Wednesday, February 3, 2010

தி.கு.ஜ.மு.க. முதல் மாநாடு.

(புதிய பொறுப்பாளர்களை அறிவித்த பிறகு சட்ட அணித்தலைவர் அது சரி அவர்களின் தீவிர எதிர்ப்பு காரணமாகவும், மற்ற பதவிகளுக்கான கோரிக்கைகள், ஒரே தலைவர் இரண்டு கட்சிக்கும் பொ.செ.வாக இருக்க முடியுமா என்ற முக்கியமான முடிவுகளை எடுக்கவும் தி.கு.ஜ.மு.க. அவசரக் கூட்டம் நடைபெறுகிறது)

குடுகுடுப்பை: ஜக்கம்மா சொல்றா! வணக்கம்! வணக்கம்! வணக்கம்!

அது சரி: ம்கும். இதக்கூட சொந்தமா சொன்னா செலவாயிரும்.

குடுகுடுப்பை: கட்சித்தலைவர் வரும்போது எழுந்து நிற்காமல், வணக்கமும் சொல்லாமல் இருப்பதுதான் பண்பாடா?

அது சரி: இல்லவே இல்லை. இனி நீங்க படப்போறதுதான் பெரும்பாடு.

முகிலன்: இலக்கிய அணித்தலைவர் நாந்தான் ரைமிங்கோட பேசலாம் என்பதை சபைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

குடுகுடுப்பை: எல்லாரும் வந்தாச்சா? அங்க யாரு சேர்ல தலைல கை வெச்சிக்கிட்டு தூங்கறது?

வானம்பாடி: நான் தூங்கல தூங்கல. முடி பறக்குதுன்னு எழுதி தொங்கவிட்டுக்கிட்டு தானே உக்காந்திருக்கேன்.

குடுகுடுப்பை: நசரேயன் எங்கே?

வானம்பாடி: அதோ ஜன்னல் கிட்ட நின்னு கட்சிப் பணியாற்றுகிறாராம்.

குடுகுடுப்பை: இங்க வாரும்யா நசரேயன். அங்க என்ன பண்றீரு.

நசரேயன்: ஏ! மூணாவது வீட்டில ஒரு வெள்ளச்சிக்கு துண்டு போடுறம்லா? இந்தா வந்துட்டேன்.

குடுகுடுப்பை: ஆரம்பிக்கலாமா?

(வாட் ட ஹெல்! நாமன்னா இளிச்ச வாயா சந்தனமுல்லை. விடுறதில்லை. லகலகலக)

குடுகுடுப்பை: அங்க என்ன சத்தம்? யாரங்க?

கலகலப்ரியா: ஹூஊஊஊஊஊஊம். ஜக்கம்மா! பெண்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாத கட்சி எப்படி நடக்கும்னு பார்க்கலாம். நாங்க இல்லாம எதிர் கவுஜ எப்படி எழுதுவீங்கன்னு பார்க்கலாம்? என்ன நடக்குது இங்க?

அது சரி: :O))))

குடுகுடுப்பை: அட இருப்பா. எப்ப பாரு பீப்பீ ஊதிக்கிட்டு. இவங்க சொல்றதும் சரிதான். சமாளிப்போம். வாங்க வாங்க. ஹி ஹி. அதான் அஜண்டால போட்டிருக்கே, இதர பதவிகளுக்கு நியமனம்னு. இமெயில் அனுப்பறதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க. வாங்க வாங்க.

கலகலா: அத்த்த்த்த்து!

(நாட்டாமாஆஆஆஆஆஆ! தீர்ப்ப மாத்திச் சொல்லுங்)

குடுகுடுப்பை: என்ன எழவுடா. இப்பதான் ஒரு சவுண்டுக்கு சரண்டர் ஆனோம் இப்ப யாரு? அட பழமை! வாங்க வாங்க!

பழமை: வரதெல்லாம் இருக்கட்டுங்ணா! இந்தக் குழந்த என்னமோ கேக்குது பாருங்! ஒரு வேல பார்க்க முடியலிங். ஒரே அழுவாச்சி!

அப்துல்லா:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். எனக்கு சிறுவர் அணி தலைவர் பதவி வேணூஊஊஊம்.

குடுகுடுப்பை: குடுத்தாச்சி குடுத்தாச்சி. தோ! அந்த ஓரம் சொப்பு சாமான்லாம் இருக்கு பாரு குழந்தை. அங்க போய் சமர்த்தா விளையாடிக்க கண்ணு! ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா..

கலகலா: தலைவரா இருந்தாலும் ஸ்ஸ்ஸ்ஸப்பால்லாம் என்கிட்ட திருடப்படாது. அது நாந்தான் சொல்லுவேன்.

குடுகுடுப்பை: சைலேன்ஸ்! கூட்டம் ஆரம்பிக்கப் போறேன்!

அது சரி: அல்லோ! நீங்க யாரு கூட்டம் ஆரம்பிக்க? கட்சில இருந்தே தூக்கியாச்சிங்கறேன். அப்புறம் கூட்டம் ஆரம்பிக்கறாராம்ல.

குடுகுடுப்பை: (அது சரின்னு பேர வெச்சிகிட்டு எது பண்ணாலும் தப்புன்னே சொல்லிக்கிட்டிருக்காரே. கேப்பாரே இல்லையா ஜக்கம்மாஆஆஆ)

கலகலா: கூப்டிங்களா குடுகுடுப்பை.

குடுகுடுப்பை: இந்தாள சமாளிக்கவே கோழி செரிச்சி போச்சி. நீங்க வேறயாம்மா. உக்காருங்க.

பழமை: அது சரிங்கண்ணே. அந்த வருங்கால முதல்வர் யாருன்னு கேட்டேனே.

அது சரி: என் கேள்விக்கு பதில் சொல்லாம வேற எந்த தீர்மானமும் செல்லாது! சொல்லிட்டேன்.

குடுகுடுப்பை:ஓஒ. சரி சரி. இப்பத்தாம்வே புரியுது. உம்ம பதிவில எமினெம் படத்த தூக்கிட்டு டாலர் படம் போட்டதுக்கு அர்த்தம். நிதித்துறைத் தலைவரும் நீர்தான்யா. போதுமா? (இனிமே கருப்புப் பணம் கூட கோழி, காடைன்னு வாங்கித்தான் தேத்தணும்)

அது சரி:மிஸ்டர் குடுகுடுப்பை! யூ ஆர் ஸ்மார்ட். பட் வேதாளம் என்ன கேக்குதுன்னா அந்த நிதில நாய் பத்திர ஊழல் பணமும் செண்ட் சுத்தமா கணக்கில வந்திருக்கான்னு. இதுக்கு பதில் தெரிஞ்சும் சொல்லலைன்னா....)

குடுகுடுப்பை: சிக்கன் புளிசாதம் வாங்காம மிச்சம் பண்ண காசு கூட அதிலதான் இருக்கு போதுமா?

அது சரி: தி.கு.ஜ.மு.க தலைவர் வாழ்க (இப்போதைக்கு)

பழமை: அந்த வருங்கால முதல்வர் பதவி..

குடுகுடுப்பை: பழமை! தெரியாம கேக்கறேன். எம்.ஜி.ஆர். கலர்ல இருக்கீரு. தொப்பியும் போட்டிருக்கீரு. அதுக்காக அடுத்த முதல்வரா உங்களை ஆக்கிட்டு கட்சித்தலைவர்னு நான் எதுக்கு? முதல்ல கட்சிய பலப்படுத்தணும். முதல்வர்னா திரைப்படத்துறையில சம்பந்தமிருக்கணும். இல்லைன்னா போணியாகாது. அதுக்கு வழிய பார்ப்பம் வாங்க. ஒரு படம் எடுப்போம்.

அதுசரி: அதான பார்த்தேன். நிதித்துறையை குடுத்துட்டு சினிமா எடுக்கறா மாதிரி எடுத்து இருக்கற பணத்தை சூறை விட்டுட்டு வட போச்சேன்னு நான் இருக்கணும்னு ப்ளானா? சன் பிக்சர்ஸ் ரிலீஸா?

குடுகுடுப்பை: அதெல்லாம் இல்லப்பா. எல்லாத் துறையிலயும் பதிவர் இருக்கோம்ல. பதிவர் பிக்சர்ஸ்னு ஆரம்பிச்சி அவங்கவங்க பங்களிப்புன்னு ஒரு இடுகை போட்டு அத்தனை பதிவரும் தன்பதிவில் ஒரு இடுகை போட்டா...

நசரேயன்: அருமை அருமைன்னு பின்னூட்டம்தான் வரும். ஓட்டு கூட வராது..

முகிலன்: அதும் ஒரு சிலர் ஓட்டு மட்டும் இன்னைக்கு.. அப்பால படிக்கறேன்னு பின்னூட்டம் போடுவாங்க.

கலகலா: யோவ்! இனிமே பொழிப்புரைன்னு பேச்சு வரட்டும்..அப்புறம் இருக்கு சேதி..

முகிலன்: ஓ. அது ஒன்னு இருக்கோ. என் அறிக்கையை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.

குடுகுடுப்பை: இருங்கப்பா. எல்லாத் துறையிலயும் நாம இருக்கிறதால டைரக்‌ஷன் ஒருத்தரு, பாட்டு ஒருத்தரு, மீஜிக் ஒருத்தரு, திரைக்கதை, நடிப்புன்னு நாமளே எடுத்தா

அது சரி: நாமளே பார்த்து மகா கழிசடைன்னு இடுகை போடலாம்:O)))

பழமை: இதும் நல்ல ஆலோசனையாத்தானுங்க தெரியுது. பண்ணலாமுங்க.

குடுகுடுப்பை:சரி முதல்ல ஹீரோ!

நசரேயன்: கையில வெண்ணெய வெச்சிக்கிட்டு நெய்க்கு என்ன யோசனைன்னேன். அதான் நான் இருக்கம்லா?

(அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்)

நசரேயன்: (கடுப்பாகி) நான் இந்த ஆட்டைக்கு வரலை. ஏன் எல்லாரும் இப்படி சிரிக்கணும்?

முகிலன்:ஹிஹ்ஹீஈஈஈ. முடியல..கருப்பு கருப்புன்னு சொல்லிகிட்டு வெண்ணைன்னு சொல்றத கேட்டு சிரிக்கிறதா இல்ல தன்னையே வெண்ணெய்னு சொல்லிக்கிறீங்கன்னு சிரிக்கிறதா.

பழமை: சே! பாவம்யா. நாமளே ஒரு சக பதிவருக்கு உதவலைன்னா எப்படி. நசரேயந்தான் ஹீரோ.

நசரேயன்: (நா தழுதழுக்க) நல்லாருங்க அண்ணாச்சி..அவ்வ்வ்வ்வ்வ்...

குடுகுடுப்பை:(குணசித்திர நடிகராம். என்னமா சீன் போடுராரு பாரு) சரி சரி. அப்புறம் மேக்கொண்டு..

நசரேயன்: அல்லோ. நாந்தான் ஹீரோ! கண்டிசன கேட்டுக்கிடுங்க. ஈரோயினி ஒரு வடக்கச்சியாதான் இருக்கணும். அதே லால்பாக்ல நான் குடுக்கிற ரோஜாப்பூவ தலையில வெச்சிகிட்டு மரத்த சுத்தி சுத்தி டூயட் பாடணும். வடக்கச்சி சம்பளம் வேணும்னாலும் நான் ஒரு விட்ஜெட் எழுதி சம்பாதிச்சி தாரன்.

குடுகுடுப்பை:திரைக்கதை?

முகிலன்: இப்ப லஞ்ச் டைம் வந்துட்டுது. தலைவரே! சாப்பாட்டுக்கு என்ன அரேஞ்மெண்ட்?

குடுகுடுப்பை: இப்புடி வேற ஆட்டைய போடுவீங்கன்னு தெரிஞ்சிதான் நான் நேத்து ரைஸ், மீன் கொழம்பு கொண்டுவந்துட்டேன். அவங்கவுங்க பார்த்துக்க வேண்டியதுதான். இந்த பழமை பக்கத்துல உக்காந்ததுல இருந்து பறவை வாசனை வேற பசிய தூக்குது.

(டிஸ்கி: எல்லாரும் கலைந்து போகிறார்கள். நிஜம்மா மொத்தம் எழுதிட்டேன். நீளம் காரணமாதான் ப்ரேக். கண்டிப்பா நாளைக்கு முடிச்சிடுவேன்.ஹி ஹி)

81 comments:

ஈரோடு கதிர் said...

அடடா....அடடா... சிங்கம் களமிறங்கிடுச்சே...

படிச்சிட்டு அப்பாலிக்கா வர்ரேன்... மக்களே கும்மிக்கு ரெடியாகுங்கோ

நசரேயன் said...

ஓடிய ... ஓடியா .. சீக்கிரம் ஓடியா மாநாடு நடக்குது

எறும்பு said...

:))

அண்ணாமலையான் said...

ம்ம் நடக்கட்டும்....

அக்பர் said...

ஓட்டு மட்டும் இன்னைக்கு.. அப்பால படிக்கறேன் :)

ஈரோடு கதிர் said...

//குடுகுடுப்பை: சைலேன்ஸ்! கூட்டம் ஆரம்பிக்கப் போறேன்!
//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா... எப்போ ஆரம்பிக்கப் போறிங்க

க.பாலாசி said...

//வானம்பாடி: நான் தூங்கல தூங்கல. முடி பறக்குதுன்னு எழுதி தொங்கவிட்டுக்கிட்டு தானே உக்காந்திருக்கேன்.//

முடியென்ற மாயத்தோற்றத்தை மாணவர் அணித்தலைவர் உண்டாக்குவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஈரோடு கதிர் said...

//இனி நீங்க படப்போறதுதான் பெரும்பாடு.//

அட்ரா சக்கை.... செம நக்கலு

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...
முடியென்ற மாயத்தோற்றத்தை மாணவர் அணித்தலைவர்//

முதிய மாணவர்கள் அணித்தலைவர்னு சொல்லுப்பா

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

// முதிய மாணவர்கள் அணித்தலைவர்னு சொல்லுப்பா//

தோடா:-l

க.பாலாசி said...

//கண்டிப்பா நாளைக்கு முடிச்சிடுவேன்.ஹி ஹி)//

இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.

ராஜ நடராஜன் said...

ஜக்கம்மா கட்சி எத்தனை வருச பாரம் பரிய கட்சி.அது கூடயெல்லாம் போட்டி போட்டுகிட்டு பட்டாபட்டின்னு ஒரு புதுக் கட்சி உருவாகியிருக்குது.கட்சில என்னமோ மூணு பேருதான்.ஆனா அடிச்சு ஆடறதப் பார்த்தா திண்ண காலியாகும் போது நாற்காலிய புடிச்சிடுவாங்க போல இருக்குது.பார்த்து சூதானமா இருக்க சொல்லுங்க குடுகுடுப்பையார.

ராஜ நடராஜன் said...

//ஓடிய ... ஓடியா .. சீக்கிரம் ஓடியா மாநாடு நடக்குது//

ம்க்கும்!கும்முறதுக்குத்தான் கூட்டத்த காணோம்.

ராஜ நடராஜன் said...

மாநாடு ஏன் காத்து வாங்குதுன்னு இப்பத்தானே புரியுது.எறும்பையெல்லாம் கும்மறதுக்கு கூப்பிட்டா:)

க.பாலாசி said...

//நசரேயன் said...
ஓடிய ... ஓடியா .. சீக்கிரம் ஓடியா மாநாடு நடக்குது//

மாநாடு நடக்குதா????? அப்ப இவரு எந்த கட்சி...?????

ராஜ நடராஜன் said...

//(அது சரின்னு பேர வெச்சிகிட்டு எது பண்ணாலும் தப்புன்னே சொல்லிக்கிட்டிருக்காரே. கேப்பாரே இல்லையா ஜக்கம்மாஆஆஆ)//

அதுசரி:)

ராஜ நடராஜன் said...

//இந்தாள சமாளிக்கவே கோழி செரிச்சி போச்சி//

முதல்வருக்கு புடிச்சதெல்லாம் மீனும்,நண்டும்தான்.இதக்கூட தெரியாம மாநாடு நடத்தி....முதல்வர திருப்தி படுத்தி...போஸ்ட் வாங்குன மாதிரித்தா.

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. சும்மா சகட்டுமேனிக்கு கலக்குறீங்களே சார். சிரிச்சி சிரிச்சு முடியலை.

S.A. நவாஸுதீன் said...

////////முகிலன்:ஹிஹ்ஹீஈஈஈ. முடியல..கருப்பு கருப்புன்னு சொல்லிகிட்டு வெண்ணைன்னு சொல்றத கேட்டு சிரிக்கிறதா இல்ல தன்னையே வெண்ணெய்னு சொல்லிக்கிறீங்கன்னு சிரிக்கிறதா. //////////

ஒரே ஆள் எல்லாருமாதிரியும் யோசிக்கிறது.ஊஊஊஊஊஊஊ. கலக்குங்க சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

ராஜ நடராஜன் said...

//கையில வெண்ணெய வெச்சிக்கிட்டு நெய்க்கு என்ன யோசனைன்னேன். அதான் நான் இருக்கம்லா?//

கதவசனமெல்லாம் நல்லாத்தானுங்கண்ணா எழுதுறீங்க!ஆனா டான்ஸப் பத்தி இதுவரைக்கும் ஒரு வரி கூட கண்ணுல படுலீங்கண்ணா.அதனால காதலா!காதலி டெலிகம்யூனிகேசன் துறை வேணுமுன்னா சிபாரிசு செய்யாலமுன்னு....

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//நீளம் காரணமாதான் ப்ரேக். கண்டிப்பா நாளைக்கு முடிச்சிடுவேன்.ஹி ஹி//


நாளைக்குமா?? ப்ப்பா... செம நக்கலு!!

ஜெரி ஈசானந்தா. said...

துட்டு தாரேன்,எனக்கு ஒன்னு கொடுங்கப்பு.

ராஜ நடராஜன் said...

//திரைக்கதை?//

நசரேயன் பாக்கியராஜ் பரம்பரையாக்கும்.

ஈரோ,திரைக்கதை,வசனம்,டெலிபோன் மீஜிக் எல்லாம் அவருதே.

ராஜ நடராஜன் said...

என்ன மாநாடு முடிஞ்சிடுச்சா!

கலெக்சன் எவ்வளவு ஆச்சுங்க?

துபாய் ராஜா said...

அதகளம் ஆரம்பம். :))

Subankan said...

நடக்கட்டும், நடக்கட்டும் :))

முகிலன் said...

கும்மி முடிஞ்சிருச்சா??? அதுக்குள்ளயா?

நான் இன்னும் சாப்புடவே ஆரம்பிக்கலையே???

முகிலன் said...

////வானம்பாடி: நான் தூங்கல தூங்கல. முடி பறக்குதுன்னு எழுதி தொங்கவிட்டுக்கிட்டு தானே உக்காந்திருக்கேன்.//

முடியென்ற மாயத்தோற்றத்தை மாணவர் அணித்தலைவர் உண்டாக்குவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
//

ஏய் யாரப்பா இங்க.. எங்க மாணவரணித்தலைவர் மேல மானாங்கனியா கண்டனம் தெரிவிக்கிறது?? ஆட்டோ வந்துரும் ஆமா...

Mrs.Menagasathia said...

கும்மி சூப்பர்ர்ர்..

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ணே! அப்பறம் வந்து படிச்சிக்கிறேன். புக்மார்க்கிட்டேன். ஒரு அவசர வேலை

இப்படிக்கு நிஜாம்.., said...

என்னங்கப்பா இது மைனஸ் ஓட்டு போடுறவங்கயெல்லாம் எங்கப்பா போயிட்டீங்க? அண்ணனுக்கு திருஷ்டி பட்டிடாது..

வில்லன் said...

/குடுகுடுப்பை: கட்சித்தலைவர் வரும்போது எழுந்து நிற்காமல், வணக்கமும் சொல்லாமல் இருப்பதுதான் பண்பாடா?//

நாய் பத்திர ஊழல் பண்ணினவருக்கு மரியாதையை ஒரு கேடா?

வில்லன் said...

// நசரேயன் said...


ஓடிய ... ஓடியா .. சீக்கிரம் ஓடியா மாநாடு நடக்குது//
யோவ் நீதான்யா மகளிர் அணி (கள்ளகாதல் அணி) செயலாளர்... நீரே ஓடியா ஓடியா அப்படின்னா எங்குட்டு போறது????

வில்லன் said...

/அப்துல்லா:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். எனக்கு சிறுவர் அணி தலைவர் பதவி வேணூஊஊஊம்.

குடுகுடுப்பை: குடுத்தாச்சி குடுத்தாச்சி. தோ! அந்த ஓரம் சொப்பு சாமான்லாம் இருக்கு பாரு குழந்தை. அங்க போய் சமர்த்தா விளையாடிக்க கண்ணு! ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா..//

இது ரொம்ப ஓவருப்பா...... சிறுவர் அணி தலைவர் சொப்பு சாமான்லாம் வச்சு விளையாட மட்டும்தானா???? கட்சியின் எந்த முடிவும் எடுக்க சேத்துக்க மாட்டிங்களா???????

வில்லன் said...

/ஏ! மூணாவது வீட்டில ஒரு வெள்ளச்சிக்கு துண்டு போடுறம்லா? இந்தா வந்துட்டேன்.//

எங்க போனாலும் ஒரு பத்து பதினஞ்சு துண்ட கைல எடுத்துட்டு தான போவோம்..

V.Radhakrishnan said...

ஹா ஹா ! நல்லாவே ட்ராக் எழுதறீங்க.

ச.செந்தில்வேலன் said...

முடியல..உங்க அலும்பு..

உண்மையிலேயே காமெடி ஸ்கிரிப்ட் எழுதலாம் நீங்க.. கலக்கறீங்க..

வில்லன் said...

/குடுகுடுப்பை: பழமை! தெரியாம கேக்கறேன். எம்.ஜி.ஆர். கலர்ல இருக்கீரு. தொப்பியும் போட்டிருக்கீரு. அதுக்காக அடுத்த முதல்வரா உங்களை ஆக்கிட்டு கட்சித்தலைவர்னு நான் எதுக்கு? முதல்ல கட்சிய பலப்படுத்தணும். முதல்வர்னா திரைப்படத்துறையில சம்பந்தமிருக்கணும். இல்லைன்னா போணியாகாது. அதுக்கு வழிய பார்ப்பம் வாங்க. ஒரு படம் எடுப்போம்.//

படம் எடுத்தா படத்துல வில்லன் நான்தானப்பா?????.... கூட்டம் அது இதுன்னு போட்டு அத மாத்திறாதிங்க!!!!!!!!! மாத்தினிங்க கொலை விழும்.... அருவா பேசும்....

குடுகுடுப்பை said...

ஒரு சிறு விளக்கம், தி.கு.ஜ.மு.க பொருளாளர் பதவி ஏற்பவர்கள்தான் கட்சிக்கான அனைத்து செலவுகளையும் ஏற்கவேண்டும் எனக்குத்தேவையான மீன் சாப்பாடு உட்பட.

குடுகுடுப்பை said...

வில்லன் என்று இங்கே பின்னூட்டமிடுபவர் ஒரு சோப்ளாங்கி அதற்கான காரணத்தை விரைவில் ஒரு பதிவில் இடுகிறேன்.

குடுகுடுப்பை said...

மாணவரணித்தலைவர் , முகம் முழுவதும் பவுடர் பூசி , உதட்டுச்சாயம் பூசவும், பொருளாளர் வில்லன், அல்லது கும்க்கி காசு தருவார்கள்.ஈரோடு கதிர் கூட காசு பார்ட்டியாட்டம் இருக்காரு அவரையே பொருளாளர் ஆக்கிருவோம்.

குடுகுடுப்பை said...

அது சரி
Gender: Male
Astrological Sign: Taurus
Industry: Law
Occupation: சீஃப் அட்வகேட், Devil's Inc.
Location: Newport : South Wales : United Kingdom
About Me , அதுசரிக்கு தகுதி அடிப்படையில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு கதிர் said...

//குடுகுடுப்பை Says:
ஈரோடு கதிர் கூட காசு பார்ட்டியாட்டம் இருக்காரு அவரையே பொருளாளர் ஆக்கிருவோம்.
//

அண்ணே...அண்ணே... பொருளாளர் பதவி கொடுங்கண்ணே....

நானும் வசூல் பண்ணிப்பார்க்கிறேன்... கொஞ்சம் சில்லறை தேவைப்படுது

வில்லன் said...

/ஈரோயினி ஒரு வடக்கச்சியாதான் இருக்கணும். அதே லால்பாக்ல நான் குடுக்கிற ரோஜாப்பூவ தலையில வெச்சிகிட்டு மரத்த சுத்தி சுத்தி டூயட் பாடணும். வடக்கச்சி சம்பளம் வேணும்னாலும் நான் ஒரு விட்ஜெட் எழுதி சம்பாதிச்சி தாரன்.//
ஹய் ஜாலி...... கண்டிப்பா ஒரு rape சீன் உண்டுல்லா எனக்கு....ஏன்னா நான் தான வில்லன் பா........ இல்லன்னாலும் எனக்காக படத்துல சேத்துருங்க மறந்துறாம......

குடுகுடுப்பை said...

வருங்கால முதல்வர் வலைத்தளம் விரைவில் ரம்யாவிடம் கையளிக்கப்பட உள்ளது. அதனால் அவர்தான் இனி வருங்கால முதல்வர்.

குடுகுடுப்பை said...

மகளிர் அணி பற்றிய சிறு விளக்கம் , என குடும்ப மகளிர் மட்டுமே என் கட்சியில் ஆளுமை செலுத்தமுடியும்.அதனால அதற்கென தனி அணி கிடையாது.

முகிலன் said...

//ஈரோடு கதிர்
February 3, 2010 11:32 PM
//குடுகுடுப்பை Says:
ஈரோடு கதிர் கூட காசு பார்ட்டியாட்டம் இருக்காரு அவரையே பொருளாளர் ஆக்கிருவோம்.
//

அண்ணே...அண்ணே... பொருளாளர் பதவி கொடுங்கண்ணே....

நானும் வசூல் பண்ணிப்பார்க்கிறேன்... கொஞ்சம் சில்லறை தேவைப்படுது
//

புதுப் பதவிகளை பொதுக்குழுக்கூட்டாமல் முடிவு செய்யக் கூடாது...

முகிலன் said...

// குடுகுடுப்பை said...
வருங்கால முதல்வர் வலைத்தளம் விரைவில் ரம்யாவிடம் கையளிக்கப்பட உள்ளது. அதனால் அவர்தான் இனி வருங்கால முதல்வர்.
//

வருங்கால முதல்வர் ரம்யா வாழ்க வாழ்க.

நியூயார்க் கவர்னர் பதவி போதுமயா நமக்கு..

முகிலன் said...

// குடுகுடுப்பை said...
மகளிர் அணி பற்றிய சிறு விளக்கம் , என குடும்ப மகளிர் மட்டுமே என் கட்சியில் ஆளுமை செலுத்தமுடியும்.அதனால அதற்கென தனி அணி கிடையாது.
//

இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அப்புறம் எங்கள் குடும்ப மகளிர் எல்லாம் சம்பாதிப்பது எப்படி?

கலகலப்ரியா said...

இது என்ன புதுக் குழப்பம்... அப்போ ஜக்கம்மா நான் இல்லியா...? ஜக்கம்மா இல்லைனாலும் ஜக்கம்மாக்கு நாத்தனாரா ஆவது இருந்துட்டு போறேனே... குடும்பத்தில... அட ச்சே... ஐ மீன்... கட்சில சேர்த்துக்குங்.... இல்ல சேர்ந்துட்டோம்ல... "அது சரி"... கொஞ்சம் பார்த்து ரெகமென்ட் பண்ணு சாமி...

நசரேயன் said...

//குடுகுடுப்பை
February 3, 2010 11:26 PM
ஒரு சிறு விளக்கம், தி.கு.ஜ.மு.க பொருளாளர் பதவி ஏற்பவர்கள்தான் கட்சிக்கான அனைத்து செலவுகளையும் ஏற்கவேண்டும் எனக்குத்தேவையான மீன் சாப்பாடு உட்பட//

இதை சாக்கா வச்சே நான் ஒரு இடுகை போடுறேன்

Chitra said...

சரிதான். யாரு யாரு கலக்குறாங்க னு பாப்போம். ஹா, ஹா, ஹா......!

அது சரி said...

//
குடுகுடுப்பை:ஓஒ. சரி சரி. நிதித்துறைத் தலைவரும் நீர்தான்யா. போதுமா? (இனிமே கருப்புப் பணம் கூட கோழி, காடைன்னு வாங்கித்தான் தேத்தணும்)
//

அந்த கருப்பு பணமும் பைசா சுத்தமா கட்சி சட்டத்துறை தலைவர்கிட்ட ஒப்படைக்கணும்!

அது சரி said...

மாநாடு நடக்கறதெல்லாம் சரி, ஆனா நாய் பத்திர ஊழல், சிக்கன் பிரியாணின்னு புளிசாதம் வழங்கிய ஊழல், கார் இடிச்சதா இன்சூரன்ஸ் ஊழல் இப்படி ஊழலின் மொத்த உருவமா இருக்கற‌ குடுகுடுப்பையாரையும் ஜக்கம்மாவையும் கட்சிலருந்து நிரந்தரமா நீக்கணும்...

சோழர்களுக்காக ஆரம்பிச்ச கட்சில ஊடுருவிய பாண்டியர்கள் முகிலனும், வில்லனும் இனி எந்த மாநாட்டிலும் கலந்து கொள்ளக் கூடாது...

சிறுவர் அணி அப்துல்லா நல்லாவே பாடுவாரு...கட்சி கொள்கை விளக்க பாடலை அவர் ஒடனே பாடணும்...கொள்கை ஏதுமில்லைங்கிறது தான் கொள்கை...நானே பாட்டு எழுதறேன்...

கொள்கை இல்ல, கொள்ளை இல்ல‌
நொள்ளை சொல்ல நேரமில்ல‌
குடுகுடுப்பை இல்ல ஜக்கம்மா இல்ல‌
அதனால இல்ல தொல்ல தொல்ல..
இதுக்கு மேல என்ன சொல்ல என்ன சொல்ல...

இது பல்லவி...சரணம் கட்சி காசு தந்தா அப்புறம்...

அது சரி said...

//
நசரேயன்: ஏ! மூணாவது வீட்டில ஒரு வெள்ளச்சிக்கு துண்டு போடுறம்லா? இந்தா வந்துட்டேன்.
//

கட்சித் துண்டா அது?? இன்னொரு தடவை இப்படி செஞ்சா, நசரேயன், உங்க மேல ஒழுங்கு நடவடிக்கையை தவிர்க்க முடியாது!

குடுகுடுப்பை said...

மாநாடு நடக்கறதெல்லாம் சரி, ஆனா நாய் பத்திர ஊழல், சிக்கன் பிரியாணின்னு புளிசாதம் வழங்கிய ஊழல், கார் இடிச்சதா இன்சூரன்ஸ் ஊழல் இப்படி ஊழலின் மொத்த உருவமா இருக்கற‌ குடுகுடுப்பையாரையும் ஜக்கம்மாவையும் கட்சிலருந்து நிரந்தரமா நீக்கணும்...

சோழர்களுக்காக ஆரம்பிச்ச கட்சில ஊடுருவிய பாண்டியர்கள் முகிலனும், வில்லனும் இனி எந்த மாநாட்டிலும் கலந்து கொள்ளக் கூடாது...//

பாண்டிய நாட்டுத்தலைவர்களே சோழர்கள்தான் அது கூட இந்த பாண்டியர்களுக்கு தெரியாது.

அது சரி said...

//
குடுகுடுப்பை

பாண்டிய நாட்டுத்தலைவர்களே சோழர்கள்தான் அது கூட இந்த பாண்டியர்களுக்கு தெரியாது.
//

அதைத் தான் நானுஞ் சொல்றேன்...சரித்திரமே தெரியாதவங்களை எல்லாம் யாரு மாநாட்டுக்கு கூப்ட்டது??

குடுகுடுப்பை said...

ஒன்னு மட்டும் தெரியுது, தி.கு.ஜ.மு.க விஜய ராஜேந்திரசோழரின் கட்சியை விட பெரியது என்று கும்மியின் மூலம் அறியமுடிகிறது.

குடுகுடுப்பை said...

அது சரி said...
//
குடுகுடுப்பை

பாண்டிய நாட்டுத்தலைவர்களே சோழர்கள்தான் அது கூட இந்த பாண்டியர்களுக்கு தெரியாது.
//

அதைத் தான் நானுஞ் சொல்றேன்...சரித்திரமே தெரியாதவங்களை எல்லாம் யாரு மாநாட்டுக்கு கூப்ட்டது??

மாணவரனித்தலைவர், விபரம் தெரியாமல் அழைத்துவிட்டார் என்று தோன்றுகிறது.எப்படியிருப்பினும் பொதுச்செயலாளரின் முடிவே இறுதியானது. ஜக்கம்மா சொல்ற இடத்தில கையெழுத்து போடுற அதிகாரம் மட்டுமே படைத்த குடுகுடுப்பை இதை உறுதியாக கூறுகிறேன்.

குடுகுடுப்பை said...

அது சரி
February 4, 2010 2:31 AM
//
நசரேயன்: ஏ! மூணாவது வீட்டில ஒரு வெள்ளச்சிக்கு துண்டு போடுறம்லா? இந்தா வந்துட்டேன்.
//

கள்ளக்காதல் அணித்தலைவர் கடமையை ஒழுங்காக செய்கிறார்

பழமைபேசி said...

//குடுகுடுப்பை Says:
February 3, 2010 11:33 PM

வருங்கால முதல்வர் வலைத்தளம் விரைவில் ரம்யாவிடம் கையளிக்கப்பட உள்ளது. அதனால் அவர்தான் இனி வருங்கால முதல்வர்.
//

வடை போச்சே!

புலவன் புலிகேசி said...

//நசரேயன்: கையில வெண்ணெய வெச்சிக்கிட்டு நெய்க்கு என்ன யோசனைன்னேன். அதான் நான் இருக்கம்லா?

(அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்)//

நானுந்தேன் சிரிச்சி புட்டேன்.

Balavasakan said...

என்ன கொடுமை சேர் இது???

சூப்பரோ சூப்பர்..

முகிலன் said...

//கொள்கை இல்ல, கொள்ளை இல்ல‌
நொள்ளை சொல்ல நேரமில்ல‌
குடுகுடுப்பை இல்ல ஜக்கம்மா இல்ல‌
அதனால இல்ல தொல்ல தொல்ல..
இதுக்கு மேல என்ன சொல்ல என்ன சொல்ல...

இது பல்லவி...சரணம் கட்சி காசு தந்தா //

இலக்கிய அணித் தலைவரின் அனுமதி இல்லாமல் பாட்டு எழுதிய சட்ட அணித்தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும்.

இந்தப் பாடல் செல்லாது செல்லாது..

யக்கா, கலகலப்ரியாக்கா நீ ஒரு பாட்டு எழுதுக்கா.. ஒரு பயலுக்கும் பிரியக்கூடாது.. என்ன செய்யறாய்ங்கன்னு பாத்துப்புடுவோம்..

மோகன் குமார் said...

சார் பதிவு கலக்கல்ன்னா கும்மி அதை விட கலக்கலா போகுதே

thenammailakshmanan said...

//அது சரி: ம்கும். இதக்கூட சொந்தமா சொன்னா செலவாயிரும்//

இப்படியெல்லாம் சட்டு சட்டுன்னு கலாய்க்குறது உங்களுக்கே கைவந்த கலை வானம்பாடி

முகிலன் said...

//குடுகுடுப்பை
February 4, 2010 2:47 AM
அது சரி said...
//
குடுகுடுப்பை

பாண்டிய நாட்டுத்தலைவர்களே சோழர்கள்தான் அது கூட இந்த பாண்டியர்களுக்கு தெரியாது.
//

அதைத் தான் நானுஞ் சொல்றேன்...சரித்திரமே தெரியாதவங்களை எல்லாம் யாரு மாநாட்டுக்கு கூப்ட்டது??

மாணவரனித்தலைவர், விபரம் தெரியாமல் அழைத்துவிட்டார் என்று தோன்றுகிறது.எப்படியிருப்பினும் பொதுச்செயலாளரின் முடிவே இறுதியானது. ஜக்கம்மா சொல்ற இடத்தில கையெழுத்து போடுற அதிகாரம் மட்டுமே படைத்த குடுகுடுப்பை இதை உறுதியாக கூறுகிறேன்.
//

அடுத்த கூட்டத்துல தீர்மானம் போட்டு பொதுச்செயலாளர் பதவிய விட்டுத் தூக்கிடுவோம் ஆமா...

வானம்பாடிகள் said...

/ நசரேயன் said...

ஓடிய ... ஓடியா .. சீக்கிரம் ஓடியா மாநாடு நடக்குது/

அட ஹீரோவே இவருதானே.:))

முகிலன் said...

அய்யா சோழ/பாண்டியர்களே,

நாம பாண்டியர்களும் சோழர்களும் சண்டை போட்டுக்கிட்டே இருந்தா அப்புறம் பல்லவர்களும் (வானம்பாடி) சேரர்களும்(ஈரோடு கதிர், பழமை பேசி) வந்து கட்சியைக் கைப்பத்திரப் போறாங்க..

என்ன இருந்தாலும் நாம மாமன் மச்சான் இல்லையா?

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

அடடா....அடடா... சிங்கம் களமிறங்கிடுச்சே...//

இப்புடியே ஏத்திவிட்டு ஏத்திவுட்டுதானே இந்தக் கொடுமை. இருடி..:))

வானம்பாடிகள் said...

அண்ணாமலையான் said...

ம்ம் நடக்கட்டும்....//

வாங்க

வானம்பாடிகள் said...

அக்பர் said...

ஓட்டு மட்டும் இன்னைக்கு.. அப்பால படிக்கறேன் :)//

இது எங்க எளக்கிய அணித்தலைவரே சொல்லிட்டாரே

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா... எப்போ ஆரம்பிக்கப் போறிங்க//

அது ஜக்கம்மா சொல்றப்போ.

/முதிய மாணவர்கள் அணித்தலைவர்னு சொல்லுப்பா//

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

/அண்ணே...அண்ணே... பொருளாளர் பதவி கொடுங்கண்ணே....

நானும் வசூல் பண்ணிப்பார்க்கிறேன்... கொஞ்சம் சில்லறை தேவைப்படுது/

இந்தக் கட்சில சில்லறை போட்டவங்களுக்குத்தான் அந்தப் பதவின்னு ஜக்கம்மா சொல்றா

வானம்பாடிகள் said...

எறும்பு said...

:))//

:))

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

/முடியென்ற மாயத்தோற்றத்தை மாணவர் அணித்தலைவர் உண்டாக்குவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.//

குழந்தைப் படத்தைப் போட்டு கிழவன்போல் பேசும் மாயத்தின் ரகசியத்தை விளக்கத் தயாரா?

பேநா மூடி said...

மாநாடு முடிஞ்சுட்டு எப்போ பிரியாணி குடுப்பிங்கோ...

பித்தனின் வாக்கு said...

:))

ஸ்ரீநி said...

ஆலோ
இங்கெல்லாம் கூட்டம் நடத்தக் கூடாது.
கூட்டம் நடத்த PERMISSIONஇருக்க ??
இந்தப் பக்கம் DCயோட POMERANIANநாய் வாக்கிங் வர்ற நேரம்; பிரச்சன பண்ணாம கெளம்புங்க ப்ளீஸ்

ஆரூரன் விசுவநாதன் said...

கலக்கல் பதிவு.......

பா.ராஜாராம் said...

:-)))))))

இளமையான எழுத்து பாலா சார்!சிரிச்சு முடியலை.