Friday, March 5, 2010

பதிவர்களை டரியலாக்கும் ஜூனியர்கள்....

ஜூனியர் முகிலன்: அம்மாவ வம்புக்கிழுத்தா அடி விழுகுதுன்னு என்னிய தோச திங்கவிடாம, டேன்ஸ் ஆட விடாம பண்ணி இடுகை போட்டது கூட பரவால்ல. ஸ்னோக்குள்ள இறக்கிவிட்டு ஃபோட்டோ புடிச்சி போட்டு இதுக்கு நான் அலையறேன்னு இடுகை போட்டாரு பாருங்க..அவ்வ்வ்வ்...என்னா குளிரு!..குடுகுடுப்பை அங்கிள் எதிர் கவுஜ போட்டா இவரு எதிரெதிர் கவுஜ போட்டாரு சரி. அதுக்காக அந்தக்காவ ஸ்னோல இறக்கி அவரு போட்ட ஃபோட்டோக்கு எதிர் ஃபோட்டோ போடுறாரே..சொல்லி வைங்க.. நல்லால்ல இதெல்லாம்.

ஜூனியர் ஆருரன்
: பாவி மனுசன் பாண்டிச்சேரி போலாமுடா. இந்த கண்ணாடிய தூக்கி கடாசிடலாம்னு சொன்னாரேன்னு நம்ம்ம்ம்ம்பி போனேன். இத வச்சி ஒரு இடுகைய தேத்தி பெரிய சமூக சேவகராயிட்டாரு எங்கப்பா!

ஜூனியர் நசரேயன்: அல்ல்ல்லோ! இந்த மனுசன் மனசுல பெரிய துண்டாலங்கிடி ஈரோன்னு நெனப்பு. போட்டோ போடமாட்டாரு. என் ஃபோட்டோ போட்டா என்ன? என்கூட ஆன்லைன்ல கேம் ஆடி தோத்துப் போன கடுப்பில இடுகை தேத்தி நம்ம பேர ரிப்பேராக்கப் பார்த்தாரு. பின்னாடி நின்னு என்ன்ன்ன்ன்னாஆன்னேன்! ச்ச்ச்ச்ச்சும்மான்னு அப்புடியே டெயில் பீச மாத்தி காமெடி பீசாயிட்டாரு!

குடுகுடுப்பையார் வூட்டு சின்னம்முனி
: எதிர் கவுஜ எழுத தெரிஞ்ச எங்கப்பாக்கு எதிர் ஸ்னோமேன் பண்ண தெரியாது தெரியுமா? யார் ஊட்டு ஸ்னோமேன் ஃபோட்டோவோ போட்டுட்டு அசல்னு தொடுப்பு குடுக்காத ஊழல அதுசரி அங்கிள் கூட கண்டு புடிக்கல. அதெல்லாமாவது பரவால்லைங்க. இதான் ஜக்கம்மா உழுந்து கும்புடுன்னு அழிச்சாட்டியம் பண்ணாரு தெரியுமா? அவ்வ்வ்வ்வ்.

கதிரூட்டு சின்னம்முனி
: ஒரு நா ராத்திரி நல்லா தூங்கிட்டிருந்தேனா? கிக்கிக்கினு சிரிப்பு சத்தம். எழுந்து பார்த்தா சத்தமில்லாம டி.வி. வெச்சிட்டு டேன்ஸ் பார்த்துகிட்டு சிரிப்ப கசிய விடுறாரு எங்கப்பா. நீங்களே சொல்லுங்க, நடுராத்திரில காரணமில்லாம ஒருத்தரு கிக்கிக்கின்னா சிரிப்பு வருமா வராதா? நானும் சிரிச்சிட்டு தூங்கிட்டேன். அடுத்த நாள் பார்த்தா என்னையும் சேர்த்துகிட்டு செம பில்டப்போட இடுகை போட்டுட்டாரு எங்கப்பா!  அப்புறம் கார்ல தூங்கிட்டிருந்த என்னய வெச்சு காமிரா இடுகையில காமெடி பீசாக்கிட்டாரு. கொஞ்சம் ஏத்தமாதான் போச்சு அய்யாக்கு. அம்மாவ காமெடி பண்ண போய் அடுத்த நாள் சாப்பாடு கடையில.. அப்பவே சொன்னேன். கசியும் உண்மைன்னு:))..ஹி ஹி. வர்ட்டா.

பழமையூட்டு சின்னம்முனி: தாத்தாக்கு பல்லு விழுந்து போச்சின்னு எவ்ளோ ரகசியமா சொன்னேன் அப்பாட்ட. ஊரு பழமை பேசுற மனுசனுக்கு பல்லு விழுந்தத சத்தமா சொன்னாலோ, வானத்துக்கு காட்டினாலோ பல்லு மொளைக்காதுன்னு தெரியாது? இதப் போயி இடுகையா போட்டு, இப்ப பாருங்க தாத்தாக்கு பல்லே முளைக்கல. பர்கர் கேட்டேன்னு இடுகைய போட்டு மானத்த வாங்கீட்டு இவரு ஃபாண்டு சாப்புட்டதுமில்லாம படம் புடிச்சி போட்டு வெறுப்பேத்துறாரே..இந்த மாப்பு மாமா வேஸ்டு பீசு. அப்பாவ ஒன்னும் கேக்க மாட்டீங்குறாரு.

ஜூனியர் பாலாசி: அட இருங்க இருங்க. ஈரோடு பதிவர் குழுமத்துல இருந்து மொத்தமா அடிக்க பொறப்டா எப்புடி. இவ்ளோ பெரிய மனுசங்க இருக்கீங்க. எங்கள அழகழகா படம் புடிச்சி போட்டுட்டு நாங்க பிறக்க வழி பண்ணாம தமிழ்மணத்துல கவிதை வருமா, கட் பேஸ்ட் போடலாமான்னு இருக்கானே மனுசன். அதுக்கும் ரெண்டு சேர்த்து போடுங்க சொல்றேன்.


ஜூனியர் வானம்பாடிகள்: அய்ய! யப்பா! 25 வருசத்துக்கு முன்னாடி கொசுவத்தி சுத்தி இடுகை தேத்தின மனுசன் இப்புடி சொந்த காசுல சூனியம் வெச்சுக்கலாமா? ஹூஊஊம் அவன் அவன் எடுக்கற முடிவு பாதகமாத்தான் போவுது வானம்பாடி!

77 comments:

சூர்யா ௧ண்ணன் said...

நாந்தான் முதல்ல..

அப்பாவி முரு said...

//ஜூனியர் வானம்பாடிகள்: //

இன்னும் ஜூனியரா?

சூப்பர் சூனியர் என்ன சொல்றார்?

அகல்விளக்கு said...

ஹிஹிஹிஹி...

கலக்கல்ஸ்.......

ஈரோடு கதிர் said...

அய்...அய்ய்...

சேதாரம் கம்மிதான்

ஊட்டுல பாப்பகிட்ட நெசமா ஆகுற சேதாரம் இத விட சாஸ்திங்கோவ்

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

//.. சூப்பர் சூனியர் என்ன சொல்றார்? ..//

:-D))

இராகவன் நைஜிரியா said...

நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன்...

சேதாரம் இல்லாம தப்பிச்சுட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

// இத வச்சி ஒரு இடுகைய தேத்தி பெரிய சமூக சேவகராயிட்டாரு எங்கப்பா! //

அதானே... பாருங்க எப்படி எல்லாம் இடுகை தேத்தறாங்கன்னு..

அதவச்சு அண்ணன் வானம்பாடிகளும் ஒரு இடுகை தேத்திட்டாருல்ல. :-)

இராகவன் நைஜிரியா said...

// இதான் ஜக்கம்மா உழுந்து கும்புடுன்னு அழிச்சாட்டியம் பண்ணாரு தெரியுமா? அவ்வ்வ்வ்வ்.//

அப்படியா... அய்யோ பாவம் குழந்தை... பார்த்து குடுகுடுப்பையாரே.. குழைந்தகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் பிடிச்சுகிட்டு போயிடப் போறாங்க..

இராகவன் நைஜிரியா said...

// என்கூட ஆன்லைன்ல கேம் ஆடி தோத்துப் போன கடுப்பில இடுகை தேத்தி நம்ம பேர ரிப்பேராக்கப் பார்த்தாரு. //

இதுக்குத்தான் நாங்க எல்லாம் கேமே ஆடுவதில்லை..

இராகவன் நைஜிரியா said...

// அம்மாவ காமெடி பண்ண போய் அடுத்த நாள் சாப்பாடு கடையில.. அப்பவே சொன்னேன். கசியும் உண்மைன்னு:))..ஹி ஹி. வர்ட்டா. //

டோட்டல் டேமேஜ்.

இராகவன் நைஜிரியா said...

// இந்த மாப்பு மாமா வேஸ்டு பீசு. அப்பாவ ஒன்னும் கேக்க மாட்டீங்குறாரு.//

உங்கப்பாவை கேள்வி கேட்பது சுலபம். அப்புறம் அவரு குதிர் அப்படின்னா என்ன என்பது மாதிரியான எதிர் கேள்வி கேட்டு எங்களை எல்லாம் குடைஞ்சு எடுத்துடுவார். அதனால அவர யாரும் கேள்வி கேட்க முடியாது... முடியாது... நீயாவது புரிஞ்சுக்கம்மா.. :-)

இராகவன் நைஜிரியா said...

// ஜூனியர் கலகலப்ரியா: என்னமோ அம்மா எழுதற கவிதைக்குத்தான் அர்த்தம் புரியமாட்டிங்குதுன்னு நொந்துக்கறீங்களாமே! இந்த பதிவில இரண்டாவது இடுகையில நான் சொன்னது எதுன்னு கண்டு பிடிங்க பார்ப்போம். //

தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும் என்பது சரிதானோ?

இராகவன் நைஜிரியா said...

// ஜூனியர் வானம்பாடிகள்: அய்ய! யப்பா! 25 வருசத்துக்கு முன்னாடி கொசுவத்தி சுத்தி இடுகை தேத்தின மனுசன் இப்புடி சொந்த கால்ல சூனியம் வெச்சுக்கலாமா. ஹூஊஊம் அவன் அவன் எடுக்கற முடிவு பாதகமாத்தான் போவுது வானம்பாடி!//

அது சரி... சூனியம் வச்சுகிறதுன்னு வந்தாச்சு... அப்புறம் சொந்த செலவு, அடுத்தவங்க வீட்டு செலவுன்னு பாத்தா முடியுமா?

இராகவன் நைஜிரியா said...

// அப்பாவி முரு said...
//ஜூனியர் வானம்பாடிகள்: //

இன்னும் ஜூனியரா?

சூப்பர் சூனியர் என்ன சொல்றார்? //

ஹி... ஹி... அதான் சொல்லிட்டாருல்ல... அப்புறம் என்ன கேள்வி..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சூப்பர்..:))

--
இன்னும் ஜூனியரா?

சூப்பர் சூனியர் என்ன சொல்றார்? //

ஹி... ஹி... அதான் சொல்லிட்டாருல்ல... அப்புறம் என்ன கேள்வி.
--
இது டாப்பு..:))

சத்ரியன் said...

பாலா அண்ணா,

கலக்குறீங்களே...!

(எதையெதையெல்லாம் இடுகையா மாத்தறாய்ங்க....? நம்ம மூளைக்குத்தான் ஒன்னுமே எட்டமாட்டேங்குது...ம்ஹூம்ம்ம்ம்!)

சைவகொத்துப்பரோட்டா said...

ஜூனியர்ஸ்....... :))

padma said...

செமையா இருக்கு

இராகவன் நைஜிரியா said...

// சத்ரியன் said...
பாலா அண்ணா,

கலக்குறீங்களே...!

(எதையெதையெல்லாம் இடுகையா மாத்தறாய்ங்க....? நம்ம மூளைக்குத்தான் ஒன்னுமே எட்டமாட்டேங்குது...ம்ஹூம்ம்ம்ம்!) //

இதுக்கெல்லாம் கவலைப்பட்டா ஆகுமா. பல் இருக்குறவங்க பகோடா சாப்பிடறாங்க.. என்னையே எடுத்துக்கோங்க... இரண்டு மாசம் ஆச்சு இடுகைப் போட்டு... இதுக்கெல்லாம் கவலைப் படாமா லூஸ்ல விட்டுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

யூர்கன் க்ருகியர் said...

அப்படியா சேதி ??

இராமசாமி கண்ணண் said...

கலக்கல்ஸ் ஆப் வானம்பாடி. சூப்பர் சார் பின்றீங்க.

ராஜ நடராஜன் said...

நசரேயன் கடைக்குப் போன எஃபக்டாக்கும்:)

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...

நசரேயன் கடைக்குப் போன எஃபக்டாக்கும்:)//

இல்லை சார். முன்னாடியே ஒரு இடுகை போட்டு தூக்கிட்டேன். அது நசரேயன் கூட சொல்லி இருந்தார். இது ச்ச்ச்ச்சும்மா:))

ஆரூரன் விசுவநாதன் said...

நல்லாயிருங்கய்யா....நல்லாயிருங்க...

ரோஸ்விக் said...

ஜுனியருங்க மானத்தை வாங்குறது பத்தாதுன்னு... நீங்க வேறையா... நடத்துங்க அண்ணே நடத்துங்க... :-)

க.பாலாசி said...

//நாங்க பிறக்க வழி பண்ணாம//

ம்க்கூம்.... ரொம்ப முக்கியம்.....

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
அய்...அய்ய்...
சேதாரம் கம்மிதான்//

அய்...சேதாரம் கம்மியாமுல்ல...இங்கண கிழிச்சி தொங்க உட்டுருக்காரு.... அதெப்புடிங்க வலிக்காத மாதிரியே நடிக்கிறீங்க....

க.பாலாசி said...

//அகல்விளக்கு said...
ஹிஹிஹிஹி...
கலக்கல்ஸ்.......//

எது ராசா..கலக்கலு... எங்கள நாருந்தோலுமா ஆக்குனதா??? மொவனே உனக்கும் ஒருநாள் இருக்குடி.....

பிரபாகர் said...

கதிர் மற்றும் முகிலன் ஸ்னோ மேட்டர் அருமை. மற்ற யாவும் ரசிக்கும்படியாயும், உங்களின் ஞாபக சக்தியை பறைசாற்றும் வண்ணமாய் இருந்தது அய்யா!

பிரபாகர்.

ஸ்ரீ said...

:-)))))))))

க.பாலாசி said...

ஆமா...அதாருங்க... பாலாசி....படவாப்பய... அப்டில்லாமா பண்றான்...தருதல உருப்புடுவாங்கிறீங்க....ம்கூம்...

முகிலன் said...

//ஜூனியர் முகிலன்: அம்மாவ வம்புக்கிழுத்தா அடி விழுகுதுன்னு என்னிய தோச திங்கவிடாம, டேன்ஸ் ஆட விடாம பண்ணி இடுகை போட்டது கூட பரவால்ல. ஸ்னோக்குள்ள இறக்கிவிட்டு ஃபோட்டோ புடிச்சி போட்டு இதுக்கு நான் அலையறேன்னு இடுகை போட்டாரு பாருங்க..அவ்வ்வ்வ்...என்னா குளிரு!..குடுகுடுப்பை அங்கிள் எதிர் கவுஜ போட்டா இவரு எதிரெதிர் கவுஜ போட்டாரு சரி. அதுக்காக அந்தக்காவ ஸ்னோல இறக்கி அவரு போட்ட ஃபோட்டோக்கு எதிர் ஃபோட்டோ போடுறாரே..சொல்லி வைங்க.. நல்லால்ல இதெல்லாம்.
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஜெரி ஈசானந்தா. said...

ரசித்தேன் சீனியர்..

முகிலன் said...

// க.பாலாசி said...
ஆமா...அதாருங்க... பாலாசி....படவாப்பய... அப்டில்லாமா பண்றான்...தருதல உருப்புடுவாங்கிறீங்க....ம்கூம்..//

வாயில விரல் வச்சிக்கிட்டிருக்கிற பிள்ளை பேசுற பேச்சா இது.. ம்ஹூம்..

முகிலன் said...

கொஞ்ச நேரம் கழிச்சி வந்து கண்டினியூ பண்றேன்

அண்ணாமலையான் said...

கலக்கல்

நசரேயன் said...

//ராஜ நடராஜன் Says:
March 5, 2010 5:26 PM

நசரேயன் கடைக்குப் போன எஃபக்டாக்கும்:)//

எனக்கு எஃபக்டு இங்கே இருந்து வந்தது தான், அண்ணாத்தா தான் முதல்ல, நாங்க எல்லாம் பின்னாடி தான்

நசரேயன் said...

//அப்பாவி முரு said...

//ஜூனியர் வானம்பாடிகள்: //

இன்னும் ஜூனியரா?

சூப்பர் சூனியர் என்ன சொல்றார்?//

ஆமா.. ஆமா ..ஜூனியருக்கு ஜூனியர் இருந்தாலும் ஆச்சரியபடுறதுக்கு இல்லை

இய‌ற்கை said...

:-))))))))))))))))))))

ஸ்ரீராம். said...

:))

வானம்பாடிகள் said...

/சூர்யா ௧ண்ணன் said...

நாந்தான் முதல்ல../

வாங்க சூர்யா

வானம்பாடிகள் said...

அப்பாவி முரு said...

//ஜூனியர் வானம்பாடிகள்: //

இன்னும் ஜூனியரா?

சூப்பர் சூனியர் என்ன சொல்றார்?//

நான் என்னச்சொன்னேன்! என்னச் சொன்னேன்:)))

வானம்பாடிகள் said...

அகல்விளக்கு said...

ஹிஹிஹிஹி...

கலக்கல்ஸ்.......//

நீ மாட்டாமயா போற. இருடி:))

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

அய்...அய்ய்...

சேதாரம் கம்மிதான்

ஊட்டுல பாப்பகிட்ட நெசமா ஆகுற சேதாரம் இத விட சாஸ்திங்கோவ்//

வடிவேலு ரசிகர்னு நல்லா தெரியுது. அவர மாதிரியே லைட்டான்னு சொல்லியிருக்கலாமில்ல:))

வானம்பாடிகள் said...

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

//.. சூப்பர் சூனியர் என்ன சொல்றார்? ..//

:-D))//

அவரு சொன்னததான சொன்னேன்:))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன்...

சேதாரம் இல்லாம தப்பிச்சுட்டேன்.//

வட போச்சே..அவ்வ்வ்

/ இராகவன் நைஜிரியா said...

// இத வச்சி ஒரு இடுகைய தேத்தி பெரிய சமூக சேவகராயிட்டாரு எங்கப்பா! //

அதானே... பாருங்க எப்படி எல்லாம் இடுகை தேத்தறாங்கன்னு..

அதவச்சு அண்ணன் வானம்பாடிகளும் ஒரு இடுகை தேத்திட்டாருல்ல. :-)/

பின்ன:))

/ இராகவன் நைஜிரியா said...

// இதான் ஜக்கம்மா உழுந்து கும்புடுன்னு அழிச்சாட்டியம் பண்ணாரு தெரியுமா? அவ்வ்வ்வ்வ்.//

அப்படியா... அய்யோ பாவம் குழந்தை... பார்த்து குடுகுடுப்பையாரே.. குழைந்தகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் பிடிச்சுகிட்டு போயிடப் போறாங்க../

விட்றுவமா! மாணவரணித்தலைவர் நான் எதுக்கிருக்கேன்.

/ இராகவன் நைஜிரியா said...

// என்கூட ஆன்லைன்ல கேம் ஆடி தோத்துப் போன கடுப்பில இடுகை தேத்தி நம்ம பேர ரிப்பேராக்கப் பார்த்தாரு. //

இதுக்குத்தான் நாங்க எல்லாம் கேமே ஆடுவதில்லை../

இப்புடியும் சொல்லலாம். ஜூனியர் நசரேயன் சொன்னா மாதிரியும் சொல்லலாம்:))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

// அம்மாவ காமெடி பண்ண போய் அடுத்த நாள் சாப்பாடு கடையில.. அப்பவே சொன்னேன். கசியும் உண்மைன்னு:))..ஹி ஹி. வர்ட்டா. //

டோட்டல் டேமேஜ்.//

அவரு இல்லைங்கறாருண்ணே.

/ இராகவன் நைஜிரியா said...

// இந்த மாப்பு மாமா வேஸ்டு பீசு. அப்பாவ ஒன்னும் கேக்க மாட்டீங்குறாரு.//

உங்கப்பாவை கேள்வி கேட்பது சுலபம். அப்புறம் அவரு குதிர் அப்படின்னா என்ன என்பது மாதிரியான எதிர் கேள்வி கேட்டு எங்களை எல்லாம் குடைஞ்சு எடுத்துடுவார். அதனால அவர யாரும் கேள்வி கேட்க முடியாது... முடியாது... நீயாவது புரிஞ்சுக்கம்மா.. :-)//

:))

/ இராகவன் நைஜிரியா said...

// ஜூனியர் கலகலப்ரியா: என்னமோ அம்மா எழுதற கவிதைக்குத்தான் அர்த்தம் புரியமாட்டிங்குதுன்னு நொந்துக்கறீங்களாமே! இந்த பதிவில இரண்டாவது இடுகையில நான் சொன்னது எதுன்னு கண்டு பிடிங்க பார்ப்போம். //

தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும் என்பது சரிதானோ?//

இன்னுமா சந்தேகம்:))

// இராகவன் நைஜிரியா said...

// ஜூனியர் வானம்பாடிகள்: அய்ய! யப்பா! 25 வருசத்துக்கு முன்னாடி கொசுவத்தி சுத்தி இடுகை தேத்தின மனுசன் இப்புடி சொந்த கால்ல சூனியம் வெச்சுக்கலாமா. ஹூஊஊம் அவன் அவன் எடுக்கற முடிவு பாதகமாத்தான் போவுது வானம்பாடி!//

அது சரி... சூனியம் வச்சுகிறதுன்னு வந்தாச்சு... அப்புறம் சொந்த செலவு, அடுத்தவங்க வீட்டு செலவுன்னு பாத்தா முடியுமா?//

அதெல்லாம் பய புள்ளைகளுக்கு எங்க தெரியுது

வானம்பாடிகள் said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சூப்பர்..:))

--
இன்னும் ஜூனியரா?

சூப்பர் சூனியர் என்ன சொல்றார்? //

ஹி... ஹி... அதான் சொல்லிட்டாருல்ல... அப்புறம் என்ன கேள்வி.
--
இது டாப்பு..:))//

நல்லகாலம் ஆப்பு இல்லை:))

வானம்பாடிகள் said...

சத்ரியன் said...

பாலா அண்ணா,

கலக்குறீங்களே...!

(எதையெதையெல்லாம் இடுகையா மாத்தறாய்ங்க....? நம்ம மூளைக்குத்தான் ஒன்னுமே எட்டமாட்டேங்குது...ம்ஹூம்ம்ம்ம்!)//

அதுக்கெல்லாம் மைனஸ் ஓட்டு வாங்கியிருக்கணும்:))

வானம்பாடிகள் said...

சைவகொத்துப்பரோட்டா said...

ஜூனியர்ஸ்....... :))//

நன்றிங்க

வானம்பாடிகள் said...

padma said...

செமையா இருக்கு//

நன்றிங்க

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

// இதுக்கெல்லாம் கவலைப்பட்டா ஆகுமா. பல் இருக்குறவங்க பகோடா சாப்பிடறாங்க.. என்னையே எடுத்துக்கோங்க... இரண்டு மாசம் ஆச்சு இடுகைப் போட்டு... இதுக்கெல்லாம் கவலைப் படாமா லூஸ்ல விட்டுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்.//

:))

வானம்பாடிகள் said...

யூர்கன் க்ருகியர் said...

அப்படியா சேதி ??//

அப்புடியேத்தான்

வானம்பாடிகள் said...

இராமசாமி கண்ணண் said...

கலக்கல்ஸ் ஆப் வானம்பாடி. சூப்பர் சார் பின்றீங்க.//

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

ஆரூரன் விசுவநாதன் said...

நல்லாயிருங்கய்யா....நல்லாயிருங்க...//

ம்கும். இவரு கட் அண்ட் பேஸ்ட் போடலையாமா:))

வானம்பாடிகள் said...

ரோஸ்விக் said...

ஜுனியருங்க மானத்தை வாங்குறது பத்தாதுன்னு... நீங்க வேறையா... நடத்துங்க அண்ணே நடத்துங்க... :-)//

பின்ன:))

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

//நாங்க பிறக்க வழி பண்ணாம//

ம்க்கூம்.... ரொம்ப முக்கியம்.....//

த்தோடா:))

//அய்...சேதாரம் கம்மியாமுல்ல...இங்கண கிழிச்சி தொங்க உட்டுருக்காரு.... அதெப்புடிங்க வலிக்காத மாதிரியே நடிக்கிறீங்க....//

அதான. நல்லா கேளூ

/எது ராசா..கலக்கலு... எங்கள நாருந்தோலுமா ஆக்குனதா??? மொவனே உனக்கும் ஒருநாள் இருக்குடி...../

நானும் அதான் சொன்னேன்:))

/ஆமா...அதாருங்க... பாலாசி....படவாப்பய... அப்டில்லாமா பண்றான்...தருதல உருப்புடுவாங்கிறீங்க....ம்கூம்../

சூசூ. தப்பு.

வானம்பாடிகள் said...

பிரபாகர் said...

கதிர் மற்றும் முகிலன் ஸ்னோ மேட்டர் அருமை. மற்ற யாவும் ரசிக்கும்படியாயும், உங்களின் ஞாபக சக்தியை பறைசாற்றும் வண்ணமாய் இருந்தது அய்யா!//

நன்றி பிரபா

வானம்பாடிகள் said...

ஸ்ரீ said...

:-)))))))))//

நன்றி ஸ்ரீ

வானம்பாடிகள் said...

முகிலன் said...

// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

:)) ஹி ஹி.

//வாயில விரல் வச்சிக்கிட்டிருக்கிற பிள்ளை பேசுற பேச்சா இது.. ம்ஹூம்..//

ஆமாம். பாலாசியோட வருங்கால ஜுனியர்.

வானம்பாடிகள் said...

ஜெரி ஈசானந்தா. said...

ரசித்தேன் சீனியர்..//

அய்யா வாங்க. நன்றி

வானம்பாடிகள் said...

அண்ணாமலையான் said...

கலக்கல்//

நன்றிங்க

வானம்பாடிகள் said...

நசரேயன் said...

//ராஜ நடராஜன் Says:
March 5, 2010 5:26 PM

நசரேயன் கடைக்குப் போன எஃபக்டாக்கும்:)//

எனக்கு எஃபக்டு இங்கே இருந்து வந்தது தான், அண்ணாத்தா தான் முதல்ல, நாங்க எல்லாம் பின்னாடி தான்//

இந்த நேர்மைய நான் பாராட்டுறன்.

//நசரேயன் said...

//அப்பாவி முரு said...

//ஜூனியர் வானம்பாடிகள்: //

இன்னும் ஜூனியரா?

சூப்பர் சூனியர் என்ன சொல்றார்?//

ஆமா.. ஆமா ..ஜூனியருக்கு ஜூனியர் இருந்தாலும் ஆச்சரியபடுறதுக்கு இல்லை//

ஆஹா. பய புள்ள துண்டு போட்டுட்டானா? அண்ணாச்சி மேலதிக தகவல் உண்டா?

வானம்பாடிகள் said...

இய‌ற்கை said...

:-))))))))))))))))))))//

இது இயற்கையான சிரிப்பாங்க:))

வானம்பாடிகள் said...

ஸ்ரீராம். said...

:))//

:))

Subankan said...

:-)))))))))

Anonymous said...

=))

Chitra said...

சிரிச்சு முடியலை. உங்களுக்கு நல்ல நகைச்சுவை வளம் ......... சூப்பர்.

பா.ராஜாராம் said...

:-))

மணிநரேன் said...

:)

றமேஸ்-Ramesh said...

///ஜூனியர் வானம்பாடிகள்: அய்ய! யப்பா!///
அவ்வ்வ்... ஓஓஓ ஆஆஆஆ.... இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.... நல்ல முயற்சி...

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ணே! நான் மொதல்ல ஜூனியர் வானம்பாடிகளைத் தான் தேடிப்படிச்சேன். மத்தது டக்கர்னா, இது டாப்புடக்கர்.

நினைவுகளுடன் -நிகே- said...

செமையா இருக்கு

புலவன் புலிகேசி said...

இரண்டாவதுதானே..நம்ம ஆரூரான் சொன்ன அரவிந்தோ கண் பயிற்சி தானே...?

ஜீனியர் வானம்பாடிகள்....இன்னுமா ஜீனியரா இருக்காங்க...

தியாவின் பேனா said...

//ஜூனியர் வானம்பாடிகள்: //

வாழ்த்துகள்

மாதேவி said...

:)))

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-))

(உங்களுக்கெல்லாம் கண்டிப்பா பின்னூட்டம் போடணுமா? அடிக்கிற பின்னூட்டப்புயலில் காணாப்பூடுமேன்னு பாக்குறேன். ஹிஹி)