Thursday, November 26, 2009

ஹீரோ!





என் பேரு. அது எதுக்கு உங்களுக்கு? நான் ரொம்ப மென்மையானவன்.  பார்க்கத்தான் கொஞ்சம் கரடு முரடா தெரிவேன். ஆனா ரொம்ப சாஃப்ட் நானு. எங்க போனாலும் ஒரு ஓரமா நான் பாட்டுக்கு ஒழுங்கா இருப்பேன். வெள்ளையா வேற இருப்பேன்.

இந்தப் பொண்ணுங்க‌ இருக்காங்களே! எம்பாட்டுக்கு இருக்க விடமாட்டாளுங்க. என்ன பார்த்துட்டா போறும். பாய்ஞ்சி ஓடி வந்து தூக்கி கொஞ்சம் கூட வெக்கமில்லாம உதடு அழுந்த முத்தம் குடுப்பாங்க. சில பேரு சாப்ட வாய் கூட துடைக்காம முத்தம் குடுப்பாங்க. எனக்கு எப்புடி எரியும் தெரியுமா?

சில பேருக்கு அப்புடி என்னா வெறி வருமோ அப்புடியே மூஞ்சி,கன்னம்னு பொரட்டி எடுப்பாங்க.ச்சீ தூ.வியர்வை நாத்தம் வாந்திவரும். எல்லாம் என்னோட தப்பு. இவ்வளவு வெறுப்பிருந்தாலும், யாராசும் அழுதா என்னால தாங்க முடியாது. முதல்ல போய் கண்ணு துடைப்பேன். அதெல்லாம் யாருங்க நினைச்சி பார்க்குறாங்க.

நேத்து வ‌ரைக்கும் மூக்கு ஒழுகிக்கினு இருந்த‌ மீனா, மைனா வாய் ம‌கி பொண்ணு அதான் மொச்சு மொச்சுன்னு அசைபோட்டு போட்டு வாயோர‌ம் புண்ணு வ‌ந்திருக்குமே மைனா வாய் மாதிரி அந்த‌ ம‌கி பொண்ணு இவ‌ளுங்க‌ ச‌க‌வாச‌மே இல்லாம‌ நான் பாட்டுக்கு இருந்தேன். காலேஜுல‌ சேர்ந்துட்டாங்க‌ளாம். இவ‌ங்க‌ளுக்கும் என்ன‌ப் பார்த்தா இப்போ லவ்ஸூ. என்னா? எம் பொழப்ப பார்த்தா பொறாமையா இருக்கா?

இவ‌ங்க‌ளாவ‌து ப‌ர‌வால்ல‌. ஆம்பிளைங்களுக்கென்ன? உவ்வ்வே. வெக்க‌மில்லாம‌ அவ‌ங்க பொண்டாட்டிகிட்ட சொல்லி என்ன‌ க‌ட‌த்தி கொண்டு வ‌ந்து மீசை குத்த‌ குத்த‌ அழுத்தி முத்த‌ம் குடுப்பானுங்க‌ பாரு. ப‌த்திக்கிட்டு வரும்.

ஆம்பளையோ பொம்பளையோ எல்லாம் ஒரே மாதிரிதான். இத்தினி பாசமும் கொஞ்ச நேரம்தான். அப்புறம் கெடாசிட்டு போயிட்டே இருப்பாங்க. ஒரு ஆறுதல் என்னன்னா அது எந்த விசேஷமா இருக்கட்டும். எவ்ளோ பெரிய வி.ஐ.பியா இருந்தாலும் முதல்ல நான் இருக்கனான்னு தேடுவாங்க.

என்னைக் காணலைன்னா திட்டுவாங்க. சிலரு சண்டை கூட போடுவாங்க, இவ்ளோ செஞ்சி என்ன? இவன கூப்புடலையான்னு. யாருடா இந்த ஹீரோன்னு தானே பார்க்கரீங்க. நாந்தாங்க டிஷ்யூ பேப்பர். சரிங்களா. பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க. பிடிக்காட்டி பிடிக்கலன்னு சொல்லுங்க. எதுனாலும் பின்னூட்டத்தில சொல்லிட்டு போங்க. எனக்கு பின்னாடி போய் பேசுனா பிடிக்காது. சரியா?

டிஸ்கி 1: இது வசந்த் மாதிரி எழுதியிருக்கேன். சரியா இருக்கான்னு பின்னூட்டத்தில சொல்லுங்க. மெஜாரிடி முடிவை ஏற்றே ஆக வேண்டும். அதனால போட்டு குடுக்க வேணாம். சரின்னா மட்டும் வசந்த் மாதிரின்னு சொல்லுங்க.

டிஸ்கி 2: இந்த மாதிரி அவர் எழுத வேண்டிய எழுத்து கதிர், பாலாசி, இது போக அவருக்கு விருப்பமான முடியுமென்று தோன்றக் கூடிய வேறு யாருடைய எழுத்தாகிலும்.
Post a Comment