Thursday, February 4, 2010

தி.கு.ஜ.மு.க. முதல் மாநாடு. (நிறைவு)

(5 நிமிடத்திற்குள் முகிலன் வருகிறார்)

குடுகுடுப்பை: என்ன முகிலன் சாப்டாச்சா அதுக்குள்ள?

முகிலன்: இல்ல தலைவரே! அவ்வளவு தூரம் போகணுமே என்ன சாப்பாடுன்னு போன் பண்ணேன் தங்கமணிக்கு. சாப்பிட்டு கழுவி வெச்சிட்டாங்களாம். தான் கழுவினதால தட்டில பருக்கை கூட இல்லைன்னு நக்கல் வேற. சரிம்மான்னு நொந்து போய் சொன்னா, காலைல சாப்பிட்டு கிளம்பறப்போ பார்த்தாங்களாம். வாயோரம் ஒரு பருக்கை இருந்திச்சி பாருங்கன்னாங்க. அதான் சாப்பாடு. கிர்ர்ர்ர்ர்ர்ர். நீங்க நடத்துங்க.

(உணவுக்குப் பிறகு தொடர்கிறது)

அது சரி: இங்க பாருங்க தலைவரே. காதல் சொல்லி வந்தாய் எடுத்துக்குங்க. அது ரேட் பேசிக்கலாம். :O))). வேற எந்தக் கதையும் வடக்கச்சி ஏன் நசரேயன லவ் பண்ணுதுன்னு லாஜிக் இடிக்கும். பதிவில கிழிச்சி ஒட்டிடுவாங்க. இதுன்னா தற்கொலையா காதலான்னு ஒரு கேள்வி வந்து, இதுவே மேலுன்னு முடிவெடுத்தான்னு மாத்திக்கலாம்.

குடுகுடுப்பை:(படுபாவி. என்னமா மார்க்கட்டிங் பண்ணி துட்டு பாக்குறாருய்யா இந்தாளு! எதுனாச்சும் கேட்டா கலிஃபோர்னியா தீர்மானம்னு ஆரம்பிச்சிடுவாரே! இப்பதான் தலைவரேன்னு கூப்புடுறாரு வேற) அதும் நல்ல ஐடியாதான்.

அது சரி: ஹீரோக்கு ஒரு ஃப்ரெண்ட் கேரக்டர சொருகி விடுறேன். பழமைதான் அந்த ஃப்ரெண்ட்.

நசரேயன்:யோவ். அப்ப படத்துல கூட என்னால துண்டு போட முடியாதா? என்னா வேலையிது?

அது சரி: அட இருங்க அண்ணாச்சி. நீங்க வெரட்டி வெரட்டி வடக்கச்சிக்கு துண்டு போடுறீங்க. அந்தம்மணி ஓடி ஓடி பழமைக்கு துண்டு போடுது. ஒரு நாள் ஆங்கிலத்துல ஐ லவ் யூனு சொல்லிடுது. பழமைக்கு கோவம் வந்து ஒன்னு உன் தாய்மொழி இந்திலயாவது சொல்லியிருக்கணும். இல்ல எனக்காக தமிழ் கத்துக்கிட்டாவது சொல்லியிருக்கணும்.

ஆங்கில மோகத்துல சொன்ன உன்காதல் எனக்கு வேணாம்னு சொல்லிடுறாரு. மனசொடிஞ்சி அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்க நயாகரா போகுது. அப்ப நசரேயன் ஒளிஞ்சிருந்து சொந்தக் குரல்ல ஒரு பின் நவீனத்துவ பேதாஸ் சாங் பாடுறாரு. இந்தப் பாட்டு கேக்குறத விட, நயாகரால விழுந்து எலும்பு நொறுங்கி சாவரத விட இந்தக் காதலை ஏத்துக்கிறது பெரிய வலியில்லைன்னு ஹீரோயின் கை பிரிச்சிக்கிட்டே ஹீரோவ பார்த்து ஸ்லோ மோஷன்ல ஓடி வராங்க. நசரேயனும் ஓடி வராரு.

நசரேயன்: வெள்ளை ட்ரெஸ்ல.

சின்னம்மணி: ரொம்ப முக்கியம்.

நசரேயன்: ஏ! அதோட கத முடிஞ்சிரும்லா! நான் எப்புடி லால்பாக்ல பூ குடுக்குறது?

முகிலன்: அடடடா. கனவு சீன் இருக்கில்லா

நசரேயன்: அட ஆமா! அப்ப ஒரு பத்து பதினஞ்சி வடக்கச்சிங்கள வெள்ள ட்ரெஸ்ல உடுவீங்களா?

அது சரி: அக்கவுண்ட்ல எவ்வளவு போடுவீங்க? அத பொறுத்துதான்.

நசரேயன்: அட ஒரு நப்பாசைல கேட்டா! சரி அது கேமரா ட்ரிக்ஸ்ல வடக்கச்சி பத்தா பிரிஞ்சி வராமாதிரி பார்த்துக்குங்க.

குடுகுடுப்பை: காமெடிக்கு யாரு?

நசரேயன்: நானே டபுள் ரோல் பண்றேனே!

அது சரி: ம்கும். ஈரொயினும் நீங்களே இருங்களேன். சுண்ணாம்பு அடிச்சா அவ்வளவு செலவாகாது.

பழமை:(பொட்டியை தட்டியபடி) அட இருங்க நம்ம மாப்பு ஆன்லைன்ல இருக்காரு. அவர கேக்கலாம். ஏனுங் மாப்பு? பதிவர் பிக்சர்ஸ்ல ஒரு காமெடி ரோல் இருக்கு? யார போடலாம் சொல்லுங்க.

கதிர்: அது வந்துங்க மாப்பு, நானே பண்றேன். ஆனா கூட ஆரூரனும் இருந்தா கலக்கலா இருக்கும்.

பழமை: ஏனுங் அது சரி? ரெண்டு பேருக்கு காமெடி ரோல் கதையில முடியுமா?

அது சரி: நோ ப்ராப்ஸ். விக்கிரமாதித்தன், வேதாளம் ரெண்டு பேர்த்தையும் நசரேயனுக்கு ஃப்ரெண்டாக்கிடலாம்.

பழமை: சரிங்க மாப்பு. காமெடி ட்ராக் எப்படிங்க. நீங்களே எழுதுவீங்களா?

கதிர்: அது ஒன்னும் பிரச்சினையில்லிங்க. இந்த பாலாசி பய போடுற பின்னூட்டத்த தேத்தினாலே செம காமெடியா இருக்கும்.

பழமை: சரிங் மாப்பு! அப்ப தயாரா இருங்க. படப்பிடிப்பு தேதி சொல்லுவாங்க.

கதிர்: மாப்பு! அது வந்துங்..வந்துங்..கோவை சரளா நடிக்குதுங்ளா?

பழமை: இருங்க தங்கச்சிய கேக்கறேன்..

கதிர்: அட எனக்கில்லீங்..நீங்க வேற. ஆரூரன் கேக்க சொன்னாருங்..

பழமை: அப்புறங் மாப்பு, இந்த டைரக்‌ஷனுக்கு, திரைக்கதைக்கு கேமராக்கு எல்லாம் யார போடலாமுங்.

கதிர்: இருங்க! கேபிள கான்ஃபரன்ஸ்ல போடுறேன்.

கேபிள்: சொல்லுங்க தலைவரே.

கதிர்: அமெரிக்கால இருந்து பேசராங்க தலைவரே! ஒரு படம் எடுக்கறாங்களாம். டைரக்‌ஷன், கேமராக்கு எல்லாம் என்ன பண்ணலாம்னு கேட்டாங்க. அதான். மாப்பு நீங்களே பேசுங்க.

பழமை: சொல்லுங்க சங்கர். நல்லாருக்கீங்களா? அது வந்துங் தி.கு.ஜ.மு.க. சார்பில ஒரு படம் எடுக்குறமுங். அதுக்கு டைரக்‌ஷனுக்கு உங்கள கேக்க சொன்னாருங்! கதிர்.

கேபிள்: நானே பண்றேங்க பழமை! ஆனா ஒரு கண்டிஷன். என்னோட எண்டர் கவிதை ஒரு சாங்கா வரணும்.

பழமை: (போச்சுரா) எண்டர் தானுங்ளே! டைட்டில் சாங்கா வெச்சிடலாமுங். எப்புடீஈஈஈ

கேபிள்: அசத்திட்டீங்க தலைவரே. கேமராக்கு தண்டோராவ போடலாங்க! ஜாக்கி கிட்ட கன்ஸல்டேஷன் வெச்சிகிட்டா சூப்பரா பண்ணிடலாம். ஹீரோயின் யாருங்க.

தண்டோரா: ரீமாவ  போட்றலாமா கேளுங்கண்ணே.

அது சரி: இந்த பட்ஜட்டுக்கு ரீமாவோட டூப்பு கூட நடிக்கமாட்டாங்க. அங்கயே சௌகார்பேட்டயில யாராவது மார்வாடி வீட்ல வேலை செய்யற பொண்ணா பாருங்க.

நசரேயன்: வெள்ளையா இருந்தா போறாது சொல்லிபுட்டேன். என்னிய மாதிரி அளக்க்க்க்க்கா இருக்கணும். நாந்தான் செலக்ட் பண்ணுவேய்ன்.

குடுகுடுப்பை:(ஷூட்டிங்க் முடியறதுக்குள்ள எத்தன ஹீரோயின மாத்தணுமோ தெரியலையே) அதான் சொல்லிருக்கில்ல?

தண்டோரா: ஏங்க கேபிள்? விசாக்கெல்லாம் அவங்களே பார்த்துப்பாங்களா? எங்க லொகேஷன்லாம் கேட்டீங்களா? நெட்ல தேடி லோகல் சரக்கு ப்ராண்ட் நேமெல்லாம் பார்த்து வைச்சுக்கணும்.

அது சரி: நோ வே! அவ்வளவு பேரு இங்க வரதுக்கு, ஹீரோவ அங்க அனுப்பி விடுறோம். ஒரு வாரத்துக்கு. அது சீப். எப்புடீ?

கேபிள்: தல எழுத்துடா. எண்ட்ரீயே ஃபாரின் லொகேஷன்னு நினைச்சா ஏர்போர்ட்ல கூட ஷூட்டிங் பண்ண முடியாது போல.

குடுகுடுப்பை: ஓகே. இப்போ சாங்ஸ்.

அப்துல்லா: அய்! சாங் நான் பாடுவேன். அதுசரி கூட சொன்னாங்கல்ல.

குடுகுடுப்பை: (என் பிரச்சனை இவங்களுக்கு புரியுதா. ரெண்டு அம்மணிங்க வாயத் தொறக்காமலே மெறட்டுறாங்களே) அட இருங்க சார். பாட்டு இருந்தாதானே அப்புறம் பாடுறது யாருங்கற கேள்வி? கவிஞர் யாருன்னு தீர்மானம் பண்ணனும்ல. ஒரு பின் நவீனத்துவ சாங் நான் எழுதுறேன்.

கலகலப்ரியா, சந்தனமுல்லை: சொந்தமா எழுதணும். எதிர்கவுஜ போட்டா....

அது சரி: :O)))..கவுஜ மோசடிக்கும் சேர்த்து ஜக்கம்மாவும் குடுகுடுப்பையும் விரட்டப்படுவார்கள்.

குடுகுடுப்பை: சரிங்க ஆளுக்கு மூணு சாங் எழுதிக் குடுங்க. தலா ரெண்டு ரெண்டு அப்புடியே போட்டுடலாம். ஒண்ணே ஒண்ணு நான் எதிர் கவுஜ போட்டுக்கறேன்.

முகிலன்: அல்லோ. தல. எளக்கிய அணித் தலைவர் இதெல்லாம் வேடிக்கை பார்க்கவா உக்காந்திருக்கேன்.

குடுகுடுப்பை: யப்பா. ராஜா. படுத்தாதப்பா. அந்தகால சினிமாக்கு பாட்டு புத்தகம் மாதிரி இவங்க பாட்டுக்கு விளக்க உரை போட்டுக்க ராசா.

முகிலன்: சரி சரி! ஆனா இதான் கடைசி. பேக்ரவுண்ட் ம்யூசிக்குக்கு என்ன வழி?

தண்டோரா: தேவாக்கு ஒரு கம்பேக் குடுக்கலாங்க. அங்க இருந்தே டெலிகான்ஃபரன்ஸ்ல கிராமிய அவார்ட் குடுத்தா நல்லது.

நசரேயன்: என்னோட சாங் யாரு எழுதினதுன்னு சொல்லுங்க. முக்கியமா டூயட் சாங்.

கலகலா: அண்ணாச்சி! என்னோட கவுஜதான்.

நசரேயன்: போச்சிடா. படிக்கும்போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருமே! அப்போ டூயட்டு?

அப்துல்லா: அந்த கடைசியா எழுதினாங்களே அந்த பாட்டு இருக்கட்டும்ணே. எஸ்பிபி மாதிரி மூச்சுவிடாம பாட அதான் சரி:))

நசரேயன்: நீர் பாடுவீரு. நான் மூச்சு விடாம வாயசைச்சா போய் சேந்திருவேன். அப்புறம் எப்படி துண்டு போடுறது?

தண்டோரா: அது முதுகு பக்கமா எடுக்கிறப்ப மூச்சு விட்டுக்குங்க சாமி. ரிலீஸ் எப்ப?

அது சரி: அது நான் சொல்றேன். சும்மா சுறா படத்துக்கெல்லாம் போட்டியா இறக்கி பேர கெடுத்துக்கறதில்லை. முடிஞ்சா எந்திரன். அது வர நேரமாகும்னா பெண்சிங்கம்.
(போயும் போயும் பெண்சிங்கத்துக்கு எதிரா ஊத்திக்கிட்ட படம்னு பேரு வந்தா ஒரே ஸ்ட்ரோக்ல குடுகுடுப்பை, ஜக்கம்மா, நசரேயன் எல்லாரும் காலி..அப்புடி ஒரு வேள எந்திரனையும் கவுத்துட்டு ஒரு தூக்கு தூக்கினா என்னோட ஸ்ட்ராடஜின்னு அமுக்கிறலாம் இவங்கள. அதுக்குள்ள திருட்டு டிவிடி வந்தா அந்த ஊழலையும் சேர்த்தே ஈசியா கழட்டி விடலாமே! எப்படியும் வின் வின் சிடுவேஷன்...ஹ ஹ ஹ)

குடுகுடுப்பை:(இப்படியெல்லாம் யோசிப்பீருன்னு தெரியாமலா நேத்தே ரம்யாவ வருங்கால முதல்வராக்கினேன்?) சரி சரி. அவங்க அவங்க ஒழுங்கா ப்ளான் பண்ணி வேலையப் பாருங்க. ப்ளான் முக்கியம். அடுத்த மாநாடு ரஷ் பார்க்க பின்னர் தேதி அறிவிக்கப்படும்.

அதுசரி: அட்லீஸ்ட் என்னோட கொள்கை விளக்கப் பாடலை பாடிட்டாவது கலைஞ்சி போகலாமே!

நசரேயன்: நான் சொந்த குரல்ல பாடவா?

(அடுத்த நிமிடம் நசரேயன் மட்டும் நிற்க அனைவரும் எஸ்ஸாகிறார்கள்)

49 comments:

பழமைபேசி said...

முடியலை உங்க அட்டகாசம்.... 100%

க.பாலாசி said...

//(உணவுக்குப் பிறகு தொடர்கிறது)//

இந்த டீல் நல்லாருக்கு...

க.பாலாசி said...

//கதிர்: அது ஒன்னும் பிரச்சினையில்லிங்க. இந்த பாலாசி பய போடுற பின்னூட்டத்த தேத்தினாலே செம காமெடியா இருக்கும்.//

நோ....என்னோட காமடி டிராக்க யாருக்கும் நான் தரமாட்டேன்.

//நசரேயன்: நீர் பாடுவீரு. நான் மூச்சு விடாம வாயசைச்சா போய் சேந்திருவேன். அப்புறம் எப்படி துண்டு போடுறது?•///

தலையிலத்தான்....

க.பாலாசி said...

//அப்துல்லா: அந்த கடைசியா எழுதினாங்களே அந்த பாட்டு இருக்கட்டும்ணே. எஸ்பிபி மாதிரி மூச்சுவிடாம பாட அதான் சரி:))//

கத்தி கடப்பாரல்லாம் வரும் பரவாயில்லைங்களா?

ஹா..ஹா...ஹா....(வில்லன் சிரிப்பு)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

செ.சரவணக்குமார் said...

மாநாடு களை கட்டிருச்சி. அடுத்து எப்போ?

ஆரூரன் விசுவநாதன் said...

இப்பத்தான் பழைய பார்ம்க்கு வந்த மாதர இருக்கு........எல்லாம் கலக்கல்....ஆனாலும் கதிரு பேரச் சொல்லி எனக்கு கோவை சரளாவா????????
முடியாது முடியாது....
நான் ஒத்துக்க மாட்டேன்.....

டைரு டக்கரு.....ப்ளீஸ் நீங்களாவது ரெக்கமண்டு பண்டுங்க

Menaga Sathia said...

முடியல சிரித்து சிரித்து வயிறு புண்ணாயிடுச்சு.....

துபாய் ராஜா said...

//அது சரி: இந்த பட்ஜட்டுக்கு ரீமாவோட டூப்பு கூட நடிக்கமாட்டாங்க. அங்கயே சௌகார்பேட்டயில யாராவது மார்வாடி வீட்ல வேலை செய்யற பொண்ணா பாருங்க.//

//நசரேயன்: வெள்ளையா இருந்தா போறாது சொல்லிபுட்டேன். என்னிய மாதிரி அளக்க்க்க்க்கா இருக்கணும். நாந்தான் செலக்ட் பண்ணுவேய்ன்.//

//தண்டோரா: ஏங்க கேபிள்? விசாக்கெல்லாம் அவங்களே பார்த்துப்பாங்களா? எங்க லொகேஷன்லாம் கேட்டீங்களா? நெட்ல தேடி லோகல் சரக்கு ப்ராண்ட் நேமெல்லாம் பார்த்து வைச்சுக்கணும்.//

//கேபிள்: தல எழுத்துடா. எண்ட்ரீயே ஃபாரின் லொகேஷன்னு நினைச்சா ஏர்போர்ட்ல கூட ஷூட்டிங் பண்ண முடியாது போல.//

முடியலை...வலிக்குது வயிறு.. சிரிச்சி சிரிச்சி.... :))

ஸ்ரீராம். said...

இதில் வரும் பாத்திரங்கள் எப்பவும் இவர்களேதானா? எங்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடையாதா? ஒரு குணசித்திர பாத்திரமாவது புதியவர்களை அவ்வப்போது சேர்த்துக் கொள்ளக் கூடாதா?!!

Chitra said...

நசரேயன்: நீர் பாடுவீரு. நான் மூச்சு விடாம வாயசைச்சா போய் சேந்திருவேன். அப்புறம் எப்படி துண்டு போடுறது?

தண்டோரா: அது முதுகு பக்கமா எடுக்கிறப்ப மூச்சு விட்டுக்குங்க சாமி. ரிலீஸ் எப்ப?
...............நல்ல காமெடி. ஹா,ஹா,ஹா......

Unknown said...

உங்க பதிவைப் படிக்கிறதுக்குள்ள மூணு தடவை தங்கமணி கையால கொட்டு வாங்கிட்டேன்..

“இவ்வளவு சத்தமாவா சிரிக்கிறது? தம்பி தூங்குறான்ல” அப்பிடின்னு..:)

குடுகுடுப்பை said...

முகிலன்
February 4, 2010 8:32 PM
உங்க பதிவைப் படிக்கிறதுக்குள்ள மூணு தடவை தங்கமணி கையால கொட்டு வாங்கிட்டேன்..

“இவ்வளவு சத்தமாவா சிரிக்கிறது? தம்பி தூங்குறான்ல” அப்பிடின்னு..:)
//

என்னமோ மத்த நாள்ல வாங்காத மாதிரி.

குடுகுடுப்பை said...

நசரேயன் ஹீரோவுக்கு உள்ள அனைத்து தகுதியோடயும் இருக்கார்.

Prathap Kumar S. said...

ஆல் பதிவர்ஸ் டோட்டல் டேமேஜ்:)

Thenammai Lakshmanan said...

எங்களையும் மாநாட்டுல சேர்த்துக்குங்க வானம் பாடி அப்புறம் யார் சான்ஸ் தரப் போறாங்க

Unknown said...

//குடுகுடுப்பை
February 4, 2010 9:06 PM
நசரேயன் ஹீரோவுக்கு உள்ள அனைத்து தகுதியோடயும் இருக்கார்.
//

குடுகுடுப்பை தயாரிப்பாளருக்குரிய அத்தனை தகுதியோடயும் இருக்கார்.. :))

balavasakan said...

சார் எங்க வயித்த ஒரு கை பாக்கிறதுன்னே முடிவெடுத்திருக்கீங்க போல இருக்கு...
சிரிச்சு சிரிச்சு புண்ணாப்போச்சு

கும்மாச்சி said...

வானம்பாடி: ஆல் பதிவர்ஸ் அம்பேல்

Santhappanசாந்தப்பன் said...

அண்ணே படத்துக்கு பேரு வைக்கவே இல்லியே,

தமிழ் படம் ‍ பார்ட்-2 ந்னு வைக்கப் போறிங்களா?


அட்டகாசமான வர்ணனை...... மாநாடு நடந்த இடத்திலிருந்து நேரடியாக வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி.... நல்லா கவர் பண்ணியிருக்கீங்க!!!

நசரேயன் said...

கடைசி வரைக்கும் நாயகியை கண்ணிலே காட்டாம முடிச்சிபுட்டீங்க

Radhakrishnan said...

மாநாடு மிகவும் சிறப்பு. தமிழ் படங்களுக்கான கலந்துரையாடலுக்கு நீங்களும் கலந்து கொள்ளலாம் ஐயா. ஒரு அழகிய நகைச்சுவை படம் ஒன்று நிச்சயம் தமிழ் திரையுலகத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறது. கேபிள் சாரோட எண்டர் கவிதையை பாடலாக்கிட்டா படம் ஏ ரகம் தான், அதாவது முதல் தரம் தான்.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆட்டத்துல என்னைய சேர்த்துக்காத காரணத்துனால நான் கோபத்தோட வெளிநடப்பு செய்கிறேன்..:-))))

Unknown said...

//நசரேயன்
February 4, 2010 10:33 PM
கடைசி வரைக்கும் நாயகியை கண்ணிலே காட்டாம முடிச்சிபுட்டீங்
//

பாவம் நசரேயன் எடுத்துட்டு வந்த துண்டெல்லாம் வேஸ்டாப்போச்சி.. :)

கலகலப்ரியா said...

//அடுத்த நிமிடம் நசரேயன் மட்டும் நிற்க அனைவரும் எஸ்ஸாகிறார்கள்//

எஸ்...................................

(ஆமா நேத்து தீர்மானம் ஏதாவது கொண்டு வந்தாங்களா..? நான் இப்போ கட்சில இருக்கேனா இல்லையா... ஒண்ணுமே தெரியலையே...)

தாராபுரத்தான் said...

கதிர் சார், பாலாஐி தம்பி எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. எனக்கும் ஒருசீன் வாங்கி கொடுத்திருங்க.உங்களைத்தான் மலையாட்டம் நம்பி இருக்கிறேன்.எனக்கு பழமை தம்பியும் புல் சப்போட்டு பண்ணும்.

பழமைபேசி said...

//தாராபுரத்தான் Says:
February 5, 2010 6:06 AM
கதிர் சார், பாலாஐி தம்பி எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. எனக்கும் ஒருசீன் வாங்கி கொடுத்திருங்க.உங்களைத்தான் மலையாட்டம் நம்பி இருக்கிறேன்.எனக்கு பழமை தம்பியும் புல் சப்போட்டு பண்ணும்.
//

பாலாண்ணே, ஆமா! இல்லாட்டி நான் வீட்டோ போட்டு கட்சிய கடத்திடுவேன்!!

ஈரோடு கதிர் said...

ங்கொய்யாலே....

இந்த அக்குறும்புத்தான்... வாரக்கணக்கில எழுதாம உக்காந்திருந்ந்தீங்களோ...

அட.... சாமி...

சிரிச்சு சிரிச்சு.... நொந்ந்ந்ந்ந்து போயிட்டேன்

ஈரோடு கதிர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
எனக்கு கோவை சரளாவா????????
முடியாது முடியாது....
நான் ஒத்துக்க மாட்டேன்.....//

சரி விடுங்க தலைவரே... மீசைக்காரன்னு ஒருத்தன் சுத்திகிட்டிருக்கான்... அவனுக்கு பொம்பள வேசம் போட்டுருவோம்

எல் கே said...

full time comedy show.. nan sirikaratha parthu officel,la

thiyaa said...

முடியலை.....

S.A. நவாஸுதீன் said...

ஓஹ் நான் தான் லேட்டா. மாநாடு சீக்கிறம் முடிஞ்சது வருத்தமாத்தான் இருக்கு. இது இல்லாட்டி என்ன அடுத்தடுத்த இடுகைல சிரிப்புக்கு பஞ்சமா இருக்கப்போவுது.

கலகலப்பா இருந்தது சார்.

Thamira said...

நாஞ்சில் பிரதாப் said...
ஆல் பதிவர்ஸ் டோட்டல் டேமேஜ்:)//
ரிப்பீட்.! :-)))

Paleo God said...

part -1.

கலகலா: கூப்டிங்களா குடுகுடுப்பை.

குடுகுடுப்பை: இந்தாள சமாளிக்கவே கோழி செரிச்சி போச்சி. நீங்க வேறயாம்மா. உக்காருங்க.//
::)))
part-2.

ஈரோடு கதிர் said...
ங்கொய்யாலே....

இந்த அக்குறும்புத்தான்... வாரக்கணக்கில எழுதாம உக்காந்திருந்ந்தீங்களோ...

அட.... சாமி...

சிரிச்சு சிரிச்சு.... நொந்ந்ந்ந்ந்து போயிட்டேன்//

repeatttttttttuuuuuu::))

பதிவும் பின்னூட்டங்களும் சூப்பர்..
எப்படி சார்.. இப்பிடி..:))

பெசொவி said...

போட்டோல நீங்க தலைல கைய வச்ச மாதிரி உக்காந்திருக்கீங்க.....ஆனா உங்க பதிவைப் படிச்ச பிரபல பதிவர்கள்லாம் இப்போ அதே போசுல உக்காந்து இருக்காங்களாமே ..........உண்மையா?

நிஜாம் கான் said...

அண்ணே! அப்போ 2011 ல் ஆச்சியை ச்சீ சாரி ஆட்சியைப் பிடிக்கப்போவது நீங்க தானா????

நிஜாம் கான் said...

அண்ணே! உங்களுக்கு ஒரு எச்சரிக்கை. அடுத்தப் பதிவுக்கு யாரும் மைனஸ் ஓட்டு போடாவிட்டால் நான் போட வேண்டி வரும். அதுனால உங்க (4) உடன்பிறப்புகள்ட சொல்லி அவங்களோட ஜனநாயகக் கடமையை சரியா செய்யச்சொல்லுங்க. சொல்லிப்புட்டேன் ஆமா.,

வில்லன் said...

/அது சரி: ஹீரோக்கு ஒரு ஃப்ரெண்ட் கேரக்டர சொருகி விடுறேன். பழமைதான் அந்த ஃப்ரெண்ட்.//

ஒரு காட்சிலயாவது அண்ணன் பழமைபேசி அந்த தொபிய கழட்டிடனும்... அந்த மாதிரி சீன் வைக்காம விடக்கூடாது.............

வில்லன் said...

///(உணவுக்குப் பிறகு தொடர்கிறது)//

இதுதான அண்ணாச்சி குடுகுடுப்பைக்கு முக்கியம்.... அவர கட்சிய விட்டு வெளி ஏத்தனும்ன்னா இந்த "சோத்த" கட் பண்ணிடனும் மொதல்ல...

வில்லன் said...

ஆமா என்னல்லாமோ பிளான் பண்ணினிங்க எல்லாம் நல்லாத்தான் இருக்கு..... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.......
என்னோட ரோல் என்னன்னு சொல்லவே இல்லே???? எனக்கு படத்துல வில்லன் சான்ஸ் இருக்கா?? இல்லையா???...

வில்லன் said...

/ க.பாலாசி said...


//அப்துல்லா: அந்த கடைசியா எழுதினாங்களே அந்த பாட்டு இருக்கட்டும்ணே. எஸ்பிபி மாதிரி மூச்சுவிடாம பாட அதான் சரி:))//

கத்தி கடப்பாரல்லாம் வரும் பரவாயில்லைங்களா?

ஹா..ஹா...ஹா....(வில்லன் சிரிப்பு)//
ரொம்ப நன்றி அண்ணாச்சி.....நீங்களாவது என்ன நெனசியலே...."வில்லன்" நான் ஒருவன் இருக்கேன்னு?????? நல்லா இருங்கப்பு!!!!!!!!!!!!!!

வில்லன் said...

// முகிலன் said...
//குடுகுடுப்பை
February 4, 2010 9:06 PM
நசரேயன் ஹீரோவுக்கு உள்ள அனைத்து தகுதியோடயும் இருக்கார்.
//


//குடுகுடுப்பை தயாரிப்பாளருக்குரிய அத்தனை தகுதியோடயும் இருக்கார்.. :))//

அட்ரா சக்க!!!! அட்ரா சக்க!!!!!....உண்மைலேயே அண்ணாச்சி குடுகுடுப்பை சோழன "சோளக்கஞ்சி" குடிக்க வைக்காம விடமாடிங்கபோல இருக்கு....

பா.ராஜாராம் said...

ஹா..ஹா.. அற்புதம் பாலா சார்!

கிரேட்!

வில்லன் said...

/கலகலப்ரியா said...


//அடுத்த நிமிடம் நசரேயன் மட்டும் நிற்க அனைவரும் எஸ்ஸாகிறார்கள்//

எஸ்...................................

(ஆமா நேத்து தீர்மானம் ஏதாவது கொண்டு வந்தாங்களா..? நான் இப்போ கட்சில இருக்கேனா இல்லையா... ஒண்ணுமே தெரியலையே...)//

உங்கள கட்சிய விட்டு தூக்கி ரொம்ப நேரம் ஆச்சி.....இப்பதான் ஒரு வாசகிஇடம் இருந்து ஒரு நூறு டாலர் "காசோலை" வந்தது... தலைவர் குடுகுடுப்பைக்கு உரிய பங்கை கொடுத்தும்... அவர்களை நியமித்து உங்களை தூக்கியாச்சு.....சுற்றறிக்கை வந்ததே பார்கவில்லையா?????

வில்லன் said...

/

பிள்ளையாண்டான் Says:
February 4, 2010 10:26 PM
அண்ணே படத்துக்கு பேரு வைக்கவே இல்லியே,

தமிழ் படம் ‍ பார்ட்-2 ந்னு வைக்கப் போறிங்களா?


அட்டகாசமான வர்ணனை...... மாநாடு நடந்த இடத்திலிருந்து நேரடியாக வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி.... நல்லா கவர் பண்ணியிருக்கீங்க!!!//

படத்துக்கு எப்பவோ பேரு வச்சாச்சு.......... பரமார்த்த குருவும் (குடுகுடுப்பையும்) சீடர்களும்....

வில்லன் said...

இதனால அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

குடுகுடுப்பையும் நானும் பகைமையை மறந்து கூட்டணி அமைத்து கட்சி வளர்ச்சிக்காக இன்று இரவு பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்....பலதரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அப்பட்டமாக ஊரறிய நிரூபிக்கப்பட்டுவிட்டதால் அண்ணன் குடுகுடுப்பை தி.கு.ஜ.மு.க தலைவர் பதவியை இழந்துவிட்டார்...ஆனாலும் அந்த பதவி வேற ஊரு காரருக்கு கொடுக்க மனதில்லாத காரணத்தினால் ஒரே ஊருக்காரரான (டல்லஸ்) எனக்கு அந்த பதவியை மனப்பூர்வமாக விட்டுக் கொடுத்துவிட்டார்.... கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்ட அறிவிப்புகள் அதிவிரைவில் என்னால் அறிவிக்கப்படும்....லஞ்சம் கொடுத்து பதவி வாங்கின அனைவர் பதவியும் "பணால்"........ புதிய பதவி வேண்டுவோர் உடனே என்னை மட்டும் அணுகவும்.... குடுகுடுப்பைஇடம் பணம் கொடுத்து எமாறாதிர்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

vasu balaji said...

அனைவருக்கும் நன்றி:).

எம்.எம்.அப்துல்லா said...

101% :))

பின்னோக்கி said...

நல்ல காமெடி :)