Sunday, October 11, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V2.9

ராஜீவ்காந்தி கொலையை காரணம் காட்டி இன்னும் எத்தனை தமிழ் மக்கள் கொல்லப்படப் போகிறார்கள்?: இந்திய குழுவிடம் யாழ். பல்கலை மாணவர் கேள்வி

அப்புடி போடு. ஆனா இது பக்ஸேயதான் கேட்டு சொல்லணும். இன்னும் எத்தன மிஞ்சி இருக்குன்னு. இதுங்க டூர் வந்ததுங்க.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழர்கள் கண்களில் இருந்து இனி ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது:கனிமொழி

வராதுங்க. வரதுக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்கறதில்லையாமே. வரண்டு போச்சு அழுது அழுது!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு

சே சே! அவங்க சுடும்போது இவங்க குறுக்க போய்ட்டாங்கம்பாரு சிதம்பரம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சொந்த செலவிலேயே எம்பிக்கள் இலங்கை சென்றிருக்கிறார்கள்:கலைஞர்

அப்போதானே எது சொன்னாலும் சொந்தக் கருத்துன்னு சொல்லிக்கலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எம்.பி.க்களின் இலங்கை பயணத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இடமில்லை ஏன்? ஜெ.

சொந்த செலவுல போனாங்களாம். நீங்க காசு தந்திருக்க மாட்டீங்களோ என்னமோ!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கைக்கு காங். கூட்டணி கட்சியினர் மட்டுமே செல்வது சந்தேகத்தை அளிக்கிறது: பழ.நெடுமாறன்

உங்கள அனுப்பினா சொல்லிக் குடுத்த மாதிரி சொல்லமாட்டீங்களே. இதில சந்தேகமே வேணாம்யா.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழக எம்பிக்களின் இலங்கை பயணம் வெளிப்படையானது: தங்கபாலு

தெரியுமே. கண்துடைப்புக்கும் வாயடைப்புக்கும் செட்டப்புன்னு.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஈழத்தமிழருக்காக மவுனம் காத்தேன்: கலைஞருக்காக இப்போது மவுனம் கலைக்கிறேன்: பாரதிராஜா

ஒரு மசுருக்கும் புண்ணியமில்ல. எதுக்கு இந்த நாடகம். சீ.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையில் யாரும் இதுவரை செல்லாத இடத்துக்கும் செல்வோம்: கனிமொழி எம்.பி. நம்பிக்கை

நீங்க சொல்றது தானே. தனியா சொன்னா பொய். கூட்டா சொன்னா அறிக்கை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய அனைத்துக்கட்சி குழுவினரின் கிழக்கு மாகாண விஜயம் இறுதி நேரத்தில் ரத்து.

பல்லி கத்துச்சோ. போங்கடா.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் பத்திரிக்கையாளனா?நடிகனா?: கலைஞர் விளக்கம்

சந்தேகமே வேணாம். ரெண்டும் ஒண்ணுதான். வேஷம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒபாமாவுக்கு நோபல் பரிசா?கலைஞர் கண்டனம்

ஆமாங்க. சொக்குக்கு எட்டாவது தடவையும் இல்லைன்னா எப்புடி?மயான அமைதி நாயகர்கள் உங்க மூணு பேருக்கும் கொடுத்திருக்கலாம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விருதுகள் எல்லாம் வருத்தத்தைப் போக்கக்கூடிய மருந்துகள்: கலைஞர்

மருத்துவத் துறைக்கான அடுத்த நோபல் பரிசு இவருக்குப்பா.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாவோயிஸ்ட்டுகளை எதிராக ராணுவம் செயல்படாது!

அவன் தமிழனா என்னா?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலக பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இலங்கை அறிவுரை வழங்கவுள்ளது

ஆமாம். ஒரே ஒரு அணுகுண்டு. போங்கடா.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

65 comments:

கலகலப்ரியா said...

//தமிழர்கள் கண்களில் இருந்து இனி ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது:கனிமொழி

வராதுங்க. வரதுக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்கறதில்லையாமே. வரண்டு போச்சு அழுது அழுது!//

நீங்க வேறைங்க.. கண்ணைப் பிடுங்கிட்டு கண்ணீர் வராதுன்னா செரிதானுங்களே..!

கலகலப்ரியா said...

//ராஜீவ்காந்தி கொலையை காரணம் காட்டி இன்னும் எத்தனை தமிழ் மக்கள் கொல்லப்படப் போகிறார்கள்?: இந்திய குழுவிடம் யாழ். பல்கலை மாணவர் கேள்வி//

ஐயோ .. படுபாவிங்க.. பொத்திக்கிட்டிருக்க முடியாதா.. நீங்கதான் மிஞ்சி இருக்கீங்கன்னு நேர வந்துட போறாங்க..

கலகலப்ரியா said...

//இலங்கைக்கு காங். கூட்டணி கட்சியினர் மட்டுமே செல்வது சந்தேகத்தை அளிக்கிறது: பழ.நெடுமாறன்//

ஐக்கிய இலங்கைக்கு.. தமிழனுக்கு எதிரிங்க மட்டும்தானுங்கோ போக முடியும்..

கலகலப்ரியா said...

//ஈழத்தமிழருக்காக மவுனம் காத்தேன்: கலைஞருக்காக இப்போது மவுனம் கலைக்கிறேன்: பாரதிராஜா//

யாருங்க அந்த மௌனம்..

கலகலப்ரியா said...

//இலங்கையில் யாரும் இதுவரை செல்லாத இடத்துக்கும் செல்வோம்: கனிமொழி எம்.பி. நம்பிக்கை//

ஹிஹி.. ஆமாங்கோ.. அங்க டெர்ரர் கும்பல் இருக்குதுன்னு சொல்லி எல்லாத்தையும் மறி(றை)ச்சு வச்சாங்க.. இவங்க குண்டு போடுறது தெரிஞ்சிடும்னு.. இப்போ வெள்ளைக்கார தொரைங்க.. அம்முனிங்க கூட ஜாலியா பிகினி மாட்டிக்கிட்டு கிளம்பிட்டாய்ங்க... நீங்களும் போயிட்டு வாங்கம்முனி...

கலகலப்ரியா said...

//நான் பத்திரிக்கையாளனா?நடிகனா?: கலைஞர் விளக்கம்//

மனுஷனான்னும் விளக்கம் கொடுக்க வேண்டி வரும்.. டார்வின் மே ஹெல்ப்..!

கலகலப்ரியா said...

//விருதுகள் எல்லாம் வருத்தத்தைப் போக்கக்கூடிய மருந்துகள்: கலைஞர்

மருத்துவத் துறைக்கான அடுத்த நோபல் பரிசு இவருக்குப்பா. //

சார் புரிஞ்சுக்குங்க.. ஐயா அடிக்கடி ஆஸ்பிடல் போய் சாப்ட்ட மருந்து எல்லாம் விருதுகளாம்.. எக்கச்சக்கம் போல..

கலகலப்ரியா said...

//உலக பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இலங்கை அறிவுரை வழங்கவுள்ளது

ஆமாம். ஒரே ஒரு அணுகுண்டு. போங்கடா. //

இதுக்கு.. ஹவ் டு சூசைட் அப்டின்னு டைட்டில் வைக்கலாம்..

யாழினி said...

செமையான நெத்தியடி, எல்லாமே நல்லாயிருக்கு!

இராகவன் நைஜிரியா said...

அனைத்தும் நறுக் கமெண்ட்ஸ்.

என்னாத்தான் நாக்கை பிடுங்கற மாதிரி கேள்விக் கேட்டாலும், உரைக்கிறவங்களுக்த்தான் உரைக்கும். சொரணை கெட்ட ஜன்மங்களுக்கு ஒன்றும் உரைக்காதுங்க

இராகவன் நைஜிரியா said...

// தமிழர்கள் கண்களில் இருந்து இனி ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது:கனிமொழி

வராதுங்க. வரதுக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்கறதில்லையாமே. வரண்டு போச்சு அழுது அழுது!//

கண்ணீரும் வருண்டுவிட்டது... அது புரியாமல் எதோ சொல்லிகிட்டு இருகாங்க... கண்ணே போன பின் கண்ணீர் ஏதுங்க... கலகலப்ரியா சரியாச் சொல்லியிருக்காங்க.

துபாய் ராஜா said...

//தமிழர்கள் கண்களில் இருந்து இனி ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது:கனிமொழி//

ஆனால் உடம்புல இருந்து இரத்தம் வரலாம்ன்னு சொல்றாங்களா அம்மணி...

யாழினி said...

//இலங்கையில் யாரும் இதுவரை செல்லாத இடத்துக்கும் செல்வோம்: கனிமொழி எம்.பி. நம்பிக்கை//

ஐயையோ நீங்க வேறங்க, இலங்கைல இவங்க புதுஷா வேற என்னமும் இடம் கண்டுபிடிக்க போறாங்களோ தெரியல!கொலம்பஸ் மாதிரி!!

இராகவன் நைஜிரியா said...

// தமிழக எம்பிக்களின் இலங்கை பயணம் வெளிப்படையானது: தங்கபாலு

தெரியுமே. கண்துடைப்புக்கும் வாயடைப்புக்கும் செட்டப்புன்னு. //

நம்பிட்டோம்... வேற வழி இவங்க சொல்வதையெல்லாம் நம்ப இங்க நம்மள மாதிரி நிறைய இ.வா இருக்கோம்.

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா
/நீங்க வேறைங்க.. கண்ணைப் பிடுங்கிட்டு கண்ணீர் வராதுன்னா செரிதானுங்களே..!/

செய்வானுங்க!இதுக்கும் ஏதாவது நிவாரணம் கிடைச்சா சுருட்டலாம்னு.

/ஐயோ .. படுபாவிங்க.. பொத்திக்கிட்டிருக்க முடியாதா.. நீங்கதான் மிஞ்சி இருக்கீங்கன்னு நேர வந்துட போறாங்க../

எனக்கும் உடனே இப்படி தோணிச்சி.

/ஐக்கிய இலங்கைக்கு.. தமிழனுக்கு எதிரிங்க மட்டும்தானுங்கோ போக முடியும்../

என் நறுக்கு குப்பைக்கு. இதான் சரி.

/யாருங்க அந்த மௌனம்../

அடுத்த பட கதாநாயகி போல. அதான் காத்தாரு.
/ஹிஹி.. ஆமாங்கோ.. அங்க டெர்ரர் கும்பல் இருக்குதுன்னு சொல்லி எல்லாத்தையும் மறி(றை)ச்சு வச்சாங்க.. இவங்க குண்டு போடுறது தெரிஞ்சிடும்னு.. இப்போ வெள்ளைக்கார தொரைங்க.. அம்முனிங்க கூட ஜாலியா பிகினி மாட்டிக்கிட்டு கிளம்பிட்டாய்ங்க... நீங்களும் போயிட்டு வாங்கம்முனி.../

நீங்க வேற. ஆஹா தெரியாம போச்சே. யப்பா யப்பா சங்கமம் நடத்தலாம்பான்னு கொடச்சல் குடுக்க போறாங்க.

/மனுஷனான்னும் விளக்கம் கொடுக்க வேண்டி வரும்.. டார்வின் மே ஹெல்ப்..!/

ஐயோ என்னால முடியாதுன்னு அலறி ஓடிடுவாரு.

/சார் புரிஞ்சுக்குங்க.. ஐயா அடிக்கடி ஆஸ்பிடல் போய் சாப்ட்ட மருந்து எல்லாம் விருதுகளாம்.. எக்கச்சக்கம் போல../

அதாங்க புரியல. இப்போ இவருக்கு என்ன வருத்தம்னு மருந்து சீ விருது சாப்டாரு..ஐயோ வாங்கினாரு.

/இதுக்கு.. ஹவ் டு சூசைட் அப்டின்னு டைட்டில் வைக்கலாம்../

இல்லம்மா. ஹவ் டு மசாக்கர் அண்ட் ஷோ யுவர் மிடில் ஃபிங்கர்னு வைக்கலாம்.

துபாய் ராஜா said...

//ராஜீவ்காந்தி கொலையை காரணம் காட்டி இன்னும் எத்தனை தமிழ் மக்கள் கொல்லப்படப் போகிறார்கள்?: இந்திய குழுவிடம் யாழ். பல்கலை மாணவர் கேள்வி//

மாணவர் போர்வையில் புலின்னு அடுத்து பதில் வரும்....

இராகவன் நைஜிரியா said...

// சொந்த செலவிலேயே எம்பிக்கள் இலங்கை சென்றிருக்கிறார்கள்:கலைஞர் //

சொந்த செலவிலேயாவா.... காது முழுங்க இப்படி பூ சுத்திவிட்டா.. என்னாப் பண்ணுவது...

இராகவன் நைஜிரியா said...

// எம்.பி.க்களின் இலங்கை பயணத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இடமில்லை ஏன்? ஜெ.

சொந்த செலவுல போனாங்களாம். நீங்க காசு தந்திருக்க மாட்டீங்களோ என்னமோ!//

ஒன்வே டிராபிக்...?

இராகவன் நைஜிரியா said...

// நான் பத்திரிக்கையாளனா?நடிகனா?: கலைஞர் விளக்கம்

சந்தேகமே வேணாம். ரெண்டும் ஒண்ணுதான். வேஷம். //

என்னாது... அப்ப முதலமைச்சர் இல்லையா? என்னாச்சு?

இராகவன் நைஜிரியா said...

// உலக பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இலங்கை அறிவுரை வழங்கவுள்ளது

ஆமாம். ஒரே ஒரு அணுகுண்டு. போங்கடா. //

சாத்தான் வேதம் ஓதுகிறது..

துபாய் ராஜா said...

//தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு//

தோசை,வடை,பூரி சுடுற மாதிரி இதுவும் வழக்க'மான' செய்திதானே....

துபாய் ராஜா said...

//தமிழக எம்பிக்களின் இலங்கை பயணம் வெளிப்படையானது: தங்கபாலு//

ஆனால் பல உள்ளர்த்தங்கள் கொண்டது.....

துபாய் ராஜா said...

//இலங்கையில் யாரும் இதுவரை செல்லாத இடத்துக்கும் செல்வோம்: கனிமொழி எம்.பி. நம்பிக்கை//

மறக்காம முள்ளிவாய்க்கால் போய் ஃபோட்டோ எடுத்து வாங்க அம்மணி...

அது சரி said...

//
ராஜீவ்காந்தி கொலையை காரணம் காட்டி இன்னும் எத்தனை தமிழ் மக்கள் கொல்லப்படப் போகிறார்கள்?: இந்திய குழுவிடம் யாழ். பல்கலை மாணவர் கேள்வி
//

இது என்ன கேள்வி? இன்னும் எத்தனை பேரு எஞ்சியிருக்காங்களோ அத்தனை பேரு தான்னு சொல்ல நினைச்சிருப்பானுங்க....ஆனா சொல்ல மாட்டானுங்க...

இராகவன் நைஜிரியா said...

// துபாய் ராஜா
October 11, 2009 8:18 PM
//இலங்கையில் யாரும் இதுவரை செல்லாத இடத்துக்கும் செல்வோம்: கனிமொழி எம்.பி. நம்பிக்கை//

மறக்காம முள்ளிவாய்க்கால் போய் ஃபோட்டோ எடுத்து வாங்க அம்மணி...//

சரியாகச் சொன்னீங்க ராஜா...

அது சரி said...

//
விருதுகள் எல்லாம் வருத்தத்தைப் போக்கக்கூடிய மருந்துகள்: கலைஞர்

//

அதாவது எனக்கு கொடுக்கும் மற்றும் நான் எடுத்துக் கொள்ளும் விருதுகள் எல்லாம் (என்) வருத்தத்தை போக்கக்கூடிய மருந்துகள்...

ஆமா, நோபல் பரிசு கொடுக்கலைன்னு ஒடன்பொறப்பு எதுவும் இன்னும் டீக் குடிக்கலையே???

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா Says:
October 11, 2009 8:14 PM

//தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு//

தோசை,வடை,பூரி சுடுற மாதிரி இதுவும் வழக்க'மான' செய்திதானே....//

அதே..! தொடை நடுங்கிப் பரதேசிங்க.. கர்ப்பப் பைல இருக்கிற கருவுக்கு கூட பயந்துக்கிட்டு நாசம் பண்ற காட்டு மிராண்டிங்க.. தமிழ் அப்டின்னு இருந்தாலே போதும்.. அது எங்க என்ன அப்டின்னு கேக்கவே தேவையில்ல.. ஆஆஆஆ... இந்த நியூஸ் எல்லாம் படிக்காம இருந்தா இப்டி நறுக் போட்டு.. என்னோட நரம்பெல்லாம் நறுக்குறீங்களே சார்.. நறநறநறக் அப்டின்னு போடுங்க சார்..

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா
/மாணவர் போர்வையில் புலின்னு அடுத்து பதில் வரும்..../

காசு வரது நின்னு போனா கண்டிப்பா செய்வானுங்க. பாவங்க.

/தோசை,வடை,பூரி சுடுற மாதிரி இதுவும் வழக்க'மான' செய்திதானே..../

நமக்கு. சிதம்பரம் இல்லவே இல்லைம்பாரே.

/ஆனால் பல உள்ளர்த்தங்கள் கொண்டது...../

இது அசத்தல்

/மறக்காம முள்ளிவாய்க்கால் போய் ஃபோட்டோ எடுத்து வாங்க அம்மணி.../

மெரினாவ எடுத்துட்டு முள்ளிவாய்க்கால்னு சொல்லாம இருந்தா சரி.

அசத்தல் நறுக்ஸ். நன்றி ராஜா

ஸ்ரீ said...

இவனுங்களுக்கு என்ன அக்கறை இருக்கப்போவுது அங்க இருக்கிற தமிழர்கள் மேல். இங்க இருக்குறவனுகளையே கண்டுக்க மாடடானுங்க.சும்மா ஒரு ட்ரிப் அடிச்சுட்டு வருவானுங்கஅவ்வளவுதான்.

துபாய் ராஜா said...

//இலங்கையில் யாரும் இதுவரை செல்லாத இடத்துக்கும் செல்வோம்: கனிமொழி எம்.பி. நம்பிக்கை//

இலங்கையில்
செல்லாத
இடம் சென்று
சொல்லாத கதைகள்
பல கண்டு
சொர்க்கம் சென்ற
செந்தமிழர் பலருண்டு...

சிந்தையில் சீற்றம்
பொங்கி வருதே
சுற்றுலா போல்
சிற்றுலா செல்லும்
சின்னமதி கொண்டோர்
நிலை கண்டு....

துபாய் ராஜா said...

//நான் பத்திரிக்கையாளனா?நடிகனா?: கலைஞர் விளக்கம்//

ரெண்டு பேரையுமே பகைக்காம பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையையும் காமிக்கிற ஆளாச்சே நம்ம முதல்வர்...

சினிமாக்காரங்களுக்காக பத்திரிக்கை ஆசிரியரை கைது செஞ்சு, சும்மா 'லுலுலாயின்னு' உடனே விடுதலையும் பண்ணவராச்சே....

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா
/சொந்த செலவிலேயாவா.... காது முழுங்க இப்படி பூ சுத்திவிட்டா.. என்னாப் பண்ணுவது.../

எந்தச் செலவிலன்னு சொல்லலையே.

/ஒன்வே டிராபிக்...?/

அது மத்தவங்களுக்கு.=))

/என்னாது... அப்ப முதலமைச்சர் இல்லையா? என்னாச்சு?/

இது இது இது கேள்வி.ஒரு வேள அன்னியன் மாதிரி மத்ததுல யாருன்னு கேக்கறாரோ.

/சாத்தான் வேதம் ஓதுகிறது../

சரியான நறுக்.

நன்றி இராகவன் சார். ரஜினி மாதிரி நான் ஒரு நறுக்கினா நண்பர்கள் 400 நறுக்கினா மாதிரின்னு சொல்லிக்கலாம் போல.

வானம்பாடிகள் said...

அது சரி
/அதாவது எனக்கு கொடுக்கும் மற்றும் நான் எடுத்துக் கொள்ளும் விருதுகள் எல்லாம் (என்) வருத்தத்தை போக்கக்கூடிய மருந்துகள்.../

வருத்தம் என்னானு சொல்லலையே.

/ஆமா, நோபல் பரிசு கொடுக்கலைன்னு ஒடன்பொறப்பு எதுவும் இன்னும் டீக் குடிக்கலையே???/

இப்புடி ஒண்ணு இருக்கிறது தெரியாது=))

/இது என்ன கேள்வி? இன்னும் எத்தனை பேரு எஞ்சியிருக்காங்களோ அத்தனை பேரு தான்னு சொல்ல நினைச்சிருப்பானுங்க....ஆனா சொல்ல மாட்டானுங்க.../

அதானே. நன்றிங்க.

கலகலப்ரியா said...

//அது சரி Says:
October 11, 2009 8:24 PM

//
விருதுகள் எல்லாம் வருத்தத்தைப் போக்கக்கூடிய மருந்துகள்: கலைஞர்

//

அதாவது எனக்கு கொடுக்கும் மற்றும் நான் எடுத்துக் கொள்ளும் விருதுகள் எல்லாம் (என்) வருத்தத்தை போக்கக்கூடிய மருந்துகள்...

ஆமா, நோபல் பரிசு கொடுக்கலைன்னு ஒடன்பொறப்பு எதுவும் இன்னும் டீக் குடிக்கலையே???//

டீக்கு ஆர்டர் பண்ணி இருக்காய்ங்கப்பு...

வானம்பாடிகள் said...

யாழினி
/செமையான நெத்தியடி, எல்லாமே நல்லாயிருக்கு!/
/ஐயையோ நீங்க வேறங்க, இலங்கைல இவங்க புதுஷா வேற என்னமும் இடம் கண்டுபிடிக்க போறாங்களோ தெரியல!கொலம்பஸ் மாதிரி!!/

நன்றிங்க:))

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா
/ஆஆஆஆ... இந்த நியூஸ் எல்லாம் படிக்காம இருந்தா இப்டி நறுக் போட்டு.. என்னோட நரம்பெல்லாம் நறுக்குறீங்களே சார்.. நறநறநறக் அப்டின்னு போடுங்க சார்../

யோவ். முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல. நற நற நறுக்! ம்ம்ம். நல்லா இருக்கு.

வானம்பாடிகள் said...

ஸ்ரீ
/இவனுங்களுக்கு என்ன அக்கறை இருக்கப்போவுது அங்க இருக்கிற தமிழர்கள் மேல். இங்க இருக்குறவனுகளையே கண்டுக்க மாடடானுங்க.சும்மா ஒரு ட்ரிப் அடிச்சுட்டு வருவானுங்கஅவ்வளவுதான்./

தெரிஞ்ச கதை தானுங்களே. திருட்டுக் கூட்டம்.

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா

கவிதை அருமை ராஜா.
/ரெண்டு பேரையுமே பகைக்காம பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையையும் காமிக்கிற ஆளாச்சே நம்ம முதல்வர்...

சினிமாக்காரங்களுக்காக பத்திரிக்கை ஆசிரியரை கைது செஞ்சு, சும்மா 'லுலுலாயின்னு' உடனே விடுதலையும் பண்ணவராச்சே..../

அதுக்குத்தான் இந்த விளக்கம் போல.:))

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா
/டீக்கு ஆர்டர் பண்ணி இருக்காய்ங்கப்பு.../

சிலோன் டீயா. டீ எஸ்டேட்டேவா.

யூர்கன் க்ருகியர் said...

//ராஜீவ்காந்தி கொலையை காரணம் காட்டி இன்னும் எத்தனை தமிழ் மக்கள் கொல்லப்படப் போகிறார்கள்?: இந்திய குழுவிடம் யாழ். பல்கலை மாணவர் கேள்வி
//

"Question Out of Syllabus "அப்படின்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகிருப்பானுங்க

யூர்கன் க்ருகியர் said...

//தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு
//

எத்தனை எத்தனை துப்பாக்கி "சூடு" நடந்தாலும் அரசியல்வாதிகளுக்கு சூடு சொரணை வராதுன்னு தெரிஞ்சி போச்சி

பிரபாகர் said...

//ஒபாமாவுக்கு நோபல் பரிசா?கலைஞர் கண்டனம்
//

அய்யா வணக்கம். தாமதமாய் உங்களின் பதிவை பார்த்து, இப்போதுதான் வருகிறேன்.

உங்களின் உள்ளக்கிடக்கை புரிகிறது.

உளியின் ஓசை விருதுக்கு அது தேவலை...

//நான் பத்திரிக்கையாளனா?நடிகனா?: கலைஞர் விளக்கம்//

பிரபாகரன் இறந்ததாய் தகவல். பத்திரிகைகைளில் இறந்ததாய் படம். மகனுக்கும் பேரனுக்கும் பதவிக்காக டெல்லியில் முகாம். வெட்கக்கேடான விஷயம்.

பிரபாகர்.

பிரபாகர் said...

5/5

வானம்பாடிகள் said...

யூர்கன் க்ருகியர்
/"Question Out of Syllabus "அப்படின்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகிருப்பானுங்க/
/எத்தனை எத்தனை துப்பாக்கி "சூடு" நடந்தாலும் அரசியல்வாதிகளுக்கு சூடு சொரணை வராதுன்னு தெரிஞ்சி போச்சி/

யூர்கன் பஞ்ச். நல்லா இருக்கீங்களா

வானம்பாடிகள் said...

பிரபாகர்
/உளியின் ஓசை விருதுக்கு அது தேவலை... /
/பிரபாகரன் இறந்ததாய் தகவல். பத்திரிகைகைளில் இறந்ததாய் படம். மகனுக்கும் பேரனுக்கும் பதவிக்காக டெல்லியில் முகாம். வெட்கக்கேடான விஷயம்.
/
பதவிக்கு முன்னாடி வேற எதுவும் இல்லை. நன்றி பிரபாகர்.

rajesh said...

// இலங்கையில் யாரும் இதுவரை செல்லாத இடத்துக்கும் செல்வோம்: கனிமொழி எம்.பி. நம்பிக்கை //

இலங்கையில் இதுவரை நிறைய பேர் சென்ற இடம் 'இடுகாடு'.
யாரும் செல்லாத இடம் எது?..
இலங்கை சுற்றுலா வளர்ச்சிக்குழு எதாவது இடம் கண்டுபிடிச்சிருக்கோ?..

Kiruthikan Kumarasamy said...

///இலங்கையில் யாரும் இதுவரை செல்லாத இடத்துக்கும் செல்வோம்: கனிமொழி எம்.பி. நம்பிக்கை///
கண்டிக்கெல்லாம் போறீங்க பக்கத்திலேயே நுவர எலியா, கதிர்காமம், சீத்தா வாக்கை எல்லா இடமும் சுத்திப் பாத்திட்டு வாங்க... நுவர எலியா ரீ எஸ்டேட்ல நல்லா நாவுக்கு ருசியா ரீயும் கேக்கும் குடுப்பாங்க, சுவைச்சிட்டு வாங்க. உல்லாசச் சுற்றுலா நல்லா அமைய வாழ்த்துக்கள்

வானம்பாடிகள் said...

rajesh

/இலங்கையில் இதுவரை நிறைய பேர் சென்ற இடம் 'இடுகாடு'.
யாரும் செல்லாத இடம் எது?..
இலங்கை சுற்றுலா வளர்ச்சிக்குழு எதாவது இடம் கண்டுபிடிச்சிருக்கோ?../

அதானே.

வானம்பாடிகள் said...

Kiruthikan Kumarasamy
/கண்டிக்கெல்லாம் போறீங்க பக்கத்திலேயே நுவர எலியா, கதிர்காமம், சீத்தா வாக்கை எல்லா இடமும் சுத்திப் பாத்திட்டு வாங்க... நுவர எலியா ரீ எஸ்டேட்ல நல்லா நாவுக்கு ருசியா ரீயும் கேக்கும் குடுப்பாங்க, சுவைச்சிட்டு வாங்க. உல்லாசச் சுற்றுலா நல்லா அமைய வாழ்த்துக்கள்/

ம்கும். இதுக்கு போய் போறாங்களோ. எஸ்டேட் கிடைக்குமா? அம்மா கொடநாடு போனா நாங்க போட்டிக்கு போக வாகாயிருக்குமே.

பிரியமுடன்...வசந்த் said...

எங்களைத்தான் பயங்கர போடு போட்டு டரியலாக்குனீங்கன்னு பாத்தா இவிங்களையும் கிழிச்சு டாராக்கிட்டியே நைனா....

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த்

/எங்களைத்தான் பயங்கர போடு போட்டு டரியலாக்குனீங்கன்னு பாத்தா இவிங்களையும் கிழிச்சு டாராக்கிட்டியே நைனா..../

=)). இதெல்லாம் ஒரு டரியலா. ம்ம்..ம்ஹூம் விடவா.

கிரி said...

சார் கலக்கலான கமெண்ட்ஸ்

நீங்க தற்போது இதை போல எழுதுவதை (அநியாயத்திற்கு) குறைத்துக்கொண்டது ரொம்ப வருத்தமா இருக்கு சார்

கதிர் - ஈரோடு said...

நறுக் எல்லாமே சுருக்குனு தைக்கிறது...

//இனி ஒரு சொட்டு கண்ணீர்....//
ஏம்மா இதெல்லாம் உங்களுக்கே டூ மச்சா தெரியல....

ஆனா டிவியில அந்தம்மா சிரிச்சிகிட்டு என்னமோ சொன்னாங்க.....
இந்த எச்சரிக்கையை எப்ப விட்டாங்கனு தெரியல

வானம்பாடிகள் said...

கிரி
/சார் கலக்கலான கமெண்ட்ஸ்

நீங்க தற்போது இதை போல எழுதுவதை (அநியாயத்திற்கு) குறைத்துக்கொண்டது ரொம்ப வருத்தமா இருக்கு சார்/

நன்றி கிரி. இந்த கண்றாவியெல்லாம் படிக்கவே வெறுப்பா இருக்கு. பார்க்கலாம்.

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு

/நறுக் எல்லாமே சுருக்குனு தைக்கிறது.../

நமக்கு தைக்கும். அவங்களுக்கு கொசுத்தொல்லை தாங்கல நாராயணா கூட இருக்காது.

/ஆனா டிவியில அந்தம்மா சிரிச்சிகிட்டு என்னமோ சொன்னாங்க.....
இந்த எச்சரிக்கையை எப்ப விட்டாங்கனு தெரியல/

ஆமா கதிர். எச்சரிக்கை மக்களுக்கோ. அழப்படாது. சாக்கிறதன்னு.

கார்த்திகைப் பாண்டியன் said...

:-((((((((((((((((((

வானம்பாடிகள் said...

கார்த்திகைப் பாண்டியன்

வாங்க கார்த்திகைப் பாண்டியன்.

தண்டோரா ...... said...

அப்படி போடு....விலாசி தள்ளிட்டீங்க

வானம்பாடிகள் said...

தண்டோரா ......
/அப்படி போடு....விலாசி தள்ளிட்டீங்க/

அண்ணே நீங்களும் நம்ம கச்சிதானா. சந்தோசம்ணே.

தமிழ் நாடன் said...

அண்ணே உங்கள் வார்த்தைகளை அனைத்தும் உண்மையாலுமே நறுக். ஆனா இதுங்களுக்கு எல்லாம் உறைக்காதன்னே! நம்ப பா.உ -களை பார்க்கும் போது பதிவர் வேல்தர்மா எழுதியுள்ள வரிகள்தான் ஞாபகம் வருது.
பொங்கும் தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
ஆறரை கோடி உறவுகளும்
அறிக்கை விட்டு விட்டு
அம்போ என்று விட்டு விடும்
என்று முழங்கு சங்கே!

புலவன் புலிகேசி said...

//அப்புடி போடு. ஆனா இது பக்ஸேயதான் கேட்டு சொல்லணும். இன்னும் எத்தன மிஞ்சி இருக்குன்னு. இதுங்க டூர் வந்ததுங்க. //

அருமையா சொன்னீங்க.......

க.பாலாஜி said...

//தமிழர்கள் கண்களில் இருந்து இனி ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது:கனிமொழி
வராதுங்க. வரதுக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்கறதில்லையாமே. வரண்டு போச்சு அழுது அழுது!//

நச்சுன்னு சொன்னீங்க...இந்த நச்சுக்களை பத்தி. இவ்வளவு கொடுமையிலையும் இவங்களால எப்படி இந்த மாதிரி பேட்டி கொடுக்க முடியுதோ தெரியல. பாவிங்க....

நல்ல வார்த்தைகள்....

வானம்பாடிகள் said...

தமிழ் நாடன்
/அண்ணே உங்கள் வார்த்தைகளை அனைத்தும் உண்மையாலுமே நறுக். ஆனா இதுங்களுக்கு எல்லாம் உறைக்காதன்னே! நம்ப பா.உ -களை பார்க்கும் போது பதிவர் வேல்தர்மா எழுதியுள்ள வரிகள்தான் ஞாபகம் வருது./

நன்றிங்க. படிச்சேன். அதுதான் உண்மையும் கூட.

வானம்பாடிகள் said...

புலவன் புலிகேசி

/
அருமையா சொன்னீங்க......./

நன்றிங்க புலிகேசி

வானம்பாடிகள் said...

க.பாலாஜி
/நச்சுன்னு சொன்னீங்க...இந்த நச்சுக்களை பத்தி. இவ்வளவு கொடுமையிலையும் இவங்களால எப்படி இந்த மாதிரி பேட்டி கொடுக்க முடியுதோ தெரியல. பாவிங்க..../

யாரோ ஆட்டுவிக்கிறாங்க. நமக்கு கூத்துக் காட்டுறாங்க. அவ்வளவுதான்.