Tuesday, January 5, 2010

சொன்னாக் கேக்’காது’ங்க..

சாமிகளா! நானு ஊரு உலகம் தெரியாத அப்புராணி. வூடு உட்டா ஆபீசு ஆபீசு வுட்டா ஊடுன்னு இருக்குற ஆளு. அங்க இங்கன்னு திர்ர ஆளுங்க கொஞ்சம் சொல்லுங்கப்பு.

பேப்பர்ல, டிவியில எல்லாம் பார்க்குறேன். எதிர்ல வர ஆளு மூஞ்சி தெரியாம பனி. அங்கல்லாம் இப்படி இல்ல. தமிழ்நாட்டுல மட்டும்(ம்கும் இங்க மட்டும் பாத யாத்திரை போனியான்னு கேக்காதீங்க) ஏங்க இப்புடி. என்ன மாதிரி கிறுக்குப் பயலுவ கொஞ்ச பேத்த தவிர மத்த யாருக்கும் காதைக் காணோங்க.

கொஞ்ச வருசம் முன்னாடி, இந்த கன்னுகுட்டி மண்ணு தின்னாம இருக்கிறதுக்கு ஒரு கூடைய கட்டி உடுவாங்களே. அப்பிடி மாட்டிகிட்டு திரிஞ்சாங்க பொல்யூஷனுக்கு. அதுவும் டெல்லில இருந்து வாங்கிட்டு வந்து கொள்ளை விலைக்கு வித்தானுங்க. அது உள்ள இருக்கிற ஃபில்டர் 2 நாள்ள சூப்பு விக்கிறவன் சட்டி மாதிரி கருத்துப் போக, ரிஃபில்லுக்கு வழியில்லாம கெடாசினாங்க.

ஹெல்மட் போடுங்கப்பான்னா, மசிரு கொட்டிப் போகுது. கழுத்து வலி வருதுன்னு இவனுவளே சொல்லிகிட்டு போடுறதில்ல. இதுல வேற, உலகத்துலயே ஜடைக்கு இடைஞ்சல் இல்லாம ஒரு ஆர்ச் வெச்ச ஹெல்மட் கண்டு புடிச்சவனும் நம்மாளுதான்.

மருத்துவருங்க தலைபாடா அடிச்சிக்கிறாங்க. மூக்க சுத்தி துணிய இறுக்கமா கட்டாதீங்க. ப்ராணவாயு கொஞ்ச நஞ்சமும் மூளைக்கு சரிவர போகலைன்னா மயக்கம் வரும். அதனால விபத்துக்கள் உண்டாகலாம். சர்ஜிகல் மாஸ்க் போடுங்கப்பான்னா கேக்குறதில்ல.

ஆம்பிளைங்க இதுக்காகவே பெரிய கைக்குட்டை வாங்கி முகமூடி கொள்ளைக்காரன் மாதிரி கட்டிக்கிறானுங்கன்னா, பெண்கள் நைலான் துப்பட்டாவை முடி பறக்காம, மூக்குல தூசு போகாமன்னு இறுக்கி சுத்திக்கிறாங்க வண்டியோட்டுறப்ப. எதிர் காத்துல அடைக்குமா இல்லையா?

அப்புறம் பனிக்காலத்துக்கு, குத்தாலத்துல பலாப் பழம் குடுப்பாங்களே பன ஓலையில படகு மாதிரி செஞ்சி. அதுக்கு வாலு வெச்சா மாதிரி ஒன்னு வந்து செம சேல்ஸ் பிச்சிகிட்டு போச்சி.

இப்ப ஒரு காம்புல ரெண்டு பக்கம் கரண்டிமாதிரி ஒன்னு வந்திருக்கு. யாரப்பாத்தாலும் நடக்குறவன், ஏசி கார்ல போறவன், ஆட்டோ ஓட்டுறவன், உக்காந்து போறவன்னு உச்சி வெயில்ல கூட மாட்டிகிட்டு திர்ராங்க. யாருக்கும் காதைக் காணோம்.  குழந்தைக்கு கூட பாதி கண்ணை மறைக்கிறா மாதிரி இருந்தாலும் இதை மாட்டியாவணும். சென்னைலதான் இப்புடின்னு பார்த்தா ஈரோட்டுல மதியம் 2 மணி வெயில்ல பாதிப்பேரு காத தொலைச்சுபுட்டு அலையறாங்க. மத்த ஊருலயும் இப்புடித்தான் இருக்கும்.

எங்காத்தா, அவுங்கூருல மைனஸ் 6 மைனஸ் 7 (கதிர் நமக்கு விழற மைனஸ் ஓட்ட சொல்லல) குளிர்ல மொசக்குட்டி மாதிரி காதை விடச்சிக்கிட்டு கட கண்ணின்னு போய்ட்டு வருது.

ஆயில் புல்லிங் பண்ணா செரிமானம் ஆவும், ரோகமே வராது, வாய் நாறாதுன்னு ஒரு அலை உண்டாகி நல்லெண்ணெய் பாக்கட்டுல எல்லாம் இத சொல்லியே கல்லா கட்டுனானுங்க. கொஞ்ச காலத்துக்கு எவனப் பார்த்தாலும் குரங்கு மாதிரியே திரிஞ்சானுங்க. அப்புறம் காணோம்.

நீங்க வேணா பாருங்க. இந்த சூப்பான் ரப்பர் இருக்கே, அதாங்க பேசிஃபையர். அத விளையாட்டா வாய்ல வெச்சிகிட்டு சீரியசா போனா போதும். ஏன் ஏன்னு அடக்க மாட்டாம ஏதோ ஒண்ணு கேக்கும் ஏன் இத சப்பிகிட்டு திர்றன்னு.

இது ஜப்பான்ல இருந்து வந்த மச்சான் சொன்னாரு. அங்க புதுசா தெராபியாம். இப்புடி வெச்சிகிட்டு  நடந்தா, மனசு நம்ம அறியாம குழந்தைப் பருவத்து மனசு மாதிரி ஆயிடுமாம். டென்ஷனே வராதாம். நாள் ஃபுல்லா ஃப்ரெஷ்ஷா இருக்குமாம். நான் 2 நாளாதான் ட்ரை பண்ணேன். சூப்பரா இருக்குங்கன்னு சொல்லி பாருங்க.

பேசாம இருந்தாலே டென்ஷன் கம்மியாச்சே. எனர்ஜி வேஸ்ட் ஆவாதே. அப்புறம் எப்படி ஃப்ரெஷ்ஷா இல்லாம இருக்க முடியும்னு எல்லாம் யோசிக்க மாட்டாங்க. அடுத்த வாரம் பார்த்தா எல்லார் வாய்லயும் சூப்பான் ரப்பர் இருக்கும்.

ஆனாங்கொய்யாலே. அப்பக்கூட கரண்டிக்குள்ள ஹெட்ஃபோனு, ப்ளூடூத்து வெச்சிக்கிட்டு, சூப்பானோடயே செல்லுல பேசுவாங்களே தவிர அத மட்டும் நிறுத்த மாட்டாங்க.


79 comments:

பூங்குன்றன்.வே said...

//பெண்கள் நைலான் துப்பட்டாவை முடி பறக்காம, மூக்குல தூசு போகாமன்னு இறுக்கி சுத்திக்கிறாங்க வண்டியோட்டுறப்ப//

நல்லா கேளுங்க சாமி!!

//கதிர் நமக்கு விழற மைனஸ் ஓட்ட சொல்லல//

ஹி ஹி

//

நசரேயன் said...

நான் எல்லாம் நல்ல பையன்.. நீங்க சொன்னா கேட்பேன்

பூங்குன்றன்.வே said...

//பேசாம இருந்தாலே டென்ஷன் கம்மியாச்சே. எனர்ஜி வேஸ்ட் ஆவாதே.//

இது பாயிண்ட் தல !!

பூங்குன்றன்.வே said...

//ஹெட்ஃபோனு, ப்ளூடூத்து வெச்சிக்கிட்டு, சூப்பானோடயே செல்லுல பேசுவாங்களே தவிர அத மட்டும் நிறுத்த மாட்டாங்க.//


ஹெல்மட் போட்ட மசிரு மட்டும் தான் கொட்டும்..இந்த எழவெல்லாம் மாட்டுனா உசிரே போய்டும்ன்னு சொல்லுங்க :)

ப்ரியமுடன் வசந்த் said...

பேசாம இருந்தாலே டென்ஷன் கம்மியாச்சே. எனர்ஜி வேஸ்ட் ஆவாதே. //

\(^o^)/

Subankan said...

//கதிர் நமக்கு விழற மைனஸ் ஓட்ட சொல்லல//

ஹி ஹி

நான் கேக்குறேங்க

Unknown said...

//எங்காத்தா, அவுங்கூருல மைனஸ் 6 மைனஸ் 7 (கதிர் நமக்கு விழற மைனஸ் ஓட்ட சொல்லல) குளிர்ல மொசக்குட்டி மாதிரி காதை விடச்சிக்கிட்டு கட கண்ணின்னு போய்ட்டு வருது.
//

நம்மாளுக இந்த ஊருக்கு வந்து பண்ணுற கூத்தெல்லாம் தெரியாதா? இங்கயே பொறந்து வளந்த வெள்ளக்காரனெல்லாம் குளிர் காலம் வந்துட்டா ஒளுங்கா விண்டர் க்ளோத்திங் போட்டுட்டு சுத்துவான். ஆனா நம்மாளுங்க? இதெல்லாம் எங்களுக்கு சகசம் அப்பிடிங்கிற மாதிரி சாதாரண காட்டன் சட்டையப் போட்டுட்டு சுத்துவாங்க. அதுக்கென்ன சொல்றிங்க.

இதுல முக்காவாசி பேரு - நானெல்லாம் புகைக்குப் பாதுகாப்புக்கு கட்டிட்டுப் போறேனாக்கும் அப்பிடிங்கிற - பந்தாவுக்கு போட்டுட்டுப் போறவிங்க. இவிங்களத் திருத்த முடியாது.

பின்னோக்கி said...

சில பொண்ணுங்க புள்ளி வெச்ச துணியில தலை, முகத்த எல்லாம் சுத்திட்டு, ஹெல்மெட் போட்டுட்டு வண்டி ஓட்டுவாங்க. அவங்கள பார்த்தா பாலஸ்தீனிய தீவிரவாதிங்களாமே அவங்க மாதிரியே இருக்கும்.

நீங்க ரோட்டுல வண்டிய , ரோட்டப் பார்த்து ஓட்ட மாட்டேங்குறீங்க. பயங்கர அப்சர்வேசன் பவர் உங்களுக்கு.

பிரபாகர் said...

//அது உள்ள இருக்கிற ஃபில்டர் 2 நாள்ள சூப்பு விக்கிறவன் சட்டி மாதிரி கருத்துப் போக, ரிஃபில்லுக்கு வழியில்லாம கெடாசினாங்க.//

என்ன ஒரு பார்வை? வாங்கி ஏமாந்தீங்களோ?

//
உலகத்துலயே ஜடைக்கு இடைஞ்சல் இல்லாம ஒரு ஆர்ச் வெச்ச ஹெல்மட் கண்டு புடிச்சவனும் நம்மாளுதான்.
//

ஹ, ஹா... அடக்க முடியலங்கய்யா!

//
(கதிர் நமக்கு விழற மைனஸ் ஓட்ட சொல்லல)
//

சமயம் பாத்து சொல்லுவோம்ல, மைனஸால ரொம்ப பாதிச்ச ரெண்டு பேருன்னா, உங்களையும் கதிரையும் தான் சொல்லுவேன்... ஒரு குரூப்பே அலையுறாங்க, உங்கள்ல குத்தறதுக்கு...


பிரபாகர்.

பா.ராஜாராம் said...

:-))

பிரபாகர் said...

//பயங்கர அப்சர்வேசன் பவர் உங்களுக்கு.
//
இப்போதான் தெரியுமா? சாக்கிரத! டரியலாக்கிடுவாரு. பதிவர் சந்திப்புல ஆடியோ மேட்டர் தெரியும்ல? பக்கத்துல இருந்தவங்களுக்கே தெரியாது அய்யா பதிவு செஞ்சது..

பிரபாகர்.

பிரபாகர் said...

//ஹெட்ஃபோனு, ப்ளூடூத்து வெச்சிக்கிட்டு, சூப்பானோடயே செல்லுல பேசுவாங்களே தவிர அத மட்டும் நிறுத்த மாட்டாங்க.//

கவலைப்படாதீங்கய்யா. கூடிய சீக்கிரம் ஒரு சின்ன ஆப்ரேசன் செஞ்சி காதோட ஒரு ஸ்பீக்கர் தாவாகிட்ட ஒரு மைக்ரோ மைக்கயும் வெச்சிடத்தான் போறாங்க.

பிரபாகர்.

Chitra said...

இது ஜப்பான்ல இருந்து வந்த மச்சான் சொன்னாரு. அங்க புதுசா தெராபியாம். இப்புடி வெச்சிகிட்டு நடந்தா, மனசு நம்ம அறியாம குழந்தைப் பருவத்து மனசு மாதிரி ஆயிடுமாம். டென்ஷனே வராதாம். நாள் ஃபுல்லா ஃப்ரெஷ்ஷா இருக்குமாம். நான் 2 நாளாதான் ட்ரை பண்ணேன். சூப்பரா இருக்குங்கன்னு சொல்லி பாருங்க. ................ super punch! he,he,he,.....

கலகலப்ரியா said...

எப்பூடி... இப்புடீ....

vasu balaji said...

பூங்குன்றன்.வே said...

/ நல்லா கேளுங்க சாமி!!/

யார் கிட்ட போய் கேக்க:))

/
இது பாயிண்ட் தல !!/
அப்போ மத்ததெல்லாம்..அவ்வ்வ்.

/ஹெல்மட் போட்ட மசிரு மட்டும் தான் கொட்டும்..இந்த எழவெல்லாம் மாட்டுனா உசிரே போய்டும்ன்னு சொல்லுங்க :)/

இதயும் யார்ட்ட சொல்ல. ஹெல்மட்டே போடமா எனக்கு கொட்டி போச்சேன்னு சொல்ல கூட ரெடி..கேக்’காது’

vasu balaji said...

நசரேயன் said...

/நான் எல்லாம் நல்ல பையன்.. நீங்க சொன்னா கேட்பேன்//

அண்ணாச்சி. இத மட்டும் துண்டு போட்ட இடத்துல சொல்லி இருந்தா எத்தன மரம் சுத்தி டூயட் பாடி இருக்கலாம்

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...



/ \(^o^)//

இந்த ஹேர் ஸ்டைல் நல்லாருக்கு.:)

vasu balaji said...

Subankan said...


/ ஹி ஹி

நான் கேக்குறேங்க//

கேக்காமலே குத்துறாங்க சுபா. கேட்டா கிடைக்காது:))

vasu balaji said...

முகிலன் said...

/ நம்மாளுக இந்த ஊருக்கு வந்து பண்ணுற கூத்தெல்லாம் தெரியாதா? இங்கயே பொறந்து வளந்த வெள்ளக்காரனெல்லாம் குளிர் காலம் வந்துட்டா ஒளுங்கா விண்டர் க்ளோத்திங் போட்டுட்டு சுத்துவான். ஆனா நம்மாளுங்க? இதெல்லாம் எங்களுக்கு சகசம் அப்பிடிங்கிற மாதிரி சாதாரண காட்டன் சட்டையப் போட்டுட்டு சுத்துவாங்க. அதுக்கென்ன சொல்றிங்க.

இதுல முக்காவாசி பேரு - நானெல்லாம் புகைக்குப் பாதுகாப்புக்கு கட்டிட்டுப் போறேனாக்கும் அப்பிடிங்கிற - பந்தாவுக்கு போட்டுட்டுப் போறவிங்க. இவிங்களத் திருத்த முடியாது.//

ஆக நல்லாருக்கறவன கெடுக்கோணும்னே அலையறாய்ங்க:))

vasu balaji said...

பின்னோக்கி said...

/ சில பொண்ணுங்க புள்ளி வெச்ச துணியில தலை, முகத்த எல்லாம் சுத்திட்டு, ஹெல்மெட் போட்டுட்டு வண்டி ஓட்டுவாங்க. அவங்கள பார்த்தா பாலஸ்தீனிய தீவிரவாதிங்களாமே அவங்க மாதிரியே இருக்கும்.

நீங்க ரோட்டுல வண்டிய , ரோட்டப் பார்த்து ஓட்ட மாட்டேங்குறீங்க. பயங்கர அப்சர்வேசன் பவர் உங்களுக்கு.//

ம்கும். இந்த கும்பல்ல வண்டியோட்ட நான் என்ன லூசா. காலைல ஆட்டோ, சாய்ந்தரம் ரயிலு காலுல்ல நம்ம வாகனம்.:))

vasu balaji said...

பிரபாகர் said...

/ என்ன ஒரு பார்வை? வாங்கி ஏமாந்தீங்களோ?//

ஹி ஹி. ஏமாந்தவங்கள பார்க்குறோம்ல.

/ ஹ, ஹா... அடக்க முடியலங்கய்யா!//

போய்ட்டு வாங்க. அப்புறம் வடிவேலு மாதிரி ஆய்டும்.

/ சமயம் பாத்து சொல்லுவோம்ல, மைனஸால ரொம்ப பாதிச்ச ரெண்டு பேருன்னா, உங்களையும் கதிரையும் தான் சொல்லுவேன்... ஒரு குரூப்பே அலையுறாங்க, உங்கள்ல குத்தறதுக்கு...//

என்னா பாதிப்பு. ஒரு மசிரும் இல்ல. இது நொள்ளைன்னு கூட சொல்ல மாட்டானுங்களேன்னுதான்.:))

vasu balaji said...

பா.ராஜாராம் said...

/ :-))/

:))

vasu balaji said...

பிரபாகர் said...

/ இப்போதான் தெரியுமா? சாக்கிரத! டரியலாக்கிடுவாரு. பதிவர் சந்திப்புல ஆடியோ மேட்டர் தெரியும்ல? பக்கத்துல இருந்தவங்களுக்கே தெரியாது அய்யா பதிவு செஞ்சது..

பிரபாகர்.//

ஆமாம். நாம சி. ஐ. ஏ. ஆள விடுங்க சாமிகளா. பாலாசிக்கு சொல்லிட்டு தான் செஞ்சேன்:))

vasu balaji said...

பிரபாகர் said...

/ கவலைப்படாதீங்கய்யா. கூடிய சீக்கிரம் ஒரு சின்ன ஆப்ரேசன் செஞ்சி காதோட ஒரு ஸ்பீக்கர் தாவாகிட்ட ஒரு மைக்ரோ மைக்கயும் வெச்சிடத்தான் போறாங்க.//

அதையும் வாய்கிட்ட ஸ்பீக்கரு காது கிட்ட மைக்குன்னு மாத்தி வச்சிருவானுங்க.

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ எப்பூடி... இப்புடீ....//

சை. எவ்ளோ அழகா கவிதை மாதிரி மொசக்குட்டி மாதிரி காத விடைச்சிகிட்டு போவா ஆத்தான்னு எழுதுனேன். 2 வார்த்தை பாராட்ட மனசு வரலைல்ல:))அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

Unknown said...

//வானம்பாடிகள் said...
கலகலப்ரியா said...

/ எப்பூடி... இப்புடீ....//

சை. எவ்ளோ அழகா கவிதை மாதிரி மொசக்குட்டி மாதிரி காத விடைச்சிகிட்டு போவா ஆத்தான்னு எழுதுனேன். 2 வார்த்தை பாராட்ட மனசு வரலைல்ல:))அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
//

அல்லோ கணக்கு சொல்லிக்குடுத்த டீச்சரு யாரு? எப்பூடி இப்பூடி - இது ரெண்டு வார்த்த இல்லையா?

இராகவன் நைஜிரியா said...

// நானு ஊரு உலகம் தெரியாத அப்புராணி.//

ஓகே... ரைட்டு...

// வூடு உட்டா ஆபீசு ஆபீசு வுட்டா ஊடுன்னு இருக்குற ஆளு. //

பெரிசுங்கன்னா அப்படித்தாங்க இருக்கணும்... சமத்தா

vasu balaji said...

முகிலன் said...

// அல்லோ கணக்கு சொல்லிக்குடுத்த டீச்சரு யாரு? எப்பூடி இப்பூடி - இது ரெண்டு வார்த்த இல்லையா?//

அல்லோ. உங்களுக்கு கணக்கு டீச்சர தெரியலாம். எனக்கு கலகலாவ தெரியும்.

இராகவன் நைஜிரியா said...

// பேப்பர்ல, டிவியில எல்லாம் பார்க்குறேன் //

நிஜமாவே நீங்க ரொம்ப பொருமை சாலிதாங்க. எப்படி நம்ம டிவியை பொருமையா பார்க்கறீங்க, பேப்பரை படிக்கிறீங்க..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ ஓகே... ரைட்டு.../

அது அது. கொய்ட்டு.

/ பெரிசுங்கன்னா அப்படித்தாங்க இருக்கணும்... சமத்தா//

அவ்வ்வ்வ். உணர்ச்சி வசப்பட்டுடீங்களேண்ணே. நான் பெருசுன்னா உங்க யூத் இமேஜ் இல்லையா போய்டும். அதுக்காக தானே கட்டி காக்குறேன் கவிதையெல்லாம் எழுதி:)) போச்சே போச்சே..அவ்வ்வ்வ்வ்வ்வ்

இராகவன் நைஜிரியா said...

// ஏங்க இப்புடி. என்ன மாதிரி கிறுக்குப் பயலுவ கொஞ்ச பேத்த தவிர மத்த யாருக்கும் காதைக் காணோங்க. //

ஏங்க மத்தவங்க காதையெல்லாம் காக்கா தூக்கிக்கிட்டு போயிடுச்சா ...அவ்...அவ்...

எல்லார் காதையும் ஒழுங்கா கவனிச்சீங்களா... அதிகபட்சமா ரங்கமணிகள் காதுதான் காணும் என்று ஒரு காது வழி தகவல் தெரிவிக்கின்றது.

இராகவன் நைஜிரியா said...

// அது உள்ள இருக்கிற ஃபில்டர் 2 நாள்ள சூப்பு விக்கிறவன் சட்டி மாதிரி கருத்துப் போக, ரிஃபில்லுக்கு வழியில்லாம கெடாசினாங்க. //

அண்ணே நல்லா விசாரிச்சீங்களா.. அது யூஸ் அண்ட் த்ரோ மாடலா இருக்கப் போவுது

இராகவன் நைஜிரியா said...

// ஹெல்மட் போடுங்கப்பான்னா, மசிரு கொட்டிப் போகுது. கழுத்து வலி வருதுன்னு இவனுவளே சொல்லிகிட்டு போடுறதில்ல. //

இதுல பின்னாடி வர வண்டி ஹார்ன் சத்தம் கேட்கவில்லை என்று அலம்பல் வேறு.

அப்படியே வாங்கினாலும், நல்ல ISI ஹெல்மெட் வாங்காமல், லோக்கலா தயாரிச்சத வாங்கி அதனால் செத்தவங்களும் இருக்காங்க

இராகவன் நைஜிரியா said...

// மசிரு கொட்டிப் போகுது. //

மசிரே போச்சுன்னு விட்டுட்டுப் போக வேண்டியதுதானே... இதுக்கெல்லாம் கவலைப் பட்டால் ஆகுமா... என்ன அண்ணே நால் சொல்றது?

இராகவன் நைஜிரியா said...

// மருத்துவருங்க தலைபாடா அடிச்சிக்கிறாங்க. //

அய்யோ பாவம் ஏன் தலைபாடா அடிச்சுக்கிறாங்க ... அவங்களுக்கு தலை எழுத்தா என்ன...

சரி சரி பார்த்து அடிச்சுக்க சொல்லுங்க... தலை வலி வந்துட போவுது

இராகவன் நைஜிரியா said...

// ப்ராணவாயு கொஞ்ச நஞ்சமும் மூளைக்கு சரிவர போகலைன்னா மயக்கம் வரும் //

அதெல்லாம் மூளை இருக்கின்றவர்களுக்குத்தான் அண்ணே. இவங்களுக்கு அது இல்லை. அதனால் கேட்பதில்லை..

இராகவன் நைஜிரியா said...

// அப்புறம் பனிக்காலத்துக்கு, குத்தாலத்துல பலாப் பழம் குடுப்பாங்களே பன ஓலையில படகு மாதிரி செஞ்சி. //

இதுல இருந்து தெரிவது என்னவென்றால்... அண்ணன் குத்தாலம் போயிருக்கார். அங்கு பனை ஓலையில் கொடுக்கும் பலாப் பழத்தை வாங்கிச் சாப்பிட்டு இருக்கார். நாங்களும் கண்டுபிடிப்போமில்ல.

இராகவன் நைஜிரியா said...

// இப்ப ஒரு காம்புல ரெண்டு பக்கம் கரண்டிமாதிரி ஒன்னு வந்திருக்கு. //

என்ன அண்ணே இது. ஒரு படம் போட்டு இருந்தீங்கன்னா புரிஞ்சுப்போமில்ல.

இராகவன் நைஜிரியா said...

// கொஞ்ச காலத்துக்கு எவனப் பார்த்தாலும் குரங்கு மாதிரியே திரிஞ்சானுங்க. அப்புறம் காணோம்.//

அப்பாலிக்கா அதனால ஒன்னும் ப்ரயோசனம் இல்லை என்று புரிஞ்சுகிட்டாங்க. நம்ம ஆளுங்களுக்குத்தான் ஞாபகசத்தி ரொம்ப ஜாஸ்தியாச்சே... அதனால அதை எல்லாம் மறந்திட்டாங்க. இப்ப உங்கள யார் வந்து அதை எல்லாம் ஞாபகப் படுத்தச் சொன்னது.

இராகவன் நைஜிரியா said...

// பேசாம இருந்தாலே டென்ஷன் கம்மியாச்சே. //

அது சரி. பின்னூட்டம் போடாமல் இருந்தால், எந்த வலைப்பூவும் படிக்க முடியாமல் வேலை நெட்டி வாங்கும் போது, படு டென்ஷன் ஏறுதே... அப்ப என்ன செய்வது அண்ணே..

ப்ளாக்கோ ஃபோபியா பிடிச்சுடுச்சோன்னு ஒரு பயம் வர ஆரம்பிச்சுடுச்சு... :-)

இராகவன் நைஜிரியா said...

// ஆனாங்கொய்யாலே. அப்பக்கூட கரண்டிக்குள்ள ஹெட்ஃபோனு, ப்ளூடூத்து வெச்சிக்கிட்டு, சூப்பானோடயே செல்லுல பேசுவாங்களே தவிர அத மட்டும் நிறுத்த மாட்டாங்க.//

அது அவங்க பிறப்புரிமை..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

அவ்வ்வ்வ். உணர்ச்சி வசப்பட்டுடீங்களேண்ணே. நான் பெருசுன்னா உங்க யூத் இமேஜ் இல்லையா போய்டும். அதுக்காக தானே கட்டி காக்குறேன் கவிதையெல்லாம் எழுதி:)) போச்சே போச்சே..அவ்வ்வ்வ்வ்வ்வ் //

நோ.. நோ.. அழப்பிடாது... நாமெல்லாம் இனிமே பெரிசுன்னு சொல்லி எல்லோரையும் கலாய்க்கலாம். கவலைப்படாதீங்க

புலவன் புலிகேசி said...

//பெண்கள் நைலான் துப்பட்டாவை முடி பறக்காம, மூக்குல தூசு போகாமன்னு இறுக்கி சுத்திக்கிறாங்க வண்டியோட்டுறப்ப//

பாக்குறதுக்கு தீவிரவாதி மாதிரியே திரிவாங்களே அதத்தானே சொல்றீங்க...இந்த காதுல மாட்டிட்டு திரியுறத கூட சில பேரு ஃபேசன்னு சொல்றான்..எல்லாம் காலக்கொடுமை

ஜிகர்தண்டா Karthik said...

//பெண்கள் நைலான் துப்பட்டாவை முடி பறக்காம, மூக்குல தூசு போகாமன்னு இறுக்கி சுத்திக்கிறாங்க//

எது நல்ல ஃபிகர் எது அட்டு ஃபிகர்ன்னு தெரியாம
பசங்க திண்டாடி போறானுங்க.
இது ஆண்களுக்கு இழைக்கும் ஒரு சமூக அநீதி இல்லையா?
இதை யோசித்து வண்டி ஓட்டினாலும், விபத்து ஏற்படும்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

ha..ha..haa..haa

balavasakan said...

என்ன கொடுமைண்ணே இது....

cheena (சீனா) said...

அன்பின் பாலா

உண்மை உண்மை - தேவையோ இல்லையோ - கொஞ்ச நாளுக்கு பயன்படுத்தி விட்டு தூக்கி எறிவது வழக்கம் - இந்தச் சூப்பான் ரப்பர் வச்சிக்கீட்டு அலையத்தான் போறோம் பாருங்க

என்ன செய்யுறது

நகைச்சுவை - நல்ல இடுகை - நல்வாழ்த்துகள்

நேசமித்ரன் said...

பூனை குட்டிய தூக்கிட்டு போறப்போ அச்சச்சோ அதுக்கு எவ்வளவு வலிக்கும்னு தோணும் ஆனா தாய் பூனைக்கு தெரியும் பல் பட்டும் படாம எப்பிடி தூக்கிட்டு போறதுன்னு

குட்டுறது கூட இவ்வளவு எள்ளலோட பிடிச்ச பிள்ளைய வாத்தி வகுப்புல கொட்ட சொன்னா மணிக்கட்ட மட்டையாக்கி கொட்டுற மாதிரி உங்களுக்குதான் அண்ணே வாய்க்குது

Unknown said...

தல இது சாலை பாதுகாப்பு வார ஸ்பெசலா?

vasu balaji said...

மீ த 50

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

// நிஜமாவே நீங்க ரொம்ப பொருமை சாலிதாங்க. எப்படி நம்ம டிவியை பொருமையா பார்க்கறீங்க, பேப்பரை படிக்கிறீங்க..///

நோஓஓஓ. பேப்பரும் பார்க்கிறேந்தான்.

/எல்லார் காதையும் ஒழுங்கா கவனிச்சீங்களா... அதிகபட்சமா ரங்கமணிகள் காதுதான் காணும் என்று ஒரு காது வழி தகவல் தெரிவிக்கின்றது./

அவங்கதான் அதிகம்.காதறுபடாம தப்பிக்கிறது கூடுதல் அட்வாண்டேஜ்

க.பாலாசி said...

//ஜடைக்கு இடைஞ்சல் இல்லாம ஒரு ஆர்ச் வெச்ச ஹெல்மட் கண்டு புடிச்சவனும் நம்மாளுதான்.•//

ஹா..ஹா...

//ஆனாங்கொய்யாலே. அப்பக்கூட கரண்டிக்குள்ள ஹெட்ஃபோனு, ப்ளூடூத்து வெச்சிக்கிட்டு, சூப்பானோடயே செல்லுல பேசுவாங்களே தவிர அத மட்டும் நிறுத்த மாட்டாங்க.//

ஆனா உங்க அழும்புக்கு அளவே இல்லீங்க....

ஈரோட்டுகாரங்க காதுல அத மாட்டிகினு உங்க கண்ணுல பட்டுட்டாங்களே.

நிஜாம் கான் said...

//சாமிகளா! நானு ஊரு உலகம் தெரியாத அப்புராணி. வூடு உட்டா ஆபீசு ஆபீசு வுட்டா ஊடுன்னு இருக்குற ஆளு. அங்க இங்கன்னு திர்ர ஆளுங்க கொஞ்சம் சொல்லுங்கப்பு.//

நம்பிட்டோம்..,

நிஜாம் கான் said...

அண்ணே! அந்த வகையில் நம் தமிழ் நாட்டினம் குடுத்துவச்சவங்க..

நிஜாம் கான் said...

//இராகவன் நைஜிரியா said...


பெரிசுங்கன்னா அப்படித்தாங்க இருக்கணும்... சமத்தா//


எப்பூடி...,

மதார் said...

nalla sirikka vachuteenga sir ............

S.A. நவாஸுதீன் said...

///அடுத்த வாரம் பார்த்தா எல்லார் வாய்லயும் சூப்பான் ரப்பர் இருக்கும்///

ஹா ஹா ஹா. நம்ம ஆளுங்க அதெல்லாம் கரெக்டா ஃபாலோ பண்ணுவாங்க. ஏன் எதுக்குன்னு கேக்காமலேயே.

S.A. நவாஸுதீன் said...

///ஹெல்மட் போடுங்கப்பான்னா, மசிரு கொட்டிப் போகுது. கழுத்து வலி வருதுன்னு இவனுவளே சொல்லிகிட்டு போடுறதில்ல. இதுல வேற, உலகத்துலயே ஜடைக்கு இடைஞ்சல் இல்லாம ஒரு ஆர்ச் வெச்ச ஹெல்மட் கண்டு புடிச்சவனும் நம்மாளுதான். ///

பாதுக்காப்பைவிட ஃபேசனா இருக்கனுங்கறதுலதான் நம்ம ஆளுங்க குறியா இருக்காங்க. என்ன பன்றது

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ அண்ணே நல்லா விசாரிச்சீங்களா.. அது யூஸ் அண்ட் த்ரோ மாடலா இருக்கப் போவுது//

அதுக்கு அவ்வளவு காசு குடுத்து வாங்குவானா நம்மாளு:))

/இதுல இருந்து தெரிவது என்னவென்றால்... அண்ணன் குத்தாலம் போயிருக்கார். அங்கு பனை ஓலையில் கொடுக்கும் பலாப் பழத்தை வாங்கிச் சாப்பிட்டு இருக்கார். நாங்களும் கண்டுபிடிப்போமில்ல./

ம்கும். படத்தோட இடுகை கூட போட்டது. இவரு கண்டு பிடிப்பாராம்ல.:))

அது சரி. பின்னூட்டம் போடாமல் இருந்தால், எந்த வலைப்பூவும் படிக்க முடியாமல் வேலை நெட்டி வாங்கும் போது, படு டென்ஷன் ஏறுதே... அப்ப என்ன செய்வது அண்ணே..

ப்ளாக்கோ ஃபோபியா பிடிச்சுடுச்சோன்னு ஒரு பயம் வர ஆரம்பிச்சுடுச்சு... :-)//

நான்லாம் ஃபைல்லயே பின்னூட்டம் போட்டுடுவேன்:((

vasu balaji said...

க.பாலாசி said...

/ ஆனா உங்க அழும்புக்கு அளவே இல்லீங்க....

ஈரோட்டுகாரங்க காதுல அத மாட்டிகினு உங்க கண்ணுல பட்டுட்டாங்களே.//

hi hi.லுக்கும்மா லுக்கு:))

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/ பாக்குறதுக்கு தீவிரவாதி மாதிரியே திரிவாங்களே அதத்தானே சொல்றீங்க...இந்த காதுல மாட்டிட்டு திரியுறத கூட சில பேரு ஃபேசன்னு சொல்றான்..எல்லாம் காலக்கொடுமை//

அதே அதே.:))

vasu balaji said...

ஜிகர்தண்டா Karthik said...

/எது நல்ல ஃபிகர் எது அட்டு ஃபிகர்ன்னு தெரியாம
பசங்க திண்டாடி போறானுங்க.
இது ஆண்களுக்கு இழைக்கும் ஒரு சமூக அநீதி இல்லையா?
இதை யோசித்து வண்டி ஓட்டினாலும், விபத்து ஏற்படும்...//

அடங்கமாட்றானே:)). பயபுள்ளா ஏதோ அட்டு ஃபிகர்கு ரூட் போட்டு நொந்திச்சி போல:))

ஈரோடு கதிர் said...

//ஹெல்மட் போடுங்கப்பான்னா, மசிரு கொட்டிப் போகுது.//

யாருகிட்டே...

சரி ஒரு பஞ்சாயத்து வச்சிக்குவோம்..
ஹெல்மெட் போட்ட இருக்குற முடி கொட்டிப்போயிரும்... அப்போ ஹெல்மெட் போடமா இருந்தா கொட்டிப்போன முடி வந்து ஒட்டிக்குமா...

இப்படிக்கு,
பாலாசி மாதிரி இடுகைக்கு மேட்டர் கிடைக்காம, பிரபாகர் மாதிரி நிறைய மேட்டர் கிடைச்சவங்க மத்தியில மாட்டிக்கிட்டு அலைவோர் சங்கம்

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

ha..ha..haa..haa//

வாங்க சார்:))

vasu balaji said...

Balavasakan said...

என்ன கொடுமைண்ணே இது....//

எது இடுகையா? மேட்டரா?:))

vasu balaji said...

cheena (சீனா) said...

நகைச்சுவை - நல்ல இடுகை - நல்வாழ்த்துகள்//

நன்றிங்க சீனா:)

vasu balaji said...

நேசமித்ரன் said...

பூனை குட்டிய தூக்கிட்டு போறப்போ அச்சச்சோ அதுக்கு எவ்வளவு வலிக்கும்னு தோணும் ஆனா தாய் பூனைக்கு தெரியும் பல் பட்டும் படாம எப்பிடி தூக்கிட்டு போறதுன்னு

குட்டுறது கூட இவ்வளவு எள்ளலோட பிடிச்ச பிள்ளைய வாத்தி வகுப்புல கொட்ட சொன்னா மணிக்கட்ட மட்டையாக்கி கொட்டுற மாதிரி உங்களுக்குதான் அண்ணே வாய்க்குது//

ம்ம்ம். ரொம்ப நன்றி நேசன்:))

vasu balaji said...

முகிலன் said...

//தல இது சாலை பாதுகாப்பு வார ஸ்பெசலா?//

நம்ம பாதுகாப்பு பெசல்:))

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/ நம்பிட்டோம்..,/

ஹூம் காலம் அப்புடி:))

/ அண்ணே! அந்த வகையில் நம் தமிழ் நாட்டினம் குடுத்துவச்சவங்க../

நம்மள வச்சிதான் டெஸ்டு பண்றாய்ங்களோ

/
எப்பூடி...,/

அப்புடீ கேளுங்க நிஜாம்

vasu balaji said...

மதார் said...

//nalla sirikka vachuteenga sir ............//

நன்றிங்க. வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்:))

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/ ஹா ஹா ஹா. நம்ம ஆளுங்க அதெல்லாம் கரெக்டா ஃபாலோ பண்ணுவாங்க. ஏன் எதுக்குன்னு கேக்காமலேயே.//

அதான் புரியமாட்டங்குது:))
/பாதுக்காப்பைவிட ஃபேசனா இருக்கனுங்கறதுலதான் நம்ம ஆளுங்க குறியா இருக்காங்க. என்ன பன்றது/

ஆமாங்க:))

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ யாருகிட்டே...

சரி ஒரு பஞ்சாயத்து வச்சிக்குவோம்..
ஹெல்மெட் போட்ட இருக்குற முடி கொட்டிப்போயிரும்... அப்போ ஹெல்மெட் போடமா இருந்தா கொட்டிப்போன முடி வந்து ஒட்டிக்குமா...

இப்படிக்கு,
பாலாசி மாதிரி இடுகைக்கு மேட்டர் கிடைக்காம, பிரபாகர் மாதிரி நிறைய மேட்டர் கிடைச்சவங்க மத்தியில மாட்டிக்கிட்டு அலைவோர் சங்கம்//

ம்கும். நாட்டாமைன்னு ஒரு பேச்சுக்கு சொன்னா பஞ்சாயத்துன்னு சொம்ப தூக்கிட்டு அலையுறதா:))

ஸ்ரீராம். said...

ஊர்ல ஒருத்தர் மாட்டிகிட்டு திரியறதைப் பார்த்துட்டா விட மாட்டோம்ல.... அதை நாமளும் வாங்கி மாட்டி ஜோதில ஐக்கியமாரதுதான முறை...பண்பாடு...

சத்ரியன் said...

//ஆனாங்கொய்யாலே. அப்பக்கூட கரண்டிக்குள்ள ஹெட்ஃபோனு, ப்ளூடூத்து வெச்சிக்கிட்டு, சூப்பானோடயே செல்லுல பேசுவாங்களே தவிர அத மட்டும் நிறுத்த மாட்டாங்க.//

பாலா,

என்னடா ’பஞ்ச்’சக் காணமேன்னு பாத்தேன்.

அடியில வெச்சிட்டான்யா ஆப்பு....!

ரோஸ்விக் said...

//சாமிகளா! நானு ஊரு உலகம் தெரியாத அப்புராணி. வூடு உட்டா ஆபீசு ஆபீசு வுட்டா ஊடுன்னு இருக்குற ஆளு.//

கீழ நீங்க அடிச்ச காமடியில மயங்கி... மேல நீங்க சொன்ன பொய்யை எல்லாரும் விட்டுட்டாங்க பாருங்க... அய் அய் அய்... நான் விடுவேனா?? :-))

நீங்க சொன்ன மேட்டர காதுல நாள் பூராவும் மாட்டி வச்சிருக்காங்களே.... ஒரு மாதிரி ச்சச்சங்கட்டமா.... இருக்காது??

geethappriyan said...

நல்ல ஓட்டுக்கள் போட்டுட்டேங்க ஐயா

vasu balaji said...

ஸ்ரீராம். said...

/ஊர்ல ஒருத்தர் மாட்டிகிட்டு திரியறதைப் பார்த்துட்டா விட மாட்டோம்ல.... அதை நாமளும் வாங்கி மாட்டி ஜோதில ஐக்கியமாரதுதான முறை...பண்பாடு...//

எழுத்ப்படாத சட்டம் அதானே:))

vasu balaji said...

சத்ரியன் said...
/ பாலா,

என்னடா ’பஞ்ச்’சக் காணமேன்னு பாத்தேன்.

அடியில வெச்சிட்டான்யா ஆப்பு....!//

வாங்கண்ணா. எங்க ஆளைக் காணோம்.:))

vasu balaji said...

ரோஸ்விக் said...


/ கீழ நீங்க அடிச்ச காமடியில மயங்கி... மேல நீங்க சொன்ன பொய்யை எல்லாரும் விட்டுட்டாங்க பாருங்க... அய் அய் அய்... நான் விடுவேனா?? :-))

நீங்க சொன்ன மேட்டர காதுல நாள் பூராவும் மாட்டி வச்சிருக்காங்களே.... ஒரு மாதிரி ச்சச்சங்கட்டமா.... இருக்காது??//

அது என்ன இருந்தாலும் வெத்து கவுரவம் முக்கியம் அமைச்சரே:))