Wednesday, December 30, 2009

செவிக்குணவில்லாத போது..

சமிபத்திய பெருமழையில் வழமை போலவே இட்டு நிரப்பிய தார் ரோடு  பிச்சிக்கிட்டு போக, கரண்டி சைசில இருந்து பெருங்குழி வரைக்கும் ரகம் ரகமான பள்ளங்கள் வீதியெங்கும். மண்ணு, சவுடுன்னு கொட்டி நிரப்பி, பெட்ஷீட் கனத்துக்கு ஒரு ரோடு போட்டு முடியற வரைக்கும் பிசியோ தெராபிஸ்டுங்களுக்கு கொள்ளை லாபம். (ஆமாம் இந்த ரோடு போடுற கான்ட்ராக்டருக்கு, பிசியோ தெராபி, டயர்கம்பனி காரங்களெல்லாம் கட்டிங் குடுக்கிறதா ஒரு குருவி சொல்லுச்சே, அது நிஜமா நிஜாம்?)

இந்த அழகுல டூ வீலர்ல போறவங்க அதும் டிஸ்க் ப்ரேக் வச்சிருக்கிற பைக் மாப்பிள்ளைங்க பண்ற அழிம்பு இருக்கே சொல்லி மாளாது. பத்து மீட்டர் வீதி சுத்தமா காலியா இருந்தா போதும், விட்டு ஒரு தூக்கு தூக்குவாங்க. ஸ்பூன் சைஸ்ல ஒரு குழி வந்துச்சோ, அடிப்பாரு ஒரு ப்ரேக். விளம்பரத்துல வரா மாதிரி சும்மா கச்சுன்னு நிப்பாட்டி அப்புடி 2 இன்ச் முன்னுக்கும் பின்னுக்கும் ஆடிக்காட்டிட்டு ஒரு சின்ன ட்விஸ்ட் குடுத்துட்டு கேப்ல பறந்துடுவாரு.

இவரு பின்னாடி வந்த டிவிஎஸ் 50 கேசு தரைல கெடக்கும்,இல்லாட்டி ஆட்டோ மேல கார் முட்டிக்கிட்டு நிக்கும். இந்த சனியன் போறாதுன்னு என்னமோ இன்டர்நேஷனல் கான்ட்ராக்ட் போய்டுங்கற மாதிரி காதில ஹெட்ஃபோன், ஹெல்மெட்குள்ள செல்ஃபோன்னு அந்த ராவடி வேற.

போன வாரம் ஒரு பொண்ணு ஸ்கூட்டில சேத்து தண்ணில ரேஸ் போச்சு. கடந்து போகையில பார்த்தா காதில வேறுகிரக பொண்ணு மாதிரி பெரிய வண்டு சைஸ்ல ஒரு ப்ளூடூத். அம்முணி ஒரு கட் அடிச்சி ஒரு பெரிய குழில விட்டு ஏத்தினதில ப்ளூடூத் தெரிச்சி விழுந்திடுச்சு. பின்னாடி வந்த பைக் ஏறி நொறுங்கியும் போச்சு.

அந்தம்மணி தீடீர்னு ப்ரேக் அடிச்சதில பின்னாடி வந்த ஆட்டோக்காரரும் மயிரிழையில் ப்ரேக் போட வேண்டியதா போச்சு. ஆனால் ஆட்டோவைத் தொடர்ந்த ஒரு மாருதி இடிச்சதுல ஆட்டோ குலுங்கி ஒரு அடி முன்ன போக, ஸ்டேன்ட் போட்டுக் கொண்டிருந்த ஸ்கூடி பிச்சிகிட்டு அப்போது தான் கடந்த சைக்கிள் காரரை முட்டித் தள்ளிடுச்சு.

பப்பரப்பேன்னு கெடக்கற அவன கவனிக்கல, ஆட்டோ போச்சேன்னு பின்னாடி பார்த்துட்டிருக்கற அட்டோக்காரர கவனிக்கல, ஹெட்லைட் நொறுங்கிப் போன கார் ட்ரைவர கவனக்கல அந்தம்மணி. பாய்ஞ்சி, என்னமோ சூப்பர்மேன் மாதிரி பைக்காரன் வண்டிய புடிச்சிகிட்டு, இடியட்! கண்ணு தெரியாதா உனக்குன்னு ப்ளூடூத்துக்கு கத்தினப்ப அப்பலாம் போல வந்தது.

பீ பீன்னு ஊதிக்கிட்டு வந்துட்டாரு கலெக்டரு. அட நம்ம ட்ராஃபிக் போலீசுங்க. முட்டி பேந்த சைக்கிள் காரன், நெளிஞ்சி போன சைக்கிள நொண்டிகிட்டு தள்ளிகிட்டு போய் ஓரம் நிக்க, சொட்டையான ஆட்டோக்காரரும், கார் காரரும் பட்டிமன்றம் வைக்க, மறிச்சி கட்டிகிட்டு தமிழ், இங்கிலீசுன்னு ஒருத்தர் பொறப்ப மத்தவருன்னு அசிங்கமா அலசி ஆராய்ஞ்சிட்டிருந்த இதுங்க கிட்ட வந்தாரு.

மொத பிட்டு, ஏய் மிஸ்டர் எதுனாலும் இறங்கி நின்னு பேசுய்யா! வண்டிய விட்டு இறங்க மாட்டீங்களோன்னு  சொல்லிட்டு அம்மணிய பார்த்து ஒரு லுக்கு. அப்புறம், சித்தப்பா மாதிரி என்னாச்சிம்மான்னு பாசமா ஒரு கேள்வி. அம்முணி சொல்லுது ரேஷா ஒட்டிட்டு வந்து ப்ளூடூத்த நொறுக்கிட்டானாம்.

இன்னோரு பைக்கில இருந்த ஆளு திடீர்னு இந்தம்மா ப்ரேக் போட்டாங்க அது தெறிச்சி விழ, அடுத்த நொடியில ப்ரேக் அடிச்சும் இப்படி ஆய்டுத்துன்னு சொன்னா, அந்தம்மா கண்ணுல கொலவெறியோட யூ ஷட்டப்புங்குது. எங்க வட போய்டுமோன்னு போலீசுகாரரு, யோவ்! நாந்தான் கேட்டுட்டிருக்கேன்ல நீ போய் அந்த ஓரம் நில்லு வரேன்னு மிரட்ட, கிடைச்ச கேப்ல அந்தாளு விசுக்குன்னு ஓட்டிட்டு போய்ட்டாரு.

சரி சரி, வண்டிய ஓரம் கட்டுங்கன்னு (ரெண்டு பக்கமும் தேத்ததான்)வழி பண்ணி குடுக்க நம்ம பொழப்ப பார்க்க கிளம்பிட்டம் அங்க இருந்து. எத்தன செய்தி வந்தாலும், இந்த வண்டியோட்டுறப்ப, ட்ராக் தாண்டி போறப்ப, வீதிய கடக்குறப்ப கூட பேசுறது,பாட்டு கேக்குறது தப்பாது. அதும் ஹெல்மட் போட்டா பின்னாடி, அக்கம் பக்கதுல வர வண்டியோட ஹார்ன் சத்தம் கேக்கறதே கஷ்டம் இதில அதுக்குள்ள விட்டு, ஹெட்ஃபோன் வேற மாட்டிக்கிட்டு வண்டியோட்டுறது.

சில பன்னாடைங்க ஹெட்ஃபோன் மாட்டாம, ஹெல்மட் சரியா கட்டாம, அதுக்குள்ள அலைபேசிய சொருகிக்கிட்டு பேசிக்கிட்டே சர்க்கஸ் காட்டுவானுங்க. போற போக்கு பார்த்தா இன்னும் பத்து வருசத்துல பல் மருத்துவமனை மாதிரி, காதுக்குன்னு தனியா மருத்துவமனை கட்டணும் போல அரசாங்கம். அதான் சாப்பாடு இருக்கோ இல்லையோ சைனீஸ் செல்ஃபோனாவது இருக்கே நம்மாளுங்க கிட்ட. நாசமா போங்கடே!

61 comments:

இராகவன் நைஜிரியா said...

அது எப்படிங்கண்ணே ஒரு பின்னூட்டம் கூட இல்லாம, உங்களுக்கு மட்டும் ஒரு மைனஸ் ஓட்டு விழுந்திருக்கு.

பெரிய ஆள் தான் அண்ணே நீங்க...

இராகவன் நைஜிரியா said...

// கரண்டி சைசில இருந்து பெருங்குழி வரைக்கும் ரகம் ரகமான பள்ளங்கள் வீதியெங்கும். //

அற்புதமான உவமை...

இராகவன் நைஜிரியா said...

// (ஆமாம் இந்த ரோடு போடுற கான்ட்ராக்டருக்கு, பிசியோ தெராபி, டயர்கம்பனி காரங்களெல்லாம் கட்டிங் குடுக்கிறதா ஒரு குருவி சொல்லுச்சே, அது நிஜமா நிஜாம்?) //

இருக்கலாம். காண்ட்ராக்டர் கட்டிங்க் கொடுக்க மட்டுமல்ல, வாங்கவும் ஆரம்பிச்சுட்டாங்க அண்ணே..

இராகவன் நைஜிரியா said...

// டிஸ்க் ப்ரேக் வச்சிருக்கிற பைக் மாப்பிள்ளைங்க //

அய்யோ அண்ணே இந்த டிஸ்க் ப்ரேக் இருக்கிறவங்க பண்ற அட்டூழியம் இருக்கே --- நீங்க சொன்னது கொஞ்சம்தான்... கட் அடிப்பானுங்க பாருங்க...

இராகவன் நைஜிரியா said...

// அம்முணி ஒரு கட் அடிச்சி ஒரு பெரிய குழில விட்டு ஏத்தினதில ப்ளூடூத் தெரிச்சி விழுந்திடுச்சு. //

இந்த காலத்தில் அம்முணிங்க கூட எல்லாம் கட் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்களா?

இராகவன் நைஜிரியா said...

// பாய்ஞ்சி, என்னமோ சூப்பர்மேன் மாதிரி பைக்காரன் வண்டிய புடிச்சிகிட்டு, இடியட்! கண்ணு தெரியாதா உனக்குன்னு ப்ளூடூத்துக்கு கத்தினப்ப அப்பலாம் போல வந்தது.//

அண்ணே நல்ல வேலை... கோபத்தில் அடிக்காமே விட்டீங்களே...

இராகவன் நைஜிரியா said...

// சில பன்னாடைங்க ஹெட்ஃபோன் மாட்டாம, ஹெல்மட் சரியா கட்டாம, அதுக்குள்ள அலைபேசிய சொருகிக்கிட்டு பேசிக்கிட்டே சர்க்கஸ் காட்டுவானுங்க. போற போக்கு பார்த்தா இன்னும் பத்து வருசத்துல பல் மருத்துவமனை மாதிரி, காதுக்குன்னு தனியா மருத்துவமனை கட்டணும் போல அரசாங்கம். அதான் சாப்பாடு இருக்கோ இல்லையோ சைனீஸ் செல்ஃபோனாவது இருக்கே நம்மாளுங்க கிட்ட. நாசமா போங்கடே!//

நல்லது சொன்னா எங்க உரைக்கப் போகுது அண்ணே..

ஈரோடு கதிர் said...

//பார்த்து ஒரு லுக்கு. அப்புறம், சித்தப்பா மாதிரி என்னாச்சிம்மான்னு பாசமா ஒரு கேள்வி.//

வயசான பார்ட்டிகளே அப்படித்தான்


//ரேஷா ஒட்டிட்டு வந்து ப்ளூடூத்த நொறுக்கிட்டானாம்//

காதை நொறுக்காம விட்டாரே

//ஹெல்மட் சரியா கட்டாம, அதுக்குள்ள அலைபேசிய சொருகிக்கிட்டு பேசிக்கிட்டே சர்க்கஸ் காட்டுவானுங்க//

ஆமாமா... அன்னிக்கு சென்னையில பார்த்தேன்

க.பாலாசி said...

இந்த பெருசுங்கள்லாம் என்னமா கவனிக்கராங்கப்பா. நமக்கு ஃபிகரத்தவிர வேறவொன்னும் கண்ணுக்கு தெரிய மாட்டுது. பாவம் அந்த நீலப்பல் உடைந்த ஃபிகர்.

//நாசமா போங்கடே!//

சென்னையில இருக்குறவங்கள மட்டும்தான சொன்னீங்க...

வெற்றி said...

நியாயமான கோவம்தான்..

//இவரு பின்னாடி வந்த டிவிஎஸ் 50 கேசு தரைல கெடக்கும்//

நானும் டிவிஎஸ் 50 கேசு தான்..

வெற்றி said...

//மொத பிட்டு, ஏய் மிஸ்டர் எதுனாலும் இறங்கி நின்னு பேசுய்யா!//

எனக்கும் இதே அனுபவம்தான்.நம்ம வண்டில தான உக்காந்து பேசுறோம்.
இவங்க தலையிலயா உக்காந்து பேசுறோம்.

க.பாலாசி said...

பாவம் அந்த நீலப்பல் உடைந்த ஃபிகர்...நாட்டு நடப்பு, விலைவாசி ஏத்தம், அணு ஒப்பந்தம் இதப்பத்தியெல்லாம் பிரதமர்ட பேசிகிட்டு இருந்திருக்கும். அந்த நாசமாபோறபய அதையும் உடைச்சிட்டானே. இனிமே இத பத்தியெல்லாம் பேசுறத்துக்கு யாரு இருக்கா????

பிரபாகர் said...

//(ஆமாம் இந்த ரோடு போடுற கான்ட்ராக்டருக்கு, பிசியோ தெராபி, டயர்கம்பனி காரங்களெல்லாம் கட்டிங் குடுக்கிறதா ஒரு குருவி சொல்லுச்சே, அது நிஜமா நிஜாம்?)//
எப்படிய்யா இந்த மாதிரியெல்லாம் பிட்ட போடுறீரு?

//இவரு பின்னாடி வந்த டிவிஎஸ் 50 கேசு தரைல கெடக்கும்,இல்லாட்டி ஆட்டோ மேல கார் முட்டிக்கிட்டு நிக்கும்//
முடியல. யதார்த்தத்த புட்டு புட்டு வெக்கிறீங்க.

//பீ பீன்னு ஊதிக்கிட்டு வந்துட்டாரு கலெக்டரு. அட நம்ம ட்ராஃபிக் போலீசுங்க//

ம்... நடத்துங்க... உங்க குசும்பு தாங்கல...


//அதான் சாப்பாடு இருக்கோ இல்லையோ சைனீஸ் செல்ஃபோனாவது இருக்கே நம்மாளுங்க கிட்ட. நாசமா போங்கடே//

நச்!

ஜிகர்தண்டா Karthik said...

நானா இருந்தா அந்த இடத்துல வடை, பஜ்ஜி வித்து பிசினஸ் பாத்திருப்பேன். :))

துபாய் ராஜா said...

நியாயமான அறச்சீற்றம்.வார்த்தைகளின் வர்ணனைகளில் காட்சிகள் கண்முன்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//அதான் சாப்பாடு இருக்கோ இல்லையோ சைனீஸ் செல்ஃபோனாவது இருக்கே நம்மாளுங்க கிட்ட. நாசமா போங்கடே!//

ஏனிந்தக் கொலை வெறி.

பின்னோக்கி said...

என்னது இது கொடுமையா இருக்கு ? இந்தியன் தாத்தா மாதிரி ஸ்பாட்ல நீங்க இருந்தும் இவ்வளவு நடந்திருக்கு. ஆனா நீங்க தட்டி கேட்காம வந்திருக்கீங்க. என்ன ஆச்சு உங்களுக்கு. தூங்கிக்கிட்டு இருக்குற மிருகத்த தட்டி எழுப்பி அத ஊர் சுற்ற விடுங்க. நாடு நல்லாயிருக்கும்.

Jerry Eshananda said...

சமூக அக்கறை உள்ள பதிவு, உங்கள் கோவம் நியாயமானது, [மதினி இன்னைக்கு சாப்பாட்டுல காரத்தை கூட்டிச்சோ?]

நசரேயன் said...

அண்ணே வறுத்து எடுத்து பிட்டீங்க

ப்ரியமுடன் வசந்த் said...

:)))))

கார்த்திகைப் பாண்டியன் said...

வருத்தப்பட வேண்டிய கலாச்சாரம்.. வயசு வித்தியாசம் இல்லாம எல்லாருமே இப்போ இப்படித்தான் இருக்காங்க.. போன வாரம் நான் ஓட்டிட்டுப் போன வண்டியில அம்பது வயசு அம்மா ஒண்ணுபோன் பேசிக்கிட்டே வந்து விழுந்து.. ஏன் கேக்குறீங்க?

அழகன் said...

மிகவும் நல்ல பதிவு. நம்மில் பலரும் செய்யும் தவறு இது. அழைப்பு வந்தால், வண்டியை ஓரமாக நிறுத்தி பேசி முடித்துவிட்டு செல்லலாம், அதைவிட உத்தமம் வண்டி ஒட்டும்போது அலைபேசியை உப்யோகிக்காமல் இருப்பது. தொழில்நுட்பத்தை நம்மைவிட யாரும் அதிகமாக "misuse" செய்யமுடியாது. அலைபேசி என்ற கருவி இல்லாத காலத்தில் நாமெல்லாம் உயிர்வாழ்ந்தோமா என சந்தேகம் வருகிறது.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said..

/அது எப்படிங்கண்ணே ஒரு பின்னூட்டம் கூட இல்லாம, உங்களுக்கு மட்டும் ஒரு மைனஸ் ஓட்டு விழுந்திருக்கு.

பெரிய ஆள் தான் அண்ணே நீங்க.../

ஹா. நம்ம ரேஞ்சுக்கு இடுகையே இல்லாம போனாலும் விழும்ணே.

// அற்புதமான உவமை.../

அவஸ்தையான உண்மை.

/இருக்கலாம். காண்ட்ராக்டர் கட்டிங்க் கொடுக்க மட்டுமல்ல, வாங்கவும் ஆரம்பிச்சுட்டாங்க அண்ணே../

உருப்படும்.

/அய்யோ அண்ணே இந்த டிஸ்க் ப்ரேக் இருக்கிறவங்க பண்ற அட்டூழியம் இருக்கே --- நீங்க சொன்னது கொஞ்சம்தான்... கட் அடிப்பானுங்க பாருங்க.../

தினம் பார்த்து திட்டாம போறதேயில்லை.

/இந்த காலத்தில் அம்முணிங்க கூட எல்லாம் கட் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்களா?/

சம உரிமை:))

/அண்ணே நல்ல வேலை... கோபத்தில் அடிக்காமே விட்டீங்களே.../

இது வேறயா.

/நல்லது சொன்னா எங்க உரைக்கப் போகுது அண்ணே../

நமக்கே இது உரைக்கலையேண்ணே:(

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ வயசான பார்ட்டிகளே அப்படித்தான்//

பாலாசிய பின்னாடி வெச்சிகிட்டு இது தேவையா. அவன் அங்க ஹய்யோ ஹய்யோன்னு சிக்கிறான் பாருங்க.


/ காதை நொறுக்காம விட்டாரே/

அதுக்குதான் கோவம் வந்திச்சி. ஒரே அப்புல ப்ளூடூத் காதுக்குள்ள போய்டணும்.

/ ஆமாமா... அன்னிக்கு சென்னையில பார்த்தேன்//

ம்கும்.

vasu balaji said...

க.பாலாசி said...

/இந்த பெருசுங்கள்லாம் என்னமா கவனிக்கராங்கப்பா. நமக்கு ஃபிகரத்தவிர வேறவொன்னும் கண்ணுக்கு தெரிய மாட்டுது. பாவம் அந்த நீலப்பல் உடைந்த ஃபிகர்.//

கதிர். சொன்னனா? அவ்வ்வ்வ்வ்வ்.

vasu balaji said...

வெற்றி said...

நியாயமான கோவம்தான்..

//இவரு பின்னாடி வந்த டிவிஎஸ் 50 கேசு தரைல கெடக்கும்//

நானும் டிவிஎஸ் 50 கேசு தான்..

வாங்க வெற்றி. :)

vasu balaji said...

க.பாலாசி said...

/பாவம் அந்த நீலப்பல் உடைந்த ஃபிகர்...நாட்டு நடப்பு, விலைவாசி ஏத்தம், அணு ஒப்பந்தம் இதப்பத்தியெல்லாம் பிரதமர்ட பேசிகிட்டு இருந்திருக்கும். அந்த நாசமாபோறபய அதையும் உடைச்சிட்டானே. இனிமே இத பத்தியெல்லாம் பேசுறத்துக்கு யாரு இருக்கா????//

ங்கொய்யால ஈரோட்டுல இருந்து எவ்வளவு நீளத்துக்கு ஜமக்காளம் போடுறான் பாரு.:))

vasu balaji said...

பிரபாகர் said...

/ எப்படிய்யா இந்த மாதிரியெல்லாம் பிட்ட போடுறீரு?//

நிஜம் சொல்லும் நிஜாம்.

/ முடியல. யதார்த்தத்த புட்டு புட்டு வெக்கிறீங்க.//

ஓஹோ:))

/ ம்... நடத்துங்க... உங்க குசும்பு தாங்கல...//

அவன நிறுத்தச் சொல்லுங்ணா. நான் நிறுத்துறேன்.

/ நச்!/

ப்ச்

vasu balaji said...

வெற்றி said...

/ எனக்கும் இதே அனுபவம்தான்.நம்ம வண்டில தான உக்காந்து பேசுறோம்.
இவங்க தலையிலயா உக்காந்து பேசுறோம்./

ஆமாங்க. அதே கார்னா ஓனர்னா இவரு குனிஞ்சி பேசுவாரு. ட்ரைவர்னா இறங்குடா நாயேம்பாரு.

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/ :-))/

:))

vasu balaji said...

Karthik Viswanathan said...

//நானா இருந்தா அந்த இடத்துல வடை, பஜ்ஜி வித்து பிசினஸ் பாத்திருப்பேன். :))//

கிழிச்ச! சோம்பேறி. உனக்கு கால் கட்டு போடுறேன் இரு.

vasu balaji said...

துபாய் ராஜா said...

/நியாயமான அறச்சீற்றம்.வார்த்தைகளின் வர்ணனைகளில் காட்சிகள் கண்முன்./

நன்றிங்க ராஜா.

vasu balaji said...

ஸ்ரீ said...


/ ஏனிந்தக் கொலை வெறி.//

சென்னைல வந்து பாருங்க. உங்களுக்கும் வரும். ஏரியல இழுத்து விட்டு கும்பல்ல டிவி..அவ்வ்வ்வ்வ்வ்வ்:((

vasu balaji said...

பின்னோக்கி said...

//என்னது இது கொடுமையா இருக்கு ? இந்தியன் தாத்தா மாதிரி ஸ்பாட்ல நீங்க இருந்தும் இவ்வளவு நடந்திருக்கு. ஆனா நீங்க தட்டி கேட்காம வந்திருக்கீங்க. என்ன ஆச்சு உங்களுக்கு. தூங்கிக்கிட்டு இருக்குற மிருகத்த தட்டி எழுப்பி அத ஊர் சுற்ற விடுங்க. நாடு நல்லாயிருக்கும்.//

அது உள்ளயே ஒரு சுத்து சுத்திட்டு படுத்துக்குது:))

vasu balaji said...

ஜெரி ஈசானந்தா. said...

//சமூக அக்கறை உள்ள பதிவு, உங்கள் கோவம் நியாயமானது, [மதினி இன்னைக்கு சாப்பாட்டுல காரத்தை கூட்டிச்சோ?]//

நன்றிங்க ஜெரி. நாம காரத்துக்கு காரம் கேக்குறவய்ங்க.

vasu balaji said...

நசரேயன் said...

/அண்ணே வறுத்து எடுத்து பிட்டீங்க/

ம்கும். நம்மள வகுந்துறாம இருக்கறதே பெரும்பாடு.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ :)))))/

நீயும் பைக் பார்ட்டியா:))

vasu balaji said...

கார்த்திகைப் பாண்டியன் said...

/வருத்தப்பட வேண்டிய கலாச்சாரம்.. வயசு வித்தியாசம் இல்லாம எல்லாருமே இப்போ இப்படித்தான் இருக்காங்க.. போன வாரம் நான் ஓட்டிட்டுப் போன வண்டியில அம்பது வயசு அம்மா ஒண்ணுபோன் பேசிக்கிட்டே வந்து விழுந்து.. ஏன் கேக்குறீங்க?//

ஆமாங்க.

vasu balaji said...

அழகன் said...

/மிகவும் நல்ல பதிவு. நம்மில் பலரும் செய்யும் தவறு இது. அழைப்பு வந்தால், வண்டியை ஓரமாக நிறுத்தி பேசி முடித்துவிட்டு செல்லலாம், அதைவிட உத்தமம் வண்டி ஒட்டும்போது அலைபேசியை உப்யோகிக்காமல் இருப்பது. தொழில்நுட்பத்தை நம்மைவிட யாரும் அதிகமாக "misuse" செய்யமுடியாது. அலைபேசி என்ற கருவி இல்லாத காலத்தில் நாமெல்லாம் உயிர்வாழ்ந்தோமா என சந்தேகம் வருகிறது.//

சரியா சொன்னீங்க. பழகாத வரைக்கும் நல்லது.

கலகலப்ரியா said...

ம்ம்..!!! உங்க அலைபேசி அடக்கிவாசிக்குதா என்ன..?! அத முதல்ல கவனிங்க...! அது இடுகைய பார்த்திருந்திச்சின்னா...கடைசி வார்த்தைகள் யூஸ் பண்ணும்..!

vasu balaji said...

கலகலப்ரியா said...

//ம்ம்..!!! உங்க அலைபேசி அடக்கிவாசிக்குதா என்ன..?! அத முதல்ல கவனிங்க...! அது இடுகைய பார்த்திருந்திச்சின்னா...கடைசி வார்த்தைகள் யூஸ் பண்ணும்..!//

அய்யோ அய்யோ. இந்த வாலுக்கு சொன்னா புரியுதா. பாதி நேரம் கடனட்டை, இன்சூரன்ஸு விக்கிறவங்க, சென்னையிலிருந்து மிக அருகாமையில் மகாபலிபுரத்துக்கு 3 கி.மீ. தொலைவில் ப்ளாட் விக்கறவங்க போன்/குறுஞ்செய்திதான்.

புலவன் புலிகேசி said...

என்ன பண்றது இவனுங்களை..காவல் துறை கயவாளி துறையா இருக்குறதும் ஒரு காரனம். இது போல் வாகனம் ஓட்டும் போது அலைபேசியொ, பாடலோ உபயோகப் படுத்துறவங்களை புடிச்சி நடவடிக்கை எடுக்கனும். இவனுங்களுக்கு லஞ்சம் தானே முக்கியமா இருக்கு. நம்ம மக்களுக்கும் புத்தி கிடையாது "Don't use cellphone while driving" அப்புடின்னு அடுத்தவன் மொழில சொன்னாலும் புரியாது

இது நம்ம ஆளு said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

க‌ரிச‌ல்கார‌ன் said...

போட்டு தாக்குங்க‌ண்ணே
அட‌ப் பாவி ம‌க்கா இதுக்குமா மைன‌ஸ் ஓட்டு

சுகுணாதிவாகர் said...

நீயும் ஒரு ஆணாதிக்க மிருகம் என கண்டுகொண்டேன்,என்னைப் போல இரண்டும் கெட்டான்கள் மனநிலையில் இருந்து பார், உனக்கு உண்மை தெரியும்,அப்போ பொண்டாட்டியை வெலைக்கு அனுப்ப மாட்டிங்க ஆம்பிளைங்க எல்லாரும்,என்ன சரியா?

S.A. நவாஸுதீன் said...

விபத்தை நேரில் பார்த்த உணர்வைக் கொடுத்துட்டீங்க பாலா சார். செம ஃப்லோ.

இந்த கூத்தெல்லாம் பார்க்க ஊருக்கு வரும்போது சென்னைல ஒரு வாரம், பத்து நாள் தங்கனும்போல.

///வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said..

/அது எப்படிங்கண்ணே ஒரு பின்னூட்டம் கூட இல்லாம, உங்களுக்கு மட்டும் ஒரு மைனஸ் ஓட்டு விழுந்திருக்கு.

பெரிய ஆள் தான் அண்ணே நீங்க.../

ஹா. நம்ம ரேஞ்சுக்கு இடுகையே இல்லாம போனாலும் விழும்ணே///

ஹா ஹா ஹா.

Maheswaran Nallasamy said...

இன்னும் பத்து வருசத்துல பல் மருத்துவமனை மாதிரி, காதுக்குன்னு தனியா மருத்துவமனை கட்டணும் போல அரசாங்கம்....


பத்து வருஷம் போக வேணாம். ஏற்கனவே இங்க காதுல சவுண்ட் சர்வீஸ் நடத்திகிட்டு இருந்த நம்ம ஆளுக்கு ரெண்டு ஸ்பீக்கர் அவுட். என்ன சொல்லுரங்கன்னு புரியாம திரிஞ்சுகிட்டு இருந்த ஆளு இப்போ காதுல அறுவை சிகிச்சை பண்ண போறான்..

ஸ்ரீராம். said...

நல்ல நகைச்சுவையான நடை.

நிஜாம் கான் said...

// இந்த ரோடு போடுற கான்ட்ராக்டருக்கு, பிசியோ தெராபி, டயர்கம்பனி காரங்களெல்லாம் கட்டிங் குடுக்கிறதா ஒரு குருவி சொல்லுச்சே, அது நிஜமா நிஜாம்?)//

அண்ணே! இப்படி அநியாயத்துக்கு உண்மை பேசினீங்கன்னா அப்பறம் கஞ்சா கேஸ் போட வேண்டிவரும். நீங்க ரெடியா???

நிஜாம் கான் said...

இப்ப 4 பேரு நண்பர்களாயிட்டாங்களாக்கும்????

நிஜாம் கான் said...

//இராகவன் நைஜிரியா said...
அது எப்படிங்கண்ணே ஒரு பின்னூட்டம் கூட இல்லாம, உங்களுக்கு மட்டும் ஒரு மைனஸ் ஓட்டு விழுந்திருக்கு.

பெரிய ஆள் தான் அண்ணே நீங்க...//

உங்களுக்கு மைனஸ் ஓட்டு கெடக்கலயேன்னு பொறாம. இருங்க இருங்க அடுத்த பதிவுல நான் குத்திவிடுறேன்.

நிஜாம் கான் said...

//இராகவன் நைஜிரியா said...
// டிஸ்க் ப்ரேக் வச்சிருக்கிற பைக் மாப்பிள்ளைங்க //

அய்யோ அண்ணே இந்த டிஸ்க் ப்ரேக் இருக்கிறவங்க பண்ற அட்டூழியம் இருக்கே --- நீங்க சொன்னது கொஞ்சம்தான்... கட் அடிப்பானுங்க பாருங்க...//

இந்த பஜாஜ் காரனுங்கள் வெளக்கமாத்தால அடிக்கனும்

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

என்ன பண்றது இவனுங்களை..காவல் துறை கயவாளி துறையா இருக்குறதும் ஒரு காரனம். இது போல் வாகனம் ஓட்டும் போது அலைபேசியொ, பாடலோ உபயோகப் படுத்துறவங்களை புடிச்சி நடவடிக்கை எடுக்கனும். இவனுங்களுக்கு லஞ்சம் தானே முக்கியமா இருக்கு. நம்ம மக்களுக்கும் புத்தி கிடையாது "Don't use cellphone while driving" அப்புடின்னு அடுத்தவன் மொழில சொன்னாலும் புரியாது///

நம்ம தப்புதான் அதிகம் புலிகேசி.

vasu balaji said...

இது நம்ம ஆளு said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.

vasu balaji said...

க‌ரிச‌ல்கார‌ன் said...

/போட்டு தாக்குங்க‌ண்ணே
அட‌ப் பாவி ம‌க்கா இதுக்குமா மைன‌ஸ் ஓட்டு/

=)) இல்லைன்னாதான் அதிசயம். ப்ளூடூத் காரங்களோ டிஸ்க் ப்ரேக் காரங்களோ.

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

//விபத்தை நேரில் பார்த்த உணர்வைக் கொடுத்துட்டீங்க பாலா சார். செம ஃப்லோ.

இந்த கூத்தெல்லாம் பார்க்க ஊருக்கு வரும்போது சென்னைல ஒரு வாரம், பத்து நாள் தங்கனும்போல.//

:)) வரும்போது சொல்லுங்க நவாஸ்

vasu balaji said...

Maheswaran Nallasamy said...

இன்னும் பத்து வருசத்துல பல் மருத்துவமனை மாதிரி, காதுக்குன்னு தனியா மருத்துவமனை கட்டணும் போல அரசாங்கம்....


பத்து வருஷம் போக வேணாம். ஏற்கனவே இங்க காதுல சவுண்ட் சர்வீஸ் நடத்திகிட்டு இருந்த நம்ம ஆளுக்கு ரெண்டு ஸ்பீக்கர் அவுட். என்ன சொல்லுரங்கன்னு புரியாம திரிஞ்சுகிட்டு இருந்த ஆளு இப்போ காதுல அறுவை சிகிச்சை பண்ண போறான்..//

இங்கல்லாம் சாவுக்கு கூட பூம் பாக்ஸ் வைக்கிறாங்கப்பு:))

vasu balaji said...

ஸ்ரீராம். said...

/நல்ல நகைச்சுவையான நடை./

நன்றிங்க ஸ்ரீராம்.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/ அண்ணே! இப்படி அநியாயத்துக்கு உண்மை பேசினீங்கன்னா அப்பறம் கஞ்சா கேஸ் போட வேண்டிவரும். நீங்க ரெடியா???//

போங்கண்ணே புதுசா நிறைய ஐட்டம் வந்திருக்காமே. அட்லீஸ்ட் சைனா ஐட்டமாவது :))

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/இப்ப 4 பேரு நண்பர்களாயிட்டாங்களாக்கும்????//

ஆமாம்

/உங்களுக்கு மைனஸ் ஓட்டு கெடக்கலயேன்னு பொறாம. இருங்க இருங்க அடுத்த பதிவுல நான் குத்திவிடுறேன்./

அண்ணனுக்கு மைனஸ் போட யாருக்கும் மனசு வராது.

/இந்த பஜாஜ் காரனுங்கள் வெளக்கமாத்தால அடிக்கனும்/

அதான் எல்லா வண்டிலயும் மாட்டிக்கிறானுங்களே.

ரோஸ்விக் said...

நல்ல விஷயத்தை நறுக்குன்னு தான் சொல்லீருக்கீங்க.

பாலாசி... நமக்கும் அந்த ஃபிகர் மட்டுந்தான் கண்ணுக்கு தெரியுது... :-))

நீங்க சொல்ற மாதிரி... இப்பவெல்லாம் இவங்க பிரதமர்கிட்டையும்... கவர்னருகிட்டையும் நாட்டு பிரச்சனைய அலசுரதா இங்க ஒருத்தன் கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கான்.