Monday, October 26, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 3.2

இராணுவப் புரட்சி என்ற பீதி ஒன்றை கிளப்ப கோத்தபாய திட்டம்

ஏன்! வெள்ளை வேன்லாம் அலுத்துப் போச்சோ. இப்படி சொல்லி மிச்சம் மீதிய சாவடிக்கவா?
_________________________________________________________________________________________________
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து ஆராய, பசில் விரைவில் டில்லி விஜயம்

இப்போ இறையாண்மை பாதிக்காதோ? இது கூட வசதிக்குதான் இல்லை?
_________________________________________________________________________________________________
இனப்பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், வெளிநாட்டு முதலீட்டு சாத்தியங்கள் குறைவடையலாம்: உலக வங்கி

அதப்பத்தி யாரு கவலைப் படுறா. நீ கடன் குடுப்பல்ல?
_________________________________________________________________________________________________
இலங்கை மீதுள்ள போர்க்குற்றங்களைப் பட்டியலிட்டுள்ளது அமெரிக்கா

ஒன்னொன்னா பொய்னு சொல்லுவான். டிக்கடிச்சிட்டு உக்காரு. போய்யா போக்கத்த வேலை.
_________________________________________________________________________________________________
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை விசாரித்து பொய்யென நிரூபிப்போம்: அரசாங்கம் அறிவிப்பு; ஐ.நா. மனித உரிமை பேரவையின் கோரிக்கைக்கும் கண்டனம்

பாரு பதில் சொல்லிட்டான். முடிவா பொய்னு நிரூபிப்பானாம். இதுல இவரு விசாரிக்கப் போறாரு.
_________________________________________________________________________________________________
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்

இவரு டப்பாவே டேன்சாடுது. இவரு வந்து தூக்கிப் பிடிக்கப் போறாரு.
_________________________________________________________________________________________________
ஐ.நா. வின் அமைதி காக்கும் பணிகளுக்கு அதிக படைவீரர்களை அனுப்ப முடியும்: இலங்கை அரசாங்கம்

ஒரு வாட்டி அனுப்பி சின்னப் புள்ளைங்களை கற்பழிச்ச எக்ஸ்பர்ட்சாச்சே. அட நீங்க அநியாயம் பண்ணப்பவே அவன் யாரையும் அனுப்பல. இதுல உங்கள வேற சேர்த்து என்ன பண்ண?
_________________________________________________________________________________________________
வடக்கு கிழக்கு இடம்பெயர் முகாம்களின் நிலைமை திருப்தி அளிக்கின்றது: அமெரிக்கத் தூதுவர்

ங்கொய்யாலே. உள்ளயாச்சும் போயிருக்குமா இந்தம்மா? வண்டிக்குள்ள டிஷ்யூ பொத்திண்டு போயிட்டு ,கிருமி நாசினில ஊறிட்டு சொல்லுது.சை.
_________________________________________________________________________________________________
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அகதிகளாக வெளியேறுகின்றவர்களுக்கு, இலங்கை பாதுகாப்பு தரப்பினர் உதவி வழங்குவதாக அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சொன்ன நாய் எப்புடி வந்துச்சோ. அப்படியாவது தப்பிக்கட்டுமே. இவனுக்கேன் காண்டு.
_________________________________________________________________________________________________
திருகோணமலைக்கு அனுப்பட்டவர்களில் புலி உறுப்பினர்கள் கைது - இலங்கை இராணுவம்

அனுப்புனா மாதிரி அனுப்புறது. அப்புறம் திரும்ப இப்புடி சொல்லி புடிச்சிக்கலாம். என்னா பொழப்புடா இது.
_________________________________________________________________________________________________
இலங்கை விடயத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

அது கேட்டுகிட்டேதான் இருக்காங்க அப்பப்ப. பதில் யாரு சொல்றா?
_________________________________________________________________________________________________
தமிழர்களுக்கு எதிராக தபால் திணைக்களத்தில் முறைகேடு

அவன் எப்புடி பங்கு போடுறது. மனுசன எப்புடியெல்லாம் வதைச்சிருக்கானுவ பேப்பயலுவ.
_________________________________________________________________________________________________
ஓசியன் லேடி கப்பல் புலிகளுடையது என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

கப்பல் திருட இது ஒரு வழியாடா?
_________________________________________________________________________________________________
அமெரிக்க அரச நிகழ்வில் பங்குபற்ற பொன்சேகாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு அந்நாட்டு அரசினால் ரத்து

சந்தோசம் சாமிகளா. எங்காளுங்க மாதிரி இல்ல.
_________________________________________________________________________________________________
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அனைவரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர்: டி.ஆர்.பாலு

என்னா துறை தரேன்னாங்க தலிவா? என்னமோ இவரு லிஸ்ட் வெச்சிகிட்டு இவருட்ட சொல்லிட்டு அனுப்பினா மாதிரி.

_________________________________________________________________________________________________
உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்போம்: இலங்கை அமைச்சர்

ங்கொய்யாலே. இனக்காவலன், மொழிக்காவலன், அதும் செம்மொழி (எவ்ளோ ரத்தம்) நீதாண்டி. கண்டிப்பா கூப்டுவானுங்கோ.
_________________________________________________________________________________________________

இலங்கை பிரச்னைகளில் பெரிய நாடு என்பதால் இந்தியா தலையிட முடியாது. அதைவிட பெரிய நாடு என்ற வகையில்தான் சீனா தலையிடுகிறது’’ அமைச்சர்முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

ஜப்பான், பாகிஸ்தான் எல்லாம் ஆயுதம் குடுத்தானே எந்த கணக்கில. அமைதின்னா மட்டும் சைசாய்யா தமிழ் நண்டே.
_________________________________________________________________________________________________

சென்னை: சரவணா செல்வரத்தினம் கடைக்கு சீல்

தீபாவ‌ளி க‌ல்லா க‌ட்டியாச்சி. கிறிஸ்ம‌ஸ்குள்ள‌ ஸ்டே வாங்கிடுவாங்க‌. 
 _________________________________________________________________________________________________
டிக்கெட் எடுக்காமல் வந்த போலீஸ்காருக்கு சிறை

பெயிலில்லாம‌ வெளிய‌ வ‌ந்துடுவாரு. ஹெ ஹெ.
_________________________________________________________________________________________________
மொட்டை அடித்து பெண் சித்ரவதை : கணவர், மாமியார் கைது

எந்த‌ சீரிய‌ல்ல‌ முத‌ல்ல‌ இத‌ சுட‌ப்போறானோ.

_________________________________________________________________________________________________

55 comments:

பிரபாகர் said...

இலங்கை விஷயங்களில் உங்கள் கருத்துக்கள் மிக அருமை அய்யா... ஊதுற சங்க ஊதுவோம்...

சரவணா ஸ்டோர்ஸ் வழக்கமான ஒன்று. காசு கொடுக்காம இருந்திருப்பாங்கன்னு சரியா சொல்றீங்க..

மாமியார் மேட்டர்ல வழக்கமான உங்களின் லொள்...

பிரபாகர்.

வானம்பாடிகள் said...

பிரபாகர் said...
/ஊதுற சங்க ஊதுவோம்.../

இது என் புலம்பல்

/சரவணா ஸ்டோர்ஸ் வழக்கமான ஒன்று. காசு கொடுக்காம இருந்திருப்பாங்கன்னு சரியா சொல்றீங்க../

ஹி ஹி. கம்பேனி சீக்ரட்

/மாமியார் மேட்டர்ல வழக்கமான உங்களின் லொள்.../

அய்யோ அது லொள் இல்லைங்க..லொள்ளு=))

கலகலப்ரியா said...

nithanama poduren pinnoottam..

வானம்பாடிகள் said...

அண்ணே இராகவன் அண்ணே. வாங்க:)

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/nithanama poduren pinnoottam../

சரி.

பிரபாகர் said...

அய்யா மன்னிச்சுக்கோங்க... லொல் என்பது பிழையாய்..

இராகவன் நைஜிரியா said...

அண்ணன் பிரபாகர் அவர்களின் கருத்தை நான் வழி மொழிகிறேன்.

// மொட்டை அடித்து பெண் சித்ரவதை : கணவர், மாமியார் கைது

எந்த‌ சீரிய‌ல்ல‌ முத‌ல்ல‌ இத‌ சுட‌ப்போறானோ. //

நல்லா விசாரிச்சுப் பாருங்க எதாவது சீரியலில் முன்பே வந்திருக்கும்.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
அண்ணே இராகவன் அண்ணே. வாங்க:) //

வந்துட்டோமில்ல..

கதிர் - ஈரோடு said...

//ஐ.நா. வின் அமைதி காக்கும் பணிகளுக்கு அதிக படைவீரர்களை அனுப்ப முடியும்: இலங்கை அரசாங்கம்//

நேரத்த பாருங்களேன்....

கலகலப்ரியா said...

//இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அகதிகளாக வெளியேறுகின்றவர்களுக்கு, இலங்கை பாதுகாப்பு தரப்பினர் உதவி வழங்குவதாக அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சொன்ன நாய் எப்புடி வந்துச்சோ. அப்படியாவது தப்பிக்கட்டுமே. இவனுக்கேன் காண்டு. //

இவன்தானுங்க தமிழன்.. !

வானம்பாடிகள் said...

பிரபாகர் said...

/அய்யா மன்னிச்சுக்கோங்க... லொல் என்பது பிழையாய்../

=)) ச்சும்மா தான் சொன்னென்.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/நல்லா விசாரிச்சுப் பாருங்க எதாவது சீரியலில் முன்பே வந்திருக்கும்./

அய். இருக்கலாம்.

கலகலப்ரியா said...

//இலங்கை மீதுள்ள போர்க்குற்றங்களைப் பட்டியலிட்டுள்ளது அமெரிக்கா

ஒன்னொன்னா பொய்னு சொல்லுவான். டிக்கடிச்சிட்டு உக்காரு. போய்யா போக்கத்த வேலை.//

ஏனுங்க... வருஷக் கணக்கா பட்டியல் போடுறியளே.. இன்னுமா முடியல..? பில் கேட் கிட்ட சொல்லி நல்ல சாப்ட்வேர் ஒண்ணு வாங்குங்க... அப்புறம்.. பட்டியல் போட்டு என்ன பண்ண போறீக..? கேம் ஏதாவது ரெடி பண்ண போறியளா...? இல்ல.. தீவிர வாதத்தை ஒழிப்பது எப்டி அப்டின்னு சிடி வெளியிட போறியளா..? நல்லா இருங்கடா சாமிங்களா..

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு said...

/நேரத்த பாருங்களேன்..../

அவ்வளவு ஏறிப்போய் கெடக்கு நாய்ங்களுக்கு.

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
/இவன்தானுங்க தமிழன்.. !/

படிக்கிறப்பவே பத்திகிட்டு வருதும்மா. இவன் போய்ட்டு அவன் வந்தா இவன் வாய்ல இருந்தா சோத்த புடிங்கி திங்கப்போறான். எதுக்கு இப்புடி

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
/ஏனுங்க... வருஷக் கணக்கா பட்டியல் போடுறியளே.. இன்னுமா முடியல..? பில் கேட் கிட்ட சொல்லி நல்ல சாப்ட்வேர் ஒண்ணு வாங்குங்க... அப்புறம்.. பட்டியல் போட்டு என்ன பண்ண போறீக..? கேம் ஏதாவது ரெடி பண்ண போறியளா...? இல்ல.. தீவிர வாதத்தை ஒழிப்பது எப்டி அப்டின்னு சிடி வெளியிட போறியளா..? நல்லா இருங்கடா சாமிங்களா../

ஹி ஹி. அவரே விசாரிக்கறேன்னுட்டாராம். அதனால இவரு சரியா பண்றாங்களான்னு பார்க்க போறாராம்.

இப்படிக்கு நிஜாம்.., said...

//சென்னை: சரவணா செல்வரத்தினம் கடைக்கு சீல்

தீபாவ‌ளி க‌ல்லா க‌ட்டியாச்சி. கிறிஸ்ம‌ஸ்குள்ள‌ ஸ்டே வாங்கிடுவாங்க‌. //

அண்ணே! அது இப்ப தான் புதுசா கட்டுற பில்டிங். இன்னும் கொஞ்சம் நாள்ள ரங்கநாதன் தெரு சரவணா தெருன்னு மாறினாலும் மாறிடும் போல.

தீப்பெட்டி said...

நீங்க நல்லா நறுக்குனுதான் கேட்குறீங்க..

சொரணையத்து போய்ட்டாங்களே ரொம்ப பேரு..

க.பாலாசி said...

//அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை விசாரித்து பொய்யென நிரூபிப்போம்: அரசாங்கம் அறிவிப்பு; ஐ.நா. மனித உரிமை பேரவையின் கோரிக்கைக்கும் கண்டனம்
பாரு பதில் சொல்லிட்டான். முடிவா பொய்னு நிரூபிப்பானாம். இதுல இவரு விசாரிக்கப் போறாரு.//

இவனுங்க எப்பவுமே இப்படித்தான் தலைவா. என்னைக்கு இவனுக ஒத்துகிட்டானுவோ.

//ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்
இவரு டப்பாவே டேன்சாடுது. இவரு வந்து தூக்கிப் பிடிக்கப் போறாரு.//

அதானே....

//மொட்டை அடித்து பெண் சித்ரவதை : கணவர், மாமியார் கைது
எந்த‌ சீரிய‌ல்ல‌ முத‌ல்ல‌ இத‌ சுட‌ப்போறானோ. //

இல்ல...இதுமாதிரி எந்த சீரியல்ல வந்துதோ?

இராகவன் நைஜிரியா said...

// இராணுவப் புரட்சி என்ற பீதி ஒன்றை கிளப்ப கோத்தபாய திட்டம்

ஏன்! வெள்ளை வேன்லாம் அலுத்துப் போச்சோ. இப்படி சொல்லி மிச்சம் மீதிய சாவடிக்கவா? //

அண்ணே வெள்ளை வேன் போரடிச்சுப் போச்சாம். ஒரே மாதிரி இருந்தா, போரடிக்குமில்ல... அதான் மாத்தி பார்க்கிறாங்க.

இராகவன் நைஜிரியா said...

// இனப்பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், வெளிநாட்டு முதலீட்டு சாத்தியங்கள் குறைவடையலாம்: உலக வங்கி

அதப்பத்தி யாரு கவலைப் படுறா. நீ கடன் குடுப்பல்ல? //

அத தீர்த்துட்டா, அப்புறம் சொல்வதற்கு வேறு விசயமே கிடையாதுங்களே... அதை தீர்க்க விட மாட்டோமில்ல..

இராகவன் நைஜிரியா said...

// அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை விசாரித்து பொய்யென நிரூபிப்போம்: அரசாங்கம் அறிவிப்பு; ஐ.நா. மனித உரிமை பேரவையின் கோரிக்கைக்கும் கண்டனம் //

அங்க கொஞ்சம் டங் சிலிப்பாயி, நிரூபிப்போம் அப்படின்னு சொல்லிட்டாங்க... அது அறிவிப்போம் அப்படின்னு இருக்க வேண்டயதுங்க..

அறிவிப்புக்கு, நிருபனம் தேவையில்லைதானே..

இராகவன் நைஜிரியா said...

// வடக்கு கிழக்கு இடம்பெயர் முகாம்களின் நிலைமை திருப்தி அளிக்கின்றது: அமெரிக்கத் தூதுவர்

ங்கொய்யாலே. உள்ளயாச்சும் போயிருக்குமா இந்தம்மா? வண்டிக்குள்ள டிஷ்யூ பொத்திண்டு போயிட்டு ,கிருமி நாசினில ஊறிட்டு சொல்லுது.சை. //

அண்ட புளுகணும், ஆகாசப் புளுகணும் சேர்ந்துட்டாங்கப்பா..

இராகவன் நைஜிரியா said...

// டிக்கெட் எடுக்காமல் வந்த போலீஸ்காருக்கு சிறை

பெயிலில்லாம‌ வெளிய‌ வ‌ந்துடுவாரு. ஹெ ஹெ.//

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சுமுகமான உறவில்லைங்களா?

அகல் விளக்கு said...

வழக்கம் போல இல்லாமல்
கூடுதலாய் கார சாரமாக V.3.2 இருக்கு சார்.

தொடருங்கள்...

லவ்டேல் மேடி said...

நீங்க என்னதான் நறுக்குன்னு கேட்டாலும்... நம்ம அரசியல் வியாதிங்கேல்லாம் வடிவேலு மாதிரி.... ( ___ சந்து கேசுங்க.... எவ்ளோ அடுச்சாலும் தாங்குவானுங்க.....)

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...
/இவனுங்க எப்பவுமே இப்படித்தான் தலைவா. என்னைக்கு இவனுக ஒத்துகிட்டானுவோ./

அதானே எரியுது. நன்றி

வானம்பாடிகள் said...

தீப்பெட்டி said...

/ நீங்க நல்லா நறுக்குனுதான் கேட்குறீங்க..

சொரணையத்து போய்ட்டாங்களே ரொம்ப பேரு../

;)

வானம்பாடிகள் said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/அண்ணே! அது இப்ப தான் புதுசா கட்டுற பில்டிங். இன்னும் கொஞ்சம் நாள்ள ரங்கநாதன் தெரு சரவணா தெருன்னு மாறினாலும் மாறிடும் போல./

ஹே ஹே. தெரியும்ணே. கட்ட வேண்டியத கட்டி இருக்க மாட்டாரு அதான்=))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே வெள்ளை வேன் போரடிச்சுப் போச்சாம். ஒரே மாதிரி இருந்தா, போரடிக்குமில்ல... அதான் மாத்தி பார்க்கிறாங்க./

நாத்ரிப்பசங்க வெள்ளைக் கொடி, வெள்ளை வேனுக்கு அர்த்தத்தையே மாத்திட்டாங்களேண்ணே

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said.
/அத தீர்த்துட்டா, அப்புறம் சொல்வதற்கு வேறு விசயமே கிடையாதுங்களே... அதை தீர்க்க விட மாட்டோமில்ல../

சொல்றதுக்கா கொல்றதுக்கா.

/அறிவிப்புக்கு, நிருபனம் தேவையில்லைதானே../

அதான்செரி

/அண்ட புளுகணும், ஆகாசப் புளுகணும் சேர்ந்துட்டாங்கப்பா../

கரெக்சன். ஆகாசப் புளுகியும்

/மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சுமுகமான உறவில்லைங்களா?/

தாயா புள்ளையான்னாலும் வாயும் வயிறும் வேற..ஹி ஹி

வானம்பாடிகள் said...

அகல் விளக்கு said...

/வழக்கம் போல இல்லாமல்
கூடுதலாய் கார சாரமாக V.3.2 இருக்கு சார்.

தொடருங்கள்.../

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

லவ்டேல் மேடி said...

/நீங்க என்னதான் நறுக்குன்னு கேட்டாலும்... நம்ம அரசியல் வியாதிங்கேல்லாம் வடிவேலு மாதிரி.... ( ___ சந்து கேசுங்க.... எவ்ளோ அடுச்சாலும் தாங்குவானுங்க.....)/

அவனுங்க நம்மள அப்புடி நினைச்சுதானே அடிக்கிறான்..

பிரியமுடன்...வசந்த் said...

// கோத்தபாய //

அவன் பேரை கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணி எழுதுனா குறைஞ்சா போயிடுவ...

பிரியமுடன்...வசந்த் said...

//உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்போம்: இலங்கை அமைச்சர்//

வந்து பாரு...

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/அவன் பேரை கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணி எழுதுனா குறைஞ்சா போயிடுவ.../

:>. இப்போ மட்டும் படிக்கிறவங்க அப்படித்தானே படிக்கறது.=))

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/வந்து பாரு.../

அட போப்பா. போனவாரம் ராஜபக்ஸே சொந்தக்காரன் இங்க கோவில்ல ஸ்பெஷல் பூஜை பண்ணிட்டு போயிருக்கான். நம்மாளுங்க நக்கற நாய்க்கு செக்கா சிவலிங்கமா எல்லாம் ஒண்ணுதான்னு எழவெடுத்திருக்காங்க. இதுல வந்து பார்க்கவாம்.

மா.குருபரன் said...

//இலங்கை விடயத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

அது கேட்டுகிட்டேதான் இருக்காங்க அப்பப்ப. பதில் யாரு சொல்றா?//

நல்லா இருக்குங்க....

உங்களுடை சிந்தனைகள் சூப்பரா இருக்குங்கண்ணாச்சி......

வாழ்த்துகள் வாழ்த்துகள்...

வானம்பாடிகள் said...

மா.குருபரன் said...

/நல்லா இருக்குங்க....

உங்களுடை சிந்தனைகள் சூப்பரா இருக்குங்கண்ணாச்சி......

வாழ்த்துகள் வாழ்த்துகள்.../

நன்றிங்க தம்பி.

வெண்ணிற இரவுகள்....! said...

//இலங்கை மீதுள்ள போர்க்குற்றங்களைப் பட்டியலிட்டுள்ளது அமெரிக்கா

ஒன்னொன்னா பொய்னு சொல்லுவான். டிக்கடிச்சிட்டு உக்காரு. போய்யா போக்கத்த வேலை.//
அற்புதம் ஐயா

வானம்பாடிகள் said...

வெண்ணிற இரவுகள்....! said..

/அற்புதம் ஐயா/

நன்றிங்க.

அது சரி said...

//
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அனைவரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர்: டி.ஆர்.பாலு

//

ராஜபக்ஷே கும்பலை விட கேவலமான பிண்ந்தின்னி கும்பல் ஒன்று உண்டு...அதை யார் என்பதை காட்டுவது இந்த பேச்சு...

வானம்பாடிகள் said...

அது சரி said...

/ராஜபக்ஷே கும்பலை விட கேவலமான பிண்ந்தின்னி கும்பல் ஒன்று உண்டு...அதை யார் என்பதை காட்டுவது இந்த பேச்சு.../

சரியாச் சொன்னீங்க ஸார்.

சத்ரியன் said...

//கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அனைவரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர்: டி.ஆர்.பாலு//

**என்னா துறை தரேன்னாங்க தலிவா? என்னமோ இவரு லிஸ்ட் வெச்சிகிட்டு இவருட்ட சொல்லிட்டு அனுப்பினா மாதிரி. **

அண்ணாச்சி,

அந்த தி.தே....யாப் பயலுக்கு கிழக்கு மாகாணத்துல எதுனா "வண்ணாந்துறை" குடுக்கறேன்னு சொல்லியிருப்பான்.

நக்கித்திண்ணப் போன நாய்கள் வாலாட்டிட்டு( நன்றியோட) நின்ன "ஸ்டில்ஸ்" தான் நெறைய பாத்தமே...?

பாமரா, செம காட்டு காட்டி கீரபா....!

தமிழ் நாடன் said...

///உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்போம்: இலங்கை அமைச்சர்

ங்கொய்யாலே. இனக்காவலன், மொழிக்காவலன், அதும் செம்மொழி (எவ்ளோ ரத்தம்) நீதாண்டி. கண்டிப்பா கூப்டுவானுங்கோ.///

கூப்பிடறது மட்டுமில்ல இரத்தின கம்பள வரவேற்பு பட்டாடை போர்த்துதல் பிரியாணி விருந்து அப்படீன்னு அமர்க்க படுத்திடுவாறு நம்ம இனமானக்காவலர்!

வானம்பாடிகள் said...

சத்ரியன் said...
/பாமரா, செம காட்டு காட்டி கீரபா....!/

அது செரி:)

வானம்பாடிகள் said...

தமிழ் நாடன் said...
/கூப்பிடறது மட்டுமில்ல இரத்தின கம்பள வரவேற்பு பட்டாடை போர்த்துதல் பிரியாணி விருந்து அப்படீன்னு அமர்க்க படுத்திடுவாறு நம்ம இனமானக்காவலர்!/

ஆமாங்க

ரோஸ்விக் said...

உங்களோட நறுக்குன்னு நாலு வார்த்த-க்கு நான் பரம(பாமர) ரசிகன். நல்ல கேளுங்க...இன்னொரு "று" கூட போட்டுக்கலாம் போல இருக்கு... "நறுறுக்குன்னு"

ஈ ரா said...

--(
--)

வானம்பாடிகள் said...

ரோஸ்விக் said...

/உங்களோட நறுக்குன்னு நாலு வார்த்த-க்கு நான் பரம(பாமர) ரசிகன். நல்ல கேளுங்க...இன்னொரு "று" கூட போட்டுக்கலாம் போல இருக்கு... "நறுறுக்குன்னு"/

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

ஈ ரா said...

/ --(
--)/

:-?
:-??

ராஜ நடராஜன் said...

//உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்போம்: இலங்கை அமைச்சர்

ங்கொய்யாலே. இனக்காவலன், மொழிக்காவலன், அதும் செம்மொழி (எவ்ளோ ரத்தம்) நீதாண்டி. கண்டிப்பா கூப்டுவானுங்கோ.//

படிச்சிகிட்டே வந்தேனா!செம்மொழி (எவ்ளோ ரத்தம்)மாநாடு ஏன் என்பது இப்பொழுதுதான் புரிகிறது.

ராஜ நடராஜன் said...

செமக் கூட்டம் கூடுதுங்கண்ணோவ்!வாழ்த்துக்கள்.

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...
/படிச்சிகிட்டே வந்தேனா!செம்மொழி (எவ்ளோ ரத்தம்)மாநாடு ஏன் என்பது இப்பொழுதுதான் புரிகிறது./

ம்ம். வயத்தெரிச்சலா இருக்குங்க.

/ செமக் கூட்டம் கூடுதுங்கண்ணோவ்!வாழ்த்துக்கள்./

நன்றிங்கண்ணா.:)

கிரி said...

//உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்போம்: இலங்கை அமைச்சர்/

:-))

//மொட்டை அடித்து பெண் சித்ரவதை : கணவர், மாமியார் கைது

எந்த‌ சீரிய‌ல்ல‌ முத‌ல்ல‌ இத‌ சுட‌ப்போறானோ. //

நினைத்தாலே கலக்குது (வயிற்றை)