Saturday, January 16, 2010

ஆயிரத்தில் ஒருவன், நாணயம்--விமரிசனம்(இல்லை)

(பல) ஆயிரத்தில் ஒருவன்

அல்லோ. கோவிச்சிக்காதிங்க சார். இது சினிமா விமரிசனம் இல்லை. ஆனா அத விட த்ரில்லிங்கான கதை. இல்லன்னா வருஷா வருஷம் ரிலீஸ் ஆகியும் கொஞ்சம் கூட தொய்வில்லாம கலக்‌ஷன் கட்டுமா?

இதுவும் 3 வருஷம் தயாரிப்பில இருந்து பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கும் படம்தான். ரொம்ப சில பேருக்கு குறும்படம் மாதிரி பட்ஜட்ட விட கம்மியா முடிஞ்சிடும்.  பல பேருக்கு இது பட்ஜெட்டெல்லாம் கடந்து கிட்டதட்ட இருக்கிறதெல்லாம் தொலைச்சும் கடனாளியாக்கி விட்டுடும்.

கதைன்னு எடுத்துண்டா அரைச்ச மாவுதான். ஆனா எந்த ஆங்கிலப் படத்துலயும் இந்த மாதிரி காட்சி வந்திருக்காதுங்கறதால தழுவலா, காப்பியான்னு சந்தேகமே இல்லாம நூறு சதம் சுத்தமான தமிழ்ப் படம். தொழிற் கல்விங்கற பசங்களோட குல தெய்வத்த தனியார் கல்லூரி கடத்திட்டு போய்டுறாங்க. அரசாங்கம் ரெண்டு பக்கத்துக்கும் நட்பா இருந்து டென்ஷன கூட்டுறதால விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

பெத்தவங்க என்னல்லாம் தில்லாலங்கிடி வேல பண்ணி அந்த குலதெய்வத்த மீட்டுக் குடுக்கறாங்கங்கறதுதான் கதை. அரைப்பரீட்சை வரைக்கும் பர பரன்னு போய்ட்டிருக்கிற படம், அப்புறம் கேபிள் கட், சினிமா நாட் அலவ்ட், படி படின்னு டார்ச்சர், கம்பேரிசன், எண்ட்ரன்ஸ் டெஸ்ட் இருக்கா இல்லையான்னு பல குழப்பங்களில் சிக்கி அலுப்பு தட்ட வைக்கும்.

அட்டு ஃபிகர்னு ஓரம் கட்டின பொண்ணும், சடைன்னு கண்டுக்காம விட்ட பையனும் பேய் மாதிரி படிச்சி 70 மார்க்ல இருந்து 90னு தாவி டரியலாக்கி கவுக்கிற காட்சி மெய் சிலிர்க்கும். ஊத்திகிட்டா வம்புன்னு முன்னெச்சரிக்கையா டொனேஷன் குடுத்து சீட் வாங்கின அப்பாக்கள நல்ல மார்க் எடுத்து கவுக்கறதும், கண்டிப்பா 95 வரும்னு நம்பி இருக்கிற அப்பாங்கள 80-85 எடுத்து இன்னும் கடனாளியாக்கி சீட்டுக்கு அலைய விடுற எதிர் பாராத திருப்பங்கள் சீட் நுனிக்கு கொண்டு வரும்.

எக்ஸாம் நெருங்கி வர சமயத்துல பொறுப்பா படிக்கிறது பத்தி அப்பா அம்மாக்கள் பேசுற பாஷை புரியாம பசங்க மட்டுமல்ல அந்த வயசு பசங்க இல்லாத பெற்றோர்களும் அரைப் பைத்தியமா நெளியறது மைனஸ்.

ஒரு வழியா அட்மிஷன் வாங்கி கதை முடியற நேரத்துல கேம்பஸ் இண்டர்வ்யூல வேலை கிடைக்குமா கிடைக்காதாங்கற கேள்விக் குறியோட முடிக்கிறது அடுத்த பாகம் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கும்.

மொத்தத்துல எப்படியும் கல்லாக் கட்டுறாங்க காலேஜ் நிர்வாகம் என்பது தெரிஞ்ச விஷயங்கறதால, அரசே எவ்வளவுன்னு சொல்லிட்டா பட்ஜட் எகிறும்னு திகில் இல்லாம இருக்கலாம். அரசு ஒரு தீர்மானம் இல்லாம குழம்பியிருக்கிறது நல்லாவே தெரியுது.
~~~~~~~~~~~~~~~~~~~

நாணயம்

  பையனோ பொண்ணோ ஆறாம்பு போனதுமே ஐ.ஐ.டி. கனவில சகலமும் துறந்து படிப்பு படிப்புன்னு சாவுறவங்க அப்பா அம்மா. ஒம்பதாம்பு வந்ததும் 2 லட்சம் கட்டி அகர்வால் க்ளாஸ்ல சேர்ந்து கட் அடிச்சி, மொத டெஸ்ட்ல முட்ட மார்க் வாங்கி இதுக்கு மேலயும் ஐ.ஐ.டின்னா ஐ.டி.ஐக்கு கூட போகமாட்டேன்னு பசங்க ப்ளாக் மெயில் ஆரம்பிக்கறப்ப படம் சூடு பிடிக்கும்.

அய்யா அம்மான்னு கெஞ்சி ஆல் இந்தியா ட்ரிப்பிள் ஈயாவதுன்னு இறங்கி வந்து அங்கயும் தொங்கல்ல விடுற டென்ஷன் ஒரு பக்கம், ஹாஸ்டல்ல விட்டா கெட்டு போயிடும், என்னால பிரிஞ்சி இருக்க முடியாதுன்னு தங்கமணி செண்டிமெண்ட்னு  திருப்பங்களுக்கு பஞ்சமே இல்லை.

அதுவும் கடைசியில எவனோ ஒரு போக்கத்த பய சிங்கிள் விண்டோ சிஸ்டம் வேணும்னு கேஸ் போட்டு அரசு ஒரு பக்கம் ஆதரவாகவும், மறு பக்கம் தனியார் கல்லூரிக்கு ஆதரவாகவும் அறிக்கை விட்டதும் அடுத்தது என்னன்னு பதற வைக்கும்.

படி படின்னு உசிரெடுக்கிற அம்மா அப்பா கிட்ட, இது புரியலைன்னு கால்குலஸ் கணக்க நீட்ட, அவங்க இதெல்லாம் நாங்க படிக்கிறப்போ கண்டு பிடிக்கவே இல்லைன்னு சொல்லி சமாளிக்கிற சீன்ல அதிரும். கடைசியில 100 கி.மீ தூரத்தில இருக்கிற காலேஜ்ல கம்ப்யூட்டர் எஞ்ஜினீரிங் சீட் வாங்கிட்டு வரும்போது கடை போட்டிருக்கிற கம்ப்யூட்டர்காரன்  100ரூ கட்டினா லேப்டாப், மாசம் 3000ரூ 20 மாசம் கட்டினா போதும்னு பிட்ட போட, அது இல்லைன்னா எப்படி படிக்கிறதுன்னு பசங்க மிரட்ட, விதியேன்னு கடன் பத்திரத்துல கையெழுத்து போட்டு தளர்ந்து நடந்து வர காட்சியில விசும்பல் சத்தம் கேக்க முடியுது.

குறைன்னா, ஆஃபீஸுக்கு லீவ் போட்டு அம்மாக்காரி ஹெல்ப் பண்றேன்னு முட்ட முட்ட சாப்பாடு போட்டு தூங்க விடாம படின்னு சொல்றது, கேபிள் கட் பண்றது, நண்பர்கள் கூட பேச விடாம தடுக்கிறது, மத்த பசங்க எவ்ளோ மார்க்குன்னு சாவடிக்கறதெல்லாம் படத்தின் விறுவிறுப்புக்கு தடை. மொத்தத்தில் நாணயம் செல்லணும். செல்லலைன்னா கடன் வாங்கியாவது செல்ல வைக்கணும்.

__/\__

74 comments:

பிரபாகர் said...

அய்யா இடுகையில சினிமாவான்னு நினைக்கும்போதே பிரக்கெட்ல இல்லைன்னு சொல்லியிருக்கிறது தெரிஞ்சாலும் இருக்குமான்னு ஆர்வமா படிச்சி டரியலாயிட்டேன்... என்னமா கலக்கியிருக்கீங்க!

நாணயமில்லாம கல்விங்கற பேர்ல பண்றத ஆயிரத்தில் ஒருவனா இல்லாம தனியாளா உங்க பாணியில கலக்கியிருக்கீங்க...

அருமை அய்யா...

பிரபாகர்.

பிரபாகர் said...

லேப்டாப் சம்மந்தமா நாணயமும் ரொம்ப நல்லாருக்கு. அய்யா ஒரு வேண்டுகோள், இது போல் அப்பப்போ விமர்சனம் எழுதுங்களேன்!

பிரபாகர்.

நிஜாம் கான் said...

அண்ணே! இது நல்லா இருக்கே..., இந்த ரெண்டு படத்துக்கும் புரொடியூசர் ஆரு????

நிஜாம் கான் said...

அண்ண்ணே! இந்த படங்களுக்கும் திருட்டு டிவிடி இருக்கா?

நிஜாம் கான் said...

//ஆயிரத்தில் ஒருவன், நாணயம்--விமரிசனம்(இல்லை)//

அப்பறம் இது என்னாவாம்??

நிஜாம் கான் said...

//அரைப்பரீட்சை வரைக்கும் பர பரன்னு போய்ட்டிருக்கிற படம், அப்புறம் கேபிள் கட், சினிமா நாட் அலவ்ட், படி படின்னு டார்ச்சர், கம்பேரிசன், எண்ட்ரன்ஸ் டெஸ்ட் இருக்கா இல்லையான்னு பல குழப்பங்களில் சிக்கி அலுப்பு தட்ட வைக்கும்.//

லவ்வு,செல்போன் ரீசார்ஜெல்லாம் விட்டுப்போச்சே!

நிஜாம் கான் said...

//மொத்தத்துல எப்படியும் கல்லாக் கட்டுறாங்க காலேஜ் நிர்வாகம் என்பது தெரிஞ்ச விஷயங்கறதால, அரசே எவ்வளவுன்னு சொல்லிட்டா பட்ஜட் எகிரும்னு திகில் இல்லாம இருக்கலாம்.//

தெரிஞ்ச விசயமா இது???

Paleo God said...

மொத்தத்தில் நாணயம் செல்லணும். செல்லலைன்னா கடன் வாங்கியாவது செல்ல வைக்கணும்//

செம பன்ச்..::))

//அய்யா ஒரு வேண்டுகோள், இது போல் அப்பப்போ விமர்சனம் எழுதுங்களேன்!

பிரபாகர்//

அதே..அதே..::))

Rekha raghavan said...

உங்க இரண்டு நகைச்சுவை படங்களையும் (லேப்-டாப்பில்)பார்த்துட்டு சந்தோஷத்துடன்
உறங்கப் போகிறேன்.அடுத்த படம் அறிவிப்பு எப்போங்க?

ரேகா ராகவன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

ஸ்ரீராம். said...

எல்லோரும் படத்தை கேபிள்ல போடுவாங்க...நீங்க ப்ளாக்ல போட்டுட்டீங்க...

ஈரோடு கதிர் said...

அண்ணே.... ரெண்டு படத்திலேயும் கேபிள் கட்டுனு சொல்றீங்களே... நம்ம கேபிள் (சங்கர்) மேலே என்ன அம்புட்டு கோவம்...

ஓ.... அவருதான் இந்த ரெண்டு படத்துக்கும் விமர்சனம் எழுதியிருக்காரா?

டிஸ்கி: அப்பாட ஏதோ நம்மாள முடிஞ்சத பத்த வச்சாச்சு

சங்கர் said...

//ரியலைன்னு கால்குலஸ் கணக்க நீட்ட இதெல்லாம் நாங்க படிக்கிறப்போ கண்டு பிடிக்கவே இல்லைன்னு சொல்லி சமாளிக்கிற சீன்ல அதிரும்//

:)))))))))))

சங்கர் said...

//ஸ்ரீராம். said...

எல்லோரும் படத்தை கேபிள்ல போடுவாங்க.//

விமர்சனம் எழுதினதுக்காக கேபிள போடணும்னு சொல்றது கொஞ்சம் ஓவரு :))

எம்.எம்.அப்துல்லா said...

//..., இந்த ரெண்டு படத்துக்கும் புரொடியூசர் ஆரு????

//

வேற ஆரு!! புள்ளையப் பெத்தவைய்ங்கதான் :)

பா.ராஜாராம் said...

:-)))))))))))

சிரிச்சு முடியலை பாலா சார்!

நாணயமாய் சொல்லணுமுன்னா ஆயிரத்தில் ஒருவன் சார் நீங்க!

பழமைபேசி said...

பாலாண்ணே, நான் இனிதான் உங்க மூன்று மாத இடுகைகளையும் படிக்கணும்....

வெற்றி said...

//ஒரு வழியா அட்மிஷன் வாங்கி கதை முடியற நேரத்துல கேம்பஸ் இண்டர்வ்யூல வேலை கிடைக்குமா கிடைக்காதாங்கற கேள்விக் குறியோட முடிக்கிறது அடுத்த பாகம் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கும்.//

ஹா ஹா ஹா..

வெற்றி said...

//கடைசியில 100 கி.மீ தூரத்தில இருக்கிற காலேஜ்ல கம்ப்யூட்டர் எஞ்ஜினீரிங் சீட் வாங்கிட்டு வரும்போது கடை போட்டிருக்கிற கம்ப்யூட்டர்காரன் 100ரூ கட்டினா லேப்டாப், மாசம் 3000ரூ 20 மாசம் கட்டினா போதும்னு பிட்ட போட, அது இல்லைன்னா எப்படி படிக்கிறதுன்னு பசங்க மிரட்ட//


நான் மிரட்டுனது நினைவிற்கு வருகிறது..:))

வெற்றி said...

ஆனா ஒன்னு..சொந்த அனுபவம் இல்லாம இந்த மாதிரி ஒரு கதை சான்சே இல்லை..:))

vasu balaji said...

பிரபாகர் said...

அய்யா இடுகையில சினிமாவான்னு நினைக்கும்போதே பிரக்கெட்ல இல்லைன்னு சொல்லியிருக்கிறது தெரிஞ்சாலும் இருக்குமான்னு ஆர்வமா படிச்சி டரியலாயிட்டேன்... என்னமா கலக்கியிருக்கீங்க!

நாணயமில்லாம கல்விங்கற பேர்ல பண்றத ஆயிரத்தில் ஒருவனா இல்லாம தனியாளா உங்க பாணியில கலக்கியிருக்கீங்க...

அருமை அய்யா...

பிரபாகர்.//

:)) நன்றி

ஜிகர்தண்டா Karthik said...

மதனின் திரைப்பார்வை மாதிரி இருந்தது...
இது வானம்பாடிகளின் கிட்டப்பார்வையோ..
அனுபவத்த எழுதிருக்கீங்க போல...
இருந்தி வானம்பாடிகள் பஞ்ச் அருமை...

vasu balaji said...

பிரபாகர் said...

லேப்டாப் சம்மந்தமா நாணயமும் ரொம்ப நல்லாருக்கு. அய்யா ஒரு வேண்டுகோள், இது போல் அப்பப்போ விமர்சனம் எழுதுங்களேன்!

பிரபாகர்.//

தோடா. அப்புறம் ஸ்டீரியோ டைப்புன்னு இதுக்கு ஒரு விமரிசனம் வந்துடும்.:))

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ணே! இது நல்லா இருக்கே..., இந்த ரெண்டு படத்துக்கும் புரொடியூசர் ஆரு????/

கூகிளாண்டவர்தான்.

/ இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ண்ணே! இந்த படங்களுக்கும் திருட்டு டிவிடி இருக்கா?/

படமே திருட்டு டிவிடி தாண்ணே. ஒரிஜினல் சீப்பு:))

இப்படிக்கு நிஜாம்.., said...

//அரைப்பரீட்சை வரைக்கும் பர பரன்னு போய்ட்டிருக்கிற படம், அப்புறம் கேபிள் கட், சினிமா நாட் அலவ்ட், படி படின்னு டார்ச்சர், கம்பேரிசன், எண்ட்ரன்ஸ் டெஸ்ட் இருக்கா இல்லையான்னு பல குழப்பங்களில் சிக்கி அலுப்பு தட்ட வைக்கும்.//

/லவ்வு,செல்போன் ரீசார்ஜெல்லாம் விட்டுப்போச்சே!//

அய்ங். அது இஸ்கோல்லயே ஆரம்பிச்சிட்டாங்களா:))

/ இப்படிக்கு நிஜாம்.., said...

//மொத்தத்துல எப்படியும் கல்லாக் கட்டுறாங்க காலேஜ் நிர்வாகம் என்பது தெரிஞ்ச விஷயங்கறதால, அரசே எவ்வளவுன்னு சொல்லிட்டா பட்ஜட் எகிரும்னு திகில் இல்லாம இருக்கலாம்.//

தெரிஞ்ச விசயமா இது???/

ஆமாண்ணே. ஒளிவு மறைவே கிடையாது.

vasu balaji said...

பலா பட்டறை said...

மொத்தத்தில் நாணயம் செல்லணும். செல்லலைன்னா கடன் வாங்கியாவது செல்ல வைக்கணும்//

செம பன்ச்..::))

//அய்யா ஒரு வேண்டுகோள், இது போல் அப்பப்போ விமர்சனம் எழுதுங்களேன்!

பிரபாகர்//

அதே..அதே..::))//

நன்றி சங்கர்:))

vasu balaji said...

KALYANARAMAN RAGHAVAN said...

உங்க இரண்டு நகைச்சுவை படங்களையும் (லேப்-டாப்பில்)பார்த்துட்டு சந்தோஷத்துடன்
உறங்கப் போகிறேன்.அடுத்த படம் அறிவிப்பு எப்போங்க?

ரேகா ராகவன்.//

சார். என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலையே:))

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/:-)))/

:))

vasu balaji said...

ஸ்ரீராம். said...

எல்லோரும் படத்தை கேபிள்ல போடுவாங்க...நீங்க ப்ளாக்ல போட்டுட்டீங்க...//

:))

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

அண்ணே.... ரெண்டு படத்திலேயும் கேபிள் கட்டுனு சொல்றீங்களே... நம்ம கேபிள் (சங்கர்) மேலே என்ன அம்புட்டு கோவம்...

ஓ.... அவருதான் இந்த ரெண்டு படத்துக்கும் விமர்சனம் எழுதியிருக்காரா?

டிஸ்கி: அப்பாட ஏதோ நம்மாள முடிஞ்சத பத்த வச்சாச்சு/

அல்லோ. கட்டுன்னா ஹக் பண்றதுன்னு சொன்னதுங்க. நம்ம கிட்டயேவா? இதுக்கு டிஸ்கி வேற.

vasu balaji said...

சங்கர் said...

//ரியலைன்னு கால்குலஸ் கணக்க நீட்ட இதெல்லாம் நாங்க படிக்கிறப்போ கண்டு பிடிக்கவே இல்லைன்னு சொல்லி சமாளிக்கிற சீன்ல அதிரும்//

:)))))))))))//

:))

vasu balaji said...

எம்.எம்.அப்துல்லா said...

//..., இந்த ரெண்டு படத்துக்கும் புரொடியூசர் ஆரு????

//

வேற ஆரு!! புள்ளையப் பெத்தவைய்ங்கதான் :)//

வாங்க அப்துல்லா:)) சரியா சொன்னீங்க

vasu balaji said...

சங்கர் said...

//ஸ்ரீராம். said...

எல்லோரும் படத்தை கேபிள்ல போடுவாங்க.//

விமர்சனம் எழுதினதுக்காக கேபிள போடணும்னு சொல்றது கொஞ்சம் ஓவரு :))//

:))

vasu balaji said...

பா.ராஜாராம் said...

:-)))))))))))

சிரிச்சு முடியலை பாலா சார்!

நாணயமாய் சொல்லணுமுன்னா ஆயிரத்தில் ஒருவன் சார் நீங்க!//

அவ்வ்வ்வ். இது தண்டோராவோட ஆ.ஒ. ன்னா சூப்பரு, கேபிள்ட ஆ. ஒ.அப்படின்னா குழப்ப கேஸ், அரவிந்த் ஆ.ஒ அப்படின்னா தண்டம். இதுல நான் யார்:))

vasu balaji said...

பழமைபேசி said...

//பாலாண்ணே, நான் இனிதான் உங்க மூன்று மாத இடுகைகளையும் படிக்கணும்....//

:)). வாங்க பழமை. ஆகட்டும்.

vasu balaji said...

வெற்றி said...

//ஒரு வழியா அட்மிஷன் வாங்கி கதை முடியற நேரத்துல கேம்பஸ் இண்டர்வ்யூல வேலை கிடைக்குமா கிடைக்காதாங்கற கேள்விக் குறியோட முடிக்கிறது அடுத்த பாகம் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கும்.//

ஹா ஹா ஹா..//


:))

// வெற்றி said...

//கடைசியில 100 கி.மீ தூரத்தில இருக்கிற காலேஜ்ல கம்ப்யூட்டர் எஞ்ஜினீரிங் சீட் வாங்கிட்டு வரும்போது கடை போட்டிருக்கிற கம்ப்யூட்டர்காரன் 100ரூ கட்டினா லேப்டாப், மாசம் 3000ரூ 20 மாசம் கட்டினா போதும்னு பிட்ட போட, அது இல்லைன்னா எப்படி படிக்கிறதுன்னு பசங்க மிரட்ட//


நான் மிரட்டுனது நினைவிற்கு வருகிறது..:))//

ஆஹா. அப்ப நம்ம படத்தில ரியாலிஸ்ம் இருக்கு:))

/ வெற்றி said...

ஆனா ஒன்னு..சொந்த அனுபவம் இல்லாம இந்த மாதிரி ஒரு கதை சான்சே இல்லை..:))//

அக்கம் பக்கம் பாக்குறோம்ல.

vasu balaji said...

ஜிகர்தண்டா Karthik said...

மதனின் திரைப்பார்வை மாதிரி இருந்தது...
இது வானம்பாடிகளின் கிட்டப்பார்வையோ..
அனுபவத்த எழுதிருக்கீங்க போல...
இருந்தி வானம்பாடிகள் பஞ்ச் அருமை...///

இது என்னா வம்பு. :))

செ.சரவணக்குமார் said...

ஆயிரத்தில் ஒரு இடுகை தலைவரே. செம கலக்கல்.

துபாய் ராஜா said...

ஆஹா.... கெளம்பிட்டாரரரய்ய்ய்ய்யா..... கெளம்பிட்டார்ர்ர்ர்ர்ர்ருருரு.... :))

ரோஸ்விக் said...

//மொத்தத்தில் நாணயம் செல்லணும். செல்லலைன்னா கடன் வாங்கியாவது செல்ல வைக்கணும்.//

ங்கொக்கா மக்கா... உங்க படத்துலயும் பஞ்ச டயலாக் எல்லாம் வருது. சூப்பரப்பு... :-)

அண்ணே! படத்துல நடிகைகளுக்கு ஆடையை கொறைக்கிற மாதிரி... வரிகள்ள முற்றுப்புள்ளிகளை முற்றும் துறந்த்துட்டிகளே. :-)

சில இடங்கள்ள படிக்கும்போது கொஞ்சம் நான் தடுமாறினேன். ஒரு வேலை இன்று இரவு பணியில இருக்கதால அப்படி இருக்குமோ என்னமோ. அதனால ரெண்டாவது தடவையும் படிச்சேன். தப்பா எடுத்துக்காதீங்க. - அன்புடன் ரோஸ்விக்.

Chitra said...

ஐயாஆஆஆஆஆஆஆ.............. பதிவில் முதல் பகுதி கதையில் நக்கல் தூக்கலா இருந்து கலக்கல் திலகம்னு பேரு வாங்கி தருது.
இரண்டாம் பகுதி பதிவில் கொஞ்சம் சீரியஸ் ஆ ஆரம்பிச்சாலும், கிளைமாக்ஸ் இல் பின்னிட்டாங்க. சூப்பர்.

சிநேகிதன் அக்பர் said...

சிரிச்சு முடியலை. ரொம்ப அருமை சார்.

இந்த காலத்துல விலை அதிமான பொருள் கல்விதான்.

Unknown said...

முதல்ல இந்தப் படங்களெல்லாம் நம்ம ஊருல ரிலீஸ் ஆகாதுன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இன்னும் 17 வருசத்துல ரிலீஸ் ஆயிரும்போல இருக்கும்னு நெனக்கும்போதே வயித்தக் கலக்குது சாமி.

ஒரு விசயத்த விட்டுட்டிங்களே, எல்லா சினிமாப் படம் மாதிரி இதிலயும் ப்ரொட்யூசர்க்கு டவுசர் கழண்டாலும், நடிகருங்க பேர் வாங்கிட்டோ, துட்டு வாங்கிட்டோ போயிடுறாங்க.

தாராபுரத்தான் said...

விமர்சனம் இல்லை ஆஹா ஒஹோ..

பெசொவி said...

இது விமரிசனம் இல்லை, பிள்ளைங்களைப் பெத்தவங்களின் ஆதங்கம். நன்கு வெளியிட்டீர்கள். நன்றி!

எறும்பு said...

எறநூறு பின்தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள்....

200 ஆவதா சேர்ந்த எனக்கு பரிசும் பார்ட்டியும் உண்டா??
:)

எறும்பு said...

இடுகைய படிச்சாச்சு... ஒரு மைனஸ் ஒட்டு கூட இதுவரைக்கும் விழாத காரணத்தால் நான் வெளிநடப்பு செய்கிறேன்..
;)

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்வியல் படம் அருமை.....

S.A. நவாஸுதீன் said...

/////ஒரு வழியா அட்மிஷன் வாங்கி கதை முடியற நேரத்துல கேம்பஸ் இண்டர்வ்யூல வேலை கிடைக்குமா கிடைக்காதாங்கற கேள்விக் குறியோட முடிக்கிறது அடுத்த பாகம் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கும்./////

அடுத்தபாகம்னா பழசையே புதுசா ரீமேக் பண்ணுவாங்க. அப்படித்தானே சார். பில்லா மாதிரி. ஹா ஹா ஹா. என்னா வில்லத்தனம்.

S.A. நவாஸுதீன் said...

////மத்த பசங்க எவ்ளோ மார்க்குன்னு சாவடிக்கறதெல்லாம் படத்தின் விறுவிறுப்புக்கு தடை. மொத்தத்தில் நாணயம் செல்லணும். செல்லலைன்னா கடன் வாங்கியாவது செல்ல வைக்கணும்.////

உங்க நாணயம் சூப்பர் டூப்பர் ஹிட் பாலா சார்.

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நாளாச்சு 50 போட்டு. இரண்டு படத்துக்கும் சேர்த்து போட்டுக்கிறேன்.

அகல்விளக்கு said...

யப்பே........

டரியலாய்ட்டேன் போங்க.......

புலவன் புலிகேசி said...

//
பிரபாகர் Says:
January 16, 2010 9:21 PM

லேப்டாப் சம்மந்தமா நாணயமும் ரொம்ப நல்லாருக்கு. அய்யா ஒரு வேண்டுகோள், இது போல் அப்பப்போ விமர்சனம் எழுதுங்களேன்!

பிரபாகர்.//

தல இது விமர்சனமில்ல ஐயாவோட சொந்த கதை...என்ன படமா எடுக்க முடியாது...

vasu balaji said...

செ.சரவணக்குமார் said...

ஆயிரத்தில் ஒரு இடுகை தலைவரே. செம கலக்கல்.//

நன்றி சரவணக்குமார்.

vasu balaji said...

துபாய் ராஜா said...

ஆஹா.... கெளம்பிட்டாரரரய்ய்ய்ய்யா..... கெளம்பிட்டார்ர்ர்ர்ர்ர்ருருரு.... :))//

:))

vasu balaji said...

ரோஸ்விக் said...

// ங்கொக்கா மக்கா... உங்க படத்துலயும் பஞ்ச டயலாக் எல்லாம் வருது. சூப்பரப்பு... :-)//

இது வேற இருக்கோ:))

//அண்ணே! படத்துல நடிகைகளுக்கு ஆடையை கொறைக்கிற மாதிரி... வரிகள்ள முற்றுப்புள்ளிகளை முற்றும் துறந்த்துட்டிகளே. :-)

சில இடங்கள்ள படிக்கும்போது கொஞ்சம் நான் தடுமாறினேன். ஒரு வேலை இன்று இரவு பணியில இருக்கதால அப்படி இருக்குமோ என்னமோ. அதனால ரெண்டாவது தடவையும் படிச்சேன். தப்பா எடுத்துக்காதீங்க. - அன்புடன் ரோஸ்விக்.//

:))

vasu balaji said...

Chitra said...

ஐயாஆஆஆஆஆஆஆ.............. பதிவில் முதல் பகுதி கதையில் நக்கல் தூக்கலா இருந்து கலக்கல் திலகம்னு பேரு வாங்கி தருது.
இரண்டாம் பகுதி பதிவில் கொஞ்சம் சீரியஸ் ஆ ஆரம்பிச்சாலும், கிளைமாக்ஸ் இல் பின்னிட்டாங்க. சூப்பர்.//

நன்றிங்க

vasu balaji said...

அக்பர் said...

சிரிச்சு முடியலை. ரொம்ப அருமை சார்.

இந்த காலத்துல விலை அதிமான பொருள் கல்விதான்.//

நன்றிங்க.:))

vasu balaji said...

முகிலன் said...

முதல்ல இந்தப் படங்களெல்லாம் நம்ம ஊருல ரிலீஸ் ஆகாதுன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இன்னும் 17 வருசத்துல ரிலீஸ் ஆயிரும்போல இருக்கும்னு நெனக்கும்போதே வயித்தக் கலக்குது சாமி.//

அப்பவும் மாறாதுங்கறீங்களா:))

/ஒரு விசயத்த விட்டுட்டிங்களே, எல்லா சினிமாப் படம் மாதிரி இதிலயும் ப்ரொட்யூசர்க்கு டவுசர் கழண்டாலும், நடிகருங்க பேர் வாங்கிட்டோ, துட்டு வாங்கிட்டோ போயிடுறாங்க.//

அதுக்குதானெ இந்த பாடு.

vasu balaji said...

தாராபுரத்தான் said...

விமர்சனம் இல்லை ஆஹா ஒஹோ..//

அய்யா வாங்க. நன்றிங்க.

vasu balaji said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இது விமரிசனம் இல்லை, பிள்ளைங்களைப் பெத்தவங்களின் ஆதங்கம். நன்கு வெளியிட்டீர்கள். நன்றி//

நன்றிங்க

vasu balaji said...

எறும்பு said...

எறநூறு பின்தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள்....

200 ஆவதா சேர்ந்த எனக்கு பரிசும் பார்ட்டியும் உண்டா??
:)//

நன்றி. நன்றி. அதுக்கென்ன ஒருகட்டி கல்கண்டும், ஒரு ஸ்பூன் சக்கரையும் கொடுத்தா போச்சி.:))

vasu balaji said...

எறும்பு said...

இடுகைய படிச்சாச்சு... ஒரு மைனஸ் ஒட்டு கூட இதுவரைக்கும் விழாத காரணத்தால் நான் வெளிநடப்பு செய்கிறேன்..
;)//

இந்தக் கொடுமை வேறயா:))

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்வியல் படம் அருமை.....//

:))

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

// அடுத்தபாகம்னா பழசையே புதுசா ரீமேக் பண்ணுவாங்க. அப்படித்தானே சார். பில்லா மாதிரி. ஹா ஹா ஹா. என்னா வில்லத்தனம்.//

:)) வெவரமாத்தான்யா இருக்காய்ங்க:))

/உங்க நாணயம் சூப்பர் டூப்பர் ஹிட் பாலா சார்./

நன்றி

/ரொம்ப நாளாச்சு 50 போட்டு. இரண்டு படத்துக்கும் சேர்த்து போட்டுக்கிறேன்./

:)) நன்றி நவாஸ்

vasu balaji said...

அகல்விளக்கு said...

யப்பே........

டரியலாய்ட்டேன் போங்க......//

ஹி ஹி.

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/ தல இது விமர்சனமில்ல ஐயாவோட சொந்த கதை...என்ன படமா எடுக்க முடியாது.../

இதுலயும் வில்லங்கமா. கதை நம்மளதில்லை.

பின்னோக்கி said...

படத்த விட இது நல்லாயிருக்கு.

Thenammai Lakshmanan said...

//எக்ஸாம் நெருங்கி வர சமயத்துல பொறுப்பா படிக்கிறது பத்தி அப்பா அம்மாக்கள் பேசுற பாஷை புரியாம பசங்க மட்டுமல்ல அந்த வயசு பசங்க இல்லாத பெற்றோர்களும் அரைப் பைத்தியமா நெளியறது மைனஸ்.//

superb vaanambaadi

Thenammai Lakshmanan said...

//குறைன்னா, ஆஃபீஸுக்கு லீவ் போட்டு அம்மாக்காரி ஹெல்ப் பண்றேன்னு முட்ட முட்ட சாப்பாடு போட்டு தூங்க விடாம படின்னு சொல்றது, கேபிள் கட் பண்றது, நண்பர்கள் கூட பேச விடாம தடுக்கிறது, மத்த பசங்க எவ்ளோ மார்க்குன்னு சாவடிக்கறதெல்லாம் படத்தின் விறுவிறுப்புக்கு தடை//

excellent vanambaadi

kalakuriingka !!!

CS. Mohan Kumar said...

உங்க பையன் அல்லது பொண்ணு இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் எழுதுறாங்களோ? அதோட பாதிப்பு தான்னு தோணுது :))

vasu balaji said...

பின்னோக்கி said...

படத்த விட இது நல்லாயிருக்கு.//

:))

vasu balaji said...

thenammailakshmanan said...

/superb vaanambaadi/

/excellent vanambaadi

kalakuriingka !!!/

நன்றிங்க.

vasu balaji said...

மோகன் குமார் said...

//உங்க பையன் அல்லது பொண்ணு இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் எழுதுறாங்களோ? அதோட பாதிப்பு தான்னு தோணுது :))//

இல்லை சார்:))

நசரேயன் said...

அல்லோ. கோவிக்கலை