Monday, February 15, 2010

கொச்சுக் கொச்சு சந்தோஷங்கள்.


ம்ம். கொச்சுக் கொச்சு சந்தோஷங்களில் கொஞ்சமே மாத்ரம் வலியும் கூடிய ஒன்னாணு இது. ஆம். மனச்சுமையைக் கொட்டித் தீர்க்க என்று ஆரம்பித்து பின்னூட்டப் புயலிலும் ஓட்டு மின்னலிலும் அலக்கழிந்து ஒரு வருடம் நிறைந்தாகி விட்டது.

ஊக்கங்கள் தந்த உந்துதல், இடித்துரைத்த  இதங்கள், அதையும் தாண்டி என்னாச்சு சார்? இடுகையைக் காணோம் என்ற அக்கறையான விசாரிப்புகள் கொச்சு சந்தோஷத்தில் ஒன்றாயிடினும், ஒரு சிலரின் எழுத்தின் வேகமும் தாக்கமும் எழுதினா இப்படி எழுதணும்,. நானும் எழுதுறேன்னு எழுதி என்னவாகப் போகிறது என்ற தயக்கம் இருக்கத்தான் செய்கிறது.

இந்தக் கொச்சு சந்தோஷங்களைத் தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. திரும்பத் திரும்பச் சொன்னாலும் நன்றி பாராட்டத் திகட்டுமா என்ன? இந்த மகிழ்ச்சிக்கு காரணமான ப்ரியாவுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.


இனி அடுத்த கொசுவத்தி.

மாணவரணித்தலைவராக தி.கு.ஜ.மு.க.வில் பதவி கிடைத்ததிலிருந்து கட்சிப் பணிக்காக ஒதுங்கியிருந்த என்னை, முகிலப் பாண்டியர் (எளக்கிய அணித்தலைவர்..ஆமா! கலகலா கவிதைக்கு எதிர்கவுஜ 2 நாள்ள வரும்னு அறிவிப்பு என்னாச்சி தலைவரே!) தொடர் இடுகை எழுதி மாட்டிவைக்க முடிவு செய்துவிட்டார். அதிலும் கவனமிருப்பதை சொன்னால் போதும் என்ற உள்குத்து வைத்து என் மாணவரணிப் பதவியைத் தட்டிப் பறிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளதால், மீண்டும் களம் திரும்ப வேண்டிய கட்டாயம்.

பன்னிரண்டு வயது நிறையுமுன்னரே அப்பாவின் காரியத்துக்கு வந்திருந்த உறவுகள் அருகில் அழைத்து, இனி நீ குழந்தையில்லை. குடும்பத் தலைவன். கம்மனாட்டி வளர்த்த பிள்ளை கழுதைக் குட்டி என்ற பெயரெடுக்காமல் நல்ல பிள்ளையாக வளரவேண்டும் என்று சொன்ன போது டீனேஜுக்கான சுதந்திரம் அனைத்தும் பிடுங்கப்பட்டது புரியாத வயது.

படித்தது இரயில்வேத் தொழிளாளர்களுக்கான உதவி நிலைக் கல்விக் கூடம். கோ எஜுகேஷன் பள்ளிதான். எட்டாவது படித்தால்தான் ரயில்வேயில் வேலை வாங்கலாம் என்ற குறிக்கோளில் அனுப்பப்பட்ட பிள்ளைகள் அதிகம். பதினொன்றாம் வகுப்புக்கு பரிட்சைக்கும் S.S.L.C. புத்தகத்துக்கும் மட்டுமே பதினைந்து ரூபாய் ஃபீஸ் கட்டும் வசதி. அருகிலிருந்த இரண்டு பள்ளிகளில் இந்தப் பள்ளியில் ரவுடித்தனம் குறைவு என்பதாலும், அப்பாவின் அலுவலகத்துக்கு பின்புறம் என்பதும் காரணமாயிற்று.

பெரும்பான்மை மாணவ மணிகள் முரட்டுப் பெற்றோர்களின் முரட்டு வாரிசுகள் என்பதால் அவர்களைத் திருத்துவதை விட எங்களைப் போல் ஏப்பசாப்பைகளை காப்பாற்றி கரை சேர்ப்பதே ஆசிரியர்களுக்கு பெரும்பாடாய் ஆனது. ஆக பள்ளி என்பது சண்டியர்களுடனான சர்வைவலுக்கு ஓர் வழிகாட்டியாக அமைந்து போனது.

எட்டாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு முடிந்து ஒன்பதாவது வகுப்புக்குத் திரும்பிய போது பெரும்பாலான மாணவிகள் அக்காவாகவும் மாணவர்கள் அண்ணாவாகவும் வளர்ந்திருக்க காரணம் புரிந்திருக்கவில்லை. எட்டாம் வகுப்பில் டீச்சர் போர்டில் எழுதுகையில் குரங்கு மாதிரி டெஸ்க் மீதேறித் தாவும் சுகுணா ஒன்பதாம் வகுப்பில் தலை குனிந்து ஓரக்கண்ணால் ஜானகிராமனைப் பார்த்து உதடு சுழிப்பதைப் பார்க்க சிரிப்புதான் வந்தது.

பத்தாவது படிக்கையில் புதிதாக வந்த தமிழாசிரியர் தமிழ் விழாவுக்கு ஏற்பாடு செய்து, தலைமை விருந்தினராக ஒரு மடத்தலைவரை அழைத்திருந்தார். மார்பு முழுதும் சந்தனம் பூசி, மஞ்சள் உடையோடும் தலைப்பாகையோடும் சங்கத்தமிழ் அழகு சொல்லி, வீட்டிற்கு வரும் தலைவன் தன் குழந்தையைக் கொஞ்சத் தூக்க தலைவி பாய்ந்து வந்து பிடுங்கிக் கொண்டு, தலைவன் பரத்தையர் வீட்டிலிருந்து வருவதால் அவள் பூசிய சந்தனம் மார்பில் இருப்பதாகவும், அது குழந்தையின் கால் பட்டு அழிந்தால் அவள் சபிப்பாள் என்றும் விளக்கிக் கொண்டிருக்க, கூட்டத்தில் இருந்து ஒரு குரல், சாமி நீங்களும் அங்க இருந்தா வர்ரீங்க என்று எழுந்தது. அதுவே முதலும் கடைசியுமான இலக்கியக் கூட்டமானது.  

பதினோராம் வகுப்பு முடிய தினத்தந்தி பேப்பரில் ரிஸல்ட் பார்த்து (யாருக்குத் தெரியும் ரிஸல்ட் பார்ப்பது எப்படியென்று?) 72-74 என்றிருக்க பொங்கி எழுந்த கண்ணீருடன் நான் ஃபெயில் என்று திகைத்துப் போனேன். அம்மா பதைத்தபடி கட்டையில போறவனே என்னடா சொல்ற என்று அலற, ஆமாம்மா நல்லாதான் எழுதினேன். 72 பாஸ் 74 பாஸ் என் நம்பர் 73 காணோம் என்று விசும்பி, ஃபெயிலான பக்கத்து வீட்டு அண்ணன் வாங்கிப் பார்த்து 72லிருந்து 74 வரை பாஸ். நீயும் பாஸ் என்றால் நம்ப மாட்டாமல் பள்ளிக்கு ஓடி, பள்ளியில் இரண்டாமிடம் எனத் தெரிந்ததும் கொச்சு சந்தோஷம். (அவ்வ்வ்வ்வளவு பொது அறிவு)

எப்படியும் 18 வயது முடிய வேலைக்குப் போக வேண்டும். ஒரு வருடம் வீணாகாமல் பி.யூ.சி. படிக்கலாம் என்ற தெளிவுடன் டி.ஜி. வைணவக் கல்லூரியில் அட்மிஷன் கிடைக்க, இண்டர்வியூவிற்கு அரைக்கால் டவுசருடன் போய் அட்மிஷன் கிடைத்து, சின்னப் பையன், ட்ரவுசர் பாந்தமாதான் இருக்கும்மா. பேண்ட் இல்லை என்றால் வேட்டியுடந்தான் கல்லூரிக்கு வரவேண்டும் என்ற முதல்வரின் அறிவுறுத்தலில் முதன் முதலாக கரும்பச்சை, மற்றும் காப்பிப் பொடி (அழுக்குத் தெரியாமல்) காட்டன் பேண்ட் தைத்துப் போட்ட போது இன்னும் கொச்சு சந்தோஷம்.

பி.யூசி முடித்து வேலைக்கு காத்திருத்தலுக்கான அடுத்த ஒரு வருடம், பேப்பர் படிக்க மாநில கிளை நூலகத்தில் போய், கிடைத்தததைப் படித்து 12 மணிக்கு மூடும் நேரம் இறைந்து கிடந்த பேப்பர் எல்லாம் சீராக அடுக்கி வைத்துக் கிளம்புவதைக் கண்ட நூலகர் மெதுவே தன் மேசை எதிரில் அமர்ந்து படிக்க அனுமதித்தார். ஓரிரு மாதங்களில் அவர் வேலையாக வெளியே செல்ல நேரிடின், ரம்ஜான் நோன்பு காலத்தில் என்று முற்று முழுதாக நூலகப் பொறுப்பு என்னுடையதாயிற்று. பதின்ம வயதில் புத்தகங்களுடனான அந்த ஒரு வருடம் இன்று வரை தொடரும் மிகப் பெரிய கொச்சு சந்தோஷம்.

முத்தாய்ப்பாய் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா இவன் என்று சலித்துப் போய், ரயில்வேயில் அப்பாயின்மெண்ட் ஆர்டர் என் கையில் சேர்ந்த போது என் பிறந்த நாள் பரிசாக கொடுத்தது விதி.

கொசுவத்திக்கான என் அழைப்பு திரு கதிர், ஆரூரன் அவர்களுக்கு. (ஹெ ஹெ. கதிர்! சரக்கு இதோ! இடுகை எங்க?))

116 comments:

சூர்யா ௧ண்ணன் said...

நாந்தான் பர்ஸ்ட்

கலகலப்ரியா said...

mm... :o.. but naanthaan first a padichu mudichen...

கலகலப்ரியா said...

bongu aattam ellaam aaduraayngappaa..

சூர்யா ௧ண்ணன் said...

ஓராண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள் தலைவா! தொடருங்கள் உங்கள் எழுத்து சேவையை !...

கலகலப்ரியா said...

பாலா சார்... ரொம்ப நெகிழ்வான பதிவு... ரொம்ப நல்லாருக்கு... பதின்ம வயது இப்படி வாய்க்காத காரணத்தால் பல பேருக்கு வாழ்க்கை புரியலை... அந்த விஷயத்தில நீங்க கொடுத்து வச்சவங்க...

சூர்யா ௧ண்ணன் said...

//கலகலப்ரியா said...

mm... :o.. but naanthaan first a padichu mudichen..//

நாங்க முதல்ல ஓட்டும் பின்னூட்டமும் போட்ட பிறகு தானே படிக்கவே ஆரம்பித்தோம்...

பாலா சாரை ஊக்கப்படுத்தி இந்த அளவிற்கு சிறந்த பதிவராக மாற்றியதற்கு உங்களுக்கும் பங்குண்டு... வாழ்த்துக்கள் மற்றும் நன்றி ப்ரியா!

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஓராண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள்

ஈரோடு கதிர் said...

வானம்பாடியின் முதல் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள்

ஈரோடு கதிர் said...

அப்பாலிக்கா படிக்கிறேன்

அதென்ன பில்லிசூனியம் வச்ச மாதிரி ஒரு மாசமா டல்லடிக்குது... இடுகை இல்லாம....

அதுக்கு விளக்கம் சொல்லி... இனிமே ஒழுங்கா தெனமும் எழுதறேன்னு பொய் சொல்லாம சொல்லுங்க... அப்புறம்தான் படிச்சு பின்னூட்டம் போடுவேன்...

தெனம் தெனம் உங்க பக்கத்துக்கு வந்து பழைய மேட்டரையே படிச்சுப் படிச்சு... அது எனக்கும் தொத்திக்கிச்சு.....

கலகலப்ரியா said...

// சூர்யா ௧ண்ணன் said...

//கலகலப்ரியா said...

mm... :o.. but naanthaan first a padichu mudichen..//

நாங்க முதல்ல ஓட்டும் பின்னூட்டமும் போட்ட பிறகு தானே படிக்கவே ஆரம்பித்தோம்...//

இதுதான் போங்கு ஆட்டம்...


// பாலா சாரை ஊக்கப்படுத்தி இந்த அளவிற்கு சிறந்த பதிவராக மாற்றியதற்கு உங்களுக்கும் பங்குண்டு... வாழ்த்துக்கள் மற்றும் நன்றி ப்ரியா!//

அட நீங்க வேற.. நான் எதுவுமே பண்ணலீங்க... எழுதுங்க சார்ன்னு சொல்றதுதான்... அதுக்கு இப்டியா...

மாதேவி said...

பதின்மவயது நல்லாக இருக்கிறது.

ஆண்டு நிறைவுக்கும் இனிவரும் தொடர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாண்ணே.....இதெல்லாம் நாயமா? ஏதோ ஒரு ஓரமா போயி தூங்கிட்டிருந்த என்னையக் கோத்துவுட்டீங்களே

நல்லா...............இருங்க

ஆர்வா said...

சில சந்தோஷங்களின் நினைவுகள்தான் மனசை இன்னும் மரணமடைய செய்யாமல் வைத்திருக்கின்றன.

Baiju said...

Vaazhthukkal..

ஆர்வா said...

ஓராண்டு கடந்ததுக்கு வாழ்த்துக்கள் நண்பா

செ.சரவணக்குமார் said...

நெகிழ்ச்சியான இடுகை. ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் சார். தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

க.பாலாசி said...

//சுகுணா ஒன்பதாம் வகுப்பில் தலை குனிந்து ஓரக்கண்ணால் ஜானகிராமனைப் பார்த்து உதடு சுழிப்பதைப் பார்க்க சிரிப்புதான் வந்தது. //

அதான... அடுத்தவ(ன்) என்ன செய்யுறான்னுதான பாப்போம்...

பச்சே...இடுகையில வழக்கமான காமடிமசாலா கம்மியாயிருக்கு தலைவரே... நிறைய மேட்டர் இருக்கும்னு வந்தா... கொறச்சிதான் சொல்லியிருக்கீங்க...

க.பாலாசி said...

ஓ... ஒரு வருசம் முடிஞ்சிடுச்சா... வாழ்த்த வயதில்லை....நீங்க முன்னாலப்போனா நான் பின்னால வாரேன்....

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...
வாழ்த்த வயதில்லை....//

செரி செரி... வாயில இருந்து வெரல எடு பர்ஸ்ட்...

சின்ன புள்ளத்தனமா வெரலு சூப்பிக்கிட்டு

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல இடுகை.ஆனால் நடையில் வழக்கமான ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்.

எம்.எம்.அப்துல்லா said...

என்னவோ தெரியலை...படிக்கையில் ரொம்ப சந்தோஷமா இருக்கு.

Subankan said...

அட! ஒருவருசம் ஆயிடுச்சா?

//க.பாலாசி said...
வாழ்த்த வயதில்லை....//

ஓ வாழ்த்துறதுக்கு அதுவேற வேணுமோ? அப்ப நான் விஷ் பண்ணிக்கறேன் :)))

மணிஜி said...

நேற்று உங்களை எதிர்பார்த்தேன் சார்.

Paleo God said...

நானும் எதிர்பார்த்தேன்..:(

வாழ்த்துக்கள் சார்..:)

ஐந்தாவது பத்தியிலேயே புரிஞ்சிடிச்சி.. அப்ப நிமிந்து படிச்சவந்தான்..
தலைப்பிலேயே பொடி வெச்சிட்டீங்க...
நிறைய எழுதணும் கலகலன்னு..:)
ஹாப்பி பர்த் டே..:)

பழமைபேசி said...

பாலாண்ணே,

வாழ்த்தி வணக்கம்!

vasu balaji said...

/ சூர்யா ௧ண்ணன் said...

நாந்தான் பர்ஸ்ட்/
/ஓராண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள் தலைவா! தொடருங்கள் உங்கள் எழுத்து சேவையை !.../

நன்றி தலைவா.
/ சூர்யா ௧ண்ணன் said...

//கலகலப்ரியா said...

mm... :o.. but naanthaan first a padichu mudichen..//

நாங்க முதல்ல ஓட்டும் பின்னூட்டமும் போட்ட பிறகு தானே படிக்கவே ஆரம்பித்தோம்...

பாலா சாரை ஊக்கப்படுத்தி இந்த அளவிற்கு சிறந்த பதிவராக மாற்றியதற்கு உங்களுக்கும் பங்குண்டு... வாழ்த்துக்கள் மற்றும் நன்றி ப்ரியா!/

அது அது. :)

vasu balaji said...

கலகலப்ரியா said...

/mm... :o.. but naanthaan first a padichu mudichen.../

வடை போச்சா:))

/bongu aattam ellaam aaduraayngappaa../
:))

/பாலா சார்... ரொம்ப நெகிழ்வான பதிவு... ரொம்ப நல்லாருக்கு... பதின்ம வயது இப்படி வாய்க்காத காரணத்தால் பல பேருக்கு வாழ்க்கை புரியலை... அந்த விஷயத்தில நீங்க கொடுத்து வச்சவங்க.../

ஆமாம். இழந்தது என்ன எனத் தெரியாததாலேயே இழப்பும் பெரிதாகத் தெரியவில்லை. வரவு விலைமதிப்பற்றது என்பது உண்மை.

vasu balaji said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஓராண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள்//

நன்றி சார்.:)

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

வானம்பாடியின் முதல் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள்//

ம்ம்ம். இல்ல. அப்படின்னா பாமரன் ரெண்டு புள்ளி கம் பாலா ரெண்டு புள்ளி கம் வானம்பாடியின் முதல் பிறந்த நாள்:)). வரலாறு முக்கியம் அமைச்சரே!

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

அப்பாலிக்கா படிக்கிறேன்

அதென்ன பில்லிசூனியம் வச்ச மாதிரி ஒரு மாசமா டல்லடிக்குது... இடுகை இல்லாம....

அதுக்கு விளக்கம் சொல்லி... இனிமே ஒழுங்கா தெனமும் எழுதறேன்னு பொய் சொல்லாம சொல்லுங்க... அப்புறம்தான் படிச்சு பின்னூட்டம் போடுவேன்...

தெனம் தெனம் உங்க பக்கத்துக்கு வந்து பழைய மேட்டரையே படிச்சுப் படிச்சு... அது எனக்கும் தொத்திக்கிச்சு.....//

வாக்குறுதி கொடுத்துட்டு கேட்டா நாங்களும் பண்ணுவோமில்ல:))

vasu balaji said...

கலகலப்ரியா said...

// சூர்யா ௧ண்ணன் said...

//கலகலப்ரியா said...

mm... :o.. but naanthaan first a padichu mudichen..//

நாங்க முதல்ல ஓட்டும் பின்னூட்டமும் போட்ட பிறகு தானே படிக்கவே ஆரம்பித்தோம்...//

இதுதான் போங்கு ஆட்டம்...//


:))
// பாலா சாரை ஊக்கப்படுத்தி இந்த அளவிற்கு சிறந்த பதிவராக மாற்றியதற்கு உங்களுக்கும் பங்குண்டு... வாழ்த்துக்கள் மற்றும் நன்றி ப்ரியா!//

அட நீங்க வேற.. நான் எதுவுமே பண்ணலீங்க... எழுதுங்க சார்ன்னு சொல்றதுதான்... அதுக்கு இப்டியா...//

அதுக்குதான் இப்படி.:))

vasu balaji said...

மாதேவி said...

பதின்மவயது நல்லாக இருக்கிறது.

ஆண்டு நிறைவுக்கும் இனிவரும் தொடர்களுக்கும் வாழ்த்துக்கள்.//

நன்றிங்க.

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாண்ணே.....இதெல்லாம் நாயமா? ஏதோ ஒரு ஓரமா போயி தூங்கிட்டிருந்த என்னையக் கோத்துவுட்டீங்களே

நல்லா...............இருங்க//

நீங்க எழுதுங்க சாமி. அங்க பாராட்டி வர பின்னூட்டமெல்லாம் எனக்கு டெடிகேட் பண்ணனும் சொல்லிபுட்டேன்.:))

vasu balaji said...

கவிதை காதலன் said...

சில சந்தோஷங்களின் நினைவுகள்தான் மனசை இன்னும் மரணமடைய செய்யாமல் வைத்திருக்கின்றன.//

சத்தியமான வார்த்தை.

vasu balaji said...

Baiju said...

Vaazhthukkal..//

ஹை. பைஜூ. முதல் பின்னூட்டம். மிக்க மகிழ்வாய் உணர்கிறேன். நன்றி.

vasu balaji said...

கவிதை காதலன் said...

ஓராண்டு கடந்ததுக்கு வாழ்த்துக்கள் நண்பா//

நன்றிங்க.

vasu balaji said...

செ.சரவணக்குமார் said...

நெகிழ்ச்சியான இடுகை. ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் சார். தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.//

நன்றி சரவணக்குமார்:). முயற்சிக்கிறேன்.

vasu balaji said...

க.பாலாசி said...

/அதான... அடுத்தவ(ன்) என்ன செய்யுறான்னுதான பாப்போம்...//

இல்லீன்னா என்ன ரசனையிருக்கும்?

/பச்சே...இடுகையில வழக்கமான காமடிமசாலா கம்மியாயிருக்கு தலைவரே... நிறைய மேட்டர் இருக்கும்னு வந்தா... கொறச்சிதான் சொல்லியிருக்கீங்க...//

ம்கும்.இருந்த காமெடிபீஸ கண்டுக்கலியாம். பேச்சப் பாரு.

vasu balaji said...

க.பாலாசி said...

//ஓ... ஒரு வருசம் முடிஞ்சிடுச்சா... வாழ்த்த வயதில்லை....நீங்க முன்னாலப்போனா நான் பின்னால வாரேன்....//

வா ராசா வா:)) வாழ்த்தக் காத்திருக்கிறேன்.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ செரி செரி... வாயில இருந்து வெரல எடு பர்ஸ்ட்...

சின்ன புள்ளத்தனமா வெரலு சூப்பிக்கிட்டு//

அட நீங்க வேற! அவன் நம்மள சொல்லுறான் அப்புடின்னு.

vasu balaji said...

ஸ்ரீ said...

நல்ல இடுகை.ஆனால் நடையில் வழக்கமான ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்.//

:). மனசு?

vasu balaji said...

எம்.எம்.அப்துல்லா said...

என்னவோ தெரியலை...படிக்கையில் ரொம்ப சந்தோஷமா இருக்கு.//

ஒரு விதத்தில் ஆம்:).

vasu balaji said...

Subankan said...

அட! ஒருவருசம் ஆயிடுச்சா?

//க.பாலாசி said...
வாழ்த்த வயதில்லை....//

ஓ வாழ்த்துறதுக்கு அதுவேற வேணுமோ? அப்ப நான் விஷ் பண்ணிக்கறேன் :)))

:)) நன்றி சுபாங்கன்

vasu balaji said...

தண்டோரா ...... said...

நேற்று உங்களை எதிர்பார்த்தேன் சார்.//

ஆமாங்க தண்டோரா. வருவதாகச் சொல்லியிருந்தேன் கேபிள்ஜியிடம். ஒரு அபரகாரியம். முடியவில்லை.

Unknown said...

முதல்ல என் அழைப்பையும் மதிச்சி தொடர்ந்ததுக்கு நன்றி...

அஞ்சாவது பத்தியிலேயே சொல்லாமல் சொன்ன சம்பவம் எந்த அளவுக்கு உங்களை சின்ன வயசுல பாதிச்சிருக்கும்ங்கறத உணர்ந்து கொள்ள முடியிது..

கலகலப்ரியா சொன்னத ரிப்பிட்டீக்கிறேன்..

தொடர்ந்து எழுதுங்க.

முதலாண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்

vasu balaji said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நானும் எதிர்பார்த்தேன்..:(

வாழ்த்துக்கள் சார்..:)

ஐந்தாவது பத்தியிலேயே புரிஞ்சிடிச்சி.. அப்ப நிமிந்து படிச்சவந்தான்..
தலைப்பிலேயே பொடி வெச்சிட்டீங்க...
நிறைய எழுதணும் கலகலன்னு..:)
ஹாப்பி பர்த் டே..:)//

நன்றி ஷங்கர்.

vasu balaji said...

பழமைபேசி said...

பாலாண்ணே,

வாழ்த்தி வணக்கம்!//

நன்றி பழமை:)

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப அழகா எழுதுறீங்க சார்.

சோகத்தையும் நகைச்சுவையா சொன்னது மனதைத் தொட்டது.

தொடரட்டும் உங்கள் சேவை.

Chitra said...

//////நீயும் பாஸ் என்றால் நம்ப மாட்டாமல் பள்ளிக்கு ஓடி, பள்ளியில் இரண்டாமிடம் எனத் தெரிந்ததும் கொச்சு சந்தோஷம். (அவ்வ்வ்வ்வளவு பொது அறிவு)///////

........இந்த வரிகள் படிக்கும் போது, ரொம்ப பிடிச்சு இருந்தது. இந்த innocence, பள்ளி குழந்தைகளிடம் ரொம்பவே மிஸ்ஸிங்.

இராகவன் நைஜிரியா said...

மீ த 50

இராகவன் நைஜிரியா said...

அடிச்சோமில்ல.. படிக்காமயே.. 50 அடிச்சோமில்ல...

படிச்சுட்டு வந்துடறேன்..

நசரேயன் said...

வாழ்த்துக்கள் அண்ணாத்தே

இராகவன் நைஜிரியா said...

ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்.

vasu balaji said...

முகிலன் said...

//முதல்ல என் அழைப்பையும் மதிச்சி தொடர்ந்ததுக்கு நன்றி...//

இதென்னா பாண்டியரே வம்பு:))

//அஞ்சாவது பத்தியிலேயே சொல்லாமல் சொன்ன சம்பவம் எந்த அளவுக்கு உங்களை சின்ன வயசுல பாதிச்சிருக்கும்ங்கறத உணர்ந்து கொள்ள முடியிது..//

இல்லை. என்ன இழந்ததுன்னு தெரியாமல் போனதால். கடந்து வந்த பிறகு ஒரு வேளை இழப்பை உணர்ந்திருகக் கூடும்.

//கலகலப்ரியா சொன்னத ரிப்பிட்டீக்கிறேன்..

தொடர்ந்து எழுதுங்க.

முதலாண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்//

நன்றி.

நிஜாம் கான் said...

தகர்க்க ஆரம்பிச்சி ஒரு வருசம் ஆச்சா! தொடர்ந்து பட்டயக் கெளப்ப வாழ்த்துக்கள்ணே!!!!!!!!!!!!!!!!

நிஜாம் கான் said...

//ஈரோடு கதிர் said...
அதென்ன பில்லிசூனியம் வச்ச மாதிரி ஒரு மாசமா டல்லடிக்குது... இடுகை இல்லாம..//

நானும் கேக்கனும்ம்ம்ம்னு இருந்தேன்..,அண்ணே கேட்டுட்டாரு. மருவாதைய பதிலச் சொல்லுங்கப்பு..,

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

தங்களின் இளவயது அனுபவம் நெகிழ்ச்சியையும்; ஓராண்டு நிறைவு மகிழ்ச்சியையும் தந்தது! பதிவுலகத்திற்கு மூத்தவரான (வயதில் :):)) உங்கள் வாழ்வியல் அனுபவங்களையும் பகிர்ந்துக்கொண்டால், இளைய சந்ததிகளுக்கு (?!) பயனுள்ளதாக இருக்குமே... நங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கலாமா?

Ramesh said...

வாழ்த்துக்கள் அப்பா... ஒரு வருட நிறைவுப் பார்ட்டி எனக்கு வேணும்....
மீண்டும் ஒருமுறை படிச்சுட்டு வாரன்..

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் நைனா முதல் வருட நிறைவிற்க்கு இன்னும் நிறைய எழுதுங்கள்...

ஏன் இப்போல்லாம் அதிகம் எழுதுறதில்ல?

மதுரை சரவணன் said...

vaalththukkal. orandu niraivu innum athikam ellutha thundattum.

Inside Story said...

There is an easy way to earn money just while you are sitting in your home and browsing the internet. These are not a scam.They really paying you.

Click one of the following link and join as a member to be get paid:

1. http://www.neobux.com/?r=kaviyan
2. http://www.upbux.com/?r=kaviyan
3. http://wordlinx.com/a/?r=240599
4. http://www.trekpay.com/?ref=169994
5. http://www.earneasycash.info/index.php?ref=kaviyan
6. http://www.buxp.info/?r=kaviyan
7. http://www.clixofchange.com/index.php?ref=kaviyan

for More information click
http://earningman.wordpress.com/2010/02/15/hello-world/

Venkat M said...

Congrats Sir.

balavasakan said...

சார் .. வாழ்த்துக்கள் சார் உங்க சந்தோசங்களில்கொஞ்சத்தை எங்களுக்கும் கொடுத்திருக்கீங்கபின்னூட்டங்களில்..

திவ்யாஹரி said...

ஒரு வருசம் முடிஞ்சிடுச்சா சார்..

அது சரி(18185106603874041862) said...

இது போங்காட்டமா இருக்கே...ரொம்ப படிக்கிற புள்ள மாதிரி இடுகை போட்டா என்னா அர்த்தம்ணேன்??? இப்பிடி இடுகை போட்டு மத்தவய்ங்கள மாட்டி விட்ற மாதிரில்ல

இனிமே இந்த டீனேஜ் இடுகை எழுதறவங்களாவது இஸ்கூல் அனுபவங்களை விட்டு கோல்டன் ஒயின்ஸ் அனுபவங்களை எழுதணும்னு கேட்டுக்கிறேனுங்க...

கோல்டன் ஒயின்ஸ் அனுபவம் இல்லாத நல்ல புள்ளிங்க மொத எழுதுன/வாங்குன லவ் லெட்டர் பத்தி எழுதுங்கோ...

பிரபாகர் said...

அன்பான என் ஆசான்
அழகான கருத்துகளால்
ஆண்டொன்றை எழுதுவதில்
அர்ப்பணித்த யாவையுமே

என்போன்ற தொடர்பவர்கள்
எடுத்து படித்ததனை
பின்பற்ற உதவுகின்ற
பொக்கிஷப் புதையல்கள்...

எண்ணத்தில் உள்ளவற்றை
எங்களுக்கு பகிர்ந்து
இன்னும்பல எழுதி
இன்பத்திலாழ்த்தி நீரும்

நன்னெறிகள் சொல்லி
நலமோடு வாழுதற்கு
வன்வேலால் வினையறுக்கும்
வேலவனை வேண்டுகிறேன்...

பிரபாகர்.

பா.ராஜாராம் said...

மிக நெகிழ்வான பதிவு பாலா சார்.

நேரக் குறைவு.முன்புபோல வர இயலாமல் இருக்கு பாலா சார்.

முதல் வருட நிறைவிற்கு வாழ்த்துக்கள்.முன்னூறு வருடத்தையும் நிறைவு செய்து தாருங்கள் சார்.

ஸ்ரீராம். said...

//"பேப்பர் படிக்க மாநில கிளை நூலகத்தில் போய், கிடைத்தததைப் படித்து 12 மணிக்கு மூடும் நேரம் இறைந்து கிடந்த பேப்பர் எல்லாம் சீராக அடுக்கி வைத்துக் கிளம்புவதைக் கண்ட நூலகர்...."//

இதெல்லாம் அப்பிடி வர்றதுதான் இல்லே...

நானும் அந்தவயதில் நூலகராக இருந்ததுண்டு...!

பெரிய இடைவெளிக்குப் பின் வந்தாலும் வாசனையான கொசுவத்தி...
உங்கள் பெயரில் 'கள்'ளை எடுத்துவிட்டு ஒரு புதிய அறிமுகம் வந்துள்ளாரே..பார்த்தீர்களோ...?

புலவன் புலிகேசி said...

//நீயும் பாஸ் என்றால் நம்ப மாட்டாமல் பள்ளிக்கு ஓடி, பள்ளியில் இரண்டாமிடம் எனத் தெரிந்ததும் கொச்சு சந்தோஷம். (அவ்வ்வ்வ்வளவு பொது அறிவு)//

பார்ரா பொது அறிவு இல்லையாம் ஆனா இரண்டாமிடமாம்...ஐயா இதெல்லாம் பெரிய சந்தோசங்கள்.இத கொச்சுக் கொச்சுன்னு சொல்லிட்டீங்களே

தாராபுரத்தான் said...

அண்ணன் னா? தம்பி..யா? முதலில் பதிவுலகத்தில் நுழைந்ததால் நீங்க அண்ணன்தான்.வாழ்த்துங்கண்ணா. டவுள் மீனிங்...

குடுகுடுப்பை said...

அரசியலுக்கு வந்து ஓராண்டிலேயே மாணவரணித்தலைவர், வாழ்த்துகள்.

பதிவு நெகிழ்ச்சி

cheena (சீனா) said...

அன்பின் பாலா

ஒராண்டு நிறைவு - மகிழ்ச்சியான தருணம் - நெகிழ்ச்சியான தருணம்- நல்வாழ்த்துகள் பாலா

கொசுவத்தி அருமை - பள்ளிப் பிராயம் - மலரும் நினைவுகள் - 72-74 எல்லோருக்கும் நிகழும் ஒன்று தான் - அவ்வயதில் தினசரிகளில் நம் எண் வரவில்லையே என வருந்தச் செய்யும் நிகழ்வு. பொது அறிவு இல்லாத காரணத்தால். என்ன செய்வது ...

இருபாலர் படிக்கும் பள்ளிகளில் நாம் அனுபவித்த - மகிழ்ந்த - விகல்பமில்லாத மனதுடன் நடத்திய நிகழ்வுகள் அசைபோடச்செய்கின்றன.
எஸ் எஸ் எல் சி - பி யூ சி - முதல் முதல் கல்லூரியில் அனைத்துமே ஆங்கிலமாக - தட்டுத் தடுமாறி குட்டுப்பட்டு தேறி - ம்ம்ம்ம்ம் - அக்காலம் பொற்காலம்

பாலா நல்லதொரு இடுகை

யூர்கன் க்ருகியர் said...

சார்.. ஓராண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள்....
உங்க சந்தோசமே எங்க சந்தோசம்...
தொடர்ந்து அடி பின்னுங்க !!

ஈரோடு கதிர் said...

அண்ணே... அருமையான இடுகை

நூலக அனுபவம் எனக்கு இதே போல் உண்டு..

எதுக்கும் நீங்க சீனா அய்யாவ கொசுவத்தி சுத்த கூப்பிட்டிருக்கலாம், உங்கள மாதிரி யூத்துங்க சுத்துற கொசுவத்தி மிக அருமையா இருக்கும்...

அப்ப்ப்போ என் பேருக்கு பதிலா, சீனா / தாராபுரத்தான் (அதென்னுங்க்ண்ண டப்ப்ப்புளு மீனிங்கு) என்ற யூத்துகளின் பெயரை இடுமாறு வேண்டுகிறேன்..

(ஹெ..ஹெ.... எஸ்கேப்புங்கோ)

ஜாபர் ஈரோடு said...

ஓராண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள்

vasu balaji said...

அக்பர் said...

ரொம்ப அழகா எழுதுறீங்க சார்.

சோகத்தையும் நகைச்சுவையா சொன்னது மனதைத் தொட்டது.

தொடரட்டும் உங்கள் சேவை.//

நன்றி அக்பர்

vasu balaji said...

Chitra said...

//////

........இந்த வரிகள் படிக்கும் போது, ரொம்ப பிடிச்சு இருந்தது. இந்த innocence, பள்ளி குழந்தைகளிடம் ரொம்பவே மிஸ்ஸிங்.////

நன்றிங்க சித்ரா

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

வாங்கண்ணே. நன்றி

vasu balaji said...

நசரேயன் said...

வாழ்த்துக்கள் அண்ணாத்தே//

நன்றி அண்ணாச்சி:)

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

தகர்க்க ஆரம்பிச்சி ஒரு வருசம் ஆச்சா! தொடர்ந்து பட்டயக் கெளப்ப வாழ்த்துக்கள்ணே!!!!!!!!!!!!!!!!//

நன்றி நிஜாம்.

vasu balaji said...

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

தங்களின் இளவயது அனுபவம் நெகிழ்ச்சியையும்; ஓராண்டு நிறைவு மகிழ்ச்சியையும் தந்தது! பதிவுலகத்திற்கு மூத்தவரான (வயதில் :):)) உங்கள் வாழ்வியல் அனுபவங்களையும் பகிர்ந்துக்கொண்டால், இளைய சந்ததிகளுக்கு (?!) பயனுள்ளதாக இருக்குமே... நங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கலாமா?//

நன்றிங்க. முயற்சிக்கிறேன்

vasu balaji said...

றமேஸ்-Ramesh said...

வாழ்த்துக்கள் அப்பா... ஒரு வருட நிறைவுப் பார்ட்டி எனக்கு வேணும்....
மீண்டும் ஒருமுறை படிச்சுட்டு வாரன்.. //

:)). வா மோனே!

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

வாழ்த்துகள் நைனா முதல் வருட நிறைவிற்க்கு இன்னும் நிறைய எழுதுங்கள்...

ஏன் இப்போல்லாம் அதிகம் எழுதுறதில்ல?//

நன்றிம்மா. பார்க்கலாம். கொஞ்சம் சுகமில்லை அவ்வளவுதான்.:)

vasu balaji said...

Madurai Saravanan said...

vaalththukkal. orandu niraivu innum athikam ellutha thundattum.//

நன்றிங்க வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்.:)

vasu balaji said...

Balavasakan said...

சார் .. வாழ்த்துக்கள் சார் உங்க சந்தோசங்களில்கொஞ்சத்தை எங்களுக்கும் கொடுத்திருக்கீங்கபின்னூட்டங்களில்..//

நன்றி வாசு.

vasu balaji said...

திவ்யாஹரி said...

ஒரு வருசம் முடிஞ்சிடுச்சா சார்..//

ஆமாங்க :)

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ரொம்ப நெகிழ்வான பதிவு

vasu balaji said...

அது சரி said...

//இது போங்காட்டமா இருக்கே...ரொம்ப படிக்கிற புள்ள மாதிரி இடுகை போட்டா என்னா அர்த்தம்ணேன்??? இப்பிடி இடுகை போட்டு மத்தவய்ங்கள மாட்டி விட்ற மாதிரில்ல//

எங்கயாச்சும் படிக்கிறத பத்தி எழுதியிருக்கேனா? எவ்வளவு மைய்யமா வாங்கின மார்க்க சொல்லாம இஸ்கோல்ல இரண்டாவதுன்னு சொல்லியிருக்கேன். அந்த நேர்மைய பாராட்ட வேணாமா?

//இனிமே இந்த டீனேஜ் இடுகை எழுதறவங்களாவது இஸ்கூல் அனுபவங்களை விட்டு கோல்டன் ஒயின்ஸ் அனுபவங்களை எழுதணும்னு கேட்டுக்கிறேனுங்க...//

ம்ம். என்ன பண்றது. நாம படிக்கிறப்போல்லாம் ப்ராண்டி மெடிகல் ஸ்டோர்ல ப்ரிஸ்க்ரிப்ஷன்ல கிடைக்கும். மத்தபடி நம்பர் போட்ட சாராயக்கடைதான்.

// கோல்டன் ஒயின்ஸ் அனுபவம் இல்லாத நல்ல புள்ளிங்க மொத எழுதுன/வாங்குன லவ் லெட்டர் பத்தி எழுதுங்கோ...//

வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன்..

vasu balaji said...

பிரபாகர் said...

நன்னெறிகள் சொல்லி
நலமோடு வாழுதற்கு
வன்வேலால் வினையறுக்கும்
வேலவனை வேண்டுகிறேன்...

பிரபாகர்.//

நன்றி பிரபா:)

vasu balaji said...

பா.ராஜாராம் said...

மிக நெகிழ்வான பதிவு பாலா சார்.

நேரக் குறைவு.முன்புபோல வர இயலாமல் இருக்கு பாலா சார்.

முதல் வருட நிறைவிற்கு வாழ்த்துக்கள்.முன்னூறு வருடத்தையும் நிறைவு செய்து தாருங்கள் சார்.//

நன்றி பா.ரா.

vasu balaji said...

ஸ்ரீராம். said...

//"பேப்பர் படிக்க மாநில கிளை நூலகத்தில் போய், கிடைத்தததைப் படித்து 12 மணிக்கு மூடும் நேரம் இறைந்து கிடந்த பேப்பர் எல்லாம் சீராக அடுக்கி வைத்துக் கிளம்புவதைக் கண்ட நூலகர்...."//

இதெல்லாம் அப்பிடி வர்றதுதான் இல்லே...

நானும் அந்தவயதில் நூலகராக இருந்ததுண்டு...!

பெரிய இடைவெளிக்குப் பின் வந்தாலும் வாசனையான கொசுவத்தி...
உங்கள் பெயரில் 'கள்'ளை எடுத்துவிட்டு ஒரு புதிய அறிமுகம் வந்துள்ளாரே..பார்த்தீர்களோ...?//

நன்றி ஸ்ரீராம். பார்க்கிறேன்.

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

//பார்ரா பொது அறிவு இல்லையாம் ஆனா இரண்டாமிடமாம்...ஐயா இதெல்லாம் பெரிய சந்தோசங்கள்.இத கொச்சுக் கொச்சுன்னு சொல்லிட்டீங்களே//

ஒழுங்கா கக்கினா முதல் இடம் கூட வரும். பொதுஅறிவுக்கு என்ன இருக்கு:))

vasu balaji said...

தாராபுரத்தான் said...

அண்ணன் னா? தம்பி..யா? முதலில் பதிவுலகத்தில் நுழைந்ததால் நீங்க அண்ணன்தான்.வாழ்த்துங்கண்ணா. டவுள் மீனிங்...//

வாங்க யூத்து!:)) பழமை சொன்னா மாதிரி அட்டகாசம்:))

vasu balaji said...

குடுகுடுப்பை said...

//அரசியலுக்கு வந்து ஓராண்டிலேயே மாணவரணித்தலைவர், வாழ்த்துகள்.//

குடுகுடுப்பைச் சோழர் அளித்த பரிசில்:))

பதிவு நெகிழ்ச்சி

நன்றிங்க:))

vasu balaji said...

cheena (சீனா) said...

அன்பின் பாலா

ஒராண்டு நிறைவு - மகிழ்ச்சியான தருணம் - நெகிழ்ச்சியான தருணம்- நல்வாழ்த்துகள் பாலா

கொசுவத்தி அருமை - பள்ளிப் பிராயம் - மலரும் நினைவுகள் - 72-74 எல்லோருக்கும் நிகழும் ஒன்று தான் - அவ்வயதில் தினசரிகளில் நம் எண் வரவில்லையே என வருந்தச் செய்யும் நிகழ்வு. பொது அறிவு இல்லாத காரணத்தால். என்ன செய்வது ...

இருபாலர் படிக்கும் பள்ளிகளில் நாம் அனுபவித்த - மகிழ்ந்த - விகல்பமில்லாத மனதுடன் நடத்திய நிகழ்வுகள் அசைபோடச்செய்கின்றன.
எஸ் எஸ் எல் சி - பி யூ சி - முதல் முதல் கல்லூரியில் அனைத்துமே ஆங்கிலமாக - தட்டுத் தடுமாறி குட்டுப்பட்டு தேறி - ம்ம்ம்ம்ம் - அக்காலம் பொற்காலம்

பாலா நல்லதொரு இடுகை//

வாங்க சீனா. நீங்களும் எழுதுங்களேன்.:)

vasu balaji said...

யூர்கன் க்ருகியர் said...

சார்.. ஓராண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள்....
உங்க சந்தோசமே எங்க சந்தோசம்...
தொடர்ந்து அடி பின்னுங்க !!//

நன்றி யூர்கன்:)

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

அண்ணே... அருமையான இடுகை

நூலக அனுபவம் எனக்கு இதே போல் உண்டு..

எதுக்கும் நீங்க சீனா அய்யாவ கொசுவத்தி சுத்த கூப்பிட்டிருக்கலாம், உங்கள மாதிரி யூத்துங்க சுத்துற கொசுவத்தி மிக அருமையா இருக்கும்...

அப்ப்ப்போ என் பேருக்கு பதிலா, சீனா / தாராபுரத்தான் (அதென்னுங்க்ண்ண டப்ப்ப்புளு மீனிங்கு) என்ற யூத்துகளின் பெயரை இடுமாறு வேண்டுகிறேன்..

(ஹெ..ஹெ.... எஸ்கேப்புங்கோ)//

விட்றுவமாக்கு:))

vasu balaji said...

jaffer erode said...

ஓராண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள்//

நன்றி ஜாஃபர்:)

vasu balaji said...

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ரொம்ப நெகிழ்வான பதிவு//

நன்றிங்க.

Unknown said...

வெற்றிகரமான இந்த ஓராண்டு நிறை(னை)வில் உங்கள் கொச்சுக் கொச்சு சந்தோஷங்கள் அருமை.

ராஜ நடராஜன் said...

எப்படி நச்சுன்னு அடிச்சும் ஆடுறீங்க!இப்படி இதமா தென்றலாகவும் வீசுறீங்க!!!

Thenammai Lakshmanan said...

பதின்ம வயது பகிர்வு அருமை பாலா சார் ..பொறுப்போடு வளர்ந்து இருக்கீங்க...

ஓராண்டு நிறைவுக்கும் வாழ்த்துக்கள் சார்

Jerry Eshananda said...

வாழ்த்துக்கள் பாலாண்ணா

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:))))))))))))))))

*இயற்கை ராஜி* said...

ஓராண்டு வாழ்த்துக்கள்

Radhakrishnan said...

அழகிய பதிவு. சாதித்த நிம்மதி தெரிகிறது எழுத்தில்.

Romeoboy said...

சுவைப்பட அழகா இருக்கு தலைவரே .

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்..
அழகா எழுதி இருக்கீங்க..

நெகிழ்வாக இருந்தது சில இடங்களில் .. சந்தோசங்கள் தொடரட்டும்..

Unknown said...

கலக்கல்.வாழ்த்துக்கள்.

Unknown said...

வாழ்த்துக்கள் ஓராண்டு நிறைவுக்கு..,

CS. Mohan Kumar said...

நல்லாருந்துச்சு சார்; முதல் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

சோகமும், வேகமும் கொண்ட கொசுவர்த்தி சார்..

ரோஸ்விக் said...

உங்க சிறு வயதில் அப்பாவை இழந்ததைத் தவிர... மற்ற அனைத்தும் ரசிக்கும்படியாகவும் உள்ளது அண்ணே.
இளைமைக் காலங்கள்ல சில சிற்றின்பங்களை நீங்கள் பெறவில்லைஎனினும்... சோரம் போகாது நல்வழியில் வாழ்ந்து வந்துள்ளீர்கள்.

இது கழுதை குட்டி இல்லையின்னு எல்லாருக்கும் புரியவச்சுட்டீங்க...

vasu balaji said...

ஜீயெஸ்கே said...

வெற்றிகரமான இந்த ஓராண்டு நிறை(னை)வில் உங்கள் கொச்சுக் கொச்சு சந்தோஷங்கள் அருமை.//

நன்றி ஜீயெஸ்கே

ஈ ரா said...

//2 பாஸ் 74 பாஸ் என் நம்பர் 73 காணோம் என்று விசும்பி, ஃபெயிலான பக்கத்து வீட்டு அண்ணன் வாங்கிப் பார்த்து 72லிருந்து 74 வரை பாஸ். நீயும் பாஸ் என்றால் நம்ப மாட்டாமல் பள்ளிக்கு ஓடி, பள்ளியில் இரண்டாமிடம் எனத் தெரிந்ததும் கொச்சு சந்தோஷம்//

--)

கிரி said...

வாழ்த்துக்கள் சார்! தற்போது பதிவுகளை குறைத்து விட்டீர்கள் போல!