Monday, December 7, 2009

கடன் வேணுமா கடன்..

மனுசப்பயல சபலப் படுத்தி நாசம் பண்ணுறதுக்குன்னே இந்த வங்கிகள் சபதம் எடுத்திருக்கிறார் போல் இருக்கிறது. ஏதோ வங்கிக் கணக்கிருக்கும் நம் வங்கியில் கடன் அட்டை கொடுக்கிறான், டெபிட் கார்ட் கொடுக்கிறான், இந்த வசதி போதும் என்றிருக்க விடுகிறார்களா?

ஒரு நாள் லேண்ட்மார்க்கில் புத்தகம் வாங்கப் போனபோது ஒரு பையன் பாவமாக, சார்! உங்க பயோடாடா நிரப்பித் தருவீங்களா. ஜஸ்ட் 5 நிமிஷம் என்றான். எதற்கு என்றால் லேண்ட்மார்க் கார்ட் கொடுப்பாங்க சார். நீங்க தள்ளுபடியில் வாங்கலாம். நான் படிக்கிறேன் சார். இந்த வேலை செய்தால் எனக்கு ஃபீஸ் கட்ட காசு வரும் சார் என்றான்.

சரி என்ன கிழிக்க போகிறோம் என்று நிரப்பி கையொப்பம் இட்டதும் தோரணையே மாறிவிட்டது. உங்க ரேஷன் அட்டை ஒரு காபி, 2 புகைப்படம் ரெடியா வெச்சிக்கோங்க. நாளைக்கு அல்லது நாளன்னைக்கு டாய்ச் வங்கியிலிருந்து ஒரு முகவர் வருவார். கடன் அட்டை தருவார். அதை பயன் படுத்தி பொருட்கள் வாங்கும் போது சேரும் புள்ளிகளை லேண்ட்மார்க்கில் எது வேண்டுமானாலும் வாங்கப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றான். 

வந்த கோவத்தை அடக்கிக் கொண்டு, வீடு போய் சேர்ந்தேன். 2 நாட்களில் எப்படி எங்கு விபரம் எடுத்தார்களோ தெரியவில்லை. பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து எனக்கு ஒரு கடன் அட்டையும், என் மனைவியும் ரயில்வே என்பதால் ஒரு கூடுதல் அட்டையும் தபாலில் வந்தது. என் விண்ணப்பமோ, புகைப்படமோ, கையெழுத்தோ ஒன்றுமே இல்லாமல் எப்படிக் கொடுத்தார்கள் என்பதே புதிரானது.

பார்க்டவுன் வங்கியில் போய் கேட்டபோது, ரயில்வே ஊழியர்கள் மேல் பாசம் பீறிட்டு கொடுத்ததாக சொன்னார்கள். இத்தனைக்கு எனக்கு பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு கூட இல்லை. அந்த அட்டையை ஆக்டிவேட் கூட செய்யாமல் அப்படியே விட்டேன். இது வரை ஒரு பொருளும் அதில் வாங்கியதும் இல்லை.

வெள்ளிக் கிழமையன்று ஒரு தபால் வந்தது.அதே வங்கிதான். ஆக்டிவேட் கூட செய்யப்படாத அட்டைக்கு உண்டான கடன் தொகையளவான 84,000 ரூபாய் என் பெயரில் சாங்க்ஷன் ஆகி நான் கடனாளியாக்கப் பட்டிருக்கிறேனாம்.

மஞ்சத் தண்ணி நானே தெளிச்சி, மாலை போட்டுக் கொண்டு அந்தக் கடிதத்தைக் கொண்டு போய் அருகிலுள்ள வங்கிக் கிளையில் கொடுத்து, இதற்குள் எவ்வளவு ரூபாய்க்கு கடனாளியாவது என்ற உரிமை எனக்கிருப்பதால் அந்தத் தொகையைச் சொன்னால் போதுமாம்.

கூடுதல் கட்டணம் இல்லை. படிவங்கள் நிரப்பத் தேவையில்லை. ஆவணங்கள் தேவையில்லை. வந்து கடன் வாங்கிக் கொண்டால் போதும். திருப்பித் தரும் காலத்தை நானே தேர்வு செய்து கொள்ளலாம். எப்புடீடா என் மேல இவ்வளவு பாசம். அரசாங்க வங்கிக்கு நான் இவ்வளவு நம்பகமான ஆளா என்று புளகாங்கிதம் அடைந்தேன்.

ஆனாலும், அதே குளத்து மட்டைதானே. இதெல்லாம் நம்பிடுவேனா என்று பார்த்த பொழுது, மிக மிகச் சிறிய எழுத்தில் கடன் தொகை பின்பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ள விதிமுறைக்குட்பட்டது என்று எழுதி இருந்தது.

காசோலை அல்லது டிராஃப்ட் மூலமாகவே கடன் வழங்கப் படுமாம். குறைந்த பட்சம் 10000 ரூபாய் கடனாகப் பெறவேண்டுமாம். கடன் அட்டைக்கான கடன் தொகைக்குட்பட்டு இந்தத் தொகை இருக்குமாம். அதாவது 84,000 ரூபாயில் 20000 ரூ கடன் வாங்கினால், மீதம் 64000 ரூபாய் வரை மட்டுமே நான் கடன் அட்டையைப் பயன் படுத்தலாமாம்.

அப்புறம் வருகிறது ஆப்பு. ப்ராசசிங் கட்டணம் 1500 அதிக பட்சம் குறைந்த பட்சம் 499ரூ  வரை வசூலிக்கப் படுமாம். (அதான் ஒரு கடுதாசி போட்டுதானே கடன் சேங்க்ஷன் பண்ணியது? விண்ணப்பமும் வேண்டாமாம். அப்புறம் என்ன ப்ராஸஸ் பண்ணப் போகிறானோ?). அப்புறம் வந்தது வட்டிக் கதை. சரி கடன் வாங்கினா வட்டி கட்டாம முடியுமா?

அப்புறம் வெச்சாங்க ஆப்பு. 3 வருஷம் கடனாளியா இருக்கேன்னு எழுதிக் கொடுத்து அப்புறம் முன்னாடியே கட்டிடுறேன்னா அதுக்கு தண்டனையாம். 3.85 சதவீதம் மாதத்துக்கு. என்ன கொடுமை சரவணா? அப்புறம், ஏதோ காரணத்துக்கு ஒரு மாதம் கட்ட முடியாமல் போனால் அதற்கும் அதே சதவீதத்தில் தண்டம் அழ வேண்டுமாம்.

மேற்கொண்டு வரிசையாக ஆப்புக்கள் காத்திருக்கிறது. இக்கட்டில் இருக்கும் ஒரு நபரைத் தூண்டுவது இருக்கட்டும். வணிகத்தில் நியாயமான நடைமுறை என்று ஒன்று இருக்கிறதா இல்லையா? ஒரு அரசு வங்கி என் விண்ணப்பமின்றி, என் விருப்பின்றி எப்படி ஒரு கடன் அட்டையை தர முடியும். அப்படியானால் என்னுடைய தகவல்களை என் கவனத்திற்கு கொண்டு வராமல் எப்படிப் பெறலாம்?

கூடுதல் கட்டணமில்லை, விண்ணப் படிவமில்லை என்று ஏமாற்றுவது தண்டனைக்கு உரியதா இல்லையா. சீக்கிரம் கட்டினாலும் தண்டனை. ஒரு மாதம் கட்டாமல் விட்டலும் தண்டனை எனில், தனிமனிதனின் சக்கர வட்டி மோசடிதான் தண்டனைக்கு உரியதா? வங்கிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?

இதே நாம் தேடிப் போய் கடன் என்று நின்றால் ஆயிரம் ஆவணங்கள், ஆயிரம் சோதனைகள், பிணையாளர்கள் என்று எப்படி அலைக்கழிக்கிறார்கள். தனிநபர் கடன் என்ற ஒன்றை ஆரம்பித்து, வெறும் சம்பளச் சான்றிதழ், தன்னுடைய வங்கியின் மூலம் சம்பளம் பெறுவதற்கான சம்மதம், தன்னுடைய வங்கியிலிருந்து கடனாளியில்லை என்ற சான்றிதழின்றி வேறு வங்கிக்கு சம்பளப் பணத்தை மாற்ற மாட்டேன் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட சம்மதம் மட்டுமே போதும் என்றார்கள்.

இந்த அடிப்படையில் எத்தனைகோடி ரூபாய் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கான கடன் திட்டம் என்று கொண்டு வந்து, எத்தனை கோடி ரூபாய் போலி ஆவணங்களைக் கொடுத்து ஊழியர்கள் கடனாகப் பெற்றிருக்கிறார்கள் தெரியுமா?

அரசு அலுவலகத்தில் இம்மாதிரிக் கடன் பிடித்தம் செய்ய முடியாதென்பதோ, ஊழியர் விரும்பும் பட்சத்தில் வேறு வங்கிக்கு மாற்ற மறுக்க முடியாதென்பதோ கூடத் தெரியாமலா கடன் வழங்கினார்கள்? எத்தனைக் குடும்பங்களை கடனாளியாக்கி நாசம் செய்கிற வியாபாரத் தந்திரம் இது? சட்டப்படி இது செல்லுமா என்று யாரைப் போய் கேட்பது.

113 comments:

கலகலப்ரியா said...

mm

கலகலப்ரியா said...

நீங்க சொன்னதுதான் சார்... என்ன கொடுமை சரவணா..! (பை த வே இது நாடு முன்னேறி விட்டது என்பதைக் காட்டவில்லையா...:-?? கோச்சுக்காதீங்க சின்ன டவுட் அதுதான்..)

S.A. நவாஸுதீன் said...

எப்டியெல்லாம் இம்சை பண்றாங்கய்யா. என்ன கொடுமை சார் இது

vasu balaji said...

கலகலப்ரியா said...

//நீங்க சொன்னதுதான் சார்... என்ன கொடுமை சரவணா..! (பை த வே இது நாடு முன்னேறி விட்டது என்பதைக் காட்டவில்லையா...:-?? கோச்சுக்காதீங்க சின்ன டவுட் அதுதான்..)//

திருப்பிக் கட்ட முடிஞ்சவன் வாங்க மாட்டான். முடியாதுன்னு தெரிஞ்சவன் அநியாயமா கடனாளீ, குற்றவாளின்னு ஆவறதுதான்

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/எப்டியெல்லாம் இம்சை பண்றாங்கய்யா. என்ன கொடுமை சார் இது/

ஆமாங்க! எனக்கு இன்னும் புரியல. எனக்கே தெரியாம எப்படி இதெல்லாம் நடக்குதுன்னு.

தி.தமிழ் இளங்கோ said...

முன்பின் தெரியாத யாரோ ஒரு சிறுவன் உங்களைப் பற்றிய விவரம் கேட்டால் எதற்கு தருகிறீர்கள்? அங்கிருந்துதான் வில்லங்கம் தொடங்கியுள்ளது.

பெசொவி said...

நானும் ஒரு ஐந்து வருடம் ரயில்வேயில் வேலை பார்த்தேன். 1994 ல் ஆபீசுக்கே வந்து விடும் city bank காரர்கள் கார்டு வாங்கச் சொல்லி பாடாய் படுத்தினார்கள். என்னுடைய முன்வினைப் பயன் காரணமாக அந்த ஆளுங்களை டபாய்த்து விட்டேன். அதன் பிறகு, 97, 98 களில் அவர்கள் ஆட்டம் (வீடு தேடி ஆட்டோ வரும்) தெரிய வந்தபோது, நான் இறைவனுக்கு நன்றி சொன்னேன்.

vasu balaji said...

தி.தமிழ் இளங்கோ said...

/முன்பின் தெரியாத யாரோ ஒரு சிறுவன் உங்களைப் பற்றிய விவரம் கேட்டால் எதற்கு தருகிறீர்கள்? அங்கிருந்துதான் வில்லங்கம் தொடங்கியுள்ளது./

இல்லீங்க. 2 நாளில் என் விபரம் எடுத்து எந்த உத்திரவாதமோ, பரிசீலனையோ இன்றி மும்பையிலிருந்து கடன் அட்டை வந்திருக்க முடியாதுங்களே.

vasu balaji said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//நானும் ஒரு ஐந்து வருடம் ரயில்வேயில் வேலை பார்த்தேன். 1994 ல் ஆபீசுக்கே வந்து விடும் city bank காரர்கள் கார்டு வாங்கச் சொல்லி பாடாய் படுத்தினார்கள். என்னுடைய முன்வினைப் பயன் காரணமாக அந்த ஆளுங்களை டபாய்த்து விட்டேன். அதன் பிறகு, 97, 98 களில் அவர்கள் ஆட்டம் (வீடு தேடி ஆட்டோ வரும்) தெரிய வந்தபோது, நான் இறைவனுக்கு நன்றி சொன்னேன்.//

=)).

சத்ரியன் said...

//இதெல்லாம் நம்பிடுவேனா என்று பார்த்த பொழுது, மிக மிகச் சிறிய எழுத்தில் கடன் தொகை பின்பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ள விதிமுறைக்குட்பட்டது என்று எழுதி இருந்தது.
............................................,///

பாலா,

"பாங்க்"-குக்கு வெளியில கூ ப்டு வெச்சி, புது ஷூ பிஞ்சி போற அளவுக்கு 4 குடுத்துட்டு வந்திருக்கலாமே. கூட்டு மாரிப் பயலுகள...!

ஈரோடு கதிர் said...

//தனிமனிதனின் சக்கர வட்டி மோசடிதான் தண்டனைக்கு உரியதா? வங்கிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?//

அண்ணே... என்ன இது புரியாம இருக்கீங்க

தனிமனுசன் ஒருத்தன மெரட்டி கம்மி விலைக்கு இடத்த புடுங்குனா அது கட்டப் பஞ்சாயத்து..

கவர்மண்ட் புடுங்கி வெளிநாட்டுக்காரனுக்கு கொடுத்தா பொருளாதார மண்டலம்...

அப்புடித்தேன் இதுவும்...

ஈரோடு கதிர் said...

//சட்டப்படி இது செல்லுமா என்று யாரைப் போய் கேட்பது//

யாரையும் கேட்க முடியாது... நாமளே எழுதி பின்னூட்டம் போட்டு... அப்புறம் மறந்துடனும்...

ஆனா பாருங்க...
இதுக்கு ஒரு கந்து வட்டி களவாணி மைனஸ் குத்தியிருக்குது...

vasu balaji said...

சத்ரியன் said...

/ பாலா,

"பாங்க்"-குக்கு வெளியில கூ ப்டு வெச்சி, புது ஷூ பிஞ்சி போற அளவுக்கு 4 குடுத்துட்டு வந்திருக்கலாமே. கூட்டு மாரிப் பயலுகள...!/

அட நீங்க வேற. எப்புடி திருப்பி குடுக்கறதுன்னா அங்கயே அனுப்பு. மிஸ் யூஸ் ஆனா நீதான் அலயணுங்கிறான்.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ அண்ணே... என்ன இது புரியாம இருக்கீங்க

தனிமனுசன் ஒருத்தன மெரட்டி கம்மி விலைக்கு இடத்த புடுங்குனா அது கட்டப் பஞ்சாயத்து..

கவர்மண்ட் புடுங்கி வெளிநாட்டுக்காரனுக்கு கொடுத்தா பொருளாதார மண்டலம்...

அப்புடித்தேன் இதுவும்...//

அதுக்கு நாமளா ஆப்புட்டோம் அவ்வ்வ்வ்வ்வ்.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ யாரையும் கேட்க முடியாது... நாமளே எழுதி பின்னூட்டம் போட்டு... அப்புறம் மறந்துடனும்...

ஆனா பாருங்க...
இதுக்கு ஒரு கந்து வட்டி களவாணி மைனஸ் குத்தியிருக்குது...//

=)). இன்னும் 3 வசூலுக்கு இருக்கு அப்ப=))

வெற்றி-[க்]-கதிரவன் said...

naanpithan@gmail.com

U F O said...

ஓ..! அப்போ, நாமதான் அடுத்த அமெரிக்காவா? சர்த்தான்.

நிஜாம் கான் said...

அண்ணே! இந்த சம்பவத்த நினைக்கும் போது சமீபத்திய விவேக் காமெடி நினைவுக்கு வருகிறது. அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு கையெழுத்து வாங்கிவிட்டு பின்னர் உங்களிடம் அந்த பையன் சொல்லியதை போல சொல்லுவார். அதுதான் எங்க TKTKTK பேங்கோட பாலிசி. அது என்னடா TKTKTK பேங்னா தொல்ல குடுத்து தொல்ல குடுத்து தொலச்சி கட்றது. நல்ல காமெடி போங்க.

க.பாலாசி said...

இன்னும் கொஞ்சம் வைரஸ் (கணிணியில்) பிராப்ளம் இருக்கிறதால என்னால முன்னப்போல வேகமா படிச்சி பின்னூட்டமிடமுடியவில்லை. படிக்கும்போதே...இன்டர்நெட் க்ளோஸ் ஆகிவிடுகிறது...மீண்டு(ம்) வருகிறேன்....

Thamira said...

நல்லாருக்கே கதை.! சும்மாவா விட்டீங்க? பாங்குக்கு போயி நாலு டோஸ் விடவேண்டியதுதானே..

ப்ரியமுடன் வசந்த் said...

கண்ணக்கட்டுதுடா சாமீய்ய்...

ஏன் இப்டி இம்சைய கூட்றானுவ?

டெம்ப்லேட் ரொம்ப அழகா இருக்கு..

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/அண்ணே! இந்த சம்பவத்த நினைக்கும் போது சமீபத்திய விவேக் காமெடி நினைவுக்கு வருகிறது. அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு கையெழுத்து வாங்கிவிட்டு பின்னர் உங்களிடம் அந்த பையன் சொல்லியதை போல சொல்லுவார். அதுதான் எங்க TKTKTK பேங்கோட பாலிசி. அது என்னடா TKTKTK பேங்னா தொல்ல குடுத்து தொல்ல குடுத்து தொலச்சி கட்றது. நல்ல காமெடி போங்க./

படிக்க காமெடி. யாராவது படிக்காம போய் மாட்டிகிட்டா எவ்ளோ கஷ்டம் நிஜாம். இல்லைன்னா இல்லைன்னு இருந்துட்டு போவம்ல.

vasu balaji said...

U F O said...

/ ஓ..! அப்போ, நாமதான் அடுத்த அமெரிக்காவா? சர்த்தான்./

இங்கதான் எல்லாம் அரசு வங்கியாச்சே. எவ்ளோ அடிச்சாலும் தாங்கும்.

வால்பையன் said...

அவனவன் கடன் கிடைக்கலையேன்னு மண்ட காஞ்சி இருக்கான், உங்களுக்கு நக்கலா இருக்கா!?

கடனை வாங்குனோமா, வெளிநாடு டூர்போனோமான்னு இல்லாம, திரும்ப கட்டுறத பத்தி யோசிக்கிறிங்களே!

vasu balaji said...

க.பாலாசி said...

/ இன்னும் கொஞ்சம் வைரஸ் (கணிணியில்) பிராப்ளம் இருக்கிறதால என்னால முன்னப்போல வேகமா படிச்சி பின்னூட்டமிடமுடியவில்லை. படிக்கும்போதே...இன்டர்நெட் க்ளோஸ் ஆகிவிடுகிறது...மீண்டு(ம்) வருகிறேன்....//

காரசட்னி எஃபெக்ட் இல்லையே பாலாசி=))

vasu balaji said...

ஆதிமூலகிருஷ்ணன் said...

/ நல்லாருக்கே கதை.! சும்மாவா விட்டீங்க? பாங்குக்கு போயி நாலு டோஸ் விடவேண்டியதுதானே../

பணிவா கேட்டாலே க்ரெடிட் கார்ட் டிவிஷன் பாம்பே, அங்க போய் கேளுங்கறாங்க. கத்துனா செக்யூரிடி காலர புடிச்சி இழுத்து விடுவான்.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/கண்ணக்கட்டுதுடா சாமீய்ய்...

ஏன் இப்டி இம்சைய கூட்றானுவ?

டெம்ப்லேட் ரொம்ப அழகா இருக்கு../

நன்றி (ஆசிரியரே)=))

vasu balaji said...

வால்பையன் said...

//அவனவன் கடன் கிடைக்கலையேன்னு மண்ட காஞ்சி இருக்கான், உங்களுக்கு நக்கலா இருக்கா!?

கடனை வாங்குனோமா, வெளிநாடு டூர்போனோமான்னு இல்லாம, திரும்ப கட்டுறத பத்தி யோசிக்கிறிங்களே!//

அப்புறம் உள்நாட்டுல உலாத்துறது எப்படி=)). நல்லா குடுக்குறாங்கப்பா அகுடியா=))

நசரேயன் said...

மஞ்ச நோட்டிஸ் கொடுங்க

அது சரி(18185106603874041862) said...

//
இந்த அடிப்படையில் எத்தனைகோடி ரூபாய் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கான கடன் திட்டம் என்று கொண்டு வந்து, எத்தனை கோடி ரூபாய் போலி ஆவணங்களைக் கொடுத்து ஊழியர்கள் கடனாகப் பெற்றிருக்கிறார்கள் தெரியுமா?
//

இது ஊழியர்கள் தவறவல்லவா?

vasu balaji said...

நசரேயன் said...

/ மஞ்ச நோட்டிஸ் கொடுங்க/

அரசு ஊழியர்கள் மஞ்சக் கடுதாசி கொடுக்க முடியாதுங்க.

அது சரி(18185106603874041862) said...

//
அரசு அலுவலகத்தில் இம்மாதிரிக் கடன் பிடித்தம் செய்ய முடியாதென்பதோ, ஊழியர் விரும்பும் பட்சத்தில் வேறு வங்கிக்கு மாற்ற மறுக்க முடியாதென்பதோ கூடத் தெரியாமலா கடன் வழங்கினார்கள்? எத்தனைக் குடும்பங்களை கடனாளியாக்கி நாசம் செய்கிற வியாபாரத் தந்திரம் இது? சட்டப்படி இது செல்லுமா என்று யாரைப் போய் கேட்பது.
//

இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்...

வங்கிகள் பெரும்பாலும் விவசாயிகளுக்கோ அல்லது தினக்கூலி வேலை செய்பவர்களுக்கோ இது போன்று கடனை வலியத் திணிப்பதில்லை...பெரும்பாலும் வேலையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக அரசு வேலையிலும், ஐ.டி.யிலும் இருப்பவர்களுக்கு தான் திணிக்கப்படுகின்றன...

இவர்களில் பெரும்பாலானோர் எழுதப்படிக்க தெரிந்த, உலகம் அறிந்தவர்களே...மாத வட்டி வீதம் எவ்வளவு, வருட வட்டி வீதம் எவ்வ்ளவு என்று தெரிந்து கொள்ளாமலா கடன் வாங்குகிறார்கள்?? ஆக, இதில் கடன் வாங்குபவர்கள் பங்கே அதிகம்...

அதே சமயம், கேட்காமலே வரும் க்ரெடிட் கார்டுகள் பற்றிய உங்கள் எரிச்சல் புரிந்து கொள்ள முடிகிறது...இதற்கு ஒரே வழி, உங்களைப் பற்றிய தகவல்களை யாருக்கும் கொடுக்காதீர்கள்...உங்களுக்கு க்ரடிட் கார்டை அனுப்பாமலே அதை வேறு யாரேனும் உபயோகிக்க கூடும்...!!

மற்றபடி, நல்லதொரு விஷயத்தை இடுகையிட்டதற்காக எனது வோட்டு :0)))

vasu balaji said...

அது சரி said...


/இது ஊழியர்கள் தவறவல்லவா?/
ஆம். ஆனால் அரசு ஊழியர்களுக்காக என்ற கடன் திட்டத்தைக் கொண்டுவரும்போதே அரசு பிடித்தம் செய்யாது என்பதை அறிந்திருக்க வேண்டுமா இல்லையா? அப்படி ஒப்புக் கொண்ட கடிதம் உண்மையா என்பதை உறுதி செய்திருக்க வேண்டாமா?

மோசடி செய்த வகையில் ஊழியருக்கு வேலை போகலாம். ஆனால் அவருக்கு பணம் கொடுத்த வங்கிகளின் கடன் தொகை எங்கிருந்து வரும்? மக்களின்பணமல்லவா?

அதுவுமின்றி வங்கி ஊழியர்களும் கமிஷன் பெற்றார்கள்.

vasu balaji said...

அது சரி said...

/.மாத வட்டி வீதம் எவ்வளவு, வருட வட்டி வீதம் எவ்வ்ளவு என்று தெரிந்து கொள்ளாமலா கடன் வாங்குகிறார்கள்?? ஆக, இதில் கடன் வாங்குபவர்கள் பங்கே அதிகம்.../

இல்லைங்க. கடன் கட்டணும் என்கிற எண்ணமே இல்லாமல் மோசடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே வாங்கியது. இந்த போலி சான்றிதழ், வங்கியில் லோன் அப்ளிகேசன் சாங்க்‌ஷன் வாங்கித் தர என்று தரகர்களும் இருந்தார்கள். ஆக தெரிந்து செய்த மோசடிதான்.

/உங்களைப் பற்றிய தகவல்களை யாருக்கும் கொடுக்காதீர்கள்...உங்களுக்கு க்ரடிட் கார்டை அனுப்பாமலே அதை வேறு யாரேனும் உபயோகிக்க கூடும்...!!/

வங்கிகளுக்குள்ளேயே தகவல் பரிமாற்றம் நடந்திருக்கக் கூடும்.

/மற்றபடி, நல்லதொரு விஷயத்தை இடுகையிட்டதற்காக எனது வோட்டு :0)))//

நன்றி:))

ஆரூரன் விசுவநாதன் said...

தனியார் மயமாக்கலும், தடையில்லா வாணிகமும், வெளிநாட்டு முதலீடுகள் குவிதலும் தான் இதற்கெல்லாம் காரணம்.

நாசமாய் போகட்டும் இவர்களும், இவர்கள் பொருளாதார கொள்கைக்களும்.

இந்தக் கொடுமைகளில் மாட்டி தவிக்கும் திருவாளர் பொதுஜனத்தின் நிலைமைதான் கவலைக்கிடம்.


பாலாண்ணே....பார்த்து பவுசா நடந்துக்கோங்க......

பிரபாகர் said...

ஆமாங்கய்யா, ரொம்ப சாக்கிறதயா இருக்கனும், ஆள கவுத்துடும்...

பிரபாகர்.

ஈ ரா said...

கடனேன்னு இருக்க வேண்டியதுதான் போல....

பூங்குன்றன்.வே said...

//எத்தனைக் குடும்பங்களை கடனாளியாக்கி நாசம் செய்கிற வியாபாரத் தந்திரம் இது? சட்டப்படி இது செல்லுமா என்று யாரைப் போய் கேட்பது. //

பொதுவா கேட்கிறேன் சாமி. பிரச்சினை வரும் என்று தெரிஞ்சும் கடன் அட்டையை வாங்குற நம்ம ஆட்களை என்ன சொல்ல?
சம்பளம் வாங்கினோமா, சாப்பிட்டோமா,தூங்கினோமா என்று இருந்தால் இந்த கடன் எங்கே இருந்து வரும்?
அதுவும் கடன் அட்டை வாங்குற அளவுக்கு :)

யூர்கன் க்ருகியர் said...

நல்ல படிப்பினை . நன்றி

Chitra said...

சரி என்ன கிழிக்க போகிறோம் என்று நிரப்பி கையொப்பம் இட்டதும் தோரணையே மாறிவிட்டது. ...........ஹா, ஹா, ஹா....... இந்த கொடுமையை நானும் அனுபவிச்சிருக்கேன். same blood!

vasu balaji said...

ஈ ரா said...

/ கடனேன்னு இருக்க வேண்டியதுதான் போல..../

=)). அதான்செரி

vasu balaji said...

பூங்குன்றன்.வே said...

/ பொதுவா கேட்கிறேன் சாமி. பிரச்சினை வரும் என்று தெரிஞ்சும் கடன் அட்டையை வாங்குற நம்ம ஆட்களை என்ன சொல்ல?
சம்பளம் வாங்கினோமா, சாப்பிட்டோமா,தூங்கினோமா என்று இருந்தால் இந்த கடன் எங்கே இருந்து வரும்?
அதுவும் கடன் அட்டை வாங்குற அளவுக்கு :)/

1. இன்றைய கால கட்டத்தில் கடனட்டை தவிர்க்க முடியாத ஒன்று. காரணம் கடன் இல்லை.
2. தொலைபேசி கட்டணம், மின்சார கட்டணம், கல்லூரிக் கட்டணம் ஆகிய அனைத்துமே ஆன்லைனில் வந்துவிட்ட படியால் இது வசதியாக இருப்பதும், அனைத்துச் செலவினங்களுக்கும் ஒரு செக்கில் ஒரு இடத்தில் பணம் செலுத்த முடிவது வசதிதானே?

3.காலம் இருக்கிற இருப்பில் காசு கையில் கொண்டு போகும் ரிஸ்க் ஒரு புறமிருக்க கடைகளிலேயே க்ரெடிட் கார்டுக்கிருக்கிற மரியாதை காசுக்கில்லை சாமி:))

vasu balaji said...

யூர்கன் க்ருகியர் said...

/நல்ல படிப்பினை . நன்றி//

நன்றி யூர்கன்

vasu balaji said...

Chitra said...

// சரி என்ன கிழிக்க போகிறோம் என்று நிரப்பி கையொப்பம் இட்டதும் தோரணையே மாறிவிட்டது. ...........ஹா, ஹா, ஹா....... இந்த கொடுமையை நானும் அனுபவிச்சிருக்கேன். same blood!//

=))

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/ இந்தக் கொடுமைகளில் மாட்டி தவிக்கும் திருவாளர் பொதுஜனத்தின் நிலைமைதான் கவலைக்கிடம்.//

ஆமாங்க


/ பாலாண்ணே....பார்த்து பவுசா நடந்துக்கோங்க......//

ம்கும். இவனுங்க பண்ணுற அழிம்புல இருக்கிற பவுசு போயீரும் போல. கடனட்டை வேணாம்டான்னு கெஞ்சினா கேவலமால்ல பார்க்குறான்:((..அவ்வ்வ்

vasu balaji said...

பிரபாகர் said...

//ஆமாங்கய்யா, ரொம்ப சாக்கிறதயா இருக்கனும், ஆள கவுத்துடும்...

பிரபாகர்.//

ஆமாம் பிரபாகர்.

காந்தி காங்கிரஸ் said...

மிக நல்ல பதிவு .

// சட்டப்படி இது செல்லுமா என்று யாரைப் போய் கேட்பது.//

Complaints against Banking Services

The Reserve Bank of India has provided for a separate channel for lodging complaints against poor quality of services rendered by a bank. If you have a complaint/grievance against a bank for poor quality of service rendered by any of its offices/branches, please approach the Nodal Officer of the bank. In case you are not satisfied with the bank's response you can also file a complaint with the Banking Ombudsman in your State. The Banking Ombudsman is an office set up by the Reserve Bank of India to give speedy and cost effective resolution of grievances to the bank customers. For more details on Banking Ombudsman Scheme and their contact numbers, please visithttp://www.rbi.org.in/scripts/AboutUsDisplay.aspx?pg=Ombudsmen.htm

வாழ்த்துக்கள்

Unknown said...

ரவுடிகளை பேங்க் வேலையில் சேர்த்து புரட்சி செய்தவர்கள் தானே இவர்கள்..,

Unknown said...

இதுல ரொம்பக் கொடுமையான விஷயம் என்னன்னா, அவசரத்துக்குக் கடன் வாங்கிட்டு கைல கொஞ்சம் காசு மிஞ்சினதும் கடன அடச்சிடலாம்னு பாத்தா, பாழாப்போனவிங்க அதுக்கும் ப்ரீ-பேமெண்ட் பெனால்ட்டின்னு போடுறது தான்.

Unknown said...

//1. இன்றைய கால கட்டத்தில் கடனட்டை தவிர்க்க முடியாத ஒன்று. காரணம் கடன் இல்லை.
2. தொலைபேசி கட்டணம், மின்சார கட்டணம், கல்லூரிக் கட்டணம் ஆகிய அனைத்துமே ஆன்லைனில் வந்துவிட்ட படியால் இது வசதியாக இருப்பதும், அனைத்துச் செலவினங்களுக்கும் ஒரு செக்கில் ஒரு இடத்தில் பணம் செலுத்த முடிவது வசதிதானே?

3.காலம் இருக்கிற இருப்பில் காசு கையில் கொண்டு போகும் ரிஸ்க் ஒரு புறமிருக்க கடைகளிலேயே க்ரெடிட் கார்டுக்கிருக்கிற மரியாதை காசுக்கில்லை சாமி:))
//

சத்தியமான வார்த்தைகள். கடன் அட்டையை சாமர்த்தியமாக உபயோகித்தால் அது வரம். உபயோகிக்கத் தெரியாமல் உபயோகித்தால் அது சாபம். வைரமுத்து சொன்னதைக் கொஞ்சம் மாற்றிச் சொன்னால் - கையில் கொஞ்சம் கடன் இருந்தால் நீயே அதற்கு எஜமானன், கழுத்து வரைக்கும் கடன் இருந்தால் அதுவே உனக்கு எஜமானன்.

Unknown said...

இதுக்குக் கூட மூணு மைனஸ் ஓட்டா, நீங்க ரொம்ப ஃபேமஸ் ஆகிட்டே போறிங்க போங்க

vasu balaji said...

காந்தி காங்கிரஸ் said...

/மிக நல்ல பதிவு ./

நன்றிங்க.

ஆமாங்க. ஒம்புட்ஸ்மென்ல கம்ப்ளெயிண்ட் பண்ணலாம். ஆனா டெக்னிகலா நான் கிளையண்ட் இல்லை. எங்களுக்குள்ள கஸ்டமர் உறவு இல்லை. அவன் ஆஃபர் பண்ணி இருக்கான். நான் ஒத்துண்டாதான் பண்ண முடியும். இல்லைன்னா வேறே சட்டப் பிரிவும்பாங்க.
தகவலுக்கு நன்றிங்க.

vasu balaji said...

முகிலன் said...

/இதுல ரொம்பக் கொடுமையான விஷயம் என்னன்னா, அவசரத்துக்குக் கடன் வாங்கிட்டு கைல கொஞ்சம் காசு மிஞ்சினதும் கடன அடச்சிடலாம்னு பாத்தா, பாழாப்போனவிங்க அதுக்கும் ப்ரீ-பேமெண்ட் பெனால்ட்டின்னு போடுறது தான்./

ஆமாங்க அதுவும் 40 சதத்துக்கு மேல வருஷத்துக்கு.

vasu balaji said...

முகிலன் said...

// சத்தியமான வார்த்தைகள். கடன் அட்டையை சாமர்த்தியமாக உபயோகித்தால் அது வரம். உபயோகிக்கத் தெரியாமல் உபயோகித்தால் அது சாபம். வைரமுத்து சொன்னதைக் கொஞ்சம் மாற்றிச் சொன்னால் - கையில் கொஞ்சம் கடன் இருந்தால் நீயே அதற்கு எஜமானன், கழுத்து வரைக்கும் கடன் இருந்தால் அதுவே உனக்கு எஜமானன்.//

சரியாச் சொன்னீங்க. அந்த கட்டுப்பாட்டை தகர்த்துடுமோங்கிற பயம்தான் இடுகை.

vasu balaji said...

பேநா மூடி said...

//ரவுடிகளை பேங்க் வேலையில் சேர்த்து புரட்சி செய்தவர்கள் தானே இவர்கள்..,//

இது பெரிய கொடுமை.

vasu balaji said...

முகிலன் said...

/இதுக்குக் கூட மூணு மைனஸ் ஓட்டா, நீங்க ரொம்ப ஃபேமஸ் ஆகிட்டே போறிங்க போங்க//

இன்னைக்கு செவ்வாய்க் கிழமைன்னு இடுகை போட்டாலும் இந்த 3 வோட்டு எனக்கு நிரந்தரம்=))

Unknown said...

So many people Suicide because of these banks torture after giving credit card.

ஜோதிஜி said...

இதுக்கு ஒரு கந்து வட்டி களவாணி மைனஸ் குத்தியிருக்குது

கலைஞர் தொலைக்காட்சியில் இந்த விசயம் வந்த போது முழுமையாக புரியவில்லை. ஆனால் அரசு ஊழியர் என்ற பார்வையில் நீங்கள் சொன்ன அத்தனை விசயங்களும் சிறப்பு.

On Line சமாச்சாரத்தின் போது சில சமயம் தேவையாய் இருக்கிறது இது என்று சம்மந்தப்பட்டவர்களை வரவழைத்து பேசிய போது, மாய்மால வார்த்தைகள் பொறுமையாக கேட்டுவிட்டு

எல்லாம் சரி நீங்கள் சொன்னபடி நீங்கள் தனிப்பட்ட ஒரு கடிதம் வங்கி Letter Head ல் எழுதி கொடுத்து விடுங்கள் என்றேன்.

ஆறு மாதம் ஆச்சி. போனவரும் வரலை. அந்தக்கூட்டமும் அடுத்த தெரு வழியாகத்தான் சென்று கொண்டுருக்கிறார்கள் இன்றும்.

கதிர் சொன்னது போல மேலே உள்ளதையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

KATHIR = RAY said...

VAnthu paarunga Vaalthu sollunga
http://kannivirgin.blogspot.com/2008/09/blog-post.html

angel said...

manikanum elarum bank officers thapu seira mathri soldrathu serinu enaku thonala

all the officials have a target similarly to achieve the target the bankers do such activities though that is wrong i feel personally it would be better if we return the cards

angel said...

காலம் இருக்கிற இருப்பில் காசு கையில் கொண்டு போகும் ரிஸ்க் ஒரு புறமிருக்க கடைகளிலேயே க்ரெடிட் கார்டுக்கிருக்கிற மரியாதை காசுக்கில்லை சாமி:))

apdi ninaicha pina kadan maraimuga vati elame kata vendi than

vasu balaji said...

bbhamini said...

/So many people Suicide because of these banks torture after giving credit card./

I wont blame the bank for this. Of course they encourage to take loans, but its upto the individual to stay within his limit.

Thank you for your first visit and comments.

vasu balaji said...

ஜோதிஜி said...

/இதுக்கு ஒரு கந்து வட்டி களவாணி மைனஸ் குத்தியிருக்குது

கலைஞர் தொலைக்காட்சியில் இந்த விசயம் வந்த போது முழுமையாக புரியவில்லை. ஆனால் அரசு ஊழியர் என்ற பார்வையில் நீங்கள் சொன்ன அத்தனை விசயங்களும் சிறப்பு.

On Line சமாச்சாரத்தின் போது சில சமயம் தேவையாய் இருக்கிறது இது என்று சம்மந்தப்பட்டவர்களை வரவழைத்து பேசிய போது, மாய்மால வார்த்தைகள் பொறுமையாக கேட்டுவிட்டு

எல்லாம் சரி நீங்கள் சொன்னபடி நீங்கள் தனிப்பட்ட ஒரு கடிதம் வங்கி Letter Head ல் எழுதி கொடுத்து விடுங்கள் என்றேன்.

ஆறு மாதம் ஆச்சி. போனவரும் வரலை. அந்தக்கூட்டமும் அடுத்த தெரு வழியாகத்தான் சென்று கொண்டுருக்கிறார்கள் இன்றும்.

கதிர் சொன்னது போல மேலே உள்ளதையும் பார்த்துக்கொள்ளுங்கள்.//

ஆமாங்க. ஆனா இப்படி நேரடியாக் கூட வராம கடன் அட்டை அனுப்பறதும், லோன் சேன்க்‌ஷன் பண்றதும்தான் புரியலை.

நன்றிங்க.

vasu balaji said...

KATHIR = RAY said...

/ VAnthu paarunga Vaalthu sollunga
http://kannivirgin.blogspot.com/2008/09/blog-post.html//

பார்க்கிறேங்க. வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

vasu balaji said...

angelintotheheaven said...

/manikanum elarum bank officers thapu seira mathri soldrathu serinu enaku thonala

all the officials have a target similarly to achieve the target the bankers do such activities though that is wrong i feel personally it would be better if we return the cards//

நான் அவர்கள் கடமையைக் குற்றம் சொல்லவில்லை. கடமை தவறுதலையும், முறையற்ற வணிகத்தையும் சுட்டினேன்.

vasu balaji said...

angelintotheheaven said...

/ apdi ninaicha pina kadan maraimuga vati elame kata vendi than//

இல்லையே. கடன் வாங்கினாத்தானே. கடன்வாங்கிய பிறகு அடிமைஎன்பதில் மாற்றுக் கருத்தே இல்லை:))

இராகவன் நைஜிரியா said...

// "கடன் வேணுமா கடன்.." //

ஓ இப்படியெல்லாம் வேற நடக்குதா?

இராகவன் நைஜிரியா said...

// மனுசப்பயல சபலப் படுத்தி நாசம் பண்ணுறதுக்குன்னே இந்த வங்கிகள் சபதம் எடுத்திருக்கிறார் போல் இருக்கிறது. //

தொலைக்காட்சித் தொடர் போல..

இராகவன் நைஜிரியா said...

// ஏதோ வங்கிக் கணக்கிருக்கும் நம் வங்கியில் கடன் அட்டை கொடுக்கிறான், டெபிட் கார்ட் கொடுக்கிறான், //

இருக்கு கொடுக்கின்றான்.

இராகவன் நைஜிரியா said...

// உங்க பயோடாடா நிரப்பித் தருவீங்களா.//

இல்லப்பா நான் நல்ல வேலையில் இருக்கேன் அதனால நான் பயோடேட்டா எல்லாம் தருவதில்லை என்று சொல்ல வேண்டியதுதானே..!!

இராகவன் நைஜிரியா said...

// எதற்கு என்றால் லேண்ட்மார்க் கார்ட் கொடுப்பாங்க சார். //

அது சரி... லேண்ட்மார்க் கார்ட்... எந்த லேண்டோட மார்க் என்றுக் கேட்க வேண்டியதுதானே?

இராகவன் நைஜிரியா said...

// நீங்க தள்ளுபடியில் வாங்கலாம். //

தள்ளுபடின்னா நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க... பொருள் வாங்கிட்டு வரும் போது படியில் வச்சு தள்ளிவிடுவாங்க.. அதுக்கு பேருதான் தள்ளு படி..

இராகவன் நைஜிரியா said...

// சரி என்ன கிழிக்க போகிறோம் என்று //

தங்கமணி கூட ஷாப்பிங்க் போயிருந்தீங்க போலிருக்கு :-)

இராகவன் நைஜிரியா said...

// உங்க ரேஷன் அட்டை ஒரு காபி, 2 புகைப்படம் ரெடியா வெச்சிக்கோங்க. //

கொஞ்சம் விட்டா உங்க ஜாதகத்தைக்கூட கேட்டு இருப்பாங்க போலிருக்கு

இராகவன் நைஜிரியா said...

// வந்த கோவத்தை அடக்கிக் கொண்டு, வீடு போய் சேர்ந்தேன். //

தமிழனா பொறந்துட்டு, வேற வழி.. கோபப்படலாமோ... பிடாது... அடக்கணும் கோபத்தை..

இராகவன் நைஜிரியா said...

மீ த 75

இராகவன் நைஜிரியா said...

// 2 நாட்களில் எப்படி எங்கு விபரம் எடுத்தார்களோ தெரியவில்லை //

அதான் பொழுது போகாம பயோடேட்டா எழுதி, எனக்குத்தன் கையெழுத்துப் போடத் தெரியும் என்று போட்டு கொடுத்துட்டு வந்து இருக்கீங்களே... அப்புறம் என்ன எங்கேயிருந்து எடுத்தாங்கன்னு கேள்வி?

இராகவன் நைஜிரியா said...

// என் விண்ணப்பமோ, புகைப்படமோ, கையெழுத்தோ ஒன்றுமே இல்லாமல் எப்படிக் கொடுத்தார்கள் என்பதே புதிரானது.//

கவலைப் படாதீங்க - இதை விசாரிக்க ஒரு கமிஷன் போடச் சொல்லிடலாம்... 20 வருஷத்தில் ஒரு ரிப்போர்ட் கிடைச்சுடும்..

இராகவன் நைஜிரியா said...

// பார்க்டவுன் வங்கியில் போய் கேட்டபோது, ரயில்வே ஊழியர்கள் மேல் பாசம் பீறிட்டு கொடுத்ததாக சொன்னார்கள். //

அதுக்கு கைமாறா.. ரயில்வே ஊழியர்கள் இரண்டு பாஸ் இனாமா கொடுக்கணும் என்றுச் சொல்லவில்லையா?

இராகவன் நைஜிரியா said...

// இத்தனைக்கு எனக்கு பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு கூட இல்லை. //
அதனால்தான் கொடுத்திட்டாங்கன்னு நினைக்கின்றேன். :-)

இராகவன் நைஜிரியா said...

// அந்த அட்டையை ஆக்டிவேட் கூட செய்யாமல் அப்படியே விட்டேன். இது வரை ஒரு பொருளும் அதில் வாங்கியதும் இல்லை. //

மிக உன்னதமான காரியம் செய்தீர்கள்..

இராகவன் நைஜிரியா said...

// மஞ்சத் தண்ணி நானே தெளிச்சி, மாலை போட்டுக் கொண்டு அந்தக் கடிதத்தைக் கொண்டு போய் அருகிலுள்ள வங்கிக் கிளையில் கொடுத்து, இதற்குள் எவ்வளவு ரூபாய்க்கு கடனாளியாவது என்ற உரிமை எனக்கிருப்பதால் அந்தத் தொகையைச் சொன்னால் போதுமாம். //

இஃகி... இஃகி...

இராகவன் நைஜிரியா said...

// 3.85 சதவீதம் மாதத்துக்கு //

46.2 சதவீதம் வருடத்திற்கு... கொடுமயடா சாமி...

ஈட்டிக்காரன் கூட 2 வட்டித்தான் வாங்குறான்... இவங்க 3.85 வட்டியா..

இராகவன் நைஜிரியா said...

// அரசு அலுவலகத்தில் இம்மாதிரிக் கடன் பிடித்தம் செய்ய முடியாதென்பதோ, ஊழியர் விரும்பும் பட்சத்தில் வேறு வங்கிக்கு மாற்ற மறுக்க முடியாதென்பதோ கூடத் தெரியாமலா கடன் வழங்கினார்கள்? //

அண்ணே கடன் கொடுப்பது ஒரு டிபார்ட்மெண்ட். வசூல் செய்வது ஒரு டிபார்ட்மெண்ட்.

இவங்க டார்கெட் ரீச் பண்ணனும் என்பதற்காக இப்படி செய்கின்றார்கள் என நினைக்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// எத்தனைக் குடும்பங்களை கடனாளியாக்கி நாசம் செய்கிற வியாபாரத் தந்திரம் இது? //

யார் எக்கேடு கெட்டா எனக்கென்ன என்ற மன நிலைத்தான் இதுக்கு எல்லாம் காரணம்.

இராகவன் நைஜிரியா said...

// சட்டப்படி இது செல்லுமா என்று யாரைப் போய் கேட்பது. //

ப. சிதம்பரத்தைப் போய் கேட்கலாமா?

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
S.A. நவாஸுதீன் said...

/எப்டியெல்லாம் இம்சை பண்றாங்கய்யா. என்ன கொடுமை சார் இது/

ஆமாங்க! எனக்கு இன்னும் புரியல. எனக்கே தெரியாம எப்படி இதெல்லாம் நடக்குதுன்னு. //

அதானே அண்ணே... நான் ஊரில் இல்லை என்றால் என்னவெல்லாம் நடக்குது பாருங்க..

இராகவன் நைஜிரியா said...

// ஈரோடு கதிர் said...
//சட்டப்படி இது செல்லுமா என்று யாரைப் போய் கேட்பது//

யாரையும் கேட்க முடியாது... நாமளே எழுதி பின்னூட்டம் போட்டு... அப்புறம் மறந்துடனும்...

ஆனா பாருங்க...
இதுக்கு ஒரு கந்து வட்டி களவாணி மைனஸ் குத்தியிருக்குது...//

அண்ணே அது ஒன்னும் புது இல்லீங்க. அண்ணன் எது எழுதினாலும், மைனஸ் ஓட்டு போட ஒரு ப்ரகஸ்பதி வந்துடுவாரு..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
ஈரோடு கதிர் said...

/ அண்ணே... என்ன இது புரியாம இருக்கீங்க

தனிமனுசன் ஒருத்தன மெரட்டி கம்மி விலைக்கு இடத்த புடுங்குனா அது கட்டப் பஞ்சாயத்து..

கவர்மண்ட் புடுங்கி வெளிநாட்டுக்காரனுக்கு கொடுத்தா பொருளாதார மண்டலம்...

அப்புடித்தேன் இதுவும்...//

அதுக்கு நாமளா ஆப்புட்டோம் அவ்வ்வ்வ்வ்வ்.//

நெத்தியிலே இ.வா எதாவது எழுதி ஒட்டியிருக்கான்னு கண்ணாடியிலே பாருங்க..

இராகவன் நைஜிரியா said...

அண்ணே இதுக்கு மேல தனியா பின்னூட்டம் போட முடியல..

மீதி அடுத்த இடுகையில வச்சுக்கிறேன்..

குட் நைட்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ ஓ இப்படியெல்லாம் வேற நடக்குதா?//

இப்புடித்தான் ஓடுது. தனியா கும்மியா? கனெக்‌ஷன் வந்துடுத்தா!

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ தொலைக்காட்சித் தொடர் போல..//

ஆமாம்ணே. போதையாக்கி விட்றுவானுங்க

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

//இருக்கு கொடுக்கின்றான்.//

இல்லண்ணே! நம்மகிட்ட இல்லைன்னு குடுக்குறான்=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ இல்லப்பா நான் நல்ல வேலையில் இருக்கேன் அதனால நான் பயோடேட்டா எல்லாம் தருவதில்லை என்று சொல்ல வேண்டியதுதானே..!!//

அதுதானே அவனுக்கு வேணும். வேலையில்லாதவனுக்கு குடுத்தா அவன்ல மாட்டுவான்.=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

// தள்ளுபடின்னா நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க... பொருள் வாங்கிட்டு வரும் போது படியில் வச்சு தள்ளிவிடுவாங்க.. அதுக்கு பேருதான் தள்ளு படி..//

ஒரு வேளை எஸ்கலேட்டரைச் சொன்னானோ?

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

// அதான் பொழுது போகாம பயோடேட்டா எழுதி, எனக்குத்தன் கையெழுத்துப் போடத் தெரியும் என்று போட்டு கொடுத்துட்டு வந்து இருக்கீங்களே... அப்புறம் என்ன எங்கேயிருந்து எடுத்தாங்கன்னு கேள்வி?//

நான் குடுத்தது டாய்ச் வங்கி. கார்ட் வந்தது ஸ்டேட் பேங்க், மும்பை. சாத்தியமே இல்லை.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

// அதுக்கு கைமாறா.. ரயில்வே ஊழியர்கள் இரண்டு பாஸ் இனாமா கொடுக்கணும் என்றுச் சொல்லவில்லையா?//

அது வருஷா வருஷம் வேஸ்டா போறது. என்னை படுத்தாம விட்டா கொடுத்துடுவேன்=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

// தங்கமணி கூட ஷாப்பிங்க் போயிருந்தீங்க போலிருக்கு :-)//

அப்படின்னா பயந்துண்டு ஒண்ணுமே நிரப்பி இருக்க மாட்டேன்ல=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

// மிக உன்னதமான காரியம் செய்தீர்கள்..//

கிண்டல் பண்ணாதீங்கண்ணே. முதல்ல வந்த கார்ட் ஆக்டிவேட் பண்ணாம இருந்தும், தேதி காலாவதியாகு முன்னாடியே புதுப்பிச்சி வேற கார்ட் அனுப்பின்னான்னா பார்த்துக்குங்க. என் மேல ஏன் இவ்வளவு பாசம்(கொலைவெறி?)

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
// 46.2 சதவீதம் வருடத்திற்கு... கொடுமயடா சாமி...

ஈட்டிக்காரன் கூட 2 வட்டித்தான் வாங்குறான்... இவங்க 3.85 வட்டியா..//

ஆமாம். அதுவும் கடனை முன்கூட்டி செலுத்த நினைக்கிறவனுக்கு தண்டனை.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

// அண்ணே கடன் கொடுப்பது ஒரு டிபார்ட்மெண்ட். வசூல் செய்வது ஒரு டிபார்ட்மெண்ட்.

இவங்க டார்கெட் ரீச் பண்ணனும் என்பதற்காக இப்படி செய்கின்றார்கள் என நினைக்கின்றேன்.//

அவன் டார்கெட் நானா..அவ்வ்வ்வ்வ்வ்

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

// யார் எக்கேடு கெட்டா எனக்கென்ன என்ற மன நிலைத்தான் இதுக்கு எல்லாம் காரணம்.//

ஆமாம். நான் கொடுத்தா நீ ஏன் வாங்கினன்னு கேப்பானுவ.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...


// ப. சிதம்பரத்தைப் போய் கேட்கலாமா?//

பக்சே சொன்னான் குடுத்தேம்பாரு. =))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

// அதானே அண்ணே... நான் ஊரில் இல்லை என்றால் என்னவெல்லாம் நடக்குது பாருங்க..//

ம்கும். உங்க பேருக்கு 2 கார்ட் வந்திருக்கும். அரவிந்துக்கு ஆட் ஆன் போட்டு. 18 வயசானதும் ஆக்டிவேட் ஆக்கிடுவோம்னு.=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

// அண்ணே அது ஒன்னும் புது இல்லீங்க. அண்ணன் எது எழுதினாலும், மைனஸ் ஓட்டு போட ஒரு ப்ரகஸ்பதி வந்துடுவாரு..//

நேத்து இடுகையே போடலைண்ணே. பழசுன்னு கூட பாராம குத்திட்டு போயிருக்கு ஒண்ணு பிரகஸ்பதி=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

// நெத்தியிலே இ.வா எதாவது எழுதி ஒட்டியிருக்கான்னு கண்ணாடியிலே பாருங்க..//

வட்டப்பாறை ஃபுல்லாவே அவனுக்கு அப்படித் தெரியுது போலண்ணே.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

//அண்ணே இதுக்கு மேல தனியா பின்னூட்டம் போட முடியல..

மீதி அடுத்த இடுகையில வச்சுக்கிறேன்..

குட் நைட்.//

மன்னிச்சுடுங்கண்ணே. நான் படுத்துட்டேன் சீக்கிரம்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பாலாண்ணே.. நீங்க போய் கடன் கேட்டீங்கன்னா உங்களுக்குக் கிடைக்கும் கடனுக்கு நீங்க கட்டப்போறது அதிகபட்சமா 18%. ஆனா 3.85% மாத வட்டினா.. 47% சதவிதம் ஆயிடுதே. நம்மூருல வட்டிக்குப் பணம் கொடுக்கற ஆளுங்களே தேவலை. பிராசசிங் சார்ஜ் எல்லாம் பண்ண மாட்டாங்க.

மிகச் சிறந்த இடுகை.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல இடுகை.

vasu balaji said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

// பாலாண்ணே.. நீங்க போய் கடன் கேட்டீங்கன்னா உங்களுக்குக் கிடைக்கும் கடனுக்கு நீங்க கட்டப்போறது அதிகபட்சமா 18%. ஆனா 3.85% மாத வட்டினா.. 47% சதவிதம் ஆயிடுதே. நம்மூருல வட்டிக்குப் பணம் கொடுக்கற ஆளுங்களே தேவலை. பிராசசிங் சார்ஜ் எல்லாம் பண்ண மாட்டாங்க.

மிகச் சிறந்த இடுகை.//

ஆமாங்க செந்தில்வேலன். நன்றி.

vasu balaji said...

ஸ்ரீ said...

/நல்ல இடுகை./

நன்றிங்க ஸ்ரீ.

கிரி said...

சார் இது மாதிரி நடப்பது உண்மை தான்.. நான் ஒரு வங்கியின் கடனட்டை ஐந்து வருடமாக பயன்படுத்துகிறேன் ..இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை அதிக பணம் வசூலிப்பதில்லை.

ஆனால் இந்த விசயத்தில் உஷாராக இருக்க வேண்டும் எனபது உண்மை தான்.

vasu balaji said...

கிரி said...

/ சார் இது மாதிரி நடப்பது உண்மை தான்.. நான் ஒரு வங்கியின் கடனட்டை ஐந்து வருடமாக பயன்படுத்துகிறேன் ..இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை அதிக பணம் வசூலிப்பதில்லை.//

அதே. நான் பயன்படுத்துற வங்கி அட்டையால் ஒரு பிரச்சனையும் இல்லை. இல்லாத வங்கிதான் குடைச்சல்=))

//ஆனால் இந்த விசயத்தில் உஷாராக இருக்க வேண்டும் எனபது உண்மை தான்.//

It will be too tempting for quite a few, who otherwise would've managed somehow without falling for this.