Friday, December 25, 2009

கணக்கும் வழக்கும்

ஒரு கணக்கு:

2001ம் ஆண்டு கணக்குப் படி மத்திய அரசில் பெண் ஊழியர்கள் 40 லட்சம் பேர்.

இந்த ஒன்பது ஆண்டுகளில் பணி மூப்பு பெற்றோர், 18 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை உடையவர்கள், திருமணமாகாதவர்கள்,ஆகியோரை விடுத்து, புதிதாக பணி நியமனம் செய்யப் பட்டவர்களையும் விடுத்து வெறும் 40000 (1 சதவீதம்) பேர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளுவோம்.

ஒரு கடை நிலை ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ 10000. இதர வகுப்பில் உள்ள பெண் ஊழியரின் அதிகபட்ச  அடிப்படைச் சம்பளம் மட்டும் ரூ 37,000. படியுடன் சேர்த்து இது இரு மடங்காகும் எனினும் கணக்குக்காக இது ரூ 20000 என வைத்துக் கொள்வோம்.

ஒரு பெண் ஊழியர் ஒரு வருடம் சம்பளத்துடன் கூடிய விடுப்பில் செல்வார்களேயானால் அரசுக்கு வருடம் ஒன்றுக்கு செலவு ரூ 2.4 லட்சம். 40000 பேருக்கு 960 கோடி ரூபாய்.  இது போக மறைமுகமாக வரியிழப்பு 3 சதவீதம் என வைத்துக் கொண்டாலும் 1000 கோடி ரூபாய். படியுடன் சேர்ந்து இது குறைந்த பட்சம் 1250 கோடியாவது வரும்.

எதற்கு இப்படிப் புலம்பல் என சலிப்பவர்களுக்கு இதோ

ஒரு வழக்கு:

மேற்படித் தொகை பதினெட்டு வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு பெண் ஊழியருக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு இல்லாத பட்சத்தில், (சிக் லீவ் கணக்கில் வராது), குழந்தைப் பேறுக்கான ஆறு மாத முழுச்சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கு மேலதிகமாக, தேவைப்படும் நேரமெல்லாம், குழந்தை வளர்ப்புக்கோ, அவர்கள் படிப்புக்கு உதவவவோ, அட ஒரு சினிமாவுக்கு கூட்டிப் போக என்றே வைத்துக் கொண்டாலும், அவர்கள் பணிக்காலத்தில் 730 நாட்கள் படியுடன் கூடிய முழுச்சம்பளத்துடன் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

ஆணோ பெண்ணோ அந்த ஊழியர், பணியில் எதிர் கொள்ளும் விபத்தில் ஏற்படும் உடல் உறுப்பு இழப்புக்கோ அல்லது கோமாவிலோ கிடந்தாலும் 4 மாதங்களுக்கு மட்டுமே முழுச்சம்பளத்துடன் கூடிய விடுப்பு உண்டு.

விடுமுறையே எடுக்காமல், சம்பளத்துடன் கூடிய விடுமுறை வருடத்திற்கு 30 நாட்களை (Earned Leave) அதிகபட்சம் 300 நாட்கள் மட்டுமே சேமித்து பணி மூப்பின் போது சரண்டர் செய்து பணமாகப் பெறமுடியும்.

ஆனால் 2 குழந்தைகள் இருந்தால் போதும், முழுச்சம்பள விடுமுறையும் எடுத்துக் கொண்டால் போதும், 730 நாட்கள் சம்பளம் இனாம். இந்த விடுமுறை பணிக்காலமாக கணக்கிடப்பட்டு இன்கிரிமெண்ட், பென்ஷன் உட்பட எல்லா சலுகையும் உண்டு.

உலகில் வேறெந்த நாட்டிலாவது, குழந்தைகள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளில் கூட இந்தச் சலுகை இருக்கிறதா? ஒரு ஒப்பீட்டில் பார்த்தால், சொந்த விடுமுறையை பார்த்து பார்த்து பயன் படுத்தியவர்கள், இந்த சட்டம் வந்த பிறகு முதலில் அதைத் தீர்த்து, இந்த விடுமுறைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

அதிலும், குழந்தைக்கு 16 வயதாகிவிட்டது. என் சலுகையை மறுக்க உங்களுக்கு என்ன அதிகாரம் என்று 2 வருடங்கள் விடுமுறை எடுக்கிறவர்களும் உண்டு. இல்லாவிடினும், மறுக்கும் பட்சத்தில் தொழிற்சங்கங்களின் தலையீடு உண்டாகும்.

குழந்தை நலனுக்கு என்று வைத்துக் கொண்டால், மனைவியை இழந்து மறுமணம் செய்யாத ஆணுக்கு இந்தச் சலுகை கிடையாதாம்!

வசதிக்கு வேலைக்கு வந்து, வேலைகளைத் தேக்கி வைத்து, அவசர வேலை இருக்கும் நேரம் அடாவடியாக விடுமுறை கோரி, மற்ற ஆண் பெண் ஊழியர் ஒத்துழைக்க மறுத்து அரசு இயந்திரத்தில் மேலதிக திறமையின்மையையும் இது உண்டாக்குகிறது.

தரமான கல்விச் சாலைகளில் படிக்க வாய்ப்பு, தரமான மருத்துவ மனைகளில் சிகிச்சை (இது ஏற்கனவே அங்கீகரிக்கப் பட்ட மருத்துவ மனைகளில் இருந்தாலும் கூட) என்ற சலுகையே போதுமே! இந்தியா போன்று ஒரு அடிப்படை கட்டமைப்புக்கே போதாக் குறையான ஒரு நாட்டில், பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் அவதிப்படும் நாட்டில், விவசாயம் பொய்த்து தற்கொலைக்கு வழிகோலும் நாட்டில், இப்படி ஒரு சாராருக்கு மட்டும் சலுகை வழங்கும் நிலையிலா இருக்கிறது நாடு?

பெரும்பாலும் மத்திய அரசு ஊதிய விகிதத்தையும் சலுகைகளையும் பின்பற்றும் மானிலங்களும் இதே சலுகையை வழங்குகின்றன. அந்தச் செலவுக்கு எங்கே போவார்கள்? வரி விதிப்புதானே? அதிகாலை கிளம்பி பொழுது சாய வீடு திரும்பும் சாமான்யனின் குழந்தைக்கு மதிய உணவு மட்டுமே (அதுவும் விடுமுறை நாளில் இருக்காது)தரும் அரசு, தன் ஊழியரில் ஒரு சாராருக்கு மட்டும் தாராளமாக சம்பளமும் தந்து இப்படி கொடையும் வேறு தருகின்றதே!

ங்கொய்யால. நாம் இருவர் நமக்கு ஒருவர்னு அங்கங்க சொல்லிக்கிட்டு இருக்கிறத அரசு ஊழியருக்கு மட்டும் ரெண்டுன்னு சொல்லிடுங்கய்யா!

36 comments:

ராஜவம்சம் said...

வர்ர இடைத்தேர்தலில் கேப்டண்டசொல்லி சீட் கேக்கலாம்

நீங்க ரெடியா ? நாங்கரெடி

பின்னோக்கி said...

ஏங்க..இது அரசாங்க ஊழியர்களுக்கு மட்டும் தானா ? இந்த தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இல்லையா ?.

என்னமோ போங்க. பொம்பளை பத்தி பதிவே எழுதுறது இல்லைங்க. நான் வாங்குன முதல் மைனஸ் ஓட்டு அந்த பதிவுக்கு தான்.

அஞ்சா நெஞ்சன் நீங்க தாங்க.

இராகவன் நைஜிரியா said...

// 4000 பேருக்கு 960 கோடி ரூபாய். //

அண்ணே 4000 பேருக்கு 96 கோடி ரூபாய்... 40,000 பேருக்கு 960 கோடி ரூபாய்.. (கணக்கன் என்பதை நிருபீச்சுட்டேனா?)

இராகவன் நைஜிரியா said...

// அட ஒரு சினிமாவுக்கு கூட்டிப் போக //

அட அப்படி போடு... இதுதான் உங்க டச்..

இராகவன் நைஜிரியா said...

// அவர்கள் பணிக்காலத்தில் 730 நாட்கள் படியுடன் கூடிய முழுச்சம்பளத்துடன் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். //

சூப்பர் அண்ணே... பெண்ணாகப் பிறந்து மத்திய அரசு அலுவலகத்தில் வேலை செய்திட மாதவம் செய்திட வேண்டும் போலிருக்கே...

இராகவன் நைஜிரியா said...

// ஆணோ பெண்ணோ அந்த ஊழியர், பணியில் எதிர் கொள்ளும் விபத்தில் ஏற்படும் உடல் உறுப்பு இழப்புக்கோ அல்லது கோமாவிலோ கிடந்தாலும் 4 மாதங்களுக்கு மட்டுமே முழுச்சம்பளத்துடன் கூடிய விடுப்பு உண்டு. //

சமயங்களில் இது மாதிரியான சட்டங்களை என்ன நினைத்து உருவாக்கியிருக்கின்றனர் எனப் புரிவதில்லைங்க.

இராகவன் நைஜிரியா said...

// குழந்தைக்கு 16 வயதாகிவிட்டது. என் சலுகையை மறுக்க உங்களுக்கு என்ன அதிகாரம் என்று 2 வருடங்கள் விடுமுறை எடுக்கிறவர்களும் உண்டு.//

work to rule என்றுச் சொல்லுவார்கள். அதைச் சரியாகப் புரிந்து செய்கின்றார்களோ என்னவோ?

இராகவன் நைஜிரியா said...

// நாம் இருவர் நமக்கு ஒருவர்னு அங்கங்க சொல்லிக்கிட்டு இருக்கிறத அரசு ஊழியருக்கு மட்டும் ரெண்டுன்னு சொல்லிடுங்கய்யா! //

அது வேறு இது வேறு... அது பிராசரத்திற்கு மட்டும்... இது ஓட்டுக்கு மட்டும்.

அரசியல்வாதியா இருந்தால்தான் அவங்க கஷ்டம் உங்களுக்குப் புரியும்.

பா.ராஜாராம் said...

//அதிலும், குழந்தைக்கு 16 வயதாகிவிட்டது. என் சலுகையை மறுக்க உங்களுக்கு என்ன அதிகாரம் என்று 2 வருடங்கள் விடுமுறை எடுக்கிறவர்களும் உண்டு. இல்லாவிடினும், மறுக்கும் பட்சத்தில் தொழிற்சங்கங்களின் தலையீடு உண்டாகும்//

//வசதிக்கு வேலைக்கு வந்து, வேலைகளைத் தேக்கி வைத்து, அவசர வேலை இருக்கும் நேரம் அடாவடியாக விடுமுறை கோரி, மற்ற ஆண் பெண் ஊழியர் ஒத்துழைக்க மறுத்து அரசு இயந்திரத்தில் மேலதிக திறமையின்மையையும் இது உண்டாக்குகிறது//

//பெரும்பாலும் மத்திய அரசு ஊதிய விகிதத்தையும் சலுகைகளையும் பின்பற்றும் மானிலங்களும் இதே சலுகையை வழங்குகின்றன. அந்தச் செலவுக்கு எங்கே போவார்கள்? வரி விதிப்புதானே? அதிகாலை கிளம்பி பொழுது சாய வீடு திரும்பும் சாமான்யனின் குழந்தைக்கு மதிய உணவு மட்டுமே (அதுவும் விடுமுறை நாளில் இருக்காது)தரும் அரசு, தன் ஊழியரில் ஒரு சாராருக்கு மட்டும் தாராளமாக சம்பளமும் தந்து இப்படி கொடையும் வேறு தருகின்றதே!//


நியாயமான பார்வை பாலா சார்!

cheena (சீனா) said...

அன்பின் பாலா

புள்ளி விவரங்கள் தலை சுற்றுகின்றன - இருப்பினும் குறிக்கோள் புரிகிறது.

நல்வாழ்த்துகள்

Balavasakan said...

என்ன கொடுமை சார் இது....

புலவன் புலிகேசி said...

ரமணா விஜயகாந்த் மாதிரி ஆயிட்டீங்களே..பாவம் ஆண்கள்..

ஆரூரன் விசுவநாதன் said...

புள்ளிவிவரங்களும், அதை அலசிய விதமும்,.....அருமை.

சொரணையில்லாத இந்த திருவாளர் பொதுஜனம்....தன்னைதானே திட்டிக்கொள்ளட்டும் "தலைவிதி"என்று.


தொடரட்டும் உங்கள் பணி,,,,,,

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

//கணக்கும் வழக்கும்//

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ.......

ஹி....ஹி.....

T.V.Radhakrishnan said...

நியாயமான பார்வை

அகல்விளக்கு said...

செம கணக்கா இருக்கே...

// ராஜவம்சம் said...
வர்ர இடைத்தேர்தலில் கேப்டண்டசொல்லி சீட் கேக்கலாம்//

முயற்சி பண்ணுங்க சார்...

S.A. நவாஸுதீன் said...

///ங்கொய்யால. நாம் இருவர் நமக்கு ஒருவர்னு அங்கங்க சொல்லிக்கிட்டு இருக்கிறத அரசு ஊழியருக்கு மட்டும் ரெண்டுன்னு சொல்லிடுங்கய்யா!///

உங்க கோபம் நியாயமானதே

ஸ்ரீ said...

நியாயமாத்தான் சொல்றீங்க.ஆனா ஒண்ணும் பண்ண முடியாது.

க.பாலாசி said...

//இப்படி ஒரு சாராருக்கு மட்டும் சலுகை வழங்கும் நிலையிலா இருக்கிறது நாடு?//

இல்லை. தவறான செயல்தான்.

வானம்பாடிகள் said...

ராஜவம்சம் said...

/வர்ர இடைத்தேர்தலில் கேப்டண்டசொல்லி சீட் கேக்கலாம்

நீங்க ரெடியா ? நாங்கரெடி//

ம்கும். இல்லன்னா சீட்டுக்கு அவராண்ட அடிச்சிக்கிறாங்களோ:))

வானம்பாடிகள் said...

பின்னோக்கி said...

// ஏங்க..இது அரசாங்க ஊழியர்களுக்கு மட்டும் தானா ? இந்த தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இல்லையா ?.

என்னமோ போங்க. பொம்பளை பத்தி பதிவே எழுதுறது இல்லைங்க. நான் வாங்குன முதல் மைனஸ் ஓட்டு அந்த பதிவுக்கு தான்.

அஞ்சா நெஞ்சன் நீங்க தாங்க.//

எனக்கு மேல கதிர் இருக்காரு:))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ அண்ணே 4000 பேருக்கு 96 கோடி ரூபாய்... 40,000 பேருக்கு 960 கோடி ரூபாய்.. (கணக்கன் என்பதை நிருபீச்சுட்டேனா?)//

:)). பின்ன.
/சூப்பர் அண்ணே... பெண்ணாகப் பிறந்து மத்திய அரசு அலுவலகத்தில் வேலை செய்திட மாதவம் செய்திட வேண்டும் போலிருக்கே.../

ஆமாங்கன்னா

/சமயங்களில் இது மாதிரியான சட்டங்களை என்ன நினைத்து உருவாக்கியிருக்கின்றனர் எனப் புரிவதில்லைங்க./

1957 சட்டம் சார். 86ல மாத்தியும் இவ்வளவுதான்.

/work to rule என்றுச் சொல்லுவார்கள். அதைச் சரியாகப் புரிந்து செய்கின்றார்களோ என்னவோ?/

இது லீவ் டு ரூல் அண்ணே.

/அது வேறு இது வேறு... அது பிராசரத்திற்கு மட்டும்... இது ஓட்டுக்கு மட்டும்.

அரசியல்வாதியா இருந்தால்தான் அவங்க கஷ்டம் உங்களுக்குப் புரியும்./

அதிகாரியா இருந்தாதானே இந்த கஷ்டம் அவங்களுக்கு புரியும்:))

வானம்பாடிகள் said...

பா.ராஜாராம் said...

/ நியாயமான பார்வை பாலா சார்!/

நன்றிங்க பாரா.

வானம்பாடிகள் said...

cheena (சீனா) said...

/அன்பின் பாலா

புள்ளி விவரங்கள் தலை சுற்றுகின்றன - இருப்பினும் குறிக்கோள் புரிகிறது.

நல்வாழ்த்துகள்/

நன்றிங்க சீனா. இன்னும் 5-10 வருடங்களில் இது 100 சதமாகும்போது தாக்கம் புரியும்.

வானம்பாடிகள் said...

Balavasakan said...

/என்ன கொடுமை சார் இது..../

தேர்தலுக்காக அவசர அவசரமா ஒப்புக் கொள்ளப்பட்டு, முதலில் அறிவிக்கப் பட்டது இது.:)

வானம்பாடிகள் said...

புலவன் புலிகேசி said...

/ரமணா விஜயகாந்த் மாதிரி ஆயிட்டீங்களே..பாவம் ஆண்கள்../

இல்லீங்க பாவம் பொது ஜனம்.

வானம்பாடிகள் said...

ஆரூரன் விசுவநாதன் said...

/ புள்ளிவிவரங்களும், அதை அலசிய விதமும்,.....அருமை.

சொரணையில்லாத இந்த திருவாளர் பொதுஜனம்....தன்னைதானே திட்டிக்கொள்ளட்டும் "தலைவிதி"என்று.


தொடரட்டும் உங்கள் பணி,,,,,,

வாழ்த்துக்கள்//

அதேதான்.

/ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ.......

ஹி....ஹி...../

ஹா ஹா ஹா

வானம்பாடிகள் said...

T.V.Radhakrishnan said...

/நியாயமான பார்வை/

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

அகல்விளக்கு said...

/ செம கணக்கா இருக்கே...

முயற்சி பண்ணுங்க சார்...//

இது வேறயா. ஒன்னுமில்ல இதுக்கே மைனஸ் ஓட்டு எகிறுது:))

வானம்பாடிகள் said...

S.A. நவாஸுதீன் said...

/ உங்க கோபம் நியாயமானதே//

வேற என்ன பண்ணமுடியும் சொல்லுங்க!அவ்வ்வ்வ்வ்

வானம்பாடிகள் said...

ஸ்ரீ said...

//நியாயமாத்தான் சொல்றீங்க.ஆனா ஒண்ணும் பண்ண முடியாது.//

ஆமாங்க அதான் யதார்த்தம்.

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...


/ இல்லை. தவறான செயல்தான்.//
ம்ம்ம்

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ணே! இது மத்திய அரசு ஊழியர்களுக்கும் பொருந்துமா இல்ல மாநில அரசுக்கு மட்டும்தானா? அடுத்த மேட்டரு வட்டிக்கு உடுற வாத்தியாருகளப் பத்தியா? உசாரய்யா உசாரு.., யாரும்மா அது அண்ணனோட அட்ரஸ கேக்குறது???

வானம்பாடிகள் said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/அண்ணே! இது மத்திய அரசு ஊழியர்களுக்கும் பொருந்துமா இல்ல மாநில அரசுக்கு மட்டும்தானா? /
மாத்தி கேட்டீங்க. மத்திய அரசுக்குதான். மாநில அரசுக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன்.

/அடுத்த மேட்டரு வட்டிக்கு உடுற வாத்தியாருகளப் பத்தியா? உசாரய்யா உசாரு.., யாரும்மா அது அண்ணனோட அட்ரஸ கேக்குறது???/

ஐ. ஆட்டோ மேட்டர்னா உசாராயிடுவோம்ல.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

பொதுவாவே, நம்ம செக்சன்ல மகளிர் இருக்கவே கூடாதுன்னு வேண்டிக்கற சில ஆம்பிளைகளில் நானும் ஒருவன். காலையில நிதானமா வருவது முதல் (குழந்தைங்களை ஸ்கூலுக்கு அனுப்பி, அவருக்கு ஆபீசுக்கு எல்லாம் பண்ணிக் கொடுத்துபுட்டு....என்று ஆலாபனை வேறு) மாலை சீக்கிரமா கிளம்புவது வரை இவங்க அடிக்கற கொட்டம் தாங்க முடியாது சாமி. ஷிப்ட் டூட்டி போடும்போது மட்டும் இவங்க லேடீஸ் எனும் ஞாபகம் வந்துடும். மற்ற நேரத்தில் மகளிருக்கு சம உரிமை வேண்டும் என்ற கோஷம்தான். என்ன புலம்பி என்ன, அரசாங்கம் எப்பவும் தாய்க்குலம் பக்கம் தான்.
"இவிங்க எப்பவும் இப்படிதான் பாஸ்"
(பை த வே, கமெண்டுக்கெல்லாம் மைனஸ் ஒட்டு போட மாட்டாங்கல்ல......)

ரோஸ்விக் said...

அண்ணே! பரவாயில்ல... எல்லோரும் பொம்பளைங்கள கணக்குப் பண்ணுவாய்ங்க. நீங்க பொம்பளைங்க கணக்கை பண்ணுறீங்க. ரொம்ப நல்லவருன்னு நீங்க.... :-)))