Wednesday, January 20, 2010

பட விமரிசனப் பஞ்சாயத்து -1

(பொங்கல் படங்களை விமரிசனம் செய்து டரியலாக்கியாதால் கடுப்பான திரையுலகம் பஞ்சாயத்துக்கு தலைவர் தலைமையில் கூட்டம் நடக்கிறது. வழக்கம் போல் அதிகப்பிரசிங்கித் தனமான கற்பனை மற்றும் உரிமை. எப்பவும் போல மன்னிச்சுடுங்க எஜமான்)

ரா.ர: எங்கப்பா தலைவர் வர நேரமாச்சி இன்னும் பதிவருங்க ஒருத்தர் கூட வரலை.

மு.காளை: தல! கெளம்பிட்டாங்களாம் தல. வர வழியில ஓட்டேரி முக்கு சந்துல ஒரு மெஸ்ல இட்லி வடகறி சூப்பர்னு கேபிள் அங்க எல்லாரையும் கூட்டிட்டு போய்ட்டாராம். வந்துட்டே இருக்காங்களாம். தோ வந்துட்டாங்க.

ரா.ர: வாங்க வாங்க. பதிவர்லாம் அந்த பக்கம் உக்காருங்க.

(கேபிளார் எப்பவும் போல் ஆட்டோவில் வந்து லேட்டாக வருகிறார்.)

ரா.ர: ஏப்பா காளை. இவரு படவுலகா? பதிவுலகா?

வடிவேலு: நான் சொல்றேன் நான் சொல்றேன். ரெண்டும். இவருதான் கேபிள் சங்கர். கவிதையெல்லாம் எழுதுவாரு. தோ எண்டர் ஆய்ட்டாரு. கூப்பிட்டு நம்ம பக்கம் இழுத்து விடுங்க பாதி செயிச்சிட்டா மாதிரி.

ரா.ர: ஓ. அதனாலதான்  இவரு  எண்டர் கவியா?

கேபிள்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். அண்ணே! ரொம்ப சந்தோஷம்ணே. நீங்களாவது எண்டர் கவிதைய புரிஞ்சி வெச்சிருக்கீங்களே.

தண்டோரா: தோ! தோ! இந்த பக்கம் வாங்கண்ணே. இப்புடியே அந்த பக்கம் போனா அப்புறம் எதிர் இடுகை போடுவேன்.

கேபிள்: இருப்பா இருப்பா. நான் எந்த பக்கமும் இல்லை. நடுவில. நியாயமாதான் பேசுவேன்.

ஆ.வீ: நியாயம் பேச தலைவர் உந்தி. வேற யாரும் நியாயம் பேச அருகதை உள்ளதா என சிந்தித்து....சரி சரி. கட்சி மீட்டிங்னு நினைச்சிட்டேன். இதோ தலைவர் ஒச்சிந்தி..

பாலாசி: அய்யோஓஓ(மயங்கி விழுகிறார். கதிர் பண்ணாரி அம்மன் திருநீறு பூசி, தம்பி வேணாம்னா கேக்காம நமீதாவ பார்க்கணும்னு முன்வரிசையில வந்தா இப்புடிதான்.பின்னாடி போய் உக்காரு ராசா)

ஆ.வீ:ஏமாய்ந்தி?

கதிர்: அது ஒண்ணுமில்லீங். ஒரு நாள் பவர்கட்டுல வீட்டுக்கு போயிருக்காரு ராத்திரி. டி.வி குடுக்க போறீங்கன்னு உங்க கட் அவுட் பார்த்து பேய்னு பயந்துட்டாரு. அப்பல இருந்து உங்க ஃபோட்டோ பார்த்தாலே இப்புடித்தான்.

ஆரூரன்: ஆமா. பாலாசி. நீ இங்க வா. நான் அங்க வரேன்.

பாலாசி: அட இவரு வேறங்ணா. இடுகை படிக்கப் போனாதான் பின்னாடியே வராருன்னா இங்கயும் போட்டியா?

ஆ.வீ: தலைவர் ஒச்சிந்தி. வாழ்க!

தலைவர்: வணக்கம். வணக்கம். இதாருப்பா நடுவில எனக்கு எதிரா இன்னோரு சேர் போட்டது. அம்மா வராங்களா?

ஆ.வீ: லேது லேது. அது கேபிளாருக்கு. அவரு நியாயமா ரெண்டு பக்கமும் சேராம இருக்காராம்.

தலைவர்: அன்பு உடன் பிறப்பே. அண்ணா அன்றே சொன்னார். நன்றே சொன்னார். நாட்டாமை என்று ஒன்று உண்டென்றால் அது தம்பி...

ஆ.வீ: தலைவா! நீங்கதான் துண்டு போட்டிருக்கீங்க. நீங்கதான் நாட்டாமை. டவுட்டே லேது.

தண்டோரா: ஏன் கேபிள். அப்போ சொம்பு...

கேபிள்: (சிரிப்பை அடக்க முடியாமல்) தலைவரே. அடக்கி வாசிங்க. போகும்போது கவனிச்சிக்கறேன். அய்யோ சாமி முடியல..

ரா.ர: இவங்கல்லாம் பதிவருங்க. இவரு கேபிள் சங்கர். குறும்படம் எல்லாம் எடுத்திருக்காரு. அடுத்ததா படம் எடுக்க போறாரு. அதனால திரையுலகத்தை

தண்டோரா: அல்லோ. இந்த கதையெல்லாம் வேணாம். அவர் பதிவ பார்த்தீங்களா? பதினெட்டே நாளில் எவ்ளொ ஹிட் வாங்கியிருக்காருன்னு.. அதெல்லாம் விட அவர் எங்க கூட இருக்கிறப்பதான் யூத்தா இருப்பாரு. உங்க மேக்கப் கூட்டத்துல அந்த இமேஜ் போய்டும். சினிமால எண்டர் கவிதை எடுக்க முடியுமா? வந்துட்டாரு..பதிவர் கேபிள்யா. பதிவர் கேபிள்.

கார்க்கி:மி த ஃபர்ஸ்ட். கலக்கிட்டீங்க தலைவா

கேபிள்: தண்டோரா. :))

வானம்பாடி: அசத்தல்

டி.வி.ஆர் :  :))

பட்டர்ஃப்ளை சூர்யா: தலைவா! பிரமாதம்.

தலைவர்: இருங்கப்பா இருங்கப்பா. என்ன இது

ரா.ர: இதாங்க. இவங்கல்லாம் ஃபாலோயர்ஸ். இடுகை போட்ட கையோட இப்படியே ஏத்தி விடுவாங்க.

தலைவர்: ஹூம். நம்ம தொண்டனுங்க இவ்ளோ சுறுசுறுப்பா இருந்தா எவ்ளோ காசு மிச்சம்.

ஆ.வி.: தலைவரே. இவங்க இண்டிக்கி பவர் கட் பண்ணிட்டா? இடுகை போட முடியாதில்ல. எப்புடீஈஈ

தலைவர்: முதல்ல உன் பவர் கட் பண்ணனும் ஓவரா ஊத்துற. சரி சரி! இப்போ என்ன பிரச்சன அத சொல்லுங்க.

ரா.ர: அய்யா.. பொங்கலுக்கு அய்யா மனசிறங்கி 5 காட்சி நடத்தலாம்னு அனுமதி குடுத்தீங்க. ராத்திரி ஒன்னரை மணிக்கு படம் முடிஞ்சி 2 மணிக்கு இடுகை போட்டு கிழிக்கிறாங்கய்யா. 5 காட்சிக்கு 25 விமரிசனம்லாம் டூ மச்சுங்கய்யா.

ரஜினி: அய்யா! நா சொன்னேன். திருட்டு விசிடி நல்ல விளம்பரம் உடனே ரிலீஸ் பண்ணுங்கன்னு. இவங்க அத விட வேகமா இண்டர்வல்லயே பொட்டி தட்டி பாதி படம் போர் மீதி பட விமரிசனம் தொடரும்னு போடுவாங்க போலய்யா. அடங்க மாட்றாங்க.

தலைவர்: இருங்கப்பா. முதல்ல ஒரு ஒரு படமா சொல்லுங்க. முதல்ல யாரு

ரா.ர: ஆயிரத்தில் ஒருவன்.

தலைவர்: ஐ ஊத்திகிச்சா? அம்மையார் படம் ஊத்திகிச்சா. உய் உய் அ உய்.

ரா.ர: தல தல. இது அதில்ல. இது செல்வராகவன்

தண்டோரா: ஆஆஆ. செல்வா எங்க எங்க! நான் கட்டி பிடிச்சி பாராட்டணும் எங்க?

செல்வா: அய்யாங். எம்பேண்டு. புடிங்க புடிங்க அவர.

ரா.ர. பாருங்க தலைவா! பய புள்ள எப்புடி பயந்து போயிருக்கு. விமரிசனம் எழுதறேன்னு அநியாயம் பண்றாங்க தலைவா.

(தொடரலாமா)

73 comments:

ஈரோடு கதிர் said...

தொடரலாம்...

ஆனா...
படிச்சுட்டு வந்து
நான் தொடருரேன்

பழமைபேசி said...

சாயுங்காலமா வந்து......

manjoorraja said...

தொடரலாம்.

தொடராமலும் இருக்கலாம்

எல்லாம் உங்க வசதியை பொருத்து.

அகல்விளக்கு said...

//(தொடரலாமா)//

என்ன கேள்வி இது...

மீதி படத்தோட விமர்சனத்தையெல்லாம் எங்க பாக்குறது...

தொடருங்கள்... தொடருங்கள்...

பா.ராஜாராம் said...

ஹா..ஹா..ஹா..

இதுதான் பாலா சார் யூத்!

தொடராம?

S.A. நவாஸுதீன் said...

தொடர்ந்தே ஆகனும்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

தொடரலாம்.

க.பாலாசி said...

//கதிர்: அது ஒண்ணுமில்லீங். ஒரு நாள் பவர்கட்டுல வீட்டுக்கு போயிருக்காரு ராத்திரி. டி.வி குடுக்க போறீங்கன்னு உங்க கட் அவுட் பார்த்து பேய்னு பயந்துட்டாரு. அப்பல இருந்து உங்க ஃபோட்டோ பார்த்தாலே இப்புடித்தான்.//

ஆமாங்க அதுவொரு பெரிய கதை...ஆனாலும் உங்களுக்கு ஞாபகம் அதிகம்...(போட்டோவ பார்த்தா மட்டுமில்லீங்க...)

Radhakrishnan said...

தொடரட்டும்.

க.பாலாசி said...

//ரா.ர: இதாங்க. இவங்கல்லாம் ஃபாலோயர்ஸ். இடுகை போட்ட கையோட இப்படியே ஏத்தி விடுவாங்க. //

அதுவொரு கலை...அதெல்லாம் இவங்களுக்கு எப்டித்தெரியும்...

Rekha raghavan said...

தொடரலேன்னா...தெரியும் சேதி. (மீண்டும் படிக்க என் "செல் போன் நடிகர்கள் " பதிவை)

ரேகா ராகவன்.

சிநேகிதன் அக்பர் said...

கலக்கல் சார். தொடரவும்.

ஆரூரன் விசுவநாதன் said...

எல்லாத்தையும் கலாய்க்கிறீங்க.......
ம்ம்ம்ம்....நடத்துங்க...நடத்துங்க.....

Jerry Eshananda said...

கலக்கல்.continue.

செ.சரவணக்குமார் said...

கலக்கல், தொடருங்க தலைவா. (நாங்களும் உசுப்பேத்தி விடுவோம்ல..)

balavasakan said...

சும்மா பிச்சி உதறீட்டிங்க சார்.. அடுத்தபாகம் இன்னும் கலகஙலப்பாக இருக்கும்ன்னு நினைக்கிறேன்... ஹி..ஹி

பிரபாகர் said...

தொடரனுமாவா? உண்டு இல்லன்னு ஆயிடும், முடிஞ்சா உடனே இடுகை போடுங்க! அற்புதம்.... சிரிச்சிகிட்டே இருக்கேன், அலுவலகத்துல...(ராத்திரி, யாரும் பக்கத்துல இல்ல! தப்பிச்சேன்...)

பிரபாகர்.

*இயற்கை ராஜி* said...

தொடரலாம் தொடரலாம் தொடரலாம்

ஈரோடு கதிர் said...

//பாலாசி: அட இவரு வேறங்ணா. இடுகை படிக்கப் போனாதான் பின்னாடியே வராருன்னா இங்கயும் போட்டியா?
//

அட்ரா சக்கை....அட்ரா சக்கை

மனசில இருக்குறதெல்லாம் வெளியே வருது

ஈரோடு கதிர் said...

//செல்வா: அய்யாங். எம்பேண்டு. புடிங்க புடிங்க அவர.//

அய்ய்ய்யோ சாமி... இதுதான் டாப்பு

துபாய் ராஜா said...

அருமை சார். அப்படியே அடிச்சு ஆடுங்க. கைதட்டி, விசிலடிச்சு ரசிக்கிறோம் நாங்க... :))

ஈரோடு கதிர் said...

ஏண்ணே... வடிவேலுக்கு டயலாக் கம்ம்ம்ம்ம்ம்ம்ம்மியா இருக்கு...

பிரபாகர் said...

கதிர், சிரிச்சி முடிச்சி சொல்லலாம்னு நினச்சத சொல்லிட்டீங்க. செல்வா தண்டோரா அண்ணன பாக்கற மாதிரி ஒரு சூழ்நிலை வந்தா நாலஞ்சி பேண்ட் போட்டுட்டு வரது ரொம்ப நல்லது!

பிரபாகர்.

பிரபாகர் said...

// ஈரோடு கதிர் சைட்...
ஏண்ணே... வடிவேலுக்கு டயலாக் கம்ம்ம்ம்ம்ம்ம்ம்மியா இருக்கு...
//

அருத்த பாகத்துல அளப்பற உடுவாருன்னு நினக்கிறேன்...

பிரபாகர்.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/தொடரலாம்...

ஆனா...
படிச்சுட்டு வந்து
நான் தொடருரேன்/

ம்கும். இல்லீன்னா யாரு விட்டா:))

/அட்ரா சக்கை....அட்ரா சக்கை

மனசில இருக்குறதெல்லாம் வெளியே வருது/

இவரு மனசுல வேற வெச்சுக்கறாரா:))

/அய்ய்ய்யோ சாமி... இதுதான் டாப்பு/

அட இல்ல. பேண்டு பாட்டம்:))

/ஏண்ணே... வடிவேலுக்கு டயலாக் கம்ம்ம்ம்ம்ம்ம்ம்மியா இருக்கு.../

அட ரெய்டுல எல்லாம் சீல் வெச்சிட்டாங்க. சவுண்டெங்க உட்றது:((அவ்வ்வ்வ்வ்வ்தான்

vasu balaji said...

பழமைபேசி said...

சாயுங்காலமா வந்து......

..........சரி:))

vasu balaji said...

மஞ்சூர் ராசா said...

/ தொடரலாம்.

தொடராமலும் இருக்கலாம்

எல்லாம் உங்க வசதியை பொருத்து./

அதும் சரிதான்:) நன்றிங்க.

vasu balaji said...

அகல்விளக்கு said...

//(தொடரலாமா)//

என்ன கேள்வி இது...

மீதி படத்தோட விமர்சனத்தையெல்லாம் எங்க பாக்குறது...

தொடருங்கள்... தொடருங்கள்...//

சரி..சரி:))

vasu balaji said...

பா.ராஜாராம் said...

ஹா..ஹா..ஹா..

இதுதான் பாலா சார் யூத்!

தொடராம?//

வாங்க பா.ரா:))

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

தொடர்ந்தே ஆகனும்//

:))..ஆத்தாடி..ஊக்கம்னா இது:))

vasu balaji said...

ஸ்ரீ said...

தொடரலாம்.//

:)) சரி ஸ்ரீ..அய்யாங்..அந்த லிங்கு..அவ்வ்வ்வ்வ்வ்வ்.

vasu balaji said...

க.பாலாசி said...

/ ஆமாங்க அதுவொரு பெரிய கதை...ஆனாலும் உங்களுக்கு ஞாபகம் அதிகம்...(போட்டோவ பார்த்தா மட்டுமில்லீங்க...)//

போஸ்டர பார்த்தாலுமா:))

/அதுவொரு கலை...அதெல்லாம் இவங்களுக்கு எப்டித்தெரியும்.../

அதாஞ்செரி. அதுல நீ மன்னனாச்சே.:))

vasu balaji said...

வெ.இராதாகிருஷ்ணன் said...

தொடரட்டும்.//

நன்றிங்க வெ.இரா.:)

vasu balaji said...

KALYANARAMAN RAGHAVAN said...

தொடரலேன்னா...தெரியும் சேதி. (மீண்டும் படிக்க என் "செல் போன் நடிகர்கள் " பதிவை)

ரேகா ராகவன்.//

=))..சரி சார்..படிக்கறேன்.

vasu balaji said...

அக்பர் said...

கலக்கல் சார். தொடரவும்.//

நன்றி அக்பர்

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

எல்லாத்தையும் கலாய்க்கிறீங்க.......
ம்ம்ம்ம்....நடத்துங்க...நடத்துங்க.....//

ஏன்..அடுத்த எபிசோட்ல பாலாசிய பின்னாடி இளுத்துக்கிறேன். அழப்படாது..ச்ச்செரியா:))

vasu balaji said...

ஜெரி ஈசானந்தா. said...

கலக்கல்.continue.

வாங்க சார்:))

vasu balaji said...

செ.சரவணக்குமார் said...

கலக்கல், தொடருங்க தலைவா. (நாங்களும் உசுப்பேத்தி விடுவோம்ல..)//

:))..அதுக்குத்தான போட்டது:))

vasu balaji said...

Balavasakan said...

சும்மா பிச்சி உதறீட்டிங்க சார்.. அடுத்தபாகம் இன்னும் கலகஙலப்பாக இருக்கும்ன்னு நினைக்கிறேன்... ஹி..ஹி//

பார்ப்போம்:))

vasu balaji said...

பிரபாகர் said...

தொடரனுமாவா? உண்டு இல்லன்னு ஆயிடும், முடிஞ்சா உடனே இடுகை போடுங்க! அற்புதம்.... சிரிச்சிகிட்டே இருக்கேன், அலுவலகத்துல...(ராத்திரி, யாரும் பக்கத்துல இல்ல! தப்பிச்சேன்...)

பிரபாகர்.//

இருந்துட்டாலும்:))..சிரிக்கலைன்னா உண்டு இல்லைன்னு ஆயிடும்ல..

/கதிர், சிரிச்சி முடிச்சி சொல்லலாம்னு நினச்சத சொல்லிட்டீங்க. செல்வா தண்டோரா அண்ணன பாக்கற மாதிரி ஒரு சூழ்நிலை வந்தா நாலஞ்சி பேண்ட் போட்டுட்டு வரது ரொம்ப நல்லது!//

இதென்னா வம்பு:))

/அருத்த பாகத்துல அளப்பற உடுவாருன்னு நினக்கிறேன்...

பிரபாகர்./

தம்பி! இந்த ‘டு’ வும் ‘ரு’ வும் ரொம்ப குழப்புதோ. அடுத்த இடுகை 25 லைன் ‘டு’ 25 லைன் ‘ரு’. :))

vasu balaji said...

துபாய் ராஜா said...

அருமை சார். அப்படியே அடிச்சு ஆடுங்க. கைதட்டி, விசிலடிச்சு ரசிக்கிறோம் நாங்க... :))//

ஆஹா. வேற என்னா வேணும்.:))

vasu balaji said...

இய‌ற்கை said...

தொடரலாம் தொடரலாம் தொடரலாம்//

கோர்ட் உத்தரவு.சரி சரி சரி:)

Ramesh said...

நம்மளாள இப்படி எழுத....ம்ம்கும்..
வாழ்த்துக்கள்
கலக்கலாக இருக்குங்கோ

ஸ்ரீராம். said...

ஹா...ஹா...

போதிய இடைவெளியில் தொடருங்கள்...!

Chitra said...

பாலா சார், பஞ்சாயத்து அபராத தொகை கட்டி விட்டு, பதிவர்களை தொடர்ந்து கலக்க சொல்ற தீர்ப்பு எப்போ?

Paleo God said...

ஆஹா .. செம பஞ்சாயத்தா இருக்கே..:)) தொடருங்க சார்..:)

மணிஜி said...

குசும்பாலானவருக்கு ரீமா கையால் ஒரு சொம்பு பசும்பால் ப்ளீஸ்

Unknown said...

உள்ளூர் பதிவர்கள் மட்டும் தான் பஞ்சாயத்துக்கு போல, மத்தவங்க எல்லாம் தப்பிச்சாச்சேய்..

கார்த்திகைப் பாண்டியன் said...

போலாம் ரைட்டு..:-))))

கார்த்திகைப் பாண்டியன் said...

வந்தது வந்தாச்சு.. சொல்லிட்டுப் போயிடுறேனே..

Me the 50..:))))

vasu balaji said...

றமேஸ்-Ramesh said...

நம்மளாள இப்படி எழுத....ம்ம்கும்..
வாழ்த்துக்கள்
கலக்கலாக இருக்குங்கோ//

தோடா:))

vasu balaji said...

ஸ்ரீராம். said...

ஹா...ஹா...

போதிய இடைவெளியில் தொடருங்கள்...!//

:))

vasu balaji said...

Chitra said...

பாலா சார், பஞ்சாயத்து அபராத தொகை கட்டி விட்டு, பதிவர்களை தொடர்ந்து கலக்க சொல்ற தீர்ப்பு எப்போ?//

நோ அபராதம்:))..பதிவரா கொக்கா:))

vasu balaji said...

பலா பட்டறை said...

ஆஹா .. செம பஞ்சாயத்தா இருக்கே..:)) தொடருங்க சார்..:)//

நன்றி:))பின்ன:))

Ramesh said...

சொல்ல மறந்துட்டேன் நாங்க தப்பிச்சிட்டோம்ல.... ஹாஹாஹா

vasu balaji said...

தண்டோரா ...... said...

குசும்பாலானவருக்கு ரீமா கையால் ஒரு சொம்பு பசும்பால் ப்ளீஸ்//

என்னா வில்லத்தனம்:))..

vasu balaji said...

முகிலன் said...

உள்ளூர் பதிவர்கள் மட்டும் தான் பஞ்சாயத்துக்கு போல, மத்தவங்க எல்லாம் தப்பிச்சாச்சேய்..//

சாரி. அப்புடி யாரையும் விட்றமாட்டம்ல.

vasu balaji said...

கார்த்திகைப் பாண்டியன் said...

போலாம் ரைட்டு..:-))))

ஆஹா:))

Me the 50..:))))//

:))))))

நசரேயன் said...

அண்ணே தொடருங்க .. நான் சொம்பு எடுத்திட்டு வாரேன்

Thenammai Lakshmanan said...

//இதாங்க. இவங்கல்லாம் ஃபாலோயர்ஸ். இடுகை போட்ட கையோட இப்படியே ஏத்தி விடுவாங்க. //

superb vanambadi
hahahahahaha

Thenammai Lakshmanan said...

//5 காட்சிக்கு 25 விமரிசனம்லாம் டூ மச்சுங்கய்யா.//

இது அதைவிட சூப்பர் ..

நீங்க நிச்சயமா தொடரலாம் வானம் பாடி ..

உங்க நகைச்சுவை எப்பவும் போல அருமை

ரோஸ்விக் said...

யூத்து... இது சரியான கூத்து... தொடரட்டும் பஞ்சாயத்து...

ஆனா, ரீமா கொடுக்குற பசும்பால் உங்களுக்கு இருந்தாலும்... அந்த சொம்பு எங்களுக்கு வேணும்... இல்லையினா அதுக்கும் ஒரு பஞ்சாயத்து கூட வேண்டியிருக்கும். :-))) (தண்டோரா அண்ணே குசும்பு இருக்கே.... அப்பப்பா)

வெற்றி said...

நல்லா இருக்கு..கண்டிப்பா தொடருங்கள்..

க‌ரிச‌ல்கார‌ன் said...

//ஆனா, ரீமா கொடுக்குற பசும்பால் உங்களுக்கு இருந்தாலும்... அந்த சொம்பு எங்களுக்கு வேணும்... //


சொம்பு ஏற்கென‌வே ரிச‌ர்வ் ப‌ண்ணியாச்சு

cheena (சீனா) said...

அன்பின் பாலா

வழக்கம் போல கலக்கல்

தொடர்க தொடர்க தொடர்க

நல்வாழ்த்துகள் பாலா

பெசொவி said...

யப்பா..............சிரிச்சு முடியல, இதுல தொடரலாமா என்று கேள்வி வேறா? தொடருங்க சாமி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஹா..ஹா..ஹா..

நல்லா இருக்கு..கண்டிப்பா தொடருங்கள்...

Unknown said...

தொடரட்டும் உங்கள் கலைசேவை... ஹி ஹி..

ஜோதிஜி said...

பதிவுலக கலைவாணர் தொட்டால் தொடரும்

புலவன் புலிகேசி said...

தொடரும்..அடுத்த பதிவில் கேபிளை இன்னும் கலாயும்...

MUTHU said...

super

அது சரி(18185106603874041862) said...

ரலாம்...

நிஜாம் கான் said...

பஞ்சாயத்துக்கள் தொடரட்டும் அண்ணே! மீ த டூ லேட்டு. திருட்டு டிவிடி வாழ்க.