Saturday, December 26, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 3.9

நான்காம் கட்ட ஈழப்போரின்போது விடுதலைப்புலிகள் 5 கப்பல்கள் கொள்வனவாம்.

அந்த 10 விமான கதை என்னாச்சி. இப்போ கப்பலா? நல்ல பொழப்புடா உங்களது.
_________________________________________________________________________________________________________
செட்டிகுளம் தடுப்பு முகாமில் சிறீலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் 3 சிறுவர்கள் - 2 பெண்கள் படுகாயம்

மிஸ்டர் ஐ.நா. அண்ட் பிள்ளே! அடிச்சது லக்கி ப்ரைஸ். ரொம்ப நாளாச்சில்ல கோரிக்கை விட்டு. விடுங்க கவலை தெரிவித்து விள்ள்ள்ள்ள்ள்ள்ளக்கம் கேக்கலாம். தூ.
_________________________________________________________________________________________________________
பிரதிவாதிகளினால் தம்மீது பூசி வரும் சேற்றை சுமந்து கொண்டேனும், நாட்டைத் தூய்மைப்படுத்த தயார் என ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா

ஆமாம். இப்படி எதையாவது பூசினாலும் ரத்தக் கறை மறையுமா?
_________________________________________________________________________________________________________
போர்க் குற்றச் செயல்களில் எவரும் ஈடுபடவில்லை எனவும்,போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தாம் மன்னிப்பு வழங்கவும் தயாரில்லை எனவும் சரத் ஃபொன்சேகா கூறியுள்ளார்.

உனக்காவது புரியுதா? நீ லூசா நாங்க லூசா பன்னாடயே!
_________________________________________________________________________________________________________
தமிழ்மக்கள் "குழப்பம்" அடையத்தேவையில்லையாம்: இரா.சம்மந்தன்

அப்புறம் எப்படி குழம்பின குட்டைல மீன் புடிக்கறது! முதல்ல நீங்க தெளிவா இருக்கீங்களா? டீல் முடிஞ்சதா?
_________________________________________________________________________________________________________
இடம்பெயர்ந்த யாழ். குடாநாட்டு மக்களுக்கு பாவனைக்கு உதவாத அரிசி

இதுக்கே கோடி கோடியா தரானுங்களே!
_________________________________________________________________________________________________________
இலங்கைக்கு சீனா சுமார் ரூ.1840 கோடி நிதியுதவி

எந்த ஏரியா வித்தான் சப்ப!
_________________________________________________________________________________________________________
ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய நாடுகள் சபை கண்காணிப்பு பணிகளில் ஈடுபட இலங்கை அரசாங்கம் ஆட்சேபம்

இப்பவாச்சும் ஏண்டான்னு கேக்க மாட்டானுவளே. சுத்தி விட்ட கோழி மாதிரியே திரிவானுங்க.
_________________________________________________________________________________________________________
தடுப்பு முகாமிலுள்ள போராளிகளை கூண்டோடு அழிக்க இலங்கை புலனாய்வுத்துறை சதி

நடந்தப்புறம் கண்டனம் தெரிவிக்கப்படும். சுய விசாரணை குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கப்படும். டொட்டடொய்ங்.
_________________________________________________________________________________________________________
தமிழகத்தை ஆளக்கூடாதா? ராமதாஸ் ஆவேசம்!

எவன் சொன்னான். இந்தியாவையே ஆளலாம் மருத்துவரைய்யா! ஆசைக்கென்ன காசா பணமா?
_________________________________________________________________________________________________________
தமிழ்மொழி செம்மொழி என்று முதலில் சொன்னது வெளிநாட்டு அறிஞர்தான்: கலைஞர்

தமிழை செம்மொழியா வச்சிருக்கறதும் வெளி நாட்டு தமிழர்கள்தானே அய்யா?
_________________________________________________________________________________________________________
கிறிஸ்தவர்களைப் போல இஸ்லாமியர்கள் நடந்து கொள்ள வேண்டும்: இல.கணேசன்

அடுத்தவனுக்கு சொல்றதுன்னா அண்ணன் சண்டப் பிரசண்டன்.
_________________________________________________________________________________________________________
பாலியல் புகாரில் சிக்கிய ஆந்திர கவர்னர் என்.டி.திவாரி உடல்நிலை சரியில்லை என காரணம் கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வந்துடுச்சா. 87 வயசுல கஷ்டமாச்சே! தேவையா இதெல்லாம்?
_________________________________________________________________________________________________________
தெலுங்கானா எரியும்: சந்திரசேகர ராவ் எச்சரிக்கை

சாம்பல எடுத்து நெத்தில பூசிட்டு போவியா? இருக்கற வீட்டை எரிக்கிறதில என்னா திமிரு பாரு.
_________________________________________________________________________________________________________

40 comments:

ஜோதிஜி said...

இரண்டு நாளைக்குப் பிறகு மனம் விட்டு சிரிக்க வைத்த உங்கள் எழுத்துக்கு நன்றி.

அத்தனையும் சிந்தனைகள் அது தான் மொத்த சிறப்பு.

பிரபாகர் said...

மருத்துவர அய்யா, தமிழின அய்யா மற்றும் வழக்கமான இலங்கை விஷயங்கள் படு காரசாரமாய்!

பிரபாகர்,
நறுக் ரசிகர் மன்ற உறுப்பினர்.
(பணம் கட்டி மன்றத்தில் சேர இரு கரம் கூப்பி அழைக்கிறேன்!)

பிரியமுடன்...வசந்த் said...

//
எந்த ஏரியா வித்தான் சப்ப!
//

டபுள்ஸ் ஹா ஹா ஹா...!

ஈரோடு கதிர் said...

//87 வயசுல கஷ்டமாச்சே!//

என்னங்க கஷ்டம்...

புரியற மாதிரி சொல்லோனும்.... அப்புறம் என்ன திட்டப்படாது

....

ரசிகர் மன்றம் வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்

துபாய் ராஜா said...

மருத்துவரய்யா, நீங்களோ, உங்க
'அம்பி'மணியோ ஒரு வார்டு மெம்பர் எலெக்சன்லயாவது நின்னு செயிச்சு காமிங்க....அப்புறம் பேசுங்க...

உங்க வீட்டுல வேலை பார்க்குறவனே உங்களுக்கு ஓட்டு போடமாட்டான். அப்புறம் எங்கே ஊர்க்காரன் போடப்போறான்...

எப்படியோ அடுத்து வேட்டி துவைக்க ரெடியாயிட்டிங்க....

பின்னோக்கி said...

:))

இராகவன் நைஜிரியா said...

// தமிழகத்தை ஆளக்கூடாதா? ராமதாஸ் ஆவேசம்! //

அதுக்கெல்லாம் ஓட்டு அப்படின்னு ஒன்னு வாங்கணும்... குதிரைச் சவாரி பண்ணா இப்படித்தான்..

இராகவன் நைஜிரியா said...

// இலங்கைக்கு சீனா சுமார் ரூ.1840 கோடி நிதியுதவி

எந்த ஏரியா வித்தான் சப்ப! //

ஹி...வியாபர ரகசியம்... சொல்லப் பட மாட்டாது..

இராகவன் நைஜிரியா said...

// நான்காம் கட்ட ஈழப்போரின்போது விடுதலைப்புலிகள் 5 கப்பல்கள் கொள்வனவாம்.

அந்த 10 விமான கதை என்னாச்சி. இப்போ கப்பலா? நல்ல பொழப்புடா உங்களது.//

அது அன்னிக்கு... இது இன்னிக்கு...

தமிழ் நாட்டில் இருந்துகிட்டு உங்களுக்கு இவ்வளவு ஞாபகசக்தி கூடாது... ரொம்ப தப்பாச்சே.

இராகவன் நைஜிரியா said...

// பிரபாகர் said...
மருத்துவர அய்யா, தமிழின அய்யா மற்றும் வழக்கமான இலங்கை விஷயங்கள் படு காரசாரமாய்!

பிரபாகர்,
நறுக் ரசிகர் மன்ற உறுப்பினர்.
(பணம் கட்டி மன்றத்தில் சேர இரு கரம் கூப்பி அழைக்கிறேன்!)//

யாருப்பாது இங்க போது குறுக்கால வண்டி ஓட்டுவது.

எங்களோடதுதான் உண்மையானச் சங்கம்.

தலைவி - கலகலப்ரியா என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்.

நான் யாருன்னு கேட்கறீங்கள்... ஹி...ஹி... சும்மா ஒரு ஓரமா பொருளாலர் அப்படின்னு சொல்லி தங்கத் தலைவி உட்கார்த்தி வச்சு இருக்காங்க.

இராகவன் நைஜிரியா said...

## ஈரோடு கதிர் said...
//87 வயசுல கஷ்டமாச்சே!//

என்னங்க கஷ்டம்...

புரியற மாதிரி சொல்லோனும்.... அப்புறம் என்ன திட்டப்படாது ##

அண்ணே உங்களுக்குத் தெரியாததா பெரியண்ணன் சொல்லிடப் போறாரு..

....

## ரசிகர் மன்றம் வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ் ##

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. இங்க பாருங்க தலைமை ரசிகர் மன்றம்தான் முந்திகிட்டு உங்களுக்கு நன்றிச் சொல்லுது..

சரி அண்ணே மறக்காம அந்த சந்தா தொகையை அனுப்பிடுங்க.

இராகவன் நைஜிரியா said...

// பிரியமுடன்...வசந்த் said...
//
எந்த ஏரியா வித்தான் சப்ப!
//

டபுள்ஸ் ஹா ஹா ஹா...!//

டபுள்ஸாஆஆஆஆஆஆஆஆஆஆ?

இராகவன் நைஜிரியா said...

// தமிழ்மொழி செம்மொழி என்று முதலில் சொன்னது வெளிநாட்டு அறிஞர்தான்: கலைஞர்

தமிழை செம்மொழியா வச்சிருக்கறதும் வெளி நாட்டு தமிழர்கள்தானே அய்யா? //

அய்யோ செம்மொழின்னு அறிவிச்சது நாங்கத்தான் சொன்னதெல்லாம் பொய்யா? என்ன நடக்குது அங்க?

இராகவன் நைஜிரியா said...

// தெலுங்கானா எரியும்: சந்திரசேகர ராவ் எச்சரிக்கை //

இவங்களைப் பார்க்கும் போது சம்பல் தாக்கு கொள்ளைக்காரர்கள் எவ்வளவோ பரவாயில்லை எனத் தோணுது..

இராகவன் நைஜிரியா said...

// போர்க் குற்றச் செயல்களில் எவரும் ஈடுபடவில்லை எனவும்,போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தாம் மன்னிப்பு வழங்கவும் தயாரில்லை எனவும் சரத் ஃபொன்சேகா கூறியுள்ளார்.

உனக்காவது புரியுதா? நீ லூசா நாங்க லூசா பன்னாடயே!//

நாமதான் லூசு... இவன் சொல்லுவதை எல்லாம் கேட்டுகிட்டு இருக்கோமில்ல..

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதில்
enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஓட்டளிப்புப் பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

புலவன் புலிகேசி said...

//தமிழகத்தை ஆளக்கூடாதா? ராமதாஸ் ஆவேசம்!

எவன் சொன்னான். இந்தியாவையே ஆளலாம் மருத்துவரைய்யா! ஆசைக்கென்ன காசா பணமா?//

ஏன் ஆலுங்களேன்...அடுத்த குடும்ப அரசியலுக்கு...

//போர்க் குற்றச் செயல்களில் எவரும் ஈடுபடவில்லை எனவும்,போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தாம் மன்னிப்பு வழங்கவும் தயாரில்லை எனவும் சரத் ஃபொன்சேகா கூறியுள்ளார்.//

ம்..இவனையெல்லாம்..

ஆரூரன் விசுவநாதன் said...

எப்பொழுதும் போல்....நச்.....

வாழ்த்துக்கள்

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ச் தலைவ‌ரே

S.A. நவாஸுதீன் said...

வழக்கம்போலவே ஒவ்வொன்னும் நறுக்குன்னு தான் இருக்கு.

ராஜ நடராஜன் said...

ஓட்டுப் போட்டு ரொம்ப நாளாச்சு!கை வேற அரிக்குது:)

வானம்பாடிகள் said...

@@நன்றிங்க ஜோதிஜி

வானம்பாடிகள் said...

பிரபாகர் said...

/மருத்துவர அய்யா, தமிழின அய்யா மற்றும் வழக்கமான இலங்கை விஷயங்கள் படு காரசாரமாய்!

பிரபாகர்,
நறுக் ரசிகர் மன்ற உறுப்பினர்.
(பணம் கட்டி மன்றத்தில் சேர இரு கரம் கூப்பி அழைக்கிறேன்!)//

இது வேறையாக்கு

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/ டபுள்ஸ் ஹா ஹா ஹா...!//

அப்புடீன்னா?

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

/என்னங்க கஷ்டம்...

புரியற மாதிரி சொல்லோனும்.... அப்புறம் என்ன திட்டப்படாது

....//

அட அந்த வயசில உடல்நிலை சரியில்லாம் வியாதிவந்தா கஷ்டம்தானுங்களே. அத சொன்னேன்.

/ரசிகர் மன்றம் வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்//

ஆமாம். வாழ்க சாமியோஓஓஓஒவ்வ்

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா said...

/மருத்துவரய்யா, நீங்களோ, உங்க
'அம்பி'மணியோ ஒரு வார்டு மெம்பர் எலெக்சன்லயாவது நின்னு செயிச்சு காமிங்க....அப்புறம் பேசுங்க...

உங்க வீட்டுல வேலை பார்க்குறவனே உங்களுக்கு ஓட்டு போடமாட்டான். அப்புறம் எங்கே ஊர்க்காரன் போடப்போறான்...

எப்படியோ அடுத்து வேட்டி துவைக்க ரெடியாயிட்டிங்க....//

:)). சொல்லமுடியாது. கடைசில எது துவைப்பாரோ.

வானம்பாடிகள் said...

பின்னோக்கி said...

/:))/

:))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ அதுக்கெல்லாம் ஓட்டு அப்படின்னு ஒன்னு வாங்கணும்... குதிரைச் சவாரி பண்ணா இப்படித்தான்..//

குதிரை சவாரி பண்ணக் கூடாதானு கோவப் படுவாருண்ணே.

/ஹி...வியாபர ரகசியம்... சொல்லப் பட மாட்டாது../

சொல்லீட்டாலும்...

/அது அன்னிக்கு... இது இன்னிக்கு...

தமிழ் நாட்டில் இருந்துகிட்டு உங்களுக்கு இவ்வளவு ஞாபகசக்தி கூடாது... ரொம்ப தப்பாச்சே./

ஆமாம்ல.

/யாருப்பாது இங்க போது குறுக்கால வண்டி ஓட்டுவது.

எங்களோடதுதான் உண்மையானச் சங்கம்.

தலைவி - கலகலப்ரியா என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்.

நான் யாருன்னு கேட்கறீங்கள்... ஹி...ஹி... சும்மா ஒரு ஓரமா பொருளாலர் அப்படின்னு சொல்லி தங்கத் தலைவி உட்கார்த்தி வச்சு இருக்காங்க./

ம்கும் தலைவி எதும் சொல்ல மாட்டங்குது..அவ்வ்வ்வ்வ்வ்:((

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ அண்ணே உங்களுக்குத் தெரியாததா பெரியண்ணன் சொல்லிடப் போறாரு..//

யூத்து இமேஜ் மெயிண்டெயின் பண்றாராம்.

....

/தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. இங்க பாருங்க தலைமை ரசிகர் மன்றம்தான் முந்திகிட்டு உங்களுக்கு நன்றிச் சொல்லுது..

சரி அண்ணே மறக்காம அந்த சந்தா தொகையை அனுப்பிடுங்க.//

:))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ அய்யோ செம்மொழின்னு அறிவிச்சது நாங்கத்தான் சொன்னதெல்லாம் பொய்யா? என்ன நடக்குது அங்க?//

விடுங்க விடுங்க. ஜெ. சதின்னு மறுப்பறிக்கை விட்டுக்கலாம்.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ இவங்களைப் பார்க்கும் போது சம்பல் தாக்கு கொள்ளைக்காரர்கள் எவ்வளவோ பரவாயில்லை எனத் தோணுது..//

ஆமாம்ணே.

வானம்பாடிகள் said...

புலவன் புலிகேசி said...

/ ஏன் ஆலுங்களேன்...அடுத்த குடும்ப அரசியலுக்கு...//

அடுத்ததா. சமகாலம்தானே:))

/ ம்..இவனையெல்லாம்..//

ஜனாதிபதியாக்கி சாவலாம்.

வானம்பாடிகள் said...

ஆரூரன் விசுவநாதன் said...

/எப்பொழுதும் போல்....நச்.....

வாழ்த்துக்கள்//

நன்றிங்க ஆரூரன்.

வானம்பாடிகள் said...

க‌ரிச‌ல்கார‌ன் said...

/ ந‌ச் தலைவ‌ரே/

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

S.A. நவாஸுதீன் said...

/ வழக்கம்போலவே ஒவ்வொன்னும் நறுக்குன்னு தான் இருக்கு.//

நன்றி நவாஸூதீன்.

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...

/ ஓட்டுப் போட்டு ரொம்ப நாளாச்சு!கை வேற அரிக்குது:)//

வாங்க நடராஜன்.:)

பா.ராஜாராம் said...

சப்ப..

:-))

கிரி said...

//தமிழகத்தை ஆளக்கூடாதா? ராமதாஸ் ஆவேசம்!

எவன் சொன்னான். இந்தியாவையே ஆளலாம் மருத்துவரைய்யா! ஆசைக்கென்ன காசா பணமா?//

:-))

சார் சுறுசுறு செய்திகள் இந்த முறை குறைவாக தெரியுது!

Sangkavi said...

சும்மா நச்சுன்னு இருக்குது.........

வால்பையன் said...

//இலங்கைக்கு சீனா சுமார் ரூ.1840 கோடி நிதியுதவி

எந்த ஏரியா வித்தான் சப்ப!//

தமிழ்நாட்டை கூட விற்பானுங்க! நமக்கு நீங்க கடைசியா சொன்ன வார்த்தை!