Monday, January 25, 2010

கேரக்டர் -1


ரயில்வே ஸ்டேஷன் மாதிரி ஒரு அலுவலகத்தில் பணிபுரிவது மிகவும் சுவாரசியமான விடயம். மனுசப் பொறப்பில எத்தனை வகையுண்டோ அத்தனையும் காணக்கூடும். ஆஜானுபாகுவாய், அரட்டலான பேச்சுடன் மிரட்டும் மனிதர், ஏதோ ஒரு தவறுக்கு எக்ஸ்ப்ளனேஷன் மெமோ அல்லது ஒரு ‘என்னய்யா வேலை பார்க்கற’க்கு தேம்பித் தேம்பி அழுவார். இருக்கிற இடம் தெரியாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் ஒரு ஜந்து எதற்கும் அஞ்சாமல் அலையவிட்டு வேடிக்கைப் பார்க்கும்.

நம் தோழர் இரண்டாவது ரகம். நெற்றியில் திருமண். முட்டிவரை ஏற்றிக்கட்டிய பஞ்சகச்சம். மேல்துண்டு போர்த்தியபடி கையில் ஒரு மஞ்சள் பையுடன் வருவார். அலுவலக வளாகத்துள் வந்ததும், மஞ்சள் பையில் சுருட்டி வைத்திருந்த சட்டையை போட்டுக் கொண்டு, மிலிட்டரிக்காரன் ரிப்பன் மாதிரி சிவப்பு, நீலம், கருப்பு பேனாக்களைச் சொருகிக் கொள்வார். மேல் துண்டை உதறி மடித்து பைக்குள் வைப்பார். பிறகு தன் அலுவலகம் நோக்கிப் போவார்.

மனுசனோட அலப்பறைக்கு முன்னால் வடிவேலு எல்லாம் காணாமல் போவார்கள். அலுவலகத்தில் கழிவாக பார்சல் வந்த மரப்பெட்டிகளை 5 ரூபாய்க்கு வாங்கி, தானே உடைத்து சும்மாடு கட்டி தலையில் வைத்துப் போக , ரிக்‌ஷாவில் போகலாமே என்று கரிசனப் பட்டவரிடம், அந்த 5 ரூ சேர்த்தா வீட்டருகில் விறகு வாங்க மாட்டேனா? உன்னை தூக்கிக் கொண்டு வரச் சொன்னேனா என்று ஒரு பிடி பிடிப்பார்.

ஆவடி அருகில் ஒரு அத்துவானக் காட்டில் யாருமே இல்லாத இடத்தில் ஒரு வீட்டைக் கட்டி குடிபோன 2ம் நாளே பக்கத்து சவுக்குக் காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதால் தன் உயிருக்கு ஆபத்து. போலீஸ் காவல் வேண்டும் என்று மனு கொடுத்து, வியாபாரி நம்ம ஆளை கிள்ளுக் கீரை என நினைத்து மிரட்ட, ஒரே ஒரு அடி தாங்க மாட்டேன். ஹார்ட் பேஷண்ட். உயிர் போயிடும். 

என் உசிருக்கு ஆபத்துன்னு எழுதிக் கொடுத்திருக்கேன். நான் தடுக்கி விழுந்து செத்தாலும் உன்னைத்தான் பிடிப்பாங்க என்றால் அந்தாள் என்ன செய்வார்? ஒண்ணும் தகராரில்லாம நான் பார்த்துக்கறேன் சாமி, பொழப்பில மண்ணைப் போடாதே என்று சரண்டராகிப் போன கதை பிரசித்தம்.

பெருமாள் கோவிலில் புத்தகம் வைத்துக் கொண்டு உபன்யாசம் செய்பவரிடம், பயபக்தியாக, அடியேன் விக்யாபனம். பகவான் கீதையில், என்று முழ நீளம் சம்ஸ்கிருதத்தில் ஸ்லோகம் சொல்லி, இதுக்கு அர்த்தம் என்ன என்று தேவரீர் விளக்கவேண்டும் என்பார். 

கண்கள் மேலே சொருக, வியர்த்து ஊத்த அது வந்து என்று தடுமாறி, தண்ணீர் குடித்து, கனைத்து ’இன்னைக்கு நான் அகப்பட்டேனா உனக்கு’ என்று ஹீனமாக பார்த்ததும் மடை திறந்தாற்போல் விளக்கம் சொல்லி, நான் புரிஞ்சிண்டது இப்படி. சரிதானா தேவரீர் சொல்லணும் என்றால் உபன்யாசம் செய்பவருக்கு சாஷ்டாங்கமாக காலில் விழத் தோணுமா தோணாதா?

எஞ்ஜினியரிங் பிரிவில் டிவிஷனல் அக்கவுண்டண்ட் என்ற பதவி எப்பொழுதும் கீரியும் பாம்பும் போல. கை சுத்தமில்லாவிடில் நாகமும் சாரையும் போல. பொதுவாக அப்படி போஸ்டிங் கிடைத்த அக்கவுண்டண்டை பாவப்பட்ட ஜன்மமாகத்தான் கருதுவார்கள். நம்ம ஆசாமிக்கு அப்படி போஸ்டிங் வந்ததும் எஞ்ஜினியருக்கு கட்டம் சரியில்லை என்று சிரித்தோம்.

அதுவும் புது அலுவலகம். அடுத்த நாள் திறப்பு விழா. தலைமை அதிகாரிகள் வர இருக்கிறார்கள். மொத்தமாக ஒரு 200 பேருக்கு மேல் வரக்கூடும் என்பதாலும், அதிகாரிகள் என்பதாலும் லட்டு, மிக்ஸர், டிகிரி காபிக்கு ஒரு சமையல்காரரை சொல்லி வைத்திருந்திருக்கிறார் எஞ்சினியர். நம்ம ஆசாமி, பஞ்சகச்சமும், மேல்துண்டுமாக வந்து அலுவலகத்தில் விசாரிக்க, எஞ்சினியர் ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்கிறார் எனக் கை காட்டினார்கள்.

அய்யா போய் வணக்கம் சொன்னதும், என்னய்யா நல்லா செய்வியா? ஒரு குறை வரப்படாது எனக் கூற அதெல்லாம் ஒரு குறையும் இருக்காது சார், நீங்களே பார்ப்பீர்கள் என்று சொல்லி இருக்கிறார். இப்படி நோஞ்சானாக ஒன்று என்ன செய்ய முடியும் என்று அதிகாரி சொறிந்தபடி, என்னய்யா நீ மட்டும் வந்திருக்கா? அடுப்பு, கரண்டி ஒண்ணும் காணோம். இங்க வாடகைக்கு வாங்குவியா எனக் கேட்க பிடித்தது சனி.

ஆங்கிலத்தில் என்னல்லாம் மேற்கோள் உண்டோ அத்தனையும் சொல்லி, உருவத்தைப் பார்த்து சமையல்காரன் என்று நினைத்த மாபெரும் குற்றத்துக்கு அடுத்த நாள் அதிகாரிகள் முன்னிலையில் நாட்டாமை என டரியலாக்கி, எல்லாரும் குறைந்த பட்சம் ஒன்றறை வருடங்களாவது குப்பை கொட்ட வேண்டிய அலுவலகத்தில் மூன்றே மாதத்தில் எங்களுக்கு அக்கவுண்டண்டே வேண்டாம் எனக் கதறலோடு திருப்பி அனுப்ப வைத்தவர்.

ரிட்டையர் ஆகும் அன்று மேலதிகாரியைச் சந்தித்து,  தன்னைப் போல் சட்டம் தெரிந்த, ரூல்சை கரைத்துக் குடித்த, எத்தனை பிரிவு உண்டோ அத்தனையிலும் வேலை செய்த (யப்பா..இந்தாளோட முடியல சாமி..மாத்திடுங்கன்னு கதறி கதறி எங்கேயும் 6 மாதத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் செக்‌ஷன் செக்‌ஷனாக மாற்றப்பட்டார்) தன்னை பரீட்சையில் தேறாமல் செய்து மார்க் கொடுக்காத அதிகாரிகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்று பரிதாபப்பட்டதை பெருமையாகச் சொல்லி, அனைவருக்கும் ஆசி கூறி சட்டை பட்டனை அவிழ்த்தபடி நடந்தார் அவர்.

88 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

வித்தியாசமான மனிதர் தான்.....

எப்படி சமாளிச்சீங்க இவர வச்சு.....
அதுக்கே பரிசு கொடுக்கனும்போல இருக்கு ரயில்வேக்கு

sathishsangkavi.blogspot.com said...

மனிதர்கள் பல வகை அதில் இவர் ஒரு வகை...

எறும்பு said...

you are a good observer(right word??)...

:)

எறும்பு said...

actually i have plan to write in this subject.. but you did..

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா கவனிச்சு எழுதி இருக்கீங்க...

Rekha raghavan said...

ஒ! அவரு ஓய்வுபெற்றுட்டாரா? நானும் தினமும் அவரை மின்சார ரயிலில் பார்த்திருக்கேன். ஆனா ஆபிசில் இப்படியெல்லாம் பண்ணுவாருன்னு தெரியாது. உங்க பதிவை படிச்சதுக்கப்புறம் தான் ஒரு மாதிரியான கேரக்டர் ஆசாமின்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

ரேகா ராகவன்.

Subankan said...

//கேரக்டர்-1 //

அப்ப தொடர்ந்து வரப்போகுதா? ஆரம்பமே வித்தியாசமா இருக்கே

Chitra said...

பறவைகள் மட்டும் இல்லை, மனிதர்களும் பல விதம். மேலும் அறிமுகப் படுத்தப் போகும் கேரக்டர்களும் சுவாரசியமாகத்தான் இருக்கும்

இராகவன் நைஜிரியா said...

வித்யாசமான மனிதர் தான். நீங்க அவரை நல்லா அவதானிச்சு இருக்கீங்க... அதுக்கே உங்களுக்கு ஒரு சபாஷ் போடலாம்.

MUTHU said...

செம டரியல்

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம்தான். அவரால் சில தொந்தரவுகள் ஏற்பட்டாலும் இப்படி அவரை ரசிக்க ஆரம்பித்து விட்டால் தொந்தரவின்றி உடன் பணி புரிந்திருக்கலாம்

Menaga Sathia said...

சுவராஸ்யமா இருக்கு இந்த கேரக்டர்...

கலகலப்ரியா said...

=)))).. எனக்கு ஒண்ணு மட்டும் புரியல சார்... இந்தக் காரக்டர் நல்லதா கெட்டதா...?

ஈரோடு கதிர் said...

அண்ணாச்சி...

ரெண்டு நாள நம்மகிட்ட ஒரு கொசு செமையா கடிக்குது... எப்படி அடிச்சாலும் எஸ்கேப் ஆகுது...

கொஞ்சம் இந்த கேரக்டரவிட்டு ஏதாவது பண்ண முடியுமானு பாருங்க

பின்னோக்கி said...

பறவைகள் பல விதம் மாதிரி, மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதம். அழகான கேரக்டர் ஸ்டடி, உங்களின் எளிய நடையில் அழகாக இருந்தது.

ஒரு சின்ன விடயம்.
கேரக்டர் - 1,2 என்று போடுவதால், தொடர் போல ஆகிவிடும் அபாயம் உண்டு. அதனால் நம்பருடன், அவரின் அடையாளமாக ஒரு பெயரும் (உண்மையான பெயர் இல்லை..) குடுத்தால் மேலும் நன்றாக இருக்கும். கேரக்டருக்கு சாவி அவர்கள் பெயர் கொடுத்த விதமாக. உங்களை சாவியின் மறு அவதாரமாக பார்ப்பதால் இதை சொல்கிறேன். :)

பின்னோக்கி said...

பெயர் குடுக்க சொல்லி கொஞ்சம் குழப்பிட்டேன்னு நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக “பஞ்சகச்சம் பரமசிவம்” அப்படி ரிதமிக்கா பெயர் யோசியுங்க :)

பின்னோக்கி said...

கார்டு கந்தசாமி
டிக்கட் வெங்கட்

அப்படி தொழில்முறையா பேர் வைங்க.

Unknown said...

நல்ல அப்சர்வேசன் சார்.

//கலகலப்ரியா said...
=)))).. எனக்கு ஒண்ணு மட்டும் புரியல சார்... இந்தக் காரக்டர் நல்லதா கெட்டதா...?
//

தெரியலயேம்மா...

டண்டடண்ட டண்டடாய்ங்க்..

shortfilmindia.com said...

அவர் கேரக்டர் இண்ட்ரஸ்டிங் என்றால் அதை எழுதியிருக்கும் விதமும் இண்ட்ரஸ்டிங்..

கேபிள் சங்கர்

சங்கர் said...

//கலகலப்ரியா Says:
=)))).. எனக்கு ஒண்ணு மட்டும் புரியல சார்... இந்தக் காரக்டர் நல்லதா கெட்டதா...?//

யக்கா, அடுத்த கவித எப்போ எழுதுவீங்க ? :))))))))))

சங்கர் said...

// முகிலன் said...
டண்டடண்ட டண்டடாய்ங்க்.//

அது 'டிங் டி டிங் டி டிங் டி டிங் டி டிங்' இல்ல :))

வெற்றி said...

// ஆரூரன் விசுவநாதன் said...

வித்தியாசமான மனிதர் தான்.....

எப்படி சமாளிச்சீங்க இவர வச்சு.....
அதுக்கே பரிசு கொடுக்கனும்போல இருக்கு ரயில்வேக்கு//

ரிப்பீட்டு..:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present Sir

புலவன் புலிகேசி said...

மனிதர்கள் பலவிதம் ஒவ்வ்வொன்றும் ஒருவிதம். என் கல்லூரி ஆசிரியர் ஒருவர் நினைவுக்கு வருகிறார்.

balavasakan said...

ரிப்பீட்டு..மனிதர்கள் பலவிதம் ஒவ்வொண்ணும் ஒருவிதம் ...

நாடோடி said...

முதல் கேரக்ட்ரே நல்ல ஆரம்பித்துள்ளீர்கள்..தொடர்ந்து எழுதுங்கள்.

S.A. நவாஸுதீன் said...

சுவாரசியமான மனிதர் தான் (தூரமா நின்னு வேடிக்கை பார்க்கிறதுக்கு மட்டும்)

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

வித்தியாசமான மனிதர் தான்.....

எப்படி சமாளிச்சீங்க இவர வச்சு.....
அதுக்கே பரிசு கொடுக்கனும்போல இருக்கு ரயில்வேக்கு//

:)). சொன்னது கொஞ்சம்.

vasu balaji said...

Sangkavi said...

மனிதர்கள் பல வகை அதில் இவர் ஒரு வகை...//

ம்ம்

vasu balaji said...

எறும்பு said...

you are a good observer(right word??)...

:))
/actually i have plan to write in this subject.. but you did../

பண்ணுங்க அது வித்தியாசமாதான் வரும்:))

vasu balaji said...

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா கவனிச்சு எழுதி இருக்கீங்க...//

அனுபவிச்ச்ச்ச்சி எழுதினது:))

vasu balaji said...

KALYANARAMAN RAGHAVAN said...

ஒ! அவரு ஓய்வுபெற்றுட்டாரா? நானும் தினமும் அவரை மின்சார ரயிலில் பார்த்திருக்கேன். ஆனா ஆபிசில் இப்படியெல்லாம் பண்ணுவாருன்னு தெரியாது. உங்க பதிவை படிச்சதுக்கப்புறம் தான் ஒரு மாதிரியான கேரக்டர் ஆசாமின்னு தெரிஞ்சுக்கிட்டேன்.//

மின்சார ரயில்ல பார்த்திருந்தா பாதிநாள் இறக்கி விட்டிருப்பாங்களே. தெரிஞ்சிருக்கணுமே.

vasu balaji said...

Subankan said...

//கேரக்டர்-1 //

அப்ப தொடர்ந்து வரப்போகுதா? ஆரம்பமே வித்தியாசமா இருக்கே//

:)). நினைக்கிறேன். பார்க்கலாம்.

vasu balaji said...

Chitra said...

பறவைகள் மட்டும் இல்லை, மனிதர்களும் பல விதம். மேலும் அறிமுகப் படுத்தப் போகும் கேரக்டர்களும் சுவாரசியமாகத்தான் இருக்கும்//

நன்றி சித்ரா.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

வித்யாசமான மனிதர் தான். நீங்க அவரை நல்லா அவதானிச்சு இருக்கீங்க... அதுக்கே உங்களுக்கு ஒரு சபாஷ் போடலாம்.//

அப்போ போடலையா?

vasu balaji said...

Tamilmoviecenter said...

செம டரியல்//

நன்றிங்க

vasu balaji said...

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம்தான். அவரால் சில தொந்தரவுகள் ஏற்பட்டாலும் இப்படி அவரை ரசிக்க ஆரம்பித்து விட்டால் தொந்தரவின்றி உடன் பணி புரிந்திருக்கலாம்//

:))

vasu balaji said...

Mrs.Menagasathia said...

சுவராஸ்யமா இருக்கு இந்த கேரக்டர்...//

ஆமாம். பாதிக்கப்படாதவரை

vasu balaji said...

கலகலப்ரியா said...

=)))).. எனக்கு ஒண்ணு மட்டும் புரியல சார்... இந்தக் காரக்டர் நல்லதா கெட்டதா...?/

பல நேரம் நல்லது. ஒரு சிலருக்கு கெட்டது:))

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

அண்ணாச்சி...

ரெண்டு நாள நம்மகிட்ட ஒரு கொசு செமையா கடிக்குது... எப்படி அடிச்சாலும் எஸ்கேப் ஆகுது...

கொஞ்சம் இந்த கேரக்டரவிட்டு ஏதாவது பண்ண முடியுமானு பாருங்க//

கொசு எப்படின்னு தெரியலையே:))

vasu balaji said...

பின்னோக்கி said...

பறவைகள் பல விதம் மாதிரி, மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதம். அழகான கேரக்டர் ஸ்டடி, உங்களின் எளிய நடையில் அழகாக இருந்தது.

ஒரு சின்ன விடயம்.
கேரக்டர் - 1,2 என்று போடுவதால், தொடர் போல ஆகிவிடும் அபாயம் உண்டு. அதனால் நம்பருடன், அவரின் அடையாளமாக ஒரு பெயரும் (உண்மையான பெயர் இல்லை..) குடுத்தால் மேலும் நன்றாக இருக்கும். கேரக்டருக்கு சாவி அவர்கள் பெயர் கொடுத்த விதமாக. உங்களை சாவியின் மறு அவதாரமாக பார்ப்பதால் இதை சொல்கிறேன். :)//
ஆமாம் சரிதான். ஆனா சாவி எங்கே நான் எங்கே..அவ்வ்வ்வ்வ்வ்

/ பின்னோக்கி said...

பெயர் குடுக்க சொல்லி கொஞ்சம் குழப்பிட்டேன்னு நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக “பஞ்சகச்சம் பரமசிவம்” அப்படி ரிதமிக்கா பெயர் யோசியுங்க :)/

=)). பார்க்கலாம்.

vasu balaji said...

முகிலன் said...

நல்ல அப்சர்வேசன் சார்.

//கலகலப்ரியா said...
=)))).. எனக்கு ஒண்ணு மட்டும் புரியல சார்... இந்தக் காரக்டர் நல்லதா கெட்டதா...?
//

தெரியலயேம்மா...

டண்டடண்ட டண்டடாய்ங்க்..//

நன்றி முகிலன்..கலகலாவ கலாய்க்கிறீங்க. கவிதை எழுதற ஐடியா இல்லையே:))

vasu balaji said...

shortfilmindia.com said...

அவர் கேரக்டர் இண்ட்ரஸ்டிங் என்றால் அதை எழுதியிருக்கும் விதமும் இண்ட்ரஸ்டிங்..

கேபிள் சங்கர்//

வாங்க சங்கர் சார்:)) ரொம்ப நன்றி.

vasu balaji said...

சங்கர் said...

// முகிலன் said...
டண்டடண்ட டண்டடாய்ங்க்.//

அது 'டிங் டி டிங் டி டிங் டி டிங் டி டிங்' இல்ல :))

:))

vasu balaji said...

வெற்றி said...

// ஆரூரன் விசுவநாதன் said...

வித்தியாசமான மனிதர் தான்.....

எப்படி சமாளிச்சீங்க இவர வச்சு.....
அதுக்கே பரிசு கொடுக்கனும்போல இருக்கு ரயில்வேக்கு//

ரிப்பீட்டு..:)//

வாங்க வெற்றி

vasu balaji said...

T.V.Radhakrishnan.. said...

Present Sir//
:))

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

மனிதர்கள் பலவிதம் ஒவ்வ்வொன்றும் ஒருவிதம். என் கல்லூரி ஆசிரியர் ஒருவர் நினைவுக்கு வருகிறார்.//

ஆஹா.

vasu balaji said...

Balavasakan said...

ரிப்பீட்டு..மனிதர்கள் பலவிதம் ஒவ்வொண்ணும் ஒருவிதம் ...//

இதெப்ப படம் மாத்தினா?

vasu balaji said...

நாடோடி said...

முதல் கேரக்ட்ரே நல்ல ஆரம்பித்துள்ளீர்கள்..தொடர்ந்து எழுதுங்கள்.//

நன்றிங்க.

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

சுவாரசியமான மனிதர் தான் (தூரமா நின்னு வேடிக்கை பார்க்கிறதுக்கு மட்டும்)//

சரியா சொன்னீங்க.

செ.சரவணக்குமார் said...

நல்லாயிருக்கு சார், சிறுகதை படித்த உணர்வு. தொடர்ந்து நிறைய கேரக்டர்களைப் பற்றி எழுதுங்கள்.

அகல்விளக்கு said...

யாருங்க சார் அது....

செம டரியலான ஆளா இருக்கும் போல...

முதல் கேரக்டரே சூப்பரு....

இதேமாதிரி வித்தியாசமா அடுத்தடுத்து எதிர்பாக்கிறேன்

நிஜாம் கான் said...

அண்ணே! இந்த மாதிரி ஒரு ஆளு எல்லா டிபார்ட்மெண்டிலும் இருப்பார். அவரு கூட குடும்பம் நடத்துறதுவங்க தான் பாவம்..,

நிஜாம் கான் said...

தலைப்பு :கேரர்டர் 1.....அடுத்து கே 2... அப்டின்னா இது மெஹா சீரியலை விட அதிக நாள் தொடரும்னு நெனக்கிறேன்

நிஜாம் கான் said...

என்ன அநியாயம் இந்த இடுகைக்கும் ஆப்போசிட் ஓட்டு இல்லையா? அண்ணன்களுக்கு விடுமுறையோ????

பிரபாகர் said...

வித்தியாசமான கேரக்டர்தான் நீங்கள் சொல்லியிருப்பவர். இந்த மாதிரி நானும் சில கேரக்டரைப் பார்த்திருக்கிறேன், இன்னும் வித்தியாமாய். இவர்களையெல்லாம் புகழ்ந்து பேசினால் சரி செய்துவிடலாமே? அந்த மாதிரி இல்லையா இவர்?

பிரபாகர்.

ரோஸ்விக் said...

நெம்பக்கஷ்டம் அண்ணே.... :-)

thiyaa said...

நான் வந்திட்டன் கொஞ்சநாள் ஓய்வுக்கு பிறகு வந்திருக்கிறன்

அது சரி(18185106603874041862) said...

good 'un ya

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said..
/அண்ணே! இந்த மாதிரி ஒரு ஆளு எல்லா டிபார்ட்மெண்டிலும் இருப்பார். அவரு கூட குடும்பம் நடத்துறதுவங்க தான் பாவம்..,/

ஆமாங்க நிஜாம்.

vasu balaji said...

பிரபாகர் said...

வித்தியாசமான கேரக்டர்தான் நீங்கள் சொல்லியிருப்பவர். இந்த மாதிரி நானும் சில கேரக்டரைப் பார்த்திருக்கிறேன், இன்னும் வித்தியாமாய். இவர்களையெல்லாம் புகழ்ந்து பேசினால் சரி செய்துவிடலாமே? அந்த மாதிரி இல்லையா இவர்?//

இது வேற கேஸ்

vasu balaji said...

ரோஸ்விக் said...

நெம்பக்கஷ்டம் அண்ணே.... :-)

:))

vasu balaji said...

தியாவின் பேனா said...

நான் வந்திட்டன் கொஞ்சநாள் ஓய்வுக்கு பிறகு வந்திருக்கிறன்//

வாங்க வாங்க தியா:))

vasu balaji said...

அது சரி said...

good 'un ya//

Thank you:)

க.பாலாசி said...

நம்மளமாதிரின்னு சொல்லுங்க...

balavasakan said...

வந்தேன் ஐயா...

இளமுருகன் said...

ஹா..ஹா..ஹா...
இன்னும் இதுமாதிரி காரக்டர் தொடர்ந்து வரட்டும்

Radhakrishnan said...

மிகவும் வித்தியாசமான மனிதராகத்தான் வாழ்ந்து இருக்கிறார்.

வெள்ளிநிலா said...

எல்லோரும் நல்ல எழுதுறீங்க இதையெல்லாம் படிக்க , ப்ளாக் படிக்கும் வேலை மட்டும் கடச்சா நல்ல இருக்கும் !

thiyaa said...

மனிதர்கள் பலரகம்
அவர் குணங்களும் பலவிதம்

உங்களின் அனுபவத்தை தொடருங்கள் நண்பரே.

திவ்யாஹரி said...

புலவன் புலிகேசி டரியலை பார்த்து தான் தங்கள் வலைக்குள் வந்தேன்.. உங்களின் பதிவுகளுக்கு புலவர் கொடுத்த உதாரணமான "நறுக்குன்னு நாலு வார்த்த V 4.3" பதிவை படித்தேன். படித்தவை அனைத்தும் அசத்தல்..

புலவன் புலிகேசி said...

என்ன ஐயா ஒரு 4 நாளா ஆளக்காணோம். சீக்கிரம் எழுதுங்க...எங்க போயிட்டீங்க???

அன்புடன் மலிக்கா said...

நல்லா எழுதி இருக்கீங்க
வானம்பாடிகளாரே!

ஸ்ரீராம். said...

ஆறாவது நாளா வந்து பார்த்து போறேன்..என்ன சார் ஆச்சு? எங்கே காணோம்?

Thenammai Lakshmanan said...

அய்யய்யயோ பயமா இருக்கு வானம்பாடி

அவர் எங்கே இருக்கார் சென்னையிலா?

vasu balaji said...

Balavasakan said...

வந்தேன் ஐயா...//

வாங்க ஐயா

vasu balaji said...

க.பாலாசி said...

நம்மளமாதிரின்னு சொல்லுங்க...//

சத்தியம்பா சாமி. அதே லொள்ளுதான்

vasu balaji said...

இளமுருகன் said...

ஹா..ஹா..ஹா...
இன்னும் இதுமாதிரி காரக்டர் தொடர்ந்து வரட்டும்//

வரும்.:)

vasu balaji said...

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் வித்தியாசமான மனிதராகத்தான் வாழ்ந்து இருக்கிறார்.//

ஆமாம் சார்:)

vasu balaji said...

vellinila said...

எல்லோரும் நல்ல எழுதுறீங்க இதையெல்லாம் படிக்க , ப்ளாக் படிக்கும் வேலை மட்டும் கடச்சா நல்ல இருக்கும் !//

நன்றி சார் முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.

vasu balaji said...

தியாவின் பேனா said...

மனிதர்கள் பலரகம்
அவர் குணங்களும் பலவிதம்

உங்களின் அனுபவத்தை தொடருங்கள் நண்பரே.//

ம்ம்

vasu balaji said...

திவ்யாஹரி said...

புலவன் புலிகேசி டரியலை பார்த்து தான் தங்கள் வலைக்குள் வந்தேன்.. உங்களின் பதிவுகளுக்கு புலவர் கொடுத்த உதாரணமான "நறுக்குன்னு நாலு வார்த்த V 4.3" பதிவை படித்தேன். படித்தவை அனைத்தும் அசத்தல்..//

முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றியம்மா.:)

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

என்ன ஐயா ஒரு 4 நாளா ஆளக்காணோம். சீக்கிரம் எழுதுங்க...எங்க போயிட்டீங்க???//

:). உடம்பு சுகமில்லை. அவ்வளவுதான்

vasu balaji said...

அன்புடன் மலிக்கா said...

நல்லா எழுதி இருக்கீங்க
வானம்பாடிகளாரே!//

நன்றிங்கம்மா

S.A. நவாஸுதீன் said...

என்னாச்சு சார். இப்ப எப்படி இருக்கு?

vasu balaji said...

ஸ்ரீராம். said...

ஆறாவது நாளா வந்து பார்த்து போறேன்..என்ன சார் ஆச்சு? எங்கே காணோம்?//

கொஞ்சம் மூட், நிறைய உடம்பு சரியில்லை..அவ்வளவுதான்:)) சாரி

vasu balaji said...

thenammailakshmanan said...

அய்யய்யயோ பயமா இருக்கு வானம்பாடி

அவர் எங்கே இருக்கார் சென்னையிலா?//

ஆஹா! யாராவது குழம்பு வெச்சிட்டாங்களோன்னு பார்த்தீங்களா:))

பெசொவி said...

ஆள் எப்படி இருந்தாலும், அந்த சாராய பார்ட்டியை சமாளிச்சதை பாராட்டியே ஆகணும்.