும், நெஞ்சுக்கூடு வெடிக்கும்.

நம்மையறியாமலே தினம் சிமிட்டுகிறார்போல் ஆயிரக்கணக்கில் எச்சில் கூட்டி முழுங்குகிறோமே. தொண்டைக்குக் கீழ் ஒன்று ஏறி இறங்குகிறதே, அப்படி அந்த தசையை இயங்க மூளை கட்டளையிட மறுத்தால் என்னாகும்? பசிக்குது என்று அழத்தெரியும். வாயில் சோற்றையோ, கஞ்சியையோ வைத்தால் விழுங்கத் தெரியாது. முடியாது. அடைத்துக் கொண்ட குழாய்க்கு பைபாஸ் மாதிரி ஏதோ செய்து அதில் கஞ்சி, ஹார்லிக்ஸ் என்று ஊற்றி எத்தனை வருடங்கள் காப்பாற்ற?

முக்கியமாக, பெட்சோர் வராமல் அவ்வப்போது புரட்டிவிட்டு, நனைத்து விட்ட உடுப்பை மாற்றி, படுக்கையை சரிசெய்து தூங்கச் செய்யும் வேளைகளில், உதடு பிதுங்க முகம் வருடி பாவம்டா நீ என்னும்போது யார் பாவத்துக்கு அழ?

பர்கின்ஸன்ஸ் டிஸீஸ் என்று நடந்து வருவதைப் பார்த்தே கண்டுபிடிக்கும் மருத்துவர் இருக்கத்தான் செய்கிறார். இந்த இழவு அதுதான் எனத்தெரிந்து அவரிடம் நேரத்தே அழைத்துச் செல்லத்தான் நமக்குத் தெரிவதில்லை. நின்னா தள்ளுதுடா என்றால் பி.பி. மாத்திரை போட்டியா, ராத்திரி தூங்கினியா எனக்கேட்கவும், கால் கை எல்லாம் மறத்துப் போகுதுக்கு கோடாரித் தைலமும் வாங்கிக் கொடுத்தால் முடிந்ததா என்ன?

முழங்கால், முழங்கையை மடக்க முடியலை என்றால் ருமாடிசம்!. வயசாச்சின்னா அப்படித்தான். தென்னமரக்குடி எண்ணெய் தேய்ச்சா சரியாயிடும் என்று வேலையைப் பார்க்கத்தானே அய்யா தெரியும் நமக்கு . இப்படியெல்லாம் நோயிருக்கிறதென்று யாருக்கு தெரியும்?

(தொடரும்)

41 comments:

Ramesh said...

வாசிச்சுட்டு வாரன்

நிஜாம் கான் said...

ஏ! இருங்க படிச்சிட்டு வாரேன்!!!!

பிரபாகர் said...

இவ்வளவு கொடூரமான வியாதியா அது? படிக்கும்போதே பயமா இருக்கு...

பிரபாகர்...

Unknown said...

இதைப் பத்தின விழிப்புணர்வும் மருத்துவ வசதிகளும் மக்களுக்குத் தருவது யார் கடமை?

வருசத்துக்கு ஒரு தடவை மெடிக்கல் செக்கப் செஞ்சா நல்லது - அப்பிடின்னு நான் சொல்லிட்டுப் போயிடுவேன். ஆனா அதுக்கான செலவை யார் ஏத்துக்குவா?

அரசாங்கம், ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல இருக்குறவங்களுக்கு இலவசமா மெடிக்கல் செக்கப் செஞ்சா நல்லது.

வந்த பின் காப்பதை விட, வருமுன் காப்பதும் நல்லது, ஆரம்ப நிலையிலேயே ஒரு நோயைக் குணப்படுத்துவதும் எளிது.

நிஜாம் கான் said...

அண்ணே! ஓப்பனிங் புரியல..ஆனா போகப்போக புரிஞ்சது. முதியோர்களை கவனிக்காத பிள்ளைகள் இருக்கும் வரை என்ன வியாதி வந்தாலும் ஒன்று தான்..

VELU.G said...

ரொம்ப சங்கடமா இருக்குங்க

சத்ரியன் said...

பாலா அண்ணே,

இந்த மாதிரி வியாதியெல்லாம் எங்கிருந்து வரும்?

தொடரும்னு போட்டிருக்கீங்க. தொடரும் போது , அந்த வியாதிய தடுக்க எதுனா வழி இருந்தா அதையும் எழுதுங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

இந்நோய்ப் பற்றி..இப்பவெல்லாம் அதிகம் கேள்விப்படுகிறோம்:((

settaikkaran said...

இந்த வியாதி குறித்துப் படித்திருக்கிறேன் என்பதோடு, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிலரை சந்திக்கிற துயரமான அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு உறுதுணையாயிருப்பவர்களின் உள்ளம் எவ்வளவு வேதனைப்படும் என்று அப்போதெல்லாம் கற்பனை செய்து பார்த்ததுண்டு. அந்த வலியை இந்தப் பதிவின் மூலம் இன்னொருமுறை உணர்ந்தேன். நெகிழ்ச்சியான, உருக்கமான பதிவு!

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

விழிப்புணர்வு பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .
தொடருங்கள் . .

Paleo God said...

:(

தொடர்கிறேன் சார்.

பனித்துளி சங்கர் said...

அடேயப்பா !
ஆமா இதை படிப்தால் ஒன்றும் தொற்றிக்கொள்ளாதே ????

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்

ராஜ நடராஜன் said...

கெமிலோ என்ற கோவாக்காரர்.பேசினால் மூச்சிறைப்பு.அப்படியும் எண்ணை பதார்த்த உணவு.கூடவே இறைச்சி வகைகள்,அடிக்கடி பால் கலந்த சாயா.
எல்லோருக்கும் உதவும் மனம்.திடீரென மருத்துவமனை.வலது காலும்,கையும் நகர்த்த இயலவில்லை.நர்சம்மாவை கேட்டால் சொன்னது பார்கின்சன். கோவா போய் மருத்துவம் பார்க்கிறேன் என்று
மனுசன் பை,பை சொல்லி விட்டார்.

முன்பு பார்கின்சன்னா முகமது அலிக்கு மட்டுமே வந்த அமெரிக்க நோய் என்று நினைத்திருந்தேன்.

Chitra said...

மனதை என்னவோ செய்தது. நிச்சயமாக மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு வேண்டும். சராசரி மனிதர்களில் பலர், பல விஷயங்களை புரிந்து கொள்ளாமல் "ignorance is bliss" என்று இருக்கிறார்கள்.

ஸ்ரீராம். said...

படிக்கும்போதே சொந்த அனுபவம் ஒன்று ஞாபகம் வந்து மனதைச் சங்கடப்படுத்தியது

இராகவன் நைஜிரியா said...

கண்களில் கண்ணீருடன் படித்தேன்...

ஏதோதோ ஞாபங்கள் வந்து போயின..

கஷ்டம்... வந்தவர்களுக்கும், கூட அவர்களை கவனித்துக் கொள்பவர்களுக்கும்...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

தொடருங்கள்.:-(((((((

செ.சரவணக்குமார் said...

இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு உள்ள அதே வேதனை அவர்களை கவனித்துக்கொள்பவர்களுக்கும் உண்டு. நல்ல விழிப்புணர்வு பகிர்வு பாலா சார்.

பத்மா said...

எனக்கு தெரிந்த இரண்டு பேருடைய பெற்றோருக்கு இந்த வியாதியின் ஆரம்ப கட்டம் உள்ளது. இருவரும் படும் பாட்டை நான் அறிவேன். முதுமையின் சாபத்தில் இதுவும் ஒன்று. யாரை நோக?

ரோஸ்விக் said...

ஏதும் சொல்ல இயலாத நிலையில் :-(

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

எனக்கு என் தாத்தா, பாட்டி மற்றும் அம்மையா நினைவுக்கு வருகின்றனர்.. மூன்று பேருமே.. நீங்கள் குறிப்பிட்டவற்றை அனுபவித்தே காலமானார்கள் :((

க ரா said...

எனது அப்பாவை பெற்ற பாட்டி பாரலைஸ் அட்டாக் வந்து படுத்த படுக்கையாக இருக்கும் போது டாக்டரின் அட்வைஸ் படி அப்பா அவர்களை சில் எக்ஸசைஸ் பண்ணவைக்கும்போது கட்டைல போறாவனே ஏண்டா என்ன சாவடிக்கிற என்றல்லாம் வழி தாங்காமல் சத்தம் போடுவார்கள். ம்.ம். என் செய்ய.

prince said...

தெரிஞ்சுகிட்டேன் ருமாடிசம் இல்லை அதன் பெயர் பர்கின்ஸன்ஸ் என்று

கலகலப்ரியா said...

ம்ம்..

க.பாலாசி said...

எனக்கு ஒண்ணும் சொல்லத்தெரியலைங்க... ஆனாலும் எப்டியாச்சும் அவங்கள குணப்படுத்தனும்...இதுதான் தோணுது...

ஈரோடு கதிர் said...

அந்திம காலத்தில் நோயில்லாத மரணம் ஒரு வரம் என நினைக்கத் தோன்றுகிறது...

vasu balaji said...

/ றமேஸ்-Ramesh said...

வாசிச்சுட்டு வாரன்/

எங்க பார்த்தாலும் இதே கொமண்ட் போடுறா:))

vasu balaji said...

//பிரபாகர் said...

இவ்வளவு கொடூரமான வியாதியா அது? படிக்கும்போதே பயமா இருக்கு...//

ஆமாம் ப்ரபா

vasu balaji said...

முகிலன் said...

இதைப் பத்தின விழிப்புணர்வும் மருத்துவ வசதிகளும் மக்களுக்குத் தருவது யார் கடமை?

வருசத்துக்கு ஒரு தடவை மெடிக்கல் செக்கப் செஞ்சா நல்லது - அப்பிடின்னு நான் சொல்லிட்டுப் போயிடுவேன். ஆனா அதுக்கான செலவை யார் ஏத்துக்குவா?

அரசாங்கம், ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல இருக்குறவங்களுக்கு இலவசமா மெடிக்கல் செக்கப் செஞ்சா நல்லது.

வந்த பின் காப்பதை விட, வருமுன் காப்பதும் நல்லது, ஆரம்ப நிலையிலேயே ஒரு நோயைக் குணப்படுத்துவதும் எளிது.//

இது குணப்படுத்த முடியாது முகிலன். ஆனா சிதைவை மட்டுப் படுத்தக் கூடும்.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ணே! ஓப்பனிங் புரியல..ஆனா போகப்போக புரிஞ்சது. முதியோர்களை கவனிக்காத பிள்ளைகள் இருக்கும் வரை என்ன வியாதி வந்தாலும் ஒன்று தான்..//

மிச்சமும் படிங்கண்ணே.

vasu balaji said...

VELU.G said...

ரொம்ப சங்கடமா இருக்குங்க//

ஆமாங்க.

vasu balaji said...

சத்ரியன் said...

பாலா அண்ணே,

இந்த மாதிரி வியாதியெல்லாம் எங்கிருந்து வரும்?

தொடரும்னு போட்டிருக்கீங்க. தொடரும் போது , அந்த வியாதிய தடுக்க எதுனா வழி இருந்தா அதையும் எழுதுங்க.//

தடுக்க வழியிருக்கறதா தெரியலை. மேனேஜ் பண்ணவே மருந்து சரியா இல்லை.

vasu balaji said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

இந்நோய்ப் பற்றி..இப்பவெல்லாம் அதிகம் கேள்விப்படுகிறோம்:((//

ஆமாம் சார்.

vasu balaji said...

சேட்டைக்காரன் said...

இந்த வியாதி குறித்துப் படித்திருக்கிறேன் என்பதோடு, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிலரை சந்திக்கிற துயரமான அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு உறுதுணையாயிருப்பவர்களின் உள்ளம் எவ்வளவு வேதனைப்படும் என்று அப்போதெல்லாம் கற்பனை செய்து பார்த்ததுண்டு. அந்த வலியை இந்தப் பதிவின் மூலம் இன்னொருமுறை உணர்ந்தேன். நெகிழ்ச்சியான, உருக்கமான பதிவு!//

புரிஞ்சிருக்கு உங்களுக்கு. நன்றிங்க

vasu balaji said...

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

விழிப்புணர்வு பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .
தொடருங்கள் . .//

நன்றிங்க.

vasu balaji said...

நன்றி ஷங்கர்
நன்றி பனித்துளி.

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

கெமிலோ என்ற கோவாக்காரர்.பேசினால் மூச்சிறைப்பு.அப்படியும் எண்ணை பதார்த்த உணவு.கூடவே இறைச்சி வகைகள்,அடிக்கடி பால் கலந்த சாயா.
எல்லோருக்கும் உதவும் மனம்.திடீரென மருத்துவமனை.வலது காலும்,கையும் நகர்த்த இயலவில்லை.நர்சம்மாவை கேட்டால் சொன்னது பார்கின்சன். கோவா போய் மருத்துவம் பார்க்கிறேன் என்று
மனுசன் பை,பை சொல்லி விட்டார்.

முன்பு பார்கின்சன்னா முகமது அலிக்கு மட்டுமே வந்த அமெரிக்க நோய் என்று நினைத்திருந்தேன்.//

ஆமாங்கண்ணா. தெரியவரும்போதே நிறைய இழப்பாயிருக்கும்.

vasu balaji said...

@@நன்றிங்க இராமசாமி கண்ணன்
@@ஆமாங்க சித்ரா
@@ஆமாம் ஸ்ரீராம்
@@அண்ணே சரியாச் சொன்னீங்க

vasu balaji said...

@@நன்றி ஸ்ரீ
@@நன்றி சரவணக்குமார்

vasu balaji said...

@@இப்போது முதுமை மட்டுமே அல்லவாம். :(
@@நன்றி ரோஸ்விக்
@@அப்படிங்களா செந்தில்.கொடுமை.
@@நன்றி ராஜா
@@நன்றி பிரின்ஸ்

vasu balaji said...

@@கலகலப்ரியா..ம்ம்
@@பாலாசி..என்ன சொல்றது
@@சரியாச் சொன்னீங்க கதிர்.