Monday, November 23, 2009

ஆங்கிலம் படுத்தும் பாடு.

மத்திய அரசு அலுவலகங்களில் இந்த ஆங்கிலம் படுத்தும் பாடு இருக்கிறதே. வெள்ளைக்காரன் போகும்போது விட்டுச் சென்றது ஆங்கிலமும் பந்தாவும். வெள்ளைக்காரனுக்கு பந்தா இருக்கிறதோ இல்லையோ. நம்மாளுங்க அத வெச்சிக்கிட்டு படுத்துற பாடு இருக்கே. பெரும்பாலும் வி.எஸ். ராகவன் மாதிரி தமிழ்ல சொல்லி திரும்ப இங்கிலீஷ்ல தப்பா சொல்லின்னு அது பெரிய கூத்து.

ஒரு முறை நம்ம ஆய்பீசர் கூப்பிட்டு யாருக்கோ கடன் பிடித்தம் செய்து அனுப்பிய 27 காசோலைகள் குறித்த தகவல் கேட்டு வந்த கடிதத்தைக் கொடுத்து, உடனடியாக பதில் அனுப்பச் சொன்னார். தேடிப் பார்த்ததில் 3 காசோலைகள் மாற்றப்பட்டிருந்தது.

மிகுதியான 24 காசோலைகள் விபரம் போதவில்லை எனத் திரும்பி விட்டிருந்தன. அதற்கானத் தொகைக்கு ஒரு காசோலை எழுதி, விபரங்கள் கொடுத்து இதனுடன் 24 காசோலைக்கான தொகை இணைக்கப் பட்டுள்ளது என்று ஒரு கடிதம் தயார் செய்து கொண்டு போனேன்.

இந்த எழவு எழுத ஆக்ஸ்ஃபோர்டிலா படித்திருக்க வேண்டும்? வாங்கிப் படித்தவர் துடித்துப் போனார். அய்யோஓஓஒ என்றலறி யாருப்பா எழுதினா என்றார். நாந்தான் என்றேன். க்ராமரே காணோமே என்றார். அவனுக்கு க்ராமர் தேவையில்லை சார், காசோலைதான் தேவை. அது புரியும் என்றேன்.

ஹாரிபிள் ஐ சே. ஈஸ் இட் இங்கிலீஷ்? என்றார். தெரியல சார். தமிழ் இல்லை. அது தெரியும். ஏன்னா நான் 11ம் வகுப்பு வரைக்கும் தமிழ்ல தான் படிச்சேன். இந்த எழுத்தெல்லாம் இங்க வந்து ஃபைல்ல பார்த்து எழுதினது தான். இப்படியே 25 வருஷம் தள்ளிட்டேன். இனிமே எங்க போய் நான் இங்கிலீஷ் படிக்க என்றேன்.

ட்ரொயிங் என்று பெல்லடித்து ஸ்டெனோவைக் கூப்பிட்டு டிக்டேஷன் கொடுத்தார். அவனும் டைப் செய்து கொண்டுவந்தான். கையெழுத்து கிறுக்கி, இப்போ பாரு. இப்படி எழுதணும் என்றார். வாங்கிப் படித்தேன். எப்புடி இருக்கு என்றார் பெருமையாக. சார். எனக்குதான் இங்கிலீஷ் தெரியாதே. க்ராமர் இருக்கா இல்லையா தெரியலை. ஆனா தகவல் தப்பு. நான் 3 காசோலை மாத்தியாச்சு, 24 காசோலைக்கான தொகை இணைத்திருக்குன்னு எழுதுனேன். இதில 23 காசோலை மாத்தியாச்சி 3 காசோலைக்கான தொகை இணைத்திருக்குன்னு இருக்குன்னேன்.

தட் இடியட் ஸ்டெனோ என்று திட்டியபடி, திரும்ப டிக்டேஷன் கொடுத்து, திரும்ப கையெழுத்து கிறுக்கி, நீட்டி இப்பொழுது பார் என்றார். நம்ப மாட்டீர்கள். ஒரு வார்த்தை மாறாமல் நான் முதலில் எழுதியதுதான். விதியேடா என்று நகர்ந்தேன். என்னய்யா ஒண்ணும் சொல்லாம போற என்றார். நான் ஆஃபீஸ் காபியை ஒரு ஜெராக்ஸ் எடுத்து, என் கடிதத்துடன் சேர்த்து ஏன் சார், நான் எழுதி கொண்டு வந்ததை திரும்ப டிக்டேஷன் கொடுத்தா க்ராமர் வந்துடுமா? என்ற படி வெளியே வந்தேன்.

இதில் டிக்டேஷன் கொடுக்கிற அழகிருக்கே. இதப் பாருங்க புரியும்:

ம்ம். டிக்டேஷன் எடுத்துக்கப்பா. ஆஃபீஸ் அட்ரஸ் போட்டுக்க. (ஸ்டெனோக்கு தெரியாது பாரு)

ஃபைல் நம்பர் இது போட்டுக்க (அவரு சட்டையே பண்ண மாட்டாரு)

டி.ஓ.ப்பா. (சரி. சார்)

அவுங்க பேரு வந்து வந்து வந்து (5 நிமிஷம் யோசித்து) ஆர்த்தி சக்சேனா. மிசசு அவுங்க. மை டியர் போடுறதா, டியர் ஸ்ரீமதி போடுறதா.ம்ம்ம்....ம்ம்ம்ம்... சரி டியர் ஆர்த்தி போடு...இரு இரு.....அவுங்க எனக்கு சீனியரு...டியர் மிசஸ் ஆர்த்தி போடலாமா ஆர்த்தி சக்சேனா போடலாமா?ம்ம்ம்....இன்னாய்யா ஸ்டெனோ நீ. எல்லாம் நான் சொல்லணுமா?

சரி..டியர் மிசஸ் ஆர்த்தி சக்சேனா போடு (சார். மிஸஸ் சக்சேனா போட்டா போதும் சார், போன முறை அப்படித்தான் போட சொன்னீங்க)

சரி போடு... போட்டியா.. இன்னா எழுதுன படி ( எழுதினதே டியர் மிஸச் சக்சேனா தான். இதுக்கு 30 நிமிஷமாகியிருக்கும்)

போட்டியா. சரி சப்ஜெக்ட் இதுல இருக்கிறதே போட்டுக்க. ரெப்ரென்ஸ் இந்த லெட்டர் போட்டுக்க.

இப்போ மேட்டர். கைண்ட்லி ரெஃபர் டு தி லெட்டர்..இல்ல வேணாம் ப்ளீஸ் கனெக்ட் தி லெட்டர் சைடட்..சரியா வரல போலயே. எங்க படி...

இதுக்கும் மேல அப்புடியே சொன்னா P.C.ய உடைச்சிட்டு அடிக்க வருவீங்க. நிப்பாட்டிக்கிறேன்.கிட்டத் தட்ட ஒரு இரண்டு மணி நேரமாகி இருக்கும். சீக்கிரம் ட்ராஃப்ட் அடிச்சி எட்தாப்பா. (சார். லஞ்ச் டைம் வந்துடிச்சி. சாப்புடுங்க. நானும் சாப்பிட்டு கொண்டுவரேன்)

மூன்று மணி வாக்கில் ட்ராஃப்ட் வரும். கடைசி பெல் அடித்த பிறகும் விடை எழுதும் மாணவன் போல் அப்ரூவ் செய்து, சீக்கிரம் ஃபேர் காபி கொண்டு வா என்பார்.

(ஒரு மணி நேரம் கழித்து வரும் ஸ்டெனோவிடம்) ஒரு ஃபேர்காபி எடுத்துனு வர இவ்ளோ நேரமா?

எங்க சார். யூபிஎஸ் இல்ல. இங்க அப்ரூவல் வாங்க கொண்டு வரதுக்குள்ள கரண்ட் போச்சி. வந்ததும் எல்லாம் திரும்ப டைப் பண்ணி கொண்டு வந்தேன்.

எதுனா ஒண்ணு சொல்லுவ. உடனே ப்யூன் கிட்ட குடுத்து ஸ்பீட் போஸ்ட்ல அனுப்ப சொல்லு.

(அரை மணி கழித்து) ஏம்பா அனுப்பிட்டியா? கான்ஃபிடென்ஷியல்னு போட்டியா?

அய்யய்யோ இல்லை சார். இருங்க இன்னோரு காபி கொண்டு வரேன். அதுல சைன் பண்ணுங்க. அதுக்குள்ள ப்யூன் செல்லுக்கு ஃபோன் பண்ணி போஸ்ட்ல குடுக்க வேணாம், நான் வரேன்னு சொல்லிடுங்க என்று ஏக குளறுபடிகளுக்கப்புறம் போகும் அந்த லெட்டர் இப்படி இருக்கும்:

Kindly refer to the letter cited above. In this connection your attention is invited to detailed instructions already funished in this office letters of xx/xx/xxxx and xx/xx/xxxx. Since the matter is delayed for more than 15 months, and the information is required to be submitted long back , immediate reply is requested.

                                                                                                   yours sincerely

ஏங்க. இத போஸ்டர் அடிச்சி ஒட்டினா கூட யாருக்காவது புரியும்? இதில கான்ஃபிடென்ஷியல் வேற.

(டிஸ்கி: ஓஹோ. இவன் அடிச்ச கூத்த யாரோ அடிச்சா மாதிரி சொல்றான் பாருன்னு வடிவேலு சீன் மாதிரி சொல்ல வேணாம். இடுகை போடுறவன் இதுக்கா ஸ்டெனோ தேட போறேன்? இஃகி இஃகி)
-------------

104 comments:

ஈரோடு கதிர் said...

//ட்ரொயிங் என்று பெல்லடித்து//

ஓ பெல்லும் இங்கிலீஷ்லதான் அடிப்பாய்ங்களா

ஈரோடு கதிர் said...

//இன்னா எழுதுன படி//

எழுதுன பொறவு நல்லா படிங்கண்ணே....

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ ஓ பெல்லும் இங்கிலீஷ்லதான் அடிப்பாய்ங்களா/

ஆமாம். மணிதான் தமிழ்ல அடிப்பாங்க. நம்ம கிட்டயேவா?

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/எழுதுன பொறவு நல்லா படிங்கண்ணே..../

அட இவரு என்னா சொன்னாருன்னு மறந்துட்டு அப்படி கேக்கறது அது

ஈரோடு கதிர் said...

//யூபிஎஸ் இல்ல//

அட.... அப்ஸ் கொடுத்துட்டாய்ங்களா????

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/அட.... அப்ஸ் கொடுத்துட்டாய்ங்களா????/

=)) நம்ம பிட்டு..ம்ம்ம். நடக்கட்டு

ஈரோடு கதிர் said...

மொத்தத்தில் கலக்கல்....

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/மொத்தத்தில் கலக்கல்..../

யூ மீன் கலங்கல்=)) யா யா. தஸ் ரைட். இங்க்லீஷ் யூ நோ?

மணிஜி said...

நம்மாளு ஒருக்கா சொன்னான்..லெதர்லாம் ஒரே அரிக்குதுன்னு

ப்ரியமுடன் வசந்த் said...

யூ வெறி பன்னி....

:)))

இதுக்கு மேல எனக்கு இன்கிலிபீஸ் வராது..ஆமா சொல்லிப்புட்டேன்...

Anonymous said...

இந்த கிராமர் செய்யற லொள்ளு இருக்கே சொல்லி மாளாது.

இராகவன் நைஜிரியா said...

தமிழ்ஷ் ஓட்டு போடப் போனா இப்படி சொல்லுதே ... இதுக்கு ஆங்கிலத்தில் என்னா லேட அடிக்கணும்..

மெசெஜ்..

oops... the link is not found..

இராகவன் நைஜிரியா said...

அண்ணே என்னோட ஆங்கில அறிவு இவ்வளவுதாங்க..

I speak, he speak, why you middle middle speak..

இராகவன் நைஜிரியா said...

//"ஆங்கிலம் படுத்தும் பாடு." //

ஆங்கிலம் மட்டுமா... என்ன மாதிரி ஆளுங்ககிட்ட மாட்டிகிட்டு தமிழும் முழிக்கிது இல்ல..

இராகவன் நைஜிரியா said...

// பெரும்பாலும் வி.எஸ். ராகவன் மாதிரி தமிழ்ல சொல்லி திரும்ப இங்கிலீஷ்ல தப்பா சொல்லின்னு அது பெரிய கூத்து. //

நல்ல வேலை நான் இல்லப்பா அது... அது வேற ராகவன்..

யாரவது குழப்பிகிடாதீங்க...

க.பாலாசி said...

//டியர் ஸ்ரீமதி போடுறதா.ம்ம்ம்....ம்ம்ம்ம்... சரி டியர் ஆர்த்தி போடு...இரு இரு.....அவுங்க எனக்கு சீனியரு...டியர் மிசஸ் ஆர்த்தி போடலாமா ஆர்த்தி சக்சேனா போடலாமா?ம்ம்ம்....இன்னாய்யா ஸ்டெனோ நீ. எல்லாம் நான் சொல்லணுமா?//

இது என்ன...குணா படத்துல வர்ர...கண்மணி அன்போட காதலன் நான் நான்...எழுதும்...மடல்...கடுதாசி.....
இப்டி இருக்கு...

நம்ம கத மாதிரில்ல இருக்கு....

இராகவன் நைஜிரியா said...

// க்ராமரே காணோமே என்றார். //

அப்ப போலீஸில் புகார் கொடுக்க வேண்டியதுதானே... ஏன் அய்யோ என்று அலறினார்?

இராகவன் நைஜிரியா said...

// ஹாரிபிள் ஐ சே. ஈஸ் இட் இங்கிலீஷ்? என்றார். //

ஹாரி பாட்டர் படத்தைப் பற்றி எதாவது சொல்ல வர்றாருங்களா?

இராகவன் நைஜிரியா said...

// இதில 23 காசோலை மாத்தியாச்சி 3 காசோலைக்கான தொகை இணைத்திருக்குன்னு இருக்குன்னேன். //

அப்படி போடு அருவாள...

எப்படிங்க இவ்வளவு தப்பா போடறாங்க

இராகவன் நைஜிரியா said...

// நான் ஆஃபீஸ் காபியை ஒரு ஜெராக்ஸ் எடுத்து, என் கடிதத்துடன் சேர்த்து ஏன் சார், நான் எழுதி கொண்டு வந்ததை திரும்ப டிக்டேஷன் கொடுத்தா க்ராமர் வந்துடுமா? என்ற படி வெளியே வந்தேன். //

உங்களுக்கு தில் ஜாஸ்தி என்பதை நாங்க புரிந்து கொண்ட்டொம்..

இராகவன் நைஜிரியா said...

// ம்ம். டிக்டேஷன் எடுத்துக்கப்பா. ஆஃபீஸ் அட்ரஸ் போட்டுக்க. (ஸ்டெனோக்கு தெரியாது பாரு)//

தெரிஞ்சாலும் போட மாட்டாங்க...

கேட்ட நீங்க சொல்லலைன்னு சொல்லுவாங்க..

அண்ணே அவங்களைப் பத்தி உங்களுக்குத் தெரியாது...

அனுபவச்சு இருக்கேன்.. ஒரு இடுகை போடற அளவுக்கு

இராகவன் நைஜிரியா said...

// மிசசு அவுங்க. மை டியர் போடுறதா, //

மை டியர் போடறுதுல்ல ஒன்னும் கஷ்டமில்ல... வூட்டுகார அம்மாவுக்கு தெரிஞ்சால் தான் வம்பு..

இராகவன் நைஜிரியா said...

// சரி..டியர் மிசஸ் ஆர்த்தி சக்சேனா போடு (சார். மிஸஸ் சக்சேனா போட்டா போதும் சார், போன முறை அப்படித்தான் போட சொன்னீங்க)//

பாருங்க .. அவருக்கு டென்ஷனை ஏத்திவுட்டுட்டு அப்புறமா சொல்றாரு..

இராகவன் நைஜிரியா said...

// எங்க சார். யூபிஎஸ் இல்ல. இங்க அப்ரூவல் வாங்க கொண்டு வரதுக்குள்ள கரண்ட் போச்சி. வந்ததும் எல்லாம் திரும்ப டைப் பண்ணி கொண்டு வந்தேன்.//

யூபிஎஸ் இல்லேன்னு தெரியுமில்ல.. அப்புறம் அப்ப அப்ப சேவ் செய்ய வேண்டியதுதானே...

எல்லாம் அரசாங்க உத்யோகம் பண்ற வேலை

இராகவன் நைஜிரியா said...

அப்பாடா..

மீ த 25

இராகவன் நைஜிரியா said...

கும்மி அடிக்க
கும்பல்
இல்லாததால்,
தனியாக
டீ ஆத்த
முடியாததால்,
கும்மி
இத்துடன்
நிறுத்தப்படுகின்றது...

(கவிதை ???!!!)

ஜிகர்தண்டா Karthik said...

//ஹாரிபிள் ஐ சே. ஈஸ் இட் இங்கிலீஷ்? என்றார்//

இந்த டைம்-ல, அப்படியே விழுந்து விழுந்து சிரிச்சுட்டு....
சொல்லிடருடா ஷேக்ஸ்பியர் அப்படினு சொல்லிருதீங்கனு வெச்சுகுங்க....
என்ன ஆகி இருக்கும்?

இராகவன் நைஜிரியா said...

கும்மி அடிக்க
ஆள் வரும்போது
சொல்லி
அனுப்புங்க
அப்ப
நாங்க
கும்மி
அடிக்க
வருவோம்..

(இதுவும் கவிதைதான்.. ??!!)

இராகவன் நைஜிரியா said...

// Karthik Viswanathan said...
//ஹாரிபிள் ஐ சே. ஈஸ் இட் இங்கிலீஷ்? என்றார்//

இந்த டைம்-ல, அப்படியே விழுந்து விழுந்து சிரிச்சுட்டு....
சொல்லிடருடா ஷேக்ஸ்பியர் அப்படினு சொல்லிருதீங்கனு வெச்சுகுங்க....
என்ன ஆகி இருக்கும்? //

எங்க அண்ணனை என்ன நினைச்சீங்க..

அதை சொல்லியிருப்பாரு...

இடுகையில் எழுதவில்லை

அவ்வளவுதான்..

vasu balaji said...

தண்டோரா ...... said...

/நம்மாளு ஒருக்கா சொன்னான்..லெதர்லாம் ஒரே அரிக்குதுன்னு/

=)).இன்னைக்கென்னண்ணே. வரிக்கு வரி சிரிக்க வைக்கிறீங்க

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/யூ வெறி பன்னி....

:)))

இதுக்கு மேல எனக்கு இன்கிலிபீஸ் வராது..ஆமா சொல்லிப்புட்டேன்.../

அட படுபாவி வேணும்னே ‘றி’ ‘ப’ போட்டு பழி வாங்கறியா?=))

vasu balaji said...

Thirumathi JayaSeelan said...

/இந்த கிராமர் செய்யற லொள்ளு இருக்கே சொல்லி மாளாது./

=)).வாங்க. நன்றிங்க.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/ மெசெஜ்..

oops... the link is not found../

நான் விட்டாலும் இந்த OOPS என்னை விடாது போலயே.அவ்வ்வ்

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே என்னோட ஆங்கில அறிவு இவ்வளவுதாங்க..

I speak, he speak, why you middle middle speak..//

மிடில் மிடில் ஸ்பீக்கினாலும் என்ன மாதிரி ராங்லி ராங்லி ஸ்பீக்க மாட்டிங்களே.=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ஆங்கிலம் மட்டுமா... என்ன மாதிரி ஆளுங்ககிட்ட மாட்டிகிட்டு தமிழும் முழிக்கிது இல்ல../

அப்பாடா நான் தேவலை. என்கிட்ட ஆளுங்கதான் முழிப்பாங்க.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/நல்ல வேலை நான் இல்லப்பா அது... அது வேற ராகவன்..

யாரவது குழப்பிகிடாதீங்க...//

நீங்கதான் டிஸ்கி போட்டாலே பொறுப்பின்னு போட வைப்பீங்களே. ஸோ. நோ டவுட்.

vasu balaji said...

க.பாலாசி said...

/இது என்ன...குணா படத்துல வர்ர...கண்மணி அன்போட காதலன் நான் நான்...எழுதும்...மடல்...கடுதாசி.....
இப்டி இருக்கு...

நம்ம கத மாதிரில்ல இருக்கு..../

அடப்பாவி. மிஸஸ்னு சொல்றேன் நம்ம கதங்கறானே=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said..
/அப்ப போலீஸில் புகார் கொடுக்க வேண்டியதுதானே... ஏன் அய்யோ என்று அலறினார்?/

ரைடர் எழுதுற இங்க்லீஷ்ல எங்காளு செத்தே போவாரு.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ஹாரி பாட்டர் படத்தைப் பற்றி எதாவது சொல்ல வர்றாருங்களா?/

அண்ணே. இந்த பன்னாட க்ராமர் திருத்திண்டு ஒரு டெண்டர்ல பார்க்கவேண்டியத விட்டு விஜிலன்ஸ்ல மாட்டுனாண்ணே.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அப்படி போடு அருவாள...

எப்படிங்க இவ்வளவு தப்பா போடறாங்க/

நம்பருக்கு க்ராமர் வேணாம்லண்ணே.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/உங்களுக்கு தில் ஜாஸ்தி என்பதை நாங்க புரிந்து கொண்ட்டொம்../

ஹி ஹி. எனக்கு தில் ஜாஸ்திங்கறத விட அந்தாளோட சீனியர்ஸ் கிட்ட நம்ம ரெப்யூடேஷன் ஸ்ட்ராங்குன்னு தெரியும்=))

பிரபாகர் said...

உள்ளேன் அய்யா... படிச்சாச்சி, சந்தோஷமா ஓட்டும் போட்டாச்சி... வழக்கம் போல ரொ mmmmmmmmmmmmmmmmmmm ப(கொஞ்சம் சுரத்தில்லாம மெதுவா படிக்கவும்).....................
............
...........

இப்போ உற்சாகாமா ...... சூப்பரா இருக்கு.

பிரபாகர்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said..

/அண்ணே அவங்களைப் பத்தி உங்களுக்குத் தெரியாது...//

சோடி போட்டுக்குறுவமா சோடி

அனுபவச்சு இருக்கேன்.. ஒரு இடுகை போடற அளவுக்கு/

சரி வேணாம். இடுகை போட்டுக்கிருவம்=))

vasu balaji said...

Karthik Viswanathan said...

/ இந்த டைம்-ல, அப்படியே விழுந்து விழுந்து சிரிச்சுட்டு....
சொல்லிடருடா ஷேக்ஸ்பியர் அப்படினு சொல்லிருதீங்கனு வெச்சுகுங்க....
என்ன ஆகி இருக்கும்?//

சே சே. சிரிக்காம இப்புடி சொன்னதே அதான்னு தெரியும். வென புடிச்சவனுங்க.=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/கும்மி அடிக்க
ஆள் வரும்போது
சொல்லி
அனுப்புங்க
அப்ப
நாங்க
கும்மி
அடிக்க
வருவோம்..

(இதுவும் கவிதைதான்.. ??!!)/

சே. கொஞ்சமே கொஞ்சம் மாத்தி

கும்மிக்கு
ஆளின்றி
தம்பி ஜூட்
ஆள் வந்ததும்
அம்பாய்
வருவேன்!

vasu balaji said...

பிரபாகர் said...

/(கொஞ்சம் சுரத்தில்லாம மெதுவா படிக்கவும்).....................
............
...........

இப்போ உற்சாகாமா ...... சூப்பரா இருக்கு./

நன்றி பிரபாகர். தங்கச்சி சொன்னது சரி. நூடுல்ஸ் வாங்க போய் நொந்து போயிருந்தீங்களோ?

பிரபாகர் said...

அய்யா இருக்கீங்களா! பெரியவங்க நம்ம பக்கம் ரொம்பநேரம் கலாய்ச்சிட்டு போயிருக்கீங்க! நாந்தேன் இல்லை.

இந்த மாதிரி இங்கிலிஷ்ல பீட்டர் விடறதா பாத்துட்டு மெரண்டு பரீட்சை ரிசல்ட் வரப்போ நம்மள பாத்து அவுங்க மிரண்டதெல்லாம் நடந்திருக்கு...

பின்னால எழுதுவோம், அத பத்தி. சும்மா பூந்து விளையாடறீங்க காமெடில!

பிரபாகர்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ மை டியர் போடறுதுல்ல ஒன்னும் கஷ்டமில்ல... வூட்டுகார அம்மாவுக்கு தெரிஞ்சால் தான் வம்பு../

ஆஃபீஸ்ல இருந்து கும்மி அடிச்சா இவ்வளவு தைரியமா?

vasu balaji said...

பிரபாகர் said...

/அய்யா இருக்கீங்களா! பெரியவங்க நம்ம பக்கம் ரொம்பநேரம் கலாய்ச்சிட்டு போயிருக்கீங்க! நாந்தேன் இல்லை.

இந்த மாதிரி இங்கிலிஷ்ல பீட்டர் விடறதா பாத்துட்டு மெரண்டு பரீட்சை ரிசல்ட் வரப்போ நம்மள பாத்து அவுங்க மிரண்டதெல்லாம் நடந்திருக்கு...

பின்னால எழுதுவோம், அத பத்தி. சும்மா பூந்து விளையாடறீங்க காமெடில!

பிரபாகர்./

அட பாவிங்களா. நானும் பிரபாகரும்தான் யூத்து கம்முனு இருக்கோம்னு கதிரையும் தங்கச்சியையும் கிழடுங்கன்னு சொல்றேன். பெரியவங்களாம்ல=))

அசத்துங்க நீங்க

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said..

/எங்க அண்ணனை என்ன நினைச்சீங்க..

அதை சொல்லியிருப்பாரு...

இடுகையில் எழுதவில்லை

அவ்வளவுதான்../

மி த 50. இல்லண்ணே. ரொம்ப சீரியசா சொல்லிட்டு வந்தது ரொம்ப எஃபெக்டிவ்.=))

கலகலப்ரியா said...

நாள் பூரா இந்த லெட்டராவது அடிச்சீங்களே...! விளங்கிடும்....!

amaam... unga convent assistants ellaam enga sir...:P... keattathaa sollunga...

பிரபாகர் said...

யூத்துதான் அய்யா.... தங்கச்சிய நம்மகிட்ட இருந்து விட்டுடாதீங்க, விவரமே...... தெரிஞ்ச (தெரியாதன்னு சொல்லுவேன்னு பாத்தீங்களா?) குழந்தை... அறிவில பெரியவங்கன்னு சொன்னேன்...

சுண்டெலி(காதல் கவி) said...

//க்ராமரே காணோமே என்றார். அவனுக்கு க்ராமர் தேவையில்லை சார், காசோலைதான் தேவை. அது புரியும் என்றேன்.//


என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை,நல்ல காமெடி.

கலகலப்ரியா said...

//ஆள் வந்ததும்
அம்பாய்
வருவேன்!//

ஆளம்புன்னு சொல்லுறது இதைத்தானா..!

vasu balaji said...

கலகலப்ரியா said...

/நாள் பூரா இந்த லெட்டராவது அடிச்சீங்களே...! விளங்கிடும்....!

amaam... unga convent assistants ellaam enga sir...:P... keattathaa sollunga.../

தோ. டிஸ்கி பாரு. நானில்ல. அட எனக்கு இங்கிலிசுபிசே வராது. கான்வண்ட் அசிஸ்டண்ட்கிட்ட எப்புடி சொல்றது.

vasu balaji said...

பிரபாகர் said...

/யூத்துதான் அய்யா.... தங்கச்சிய நம்மகிட்ட இருந்து விட்டுடாதீங்க, விவரமே...... தெரிஞ்ச (தெரியாதன்னு சொல்லுவேன்னு பாத்தீங்களா?) குழந்தை... அறிவில பெரியவங்கன்னு சொன்னேன்.../

கதிர் ஹியர் ஹியர். ஆல் த மீஜிக் ஸ்டார்ட்.

vasu balaji said...

காதல் கவி said...

/ என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை,நல்ல காமெடி./

நன்றி காதலே. இல்லை இல்லை கவியே.

கார்த்திகைப் பாண்டியன் said...

கலக்கல் காமெடி...:-))))

vasu balaji said...

கார்த்திகைப் பாண்டியன் said...

/கலக்கல் காமெடி...:-))))/

நன்றி.

இராகவன் நைஜிரியா said...

அட்டெண்டன்ஸ் ப்ளீஸ்..

ஃபார் கும்மி..

இராகவன் நைஜிரியா said...

/// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said..

/அண்ணே அவங்களைப் பத்தி உங்களுக்குத் தெரியாது...//

சோடி போட்டுக்குறுவமா சோடி ///

அண்ணே இமயமலை கூட மோதற அளவுக்கு எனக்கு வளு இல்லை...

நாங்க சாதாரணமானவங்க... என்னைப்போய்...

வேணாம் அழுதுடுவேன்... அவ்...

இராகவன் நைஜிரியா said...

//வானம்பாடிகள் said...

சே. கொஞ்சமே கொஞ்சம் மாத்தி

கும்மிக்கு
ஆளின்றி
தம்பி ஜூட்
ஆள் வந்ததும்
அம்பாய்
வருவேன்! //

அண்ணே இது...

எப்படிங்க அண்ணே...

Novem

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/ மை டியர் போடறுதுல்ல ஒன்னும் கஷ்டமில்ல... வூட்டுகார அம்மாவுக்கு தெரிஞ்சால் தான் வம்பு../

ஆஃபீஸ்ல இருந்து கும்மி அடிச்சா இவ்வளவு தைரியமா? //

ஏன் இந்த கொலை வெறி... எதோ நாங்க ஜாலியா இங்க கும்மி அடிச்சு கிட்டு இருக்கோம்.. போட்டு கொடுத்திடுவீங்க போலிருக்கே.. அவ்...அவ்.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
நன்றி காதலே. இல்லை இல்லை கவியே. //

அண்ணே என்ன சொல்லிட்டு, நீங்க... சரி சரி வீட்ல இருக்கீங்களா...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அட்டெண்டன்ஸ் ப்ளீஸ்..

ஃபார் கும்மி../

வாங்க வாங்க.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
அண்ணே இமயமலை கூட மோதற அளவுக்கு எனக்கு வளு இல்லை...

நாங்க சாதாரணமானவங்க... என்னைப்போய்...

வேணாம் அழுதுடுவேன்... அவ்...

தோடா தோடா=))

vasu balaji said...

சே. கொஞ்சமே கொஞ்சம் மாத்தி

கும்மிக்கு
ஆளின்றி
தம்பி ஜூட்
ஆள் வந்ததும்
அம்பாய்
வருவேன்! //

அண்ணே இது...

எப்படிங்க அண்ணே...//


ஹி ஹி. நீங்க எழுதினது தானே=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ஏன் இந்த கொலை வெறி... எதோ நாங்க ஜாலியா இங்க கும்மி அடிச்சு கிட்டு இருக்கோம்.. போட்டு கொடுத்திடுவீங்க போலிருக்கே.. அவ்...அவ்./

ஆஹா. நம்பீட்டம்ல.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே என்ன சொல்லிட்டு, நீங்க... சரி சரி வீட்ல இருக்கீங்களா.../

அய்யோ. முடியல சாமி.=))

passerby said...

உங்களுடைய முடிவுதான் என்ன? ஆங்கிலம் அலுவல் பணியில் இருக்கக்கூடாதென்பதா?

பலமானிலங்களில் இல்லை. தமிழக அரசுப்பணியில் இல்லை.

தனியார்துறை மட்டும் வைத்திருக்கிறது. மற்றும், மத்திய ஆட்சிப்பணியிலும் உண்டு அவர்கள் பிற மானிலங்களிடன் கடிதப்போக்குவர்த்து செய்வதற்காக்.

நகைச்சுவை என்று பார்த்தால் மட்டுமே உங்கள் பதிவை இரசிக்கமுடியும். மற்றபடி அபத்தம்.

ஆங்கிலத்தைத் தமிழைவிட சிறப்பாக தெளிவாக எழுத முடியும். ஒரு சிலர் குழப்புகிறார்கள் என்றால் மொழியே பழிக்கப்படுவதா?

vasu balaji said...

கள்ளபிரான் said...

/உங்களுடைய முடிவுதான் என்ன? ஆங்கிலம் அலுவல் பணியில் இருக்கக்கூடாதென்பதா?/

இல்லைங்க. ஒரு சாதாரண கடிதம். சொல்ல வந்த விஷயம் புரிகிறார்போல் இருக்குமாயின், அதில் பரீட்சை பேப்பர் திருத்துகிறார்போல் திருத்தி, வேறு உருவகம் தருவதால் கால விரயமேயன்றி வேறில்லை.

/பலமானிலங்களில் இல்லை. தமிழக அரசுப்பணியில் இல்லை./

தேவைக்கேற்ப ஆங்கிலப் பயன்பாடும் உண்டு.
/தனியார்துறை மட்டும் வைத்திருக்கிறது. மற்றும், மத்திய ஆட்சிப்பணியிலும் உண்டு அவர்கள் பிற மானிலங்களிடன் கடிதப்போக்குவர்த்து செய்வதற்காக்./

தனியார் கம்பெனிகளில் ஆங்கிலம் இருக்கிறது. ஆனால் அது, அரசுத் துறை ஆங்கிலத்தை விட மோசமாக இருப்பதை என்னால் சுட்ட முடியும். அது நோக்கமல்ல. தென்னிந்தியா தவிர இதர மானிலங்களிலிருந்து, மத்திய அரசு கடிதமும் இந்தியில் தான் இருக்கும். காரணம் ஆட்சி மொழி. ஆங்கிலம் இரண்டாவது ஆட்சி மொழி என்பதுதான்.

/நகைச்சுவை என்று பார்த்தால் மட்டுமே உங்கள் பதிவை இரசிக்கமுடியும்./

நன்றி. லேபிலில் நகைச்சுவை என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.

/மற்றபடி அபத்தம்./

வேறு எந்தக் கருத்தும் நான் சொல்லாத போது அந்த மற்றபடிக்கு நான் பொருப்பாளன் அல்லன்.

/ஆங்கிலத்தைத் தமிழைவிட சிறப்பாக தெளிவாக எழுத முடியும். /

தமிழிலும் ஆங்கிலத்தை விட மிகச் சிறப்பாக எழுத முடியும். ஆயின் ஒபாமாவுக்கு எழுதும் கடிதத்தில் என் புலமையைக்காட்டி என்ன பயன் என்பது தான் முக்கியம்.

/ஒரு சிலர் குழப்புகிறார்கள் என்றால் மொழியே பழிக்கப்படுவதா?/

தயவு செய்து எங்கேயாவது மொழி பழிக்கப் பட்டிருக்கிறதா என்று சுட்ட முடியுமா? எனக்குத் தெரிந்த வரையில் நான் மொழியைக் குறை கூறவில்லையே?

நசரேயன் said...

உங்க ௬ட நானும் இருக்கேன்

அது சரி(18185106603874041862) said...

//
மத்திய அரசு அலுவலகங்களில் இந்த ஆங்கிலம் படுத்தும் பாடு இருக்கிறதே. வெள்ளைக்காரன் போகும்போது விட்டுச் சென்றது ஆங்கிலமும் பந்தாவும். வெள்ளைக்காரனுக்கு பந்தா இருக்கிறதோ இல்லையோ. நம்மாளுங்க அத வெச்சிக்கிட்டு படுத்துற பாடு இருக்கே. பெரும்பாலும் வி.எஸ். ராகவன் மாதிரி தமிழ்ல சொல்லி திரும்ப இங்கிலீஷ்ல தப்பா சொல்லின்னு அது பெரிய கூத்து.
//

:0))))

As an irony....I am commenting in English :0)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்....

பழமைபேசி said...

நல்லா இருந்திச்சுங்க பாலாண்ணே!

தமிழ் நாடன் said...

இவங்களை எல்லாம் தமிழ்ல ரெண்டு பத்தி ஒழுங்க அடிக்க சொல்லுங்க. அதுவும் இந்த லட்சனம்தான். ஆனா ஆங்கிலத்தை புடுச்சிகினு தொங்கோ தொங்குன்னு தொங்குவாங்க!

எதுல எழுடதனாலும் அடுத்தவனுக்கு புரியற மாதிரி எழுதனும். அதுதான் நீங்க சொல்ல வந்தது. அதுவும் நம்ம ஆளுங்களுக்கு புரிய மாட்டேங்குது.என்ன பன்னுறது?

புலவன் புலிகேசி said...

இவங்களுக்கெல்லாம் ஒரு மொழியும் ஏன் நம்ம தாய்மொழியும் கூட ஒழுங்கா பேசவோ எழுதவோ தெரியாது...

வெண்ணிற இரவுகள்....! said...

நம் மக்கள் பகட்டிற்கு அடிமை ஆகி விட்டார்கள் என்ன சொல்ல தலைவரே ...............
ஒரு ஆங்கிலேயனாவது தமிழ் பேசுவானா?????? சொல்லுங்கள் நம் அவன் மொழி படிக்கிறோம் நாமே சிறந்தவர்கள்?????? நம் மக்களுக்கு இளநீர் பிடிக்காது coke பிடிக்கும்

vasu balaji said...

நசரேயன் said...

/உங்க ௬ட நானும் இருக்கேன்/

நன்றி நசரேயன்.

vasu balaji said...

அது சரி said...
/:0))))

As an irony....I am commenting in English :0)))/

அது என்னமோ இங்கிலீசு பழமொழி சொல்லுவாங்களே ஸார். when you are in rome be a roman( ஐ எனக்கும் இங்கிலீசு பழமொழி அரைகுறையா தெரியுது)அதனால இங்கிலாந்தில் இருந்துண்டு இங்கிலீசு பின்னூட்டம் சரிதான்=))

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/கலக்கல்..../

நன்றி சார்

vasu balaji said...

பழமைபேசி said...

/நல்லா இருந்திச்சுங்க பாலாண்ணே!/

நன்றி பழமை.

vasu balaji said...

தமிழ் நாடன் said...

/அதுதான் நீங்க சொல்ல வந்தது. அதுவும் நம்ம ஆளுங்களுக்கு புரிய மாட்டேங்குது.என்ன பன்னுறது?/

புரிய வைக்க முயற்சிக்கலாம். வேற என்ன பண்றது? நன்றி தமிழ் நாடன்.

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/இவங்களுக்கெல்லாம் ஒரு மொழியும் ஏன் நம்ம தாய்மொழியும் கூட ஒழுங்கா பேசவோ எழுதவோ தெரியாது.../

ம்ம். நன்றி புலிகேசி.

thiyaa said...

கலக்கலான பதிவு

vasu balaji said...

வெண்ணிற இரவுகள்....! said...

/ஒரு ஆங்கிலேயனாவது தமிழ் பேசுவானா?????? சொல்லுங்கள் /

பேசுவான். ஆனால் அதுதான் பெருமை என்று பேசமாட்டான் என நினைக்கிறேன்.

நன்றி கார்த்திக்.

cheena (சீனா) said...

அன்பின் பாலா

அருமையான நகைச்சுவை

ரசித்தேன்

ஆபீஸ்லே மேலெ இருககறவன் - நீங்கள்ளாம் சயிண்டிஸ்டுங்கய்யா - கம்பியூட்டர்ல கலக்குவீங்க ஆனா ஒரு லெட்டர் இங்கிளீஷ்ல எழுடஹ் தெரியாதும்பாரு - நாஙக பவ்யமா வாட் இஸ் டூ பீ கன்வேய்ட் இஸ் கன்வேய்ட் சார் - இங்கிலீஷ் இஸ் நாட் அவர் மதர் டங் சார் ன்னு சொல்வோம் - போய் ஒழிங்கையாம்பார்

ஹா ஹா ஹா நல்ல நகைச்சுவை எகைய்ன் நல்வாழ்த்துகள் பாலா

ரோஸ்விக் said...

நம்ம என்ன ஆங்கில இலக்கிய எழுத்தாளராவா இருக்கோம்?....சீனா ஐயா சொல்றமாதிரி...மெசேஜ் ஹாஸ் டூ பி கன்வேய்டு...தட்ஸ் இட். :-)

பின்னோக்கி said...

லெட்டர் அடிக்க ஒரு நாளா ?. பயங்கர ஸ்பீடுதான். நீங்க டிஸ்கி போட்டாலும், யார் அந்த மேலதிகாரின்னு எங்களுக்கு தெரியும். :)

vasu balaji said...

cheena (சீனா) said...

/அன்பின் பாலா


ஹா ஹா ஹா நல்ல நகைச்சுவை எகைய்ன் நல்வாழ்த்துகள் பாலா/

நன்றி சார்.

vasu balaji said...

ரோஸ்விக் said...

/நம்ம என்ன ஆங்கில இலக்கிய எழுத்தாளராவா இருக்கோம்?....சீனா ஐயா சொல்றமாதிரி...மெசேஜ் ஹாஸ் டூ பி கன்வேய்டு...தட்ஸ் இட். :-)/

நாம இலக்கியம் எழுதினாலும் படிக்கிறவன் இலக்கியவாதியா இருக்க வேணாமா?=))

Unknown said...

தலைவா... அந்த லெட்டர் ப்ராசெஸ் ஆச்சா இல்லையா...

S.A. நவாஸுதீன் said...

//நான் எழுதி கொண்டு வந்ததை திரும்ப டிக்டேஷன் கொடுத்தா க்ராமர் வந்துடுமா? என்ற படி வெளியே வந்தேன். //

அப்ப அந்தாள் மூஞ்சு போன போக்க கொஞ்சம் சொல்லி இருக்கலாம் சார் நீங்க

vasu balaji said...

பின்னோக்கி said...

/லெட்டர் அடிக்க ஒரு நாளா ?. பயங்கர ஸ்பீடுதான். நீங்க டிஸ்கி போட்டாலும், யார் அந்த மேலதிகாரின்னு எங்களுக்கு தெரியும். :)/

லெட்டர் அடிக்க இல்லை. டிக்டேட் பண்ண;)). டிஸ்கில நானே டைப் பண்ணிப்பேன்னு சொல்லிட்டேனில்ல.

vasu balaji said...

பேநா மூடி said...

/தலைவா... அந்த லெட்டர் ப்ராசெஸ் ஆச்சா இல்லையா.../

அதான் அனுப்பியாச்சே. அதோட விதி முடிஞ்சது=))

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...
/அப்ப அந்தாள் மூஞ்சு போன போக்க கொஞ்சம் சொல்லி இருக்கலாம் சார் நீங்க/

=))

vasu balaji said...

தியாவின் பேனா said...

/ கலக்கலான பதிவு/

நன்றி தியா

ஜிஎஸ்ஆர் said...
This comment has been removed by the author.
ஜிஎஸ்ஆர் said...

நண்பரே அருமையான நடை மிகவும் ரசித்து சிரித்தேன்.

(நான் பொதுவாக யாருக்கும் பின்னூட்டம் இடுவதில்லை உங்கள் வலைத்தளம் படித்ததும் பின்னூட்டம் வழியாக உங்களை பாராட்டவேனுமென்ற எண்ணம் வருவதை தவிர்க்க இயலவில்லை)

வாழ்க வளமுடன்
வளர்க உமது எழுத்துபணி

என்றும் அன்புடன்
ஞானசேகர்

vasu balaji said...

ஜி எஸ் ஆர் said...

/ நண்பரே அருமையான நடை மிகவும் ரசித்து சிரித்தேன்.

(நான் பொதுவாக யாருக்கும் பின்னூட்டம் இடுவதில்லை உங்கள் வலைத்தளம் படித்ததும் பின்னூட்டம் வழியாக உங்களை பாராட்டவேனுமென்ற எண்ணம் வருவதை தவிர்க்க இயலவில்லை)

வாழ்க வளமுடன்
வளர்க உமது எழுத்துபணி

என்றும் அன்புடன்
ஞானசேகர்/

தங்கள் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கிறது. நன்றி ஞானசேகர்.

சுண்டெலி(காதல் கவி) said...

என்னுடைய பதிவிற்கு வருகை தந்ததற்கு நன்றி.வெர்ட் வெரிஃபிகேசன் எப்படி செய்வது..திரட்டியில் இடுவது எப்படி என்று விளக்க(உதவ) முடியுமா?

சுண்டெலி(காதல் கவி) said...

என்னுடைய பதிவிற்கு வருகை தந்ததற்கு நன்றி.வெர்ட் வெரிஃபிகேசன் எப்படி செய்வது..திரட்டியில் இடுவது எப்படி என்று விளக்க(உதவ) முடியுமா?

மின்னஞ்சல்..kadhalkavi@gmail.com

முனைவர் இரா.குணசீலன் said...

வாழ்வியல் எதார்த்தத்தை மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்...

vasu balaji said...

முனைவர்.இரா.குணசீலன் said...

/வாழ்வியல் எதார்த்தத்தை மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.../

நன்றிங்க.