Monday, December 21, 2009

ஈரோடு பதிவர் சங்கமம் - ஒரு சாதனைத் தொகுப்பு!

பிரமாதம். அசத்தல். சாதிச்சிட்டீங்க  என்பது போன்ற வார்த்தைகளைத் தனியாகச் சொன்னாலும் மொத்தமாகச் சொன்னாலும் டெம்ப்ளேட் பின்னூட்டம் என்று சொல்லிவிடலாம்.

ஆனால், முதன் முறையாக ஒரு பதிவர் கூடலை மிக அழகான ஓர் மாலைப் பொழுதில் மிக மிக அருமையாக நடத்திக் காட்டிய ஈரோடு பதிவர்களைப் பாராட்ட வார்த்தைகளைச் செதுக்குவதைவிட பட்டென்று மனதில் தோன்றுவதை சொல்லுவது தவிர வேறு வழியில்லை.

கூட்டுமுயற்சி, பங்கேற்பு, பங்களிப்பு, நிர்வகித்தல், விருந்தோம்பல் இன்னும் என்னென்ன உண்டோ அத்தனைக்கும் எடுத்துக் காட்டாக இந்த நிகழ்ச்சி  இருந்தது என்பதில் சந்தேகமேயில்லை. சந்திப்பின் முத்திரைச் சின்னத்தில் மோட்டோ எனும் முது மொழியாக 'அட நீங்கதானா" எனப் போட்டிருக்கலாம் போல்.


பதிவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்ததும் நேசக்கரம் குலுக்கி கேட்ட முதல் கேள்வி இது. கிட்டத் தட்ட எழுபதுக்கும் மேற்பட்ட பதிவர்களும் வாசகர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சந்தேகமற நிரூபணமானது வாக்குகளையும் பின்னூட்டங்களையும் தாண்டி, நீங்கள் எல்லோராலும் படிக்கப்படுகிறீர்கள் என்பது. ஒரு பதிவருக்கு, இதைவிட ஊக்கமோ, தன்னம்பிக்கையோ வேறெப்படி தரவியலும்.

ஈரோடு பதிவர் சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் மறைமுகமான இந்தத் தலைப்பு இருந்திருக்கிறது. இதற்காக நிர்வாகிகளுக்கு தனிப்பட்ட முறையிலும், மற்ற பதிவர்கள் சார்பிலும் என் நன்றி. 

சுவையான தேநீருக்குப் பின், சரியாக 4 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, திரு. கதிர் அழைக்க திரு ஆரூரன் வரவேற்பு உரையாற்றினார். பதிவு என்பதின் முக்கியத்தை கலிங்கன் காளிங்கனாகவும் கம்ப நாடன் கம்ப நாடாராகவும் திரிந்ததை நகைச்சுவையோடு கூறிடினும், பதிவின் அவசியத்தை, பொறுப்புணர்ச்சியை உணர்த்தியது பாராட்டத் தக்கது.

தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்கள் வசந்த்குமார், வலைச்சரம் சீனா, சுமஜ்லா, பழமைபேசி, பட்டர்பிளை சூர்யா, செந்தில்வேலன், ரம்யா, அகநாழிகை வாசுதேவன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். “ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்”  பதிவர்கள் தண்டோரா, வானம்பாடி(நானு நானு), அப்துல்லா, பரிசல்காரன், ஜெர்ரி, கார்த்திகை பாண்டியன் ஆகியோரால் துவக்கப் பட்டது.

கலந்துரையாடல் நேரம் நிகழ்ச்சியின் மகுடம் எனலாம்.  இதனை நிர்வகிக்க  லதானந்த், பழமைபேசி, கேபிள் சங்கர், அப்துல்லா, வெயிலான், ஸ்ரீதர் ஆகியோர் குழு பொறுப்பேற்க அனானிகள் குறித்த விவாதம் சூடு பிடித்தது எதிர்பாராத சுவாரசியம். அவ்வப்போது தோழமையான, நகைச்சுவையான மட்டறுப்புகளுடன், வெகு சிறப்பாக அமைந்துவிட்டது.





விழா முடிந்ததும், செவிக்குணவில்லாத காரணத்தால், சிறிதன்றி பெரிதாகவே கொங்குநாட்டின் விருந்தோம்பல் அழைத்தது. சுவையான உணவு வாழைமட்டை(பாக்கு?) தட்டிலும், அளவான வாழையிலையில் பரிமாரப் பட்டமையில் கூட அமைப்பாளர்களின் சமூக அக்கறை வெளிப்பட்டது.

விளக்கமாக எழுத எண்ணியிருப்பதாலும், கூடியவரை உரைகளை ஒலிப்பதிவில் தர எண்ணியிருப்பதாலும், சுருக்கமாக (அடங்கொன்னியா! இது சுருக்கமா?) ஒரு சின்ன சுயதம்பட்டத்தோடு நெஞ்சுகொள்ளா நன்றியோடு முடிக்கிறேன்.

இந்த என் 300வது இடுகையை,  ஒரு மிகச் சிறந்த பதிவர் சங்கமத்தின் நிகழ்வுகளைத் தாங்கி வருவதோடு, என்னை குறைந்தது எழுபது சக பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும், அவர்களை எனக்கும் நேரடியாக சந்திக்க வாய்ப்பளித்த திரு கதிர், திரு ஆரூரன், பாலாஜி, வால்பையன் மற்றும் இதர ஒருங்கிணைப்பாளர்களுக்கும், என் எழுத்தை வாசிக்கும் இதர அன்பர்களுக்கும் என் நன்றியைப் பகிர வழிவகுத்த ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்துக்கு அர்ப்பணிக்கிறேன்.

103 comments:

Chitra said...

300 வது இடுகைக்கும் நல்ல நிகழ்ச்சி தொகுப்புக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

மணிஜி said...

விரிவாகவும் எழுதுங்கள் சார்

ஈரோடு கதிர் said...

அண்ணா...

தங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

300வது இடுகைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

300 வது இடுகைக்கும் நிகழ்ச்சி தொகுப்புக்கும் வாழ்த்துகள்.

முனைவர் இரா.குணசீலன் said...

தங்கள் 300 வது இடுகைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா..

முனைவர் இரா.குணசீலன் said...

ஈரோடு பதிவர் சந்திப்பில் தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா..
பதிவர் கூடல் மிகவும்சிறப்பாக அமைந்தது. தங்கள் ஒலிப்பதிவை கேட்பதில் ஆர்வமாக உள்ளேன்..

க‌ரிச‌ல்கார‌ன் said...

விரிவாக‌ எழுதுங்க‌ள் சார்
300 வ‌துக்கு வாழ்த்துக்க‌ள்

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாண்ணே.....வணக்கம், நிகழ்வுகளின் அழுத்ததில் உங்களை சரிவர கவனிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

உங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.


பதிவுகளுக்கு நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

ஆங்.......மறந்துட்டனே......


300பதிவுகளை இட்டு வெற்றி நடை போட்டுவரும் உங்களுக்கு எங்கள் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்...

தொடரட்டும் உங்கள் பணி...........


அன்புடன்
ஆரூரன்

ஜோதிஜி said...

300 க்கு வாழ்த்துகள். 500 வரைக்கும் உங்கள் இளமையான துள்ளல் நீடிக்க என் அன்பு.

sathishsangkavi.blogspot.com said...

தங்கள் 300 வது இடுகைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்......

ஈரோடு பதிவர் சந்திப்பில் தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..........

KARTHIK said...

டிரிபிள் சென்சுரிக்கு வாழ்துக்கள் சார்.

அண்ணாமலையான் said...

உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த பதிவர் சந்திப்ப்புகள்.. ம்ம் எப்போ எங்க ஊர்ல நடத்தறதோ?

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப சந்தோசமா இருக்கு சார் பதிவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது.

300-வது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்

Unknown said...

நீங்களும் ஒரு சேவாக் ஆகிடீங்க....

செ.சரவணக்குமார் said...

அருமையான பகிர்வுக்கு நன்றி. 300 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

vasu balaji said...

Chitra said...

/ 300 வது இடுகைக்கும் நல்ல நிகழ்ச்சி தொகுப்புக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்./

நன்றிங்க

க.பாலாசி said...

//கொங்குநாட்டின் விருந்தோம்பல் அழைத்தது.//

பள்ளிப்பாளையம் சிக்கன் உட்பட...

தங்களின் வருகையும் மிக்க மகிழ்ச்சியை அளித்தது....

300வது இடுகையா???????.....எவ்ளோ உயரம் போயிட்டீங்க....மென்மேலும் தங்களின் எழுத்துப்பணியும் வளர்ச்சியடைய உளமார்ந்த வாழ்த்துக்கள்...

vasu balaji said...

தண்டோரா ...... said...

/விரிவாகவும் எழுதுங்கள் சார்/

நிச்சயமா.

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.

300 க்கு வாழ்த்துகள். தொடரட்டும் இந்தப் பொற்காலம் :)

Sanjai Gandhi said...

நான் உங்களை சந்தித்ததை லகலகப்ரியாகிட்ட சொல்ல வேணாம்னு சொன்னிங்களே.. ஏன்?

கலகலப்ரியா said...

... 300... 3000 ஆக வாழ்த்துகள் சார்...

கலகலப்ரியா said...

//SanjaiGandhi™ said...

நான் உங்களை சந்தித்ததை லகலகப்ரியாகிட்ட சொல்ல வேணாம்னு சொன்னிங்களே.. ஏன்?//

ஓஹோ... சஞ்சய் இப்டி நீங்க வனம்பாடிகிட்ட சொல்ல நினைச்சிட்டு... மறந்துட்டியளாக்கும்.. பட்... டூ லேட் நண்பா... டூ லேட்... =))

balavasakan said...

300 ..1 வாழ்த்துக்கள் சார்

Kodees said...

300 க்கு வாழ்த்த்க்கள்

புலவன் புலிகேசி said...

ஐயா, பதிவர் சந்திப்புல கலந்துக்க எனக்கு குடுத்து வைக்கல...உங்க புகைப்படம் பார்த்தேன்..நீங்க ஏன் திரைப்பட கதாநாயகனா முயற்சி பன்ன கூடாது??? 300க்கு வாழ்த்துக்கள்...

நிஜாம் கான் said...

அண்ணே!300 க்கு வாழ்த்துக்கள். பதிவர் சந்திப்பு நிகழ்வுகள் அருமை.

இராகவன் நைஜிரியா said...

பதிவர் சந்திப்பு, பதிவர் சங்கமம் எல்லாம் நன்றாக நடந்தது கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.

ஒலிப்பதிவை கேட்க ஆர்வமாக இருக்கின்றேன்.

300 வது இடுகைக்கு வாழ்த்துகள் அண்ணே.

ரோஸ்விக் said...

பதிவர்கள் சங்கமத்தை பற்றி படிக்கும்போது இது போன்ற சிறந்த நிர்வாகிகளையும், திறமைசாலிகளையும் பதிவுலகம் கொண்டிருப்பதும் மிகவும் சந்தோசத்திற்கு உரியது.

அனைவருக்கும் வாழ்த்துகள்.

நிகழ்காலத்தில்... said...

300 இடுகைக்கு வாழ்த்துகள்..

ஸ்ரீராம். said...

முன்னூறாவது இடுகை வாழ்த்துக்கள். பதிவர் சந்திப்பு மேல் விவரங்களை படிக்க அல்லது கேட்க ஆவலாக இருக்கிறேன்...!

நர்சிம் said...

வாழ்த்துக்கள்.. வரமுடியவில்லை என்ற வருத்தம் எழுவதை தடுக்கமுடியவில்லை.

300க்கு வாழ்த்துக்கள்.

தாராபுரத்தான் said...

இன்று எழுத்தில் உங்கள் முகம்பாா்க்கிறேன்,,,நன்றி கதிா்,,

Jaleela Kamal said...

ஆஹா அருமையான பதிவர் சந்திப்புடன் உங்கள் 300 ஆவது இடுகை, வாழ்த்துக்கள்.

அருமையான தொகுப்பிற்கு பாராட்டுக்கள்

சொல்லரசன் said...

300வது இடுகைக்கு வாழ்த்துகள்

Paleo God said...

வாழ்த்துக்கள் சார்... நேர்ல வரமுடியாத கொறைய விளக்கி நிறச்சுடுங்க.... :))

நேசமித்ரன் said...

300வது இடுகைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/அண்ணா...

தங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

300வது இடுகைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...//

மறக்க முடியாத நிகழ்வாக அமைத்துக் காட்டியமைக்கும் உங்கள் அன்பான உபசரிப்புக்கும் எப்படி நன்றி சொல்ல?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

300க்கு வாழ்த்துகள்.

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/300 வது இடுகைக்கும் நிகழ்ச்சி தொகுப்புக்கும் வாழ்த்துகள்./

நன்றிங்க.

vasu balaji said...

முனைவர்.இரா.குணசீலன் said...

//ஈரோடு பதிவர் சந்திப்பில் தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா..
பதிவர் கூடல் மிகவும்சிறப்பாக அமைந்தது. தங்கள் ஒலிப்பதிவை கேட்பதில் ஆர்வமாக உள்ளேன்..//

மகிழ்ச்சி என்னுடையதும். நன்றிங்க.

பின்னோக்கி said...

300 வதுக்கு வாழ்த்து.
போட்டா பார்த்தேன். 29 டு 30 வது வயதுக்கு வாழ்த்து.

vasu balaji said...

க‌ரிச‌ல்கார‌ன் said...

/விரிவாக‌ எழுதுங்க‌ள் சார்
300 வ‌துக்கு வாழ்த்துக்க‌ள்//

முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் பாலா

சந்தித்தும் அதிகம் பேச இயலவில்லை - முன்னூறாவது இடுகைக்கு நல்வாழ்த்துகள்

தொடர்க - 3000த்தினை நோக்கி

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

//பாலாண்ணே.....வணக்கம், நிகழ்வுகளின் அழுத்ததில் உங்களை சரிவர கவனிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

உங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.


பதிவுகளுக்கு நன்றி//

ஆரூரன். இதற்குமேலும் விருந்தோம்பல் யாராலையும் முடியாது. இந்த அன்புக்கு நான் கொடுத்து வைத்தவன் என்ற உணர்வே மனது நிறைவாகிறது.

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

ஆங்.......மறந்துட்டனே......


300பதிவுகளை இட்டு வெற்றி நடை போட்டுவரும் உங்களுக்கு எங்கள் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்...

தொடரட்டும் உங்கள் பணி...........


அன்புடன்
ஆரூரன்

நன்றி ஆரூரன்.

vasu balaji said...

ஜோதிஜி said...

/300 க்கு வாழ்த்துகள். 500 வரைக்கும் உங்கள் இளமையான துள்ளல் நீடிக்க என் அன்பு./

நன்றிங்க ஜோதிஜி.

vasu balaji said...

Sangkavi said...

/தங்கள் 300 வது இடுகைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்......

ஈரோடு பதிவர் சந்திப்பில் தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி........../

நன்றி சங்கவி. மகிழ்ச்சி என்னுடையதும்.

vasu balaji said...

கார்த்திக் said...

/ டிரிபிள் சென்சுரிக்கு வாழ்துக்கள் சார்./

=)) நன்றி.

vasu balaji said...

அண்ணாமலையான் said...

/ உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த பதிவர் சந்திப்ப்புகள்.. ம்ம் எப்போ எங்க ஊர்ல நடத்தறதோ?/

நன்றிங்க. நீங்களே முதலடி வைக்கலாமே:)

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/ரொம்ப சந்தோசமா இருக்கு சார் பதிவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது.

300-வது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்/

நன்றிங்க நவாஸ்.

நசரேயன் said...

வாழ்த்துக்கள் பாலா அண்ணே

vasu balaji said...

பேநா மூடி said...

/நீங்களும் ஒரு சேவாக் ஆகிடீங்க....//

அப்படியா. நன்றி=))

vasu balaji said...

செ.சரவணக்குமார் said...

/அருமையான பகிர்வுக்கு நன்றி. 300 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்./

நன்றிங்க சரவணக்குமார்.

vasu balaji said...

க.பாலாசி said...

// பள்ளிப்பாளையம் சிக்கன் உட்பட...//

அடப்பாவி! மறந்துட்டனே. கண்ணுல கூட இதான்னு காட்டலையே.

//தங்களின் வருகையும் மிக்க மகிழ்ச்சியை அளித்தது....//

எனக்கும்.

// 300வது இடுகையா???????.....எவ்ளோ உயரம் போயிட்டீங்க....மென்மேலும் தங்களின் எழுத்துப்பணியும் வளர்ச்சியடைய உளமார்ந்த வாழ்த்துக்கள்...//

நன்றி. =)) உயரம்னு காமெடி பண்ணலையே என்னை.

துபாய் ராஜா said...

3ooவது பதிவிற்கும், பதிவர் சந்திப்பு பகிர்விற்கும் வாழ்த்துக்கள்.

vasu balaji said...

எம்.எம்.அப்துல்லா said...

//அண்ணே உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.

300 க்கு வாழ்த்துகள். தொடரட்டும் இந்தப் பொற்காலம் :)//

நன்றிங்க அப்துல்லா :)). ரெண்டு மூன்று தடவை உங்களருகில் அறிமுகப் படுத்திக் கொள்ள வந்து பின்வாங்கிவிட்டேன்=)).

vasu balaji said...

SanjaiGandhi™ said...

//நான் உங்களை சந்தித்ததை லகலகப்ரியாகிட்ட சொல்ல வேணாம்னு சொன்னிங்களே.. ஏன்?//

வாங்க சாமி. கூட்டத்தில கலக்கினது போறாதா. இங்கயுமா. என்ன கொடுமை சரவணன்=)) நன்றி சஞ்சய்.

vasu balaji said...

கலகலப்ரியா said...

// ... 300... 3000 ஆக வாழ்த்துகள் சார்...//

நன்றிம்மா. இதற்குப் பின்னால் இருந்தது உன் ஊக்கம் தானேயம்மா. நான் நன்றியெப்படி சொல்ல?

vasu balaji said...

கலகலப்ரியா said...

// ஓஹோ... சஞ்சய் இப்டி நீங்க வனம்பாடிகிட்ட சொல்ல நினைச்சிட்டு... மறந்துட்டியளாக்கும்.. பட்... டூ லேட் நண்பா... டூ லேட்... =))//

அது அது! அப்படி போடு.

vasu balaji said...

Balavasakan said...

/300 ..1 வாழ்த்துக்கள் சார்/

நன்றி வாசு.

vasu balaji said...

ஈரோடு கோடீஸ் said...

/300 க்கு வாழ்த்த்க்கள்/

நன்றிங்க வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/ஐயா, பதிவர் சந்திப்புல கலந்துக்க எனக்கு குடுத்து வைக்கல...உங்க புகைப்படம் பார்த்தேன்..நீங்க ஏன் திரைப்பட கதாநாயகனா முயற்சி பன்ன கூடாது??? 300க்கு வாழ்த்துக்கள்...//

ஏன். விஜய்ய டரியலாக்கினது போறாதா? அடி தாங்கறா மாதிரியா இருக்கேன். =))

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/அண்ணே!300 க்கு வாழ்த்துக்கள். பதிவர் சந்திப்பு நிகழ்வுகள் அருமை./

நன்றிங்க நிஜாம்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/பதிவர் சந்திப்பு, பதிவர் சங்கமம் எல்லாம் நன்றாக நடந்தது கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.

ஒலிப்பதிவை கேட்க ஆர்வமாக இருக்கின்றேன்.

300 வது இடுகைக்கு வாழ்த்துகள் அண்ணே./

நன்றிங்கண்ணே.

vasu balaji said...

ரோஸ்விக் said...

//பதிவர்கள் சங்கமத்தை பற்றி படிக்கும்போது இது போன்ற சிறந்த நிர்வாகிகளையும், திறமைசாலிகளையும் பதிவுலகம் கொண்டிருப்பதும் மிகவும் சந்தோசத்திற்கு உரியது.

அனைவருக்கும் வாழ்த்துகள்.//

ஆமாம் ரோஸ்விக்.

vasu balaji said...

நிகழ்காலத்தில்... said...

/300 இடுகைக்கு வாழ்த்துகள்../

நன்றிங்க.

vasu balaji said...

ஸ்ரீராம். said...

/முன்னூறாவது இடுகை வாழ்த்துக்கள். பதிவர் சந்திப்பு மேல் விவரங்களை படிக்க அல்லது கேட்க ஆவலாக இருக்கிறேன்...!/

நன்றிங்க ஸ்ரீராம். நிச்சயமாக.

vasu balaji said...

நர்சிம் said...

/வாழ்த்துக்கள்.. வரமுடியவில்லை என்ற வருத்தம் எழுவதை தடுக்கமுடியவில்லை.

300க்கு வாழ்த்துக்கள்.//

நன்றி நர்சிம்.

vasu balaji said...

அப்பன் said...

/இன்று எழுத்தில் உங்கள் முகம்பாா்க்கிறேன்,,,நன்றி கதிா்,,/

நன்றிங்கய்யா.

vasu balaji said...

Jaleela said...

// ஆஹா அருமையான பதிவர் சந்திப்புடன் உங்கள் 300 ஆவது இடுகை, வாழ்த்துக்கள்.

அருமையான தொகுப்பிற்கு பாராட்டுக்கள்//

ஆமாங்கம்மா. நன்றிங்க வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.

vasu balaji said...

சொல்லரசன் said...

/ 300வது இடுகைக்கு வாழ்த்துகள்/

நன்றிங்க சொல்லரசன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.

vasu balaji said...

பலா பட்டறை said...

/வாழ்த்துக்கள் சார்... நேர்ல வரமுடியாத கொறைய விளக்கி நிறச்சுடுங்க.... :))//

நன்றிங்க.

vasu balaji said...

நேசமித்ரன் said...

/300வது இடுகைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்//

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க நேசமித்திரன்.

vasu balaji said...

ஸ்ரீ said...

/ 300க்கு வாழ்த்துகள்./

நன்றி ஸ்ரீ

vasu balaji said...

பின்னோக்கி said...

/300 வதுக்கு வாழ்த்து.
போட்டா பார்த்தேன். 29 டு 30 வது வயதுக்கு வாழ்த்து.//

=)) நன்றி

vasu balaji said...

cheena (சீனா) said...

அன்பின் பாலா

//சந்தித்தும் அதிகம் பேச இயலவில்லை - முன்னூறாவது இடுகைக்கு நல்வாழ்த்துகள்//

ஆமாங்கய்யா. மீண்டும் சந்திப்போம்.

/ தொடர்க - 3000த்தினை நோக்கி/

வாழ்த்துக்கு நன்றிங்க.

vasu balaji said...

நசரேயன் said...

/வாழ்த்துக்கள் பாலா அண்ணே/

நன்றிங்க

vasu balaji said...

துபாய் ராஜா said...

/3ooவது பதிவிற்கும், பதிவர் சந்திப்பு பகிர்விற்கும் வாழ்த்துக்கள்.//

நன்றிங்க ராஜா.

எம்.எம்.அப்துல்லா said...

ரெண்டு மூன்று தடவை உங்களருகில் அறிமுகப் படுத்திக் கொள்ள வந்து பின்வாங்கிவிட்டேன் :))

//

இது என்ன உள்குத்து என்று இந்த மரமண்டைக்குப் புரியலை. தயவு செய்து விளக்கவும்.

vasu balaji said...

எம்.எம்.அப்துல்லா said...

/ இது என்ன உள்குத்து என்று இந்த மரமண்டைக்குப் புரியலை. தயவு செய்து விளக்கவும்.//

உள்குத்து ஒன்னுமேயில்லை அப்துல்லா. முதல் முறை வெளியில் எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்தீர்கள். அருகில் வந்து தயங்கிவிட்டேன். இரண்டாம் முறை அரங்கிற்குள் அமர்ந்திருக்கும்போது வந்து நழுவிவிட்டேன். என்னுடைய தயக்கம்தான் காரணம். ஏனோ உங்கள் மீது ஒரு பிரமிப்பு. :).

vasu balaji said...

துபாய் ராஜா said...

// வரமுடியாத பதிவர் அனைவர் மனதிலும் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய சந்திப்பை சிறப்புற நடத்தி காட்டிய கொங்குநாட்டு தங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.//

ஆமாங்க ராஜா. வந்தவர்களெல்லாருமே பதிவின் மூலம் பாராட்டும் வகையில் அசத்திவிட்டார்கள்.

வால்பையன் said...

உங்கள் வருகை எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது!

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்!

எம்.எம்.அப்துல்லா said...

//என்னுடைய தயக்கம்தான் காரணம்.

//

எனக்குத் தயக்கமெல்லாம் இல்லை. மேடையில் இருந்து இறங்கும்போது மைக்கிலேயே கேட்டுவிட்டேன் வானம்பாடி அண்ணன் எங்கேன்னு?

:)

வால்பையன் said...

@ அப்துல்லா

அண்ணே போன் பண்ணேன் எடுக்கல!
கூப்பிட முடியுமா?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பாலாண்ணே, உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. "நிறைகுடம் நீர் தழும்பல் இல்" என்பதற்கு இணங்க அமைதியாக இருந்தீர்கள். நிறையப் பேசுவதற்கு நேரமில்லாமல் போய்விட்டது. 300க்கு வாழ்த்துகள்!!

geethappriyan said...

300 வது இடுகைக்கும் நிகழ்ச்சி தொகுப்புக்கும் வாழ்த்துகள்.
இன்னும் படங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஓட்டுக்கள் போட்டாச்சு ஐயா

பிரபாகர் said...

முந்நூறு இடுகை கண்டு
முத்திரையை பதித்துவரும்
சிந்தனை சிற்பியெங்கள்
சீர்மிகு எழுத்துவேந்தன்

உந்துதல் தந்துயெம்மை
ஊக்குவிக்கும் ஆசான் நீரும்
சுந்தர தமிழ்போலே
சிறந்திடவே வணங்குகிறேன்.

பிரபாகர்.

அன்புடன் மலிக்கா said...

300 வது இடுகைக்கும் நல்ல நிகழ்ச்சி தொகுப்புக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

ரொம்ப சந்தோசம் பதிவர்களை சந்தித்ததில் என்பது இடுகையிலேயே தெரிகிறது. அசத்திட்டீங்க வானம்படிகளரே..

vasu balaji said...

எம்.எம்.அப்துல்லா said...

/எனக்குத் தயக்கமெல்லாம் இல்லை. மேடையில் இருந்து இறங்கும்போது மைக்கிலேயே கேட்டுவிட்டேன் வானம்பாடி அண்ணன் எங்கேன்னு?

:)//

ம்கும். மைக்கில் கேட்டப்புறமும் 2 பேர் பேசிக்கொண்டிருக்க இனி ஆவறதில்லைன்னு கை நீட்டிடம்ல:)

vasu balaji said...

வால்பையன் said...
/உங்கள் வருகை எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது!

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்!/

நன்றி வால்.

vasu balaji said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

/பாலாண்ணே, உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. "நிறைகுடம் நீர் தழும்பல் இல்" என்பதற்கு இணங்க அமைதியாக இருந்தீர்கள். நிறையப் பேசுவதற்கு நேரமில்லாமல் போய்விட்டது. 300க்கு வாழ்த்துகள்!!//

எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி செந்தில்வேலன். நன்றி.

vasu balaji said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...
/300 வது இடுகைக்கும் நிகழ்ச்சி தொகுப்புக்கும் வாழ்த்துகள்.
இன்னும் படங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஓட்டுக்கள் போட்டாச்சு ஐயா/

நன்றிங்க கார்த்திகேயன். படங்கள் இங்கு காணலாம்.
http://picasaweb.google.com/nandhuu/121#5417378768878384114

vasu balaji said...

பிரபாகர் said...
//முந்நூறு இடுகை கண்டு
முத்திரையை பதித்துவரும்
சிந்தனை சிற்பியெங்கள்
சீர்மிகு எழுத்துவேந்தன்

உந்துதல் தந்துயெம்மை
ஊக்குவிக்கும் ஆசான் நீரும்
சுந்தர தமிழ்போலே
சிறந்திடவே வணங்குகிறேன்.//

நன்றி பிரபாகர். விரைவில் உங்களைச் சந்திக்க வேண்டும்.

vasu balaji said...

அன்புடன் மலிக்கா said...
//300 வது இடுகைக்கும் நல்ல நிகழ்ச்சி தொகுப்புக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

ரொம்ப சந்தோசம் பதிவர்களை சந்தித்ததில் என்பது இடுகையிலேயே தெரிகிறது. அசத்திட்டீங்க வானம்படிகளரே..//

நன்றிங்க மலிக்கா

RAMYA said...

300 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்!!

தொகுத்து வழங்கிய விவரங்கள் நேரிலே கேட்டவைகள் போல் பளிச்சென்று மின்னின.

உங்களின் உதவிக்கு மறுபடியும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.

vasu balaji said...

RAMYA said...

/300 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்!!

தொகுத்து வழங்கிய விவரங்கள் நேரிலே கேட்டவைகள் போல் பளிச்சென்று மின்னின./

நன்றிங்க ரம்யா.

ப்ரியமுடன் வசந்த் said...

congrats keep it up...

சத்ரியன் said...

//சுருக்கமாக (அடங்கொன்னியா! இது சுருக்கமா?) ஒரு சின்ன சுயதம்பட்டத்தோடு நெஞ்சுகொள்ளா நன்றியோடு முடிக்கிறேன்.//

பாலா,

எப்பிடி மக்கா இப்பியெல்லாம்...?

இது 300 ஆவதா?

அப்ப என் பின்னூட்டம் 100 ஆவதுன்னு சொல்லுங்க...!

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/congrats keep it up.../

நன்றி வசந்த்.

vasu balaji said...

சத்ரியன் said...

/ பாலா,

எப்பிடி மக்கா இப்பியெல்லாம்...?

இது 300 ஆவதா?//

ஹி ஹி ஆமாம்.

//அப்ப என் பின்னூட்டம் 100 ஆவதுன்னு சொல்லுங்க...!//

ஆஹா. 100தான்.

butterfly Surya said...

வாழ்த்தும் நன்றியும்..

vasu balaji said...

butterfly Surya said...

/ வாழ்த்தும் நன்றியும்../

நன்றிங்க சூர்யா.