Thursday, April 1, 2010

கூசித்தான் போகிறது...


உப்புக் குறைவென்று
உதைத்துவிட்டுப் போனவன்
ஊரடங்கிய பின் உறவுக்காய்
உள்ளங்கால் சுரண்டிச் செல்கையில்..

அக்குளில் பிரிந்த தையல் மறந்து
அரசுப் பேருந்தில் கையுயர்த்திப் பிடிக்கையில்..
மகளின் சடங்குக்கு மாதச்சீட்டு சேர்ந்து
தவணை தவறித் தவிக்கும் தருணங்களில்..

உழைத்துக் களைத்துத் திரும்புகையில்
உறங்கித் தொலைத்து
ஒதுங்கிய முந்தானையூடுருவிய
ஓரப் பார்வைகளின் குறுகுறுப்பில்..

உறவுகளைத் தொலைத்த திருமணம்
என்றறியாமல், ஊருக்குப் போக
அடம் பிடிக்கும் குழந்தைகளின்
உற்சாகக் குமிழை உடைத்தெறிகையில்..

உப்பு வாங்கவும் வழியற்ற
ஓர் மாதக் கடைசி ஞாயிறில்
உணவு வேளையில் வந்த தோழியை
உபசரிக்கவியலாத் தருணங்களில்..

67 comments:

Unknown said...

அருமையா இருக்கு சார் கவிதை..

Unknown said...

அட இன்னிக்கு வடை எனக்கா?

க.பாலாசி said...

அஞ்சு எடத்துலையும்.... கூசத்தான் செய்கிறது.....

//உப்பு வாங்கவும் வழியற்ற
ஓர் மாதக் கடைசி ஞாயிறில்
உணவு வேளையில் வந்த தோழியை
உபசரிக்கவியலாத் தருணங்களில்..//

முந்தாநாளு இப்டித்தான் போச்சு....

Unknown said...

//உறவுகளைத் தொலைத்த திருமணம்
என்றறியாமல், ஊருக்குப் போக
அடம் பிடிக்கும் குழந்தைகளின்
உற்சாகக் குமிழை உடைத்தெறிகையில்..//
-நல்ல சொற்தேர்வு!.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை Bala

மணிஜி said...

//உறவுகளைத் தொலைத்த திருமணம்
என்றறியாமல், ஊருக்குப் போக
அடம் பிடிக்கும் குழந்தைகளின்
உற்சாகக் குமிழை உடைத்தெறிகையில்//

நிதர்சனம் பாலா சார் !

Ahamed irshad said...

//உப்பு வாங்கவும் வழியற்ற
ஓர் மாதக் கடைசி ஞாயிறில்
உணவு வேளையில் வந்த தோழியை
உபசரிக்கவியலாத் தருணங்களில்..//

வலிமையான வரிகள். அருமை....

ஈரோடு கதிர் said...

வாசிக்கும் போதும் கூசத்தான் செய்கிறது

நேசமித்ரன். said...

அக்குளில் பிரிந்த தையல் மறந்து

மிக நுண்ணிய அவதானங்கள்
ஆழ்ந்த வலி சொல்லும் தேர்ந்த சொற்கள்

இட்டு நிரப்ப வியலாத நிராசைகள்
சொல்லித்தீராத ஊமை வன்முறைகள்
அனுமதிக்கப்படாத வெளியில் நிகழும் புறக்கணிப்புகள்

அடிக்கடி கவிதைகள் எழுதுங்க
சார்

Sabarinathan Arthanari said...

ஏழ்மையின் பரிதாபம்

நல்ல கவிதை

நாடோடி said...

இறுக்கமான‌ க‌விதை.. ந‌ல்ல‌ இருக்கு

அகநாழிகை said...

கவிதை அருமை பாலா சார்

சத்ரியன் said...

//அக்குளில் பிரிந்த தையல் மறந்து
................................
................................
உபசரிக்கவியலாத் தருணங்களில்.. //

பாலா மாமா,

உப்பு போட்டு திங்கறதால வரிகளைப் படிக்கும் போதே கூசுகிறது.

சத்ரியன் said...

//முந்தாநாளு இப்டித்தான் போச்சு....//

பாலா,

முந்தா நாளு நான் போயிருந்தப்ப எனக்கு கறியும் சோறும் வயிறு நிறைய போட்டுத்தானே அனுப்பினாரு....?

இராகவன் நைஜிரியா said...

// உப்பு வாங்கவும் வழியற்ற
ஓர் மாதக் கடைசி ஞாயிறில்
உணவு வேளையில் வந்த தோழியை
உபசரிக்கவியலாத் தருணங்களில்..//

கலக்கிட்டீங்க அண்ணே...

Jerry Eshananda said...

bala anna....total surrender.

க.பாலாசி said...

//சத்ரியன் Says:
பாலா,
முந்தா நாளு நான் போயிருந்தப்ப எனக்கு கறியும் சோறும் வயிறு நிறைய போட்டுத்தானே அனுப்பினாரு....?//

அட நான் எனக்கு சொன்னேங்க தலைவரே....

சைவகொத்துப்பரோட்டா said...

ஒரு கதையே
சொல்லிட்டீங்க!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எனக்கும் கவிதைக்கு ரொம்ப தூரம்..

ஆனா, எனக்கே புரியம்படி எழுதியிருக்கீறீர்கள்..

சும்மா சொல்லக்கூடாது சார்.. கலக்கிட்டீங்க..

சூர்யா ௧ண்ணன் said...

கடைசி நான்கு வரிகள்! பிரமாதம் தலைவா!

VISA said...

இதை தான் நெகெழ்ச்சி என்று நான் கூறுவேன்.

கடைசி வரியில் தோழியை உபசரிக்க முடியவில்லை என்று முடித்திருப்பீர்கள்

அது எனக்கு பிடித்திருக்கிறது. இது போன்ற நெகிழ்ச்சிகள் தான் நான் அதிகம் விரும்புவேன்.

அங்காடித்தெருவை விட.


வாசகனுக்கு ஒரு பள்ளத்தை விவரிக்க வேண்டுமானால் இரண்டு வழியில் அதை செய்யலாம்.

1. பள்ளத்துக்குள் அவனை கூட்டிக்கொண்டு போவது.

2. நல்ல உயரத்துக்கு அவனை கூட்டிக்கொண்டு போய் அங்கிருந்து பள்ளத்தை காட்டுவது.

இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. எனக்கு இரண்டாம் வகை பிடிக்கும்.

Thamira said...

நன்று.

க ரா said...

அருமை சார்.

பழமைபேசி said...

நறுக்கு கவி, எப்பங்க உணர்ச்சிக் கவி ஆனாரு?

ராஜ நடராஜன் said...

கவிதைக்கு சொல்லே அழகு!ى

தாராபுரத்தான் said...

நல்லா இருக்குது சார்...

சிநேகிதன் அக்பர் said...

இறுக்கமான கவிதை சுருக்கமா, நறுக்குன்னு இருக்கு.

ஜீவன்பென்னி said...

//உறவுகளைத் தொலைத்த திருமணம்
என்றறியாமல், ஊருக்குப் போக
அடம் பிடிக்கும் குழந்தைகளின்
உற்சாகக் குமிழை உடைத்தெறிகையில்//

இந்த வரிகள் எனக்கு பிடிச்சிருக்கு.

மாதேவி said...

கவிதை அருமை.
"உப்பு வாங்கவும் வழியற்ற":((

Subankan said...

அருமையான கவிதை சார் :)

அன்புடன் அருணா said...

அட!பூங்கொத்து!

Chitra said...

உறவுகளைத் தொலைத்த திருமணம்
என்றறியாமல், ஊருக்குப் போக
அடம் பிடிக்கும் குழந்தைகளின்
உற்சாகக் குமிழை உடைத்தெறிகையில்..

.....பாராட்டுக்கள், கவிதைக்கும் கவிதைகேற்ற படத்துக்கும்!

இந்த கவிதை கரு, எத்தனை சராசரி மனிதர்களின் உணர்வுகளை படம் பிடித்து காட்டுகிறது!

ஸ்ரீராம். said...

நிதர்சனமான உண்மைகள். வாழ்வியல் சோகங்கள்.அருமையாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்.

A.Neelamegam . said...

உணர்வுபூர்வமான உண்மை சம்பவங்களை அப்பட்டமாக வெளிக்கொணர்ந்த அருமையான கவிதை. அழகு.

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு பாலா சார்!

பிரபாகர் said...

கூசித்தான் போகிறது!

பிரபாகர்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அருமை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கலகலப்ரியா said...

அருமை சார்.. ரொம்ப நல்லாருக்கு...

நிலாமதி said...

ஊமைவலிகள் அழகாய் எழுதி இருகிறீங்கள். பாராட்டு.

உண்மைத்தமிழன் said...

ச்சோ.. ச்சோ.. என்று இருக்கிறது ஸார்..!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நன்று!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை.. ஒவ்வொரு தருணத்தைப் பற்றியும் சொல்ல..

நசரேயன் said...

அண்ணே என்ன இது கவுஜை எல்லாம்

புலவன் புலிகேசி said...

//உப்பு வாங்கவும் வழியற்ற
ஓர் மாதக் கடைசி ஞாயிறில்
உணவு வேளையில் வந்த தோழியை
உபசரிக்கவியலாத் தருணங்களில்.. //

உண்மையில் கூசித்தான் போகிறது..இது போன்ற துயரங்களை நானும் அனுபவித்திருக்கிறேன்..

shortfilmindia.com said...

நிஜம்

கேபிள் சங்கர்

பத்மா said...

இப்போ நான் ஒரு நாலாவது முறையா வந்து இத படிச்சுட்டு இருக்கேன் .கலாயச்வரா இப்பிடி கவிதை எழுதறார்ன்னு.நீங்க எழுதிய தருணங்கள் எல்லாம் எப்போதாவது எல்லார் வாழ்விலும் நடைபெறக்கூடியது....கூசும் தருணங்கள் தான் .அதை கவிதையாக்கிய உங்களுக்கு ஒரு பெரிய சபாஷ் .

buvanesh said...

மிகவும் அருமையாக உணர்வுகளை பதிந்துள்ளீர்கள் பாமரன்.வாழ்த்துக்கள்.நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் விட கூசச்செய்யும் வேறோண்ட்ர் இருப்பதாக நான் நினைத்து எழுதிய கவிதை. இங்கே அதை பார்க்கவும்.

http://buvaneshk.blogspot.com/2010/02/blog-post_20.html


by
buvanesh.

Paleo God said...

ப்ச்..

ரொம்பவே கூசிப்போச்சி சார்..:(

சாவண்ணா Magendran said...

wow.... super.

sowbarnika said...

Excellant.

கண்மணி/kanmani said...

அருமை

"உழவன்" "Uzhavan" said...

கவிதையின் வடிவமைப்பும் நன்றாக உள்ளது.

MJV said...

கூசுகிற தருணங்கள் என்று அடுக்கி கொண்டே போயிருக்கிற இந்த கவிதையில் புனைவை விட உண்மை நிகழ்வுகளை அதிகமாய் சுட்டிக் காட்டி சுட்டிருக்கிறீர்கள் ஐயா. அருமையான கவிதை.

மறத்தமிழன் said...

பாமரன்,

கசப்பான உண்மையை எளிய வரிகளில்

அற்புதமாக சொல்லியிருக்கீங்க..

வாழ்த்துக்கள்...!

vasu balaji said...

@@நன்றி முகிலன்
@@நன்றி பாலாசி. அப்படி போகலைன்னாதான் ஆச்சரியம்.
@@நன்றிங்க ஜீயெஸ்கே
@@நன்றி டி.வி.ஆர். சார்
@@நன்றிங்க மணிஜீ
@@நன்றிங்க இர்ஷாத். முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.
@@நன்றிங்ணா கதிர்ணா:))

vasu balaji said...

@@நன்றி நேசமித்திரன்
@@நன்றிங்க அர்த்தநாரி
@@நன்றிங்க நாடோடி
@@நன்றிங்க வாசு
@@நன்றிங்க சத்ரியன்
@@அண்ணா நன்றி

vasu balaji said...

@@நன்றி ஜெரி:)) என்ன இது:)))
@@நன்றிங்க சைவம்:)
@@நன்றி பட்டாபட்டி
@@நன்றி சூர்யா
@@மிக்க நன்றி விசா
@@நன்றிங்க ஆதி
@@நன்றிங்க இராமசாமி கண்ணன்
@@நன்றிங்க பழமை. கதிர் மாப்புவ பார்த்துதான்:))

vasu balaji said...

@@வாங்க அண்ணா நன்றி:)
@@அண்ணே அதான் வேணும். நன்றி
@@நன்றிங்க அக்பர். வலைச்சரத்துல கலக்கறீங்க
@@நன்றிங்க ஜீவன்பென்னி முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்

vasu balaji said...

@@நன்றிங்க மாதேவி
@@நன்றிங்க சுபாங்கன்
@@நன்றிங்க அருணாமேடம்
@@நன்றிங்க சித்ரா
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றிங்க நீலு முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
@@நன்றிங்க பா.ரா.
@@நன்றி அஷோக்
@@நன்றி பிரபா
@@நன்றி சரவணக்குமார்
@@நன்றிம்மா பிரியா
@@நன்றிங்க நிலாமதி

vasu balaji said...

@@நன்றிங்க உண்மைத்தமிழன் வரவுக்கும் ஊக்கத்துக்கும்
@@நன்றிங்க ஜோதிபாரதி
@@நன்றிங்க செந்தில்
@@என்ன பண்ண நசரேயன். அவங்க பட்ஜட்ல துண்டு:))

vasu balaji said...

@@நன்றிங்க புலிகேசி
@@நன்றிங்க சங்கர்
@@நன்றின்க பத்மா
@@நன்றி புவனேஷ். முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.
@@நன்றி ஷங்கர்
@@நன்றி மகேந்திரன்
@@நன்றி சிவா
@@நன்றி கண்மணி
@@நன்றிங்க உழவன்
@@நன்றிங்க காவேரிக்கரையோன்
@@நன்றிங்க மறத்தமிழன்

தருமி said...

கவிதை வாசிக்காதவனையும் வாசிக்க வைத்த உங்கள் வரிகளுக்காகப் பாராட்டுகள்.

vasu balaji said...

முதல் வரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தருமி சார்.:)

Dr.Rudhran said...

well written, best wishes

ரோஸ்விக் said...

இந்த உண்மைகள் கவிதையாய் வந்தும் கூசத்தான் செய்கிறது பலா அண்ணே!

பின்னோக்கி said...

ஆண்டவா !! இந்த தருணங்கள் வாழ்வில் வராமல் இருக்க அருள் புரிவாய் :(

Thenammai Lakshmanan said...

எல்லாமே ப்ரமாதம் எப்பிடி பாலா சார் மாறி மாறிக் கலக்குறீங்க