Wednesday, March 10, 2010

எளக்கியம் விக்கலாம் வாங்கப்பா...

ஹூம். அது ஆச்சிங்க ஒரு வருசத்துக்கு மேல. சோத்துக்கு லாட்டரி அடிச்சிகிட்டு என்னடா பண்ணலாம்னு உக்காந்திருந்தேன்.  யாரோ சொன்னாய்ங்க. யாவாரம் பண்ணுப்பா. பரபரன்னு பெரீஈஈஈஈய ஆளாயிரலாம்னு. அட! இதானே நமக்கு வேணும்னு, கைய கால புடிச்சி அய்யா, சாமி அது என்னா யாவாரம் சொல்லுங்கப்பான்னேன்.

முதல்ல சொல்ல மாட்டேன்னுட்டாய்ங்க. விடாம கெஞ்சினதுல ஓட்டு யாவாரம்பான்னாங்க. பொசுக்குன்னு ஆயிருச்சி. அட போய்யா. எலக்சன் எப்பவோ வருது. இதுல இந்த யாவாரத்த பண்ண நான் எங்க போகன்னேன். அட பன்னாட. பதிவுலகம் பதிவுலகம்னு ஒன்னு இருக்கு. அங்க இதான் யாவாரமே. கடைய தொறந்தியா, யாவாரத்த பெருக்கினியா, பி.ப. ஆனியான்னு போய்க்கேயிருக்கலாம்டான்னாய்ங்க.

கூகிளான் கடையில போயி ஓசில ஒரு இடத்தப் புடிச்சிட்டேன். சரக்கு போட வேணாமா? நொறுக்கு தீனி  போட்டேன். டேஸ்ட் பார்த்துட்டு போய்க்கிட்டிருந்தாங்க. ஒன்னு ரெண்டு பேரு நல்லாருக்குப்பா. கொஞ்சம் உப்பு போறாது. காரம் கூடன்னு சொல்லவும் திருத்திக்கிட்டேன். பசி அடங்கலைன்னாலும் குடிக்க தண்ணி கிடைச்சது. அப்புறம்தான் தெரிஞ்சது, கம்பராமாயணம் மாதிரி எழுதினாலும் கவட்டிக்குள்ள வெச்சிருந்தா யாவாரம் ஆவாது. கடைய போடணும். விளம்பரம் பண்ணனும். ஓட்டு வித்து ஓட்டு வாங்கணும்னு.

அட்றா சக்கன்னு மும்முரமா எறங்கிட்டேன். தமிழ்மணம் மால்ல ஒரு ப்ரேஞ்ச், தமிழிஷ் மால்ல ஒரு கடை தொறந்தேன். ஆரம்பிக்கறது ஆரம்பிக்கிறோம், எதுக்கு லோகல் யாவாரம். க்ளோபலா ஆரம்பிக்கலாம்னு முடிவு கட்டீட்டேன். அசத்தலா லண்டனு, ஸ்விஸ்ஸூ, அமெரிக்கான்னு டீலிங் போட்டேன். ஒரே மாசம். அமெரிக்காகாரருக்கு நான் போட்ட ஓட்டுக்கு ஒரு பென்ஸ் கார் வாங்கி குடுத்தாரு. நானு அவரு போட்ட ஓட்டுக்கு கடல முட்டாய் வாங்கி அனுப்புனேன்.

அப்புறம் லோகல் டீலர்ஷிப் தொறக்கலாம்னு அக்கம் பக்கம் விசாரிச்சி, மெதுவா வியாவாரம் விருத்தியாச்சி. திடீர்னு ஒரு நாள் தமிழிஷ் கடையில நீ நல்லா யாவாரம் பண்றப்பான்னு ஒரு மெயிலுட்டாங்க. தல கிறுகிறுத்துப் போச்சி.ஆஆஆஆஆங். சொல்ல மறந்துட்டனே. இதுக்குள்ள மதியம் ஒரு நேரம் ஃபுல் சாப்பாடு, ராத்திரி பரோட்டா கடையில 4 பரோட்டா அடிக்கிற வருமானம் வந்துச்சு.

என்னன்னாலும் பென்ஸ் கார்ல போய் பரோட்டா கடையில சாப்புடறது கேவலம்டான்னு யோசிச்சேன். சரி. கூட்டு களவாணி அட சை! கூட்டா பிசினஸ் பண்ணாதான் சரின்னு களத்துல எறங்குனேன். கோயமுத்தூரு, ஈரோடு, சேலம், துபாய், ஃப்ரான்ஸ், இலங்கைன்னு கடை கப கபன்னு பத்திகிச்சி.

சும்மா சொல்லக்கூடாதுங்க. இந்த ஓட்டு குத்தி ஓட்டு வாங்கற யாவாரம் இருக்கே. என்னா த்ரில்லுங்கறீங்க. வெட்டி ஒட்டி பின்னூட்டம், என்னன்னாலும் எழுதட்டும் நமக்கு தேவை ஓட்டுன்னு அருமை, அபாரம், கொன்னுட்டீங்கன்னு சொல்லிட்டு குத்திட்டு வந்தேன். சிங்கப்பூர், இந்தோனேசியா, அது இதுன்னு பேரு தெரியாத நாட்ல இருந்தெல்லாம் யாவாரம் பெருகிச்சி.

மூணு வேள ஃபுல்லா சாப்பாடு, போக வர பென்ஸ் காரு, துபாய், சவுதில 2 பெட்ரோல் கிணறு சொந்தத்துல வாங்கிட்டதால பெட்ரோல் செலவும் இல்லை. கல்லாக்கட்டி மாளலை. தமிழ்மணத்துல மக்கள்ளாம் சேர்ந்து மகுடம் சூட்டிட்டாங்களா. தல காலு புரியலைங்க எனக்கு. நடுவுல மைனஸ் ஓட்டு வேற போட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிரபலமாக்கிட்டாங்க.

அப்புறம் என்னாங்க வேணும் எனக்கு. நடிக்க சான்ஸ் கிடைக்குமான்னு ஒருத்தருக்கு ஓடி ஓடி ஓட்டு குத்துறேன். இருக்கிற காசுக்கு சினிமா எடுக்க உதவுமான்னு ஒருத்தருக்கு ஓட்டு குத்துறேன். கொஞ்சம் காடு கழனி வாங்கலாம்னு மாவட்ட வாரியா குத்துறேன். நல்லா போய்க்கிருந்திச்சி.

நேத்துல இருந்து ஒரு புது ரூலு சொல்லிக்கிறாங்க சில இலக்கிய வாதிங்க. அதாவது மொக்க எழுத கூடாதாம். ஃபாலோ பண்றவங்க இடுகைய படிக்க கூடாதாம். தமிழ்மணத்துல 6 ஓட்டுக்கு மேல வாங்க கூடாதாம். நமக்கு ஓட்டு போட்டவங்களுக்கு நாம ஓட்டு போட கூடாதாம்.

ஒரு இடுகை எழுதினா, அவங்களுக்கு அனுப்பி, அது தரமானதா இல்லையான்னு சொன்னப்புறம் இடுகை போடணும். அங்க ஒளிஞ்சிருந்து ஒரு சைக்கியாட்ரிஸ்ட் இருப்பாரு. யார் இடுகையாச்சும் படிச்சா அவரு கிட்ட போணும். அவரு என்ன மனநிலைன்னு சோதிச்சி சர்டிஃபிகேட் குடுப்பாரு. அப்புறம்தான் பின்னூட்டம் போடணும்.

ங்கொய்யால அப்படியும் பரிந்துரைக்கு வந்து, பாப்புலர் பக்கம்னு ஆச்சோ இன்னோரு முகமூடி உக்காந்து யாரு ஓட்டு போட்டிருக்காங்கன்னு புட்டு புட்டு வைப்பாரு. அதெல்லாமும் மீறி நியாயமா, எளக்கிய சேவை பண்ணி கல்லா கட்டுங்க மக்கா. பதிவர் கூட்டம், பையனுக்கு பொறந்த நாளு, எங்கூரு திருவிழான்னு ஃபோட்டோல்லாம் போட்டு ஓட்டு கேட்டிங்களோ! கிழிச்சி தொங்க விட்டுடுவாய்ங்க.

ஓட்டு போடுங்கன்னு கேட்டா தூக்கு மேடைதான்.  நாலு முகமூடி ஒன்னா சேர்ந்து பதிவுலகம் ஃபுல்லா ஃப்ராடுன்னு சர்டிபிகேட் குடுத்துட்டாய்ங்கப்பா. புக்கர் ப்ரைஸ் போச்சே. புலிட்சர் ப்ரைஸ் போச்சே. எத்தனை பதிவருங்க கதை சினிமாவாகிருந்தா கிடைக்கிற ஆஸ்கார் போச்சே. கவுஜ எழுதுனவங்களுக்கு சாகித்திய அகாதமி விருது போச்சே. வயத்துல அடிச்சிட்டு அழாம என்ன பண்றது.

வசதியா வாழ்ந்து பழகியாச்சி. திரும்ப பசியோட எப்புடி இருக்கிறது. நம்ம வேலைய நாம பார்ப்பம். மொக்கைய எளக்கியம்னு படிச்சிட்டு குப்பைன்னு கத்துனா யாரு தப்பு?

அங்க ஒரு பன்னாட கேட்டுருந்திச்சி. இது ஒரு பதிவான்னு. மனசாட்சிய தொட்டு சொல்லணுமாம். ஆத்தா தீர்க்கதரிசி. எனக்குன்னே எழுதிச்சி போல.

/தமயந்தியிடம்...
தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்
நளனிடம்
நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா /

புத்தி கெட்டுப் போய் யாருகிட்ட என்ன சொல்றதுன்னு தெரியாம நளன் கிட்ட சொல்ல வேண்டியத தமயந்தி கிட்ட சொல்லி, தமயந்திக்கு சொல்ல வேண்டியத நளனுக்கு சொல்லி

/தரகர் வேலைக்கே ஆகிப்போச்சா... /

கூமுட்ட கேள்விக்கு விளக்கம் சொல்ல போயி

/வேலை மெனக்கெட்டு பாலைப் பிரிச்சு..
தண்ணியைக் குடிச்சே வீங்கி போச்சு... /

நல்ல இடுகையா நாலு படிச்சி பின்னூட்டம் போடாம விட்டு போட்டு, அந்த குப்பையில போய் விளக்கம் சொல்லி வாங்கி கட்டிக்கிட்டு

/அங்க பாரு...
குப்பையோட சேர்ந்து...
தன்னையும் எரிச்சு... /

அந்த குப்பைங்க கூட பேசி எனர்ஜியெல்லாம் வேஸ்டாக்கிகிட்டு

/சுண்டக் காய்ச்சுது பால.. /

இப்புடி ஒரு அருமையான மொக்கைய எழுதுது பாரு

/பன்னாட.../

கள்ளு கலயத்துல விழுந்த ஈ, எண்ணெயாட்டுறப்ப வர கசடு எல்லாம் வடிகட்ட பயன் படுத்துவாங்கள்ள தென்னமரத்துல வலை மாதிரி இருக்குமே பன்னாட அது..என்னியத்தான்.

//பன்னாட.../

வேலய விட்டுபோட்டு பூனைய சரைச்சதுக்கு திட்டு.

இத விட அருமையா ஒரு கவிதை எழுத முடியுமா?

போங்க போங்க. போய் மொக்கைய போட்டு ஓட்டு தேத்துற வழிய பாருங்க மக்கா. திருடன் திருடன்னு கத்திகிட்டே செயினறுத்துட்டு ஓடிட்டாய்ங்களப்பா:))

(டிஸ்கி: என்னாடா ஆச்சு இந்தாளுக்குன்னு பார்க்கறீங்களா. 2 நாளா பைத்தியங்க கூட்டத்துல சிக்கிட்டேன். இப்புடி ஆகிப்போச்சுங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

124 comments:

padma said...

haha na nichayama vote podla.venuma venama?

ஈரோடு கதிர் said...

வட போச்சே....

ஈரோடு கதிர் said...

அல்ல்ல்லோவ்..

பேரு சொல்லாதங்க கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்கிறது கொஞ்சம் டூ மச்.....

Sivaji Sankar said...

ஸ்ஸ்ஸப்பா.......முடியல....

எறும்பு said...

1st

ஈரோடு கதிர் said...

ங்கொய்யாலே அதுக்குள்ள தமிழ்மணத்துல 6/6.. தமிழிஸ்ல 10... என்ன நடக்குது இங்கே

கலகலப்ரியா said...

=))))...

/நேத்துல இருந்து ஒரு புது ரூலு சொல்லிக்கிறாங்க சில இலக்கிய வாதிங்க. அதாவது மொக்க எழுத கூடாதாம். ஃபாலோ பண்றவங்க இடுகைய படிக்க கூடாதாம். தமிழ்மணத்துல 6 ஓட்டுக்கு மேல வாங்க கூடாதாம். நமக்கு ஓட்டு போட்டவங்களுக்கு நாம ஓட்டு போட கூடாதாம்.//

ponnezhuthil porikkap pada vendiya vaasagam...

irunga irunga... aapees la ... lunch break la irunthu intha veenaa pona pathivukkellaam pinnoottam podanumnu thalai eluththu... ennei kinarila paathiyaavathu (ennei irukkira paathi) enakku eluthi vachidunga pls...

எறும்பு said...

I have voted..
;))

Why comment moderation?

மஞ்சூர் ராசா said...

ஒரு எழவும் புரியலெ.....ஏன்னா நான் ஓட்டு போடறதில்லே....

ஈரோடு கதிர் said...

ஓட்டுப்போடுற மக்களே உங்கள் ஒரு அனானி கவனிக்குது... அப்புறமா உங்க கிட்ட விளக்கம் கேக்கும்... என்ன வெங்காயம் இந்த இடுகையில பிடிச்சுதுன்னு... நீங்க சரியா பதில் சொல்லலைனா.... உங்கள் கண்டபடி திட்டும் அந்த அனானி... சோ.... பீ... கேர் புல

ராஜ நடராஜன் said...

உஸ்!இந்த பஸ்ல எப்ப பார்த்தாலும் கூட்டம்.

க.பாலாசி said...

புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரின்னு சொல்லுவாங்க....அங்கணயும் மூஞ்சில்லாத செல மந்திரிங்க....

போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா? இன்னும் போட்டிருக்கலாமே.....

வானம்பாடிகள் said...

யாருப்பா அது. தமிழிஷ்ல போட்டு தமிழ்மணத்துல போடாம போனது. ப்ளீஸ். குத்துங்க எஜமான். ரெண்டுலயும் குத்துங்க. என் குப்பை சீக்கிரம் மகுடம் சூடணும். சாரி பாலாசி. விட்டு குடுராசா:))

க.பாலாசி said...

ஆமா... எளக்கியம்னா என்னாங்க....

பழமைபேசி said...

சிங்கம் சிலிர்த்திடுச்சே!

க.பாலாசி said...

//என் குப்பை சீக்கிரம் மகுடம் சூடணும். சாரி பாலாசி. விட்டு குடுராசா:))//

அந்ந்ந்ந்ந்த வடையே........ வேணுமா.......

பழமைபேசி said...

பென்ஸ் கார் போய்ச் சேர்ந்திருக்கு.... ஆனா கடலை முட்டாய் இன்னும் வந்தபாடு இல்லையே??

யூர்கன் க்ருகியர் said...

என் சிற்றறிவுக்கு புரியலங்க சார்.
யாரையோ டீசண்டா போட்டு தாக்குறீங்கன்னு நினைக்கிறேன்.
போட்டு தள்ளுங்க! ... யாருகிட்ட ???

ராஜ நடராஜன் said...

//ஒரு இடுகை எழுதினா, அவங்களுக்கு அனுப்பி, அது தரமானதா இல்லையான்னு சொன்னப்புறம் இடுகை போடணும். அங்க ஒளிஞ்சிருந்து ஒரு சைக்கியாட்ரிஸ்ட் இருப்பாரு. யார் இடுகையாச்சும் படிச்சா அவரு கிட்ட போணும். அவரு என்ன மனநிலைன்னு சோதிச்சி சர்டிஃபிகேட் குடுப்பாரு. அப்புறம்தான் பின்னூட்டம் போடணும்.//

இந்த வெளயாட்டு எப்ப துவங்கிச்சு?சொல்லவேயில்ல!

வானம்பாடிகள் said...

இடுகை போட்டு அரைமணிக்குள்ள பரிந்துரைக்கும் பாப்புலர் பக்கத்துக்கும் உதவிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி! நன்றி! நன்றீஈஈஈஈஈ

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
இடுகை போட்டு அரைமணிக்குள்ள பரிந்துரைக்கும் பாப்புலர் பக்கத்துக்கும் உதவிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி! நன்றி! நன்றீஈஈஈஈஈ//

என்னாதிது.... சின்னப்புள்ளத்தனமாயிருக்கு... கடல முட்டாய் எங்க???

ராஜ நடராஜன் said...

கடை கடையா சுத்தறேன்னுதான் பேர்வழி.ஓட்டுப் பெட்டிப் பக்கமே போறதேயில்ல.உங்களுக்கும் சேர்த்துதான்.அவ்வ்வ்வ்வ்வ்......

வானம்பாடிகள் said...

/ராஜ நடராஜன் said...

கடை கடையா சுத்தறேன்னுதான் பேர்வழி.ஓட்டுப் பெட்டிப் பக்கமே போறதேயில்ல.உங்களுக்கும் சேர்த்துதான்.அவ்வ்வ்வ்வ்வ்......//

அட போங்க சார். உங்களுக்கு பிஸினஸ் சென்ஸே இல்ல:)). அப்ப மத்த பேர திட்டவாவது செய்ய வேணாமா? அவ்வ்வ்

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் Says:
March 10, 2010 5:24 PM

இடுகை போட்டு அரைமணிக்குள்ள பரிந்துரைக்கும் பாப்புலர் பக்கத்துக்கும் உதவிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி! நன்றி! நன்றீஈஈஈஈஈ//

ங்கொய்யாலே..

நன்றி சொன்னாப் போதுமா...

அனானிய மூடிவச்சிட்டா எப்படி அந்த மூனு பேரு வந்து கெட்ட வார்த்த பேசுவாங்க...

தெறந்துடுங்கண்ணே!

தெறந்துடுங்கண்ணே!//

அங்க போட்டா மாதிரிதான்.

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் Says:
March 10, 2010 5:25 PM
கடை கடையா சுத்தறேன்னுதான் பேர்வழி.ஓட்டுப் பெட்டிப் பக்கமே போறதேயில்ல.உங்களுக்கும் சேர்த்துதான்.அவ்வ்வ்வ்வ்வ்......
//

எங்க தாராவரத்து அண்ணனை வுட்டே கண்டனம் சொல்ல வெப்போம்... இஃகிஃகி!!

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
வெளயாட்டு //

என்னாதிது? வாய் குழறுதுங்க??

கார்த்திகைப் பாண்டியன் said...

என்னைப் பொறுத்தவரை இந்த இடுகை தேவையில்லாதது பாலா சார்..:-((((

வானம்பாடிகள் said...

/ கார்த்திகைப் பாண்டியன் said...

என்னைப் பொறுத்தவரை இந்த இடுகை தேவையில்லாதது பாலா சார்..:-((((/

இல்லைங்க கார்த்தி. காரணமாத்தான் போட்டேன்.:)

இப்படிக்கு நிஜாம்.., said...

//யாருப்பா அது. தமிழிஷ்ல போட்டு தமிழ்மணத்துல போடாம போனது. ப்ளீஸ். குத்துங்க எஜமான். ரெண்டுலயும் குத்துங்க. என் குப்பை சீக்கிரம் மகுடம் சூடணும். சாரி பாலாசி. விட்டு குடுராசா:))//

அண்ணே! அரசியல் யாவாரத்துக்கு இத விட சிறந்த பிரச்சாரம் வேனுமா? அண்ணே அது மைனஸ் ஓட்டா விழ வேன்டியது தப்பா விழுந்திடுச்சின்னு அந்த ஆளு ரொம்ப கவலையா இருக்காராம். இதுல அவருகிட்ட போயி தமிழிஷ் ஓட்டு வேற கேக்குறீங்களா!!!

சங்கர் said...

புதுசா பஸ்சு விட்டு, ஆளு சேர்த்து, டிக்கெட் வித்த பணமெல்லாம் எங்க போச்சி? அது பத்தி எதுவும் காணுமே?

சி. கருணாகரசு said...

”போய்க்கேயிருக்கலாம்டான்னாய்ங்க”.//

என்ன இது, ஒரு வார்த்தையை.... இத்தன கிலோ மீட்டருக்கு எழுதுனா... எப்படி படிக்கிறது......

சரி பத்த வச்சியிருக்கிங்க ... வெந்து தணிந்ததுக்கு அப்புறமா வரட்டுமா...???

செ.சரவணக்குமார் said...

என்னாச்சு தலைவரே? ஊருக்கு வந்துருக்குற நேரத்துல பீதியக் கிளப்புறீங்க.

சத்ரியன் said...

//கம்பராமயணம் மாதிரி எழுதினாலும் கவட்டிக்குள்ள வெச்சிருந்தா யாவாரம் ஆவாது. கடைய போடணும். விளம்பரம் பண்ணனும். ஓட்டு வித்து ஓட்டு வாங்கணும்னு.//

பாலா,

இவ்வ்வ்வ்வ்வளவு நாளா இருந்துட்டு இப்பதான் ஒரைச்சிதா ஓய் உமக்கு. ... மக்கு!

D.R.Ashok said...

ஆஹா.. ஓஹோ.. பிரமாதம்..பிச்சிட்டீங்க.. நல்ல பதிவு.. என்ன ஒரு தீர்க்கதரிசனம்.. வார்த்தைகளே இல்ல பாராட்ட.. போதுமா சார்... (இதுக்கு மேல ஓட்டெல்லாம் வேற போடனும்..ம்ஹும்)

சத்ரியன் said...

//சரி பத்த வச்சியிருக்கிங்க ... வெந்து தணிந்ததுக்கு அப்புறமா வரட்டுமா...?//

இங்க பார்ரா.... இந்தாளு வந்தமா கொஞ்சம் நெய்ய ஊத்தி வுட்டு வேடிக்க பாப்பமான்னு இல்லாம, தணிஞ்சப்புறம் வர்ர்ர்ர்ராராம்...!

சத்ரியன் said...

//ங்கொய்யாலே அதுக்குள்ள தமிழ்மணத்துல 6/6.. தமிழிஸ்ல 10... என்ன நடக்குது இங்கே//

கதிரண்ணா,

கள்ள ஓட்டு போட்டா என்ன குடுப்பாரு மாம்ஸ்...?

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present Bala

கண்ணா.. said...

அட அதுக்குள்ள எதிர்பதிவு போட்டாச்சா....ரைட்டு நடத்துங்க

நீங்களாவது முகமூடி அணிந்து பின்னூட்டுபவர்களின் பின்னூட்டத்தை பார்த்து வெளியிடுங்கள்

:))

Subankan said...

ரைட்டு, நடத்துங்க

:)

தண்டோரா ...... said...

கமெண்ட் மாடரேஷன் ? உதிரி கட்சிகளின் கூப்பாடு அது! விட்டுத் தள்ளுங்க.

ஜெரி ஈசானந்தா. said...

செம கலாட்டாவா இருக்கு

ஸ்ரீ said...

ஒண்ணும் புரியலயே!

வெற்றி said...

எனக்கு பென்ஸ் வாணாம்..அட்லீஸ்ட் ஒரு அம்பாசிடர் கூட யாரும் அன்பளிக்க மாட்டுறாங்க :)

முகிலன் said...

//பழமைபேசி Says:
March 10, 2010 5:23 PM
பென்ஸ் கார் போய்ச் சேர்ந்திருக்கு.... ஆனா கடலை முட்டாய் இன்னும் வந்தபாடு இல்லையே??

//

நீங்களுமா பென்ஸ் அனுப்பி வச்சிங்க? இன்னும் எத்தன பேரு அனுப்பி வச்சாங்கன்னு தெரியலையே.. இதுல ஒரு ஊழல் நடந்திருக்காப்ல இருக்கே..

அப்புறம் நீங்க அனுப்பி வச்ச கடலை மிட்டாய்ல கடலே இல்லை.. கொஞ்சம் பாத்து மறுபடி அனுப்பி வைங்க..

ஜெட்லி said...

புரியுது.....

இராகவன் நைஜிரியா said...

அய்யோ... அய்யோ... எளக்கியமா? என்னாது எளக்கியமா... விக்கப்போறாங்களாமா... அய்யோ.. அய்யோ...

வாங்கப் போறீங்களா... அய்யோ... அய்யோ...

கும்க்கி said...

புரியாதவர்களுக்காக கவுண்ட்டர் லிங்க்காவது கொடுத்திருக்கலாம்.

ஓட்டு போட்டுட்டேன் சார்.

:-))

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

as i am suffering from fever please grand me 2 days leave sir..:)

ஈரோடு கதிர் said...

me the 50..

அஞ்ஞாறு இடுகை எழுதிட்டு... அல்லக்கைகள பக்கத்துல வச்சிக்கிட்டி என்னமா அலும்பு பண்றாங்க.... யாரோடதையும் படிக்க மாட்டாங்களாம், பின்னூட்டம் ”அருமை / நன்று” ன்னு போட்ட கட்ட வெரலு காணாம போய்டும்னு, அதெல்லாம் போட மாட்டாங்களாம், நித்தி பத்தி யாரும் எழுதக்கூடாதாம், அப்படி எழுதினவங்கள மட்டும் இவுக கேள்வி கேப்பாங்களாம்....

கடைசிய ஒரு பேர் தெரியா அல்லகைய விட்டு இதுக்கு என்ன அர்த்தம் அந்த போட்டோவுக்கு ஏன் ஓட்டு போட்டீங்கன்னு பல்லு வெளக்காம கேள்வி கேப்பாங்களாம்....

முகமூடி போட்டு இத உசுப்பேத்தி விட்டவன், அடுத்த ரெண்டு இடுகைய சீந்தக்கூட மாட்டேங்குறாங்க...

குறைகுடம் நல்லா குதிச்சு, குதிச்சு ஆடுதுங்கோ

தண்டோரா ...... said...

//ஈரோடு கதிர்
March 10, 2010 10:19 PM

குறைகுடம் நல்லா குதிச்சு, குதிச்சு ஆடுதுங்க..//

நல்லப்பதிவு கதிர்..ஆமாம் .ஓட்டுப்பட்டையை காணலையே?(அப்படியே நம்ம கடைக்கும் வர்றது! வெற்றிலையில் சுண்ணாம்பு தடவறது எப்படின்னு ஒரு பதிவு போட்டிருக்கேன்)

வானம்பாடிகள் said...

தண்டோரா ...... said...
/நல்லப்பதிவு கதிர்..ஆமாம் .ஓட்டுப்பட்டையை காணலையே?(அப்படியே நம்ம கடைக்கும் வர்றது! வெற்றிலையில் சுண்ணாம்பு தடவறது எப்படின்னு ஒரு பதிவு போட்டிருக்கேன்)/

தலைவரே. நானு:))

VISA said...

//2 நாளா பைத்தியங்க கூட்டத்துல சிக்கிட்டேன். இப்புடி ஆகிப்போச்சுங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)//

தலைவரே நீங்க ஏன் வான்டடா போய் வண்டியில ஏறினீங்க. ஆமா அந்த வண்டி எங்ஙனக்க இருக்குன்னு சொன்னீங்கண்ணா எங்க பங்குக்கு கொஞ்சம் கும்முவோம். முதல் முறையாக உங்களுக்கு ஓட்டு போடுறேன். இனி தொடர்ந்து போடுவேன். போட்டுகிட்டே இருப்பேன். எவன் கேக்குறான்னு பாக்குறேன்.இளக்கியம் வித்து எப்படியாவது ஒரு அம்பாஸிடர் காராவது நாம வாங்கணும் வாங்க.

சித்து said...

என்னங்க நடக்குது பதிவுலகத்துல?? இதோட ரெண்டாவது பதிவு இதே மாதிரி. ஆனா இனிமே எவனாவது கடைசில ஓட்டு போடுங்க அப்ப தான் நாலு பேருக்கு போய் சேரும்னு கேட்பான்??

Chitra said...

போங்க போங்க. போய் மொக்கைய போட்டு ஓட்டு தேத்துற வழிய பாருங்க மக்கா. திருடன் திருடன்னு கத்திகிட்டே செயினறுத்துட்டு ஓடிட்டாய்ங்களப்பா:))

........கலக்கல் பதிவு. வோட்டு வாங்கி வெற்றி பெற்ற பாலா சாருக்கு வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

அண்ணே அந்த பென்ஸ் கார் எதிலே ஓடுது?

அது சரி said...

ஆஹா...சும்மா சூடு பறக்குதே...

ஓட்டு வாங்கி ஓட்டு வித்த வகைல மட்டும் எனக்கு இந்த மாசத்துல இதுவரைக்கும் ஒரு கோடியே முப்பத்தஞ்சி லட்சத்து எழுவத்தி மூணாயிரத்து பதிமூணு ரூவா லாபம்...

என்ன தான் ஓட்டு வாங்க செலவுன்னாலும் கூட்டி கழிச்சி பாத்தா நல்லா லாபம் நிக்குத்துண்ணே...அதனால தான நீங்க நானென்னால்லாம் இத யாவரத்தை செஞ்சிக்கிட்டு இருக்கோம்...

இதுல வந்த வருமானத்தை வச்சி பார்க் ஷெராட்டனை வெலை பேசிக்கிட்டு இருக்கேன்...கொஞ்சம் அதிகம் கேக்குறாய்ங்க...எப்படியும் இன்னும் ரெண்டு வாரத்துல ஓட்டு வித்தே சம்பாதிச்சிடுவேன்...

(அப்புறம் இந்த இடுகைக்கு ரெண்டு ஓட்டு போட்ருக்கேன்...வழக்கம் போல இந்த வாரக் கடைசில செக் அனுப்பிடுங்க)

Anonymous said...

ப்ரியா கவிதைக்கு இப்படி ஒரு அர்த்தம் கூட இருக்கா.
நிஜ அர்த்தத்தை முகிலன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கறேன்.
+ ஓட்டு போட்டாச்சு.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஐயா
செம காமெடி.கலக்கல் தான்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஃபார்மாலிட்டி டன்:)

க.பாலாசி said...

ஈமெயில் ஃபாளோஅப்லாம் போட்டிருந்தேன்.... ஒன்னும் சண்டையே இல்ல....

க.பாலாசி said...

ஆகா... ஓ....எடிட்டிங் வேளையெல்லாம் நடக்குதா!!!!!!!!

மதார் said...

http://kalakalapriya.blogspot.com/2010/03/blog-post_10.html

ஐயா வானம்பாடிகள் இந்த பதிவுகளுக்கு என்ன அர்த்தம் ? நான் யாரையாவது நாய் என்று கேவலமாக இதுவரை சொன்னது உண்டா ? ஏதோ பெரிசா நாங்க எல்லாம் நல்லவங்க குழு எல்லாம் இல்லன்னு பேசினீங்க ? இப்போ என்ன நடக்குது ? மாணிக்கம் பல மகுடத்தில் ஜொலிக்குது போல . கலகப்ரியாவை யாரோ சொன்னதும் தனிப்பட்ட தாக்குதல் கூடாது என்று கை வலிக்க கண்முழித்து பதில் சொன்னீங்க . இப்போ அந்த பெண் நாய் என்று என்னை தனிப்பட்ட முறையில் சொன்னது உங்களுக்கும் சம்மதமா? இந்த பதில் பதிவுகளில் இருந்தே நன்று தெரிகிறது குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் .இதற்க்கு நிஜ உலக அரசியலே மேல் .

உங்க வயசுக்கு இந்த பக்குவத்தை நான் எதிர்பார்க்கவில்லை . நன்றி ஐயா உங்கள் எதிர்பதிவுக்கு .

ஈரோடு கதிர் said...

//மதார் said...
// உங்க வயசுக்கு இந்த பக்குவத்தை நான் எதிர்பார்க்கவில்லை . நன்றி ஐயா உங்கள் எதிர்பதிவுக்கு .//

மதார்... 24 வயசில இருக்கிற பொண்ணு மட்டும்... மூன்று அனானிய பின்னூட்டத்துல கலகல / பழமை இடுகை குப்பைன்னு சொல்லி கும்மியடிக்க அனுமதிக்கும் போது...

இந்த வயசான மனுசன் இது வரைக்கு அனானிய அனுமதிக்காம இருக்கிறது... மோசமான பக்குவம்தான்..

கொஞ்சம் நீங்கதான் பக்குவம் கத்துக்குடுக்கனும்

Ddd சொன்ன மாதிரி அடுத்த இடுகை போடுங்க... பதிவுலம் உருப்படட்டும்

வானம்பாடிகள் said...

/ padma said...

haha na nichayama vote podla.venuma venama?/

அட முதல் போணியே இப்புடியா:))

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

வட போச்சே....//

முந்திக்கணும் பாஸ்

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

அல்ல்ல்லோவ்..

பேரு சொல்லாதங்க கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்கிறது கொஞ்சம் டூ மச்.....//

இது தன்னிலை விளக்கம் மன்னா!

thenammailakshmanan said...

முன்பொரு இடுகை ஒன்றும் இந்த இடுகை ஒன்றும் எது குறித்து யார்குறித்து எனத்தெரியவில்லை பாலா சார்.. ஆனா உங்க வழக்கமான காமெடிக்கு குறைவிலை ...

நிறைய ப்ளாக் படிக்க நேரமின்மைதான்காரணம் அந்த லிங்கையும் கொடுங்க சார் ..

அப்புறம் சங்கர் சொன்ன பஸ் கலெக்க்ஷன் என்ன ஆச்சு சார்....

வானம்பாடிகள் said...

Sivaji Sankar said...

ஸ்ஸ்ஸப்பா.......முடியல....//

ஆமாங்க. யாவாரம்னா அப்புடிதான்.

வானம்பாடிகள் said...

எறும்பு said...

1st//

ம்கும்.

எறும்பு said...

I have voted..
;))

Why comment moderation?

யாவாரம்னா பூட்டாம எப்புடி

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

ங்கொய்யாலே அதுக்குள்ள தமிழ்மணத்துல 6/6.. தமிழிஸ்ல 10... என்ன நடக்குது இங்கே//

தெர்லீங்ணா.

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

=))))...

/நேத்துல இருந்து ஒரு புது ரூலு சொல்லிக்கிறாங்க சில இலக்கிய வாதிங்க. அதாவது மொக்க எழுத கூடாதாம். ஃபாலோ பண்றவங்க இடுகைய படிக்க கூடாதாம். தமிழ்மணத்துல 6 ஓட்டுக்கு மேல வாங்க கூடாதாம். நமக்கு ஓட்டு போட்டவங்களுக்கு நாம ஓட்டு போட கூடாதாம்.//

ponnezhuthil porikkap pada vendiya vaasagam...

irunga irunga... aapees la ... lunch break la irunthu intha veenaa pona pathivukkellaam pinnoottam podanumnu thalai eluththu... ennei kinarila paathiyaavathu (ennei irukkira paathi) enakku eluthi vachidunga pls...//

துபாய் எடுத்துக்கம்மா.

வானம்பாடிகள் said...

மஞ்சூர் ராசா said...

ஒரு எழவும் புரியலெ.....ஏன்னா நான் ஓட்டு போடறதில்லே....//

குடுத்து வச்சவங்க சார்.

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

ஓட்டுப்போடுற மக்களே உங்கள் ஒரு அனானி கவனிக்குது... அப்புறமா உங்க கிட்ட விளக்கம் கேக்கும்... என்ன வெங்காயம் இந்த இடுகையில பிடிச்சுதுன்னு... நீங்க சரியா பதில் சொல்லலைனா.... உங்கள் கண்டபடி திட்டும் அந்த அனானி... சோ.... பீ... கேர் புல//

இப்பமட்டும் திட்டலையா?

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...

உஸ்!இந்த பஸ்ல எப்ப பார்த்தாலும் கூட்டம்.//

பிஸினஸ் பாஸ்:))

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரின்னு சொல்லுவாங்க....அங்கணயும் மூஞ்சில்லாத செல மந்திரிங்க....

போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா? இன்னும் போட்டிருக்கலாமே.....//

:)). முடியல சாமி ஒன் லொல்லு

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

ஆமா... எளக்கியம்னா என்னாங்க....//

படிச்சதும் கலக்கணும். அப்படியே பொரட்டி போடணும்:))

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

சிங்கம் சிலிர்த்திடுச்சே!//

சீண்டுனா என்ன பண்ண.

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

// என்னாதிது.... சின்னப்புள்ளத்தனமாயிருக்கு... கடல முட்டாய் எங்க???//

ஒரு வேளை எறும்பு தின்னுட்டு போயிருக்குமோ?

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...

கடை கடையா சுத்தறேன்னுதான் பேர்வழி.ஓட்டுப் பெட்டிப் பக்கமே போறதேயில்ல.உங்களுக்கும் சேர்த்துதான்.அவ்வ்வ்வ்வ்வ்......//

நீங்க ப்ரீமியம் கஸ்டமர் சார்.

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

பென்ஸ் கார் போய்ச் சேர்ந்திருக்கு.... ஆனா கடலை முட்டாய் இன்னும் வந்தபாடு இல்லையே??//

கஸ்டம்ஸ்ல கடத்தீருப்பாங்க:))

வானம்பாடிகள் said...

யூர்கன் க்ருகியர் said...

என் சிற்றறிவுக்கு புரியலங்க சார்.
யாரையோ டீசண்டா போட்டு தாக்குறீங்கன்னு நினைக்கிறேன்.
போட்டு தள்ளுங்க! ... யாருகிட்ட ???//

அதான யார்ட்ட:))

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...

//ஒரு இடுகை எழுதினா, அவங்களுக்கு அனுப்பி, அது தரமானதா இல்லையான்னு சொன்னப்புறம் இடுகை போடணும். அங்க ஒளிஞ்சிருந்து ஒரு சைக்கியாட்ரிஸ்ட் இருப்பாரு. யார் இடுகையாச்சும் படிச்சா அவரு கிட்ட போணும். அவரு என்ன மனநிலைன்னு சோதிச்சி சர்டிஃபிகேட் குடுப்பாரு. அப்புறம்தான் பின்னூட்டம் போடணும்.//

இந்த வெளயாட்டு எப்ப துவங்கிச்சு?சொல்லவேயில்ல//

மாதர் தினம் அன்னைக்கு:))

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
இடுகை போட்டு அரைமணிக்குள்ள பரிந்துரைக்கும் பாப்புலர் பக்கத்துக்கும் உதவிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி! நன்றி! நன்றீஈஈஈஈஈ//

என்னாதிது.... சின்னப்புள்ளத்தனமாயிருக்கு... கடல முட்டாய் எங்க???//

எறும்பு தின்னுட்டு போயிருக்குமோ

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...

கடை கடையா சுத்தறேன்னுதான் பேர்வழி.ஓட்டுப் பெட்டிப் பக்கமே போறதேயில்ல.உங்களுக்கும் சேர்த்துதான்.அவ்வ்வ்வ்வ்வ்......//

நீங்க தேர்தல் அதிகாரி சார்:))

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் Says:
March 10, 2010 5:24 PM

இடுகை போட்டு அரைமணிக்குள்ள பரிந்துரைக்கும் பாப்புலர் பக்கத்துக்கும் உதவிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி! நன்றி! நன்றீஈஈஈஈஈ//

ங்கொய்யாலே..

நன்றி சொன்னாப் போதுமா...

அனானிய மூடிவச்சிட்டா எப்படி அந்த மூனு பேரு வந்து கெட்ட வார்த்த பேசுவாங்க...

தெறந்துடுங்கண்ணே!//

அனானிக்கு இங்க என்ன வேலை. இதான் யாவாரமாச்சே:))

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் Says:
March 10, 2010 5:25 PM
கடை கடையா சுத்தறேன்னுதான் பேர்வழி.ஓட்டுப் பெட்டிப் பக்கமே போறதேயில்ல.உங்களுக்கும் சேர்த்துதான்.அவ்வ்வ்வ்வ்வ்......
//

எங்க தாராவரத்து அண்ணனை வுட்டே கண்டனம் சொல்ல வெப்போம்... இஃகிஃகி!!//

ம்கும். அவரு பாலாசிக்குதான் பின்னூட்டுறாரு. நம்ம கட பக்கம் வரதேயில்ல

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
வெளயாட்டு //

என்னாதிது? வாய் குழறுதுங்க??//

ம்ஹூம். எல்லாம் ஆரஞ்சு மரத்தடி ஆப்பிள் சூஸ் பண்ற வேலை. அவர கேட்டா அவரு என்ன சொல்லுவாரு

வானம்பாடிகள் said...

இப்படிக்கு நிஜாம்.., said...

//யாருப்பா அது. தமிழிஷ்ல போட்டு தமிழ்மணத்துல போடாம போனது. ப்ளீஸ். குத்துங்க எஜமான். ரெண்டுலயும் குத்துங்க. என் குப்பை சீக்கிரம் மகுடம் சூடணும். சாரி பாலாசி. விட்டு குடுராசா:))//

அண்ணே! அரசியல் யாவாரத்துக்கு இத விட சிறந்த பிரச்சாரம் வேனுமா? அண்ணே அது மைனஸ் ஓட்டா விழ வேன்டியது தப்பா விழுந்திடுச்சின்னு அந்த ஆளு ரொம்ப கவலையா இருக்காராம். இதுல அவருகிட்ட போயி தமிழிஷ் ஓட்டு வேற கேக்குறீங்களா!!!//

ஓட்டு கேக்கறதுன்னு ஆகிப்போச்சி. அதெல்லாம் பார்த்த யாவாரம் நடக்குமா:))

வானம்பாடிகள் said...

சங்கர் said...

புதுசா பஸ்சு விட்டு, ஆளு சேர்த்து, டிக்கெட் வித்த பணமெல்லாம் எங்க போச்சி? அது பத்தி எதுவும் காணுமே?//

அடப்பாவி. கேஷ் பேக்க குடுத்து வச்சிக்கப்பா டாய்லட் போய்ட்டு வரேன்னு போனா ஆட்டய போட்டுட்டு கணக்கு கேக்குறியா?

வானம்பாடிகள் said...

சி. கருணாகரசு said...

”போய்க்கேயிருக்கலாம்டான்னாய்ங்க”.//

என்ன இது, ஒரு வார்த்தையை.... இத்தன கிலோ மீட்டருக்கு எழுதுனா... எப்படி படிக்கிறது....../

செந்தமிழ் மாநாட்டுல அங்கீகாரம் வாங்கிடுறேண்ணே.

// சரி பத்த வச்சியிருக்கிங்க ... வெந்து தணிந்ததுக்கு அப்புறமா வரட்டுமா...???//

அட நானே எரியுறேன். நான் பத்த வைக்கிறதாவது.அவ்வ்வ்வ்

வானம்பாடிகள் said...

செ.சரவணக்குமார் said...

என்னாச்சு தலைவரே? ஊருக்கு வந்துருக்குற நேரத்துல பீதியக் கிளப்புறீங்க.//

கடையத் தொறங்க பாஸ். காசு வரட்டும்.

சங்கர் said...

//வானம்பாடிகள் said...
அடப்பாவி. கேஷ் பேக்க குடுத்து வச்சிக்கப்பா டாய்லட் போய்ட்டு வரேன்னு போனா ஆட்டய போட்டுட்டு கணக்கு கேக்குறியா?//

நீங்க திரும்பி வர நேரமானதுனால பிரியா கிட்டதான் குடுத்துட்டு பஸ்சுலருந்து இறங்கினேன், குடுக்கலையா அவுங்க

அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

வானம்பாடிகள் said...

D.R.Ashok said...

ஆஹா.. ஓஹோ.. பிரமாதம்..பிச்சிட்டீங்க.. நல்ல பதிவு.. என்ன ஒரு தீர்க்கதரிசனம்.. வார்த்தைகளே இல்ல பாராட்ட.. போதுமா சார்... (இதுக்கு மேல ஓட்டெல்லாம் வேற போடனும்..ம்ஹும்)//

சக்கரைன்னு எழுதி நக்கினா தித்திக்குமா. ஓட்டுதான் மிக்கியம்

வானம்பாடிகள் said...

சத்ரியன் said...

பாலா,

இவ்வ்வ்வ்வ்வளவு நாளா இருந்துட்டு இப்பதான் ஒரைச்சிதா ஓய் உமக்கு. ... மக்கு!//

அவ்வ்வ்வ். பாருங்ணா. என்னிய போய் பதிவுலக லக்‌ஷ்மி மிட்டல் ரேன்ஞ்சுக்கு சொல்றாய்ங்ணா.

/இங்க பார்ரா.... இந்தாளு வந்தமா கொஞ்சம் நெய்ய ஊத்தி வுட்டு வேடிக்க பாப்பமான்னு இல்லாம, தணிஞ்சப்புறம் வர்ர்ர்ர்ராராம்...!

வந்தமா, வேடிக்க பார்த்தமா, விசிறி விட்டமா, நாட்டாம பண்ணமான்னு தெரியல பாருங்க:))

/கதிரண்ணா,

கள்ள ஓட்டு போட்டா என்ன குடுப்பாரு மாம்ஸ்...?/

நல்ல ஓட்டுக்கே கல்ல மிட்டாய்தான். கள்ள ஓட்டுக்கு காக்கா கடிதான்:))

வானம்பாடிகள் said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present Bala//

:)).

வானம்பாடிகள் said...

கண்ணா.. said...

அட அதுக்குள்ள எதிர்பதிவு போட்டாச்சா....ரைட்டு நடத்துங்க

நீங்களாவது முகமூடி அணிந்து பின்னூட்டுபவர்களின் பின்னூட்டத்தை பார்த்து வெளியிடுங்கள்

:))//

:((. அண்ணாத்த. இது எப்புடி எதிர் பதிவு. என் யாவாரத்த பத்தி எழுதினேன் அவ்வளவுதான். நீங்க வேற வம்ப இழுத்து விட்றாதீய.

நம்ம இடுகைக்கு கேட்டே தேவையில்லீங்ணா. நாம காமடி பீசு. மத்தவங்களுக்காகதான் கேட் போட்டேன்.

வானம்பாடிகள் said...

Subankan said...

ரைட்டு, நடத்துங்க

:)//

உங்கள மாதிரி வாடிக்கையாளர நம்ம்பியிருக்கோங்ணா. வச்சி காப்பாத்துங்க மக்கா:))

வானம்பாடிகள் said...

தண்டோரா ...... said...

கமெண்ட் மாடரேஷன் ? உதிரி கட்சிகளின் கூப்பாடு அது! விட்டுத் தள்ளுங்க.//

அட! எம்மாம் பெரிய பிஸினசு. ஒரு கதவு வேணாமாண்ணே:))

வானம்பாடிகள் said...

ஜெரி ஈசானந்தா. said...

செம கலாட்டாவா இருக்கு//

ச்சும்மா. டிப்சூ

வானம்பாடிகள் said...

ஸ்ரீ said...

ஒண்ணும் புரியலயே!//

புரிஞ்சிருக்குமே

வானம்பாடிகள் said...

வெற்றி said...

எனக்கு பென்ஸ் வாணாம்..அட்லீஸ்ட் ஒரு அம்பாசிடர் கூட யாரும் அன்பளிக்க மாட்டுறாங்க :)//

எதிலயும் ப்ளான்னிங் முக்கியம்:))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

அய்யோ... அய்யோ... எளக்கியமா? என்னாது எளக்கியமா... விக்கப்போறாங்களாமா... அய்யோ.. அய்யோ...

வாங்கப் போறீங்களா... அய்யோ... அய்யோ...//

அட விக்கப் போறங்ணா.

தாராபுரத்தான் said...

என்ன இது..கூடி கூடி கும்மி அடிக்கிறீங்க.. நம்ம பொழப்பும் போக போவுதா.

வானம்பாடிகள் said...

முகிலன் said...

//பழமைபேசி Says:
March 10, 2010 5:23 PM
பென்ஸ் கார் போய்ச் சேர்ந்திருக்கு.... ஆனா கடலை முட்டாய் இன்னும் வந்தபாடு இல்லையே??

//

நீங்களுமா பென்ஸ் அனுப்பி வச்சிங்க? இன்னும் எத்தன பேரு அனுப்பி வச்சாங்கன்னு தெரியலையே.. இதுல ஒரு ஊழல் நடந்திருக்காப்ல இருக்கே..

அப்புறம் நீங்க அனுப்பி வச்ச கடலை மிட்டாய்ல கடலே இல்லை.. கொஞ்சம் பாத்து மறுபடி அனுப்பி வைங்க..//

காரெல்லாம் சர்வீசுக்கு அனுப்பினப்ப கடல்ல கலந்துடிச்சி:))

வானம்பாடிகள் said...

ஜெட்லி said...

புரியுது.....//

அப்பச்சரி.

வானம்பாடிகள் said...

கும்க்கி said...

புரியாதவர்களுக்காக கவுண்ட்டர் லிங்க்காவது கொடுத்திருக்கலாம்.

ஓட்டு போட்டுட்டேன் சார்.

:-))//

கவுண்டர் எதுக்கு. நோ கேஷ் டீலிங். ஒன்லி ஓட்டு:))

வானம்பாடிகள் said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

as i am suffering from fever please grand me 2 days leave sir..:)//

என்னா பெரிய லீவு. போர்த்திக்கிட்டுன்னாலும் ஓட்டு குத்தீரணும். :)) இப்புடி பின்னூட்டம் போட்டாவணும். சரியா?

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

me the 50..

அஞ்ஞாறு இடுகை எழுதிட்டு... அல்லக்கைகள பக்கத்துல வச்சிக்கிட்டி என்னமா அலும்பு பண்றாங்க.... யாரோடதையும் படிக்க மாட்டாங்களாம், பின்னூட்டம் ”அருமை / நன்று” ன்னு போட்ட கட்ட வெரலு காணாம போய்டும்னு, அதெல்லாம் போட மாட்டாங்களாம், நித்தி பத்தி யாரும் எழுதக்கூடாதாம், அப்படி எழுதினவங்கள மட்டும் இவுக கேள்வி கேப்பாங்களாம்....

கடைசிய ஒரு பேர் தெரியா அல்லகைய விட்டு இதுக்கு என்ன அர்த்தம் அந்த போட்டோவுக்கு ஏன் ஓட்டு போட்டீங்கன்னு பல்லு வெளக்காம கேள்வி கேப்பாங்களாம்....

முகமூடி போட்டு இத உசுப்பேத்தி விட்டவன், அடுத்த ரெண்டு இடுகைய சீந்தக்கூட மாட்டேங்குறாங்க...

குறைகுடம் நல்லா குதிச்சு, குதிச்சு ஆடுதுங்கோ//

ஆடி அடங்கும் ப்ளாக்கரப்பா:))

வானம்பாடிகள் said...

தண்டோரா ...... said...

//ஈரோடு கதிர்
March 10, 2010 10:19 PM
me the 50..

அஞ்ஞாறு இடுகை எழுதிட்டு... அல்லக்கைகள பக்கத்துல வச்சிக்கிட்டி என்னமா அலும்பு பண்றாங்க.... யாரோடதையும் படிக்க மாட்டாங்களாம், பின்னூட்டம் ”அருமை / நன்று” ன்னு போட்ட கட்ட வெரலு காணாம போய்டும்னு, அதெல்லாம் போட மாட்டாங்களாம், நித்தி பத்தி யாரும் எழுதக்கூடாதாம், அப்படி எழுதினவங்கள மட்டும் இவுக கேள்வி கேப்பாங்களாம்....

கடைசிய ஒரு பேர் தெரியா அல்லகைய விட்டு இதுக்கு என்ன அர்த்தம் அந்த போட்டோவுக்கு ஏன் ஓட்டு போட்டீங்கன்னு பல்லு வெளக்காம கேள்வி கேப்பாங்களாம்....

முகமூடி போட்டு இத உசுப்பேத்தி விட்டவன், அடுத்த ரெண்டு இடுகைய சீந்தக்கூட மாட்டேங்குறாங்க...

குறைகுடம் நல்லா குதிச்சு, குதிச்சு ஆடுதுங்க..//

நல்லப்பதிவு கதிர்..ஆமாம் .ஓட்டுப்பட்டையை காணலையே?(அப்படியே நம்ம கடைக்கும் வர்றது! வெற்றிலையில் சுண்ணாம்பு தடவறது எப்படின்னு ஒரு பதிவு போட்டிருக்கேன்)//

:))

வானம்பாடிகள் said...

VISA said...

//2 நாளா பைத்தியங்க கூட்டத்துல சிக்கிட்டேன். இப்புடி ஆகிப்போச்சுங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)//

தலைவரே நீங்க ஏன் வான்டடா போய் வண்டியில ஏறினீங்க. ஆமா அந்த வண்டி எங்ஙனக்க இருக்குன்னு சொன்னீங்கண்ணா எங்க பங்குக்கு கொஞ்சம் கும்முவோம். முதல் முறையாக உங்களுக்கு ஓட்டு போடுறேன். இனி தொடர்ந்து போடுவேன். போட்டுகிட்டே இருப்பேன். எவன் கேக்குறான்னு பாக்குறேன்.இளக்கியம் வித்து எப்படியாவது ஒரு அம்பாஸிடர் காராவது நாம வாங்கணும் வாங்க.//

ஆஆஆஆ. மகுடமேறின பதிவுக்கு விசிட்டிங் கார்டு கேட்ட்டா நான் எங்க போக. ஓட்டுக்கு நன்றி :))

வானம்பாடிகள் said...

சித்து said...

என்னங்க நடக்குது பதிவுலகத்துல?? இதோட ரெண்டாவது பதிவு இதே மாதிரி. ஆனா இனிமே எவனாவது கடைசில ஓட்டு போடுங்க அப்ப தான் நாலு பேருக்கு போய் சேரும்னு கேட்பான்??//

ஒரு வெளம்பரந்தேன்

வானம்பாடிகள் said...

Chitra said...

போங்க போங்க. போய் மொக்கைய போட்டு ஓட்டு தேத்துற வழிய பாருங்க மக்கா. திருடன் திருடன்னு கத்திகிட்டே செயினறுத்துட்டு ஓடிட்டாய்ங்களப்பா:))

........கலக்கல் பதிவு. வோட்டு வாங்கி வெற்றி பெற்ற பாலா சாருக்கு வாழ்த்துக்கள்.//

வெற்றில்லாம் வேணாம். ஓட்டுதான் வேணும்..அவ்வ்வ்வ்

வானம்பாடிகள் said...

நசரேயன் said...

அண்ணே அந்த பென்ஸ் கார் எதிலே ஓடுது?//

அடங்கொன்னியா. இப்புடித்தான் துண்டு போடுவீரோ.
துபாய், சவுதில 2 பெட்ரோல் கிணறு சொந்தத்துல வாங்கிட்டதால பெட்ரோல் செலவும் இல்லை.

வானம்பாடிகள் said...

அது சரி said...

ஆஹா...சும்மா சூடு பறக்குதே...

ஓட்டு வாங்கி ஓட்டு வித்த வகைல மட்டும் எனக்கு இந்த மாசத்துல இதுவரைக்கும் ஒரு கோடியே முப்பத்தஞ்சி லட்சத்து எழுவத்தி மூணாயிரத்து பதிமூணு ரூவா லாபம்...

என்ன தான் ஓட்டு வாங்க செலவுன்னாலும் கூட்டி கழிச்சி பாத்தா நல்லா லாபம் நிக்குத்துண்ணே...அதனால தான நீங்க நானென்னால்லாம் இத யாவரத்தை செஞ்சிக்கிட்டு இருக்கோம்...

இதுல வந்த வருமானத்தை வச்சி பார்க் ஷெராட்டனை வெலை பேசிக்கிட்டு இருக்கேன்...கொஞ்சம் அதிகம் கேக்குறாய்ங்க...எப்படியும் இன்னும் ரெண்டு வாரத்துல ஓட்டு வித்தே சம்பாதிச்சிடுவேன்...

(அப்புறம் இந்த இடுகைக்கு ரெண்டு ஓட்டு போட்ருக்கேன்...வழக்கம் போல இந்த வாரக் கடைசில செக் அனுப்பிடுங்க)//

INR ல அனுப்பலாமா பாஸ்:))

வானம்பாடிகள் said...

சின்ன அம்மிணி said...

ப்ரியா கவிதைக்கு இப்படி ஒரு அர்த்தம் கூட இருக்கா.
நிஜ அர்த்தத்தை முகிலன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கறேன்.
+ ஓட்டு போட்டாச்சு.//

ஓட்டுக்கு நன்றிங்க. முகிலன் தப்பு தப்பா சொல்லுவாரு:))

வானம்பாடிகள் said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஐயா
செம காமெடி.கலக்கல் தான்.//

அச்சச்சோ. பிசினஸ காமெடியா நினைக்கப்படாது:))

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

ஈமெயில் ஃபாளோஅப்லாம் போட்டிருந்தேன்.... ஒன்னும் சண்டையே இல்ல....//

அடப்பாவி:))

வானம்பாடிகள் said...

மதார் said...

http://kalakalapriya.blogspot.com/2010/03/blog-post_10.html

ஐயா வானம்பாடிகள் இந்த பதிவுகளுக்கு என்ன அர்த்தம் ?//

ரெண்டும் காமெடி பீசு. புரியலையா?

//நான் யாரையாவது நாய் என்று கேவலமாக இதுவரை சொன்னது உண்டா ?//

எனக்கெப்படிம்மா தெரியும்?

//ஏதோ பெரிசா நாங்க எல்லாம் நல்லவங்க குழு எல்லாம் இல்லன்னு பேசினீங்க ?//

நான் எங்கம்மா சொன்னேன்.

//இப்போ என்ன நடக்குது ? //

ஒன்னுமே நடக்கல. உங்கள விட ஓட்டு கம்மியாத்தான் விழுந்திருக்கு:((//மாணிக்கம் பல மகுடத்தில் ஜொலிக்குது போல .//

எந்த மகுடம். எந்த மாணிக்கம்? விளங்குதில்லையே?

//கலகப்ரியாவை யாரோ சொன்னதும் தனிப்பட்ட தாக்குதல் கூடாது என்று கை வலிக்க கண்முழித்து பதில் சொன்னீங்க . இப்போ அந்த பெண் நாய் என்று என்னை தனிப்பட்ட முறையில் சொன்னது உங்களுக்கும் சம்மதமா?//

காலைல உங்க பதில பார்த்ததும் வந்திச்சி கோவம். எப்புடி அந்தம்மாவ நாய்னு சொல்லப்போச்சுன்னு போய் பார்த்தேன். அந்தம்மா உங்க பதில போட்டிருக்கு. நீங்க அங்க

//என்னை நாய் கடிச்சா உங்ககிட்ட சொல்லமாட்டேன் அக்கா //

அந்தம்மா இடுகையிலயும் எங்கயும் உங்களை நாய்னு சொல்லலையே. ஏன் இப்புடி மாத்தி மாத்தி சொல்றீங்க.

// இந்த பதில் பதிவுகளில் இருந்தே நன்று தெரிகிறது குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் .//

இது பதில் பதிவுன்னு நீங்களா முடிவு பண்ணா நான் என்ன பண்றது. நான் உங்க நாக்குட்டி ddd சொல்லிச்சேன்னு மொக்க, மஹா மொக்க போட்டேன். லேபில்ல கூட பாருங்க.

//இதற்கு நிஜ உலக அரசியலே மேல்.//

அது ஏங்க இங்க சொல்றீங்க?

// உங்க வயசுக்கு இந்த பக்குவத்தை நான் எதிர்பார்க்கவில்லை .//

ஆமாங்கம்மா. இல்லைன்னா மெனக்கெட்டு உங்களுக்கு போய் ஓட்டுன்னா என்ன, பதிவரோட பொறுப்பு என்னன்னு சொல்லுவனா? எனக்கு தேவைதான்.

/ நன்றி ஐயா உங்கள் எதிர்பதிவுக்கு .//

இது எப்படிம்மா எதிர் பதிவாகும். நீங்க ஓட்டு வியாபாரம்னீங்க. என் வியாபாரம் எப்படி நடக்குதுன்னு சொன்னேன். நீங்க சொன்னத சொன்னாலுமே எதிர் பதிவா?

உங்களுக்கு என்ன பிரச்சினை? இப்படி அடுத்தவங்கள பார்த்து காயறத விட்டுட்டு, உங்க பதிவில கவனம் செலுத்துங்க. உங்க இடுகைக்கு ஓட்டு போடுறவங்க எல்லாம் ஒரு குழுன்னா எங்க போய் முட்டிக்கிறது.

வானம்பாடிகள் said...

மதார் said...

//http://kalakalapriya.blogspot.com/2010/03/blog-post_10.html//

நீங்களோ, உங்க இன்வெஸ்டிகேடர் nan yaro உக்காந்து படிக்காதவன்(1985) ஜனகராஜ் காமெடி கேளுங்க. ஒரே ஒரு எழுத்து மாறாம இந்த இடுகையில இருக்கும். சொந்தமா ஒரு வார்த்தை கூட இருக்காது. இதுல நாயின்னு என்ன சொல்லிட்டாங்கன்னு கத்துனா, அந்த படம் எடுத்த முதலாளி, வசனகர்த்தாவதான் கேக்கணும். அப்ப நீங்க பொறக்கவே இல்லை. ஆக உங்களை யாருமே சொல்லலையே. அப்புறம் ஏன் எதிர் இடுகை, வம்பு சண்டைன்னு. ddd யார்னே உங்களுக்கு தெரியாதுங்கறீங்க. அது ஒரு வேளை பெண்ணா இருக்கக் கூடாதா? அவங்க தான் இவங்க பதிவைப் பத்தி சொன்னாங்க. அவங்க வந்து கேட்டா நியாயம். இல்ல அவர் ஆண்ணா எனக்கென்ன போச்சுன்னு இருப்பாரு. அப்படித்தான் இருந்திருக்காரு போல. நடுவில நீங்க வந்து வாய்க்கு வந்தபடி பேசினா என்னா அர்த்தம்.

முடிஞ்சா அந்த 3 மஸ்கடீர்ஸ் கிட்ட ஓட்டு தேத்த பாருங்க. ஆல் தி பெஸ்ட்

வானம்பாடிகள் said...

தாராபுரத்தான்

//என்ன இது..கூடி கூடி கும்மி அடிக்கிறீங்க.. நம்ம பொழப்பும் போக போவுதா.//

அட அண்ணே. பொழைக்கற வழிக்கு டிப்சுண்ணே:))

புலவன் புலிகேசி said...

உஷ்.......முடியல...

ஆதிமூலகிருஷ்ணன் said...

எவ்ளோ ஓட்டு? எவ்ளோ பின்னூட்டம்? என் வயித்தெரிச்சல்தான் இப்படி நீங்க பைத்தியங்ககிட்ட சிக்கியிருப்பீங்களோ? ஹிஹி..

(ஆமா, இந்தப்பதிவுல ஏதோ உள்குத்து இருக்குதா?)