Monday, December 14, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 3.6

பிரபாகரன், பொட்டம்மன் இறப்புச் சான்றிதழ் இலங்கை சட்டத்துறை நிபுணர்கள் பரிசீலனையில் உள்ளதாக இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆமாம் பின்ன. மருத்துவ ஆதாரமில்லாம, டுபாக்கூரு சான்றிதழ்னா பலதும் யோசிக்க வேணாமா?
__________________________________________________________________________________________________________
கொடுங்கோலன் ராஜபக்ச, திருப்பதி வழிபாடு: ஆந்திர முதல்வர் பலி! இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம்: வைணவ துறவி

ஆமாம். இவ்வளவு நாள் ஈழம் எரிஞ்சது. இப்போ ஆந்திரா. இத மொதல்லயே எச்சரிக்கப்படாதா துறவி.

__________________________________________________________________________________________________________
சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்டநடவடிக்கை: அரசாங்கம்

எப்புடி பகிரங்கமா மிரட்டுரான் பாரு! இவனுங்க வெச்சதே சட்டமாச்சே!
__________________________________________________________________________________________________________
சரணடைந்த புலி உறுப்பினர்களை கொல்லுமாறு கோத்தபாய உத்தரவிட்டார் என தாம் கூறவில்லை: சரத் பொன்சேகா

அட பக்கி நாயே! ஒருத்தனாவது ஒன்னு சொன்னா அது படி நிக்க மாட்டீங்களா. இந்த எழவுல உன் வாக்குறுதிய நம்பி ஓட்டு வேற போடணுமா?
__________________________________________________________________________________________________________
மனிதன் ஒருவனை கொலை செய்வதற்கு சுதந்திரம் உள்ளது : கோத்தபாய ராஜபக்ச

அட அதானா! ஃபொன்சேகா வடிவேலு ஆயிட்டாரு. 'ங்', ஆனாலும் நீ மிருகம்னு ரொம்ப ஏத்தம்டா!

__________________________________________________________________________________________________________
இலங்கை தொடர்பாக இந்திய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் என மஹிந்த அச்சம்

அதுக்கொரு கோவிலு. அங்க ஒரு சாமி இருக்கும் வந்து வேண்டிக்கடா எச்சபிச்ச!
__________________________________________________________________________________________________________
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலையீடில்லாமையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிரச்சினைகள்

இப்ப புலம்பி என்ன புண்ணியம். பட்டும் திருந்த மாட்டானுங்களே. அப்புடியா ஒரு பதவி வெறி?
__________________________________________________________________________________________________________
பொன்சேகா வென்றால் தமிழருக்கு சுதந்திரம்:ரணில்

எங்க‌? மேலுல‌க‌த்துக்கா? இப்ப‌வே இன்னைக்கொன்னு நாளைக்கொன்னு பேசுறான். இவ‌னுக்கு இவ‌ரு வ‌க்கால‌த்து!
__________________________________________________________________________________________________________
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க முடியாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன்: சரத் பொன்சேகா

ந‌ம்பீட்ட‌ம்! இதுக்கா இந்த‌ பாடு!
__________________________________________________________________________________________________________
அதிகாரப் பகிர்வுத் திட்ட அடிப்படையை இந்தியாவிடம் கையளித்தது இலங்கை

ரைட்டு!
__________________________________________________________________________________________________________
சரத் பொன்சேகாவுடன் தொலைக்காட்சி விவாததிற்கு வருமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு, ஜே.வி.பி சவால்

ந‌ல்ல ப‌கிடியா போச்சுடா உங்க‌ளோட‌!
__________________________________________________________________________________________________________
தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் வசம் ஒப்படைக்கப்படாது: கலைஞர்

அதெப்புடீ. மின்சார‌ம்னா சும்மாவா. ஷாக் அடிச்சிடாது.
__________________________________________________________________________________________________________
தமிழகம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம்: ராமதாஸ்

ஜாதிய‌ தூக்கிட்டாரா! ம‌ர‌ங்க‌ளுக்கெல்லாம் க‌ட்ட‌ம் ச‌ரியில்ல‌ போல‌.
__________________________________________________________________________________________________________
சமுதாயம் வாழ என்னையே தந்துவிட்டேன்: கலைஞர்

உங்க‌ள‌ வெச்சி என்னா ப‌ண்ற‌து! உங்க‌ பேர்ல‌ அக்க‌வுண்ட் கூட‌ இருக்காதே! ந‌ல்லா வாழ்ந்துடும் ச‌முதாய‌ம்.
__________________________________________________________________________________________________________
அர்ச்சகர் தேவநாதன் ஜெயிலை விட்டு வர தயக்கம்!

பின்ன‌! கொஞ்ச‌மா? என்னா அடி!

__________________________________________________________________________________________________________
நள்ளிரவில் பிராந்தி பூஜை:ஊரையே போதையில் மிதக்க வைத்த ஜோதிடருக்கு அடி உதை

ஜாத‌க‌ம் ச‌ரியில்லையா! ச‌ர‌க்கு ச‌ரியில்லையா?
__________________________________________________________________________________________________________
காவல் நிலையம் அருகே நகைக்கடையில் கொள்ளை

அட‌ க‌ட‌மைய‌ ஒழுங்கா செய்யிறாங்க‌ளான்னு டெஸ்டு ப‌ண்ணியிருப்பாங்க‌ப்பு!
__________________________________________________________________________________________________________

70 comments:

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)))

ஈரோடு கதிர் said...

//கொடுங்கோலன் ராஜபக்ச, திருப்பதி வழிபாடு: ஆந்திர முதல்வர் பலி! இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம்: வைணவ துறவி//

இது வேறயா!!!!?

க.பாலாசி said...

//பொன்சேகா வென்றால் தமிழருக்கு சுதந்திரம்:ரணில்
எங்க‌? மேலுல‌க‌த்துக்கா? இப்ப‌வே இன்னைக்கொன்னு நாளைக்கொன்னு பேசுறான்.//

//இவ‌னுக்கு இவ‌ரு வ‌க்கால‌த்து!//

அதென்ன இவர்ர்ர்ர்ர்....எழுத்துப்பிழை ‘ன்’ போடுங்க தலைவரே...

சூர்யா ௧ண்ணன் said...

நறுக் நச்சுன்னு இருக்கு தலைவா!

ஸ்ரீராம். said...

செய்தியின் கமெண்ட்கள் நறுக்...சுருக்...

போர்வாள் said...

நறுக்கென்றல்ல நச்சென்றுள்ளது

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நச்!

T.V.Radhakrishnan said...

நச்

முகிலன் said...

//சரணடைந்த புலி உறுப்பினர்களை கொல்லுமாறு கோத்தபாய உத்தரவிட்டார் என தாம் கூறவில்லை: சரத் பொன்சேகா//

சரணடைந்த புலி உறுப்பினர்களை கொல்லுமாறு கோத்தபய உத்தரவிட்டர் என்று நான் கூறவில்லை என்று (சிங்களர்களின் வாக்குகளையும் வாங்க) ரணில் சொல்லச் சொன்னார். : சரத் பொன்சேகா

மனிதன் ஒருவனை கொலை செய்வதற்கு சுதந்திரம் உள்ளது : கோத்தபாய ராஜபக்ச

//சோனியாம்மா கேட்டுக்குங்க, உங்க கூட்டாளியே சொல்லிட்டாரு. ராஜிவ் காந்திய கொன்னதுக்கு சுதந்திரம் இருக்காம்.

ஸ்ரீ said...

:-000000000

வானம்பாடிகள் said...

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...

/ -:)))/

:>

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

/ இது வேறயா!!!!?//

எப்புடியெல்லாம் ஆரம்பிக்கிராய்ங்க பாருங்க

லெமூரியன்... said...

\\தமிழகம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம்: ராமதாஸ்

ஜாதிய‌ தூக்கிட்டாரா! ம‌ர‌ங்க‌ளுக்கெல்லாம் க‌ட்ட‌ம் ச‌ரியில்ல‌ போல‌..........//

பசுமை தாயகம் மூலமா ரோட்ல மரக் கன்று நட்டி ஸ்தம்பிக்க வைப்பாங்களோ...????!!!

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

/ அதென்ன இவர்ர்ர்ர்ர்....எழுத்துப்பிழை ‘ன்’ போடுங்க தலைவரே...//

ம்கும். இந்த நாயீக்கு ர் வேற போடுறனா. நக்கலா போட்டது அது.

வானம்பாடிகள் said...

சூர்யா ௧ண்ணன் said...

/நறுக் நச்சுன்னு இருக்கு தலைவா!//

நன்றி. தலைவா.

தியாவின் பேனா said...

"நறுக்"

வானம்பாடிகள் said...

ஸ்ரீராம். said...

/செய்தியின் கமெண்ட்கள் நறுக்...சுருக்...//

நன்றிங்க

வானம்பாடிகள் said...

போர்வாள் said...

/ நறுக்கென்றல்ல நச்சென்றுள்ளது/

வாங்க. முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

வானம்பாடிகள் said...

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

/ நச்!/

நன்றிங்க சரவணக்குமார்.

வானம்பாடிகள் said...

T.V.Radhakrishnan said...

/ நச்//

நன்றி சார்.

வானம்பாடிகள் said...

முகிலன் said...

// சோனியாம்மா கேட்டுக்குங்க, உங்க கூட்டாளியே சொல்லிட்டாரு. ராஜிவ் காந்திய கொன்னதுக்கு சுதந்திரம் இருக்காம்.//

:))

வானம்பாடிகள் said...

ஸ்ரீ said...

/:-000000000/

:))

வானம்பாடிகள் said...

லெமூரியன்... said...

/ பசுமை தாயகம் மூலமா ரோட்ல மரக் கன்று நட்டி ஸ்தம்பிக்க வைப்பாங்களோ...????!!!//

அவ்வளவு பாசிடிவா பண்ணிடுவாரா:))

வானம்பாடிகள் said...

தியாவின் பேனா said...

/ "நறுக்"/

நன்றி தியா.

எம்.எம்.அப்துல்லா said...

//ஆமாம் பின்ன. மருத்துவ ஆதாரமில்லாம, டுபாக்கூரு சான்றிதழ்னா பலதும் யோசிக்க வேணாமா? //

நம்ப லேகிய டாக்டருங்கள்ட கேட்டா :))

வானம்பாடிகள் said...

எம்.எம்.அப்துல்லா said...

// நம்ப லேகிய டாக்டருங்கள்ட கேட்டா :))//

3 தலை முறைக்கும் சேர்த்தே கொடுப்பான் சான்றிதழ்=))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

நல்ல ஆக்கம் ஐயா
ஓட்டுக்கள் போட்டாச்சு

கலகலப்ரியா said...

//மனிதன் ஒருவனை கொலை செய்வதற்கு சுதந்திரம் உள்ளது : கோத்தபாய ராஜபக்ச//

ஆ...! இன்னும் ஏன் வெயிட் பண்றாங்க..`?

கலகலப்ரியா said...

//பொன்சேகா வென்றால் தமிழருக்கு சுதந்திரம்:ரணில்

எங்க‌? மேலுல‌க‌த்துக்கா? இப்ப‌வே இன்னைக்கொன்னு நாளைக்கொன்னு பேசுறான். இவ‌னுக்கு இவ‌ரு வ‌க்கால‌த்து!//

அதேதான் சார்..! விட்டு விடுதலையாகி... பறந்தே போய்டலாம்..

வானம்பாடிகள் said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

//நல்ல ஆக்கம் ஐயா
ஓட்டுக்கள் போட்டாச்சு//

வாங்க கார்த்திகேயன். நன்றி.

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/ ஆ...! இன்னும் ஏன் வெயிட் பண்றாங்க..`?//

இவன் வெறி நாய்னோ என்னமோ.

வானம்பாடிகள் said...

// அதேதான் சார்..! விட்டு விடுதலையாகி... பறந்தே போய்டலாம்..//

அதாம்மா பயம்ம இருக்கு. இவனுங்க அவன் இல்ல நான் நானில்ல அவன்னு போட்டி போடுறதுக்குள்ள எல்லாம் போய்டும் போல.

Anonymous said...

சமுதாயம் வாழ என்னையே தந்துவிட்டேன்: கலைஞர்

உங்க‌ள‌ வெச்சி என்னா ப‌ண்ற‌து! உங்க‌ பேர்ல‌ அக்க‌வுண்ட் கூட‌ இருக்காதே! ந‌ல்லா வாழ்ந்துடும் ச‌முதாய‌ம்.
______________________________
Best.. :)

இராகவன் நைஜிரியா said...

// தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் வசம் ஒப்படைக்கப்படாது: கலைஞர்

அதெப்புடீ. மின்சார‌ம்னா சும்மாவா. ஷாக் அடிச்சிடாது. //

முகமது பின் துக்ளக் படத்தில் வரும் ஒரு சீன் எனக்கு ஞாபகம் வருகின்றது. அவரை கல்லால் அடித்துக் கொன்று விடாதீர்கள் என்றுச் சொல்லுவார்... மக்கள் அவரைக் கல்லால் அடித்துக் கொன்றுவிடுவார்கள். இவர்கள் எப்போதெல்லாம் நடக்காது என்று சொல்லுகின்றார்களோ அப்போ நிச்சயம் நடக்கும்.

இராகவன் நைஜிரியா said...

// அர்ச்சகர் தேவநாதன் ஜெயிலை விட்டு வர தயக்கம்!

பின்ன‌! கொஞ்ச‌மா? என்னா அடி!//

அது சரி.. பண்ண காரியம் அப்படி.

இராகவன் நைஜிரியா said...

// நள்ளிரவில் பிராந்தி பூஜை:ஊரையே போதையில் மிதக்க வைத்த ஜோதிடருக்கு அடி உதை

ஜாத‌க‌ம் ச‌ரியில்லையா! ச‌ர‌க்கு ச‌ரியில்லையா?//

ஜோதிடருக்கு ஜாதகம் சரியில்லை. அடிச்சவங்களுக்கு சரக்கு சரியில்லை

இராகவன் நைஜிரியா said...

// காவல் நிலையம் அருகே நகைக்கடையில் கொள்ளை

அட‌ க‌ட‌மைய‌ ஒழுங்க‌ செய்யிறாங்க‌ளான்னு டெஸ்டு ப‌ண்ணியிருப்பாங்க‌ப்பு!//

அண்ணே மாமூலா நடக்கிறதுங்க...

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ முகமது பின் துக்ளக் படத்தில் வரும் ஒரு சீன் எனக்கு ஞாபகம் வருகின்றது. அவரை கல்லால் அடித்துக் கொன்று விடாதீர்கள் என்றுச் சொல்லுவார்... மக்கள் அவரைக் கல்லால் அடித்துக் கொன்றுவிடுவார்கள். இவர்கள் எப்போதெல்லாம் நடக்காது என்று சொல்லுகின்றார்களோ அப்போ நிச்சயம் நடக்கும்.//

இது பொன்முட்டை வாத்து. அறுக்க மாட்டாங்க.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said.../ அது சரி.. பண்ண காரியம் அப்படி./

கர்ப்பகிரகத்த விட காராக்கிரகம் மேல் போல.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ஜோதிடருக்கு ஜாதகம் சரியில்லை. அடிச்சவங்களுக்கு சரக்கு சரியில்லை/

=))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

//அண்ணே மாமூலா நடக்கிறதுங்க...//

இது சூப்பர். போலீஸ்னா மாமூல் இல்லாம போகுமா?

cheena (சீனா) said...

அன்பின் பாலா

நச்சுன்னு இருக்கு

நல்வாழ்த்துகள்

வானம்பாடிகள் said...

cheena (சீனா) said...

/அன்பின் பாலா

நச்சுன்னு இருக்கு

நல்வாழ்த்துகள்/

வாங்க சார். எங்க காணோம்:)

புலவன் புலிகேசி said...

//மனிதன் ஒருவனை கொலை செய்வதற்கு சுதந்திரம் உள்ளது : கோத்தபாய ராஜபக்ச

அட அதானா! ஃபொன்சேகா வடிவேலு ஆயிட்டாரு. 'ங்', ஆனாலும் நீ மிருகம்னு ரொம்ப ஏத்தம்டா!//

உண்மையில் கொடூரமான மிருகம்...நறுக் இல்ல நச்...

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாண்ணே........

நான் மிக ரசிக்கும் பதிவுகள்....நறுக்..

தொடருங்கள்

நாடோடி இலக்கியன் said...

நறுக் நறுக்கென்று நொறுக்கியிருக்கீங்க.

//ஜாத‌க‌ம் ச‌ரியில்லையா! ச‌ர‌க்கு ச‌ரியில்லையா?//

கலக்கல்.

Chitra said...

சார், நீங்க இப்படி செய்திகளுக்கு கமெண்ட் அடிக்கிறதுக்காகவே செய்திகள் (விஷயங்கள்) நடந்த மாதிரி இருக்கு.

கிரி said...

//பொன்சேகா வென்றால் தமிழருக்கு சுதந்திரம்:ரணில்

எங்க‌? மேலுல‌க‌த்துக்கா? இப்ப‌வே இன்னைக்கொன்னு நாளைக்கொன்னு பேசுறான். இவ‌னுக்கு இவ‌ரு வ‌க்கால‌த்து!//

ஹா ஹா ஹா ...

//தமிழகம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம்: ராமதாஸ்

ஜாதிய‌ தூக்கிட்டாரா! ம‌ர‌ங்க‌ளுக்கெல்லாம் க‌ட்ட‌ம் ச‌ரியில்ல‌ போல‌.//

:-)))) யாரும் அவரை பற்றி செய்தில போட மாட்டேங்குறாங்கலாம் அதான்...... ;-)

ரோஸ்விக் said...

//சமுதாயம் வாழ என்னையே தந்துவிட்டேன்: கலைஞர்

உங்க‌ள‌ வெச்சி என்னா ப‌ண்ற‌து! உங்க‌ பேர்ல‌ அக்க‌வுண்ட் கூட‌ இருக்காதே! //

அண்ணே! குடும்ப அரசியல் நிலைமை அவ்வளவு மோசமாவா போச்சு??

வானம்பாடிகள் said...

புலவன் புலிகேசி said...

/ உண்மையில் கொடூரமான மிருகம்...நறுக் இல்ல நச்...//

நன்றி புலிகேசி

வானம்பாடிகள் said...

ஆரூரன் விசுவநாதன் said...

/பாலாண்ணே........

நான் மிக ரசிக்கும் பதிவுகள்....நறுக்..

தொடருங்கள்//

வாங்க ஆரூரன். நன்றி

வானம்பாடிகள் said...

நாடோடி இலக்கியன் said...

/ நறுக் நறுக்கென்று நொறுக்கியிருக்கீங்க.

//ஜாத‌க‌ம் ச‌ரியில்லையா! ச‌ர‌க்கு ச‌ரியில்லையா?//

கலக்கல்.//

நன்றி

வானம்பாடிகள் said...

Chitra said...

/சார், நீங்க இப்படி செய்திகளுக்கு கமெண்ட் அடிக்கிறதுக்காகவே செய்திகள் (விஷயங்கள்) நடந்த மாதிரி இருக்கு.//

:)). இதென்னா வம்படியா இருக்கு. நான் ஆர்த்தர் ஹெய்லி இல்லீங்கோ:))

S.A. நவாஸுதீன் said...

ஒவ்வொன்னும் ”நறுக்” தான் பாலா சார்.

பேநா மூடி said...

// சமுதாயம் வாழ என்னையே தந்துவிட்டேன்: கலைஞர்//

இது எப்ப..,

நினைவுகளுடன் -நிகே- said...

//சரணடைந்த புலி உறுப்பினர்களை கொல்லுமாறு கோத்தபாய உத்தரவிட்டார் என தாம் கூறவில்லை: சரத் பொன்சேகா//

//
தேர்தல் வந்தாலே
இப்படி பல பல கதைகளும் வரும்

வானம்பாடிகள் said...

S.A. நவாஸுதீன் said...

/ஒவ்வொன்னும் ”நறுக்” தான் பாலா சார்./

நன்றி நவாஸ்

வானம்பாடிகள் said...

பேநா மூடி said...

/ இது எப்ப..,/

ம்கும். அடுத்த ரவுண்டுக்கு தயார்னு அர்த்தம் போல

வானம்பாடிகள் said...

நினைவுகளுடன் -நிகே- said...

// தேர்தல் வந்தாலே
இப்படி பல பல கதைகளும் வரும்//

சரியாச் சொன்னீங்க

பூங்குன்றன்.வே said...

//சரணடைந்த புலி உறுப்பினர்களை கொல்லுமாறு கோத்தபாய உத்தரவிட்டார் என தாம் கூறவில்லை: சரத் பொன்சேகா

அட பக்கி நாயே! ஒருத்தனாவது ஒன்னு சொன்னா அது படி நிக்க மாட்டீங்களா. இந்த எழவுல உன் வாக்குறுதிய நம்பி ஓட்டு வேற போடணுமா?//

இந்த கமென்ட் தான் ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணே.

நாஞ்சில் பிரதாப் said...

எல்லாமே நறுக்...

வானம்பாடிகள் said...

பூங்குன்றன்.வே said...

// இந்த கமென்ட் தான் ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணே.//

நன்றி பூங்குன்றன்.

வானம்பாடிகள் said...

நாஞ்சில் பிரதாப் said...

/எல்லாமே நறுக்.../

நன்றி ப்ரதாப்

இப்படிக்கு நிஜாம்.., said...

//மனிதன் ஒருவனை கொலை செய்வதற்கு சுதந்திரம் உள்ளது : கோத்தபாய ராஜபக்ச

அட அதானா! ஃபொன்சேகா வடிவேலு ஆயிட்டாரு. 'ங்', ஆனாலும் நீ மிருகம்னு ரொம்ப ஏத்தம்டா!//

அண்ணே! அப்ப‌டீன்னா இவ‌னுக‌ கூட்ட‌த்தையே போட்டுத்த‌ள்ள‌வும் சுத‌ந்திர‌ம் உள்ள‌துன்னு தானே அர்த்த‌ம்.

இப்படிக்கு நிஜாம்.., said...

கொலைகாரப் பயலுக! உங்க பதிவ எவனாவது அவனுங்களுக்குப் படிச்சிக்காட்டினாக் கூட போதும். அவனுங்கள் செருப்பால அடிச்சதுக்கு சமம்ணே! என் கோவத்தை வெளிப்படுத்த வேறு வழியில்லை

வானம்பாடிகள் said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/ அண்ணே! அப்ப‌டீன்னா இவ‌னுக‌ கூட்ட‌த்தையே போட்டுத்த‌ள்ள‌வும் சுத‌ந்திர‌ம் உள்ள‌துன்னு தானே அர்த்த‌ம்.//

அப்புடித்தான் போல தெரியுது

வானம்பாடிகள் said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/கொலைகாரப் பயலுக! உங்க பதிவ எவனாவது அவனுங்களுக்குப் படிச்சிக்காட்டினாக் கூட போதும். அவனுங்கள் செருப்பால அடிச்சதுக்கு சமம்ணே! என் கோவத்தை வெளிப்படுத்த வேறு வழியில்லை//

ம்ம்ம்

அன்புடன் மலிக்கா said...

"நறுக்குன்னு நாலு வார்த்த ன்னு சொல்லி அசத்துறீங்க...

Maheswaran Nallasamy said...

அர்ச்சகர் தேவநாதன் ஜெயிலை விட்டு வர தயக்கம்!

பின்ன‌! கொஞ்ச‌மா? என்னா அடி!
__________________________________________________________________________________________________________
நள்ளிரவில் பிராந்தி பூஜை:ஊரையே போதையில் மிதக்க வைத்த ஜோதிடருக்கு அடி உதை

ஜாத‌க‌ம் ச‌ரியில்லையா! ச‌ர‌க்கு ச‌ரியில்லையா?
ஹஹஹ்ஹா.. ஆபிசுல இதுக்குமேல சிரிச்சா ஒரு மாதிரி பாக்குராய்ங்க

வானம்பாடிகள் said...

Maheswaran Nallasamy said...
/ ஹஹஹ்ஹா.. ஆபிசுல இதுக்குமேல சிரிச்சா ஒரு மாதிரி பாக்குராய்ங்க//

வரும்போதே லொள்ளா!:))