Tuesday, November 3, 2009

பத்துக்கு பத்து (தொடர் இடுகை)

அழைப்புக்கு நன்றி கதிர். நமக்கும் விதிக்கும் சரி வராது. ஆனாலும் விதியை அப்படியே முன்வைக்கிறேன்.

இத் தொடர் இடுகையின் விதிகள்:
1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதி

பிடித்தவர் : எம்.ஜி.ஆர். ஈழத் தமிழர் பிரச்சினையை புரிந்து கொண்டு துணிந்து உதவியும் செய்த ஒரே மலையாளி என்பதால்.

பிடிக்காதவர் : ச‌ம‌கால‌ எல்லா அர‌சிய‌ல் வியாதிக‌ளும்.

எழுத்தாளர்

பிடித்தவர் : சாண்டில்யன்,கி.ரா.

பிடிக்காதவர் : யாருமில்லை

கவிஞர்

பிடித்தவர் : கண்ணதாசன்,தபு சங்கர்.

பிடிக்காதவர் : வானம்பாடிக‌ள் (என்ன‌ச்சொன்னேன் என்ன‌ச்சொன்னேன். நீ க‌விஞ‌ன்னு யாரு சொன்ன‌துன்னு கேக்க‌ வேணாம். நானே சொல்லிக்க‌ல‌ன்னா வேற யாரு சொல்ல‌ப் போறாங்க‌.)

இயக்குனர்

பிடித்தவர் : விஷ்வ‌நாத்.

பிடிக்காதவர் : சங்கர்

நடிகர்

பிடித்தவர் : பிரகாஷ்ராஜ்

பிடிக்காதவர் : விஜயகாந்த் (அந்தாளு எப்போய்யா ந‌டிச்சாருன்னு அடிக்க‌ வ‌ராதீங்க‌)

நடிகை

பிடித்தவர் : நந்திதா தாஸ்

பிடிக்காதவர் : ஸ்ரேயா

இசையமைப்பாளர்

பிடித்தவர் : இளையராஜா. சாம்பிள் இங்கே.


பிடிக்காதவர் : ம‌ன்னிக்க‌ணும். யுவ‌ன்ச‌ங்க‌ர்ராஜா.

பேச்சாளர்

பிடித்தவர் : சீமான்

பிடிக்காதவர் : தெரியவில்லை.

விஞ்ஞானி

பிடித்தவர் : அனைவ‌ரும்.

பிடிக்காதவர் : இன்னும் பிறக்கவில்லை.


அழைக்க விரும்புவது: இத்த‌கைய‌ இடுகைக‌ள் நிர்ப‌ந்த‌மாக‌ சில‌ நேர‌ம் அமைந்து விடுவ‌தால் விதிப்ப‌டி எழுத‌ விரும்புப‌வ‌ர்க‌ள் பின்னூட்ட‌த்தில் தெரிய‌ப் ப‌டுத்தினால் முத‌ல் ஐந்து பேருக்கு முறையாக‌ அழைப்பு விடுத்து இடுகை தேத்த‌ உத்தேச‌ம்.இஃகி இஃகி.

முதல் அழைப்பு: கலகலப்ரியா.
இரண்டாவது அழைப்பு: தியாவின் பேனாவிலிருந்து
(அப்பாடா கண்டிஷன நிறைவேற்றிவிட்டேன். சக்ஸஸ்)

__/\__

70 comments:

ஈரோடு கதிர் said...

//பிடிக்காதவர் : தெரியவில்லை.
பிடிக்காதவர் : இன்னும் பிறக்கவில்லை//

இது அழுகுனி ஆட்டமுங்கோ

//பிடித்தவர் : நந்திதா தாஸ்
பிடித்தவர் : சீமான்//

இது நல்ல சாய்ஸ்

கலகலப்ரியா said...

பாவம் அந்தப் புள்ள ஸ்ரேயா.. வடிவேலு கூட ஆடினாலும் ஆடிச்சு... யாருக்கும் புடிக்காம போச்சு..

கலகலப்ரியா said...

ச்சே... என்னை நீங்க கூட தொடர் இடுகைக்கு அழைக்க மாட்டேங்கிறீங்க சார்.. ரொம்ம்ம்ம்ப்ப்ப நல்ல மனசு...

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

/இது அழுகுனி ஆட்டமுங்கோ/

ஹெ ஹெ. நாம பொட்லம் கட்டி வந்த பேப்பர் கூட படிக்கிறவய்ங்க. அப்புறம் விஞ்ஞானில போய் புடிக்காதவன்னு யாரு இருக்க முடியும்.

கலகலப்ரியா said...

//நந்திதா தாஸ்
சீமான்//

என்னைக் காப்பியடித்ததைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்...

vasu balaji said...

கலகலப்ரியா said...

/பாவம் அந்தப் புள்ள ஸ்ரேயா.. வடிவேலு கூட ஆடினாலும் ஆடிச்சு... யாருக்கும் புடிக்காம போச்சு../

யாரு. வடிவேலு கூட ஆடினா எனக்கா புடிக்காது. நல்ல கதையா இருக்கே.

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ச்சே... என்னை நீங்க கூட தொடர் இடுகைக்கு அழைக்க மாட்டேங்கிறீங்க சார்.. ரொம்ம்ம்ம்ப்ப்ப நல்ல மனசு.../

கீழதான் சொல்லி இருக்கேன்ல. முதல் அழைப்பு உனக்குத்தான்.

கலகலப்ரியா said...

aa.. ki.ra too...

vasu balaji said...

கலகலப்ரியா said...

/என்னைக் காப்பியடித்ததைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.../

கண்டிக்கிறதென்ன தண்டித்தாலும் அதான்

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ aa.. ki.ra too.../

என்னாது. உனக்கு கி.ரா. வ அறிமுகப் படுத்தினது நாந்தானே.

கலகலப்ரியா said...

சார்... என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க எங்களப் பத்தி.... நாம கேட்டு நீங்க அழைப்பு விடுத்தா.. வந்துடுவோமாக்கும்... யார் கிட்ட... இல்ல தெரியாம கேக்குறேன் யார் கிட்ட... நாம கவரிமான் பரம்பர... ஆ.. வேணாம்.. தினமும் சீப்பில வர்ற முடிக்கு.. இது வரைக்கும் மில்லியன் தடவை செத்திருக்கணும்... நோ... ஐ ஜஸ்ட் கான்ட் அக்செப்ட் திஸ் இன்விட்டேஷன்.... அம்புட்டுதேன்...

vasu balaji said...

கலகலப்ரியா said...
/சார்... என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க எங்களப் பத்தி.... நாம கேட்டு நீங்க அழைப்பு விடுத்தா.. வந்துடுவோமாக்கும்... /

நீ எங்க கேட்ட. யாராவது சொல்லட்டும். இது நல்லாருக்கே. நம்மூட்டு கலியாணத்துக்கு கூப்புடலன்னு வரமாட்டன்னா எப்புடி?

/ஆ.. வேணாம்.. தினமும் சீப்பில வர்ற முடிக்கு.. /

நோஓஓஓஓ நோஓஓஒ. நோ பேட் வார்ட்ஸ். எதுனாலும் பேசி தீத்துக்கலாம். யப்பா.

பழமைபேசி said...

பாலாண்ணே, பத்துக்கு பத்து? நெசமாவா??

vasu balaji said...

பழமைபேசி said...

/பாலாண்ணே, பத்துக்கு பத்து? நெசமாவா??/

ஆமா:))

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாண்ணே......கலக்கறீங்க.....


அன்புடன்
ஆரூரன்

கலகலப்ரியா said...

// கலகலப்ரியா said...

/என்னைக் காப்பியடித்ததைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.../

கண்டிக்கிறதென்ன தண்டித்தாலும் அதான்

November 3, 2009 5:51 PM
Delete
Blogger வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/ aa.. ki.ra too.../

என்னாது. உனக்கு கி.ரா. வ அறிமுகப் படுத்தினது நாந்தானே.//

ஆ...! ரிமூவ் திஸ் காமெண்ட்...! என்னோட பிரஸ்டீஜ் எல்லாம் ஹெலிகாப்டர்ல பறக்குது...! திஸ் இஸ் டூ டூ டூ... மச்...! கி.ரா. ஐயா... எனக்கு வந்த சோதனைய பாருங்க.. அவ்வ்வ்வ்வ்... ஏன் சாவித்திரி... பத்மினி.. சரோஜாதேவி.. இவங்கள எல்லாம் எனக்கு இன்னும் கூட சரியா தெரியாதுன்னாலும்.. இவங்களையும் நீங்கதான் அறிமுகப் படுத்தினீங்க... இப்போ ஏன் நந்திதா தாஸ் போடணும்... நோ... ஐ நீட் ஆப்பிள்ஜூஸ்... ஐ மீன்.. justice...

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/பாலாண்ணே......கலக்கறீங்க.....


அன்புடன்
ஆரூரன்/

ஆஹா. இப்புடி பார்த்து எம்புட்டு நாளாச்சி.

அகல்விளக்கு said...

சார் எல்லாத்துலயும் எஜ்கேப் ஆகுறீங்களே எப்புடி????

க.பாலாசி said...

//பிடித்தவர் : எம்.ஜி.ஆர். ஈழத் தமிழர் பிரச்சினையை புரிந்து கொண்டு துணிந்து உதவியும் செய்த ஒரே மலையாளி என்பதால்.//

இந்த ஒரே காரணத்தினால் நானும் விரும்புபவர்.

//பிடிக்காதவர் : வானம்பாடிக‌ள் (என்ன‌ச்சொன்னேன் என்ன‌ச்சொன்னேன். நீ க‌விஞ‌ன்னு யாரு சொன்ன‌துன்னு கேக்க‌ வேணாம். நானே சொல்லிக்க‌ல‌ன்னா வேற யாரு சொல்ல‌ப் போறாங்க‌.)//

இது சரியில்லையே....

//பிடிக்காதவர் : விஜயகாந்த் (அந்தாளு எப்போய்யா ந‌டிச்சாருன்னு அடிக்க‌ வ‌ராதீங்க‌)//

எங்க தலைவர பிடிக்காதா....தலைவா இனிமேயாவது தமில்ல பேசி நடிங்க...(அரசியல்ல)

vasu balaji said...

கலகலப்ரியா said...

/இப்போ ஏன் நந்திதா தாஸ் போடணும்... நோ... ஐ நீட் ஆப்பிள்ஜூஸ்... ஐ மீன்.. justice.../

யம்மா யம்மா ஆப்பிள் ஜூஸ் வாங்கித்தந்துடுறேன். ஜஸ்டிசுக்கு நான் எங்க போவேன். அவ்வ்வ்வ்வ்வ்வ். அடம் பிடிக்கப்படாது

vasu balaji said...

அகல் விளக்கு said...

/சார் எல்லாத்துலயும் எஜ்கேப் ஆகுறீங்களே எப்புடி????/

எங்க எஸ்கேப் ஆனேன்=))

vasu balaji said...

க.பாலாசி said...

/இது சரியில்லையே..../. ம்கும். உனக்காகத்தான் தபு சங்கர தேடிபுடிச்சி போட்டேன். =))

S.A. நவாஸுதீன் said...

எப்படி சார் சளைக்காமல் எல்லா பதிவுலையும் சிக்சர் அடிக்கிறீங்க.

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/எப்படி சார் சளைக்காமல் எல்லா பதிவுலையும் சிக்சர் அடிக்கிறீங்க./

அப்புடிங்கறீங்க:)). நண்பர்கள் ஊக்கம் தான். நன்றி நவாஸ்

வெற்றி-[க்]-கதிரவன் said...

//இயக்குனர்

பிடித்தவர் : விஷ்வ‌நாத்.
//

கே.விஷ்வநாத் தானே ?

//இசையமைப்பாளர்

பிடித்தவர் : இளையராஜா. சாம்பிள் இங்கே//

ஆனாக்கா குழந்தை நல்லா பாடுவா -:)


இது பதிவுக்கு

-:)

vasu balaji said...

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...

/கே.விஷ்வநாத் தானே ?/

ஆமாங்க.

/ஆனாக்கா குழந்தை நல்லா பாடுவா -:)


இது பதிவுக்கு
/

=)). நன்றிங்க.

Prathap Kumar S. said...

//பிடித்தவர் : நந்திதா தாஸ்//

கரீட்டு
//பிடித்தவர் : கண்ணதாசன்,தபு சங்கர்.//

சூப்பரு
//பிடிக்காதவர் : விஜயகாந்த் (அந்தாளு எப்போய்யா ந‌டிச்சாருன்னு அடிக்க‌ வ‌ராதீங்க‌)//

எங்கள் கருப்பு எம்ஜீஆரை பிடிக்காது என்று சொல்லிய உங்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

//பிடிக்காதவர் : ஸ்ரேயா//
சார் உங்க வீட்டு வாசல்ல ஆட்டோ வந்துநிக்குது...அதுல ஏறங்க பார்ப்போம்

துபாய் ராஜா said...

//S.A. நவாஸுதீன் said...
எப்படி சார் சளைக்காமல் எல்லா பதிவுலையும் சிக்சர் அடிக்கிறீங்க.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்.......

கண்ணகி said...

பிடிக்காதவர்: சமகால் அரசியல் வியாதிகள்..... உங்களிடம் கொஞ்சம் தில்லும் இருக்கிரது. பேர் குறிப்பிடாததால் நழுவலும் இருக்கிறது. உங்கள் கவிதைகளில் இள்மை ஊஞ்சலாடுகிறது. கீப் இட் அப்.

thiyaa said...

//
எம்.ஜி.ஆர். ,சாண்டில்யன், கண்ணதாசன்,நந்திதா தாஸ்
இளையராஜா, சீமான்
//


இவர்களை எனக்கும் பிடிக்கும்
முக்கியமா

@ எம்.ஜி.ஆர், சீமான் இருவரும் பிடிக்கும் .

இவர்களை விட மேலும் சிலர் பிடிக்கும்.

@ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (கீழ்நிலை மக்கள் பற்றி இவர்போல் யாரும் பாடவில்லை.)

@இயக்குனர் - முன்னர் பாலுமகேந்திரா, தற்போது -அமீர்,பாலா

@ அன்னை தெரேசாவை ரொம்ப பிடிக்கும் .

vasu balaji said...

நாஞ்சில் பிரதாப் said...
/சார் உங்க வீட்டு வாசல்ல ஆட்டோ வந்துநிக்குது...அதுல ஏறங்க பார்ப்போம்/

இது பெட்டரு.=))

vasu balaji said...

துபாய் ராஜா said...

/ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்......./

ஹி ஹி. நன்றி

vasu balaji said...

வாத்துக்கோழி said...

/பிடிக்காதவர்: சமகால் அரசியல் வியாதிகள்..... உங்களிடம் கொஞ்சம் தில்லும் இருக்கிரது. பேர் குறிப்பிடாததால் நழுவலும் இருக்கிறது. உங்கள் கவிதைகளில் இள்மை ஊஞ்சலாடுகிறது. கீப் இட் அப்./

நழுவல்லாம் இல்லீங்க. நம்ம நாலெஜ் அம்புட்டுதான். தெரிஞ்சாதானே வெறுக்க. ஹி ஹி. நன்றிங்க.

vasu balaji said...

தியாவின் பேனா said...
/
@ அன்னை தெரேசாவை ரொம்ப பிடிக்கும் ./

ஆஹா தியா. இடுகை போடாம தப்பிக்க பார்க்கறீங்களா. விட மாட்டம்ல. இரண்டாவது அழைப்பு உங்களுக்குதான். ஆமாம் தெரசா எந்த வகையில வராங்க. எனக்கும் பிடிக்கும். இந்த லிஸ்ட சமூக சேவகி இல்லையே.

ப்ரியமுடன் வசந்த் said...

மத்த அச்சுபிச்செல்லாம் வேஸ்ட்

தபு சங்கர் பிடிச்சுருக்குன்னு சொன்ன பாத்தியா டச் பண்ணிட்ட...

ப்ரியமுடன் வசந்த் said...

இன்னும் சொல்றேன்

எனக்கு
லீப் வருடங்களைத்தான்
ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது.
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு.

ப்ரியமுடன் வசந்த் said...

நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.

ப்ரியமுடன் வசந்த் said...

ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது....
ஏன் இந்த பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது என்று.

ப்ரியமுடன் வசந்த் said...

பின்நவீனம்
முன் நவீனம் எழுதுறவங்க எல்லாம்
இந்த கவிதை மாதிரி ஒண்ணு எழுதுங்க நான் செத்துடுறேன்..

போங்க...ஆ... நீங்களும்.... உங்க பின் நவீனத்துவமும்

ப்ரியமுடன் வசந்த் said...

இன்னும் சொல்றேன்..

உன்
குதிகாலை மையமாக வைத்து
ஒரு சுற்றுச் சுற்றி
கட்டை விரலால்
மண்ணில் நீ போடும் அழகு வட்டத்தில்…
குழந்தைகள் போனபிறகு
குடியிருப்பவன் நான்

.

ப்ரியமுடன் வசந்த் said...

சின்ன வயதிலிருந்து என்னை
தொட்டுப் பேசும் பழக்கத்தை
நீ நிறுத்திக்கொண்ட போதுதான்
தெரிந்துகொண்டேன்…
நீ என்னைக் கட்டிக்கொள்ள
ஆசைப்படுவதை

ப்ரியமுடன் வசந்த் said...

நீ சுத்த ஏமாளி.
உன்னை அழகுபடுத்திக்கொள்ள
நீ விலை கொடுத்து வாங்கிய
எல்லாப் பொருட்களுமே
உன்னைக்கொண்டு
தங்களை
அழகுபடுத்திக்கொள்கின்றன

ப்ரியமுடன் வசந்த் said...

ஒரு நிமிடத்தில்
உன்னைக் கடந்துபோகிற பெண்ணைப் பார்க்க
தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே‘ என்று
கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்…
நீ கூடத்தான்
ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக
ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்

ப்ரியமுடன் வசந்த் said...

சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்
அந்தச் சீப்போ
உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.

ப்ரியமுடன் வசந்த் said...

பழக்கடைக்குள் நுழைந்த நீயோ

ஆப்பிள்ளைக் காட்டி

‘இது எந்த ஊர் ஆப்பிள்?’

‘அது எந்த ஊர் ஆப்பிள்?’ என்று

கேட்டுக்கொண்டிருந்தாய்.

ஆப்பிள்கள் எல்லாம் ஒன்றுகூடிக்

கேட்டன

‘நீ எந்த ஊர் ஆப்பிள்?’

vasu balaji said...

போடு போடு இன்னும்.

ப்ரியமுடன் வசந்த் said...

கரையில் நின்றிருந்த உன்னைப் பார்த்ததும்

கத்தி விட்டன கடல் அலைகள்…

கோடான கோடி ஆண்டுகள்

எம்பி எம்பிக் குதித்து

கடைசியில் பறித்தே விட்டோமே

நிலவை!என்று.

ப்ரியமுடன் வசந்த் said...

தொலைபேசியில்

நீ எனக்குத்தானே ‘குட்நைட்‘ சொன்னாய்.

ஆனால் இந்த இரவோ

அதைத்தான் நீ ‘நல்ல இரவு‘ என்று

சொல்லிவிட்டதாக நினைத்து

விடியவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே.

ப்ரியமுடன் வசந்த் said...

தான் வரைந்த ஓவியத்தை

கடைசியாக ஒரு முறை

சரி செய்யும் ஓவியனைப் போல்

நீ ஒவ்வொரு முறையும்

உன் உடையைச் சரி செய்கிறாய்.

ப்ரியமுடன் வசந்த் said...

காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த

உன் சேலைத் தலைப்பை இழுத்து

நீ இடுப்பில் செருகிக்கொண்டாய்.

அவ்வளவுதான்…

நின்றுவிட்டது காற்று.

ப்ரியமுடன் வசந்த் said...

என்னை

பைனாகுலர் பார்வை

பார்க்கின்றன

உன் மைனாகுலர் விழிகள்.

ப்ரியமுடன் வசந்த் said...

இன்னும் ஹார்ட் டிஸ்க்ல இருக்கு இன்னிக்கு இது போதும் நைனா கோச்சுக்காத..சின்ன கோவம் அவ்ளோதான்

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/இன்னும் ஹார்ட் டிஸ்க்ல இருக்கு இன்னிக்கு இது போதும் நைனா கோச்சுக்காத..சின்ன கோவம் அவ்ளோதான்/

ஏம்மா கோவம். எதுக்கு கோவிச்சிக்கிறது?

vasu balaji said...

அட்டு இடுகைக்கு
காதல் கவி சொல்லி
அழகாக்கிய வசந்த்
உன் மனம்போல் காதலி வருவாள்
காதலி!

நன்றி

vasu balaji said...

யோவ். பதில் சொல்லிட்டு போ.

ப்ரியமுடன் வசந்த் said...

இல்லை நைனா எங்க போனாலும் சிலர் எழுதுற கவிதை புரிய மாட்டேன்னுது

சில நேரம் அழுதுடுறேன் ஏன் இப்பிடி எழுதுறாங்க..ஒரு சில மணிநேரம் ஏன் ஒரு சில நாள் ஆனாலும் புரியுறதேயில்லை

பாமரனுக்கும் புரியும்படி எழுதுறவன் கவிஞனா?

இலக்கியம் படிச்சவனுக்கு மட்டும் எழுதுறவன் கவிஞனா?

அப்படி ஒரு சிலருக்கு மட்டும் புரியும்படி எழுதுறவங்க ஏன் பல பேர் வாசிக்குற தளத்துல கவிதை போடணும்

இங்க நான் போட்ட தபூ சங்கர் கவிதைகள் ஒருதடவை படிச்சதுமே எப்போ கேட்டாலும் சொல்ற அளவுக்கு பதிஞ்சுபோச்சு அதனாலயே வீடெல்லாம் தபுவோட தேவதை நிறைஞ்சுருக்காங்க

அட போங்கய்யா...

vasu balaji said...

அது அது. நீ நம்மாளுய்யா.ஆனாலும் தபுதான் எழுதுவாரு நைனா எழுதமாட்டாருன்னா கொன்னுடுவேன்.

பிரபாகர் said...

தப்பு பண்ணிட்டிங்கய்யா! தப்பு பண்ணிட்டிங்க. நம்ம வசந்து புள்ள என்னமா கவித எலுதுது.. அது பேர உட்டுட்டீங்களே... இது நியாமா, தர்மமா...

பிரபாகர்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான தேர்வு.. உங்களுக்குப் பிடித்தவர்களுள் பலர் எனக்கும் பிடித்தவர்களே

vasu balaji said...

பிரபாகர் said...

/தப்பு பண்ணிட்டிங்கய்யா! தப்பு பண்ணிட்டிங்க. நம்ம வசந்து புள்ள என்னமா கவித எலுதுது.. அது பேர உட்டுட்டீங்களே... இது நியாமா, தர்மமா.../

அவரு தபு சங்கர் கவிதை போட்டிருக்காரு. பய புள்ள முத்து முத்தா மனசுல ஏத்தி வெச்சிருக்கான்.

vasu balaji said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

/அருமையான தேர்வு.. உங்களுக்குப் பிடித்தவர்களுள் பலர் எனக்கும் பிடித்தவர்களே/

வாங்க செந்தில். ரொம்ப நாளா நம்ம திண்ணைப் பக்கம் காணோமே.

புலவன் புலிகேசி said...

//பிடிக்காதவர் : ச‌ம‌கால‌ எல்லா அர‌சிய‌ல் வியாதிக‌ளும்.//

என்னைப் போலவே........

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/என்னைப் போலவே......../

நன்றிங்க.

Anonymous said...

சும்மா கலக்கல்

MUTHU said...

பிரியமுடன்...வசந்த் said

"பாமரனுக்கும் புரியும்படி எழுதுறவன் கவிஞனா?"

பாமரனுக்கும் புரியும்படி எழுதுறவன் தான் கவிஞன் என்னை பொறுத்தவரை .

vasu balaji said...

tamilmoviecenter said...

/சும்மா கலக்கல்/

நன்றிங்க

பின்னோக்கி said...

ஸ்ரேயா புடிக்காதா ? என்னை மாதிரி உங்களுக்கும் வயசாயிடுச்சுன்னு ஒத்துக்குறீங்க. அப்ப ரைட்டு.

vasu balaji said...

பின்னோக்கி said...

/ஸ்ரேயா புடிக்காதா ? என்னை மாதிரி உங்களுக்கும் வயசாயிடுச்சுன்னு ஒத்துக்குறீங்க. அப்ப ரைட்டு.//

அதான் ப்ரொஃபைல்ல வயசே இருக்கே.ஒத்துக்காம என்ன பண்ண

அன்புடன் மலிக்கா said...

நச் நச்ன்னு பதில்கள்.

பழுதபழமில்லையா அதுதான் நிதானத்தோடு செயல்படுகிறது..


அப்புறம் வசந்த்: நான் கவிதையின்னு கிறுக்குகிறேனே என்னையும்தானே சொல்றீங்க [அப்பாடா]

vasu balaji said...

அன்புடன் மலிக்கா said...

/நச் நச்ன்னு பதில்கள்.

பழுதபழமில்லையா அதுதான் நிதானத்தோடு செயல்படுகிறது../

வாங்க மலிக்கா. நன்றி