Friday, November 27, 2009

தொழுது நிற்கிறோம்!



அகண்ட தீக்குளித்து
அன்றலர்ந்த அல்லியாய் வந்தபோது
தெளிந்தது சீதையின் கற்பல்ல
இராவணனின் சீலம்!

கையறு நிலையிலும்
கற்பை ஆயுதமாய்
கனவிலும் நினையாத
அவன் கண்ணியம்!

பின்னொரு நாள்
இனம் காப்பதாய்ச் சென்ற
இராமர்கள் கற்றுக் கொடுத்தது
கற்பழிப்பென்னும் ஆயுதம்!

மற்றுமொரு முறை
மறைந்தழித்துதவும்
மகோன்னத காதை
மனிதமழித்தது!

புத்தன் பூமியில்
புத்த பூமிகள் சேர்ந்து நடத்திய
யுத்த வேள்வியில் புத்தனுக்கு
ரத்த அபிஷேகம்!

பூஜைக்குப் பறிக்கப் பட்டவை
பூக்களல்ல எம் பிஞ்சுகள்
எரிந்தவை சந்தனமும் சவ்வாதுமல்ல
எம் மக்களின் உடல்கள்!

அபிமன்யுவையிழந்த
அர்ச்சுனனின் வீரமா களம் வென்றது?
கட்டை விரலழுத்திய
கண்ணனின் கள்ளம் தானே?

விதைக்கப்பட்ட எம் வீரர்களே
விளைந்து வாருங்கள்!
சலித்த எம் மனதிற்கு
சக்தி தாருங்கள்!

தொப்புள் கொடியுறவென்றழைத்து
தோள் கொடுக்காது
தொங்கிய தலையுடன்
தொழுது நிற்கிறோம்!
___/\___

49 comments:

Unknown said...

விதைக்கப்பட்டவர்கள் வீரர்கள். விருட்சமாய் விளைந்து வருவார்கள். மாவீரர் தினத்தன்று மண்ணில் விதைக்கப்பட்ட மாவீரர்கள் அனைவருக்கும் எம் அஞ்சலி.

புலவன் புலிகேசி said...

//கையறு நிலையிலும்
கற்பை ஆயுதமாய்
கனவிலும் நினையாத
அவன் கண்ணியம்!

பின்னொரு நாள்
இனம் காப்பதாய்ச் சென்ற
இராமர்கள் கற்றுக் கொடுத்தது
கற்பழிப்பென்னும் ஆயுதம்!//

உண்மையான வரிகள்....

//விதைக்கப்பட்ட எம் வீரர்களே
விளைந்து வாருங்கள்!
சலித்த எம் மனதிற்கு
சக்தி தாருங்கள்!//

நிச்சயம் விளைவார்கள் ஐயா...

ஜிகர்தண்டா Karthik said...

//பூஜைக்குப் பறிக்கப் பட்டவை
பூக்களல்ல எம் பிஞ்சுகள்
எரிந்தவை சந்தனமும் சவ்வாதுமல்ல
எம் மக்களின் உடல்கள்!//

சந்தனத்தையும் சவ்வாதையும் வைத்து எரிக்க நாம் என்ன முதுகில் குத்தி மகிழ்ந்த இந்திய தலைவர்களா..
தமிழர்கள்...
எங்கே புதைத்தால் தமிழன் மீண்டும் மலர்ந்து விடுவானோ என்ற அச்சத்தால், குண்டுகளை வீசித்தாக்கும் கோழைகள்...
வீணர்களுக்கு தெரியாது பீனிக்ஸ் பறவைகள் போல எரித்தாலும் வருவோம் இன்று...
வந்து காட்டுவோம்...

சூர்யா ௧ண்ணன் said...

//பூஜைக்குப் பறிக்கப் பட்டவை
பூக்களல்ல எம் பிஞ்சுகள்
எரிந்தவை சந்தனமும் சவ்வாதுமல்ல
எம் மக்களின் உடல்கள்!//

மனதை உருக்கும் வரிகள்...

நிச்சயம் வருவார்கள் தலைவா! ...
இதே உங்கள் கரங்களால் வாழ்த்துப் பாடல் எழுதத்தான் போகிறீர்கள்.. நிச்சயம் அது நடந்தே தீரும்..,
தமிழன் ஜெயிப்பான்! தமிழினம் வெல்லும்!
தமிழீழம் மலரும்!

வெண்ணிற இரவுகள்....! said...

//புத்தன் பூமியில்
புத்த பூமிகள் சேர்ந்து நடத்திய
யுத்த வேள்வியில் புத்தனுக்கு
ரத்த அபிஷேகம்//
கலங்கி விட்டேன் ஐய்யா

//
பின்னொரு நாள்
இனம் காப்பதாய்ச் சென்ற
இராமர்கள் கற்றுக் கொடுத்தது
கற்பழிப்பென்னும் ஆயுதம்!
//
அமைதிப் படையினர் அகோரம் ,,,,,,,,,,,,,
//விதைக்கப்பட்ட எம் வீரர்களே
விளைந்து வாருங்கள்!
சலித்த எம் மனதிற்கு
சக்தி தாருங்கள்!
//
ஆம் புதைய வில்லை ....நாம் விதைத்து இருக்கிறோம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,
அவர்கள் கடவுள் ஐயா உடல் மட்டும் உயிருடன் இல்லை ,,,,
அவர்கள் உணர்வு நமக்குள் உயிருடன் இருக்கிறது ...........

vasu balaji said...

முகிலன் said...

/விதைக்கப்பட்டவர்கள் வீரர்கள். விருட்சமாய் விளைந்து வருவார்கள். மாவீரர் தினத்தன்று மண்ணில் விதைக்கப்பட்ட மாவீரர்கள் அனைவருக்கும் எம் அஞ்சலி./

நன்றி முகிலன்.

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/நிச்சயம் விளைவார்கள் ஐயா.../

நன்றி. இது நடக்கவேண்டும்.

பின்னோக்கி said...

உண்மையாக விடுதலைக்கு போராடி உயிர்நீத்த அனைவருக்கும் அஞ்சலி. அரசியல் காரணங்களுக்காக சண்டையிட்டு உயிர்நீத்தவர்களைத் தவிர.

vasu balaji said...

Karthik Viswanathan said...

/வீணர்களுக்கு தெரியாது பீனிக்ஸ் பறவைகள் போல எரித்தாலும் வருவோம் இன்று...
வந்து காட்டுவோம்...//

உங்களைப் போலவே ஏங்கி நிற்கிறேன்.

நர்சிம் said...

நானும் தொழுது நிற்கிறேன்.

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன் said...

/நிச்சயம் வருவார்கள் தலைவா! ...
இதே உங்கள் கரங்களால் வாழ்த்துப் பாடல் எழுதத்தான் போகிறீர்கள்.. நிச்சயம் அது நடந்தே தீரும்..,
தமிழன் ஜெயிப்பான்! தமிழினம் வெல்லும்!
தமிழீழம் மலரும்!/

நன்றி சூர்யா உங்கள் வாழ்த்துக்கு.

vasu balaji said...

வெண்ணிற இரவுகள்....! said...

/ஆம் புதைய வில்லை ....நாம் விதைத்து இருக்கிறோம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,
அவர்கள் கடவுள் ஐயா உடல் மட்டும் உயிருடன் இல்லை ,,,,
அவர்கள் உணர்வு நமக்குள் உயிருடன் இருக்கிறது .........../

நன்றி கார்த்திக்

vasu balaji said...

பின்னோக்கி said...

/ உண்மையாக விடுதலைக்கு போராடி உயிர்நீத்த அனைவருக்கும் அஞ்சலி. அரசியல் காரணங்களுக்காக சண்டையிட்டு உயிர்நீத்தவர்களைத் தவிர./

நன்றி

vasu balaji said...

நர்சிம் said...

/நானும் தொழுது நிற்கிறேன்./

நன்றி நர்சிம்.

ஈரோடு கதிர் said...

மனம் கனத்துக் கிடக்கிறேன்...
பகிர ஒன்றும் இல்லை...

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/மனம் கனத்துக் கிடக்கிறேன்...
பகிர ஒன்றும் இல்லை...//

ம்ம்ம்

Unknown said...

// விதைக்கப்பட்ட எம் வீரர்களே
விளைந்து வாருங்கள்!//
நிச்சயம் வருவார்கள்...
விடுதலைக்காக உயிர் நீத்த அனைவுருக்கும் என் அஞ்சலி...

vasu balaji said...

பேநா மூடி said...
// நிச்சயம் வருவார்கள்...
விடுதலைக்காக உயிர் நீத்த அனைவுருக்கும் என் அஞ்சலி...//

ம்ம்.

தமிழ் நாடன் said...

//தொப்புள் கொடியுறவென்றழைத்து
தோள் கொடுக்காது
தொங்கிய தலையுடன்
தொழுது நிற்கிறோம்!//

நீங்கள் ஏன் அண்ணா இந்த நாய்களுக்காக தலையை தொங்க போடவேண்டும். தலை நிமித்தி சொல்லுங்கள். தமிழனத்த்லைவன் விதைத்த நெஞ்சுரம் இன்று இளையோர் மனதிலும் உலக தமிழர் மனதிலும் கனன்று கொண்டிருக்கிறது!
ஒன்றாய் விழுந்தால் நூறாய் எழுவோம்!
தமிழீழத்தாயகம் உலகத்தமிழர்களின் தாகம் ! என்று முழங்குவோம்!

vasu balaji said...

தமிழ் நாடன் said...

/தமிழனத்த்லைவன் விதைத்த நெஞ்சுரம் இன்று இளையோர் மனதிலும் உலக தமிழர் மனதிலும் கனன்று கொண்டிருக்கிறது!
ஒன்றாய் விழுந்தால் நூறாய் எழுவோம்!
தமிழீழத்தாயகம் உலகத்தமிழர்களின் தாகம் ! என்று முழங்குவோம்!/

ஆம்! முழங்குவோம்.

ப்ரியமுடன் வசந்த் said...

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Thamira said...

நன்று.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்/
ம்ம்.

vasu balaji said...

ஆதிமூலகிருஷ்ணன் said...

/நன்று./

நன்றி

vanathy said...

முப்பது ஆண்டுகள் வரலாறு படைத்து வரலாறு ஆகிவிட்ட மாவீரருக்கு வணக்கங்கள்.
முப்பது ஆண்டு போரில் உயிர் நீத்த தமிழ் மக்களுக்கு அஞ்சலிகள் .

தலைவர் பிரபாகரன் கூறியது போல பாதைகள் மாறலாம் ,பயணங்கள் மாறலாம் ஆனால் இலக்கு மாறாது.

தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்

-வானதி

vasu balaji said...

vanathy said...

//முப்பது ஆண்டுகள் வரலாறு படைத்து வரலாறு ஆகிவிட்ட மாவீரருக்கு வணக்கங்கள்.
முப்பது ஆண்டு போரில் உயிர் நீத்த தமிழ் மக்களுக்கு அஞ்சலிகள் .

தலைவர் பிரபாகரன் கூறியது போல பாதைகள் மாறலாம் ,பயணங்கள் மாறலாம் ஆனால் இலக்கு மாறாது.

தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம் //

ஆமம்மா. நன்றி

இராகவன் நைஜிரியா said...

மாவீரருக்கு என் வணக்கங்கள்.

அஹோரி said...

உண்மையான வரிகள்.

அஹோரி said...

உண்மையான வரிகள்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/மாவீரருக்கு என் வணக்கங்கள்./

வாங்கண்ணே.

vasu balaji said...

அஹோரி said...

/உண்மையான வரிகள்./

நன்றிங்க

லெமூரியன்... said...

சுடும் வரிகள் அத்தனையும்....!
மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.

க.பாலாசி said...

kanamaba kavithai. thalai vananguvathai vida verondrum illai.

vasu balaji said...

லெமூரியன்... said...

/சுடும் வரிகள் அத்தனையும்....!
மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்./

வாங்க லெமூரியன். நன்றி

vasu balaji said...

க.பாலாசி said...

/kanamaba kavithai. thalai vananguvathai vida verondrum illai./

நன்றி பாலாஜி.

ரோஸ்விக் said...

//விதைக்கப்பட்ட எம் வீரர்களே
விளைந்து வாருங்கள்!
சலித்த எம் மனதிற்கு
சக்தி தாருங்கள்!

தொப்புள் கொடியுறவென்றழைத்து
தோள் கொடுக்காது
தொங்கிய தலையுடன்
தொழுது நிற்கிறோம்!//

அருமையாக எழுதியுள்ளீர்கள்.

மாவீரர்களுக்கு எம் வீர வணக்கங்கள்.

தலைவன் மட்டுமல்ல எமது இனம் மொத்தமும் எழும்...இன்னும் அதிக ஈழ தாகத்துடன்.

vasu balaji said...

ரோஸ்விக் said...

/அருமையாக எழுதியுள்ளீர்கள்.

மாவீரர்களுக்கு எம் வீர வணக்கங்கள்.

தலைவன் மட்டுமல்ல எமது இனம் மொத்தமும் எழும்...இன்னும் அதிக ஈழ தாகத்துடன்./

நன்றிங்க ரோஸ்விக்

ஆரூரன் விசுவநாதன் said...

"தமிழர்கள் தாகம் தமிழ் ஈழ தாயகம் "
என்ற கோரிக்கையை வலியுறுத்துவோம்/

மிக அருமையான வரிகள்

விதைக்கப் பட்ட மாவீரர்கள் விழித்தெழும் நாளுக்காய் காத்திருப்போம்.

வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said..
/விதைக்கப் பட்ட மாவீரர்கள் விழித்தெழும் நாளுக்காய் காத்திருப்போம்.

வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்/

நன்றி ஆரூரன்.

கலகலப்ரியா said...

:)

vasu balaji said...

கலகலப்ரியா said...

/:)/

:(

அது சரி(18185106603874041862) said...

//
அபிமன்யுவையிழந்த
அர்ச்சுனனின் வீரமா களம் வென்றது?
கட்டை விரலழுத்திய
கண்ணனின் கள்ளம் தானே?
//

அழுத்தமான வரிகள்...

இந்த நான்கு வரிகளின் ஒட்டு மொத்த துரோக வரலாறும் இருக்கிறது வானம்பாடிகள்...

vasu balaji said...

அது சரி said...
/அழுத்தமான வரிகள்...

இந்த நான்கு வரிகளின் ஒட்டு மொத்த துரோக வரலாறும் இருக்கிறது வானம்பாடிகள்.../

நன்றி ஸார்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல கவிதை .

vasu balaji said...

ஸ்ரீ said...

/ நல்ல கவிதை ./

நன்றி ஸ்ரீ

சத்ரியன் said...

//தொப்புள் கொடியுறவென்றழைத்து
தோள் கொடுக்காது
தொங்கிய தலையுடன்
தொழுது நிற்கிறோம்!..//

பாலா,

நம் இயலாமை, கவிதைகளில் உப்பு கறிக்கிறது.

//அபிமன்யுவையிழந்த
அர்ச்சுனனின் வீரமா களம் வென்றது?
கட்டை விரலழுத்திய
கண்ணனின் கள்ளம் தானே?..//

உரக்க படித்து , உள்ளத்துள் புகுத்தி "கள்ளத்தை" தூக்கிலிடும் பணியை ("தமிழ் உணர்வற்ற தமிழ் காளையரை"யும் தட்டியெழுப்பி ) நாமே தொடங்கினால் என்ன?

vasu balaji said...

சத்ரியன் said...

/பாலா,

நம் இயலாமை, கவிதைகளில் உப்பு கறிக்கிறது./

கண்ணீர் கரிக்கத்தான் செய்யும். அது மட்டுமே எம்மால் முடிந்தது இன்று.

/உரக்க படித்து , உள்ளத்துள் புகுத்தி "கள்ளத்தை" தூக்கிலிடும் பணியை ("தமிழ் உணர்வற்ற தமிழ் காளையரை"யும் தட்டியெழுப்பி ) நாமே தொடங்கினால் என்ன?/

யாரைப் போய் தட்ட? ஆளுக்கு ஒரு இடுகை பேசி வைத்துக் கொண்டு போடலாம். அதிலுமே இரண்டு அனானி எதிர்க்கும். கட்சி சார்ந்த உணர்வு தாண்டி தமிழன் என்ற உணர்வு மட்டுமே சாதிக்க முடியும்.

சத்ரியன் said...

//அதிலுமே இரண்டு அனானி எதிர்க்கும். //

அந்த அனானிகள் அவன் அம்மாவிடம் போய் "அப்பன் " யாரென்று கேட்டுக்கொள்ளட்டும். அத்ற்குப் பின் வந்து எதிர்க்கட்டும்.

vasu balaji said...

சத்ரியன் said...

/அந்த அனானிகள் அவன் அம்மாவிடம் போய் "அப்பன் " யாரென்று கேட்டுக்கொள்ளட்டும். அத்ற்குப் பின் வந்து எதிர்க்கட்டும்./

ம்ம்ம்.