Monday, April 5, 2010

சிதைவளர் மாற்றம்....


வாழ்க்கையின் நொடிகள்
நம்பிக்கைகளால் நிரப்பப்படுகின்றன!
ஒரு நம்பிக்கையின் மரணமும்
இன்னொரு நம்பிக்கையின் ஜனனமும்
இடைவெளியின்றி நடந்தபடியே இருக்கின்றன.

ஒரு நம்பிக்கையின் இறப்பும்
மறு நம்பிக்கையின் சூலும்
தொடர்புடனோ இன்றியோ அமைகிறது..
நம்பிக்கைக் கருச் சுமக்கும் காலங்கள்
வலி நிறைந்ததாகவே அமைந்து போகிறது..
கருவுக்கு தடைபோடத் தெரிந்த மனதுக்கு
நம்பிக்கைக் கருவைத் தடைசெய்ய மனதில்லை...

நாடி விரும்பியே கரு சுமக்கிறது
கூடவே வலியும்..
சின்னச் சின்னத் தலைக் கோதலில்
பெரியதாய் கோட்டை கட்டி
இடிந்து சிதிலமாவதைத்
துடிக்கத் துடிக்கப் பார்த்தும்
தானே எழுந்து,
தானே ஆறுதல் சொல்லியபடியே
அடுத்த கோட்டைக்காய்
மனமே மனது குழைக்கிறது..

என்றோ ஒருநாள்
மரணம் அழைக்கும் தருணம்
ஒரு நம்பிக்கையின் மரணமாகவோ
ஜனனமாகவோ அமைவதைப் பொறுத்தே
மரணம் வலியாகவோ
சுகமாகவோ அமையக்கூடும்!
~~~~~~~~~~~~~

34 comments:

எறும்பு said...

Present sollitu escape

இராகவன் நைஜிரியா said...

// வாழ்க்கையின் நொடிகள்
நம்பிக்கைகளால் நிரப்பப்படுகின்றன!//

சரியாகச் சொன்னீர்கள்... நாளைய பொழுது நன்றாகவிடியும் என்றுதான் இன்று உறங்கப் போகின்றோம்.

இராகவன் நைஜிரியா said...

// என்றோ ஒருநாள்
மரணம் அழைக்கும் தருணம்
ஒரு நம்பிக்கையின் மரணமாகவோ
ஜனனமாகவோ அமைவதைப் பொறுத்தே
மரணம் வலியாகவோ
சுகமாகவோ அமையக்கூடும்! //

சூப்பர் அண்ணே.

சைவகொத்துப்பரோட்டா said...

ம்ம்...சிதைவளர் மாற்றம் நன்று.

கலகலப்ரியா said...

நல்லாருக்கு சார்..

Ramesh said...

மிக நன்றாக மனதைத்தீண்டுகிறது வலியும் மனதில்
///
வாழ்க்கையின் நொடிகள்
நம்பிக்கைகளால் நிரப்பப்படுகின்றன!
///
என்றோ ஒருநாள்
மரணம் அழைக்கும் தருணம்
ஒரு நம்பிக்கையின் மரணமாகவோ
ஜனனமாகவோ அமைவதைப் பொறுத்தே
மரணம் வலியாகவோ
சுகமாகவோ அமையக்கூடும்
///அசத்தல்.

பிரபாகர் said...

அய்யா!

நம்பிக்கையின் மரணம் இன்னொரு நம்பிக்கையின் ஜனனம். நம்பிக்கையில் மரணம் மட்டுமே இருந்தால் நம்பிக்கையே இல்லை என்றாகிவிடும்...

என்ன அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் அய்யா! எவ்வாறிருக்கென சொல்ல வார்த்தைகளில்லை!

பிரபாகர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாருக்கு :)

க.பாலாசி said...

//பெரியதாய் கோட்டை கட்டி
இடிந்து சிதிலமாவதைத்
துடிக்கத் துடிக்கப் பார்த்தும்
தானே எழுந்து,
தானே ஆறுதல் சொல்லியபடியே
அடுத்த கோட்டைக்காய்
மனமே மனது குழைக்கிறது..//

சரியா சொன்னீங்க... பலநேரங்களில் இவ்வாறு என்மனதும் குழைத்திருக்கிறது....

நல்ல கவிதை....

ஸ்ரீராம். said...

நம்பிக்கையற்ற வாழ்வு அநித்தியம்.
நம்பிக்கை நல்வாழ்வுக்கு உரம்.

பின்னோக்கி said...

நம்பிக்கைகளே வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்பதனை அழகாக கவிதையாக்கியிருக்கிறீர்கள்.. அருமை

நிஜாம் கான் said...

கடைசி பாரா உண்மையிலே சிந்திக்க வைக்குது அண்ணே!

ஈரோடு கதிர் said...

உங்களிடம் மிகவும் ரசித்த கவிதை இது...

//ஒரு நம்பிக்கையின் இறப்பும்
மறு நம்பிக்கையின் சூலும் //

அடடா!!!!

Paleo God said...

தானே எழுந்து,
தானே ஆறுதல் சொல்லியபடியே
அடுத்த கோட்டைக்காய்
மனமே மனது குழைக்கிறது..//

க்ரேட் சார்.!!!!

Subankan said...

நல்லாருக்கு சார் :)

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

வாழ்க்கையை அழகாக படம் பிடித்து உள்ளீர்கள்! அழகு!

தாராபுரத்தான் said...

ரசித்துப் படித்தேன் சார்.

ராஜ நடராஜன் said...

பிகாசோ ஓவியம் மாதிரி இருக்குது.எனக்கு ஒண்ணுமே புரியலை போங்க.

க ரா said...

ரொம்ப நல்லாருக்கு சார்.

பனித்துளி சங்கர் said...

உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒரு புதுமையுடன் இருக்கிறது வாழ்த்துக்கள் . தொடருங்கள் .

சுண்டெலி(காதல் கவி) said...

நல்லாயிருக்குங்க...

Unknown said...

நல்லாருக்கு சார்

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
பிகாசோ ஓவியம் மாதிரி இருக்குது.எனக்கு ஒண்ணுமே புரியலை போங்க.

April 5, 2010 7:07 PM//

படமா? பாட்டா??

நம்பிப் படிச்சுப் பாருங்க...அட சொன்னா நம்பணும்!

பத்மா said...

நல்லாருக்குங்க

prince said...

/*ஒரு நம்பிக்கையின் இறப்பும்
மறு நம்பிக்கையின் சூலும்
தொடர்புடனோ இன்றியோ அமைகிறது..
நம்பிக்கைக் கருச் சுமக்கும் காலங்கள்
வலி நிறைந்ததாகவே அமைந்து போகிறது..
கருவுக்கு தடைபோடத் தெரிந்த மனதுக்கு
நம்பிக்கைக் கருவைத் தடைசெய்ய மனதில்லை...*/ உண்மை

Chitra said...

நாடி விரும்பியே கரு சுமக்கிறது
கூடவே வலியும்..


......நல்லா இருக்குங்க........
It conveys a nice message.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அருமையான வரிகள்..
வாழ்த்துக்கள்..

"உழவன்" "Uzhavan" said...

கடைசில அருமையா சொல்லிட்டீங்க

துபாய் ராஜா said...

//வாழ்க்கையின் நொடிகள்
நம்பிக்கைகளால் நிரப்பப்படுகின்றன!
ஒரு நம்பிக்கையின் மரணமும்
இன்னொரு நம்பிக்கையின் ஜனனமும்
இடைவெளியின்றி நடந்தபடியே இருக்கின்றன...//

அருமை சார்.

சத்ரியன் said...

//சின்னச் சின்னத் தலைக் கோதலில்
பெரியதாய் கோட்டை கட்டி
இடிந்து சிதிலமாவதைத்
துடிக்கத் துடிக்கப் பார்த்தும்
தானே எழுந்து,
தானே ஆறுதல் சொல்லியபடியே
அடுத்த கோட்டைக்காய்
மனமே மனது குழைக்கிறது..//

பாலா,

கவிதையும் கருத்தும் பலா...!

இளமுருகன் said...

நம்பிக்கைதான் வாழ்க்கை என கவிதையாய் சொல்லி இருக்கிறீர்கள் நன்று.
இளமுருகன்
நைஜீரியா

ரோஸ்விக் said...

வாழ்கை என்பது வியாபாரம், அதில் ஜனனம் என்பது வரவாகும், மரணம் என்பது செலவாகும்... என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன...

இந்த நம்பிக்கைகளும் நம் வரவு செலவில் ஒரு வகை தான்... போகும், வரும்...

நல்லாயிருக்கு பாலா அண்ணே!

vasu balaji said...

அல்லாருக்கும் வணக்கம். ப்ளாக்கர் புண்ணியத்துல கமெண்ட் காணாம போயி போயி வருது. 36 இருந்து 16 ஆகி, 33 ஆகி இப்பொ 26. அதுனால அல்லாருக்கும் நன்றி.

INDIA 2121 said...

வித்யாசமான பதிவு
visit
www.vaalpaiyyan.blogspot.com