Tuesday, November 10, 2009

விதியை எள்ளும் விதி!

வணக்கம்பா! நல்லாருக்கியா. என்ன தெரியுதா என்றபடி வந்தார் ரிடையரான என் சீனியர். வாங்க‌ சார். உட்காருங்க‌ என்று அம‌ரச் செய்து ஏதாவ‌து உத‌வ‌ முடியுமா என்றேன். பெரிய‌ உத‌வி ப‌ண்ண‌ணும்பா. ரொம்ப‌ புண்ணிய‌மா போகும் என்றார். அதுக்கென்ன சார் பண்ணா போச்சு என்று வாய் விட்டு விட்டேன், வேதாளம் கேட்கும் கேள்வி வருமெனெத் தெரியாமல்.

கிருஷ்ணன்* தெரியுமில்லையாப்பா. அவர் இறந்து 6 மாசமாச்சிப்பா. அவங்க மனைவியும் 5 வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க. 3 பசங்க 2 பெண் அவருக்கு. 3வது பையனுக்கு 47 வயசாதுப்பா. M.A.படிச்சிட்டு ஒரு கம்பெனில வேல செஞ்சிட்டிருந்தாம்பா. இவுங்க முதலியாரு. கூட வேலை செஞ்சிட்டிருந்த ஒரு செட்டியார் பொண்ண லவ் பண்ணிட்டாம்பா.எவ்ளோ சொல்லி பார்த்தாங்க. புடிவாதமா இருந்தான். அவுங்கம்மா சூசைட் பண்ணிக்கப் போய் காப்பாத்த பட்ட பாடு பெரும்பாடா போச்சி. ஒழிஞ்சி போடான்னு விட்டிருக்கலாம்.

இவங்களும் ஒத்துக்கல. மென்டலாய்ட்டான். அடிக்கறது, உடைக்கறதுன்னு பெரிய தலவலியாய்டிச்சி. அவங்களும் கோயில்,குளம், பரிகாரம்னு என்னல்லாமோ பண்ணிட்டாங்க. கலியாணமானா சரியாய்டும்னு ஒரு ஜோசியன் சொன்னான்னு ஜாதகம் பார்த்து, ஒரு ஏழை பெண்ணை கலியாணம் பண்ணாங்க. ஒரு 2 மாசம் நல்லா இருந்தாம்பா. அந்த பொண்ணும் உண்டாயிடுச்சி.

அப்புறம் பழையபடி முரடனாய்ட்டான். கீழ்பாக்கம் ஆசுபத்திரிலதான் இருந்தான் கிட்ட கிட்ட 12 வருஷம். நல்லாயிட்டான்னு டிஸ்சார்ஜ் பண்ணாங்க. வந்து 3 மாசம் நல்லா இருந்தான். இரண்டாவது குழந்தை உண்டாச்சி. ஒரு கடை வெச்சி குடுத்தாங்க. திடீர்னு முன்ன விட மோசமா மென்டலாய்ட்டான். அப்போல இருந்து கீழ்பாக்கத்துலதாம்பா இருக்கான். குணமாவாதுன்னுட்டாங்க. கை, கால் அவுத்து விட்டா காயம் பண்ணிக்கிறது, யாராவது கிட்ட இருந்தா அடிக்கிறதுன்னு ரொம்ப மோசமாயிடுச்சிப்பா.

அந்தப் பொண்ணுக்கு யாரும் இல்லை. 2 பேரன் பேத்திங்க, இந்தம்மா எல்லாம் இவரு கூடதான் இருந்தாங்க. அவரும் போய் சேர்ந்துட்டாரு. அண்ணன் தம்பிங்க வீட்ட வித்து காசு தரோம்னு கையெழுத்து வாங்கிகிட்டு விரட்டி விட்டானுங்க. ஆதரவில்லாம நிக்குது. மென்டல் டிஸார்டர் இருக்கிற பையன்னா பென்ஷன் கிடைக்குமாமே. பார்த்து ஹெல்ப் பண்ணுப்பான்னாரு.

நோண்டி நொங்கெடுத்து பார்த்துட்டேன். கலியாணமான பையனுக்கு மென்டல்னா பென்ஷன் குடுக்க வழியே இல்லை. கடவுள் எழுதுன விதியே சரியில்லையே. மனுஷன் எழுதினது சரியாவா இருந்துடும். பாருப்பா பாருப்பாங்கறாரு. என்ன பண்ணாலும் வழியே இல்லைங்க. நான் என்னங்க பண்ண? 

பைத்தியம் புடிக்கிற அளவுக்கு லவ் இருக்கிற பரதேசின்னா யாரோ ஒரு பொண்ண கட்டினப்ப புள்ள குடுக்க மட்டும் ல‌வ் போய்டுமா? மென்டலானாலும் பரவால்ல ஜாதிதான் முக்கியம்னு ஒரு ஏழைப் பெண் வாழ்க்கையும் நாசமாக்கிட்டாரே பாவி மனுஷன். அதோட சேர்ந்து 2 குழந்தைகளும் தெருவில நிக்குது. பெத்தவங்க, தம்பியால ஒரு குடும்பம் வீதில நிக்கறது கூட உறைக்காம சொத்துக்கு ஆட்டைய போட்ட நாய்ங்க நாசமா போகாதான்னு கோவம் வந்துச்சி.

எல்லாரும் உன்னதாம்பா கை காட்டினாங்க. அதான் உங்கிட்ட வந்தேன். நீ முடியாது வழியில்லைன்னா அது ஃபைனல்னு சொன்னாங்கப்பா. நம்ம பையனாச்சா அதான் நேரிலயே வரலாம்னு வந்தேன். அதுங்க விதி அப்புடின்னா நாம என்ன பண்ண என்று தளர்ந்து கிளம்பியபோது இயலாமையில் என் மீதே கோபம் வந்தது.

கடவுளுக்கு என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை. மனதிற்குள் வண்டாய் இந்த இயலாமை குடைய அமர்ந்திருக்க, சலூன் ஸ்ப்ரே வாசனையோடு ஹேர்டூவும், லிப்ஸ்டிக்கும் நுனிநாக்கு தங்கிலிஷூமாய் வந்தார் ஒரு அம்மணி.

யூர் மிஸ்டர் மண்ணாங்கட்டி*. ஐம் சுப்ரஜா. ஐம் 57 நவ். மை ஃபாதர் வாஸ் எ ரிடையர்ட் புண்ணாக்கு. மை மதர் பாஸ்ட் அவே 5 இயர்ஸ் பேக். ஐம் தி ஒன்லி டாடர். மை ஹஸ்பன்ட் வாஸ் எ ஜெனரல் மானேஜர் இன் (பெரிய கம்பெனிங்க). ஹி டூ பாஸ்ட் அவே 2 இயர்ஸ் பேக். தென் மை சன் ஹூ இஸ் ஒர்க்கிங் இன் ஸ்டேட்ஸ் டுக் மீ தேர், நீ ஏம்மா தனியா இங்க இருக்கன்னு.

லாஸ்ட் மந்த் ஃபாதர் தவறிட்டார். இனிமே இங்க என்ன இருக்கு? கொஞ்சம் ப்ராபர்ட்டி எல்லாம் செட்டில் பண்ண வேண்டி இருக்குன்னு ஐ ஸ்டேய்ட் பேக். ஃப்யூன்ரலுக்கு வந்திருந்த அப்பாவோட ஃப்ரெண்ட் சொன்னார். சின்ஸ் யூர் ய விடோ நவ், யூர் எலிஜிபிள் ஃபார் அப்பா'ஸ் பென்ஷன்மான்னுட்டு.ஹி டோல்ட் மி டு கான்டாக்ட் யுர் ஆஃபீஸ், வில் யூ ஹெல்ப் மி அவுட் மிஸ்டர் மண்ணாங்கட்டி*ன்னுச்சி.

என்ன பண்ண விதி சார் விதி. அட அலுவலக விதியத்தான் சார் சொன்னேன். நீங்க வேலை செஞ்சிட்டிருந்தீங்களா? பென்ஷன் ஏதாவது வாங்கறீங்களா என்றேன். நோ சார், ஐ நெவர் வர்க்ட் பிகாஸ் தேர் வாஸ் நோ நீட் டுன்னிச்சி. அந்தாளு பென்ஷன் பேப்பர்ல பார்த்தா இந்தம்மா பேரு இருக்கு, கலியாணம் கட்டின பொண்ணுன்னு.

எந்த நாய்க்கு ஹெல்ப் பண்ணவோ ரூல் போட்டிருக்கான் சார். கட்டி குடுத்த பொண்ணுன்னாலும் விதவையானா அவங்க கோடீசுவரியா இருந்தாலும், புள்ள பில்கேட்ஸா இருந்து கூடவே வெச்சி பார்த்தாலும், அப்பனோ, ஆயியோ பென்ஷன் வாங்கிட்டிருந்து டிக்கட் வாங்கிட்டா அம்மா வூட்டுக்கு திரும்பி வந்துட்டதால (விதவையானா அம்மா ஊட்டுக்கு வந்துடுவாங்கன்னு எந்த நாயி சொல்லிச்சோ) பென்ஷன் உண்டுன்னு. அப்பன் ஆத்தா போனப்புறம் அம்மா ஊடுன்னு ஒன்னு ஏதுங்க?

ஒரு செட் ஃபார்ம் குடுத்து, எல்லாம் நிரப்பி கொண்டு வந்து கொடுங்கம்மா. பென்ஷன் வரும்னேன். ஊஊஊஊ. தேங்க் யூ சோ மச். இஃப் யூ டோன் மைன்ட் ஹவ் மச் வில் ஐ கெட்? இட்ஸ் நாட் த மனி தட் மேட்டர்ஸ் (அப்புறம் எதுக்குடி கேட்ட) இட்ஸ் ஆல் அபவுட் சென்டிமென்டல் அட்டாச்மென்ட்(ங்கொய்யாலே. அப்பன் கட்டுன வீட்ட வித்து காசாக்கி பேங்க்ல போட்டுட்டு அட்டாச்மென்ட்டா). பைல்ஸ்ல பச்சை மிளகாய் அரைச்சி தடவினா மாதிரி இருந்திச்சி. குத்து மதிப்பா மாசம் சுமார் இருவந்தஞ்சாயிரம் வரும்னேன்.

இதுக்காகவே எமன் வந்து கூப்டாலும் சாவமாட்டன்டா நானுன்னு ஒரு சந்தோசம் மூஞ்சில தெரிய, ப்ச்.அப்பாவே போய்ட்டாரு, இது வந்து என் துக்கம் தீந்துடுமாங்கற குரல்ல‌ தட்ஸ் நாட் எ பேட் அமவுன்ட் (அட பன்னாடயே. மாசம் ஃபுல்லா உழைச்சாலும் பாதி பேத்துக்கு இந்த சம்பளம் வராதுடி) இன் ஃபேக்ட் இட்ஸ் கொய்ட் எ டீசன்ட் அமவுன்ட்டுன்னு போச்சி.

ரொம்பப் பாவமா, அடுத்த வேளை சோத்துக்கில்லாம நிர்கதியா நிக்கிற குடும்பத்துக்கு உதவ சட்டமில்லை. அமெரிக்கால கோடில புரண்டாலும், பாழாப்போற சமூக மூட நம்பிக்கையை ஆதாரமா வெச்சி தேவையே இல்லாதவங்களுக்கு மேல மேல காசு. ஆம்பிளையா பொறக்கறதும், அரசுத் துறையில வேலை செய்யிறதும் அம்புட்டு சுலபமில்லீங்கோவ். இந்த மாதிரி சில நாள்ள மனசாட்சி இருக்கிறவன்னா கொலக்குத்தம் பண்ணவன் மாதிரி தின்ன தூங்க முடியாதுங்கோவ்.

(ஹி ஹி. உண்மைச் சம்பவம்னா பேரு மறைச்சி போடணும்னு எழுதப் படாத சட்டம் இருக்குங்களே. மீற முடியுமா? அதான் என் பேரு மண்ணாங்கட்டி)

72 comments:

மாதேவி said...

"இதுக்காகவே எமன் வந்து கூப்டாலும் சாவமாட்டன்டா நானுன்னு ஒரு சந்தோசம் மூஞ்சில தெரிய",

நன்கு அசத்திவிட்டீர்கள்.

vasu balaji said...

/ மாதேவி said...

"இதுக்காகவே எமன் வந்து கூப்டாலும் சாவமாட்டன்டா நானுன்னு ஒரு சந்தோசம் மூஞ்சில தெரிய",

நன்கு அசத்திவிட்டீர்கள்./

நன்றிங்க

இராகவன் நைஜிரியா said...

இதனாலத்தான் அரசாங்க சட்டம் நம்பர் சொல்லும் போது விதி என்று சொல்லுகின்றார்களா?

இராகவன் நைஜிரியா said...

// வணக்கம்பா! நல்லாருக்கியா. என்ன தெரியுதா என்றபடி வந்தார் ரிடையரான என் சீனியர். //

அப்ப நீங்க சீனியர் இல்லையா?

இராகவன் நைஜிரியா said...

// வேதாளம் கேட்கும் கேள்வி வருமெனெத் தெரியாமல்.//

இதெல்லாம் நமக்கு புதுசா என்ன? அப்ப அப்ப மாட்டிகிடறதுதானே?

ஈரோடு கதிர் said...

மிஸ்டர்... மண்ணாங்கட்டி.... யூ எக்ஸ்பிரஸ்(அட... ட்ரெய்ன் இல்லங்க)டு யுவர் ஃபீல். இட்ஸ் வெரி நைஸ், ஐ லைக் இட் வெரி மச்... இஃப் யூ டோண்ட் மைண்ட், ரெகுலர்லி ஐ ஏம் புட்டிங் கமெண்ட்ஸ் டு யூ, கேன் ஐ கெட் எனி டென்சன் ஆர் பென்சன்!!! பார் இட்....

ஆரூரன் விசுவநாதன் said...

நகைச்சுவை ரசிக்கும்படி இருப்பினும்.......சில முட்டாள்கள் ஏன் இப்படியெல்லாம் சட்டம் வைத்தார்கள் எனும் போது எரிச்சலாயும் வருகிறது..


எழுத்து நடையும், சொல்லவந்த கருத்தும் அருமை......

அன்புடன்
ஆரூரன்

இராகவன் நைஜிரியா said...

/கலியாணமானா சரியாய்டும்னு ஒரு ஜோசியன் சொன்னான் //

ஜோசியன் சொல்றவங்களுக்கு வேற வேலையில்லை போலிருக்கு...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/இதனாலத்தான் அரசாங்க சட்டம் நம்பர் சொல்லும் போது விதி என்று சொல்லுகின்றார்களா?/

அண்ணே வாங்க.:)). ஆமாங்க

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/அப்ப நீங்க சீனியர் இல்லையா?/

அது இருப்பான்க்கண்ணே அம்பது பேரு சீனியருன்னு:))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said..

/இதெல்லாம் நமக்கு புதுசா என்ன? அப்ப அப்ப மாட்டிகிடறதுதானே?/

நித்திய கண்டம்ணே.

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

/கேன் ஐ கெட் எனி டென்சன் ஆர் பென்சன்!!! பார் இட்..../

யூ கெட் மென்சன் இன் மை பின்னூட்ஸ்கு பின்னூட்ஸ் தட்ஸ் ஆல்.=))

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/இப்படியெல்லாம் சட்டம் வைத்தார்கள் எனும் போது எரிச்சலாயும் வருகிறது..


எழுத்து நடையும், சொல்லவந்த கருத்தும் அருமை......
/

ஆமாங்க ஆரூரன். நன்றிங்க

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/ஜோசியன் சொல்றவங்களுக்கு வேற வேலையில்லை போலிருக்கு.../

மனசாட்சி இல்லாத கம்னாட்டிங்க

S.A. நவாஸுதீன் said...

நல்ல நகைச்சுவையோடு இந்த இடுகை அமைந்தாலும் அந்த அம்மாவைப்பற்றிய கவலைதான் எனக்கு மேலோங்கியிருக்கு சார்.

நாகா said...

சங்கடமா இருக்குங்கைய்யா..

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/நல்ல நகைச்சுவையோடு இந்த இடுகை அமைந்தாலும் அந்த அம்மாவைப்பற்றிய கவலைதான் எனக்கு மேலோங்கியிருக்கு சார்./

ம்ம்

vasu balaji said...

நாகா said...

/சங்கடமா இருக்குங்கைய்யா../

நெறய கண்றாவி இருக்குங்க இப்படி.

கலகலப்ரியா said...

விதி...!

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ விதி...!/

ம்ம்ம்

நிஜாம் கான் said...

//பைத்தியம் புடிக்கிற அளவுக்கு லவ் இருக்கிற பரதேசின்னா யாரோ ஒரு பொண்ண கட்டினப்ப புள்ள குடுக்க மட்டும் ல‌வ் போய்டுமா? மென்டலானாலும் பரவால்ல ஜாதிதான் முக்கியம்னு ஒரு ஏழைப் பெண் வாழ்க்கையும் நாசமாக்கிட்டாரே பாவி மனுஷன். அதோட சேர்ந்து 2 குழந்தைகளும் தெருவில நிக்குது. //

அண்ணே! இது போல ஜாதிக்காக நாசமாய்ப் போன குடும்பங்கள் லட்சோபலட்சம். நீங்க சொல்லியிருக்கிறது அதில் ஒன்னுண்ணே!

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/அண்ணே! இது போல ஜாதிக்காக நாசமாய்ப் போன குடும்பங்கள் லட்சோபலட்சம். நீங்க சொல்லியிருக்கிறது அதில் ஒன்னுண்ணே!/

ஆமாங்க. என்னாத்த சாதிச்சாங்களோ தெரியல.

இராகவன் நைஜிரியா said...

// அப்புறம் பழையபடி முரடனாய்ட்டான். கீழ்பாக்கம் ஆசுபத்திரிலதான் இருந்தான் கிட்ட கிட்ட 12 வருஷம். //

ஒரு மாமாங்கம் கழிச்சு, நல்லாயிட்டான்னு விட்டுடாங்களா.. உருப்பட்ட மாதிரிதான்.

பிரபாகர் said...

பைல்ஸ் பச்ச மிளகாய்.... என்னங்கையா பண்றது. விதி. இந்த மாதிரி வேதனைப்படத்தான் நம்மால முடியும்.

பிரபாகர்.

இராகவன் நைஜிரியா said...

// அண்ணன் தம்பிங்க வீட்ட வித்து காசு தரோம்னு கையெழுத்து வாங்கிகிட்டு விரட்டி விட்டானுங்க. //

உலகத்திலேயே ரொம்ப கொடுமையான விசயம் இதுதானுங்க..

இராகவன் நைஜிரியா said...

// பைத்தியம் புடிக்கிற அளவுக்கு லவ் இருக்கிற பரதேசின்னா யாரோ ஒரு பொண்ண கட்டினப்ப புள்ள குடுக்க மட்டும் ல‌வ் போய்டுமா? //

சரியான கேள்வி.. யாருக்கும் பதில் தெரியாதுங்க.

இராகவன் நைஜிரியா said...

// மனதிற்குள் வண்டாய் இந்த இயலாமை குடைய அமர்ந்திருக்க, சலூன் ஸ்ப்ரே வாசனையோடு ஹேர்டூவும், லிப்ஸ்டிக்கும் நுனிநாக்கு தங்கிலிஷூமாய் வந்தார் ஒரு அம்மணி. //

இங்க தாங்க உங்க விதி (ஐ மீன் தலைவிதி) விளையாடியிருக்கு.

இராகவன் நைஜிரியா said...

// நீ ஏம்மா தனியா இங்க இருக்கன்னு. //

இத தங்கிலீஷில் சொல்ல வரவில்லை போலிருக்கு

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ஒரு மாமாங்கம் கழிச்சு, நல்லாயிட்டான்னு விட்டுடாங்களா.. உருப்பட்ட மாதிரிதான்./

அதுவும் ஜெயில் மாதிரி தானுங்களே. நன்னடத்தைன்னா விட்டுடுவானுங்க.

vasu balaji said...

பிரபாகர் said...

/பைல்ஸ் பச்ச மிளகாய்.... என்னங்கையா பண்றது. விதி. இந்த மாதிரி வேதனைப்படத்தான் நம்மால முடியும்./

அவ்வளவுதான் முடியும்.

இராகவன் நைஜிரியா said...

// பைல்ஸ்ல பச்சை மிளகாய் அரைச்சி தடவினா மாதிரி இருந்திச்சி. குத்து மதிப்பா மாசம் சுமார் இருவந்தஞ்சாயிரம் வரும்னேன். //

இது... என்னா பண்றது.. அரசாங்க விதியாச்சே..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/இங்க தாங்க உங்க விதி (ஐ மீன் தலைவிதி) விளையாடியிருக்கு./

அப்புடிதாங்க நொந்துகிட்டேன்,.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said..

/இது... என்னா பண்றது.. அரசாங்க விதியாச்சே../

கிழவன் சீக்காயி 3 மாசம் பென்ஷன் வாங்க போகலைன்னா க்ளோஸ் பண்ணி அலய வுடுவான் பேங்க்ல. இந்த க்ரீன் கார்ட் கேசுங்க 5 வருஷமானாலும் வராம பென்ஷன் வாங்குவாங்க. டெபாசிட் பண்ற வேலை .

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/ஒரு மாமாங்கம் கழிச்சு, நல்லாயிட்டான்னு விட்டுடாங்களா.. உருப்பட்ட மாதிரிதான்./

அதுவும் ஜெயில் மாதிரி தானுங்களே. நன்னடத்தைன்னா விட்டுடுவானுங்க. //

இது எப்படி உங்களுக்கு தெரியும்? :-)

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said..

/இது... என்னா பண்றது.. அரசாங்க விதியாச்சே../

கிழவன் சீக்காயி 3 மாசம் பென்ஷன் வாங்க போகலைன்னா க்ளோஸ் பண்ணி அலய வுடுவான் பேங்க்ல. இந்த க்ரீன் கார்ட் கேசுங்க 5 வருஷமானாலும் வராம பென்ஷன் வாங்குவாங்க. டெபாசிட் பண்ற வேலை . //

இவங்க லைப் சர்டிபிகேட் வருஷா வருஷம் கொடுக்க வேண்டாமா?

இராகவன் நைஜிரியா said...

//(ஹி ஹி. உண்மைச் சம்பவம்னா பேரு மறைச்சி போடணும்னு எழுதப் படாத சட்டம் இருக்குங்களே. மீற முடியுமா? அதான் என் பேரு மண்ணாங்கட்டி) //

தமிழனாச்சே.. அதனால இதுதான் உண்மைப் பேரு.. மத்ததெல்லாம்.. மத்தவங்களுக்காக..

இராகவன் நைஜிரியா said...

// எல்லாரும் உன்னதாம்பா கை காட்டினாங்க. //

அப்ப உங்க அலுவலகத்தில் கை காட்டி உடறவங்க நிறைய பேர் இருக்காங்கன்னு சொல்லுங்க

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/இது எப்படி உங்களுக்கு தெரியும்? :-)/

நம்ம ஸ்கூல் படிக்கிறப்ப நண்பனோட அப்பா அங்க நர்ஸ். அப்போ பார்த்திருக்கேன்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/இவங்க லைப் சர்டிபிகேட் வருஷா வருஷம் கொடுக்க வேண்டாமா?/

எம்பஸில வாங்கி அனுப்பிடுவாங்க.

க.பாலாசி said...

//அப்பன் ஆத்தா போனப்புறம் அம்மா ஊடுன்னு ஒன்னு ஏதுங்க?//

சரியா சொன்னீங்க. எல்லாம் இழந்தவங்களுக்கு ஒன்னும் கிடைக்காது. ஆனாபாருங்க எல்லாமிருக்கிறவங்களுக்கு பென்சனும் சேந்து கிடைக்கும்....வளர்ர பயிருக்கு தண்ணிகிடைக்காம வாடிக்கிடக்கிற வேளையில் விழலுக்கெதற்கு சட்டப்படி நீர் என்றுதான் புரியவில்லை.

vasu balaji said...

க.பாலாசி said...

/சரியா சொன்னீங்க. எல்லாம் இழந்தவங்களுக்கு ஒன்னும் கிடைக்காது. ஆனாபாருங்க எல்லாமிருக்கிறவங்களுக்கு பென்சனும் சேந்து கிடைக்கும்..../

அதுதான் பாலாசி தாங்க முடியாம வரும்.

வெண்ணிற இரவுகள்....! said...

ஐயா நகைச்சுவையுடன் சொன்னாலும் ஒரு வலி இருக்கிறதே.....உங்கள் அனுபவம் எங்கள் வயது

ரோஸ்விக் said...

அவ்வளவு நல்லவரா தலைவா நீங்க. எல்லோரும் உங்களையே கைய காட்டுறாங்க? :-)

உதவி செய்றதுக்கும் ஒரு மூஞ்சி வேணும். அது உங்ககிட்ட இருக்கு போல. இரு எதிர்பட்ட நிலைகளை சொல்லி நம்ம நடைமுறைய நக்கலாவும், ஆதங்கமாகவும் சொல்லி இருக்கீங்க. அருமை நண்பரே(ஐயா-னு சொல்லி வயச கூட்டக்கூடாது).

vasu balaji said...

வெண்ணிற இரவுகள்....! said...

/ஐயா நகைச்சுவையுடன் சொன்னாலும் ஒரு வலி இருக்கிறதே.....உங்கள் அனுபவம் எங்கள் வயது/

நன்றிங்க.

vasu balaji said...

ரோஸ்விக் said...

/எதிர்பட்ட நிலைகளை சொல்லி நம்ம நடைமுறைய நக்கலாவும், ஆதங்கமாகவும் சொல்லி இருக்கீங்க. அருமை நண்பரே(ஐயா-னு சொல்லி வயச கூட்டக்கூடாது)./

ஹி ஹி. நன்றி ரோஸ்விக்.

cheena (சீனா) said...

பைல்ஸிலே பச்ச மொளகா

ஆகா ஆகா - எவ்ளொ வெறுப்பு இருந்தா இம்மாம் பெரிய தண்டன கொட்க்கத் தோணும்


ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நல்வாழ்த்துகள்

thiyaa said...

சோகத்தையும் நகைச்சுவையுடன் கூறியது அருமை.

vasu balaji said...

cheena (சீனா) said...
/ ஆகா ஆகா - எவ்ளொ வெறுப்பு இருந்தா இம்மாம் பெரிய தண்டன கொட்க்கத் தோணும்


ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நல்வாழ்த்துகள்/

Helplessness Sir, என்ன பண்ண:(

vasu balaji said...

தியாவின் பேனா said...

/சோகத்தையும் நகைச்சுவையுடன் கூறியது அருமை./

வாங்க தியா. நன்றி.

vasu balaji said...

மீ த 50:))

சத்ரியன் said...

//ரொம்பப் பாவமா, அடுத்த வேளை சோத்துக்கில்லாம நிர்கதியா நிக்கிற குடும்பத்துக்கு உதவ சட்டமில்லை. அமெரிக்கால கோடில புரண்டாலும், பாழாப்போற சமூக மூட நம்பிக்கையை ஆதாரமா வெச்சி தேவையே இல்லாதவங்களுக்கு மேல மேல காசு.//

பா மரம் ,(சட்டத்தை மீறி ஒன்னும் செய்ய முடியாதுல்ல .அப்ப சொல்லலாம். தப்பில்ல.)

நம்ம நாட்டுல "படிச்ச நாய்கள்" தானே சாமி சட்டம் எழுதறான்ய்ங்க. அப்பறம் எப்புடி நிர்கதியானவங்களுக்கு கிடைக்குற மாதிரி எழுதச் சொல்றீங்க?. நீங்க அரசாங்க உத்தியோகத்துக்கு லாயக்கு இல்லாதவராத் தெரியிறீங்க. வேலைய உட்டு தூக்கிறலாமான்னு யோசிக்குறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சொல்லவந்த கருத்து அருமை

அன்புடன் மலிக்கா said...

உண்மைசொல்லக்கூடாது நல்ல மண்ணாங்கட்டி,,

அய்யா உங்களுக்கு என் பிளாக்கில் விருது வழங்கியிருக்கேன் வந்து பெற்றுக்கொள்ளவும்
http://kalaisaral.blogspot.com/2009/11/blog-post_10.html

vasu balaji said...

சத்ரியன் said...

/நீங்க அரசாங்க உத்தியோகத்துக்கு லாயக்கு இல்லாதவராத் தெரியிறீங்க. வேலைய உட்டு தூக்கிறலாமான்னு யோசிக்குறேன்./

அதாஞ்சரி. :)).

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/சொல்லவந்த கருத்து அருமை/

நன்றிங்க.

vasu balaji said...

அன்புடன் மலிக்கா said...

/உண்மைசொல்லக்கூடாது நல்ல மண்ணாங்கட்டி,,

அய்யா உங்களுக்கு என் பிளாக்கில் விருது வழங்கியிருக்கேன் வந்து பெற்றுக்கொள்ளவும்/

நன்றிங்க.

புலவன் புலிகேசி said...

//ரொம்பப் பாவமா, அடுத்த வேளை சோத்துக்கில்லாம நிர்கதியா நிக்கிற குடும்பத்துக்கு உதவ சட்டமில்லை. அமெரிக்கால கோடில புரண்டாலும், பாழாப்போற சமூக மூட நம்பிக்கையை ஆதாரமா வெச்சி தேவையே இல்லாதவங்களுக்கு மேல மேல காசு.//

இதத்தான் rich get richer poor get poor nu சொன்னாங்க..சூப்பரா சொன்னீங்க சார்.

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/இதத்தான் rich get richer poor get poor nu சொன்னாங்க..சூப்பரா சொன்னீங்க சார்./

சரியாச் சொன்னீங்க புலிகேசி. நன்றி.

Unknown said...

///தேங்க் யூ சோ மச். இஃப் யூ டோன் மைன்ட் ஹவ் மச் வில் ஐ கெட்? இட்ஸ் நாட் த மனி தட் மேட்டர்ஸ் (அப்புறம் எதுக்குடி கேட்ட) இட்ஸ் ஆல் அபவுட் சென்டிமென்டல் அட்டாச்மென்ட்(ங்கொய்யாலே. அப்பன் கட்டுன வீட்ட வித்து காசாக்கி பேங்க்ல போட்டுட்டு அட்டாச்மென்ட்டா). பைல்ஸ்ல பச்சை மிளகாய் அரைச்சி தடவினா மாதிரி இருந்திச்சி.//

அருமையான உவமை...

பின்னோக்கி said...

பாவங்க அவரு. எதாவது வருஷத்துல போட்ட எதாவது ரூல் இருக்கும். கொஞ்சம் தூசி தட்டி தேடி பார்த்து அவருக்கு பணம் கிடைக்க வழி பண்ணுங்க.

vasu balaji said...

பேநா மூடி said...
/அருமையான உவமை.../

நன்றிங்க.

vasu balaji said...

பின்னோக்கி said...

/பாவங்க அவரு. எதாவது வருஷத்துல போட்ட எதாவது ரூல் இருக்கும். கொஞ்சம் தூசி தட்டி தேடி பார்த்து அவருக்கு பணம் கிடைக்க வழி பண்ணுங்க./

இல்லைங்க சாபக்கேடு. ஒன்னு அவருக்கு மனநிலை சரியில்லாதப்ப 21 வயசு முடிஞ்சது. இரண்டாவது திருமணம் ஆயிடுச்சி.

ஹுஸைனம்மா said...

ஐயா, உங்களுக்குப் புண்ணியம் நிறைய கிடைக்கும் வகை புகழ்ச்சிகள் எதாவது சொல்லி, அந்த ஏழை பெண்ணுக்கு இந்தப் பெண்மணியை உதவ வைத்திருக்க முடியாதா?

vasu balaji said...

ஹுஸைனம்மா said...

/ஐயா, உங்களுக்குப் புண்ணியம் நிறைய கிடைக்கும் வகை புகழ்ச்சிகள் எதாவது சொல்லி, அந்த ஏழை பெண்ணுக்கு இந்தப் பெண்மணியை உதவ வைத்திருக்க முடியாதா?/

ஒரு சின்ன ஓட்டை இருந்திருந்தாலும் எத்தனை விதிகளை வளைக்க முடியுமோ வளைத்து செய்திருப்பேனம்மா. விதிகளை வளைக்கலாம். உடைக்க முடியாதே.

தமிழ் நாடன் said...

என்ன பன்றது மனசாட்சி உள்ளவங்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கும். சட்டம் ஒரு இருட்டறை என்பது இதுதானோ?

vasu balaji said...

தமிழ் நாடன் said...

/என்ன பன்றது மனசாட்சி உள்ளவங்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கும். சட்டம் ஒரு இருட்டறை என்பது இதுதானோ?/

புரிதலுக்கு நன்றிங்க

vasu balaji said...

தமிழ் நாடன் said...

/என்ன பன்றது மனசாட்சி உள்ளவங்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கும். சட்டம் ஒரு இருட்டறை என்பது இதுதானோ?/

புரிதலுக்கு நன்றிங்க

Prathap Kumar S. said...

//பைல்ஸ்ல பச்சை மிளகாய் அரைச்சி தடவினா மாதிரி இருந்திச்சி. //

என்ன ஒரு உதாரணம் சார்...கொன்னுட்டீங்க...

நம்ம அரசாங்கத்தோட ருல்ஸ் பாதியும் இப்படித்தான் இருக்கு. ஒண்ணுக்கு உதவாமே...

vasu balaji said...

நாஞ்சில் பிரதாப் said...

/நம்ம அரசாங்கத்தோட ருல்ஸ் பாதியும் இப்படித்தான் இருக்கு. ஒண்ணுக்கு உதவாமே.../

தப்பு தப்பு! தேவையானதுக்கு உதவாம.

Maheswaran Nallasamy said...

இப்படி ஒரு சூழ்நிலையில வேலை செய்யுற நீங்க ரொம்ப பாவம் சார். இத விட வேற என்ன சொல்ல?,

vasu balaji said...

Maheswaran Nallasamy said...

/இப்படி ஒரு சூழ்நிலையில வேலை செய்யுற நீங்க ரொம்ப பாவம் சார். இத விட வேற என்ன சொல்ல?/

சில நேரங்களில் அப்படித்தான் வெறுப்பாக வரும்.:)

துபாய் ராஜா said...

என்னத்தை சொல்ல சார்... :((