Thursday, October 15, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 3.0ஒன்னொன்னு மூஞ்சிலயும் பாரு எவ்வளவு சோகம். பரதேசிங்க. இழவு வீட்ல கலியாணம் பேச போனா மாதிரி இருக்கு.


வரது மழைக்காலமாம். ஒரே சேறா இருக்குமாமே. சேத்துக் கால்வாய் திட்டம்னு அண்ணண்ட சொல்லி அதுக்கு என்ன மந்திரியா போடுங்கப்பா. கை அரிக்குது.உங்கள எல்லாம் பார்த்தப்புறம் நான் என்ன வேணா பண்ணலாம், ஒருத்தனும் ஒன்னும் கேக்க முடியாதுன்னு பூரிச்சி போவுது. அதே மூஞ்சிங்க! என்னாமா சீன் போடுதுங்க எழவுக்கு போய்ட்டு வந்தா மாதிரி!

கலைஞர்: அவனுக்கு போத்துனா மாதிரி ஒரு நாளாவது சிரிச்சிகிட்டு எனக்கு போர்த்துனீங்களா? சரி சரி. இலங்கைக்கு தூதனுப்பிய இனமானக் காவலர் விருதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. டேன்ஸ் முக்கியம்.மக்களுக்கு குடிநீர் இல்லை; மாற்று ஆடைகூட இல்லாமல் ஒரே ஆடையில் பல நாட்களாக இருப்பதைக் கண்டோம்: இந்திய தூதுக்குழு முதல்வரிடம் அறிக்கை

பாருங்க. செட்டப்புலயே இவ்வளவு தெரியுதே. இன்னும் மிச்சமிருக்கிறது எவ்வளவு இருக்கும்..
____________________________________________________________________________________________
பிரபாகரன் மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு தள்ளிவைப்பு: இறப்பு சான்றிதழ் கிடைத்தவுடன் 17 ஆண்டு விசாரணை முடிவுக்கு வரும்

மாவீரர் நாள்ள வருவாருன்னு நெடுமாறன் ஐயா சொன்னாரே. அதானா? ஜனங்கள ஏமாத்தலாம். கோர்ட்ட கூமாங்குன்னு நினைச்சா குவாட்டரோச்சி கேசும் திரும்ப தொறக்க வேண்டி வருமேன்னு உசாராய்ட்டாங்க போல.
____________________________________________________________________________________________

ஊழல் மோசடிகளை இல்லாதொழித்தன் மூலமே யுத்த வெற்றி ஈட்டப்பட்டது: சரத் பொன்சேகா

ஆமாம். டைர‌க்ட் டீலிங்ல‌ ஊழ‌ல் எப்புடி வ‌ரும். அப்ப‌டின்னா நீ புடிங்கின‌தால‌ன்னு ப‌த‌வி உய‌ர்வெல்லாம் எதுக்கு குடுத்தானுவ‌?
____________________________________________________________________________________________

இடம்பெயர்ந்துள்ள மக்களின் மன்றாட்டத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தோம்: முகாம்களின் நிலைமை திருப்திகரமாக இல்லை: திருமா

தெரியாம‌தான் கேக்குறேன். அவ‌ங்க‌ளுக்கு திருப்திக‌ர‌மா இல்லையான்னு முடிவு செய்ய‌ நீங்க‌ யாரு?
____________________________________________________________________________________________

இரண்டரை லட்சம் மக்களில் 58 ஆயிரம் பேர் 15 நாட்களில் மீள்குடியேற்றப்படுவர்: மு. கருணாநிதி

ஹ‌ய்ய்ய்ய்யோ. ஹ‌ய்ய்ய்ய்யோ. இதெல்லாம் ந‌ம்ப‌ப்போறாங்க‌ளான்னு கூசாம‌ எப்பிடி ஐய்யா பேசுறீங்க‌.
____________________________________________________________________________________________

விடுதலைப் புலிகள் என 11,000 பேர் இனங்காணப்பட்டமையின் சுயாதீனத்தன்மை தொடர்பாக கேள்வி எழுப்புகின்றது பிரித்தானியா

கேளுங்க‌ கேளுங்க‌ கேட்டுகிட்டே இருங்க‌. துட்ட‌ குடுக்குற‌வ‌ன் கேட்ட‌ கேள்விக்கே ப‌தில் சொல்லாம‌ போயாங்குறான். இவ‌ருக்கு ப‌தில் சொல்லிட்டுதான் ம‌று வேலை.
____________________________________________________________________________________________

இலங்கை தமிழர்கள் அவதிப்பட வேண்டும் என்றே ஜெயலலிதா விரும்புகிறார்: கலைஞர்

அவ‌ங்க‌ என்ன‌ விரும்புறாங்க‌ன்னு அவ‌ங்க‌ சொல்லுவாங்க‌. நீங்க‌ என்ன‌ விரும்பினீங்க‌ன்னு சொல்லுங்க‌ய்யா.
____________________________________________________________________________________________

ராஜபக்சேவின் நகைச்சுவை: திருமாவளவன்சிரிச்சிகிட்டே செருப்பால அடிப்பேன்னா நகைச்சுவையா. உங்க முகத்தப் பார்த்தா கிலியடிச்சி போய் இருக்கே.
____________________________________________________________________________________________

முகாம்களில் இருந்து 58 ஆயிரம் பேர் வெளியேற்றம்: எங்களுடைய பயணத்தால் கிடைத்த வெற்றி: திருமா

ஏங்க‌? நீங்க‌ அப்பாவியா? இல்ல‌ அட‌ப்பாவியா?
____________________________________________________________________________________________

இலங்கை முகாம்களில் தமிழர்கள் குறைபாட்டோடு தான் இருக்கிறார்கள்: கலைஞர்

ஆமாங்க. எல்லாம் கிடைக்குதாம். நல்லா இருக்காங்களாம். இலவச தொலைக்காட்சி பெட்டில கலைஞர் டிவி பார்க்கமுடியாதது தான் பெரும் குறையாமுங்க.
____________________________________________________________________________________________

ராஜபக்சே அழைப்பை ஏற்று இலங்கை செல்லாதது ஏன்?: ஜெயலலிதாவுக்கு தங்கபாலு கேள்வி

நிஜம்மா சொல்லுங்க டங்குவாலு. நல்லகாலம் நான் ஜெயிக்கல. இல்லன்னா நீயேன் போகலன்னு டரியலாக்கி இருப்பாங்கன்னு குசியாதானே இப்புடி கேக்குறீங்க?
____________________________________________________________________________________________

தீபாவளி: டாஸ்மாக் கடைகளில் அதிக சரக்குகள்

அது முக்கியம். கட்டிங் வரவேணாமா?
____________________________________________________________________________________________

மைசூர் மகாராஜா வழங்கிய ஒட்டியாணத்தை புரட்டிப் பார்த்த ஜெயலலிதா: கலைஞர்

இதென்னாங்க அனியாயம். ரெண்டுபேரும் ஒரே மாதிரியாச்சா. பெல்டக் குடுத்துட்டாரோன்னு பார்த்திருப்பாங்க.
____________________________________________________________________________________________

தமிழக மக்களுக்கு உழைக்க என்னை வழங்கியிருப்பதே என் பெற்றோர் செய்த தியாகம்: கலைஞர்

அப்படின்னா எது நாங்க செய்த பாவம்?
____________________________________________________________________________________________


61 comments:

கலகலப்ரியா said...

//பிரபாகரன் மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு தள்ளிவைப்பு: இறப்பு சான்றிதழ் கிடைத்தவுடன் 17 ஆண்டு விசாரணை முடிவுக்கு வரும்//

அந்த சான்றிதழ் யாருங்க கொடுக்குறாங்க...? எனக்கும் நிறைய பேரோட இறப்பு சான்றிதழ் தேவையா இருக்கு.. ஐக்கிய இலங்கை அதிபரோடது உட்பட..!

//முகாம்களின் நிலைமை திருப்திகரமாக இல்லை: திருமா//

இந்த மாதிரி டிப்ளோஓஓஓஓஓமட்டிக்கா பேசுறத எப்போ நிறுத்தி தொலைவீங்க..? யார்தான் லோகத்ல திருப்திகரமா இருக்காங்க.. திருப்தின்னு பேரு வச்சவன் கூட அப்டி இருக்க முடியாது..! ப்ளடி ****"ç%&/`?=)("*...!!!

இப்டி சொகுசா போயி பலகாரம் சாப்டு.. வெள்ளையும் சொள்ளையுமா அலையுற உங்கள எல்லாம் கொண்டு போயி.. நானூறு நாள் கழுவாத கக்கூஸ்ல உக்கார வச்சு.. உடுக்க துணி கொடுக்காம.. குடிக்க தண்ணி கொடுக்காம விட்டா.. நிலைமை திருப்தி கரமா இல்லைனாடா சொல்லுவீங்க.. த்த்த்த்..............!

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
/இப்டி சொகுசா போயி பலகாரம் சாப்டு.. வெள்ளையும் சொள்ளையுமா அலையுற உங்கள எல்லாம் கொண்டு போயி.. நானூறு நாள் கழுவாத கக்கூஸ்ல உக்கார வச்சு.. உடுக்க துணி கொடுக்காம.. குடிக்க தண்ணி கொடுக்காம விட்டா.. நிலைமை திருப்தி கரமா இல்லைனாடா சொல்லுவீங்க.. த்த்த்த்..............!/

ஒரே நாள்ள இவனுங்களுக்கு ஏற்பாடு சரியில்லைன்னு கலெக்டரை கத்தி மன்னிப்பு கூட கேக்காத வந்தவரு. இவனுங்களுக்கு திருப்தி பத்தி பேச வேற முடியுது.

கதிர் - ஈரோடு said...

படிக்க படிக்க வயிறெரிந்தது...

வேறென்ன சொல்ல இப்போதைக்கு

கலகலப்ரியா said...

//இரண்டரை லட்சம் மக்களில் 58 ஆயிரம் பேர் 15 நாட்களில் மீள்குடியேற்றப்படுவர்: மு. கருணாநிதி//

லாட்டரி ஏதாவது வாங்கணுமாங்க..? அது என்னங்க ஐம்பத்தெட்டு.. உங்களோட அம்பத்தெட்டாவது "கல்யாண" நாளா..? இல்ல வேற ஏதாவது செண்டிமெண்டா..? ரெண்டு லட்சத்தில எட்டாயிரம் போனா.. மீதி ஒரு லட்சத்து தொண்ணூத்தி ரெண்டாயிரம் மக்கள்தானே.. மூணு லட்சத்த ஒரு லட்சம் ஆக்கிட்டோம்லன்னு ரொம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப கெட்டிக்காரத்தனமா பண்ணிப்புட்டீகல்ல...

ஆமாம் அந்த வெறும் ஒரு லட்சத்த எந்தக் கடல்ல கலக்க போறீக..?

Kiruthikan Kumarasamy said...

அடப்பாவிகளா.. எனக்கு முன்னமே கருத்துப் போட்டாச்சா???

என்னாது காதலர் சந்திப்பு, பதிவர் சந்திப்பு மாதிரி படம் எல்லாம் போட்டதுக்குப் பிறகும் பாலா சும்மா இருக்கிறாரே எண்டு பாத்தன். சொல்லி வேலையில்லை...கலக்கிட்டீங்க பாலா

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு said...

/படிக்க படிக்க வயிறெரிந்தது...

வேறென்ன சொல்ல இப்போதைக்கு/

ம்ம்

கலகலப்ரியா said...

//விடுதலைப் புலிகள் என 11,000 பேர் இனங்காணப்பட்டமையின் //

11000 ஒன்லி..? வாட் த ஹெல்? அப்போ மீளக் குடி அமர்த்தப் போறது எல்லாம் சிங்களமா..?

சூர்யா ௧ண்ணன் said...

"நறுக்குன்னு நாலு வார்த்த" க்கு பதிலா, நாக்க புடுங்குற மாதிரி நாலு வார்த்த ன்னு சொல்லலாம்.
(இந்த மானங்கெட்ட ஜடங்களுக்கு, எதுவும் உறைக்காது தலைவா! )

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
/ஆமாம் அந்த வெறும் ஒரு லட்சத்த எந்தக் கடல்ல கலக்க போறீக..?/

வித்த காட்டி பிழைக்கிற பரதேசிங்களாச்சேம்மா. இனப் படுகொலையென்னா? இதும் ஒரு விதத்தில மிரட்டி பணம் பறிக்கிறது தானே.

வானம்பாடிகள் said...

Kiruthikan Kumarasamy said...

/அடப்பாவிகளா.. எனக்கு முன்னமே கருத்துப் போட்டாச்சா???

என்னாது காதலர் சந்திப்பு, பதிவர் சந்திப்பு மாதிரி படம் எல்லாம் போட்டதுக்குப் பிறகும் பாலா சும்மா இருக்கிறாரே எண்டு பாத்தன். சொல்லி வேலையில்லை...கலக்கிட்டீங்க பாலா/

தாங்கா மாட்டாத வலியும் எரிச்சலும். இவனுங்க போய் கிழிச்சது என்ன? படுபாவிங்க.

கலகலப்ரியா said...

//தமிழர்கள் அவதிப்பட வேண்டும் என்றே//

ஓஹோ.. இனிமேதான் அவதிப்படவே போறாய்ங்களாம்யா.. பாப் கார்ன் வாங்கிட்டு வரேன் இருங்கோ.. சாப்டுக்கிட்டே பார்க்கலாம்..

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
/11000 ஒன்லி..? வாட் த ஹெல்? அப்போ மீளக் குடி அமர்த்தப் போறது எல்லாம் சிங்களமா..?/

தோ. அது முதல் தவணை. மொத்தமா எல்லாரும் அதான்னா பொழப்பு எப்படி போகும். அவ்வ்வ்வ்.

வானம்பாடிகள் said...

சூர்யா ௧ண்ணன் said...

/ "நறுக்குன்னு நாலு வார்த்த" க்கு பதிலா, நாக்க புடுங்குற மாதிரி நாலு வார்த்த ன்னு சொல்லலாம்.
(இந்த மானங்கெட்ட ஜடங்களுக்கு, எதுவும் உறைக்காது தலைவா! )/

இவனுங்களையும் நம்புவானுங்களே தலைவா நம்மாளுங்க.

பிரியமுடன்...வசந்த் said...

//மைசூர் மகாராஜா வழங்கிய ஒட்டியாணத்தை புரட்டிப் பார்த்த ஜெயலலிதா: கலைஞர்

இதென்னாங்க அனியாயம். ரெண்டுபேரும் ஒரே மாதிரியாச்சா. பெல்டக் குடுத்துட்டாரோன்னு பார்த்திருப்பாங்க.//

ஹெ ஹெ ஹே...நைனா ஏன் நைனா இப்பிடி காமெடி பண்ற..முடியல சிரிச்சு வயித்த வலிக்குது..

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/ ஓஹோ.. இனிமேதான் அவதிப்படவே போறாய்ங்களாம்யா.. பாப் கார்ன் வாங்கிட்டு வரேன் இருங்கோ.. சாப்டுக்கிட்டே பார்க்கலாம்../

இலங்கைக்கு தூதனுப்பிய இனமானக் காவலன் விருது எப்போங்க.

கலகலப்ரியா said...

//தமிழக மக்களுக்கு உழைக்க என்னை வழங்கியிருப்பதே என் பெற்றோர் செய்த தியாகம்: கலைஞர்//

??!!!!!?????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!????????!!!!!!!!!!!.... இத எல்லாம் கேட்டு செய்தின்னு வெளில விடுறது யார் ஐயா..? மனநல வைத்தியருக்கும் இவருக்கும் நடக்கிற உரையாடல் எல்லாம் இப்டி வெளில விட்டு.. சந்தி சிரிக்க வைக்கிறது.. மருத்துவ தர்மம் மற்றும் பத்திரிகைத் தர்மத்தை மீறிய செயலாகும்.. ப்ளீஸ் மிஸ்டர் பிள்ளைவாள்.. இதைக் கொஞ்சம் பார்த்து ஆவன செய்க..! காரியம் சேர்த்தே பண்ணாலும் நோ ப்ராப்ளம்...!

பிரியமுடன்...வசந்த் said...

//முகாம்களில் இருந்து 58 ஆயிரம் பேர் வெளியேற்றம்: எங்களுடைய பயணத்தால் கிடைத்த வெற்றி: திருமா

ஏங்க‌? நீங்க‌ அப்பாவியா? இல்ல‌ அட‌ப்பாவியா?//

அப்பிடின்னா ஒரு 10 வருசத்துக்கு முன்னாடியிருந்து இப்போவரைக்கும் மாசத்துக்கு ஒரு பயணம் போயிருக்க வேண்டியதுதானடா பன்னாடைகளா..பரதேசிகளா...இப்போ எல்லாம் முடிஞ்ச பிறகு போறாய்ங்களாம பயணம் துத்தேரி......

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...
/ஹெ ஹெ ஹே...நைனா ஏன் நைனா இப்பிடி காமெடி பண்ற..முடியல சிரிச்சு வயித்த வலிக்குது../

இவனுங்க காட்றது ஃபிலிமா. காமெடி ட்ராக் இல்லன்னா எப்புடி. அதான்.

கலகலப்ரியா said...

வானம்பாடி சார்.. ஏன் சார் நறுக்குக் போட்டு நரம்ப அறுக்கிறது போதாதுன்னு.. இந்த சோளக்கொல்ல பரதேசிங்க படத்த எல்லாம் போட்டு வேற கடுப்பேத்துறீங்க...! ஆஆஆஆஆஆஆஆஆஆ.....நறநற நறநற.. நறநற..

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
/இத எல்லாம் கேட்டு செய்தின்னு வெளில விடுறது யார் ஐயா..? மனநல வைத்தியருக்கும் இவருக்கும் நடக்கிற உரையாடல் எல்லாம் இப்டி வெளில விட்டு.. சந்தி சிரிக்க வைக்கிறது.. மருத்துவ தர்மம் மற்றும் பத்திரிகைத் தர்மத்தை மீறிய செயலாகும்.. ப்ளீஸ் மிஸ்டர் பிள்ளைவாள்.. இதைக் கொஞ்சம் பார்த்து ஆவன செய்க..! காரியம் சேர்த்தே பண்ணாலும் நோ ப்ராப்ளம்...!/

அட சை. நான் நொந்து போய் நறுக்கினா காமெடி பண்ணுறியேம்மா. சிரிக்க முடியல.

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...
/அப்பிடின்னா ஒரு 10 வருசத்துக்கு முன்னாடியிருந்து இப்போவரைக்கும் மாசத்துக்கு ஒரு பயணம் போயிருக்க வேண்டியதுதானடா பன்னாடைகளா..பரதேசிகளா...இப்போ எல்லாம் முடிஞ்ச பிறகு போறாய்ங்களாம பயணம் துத்தேரி....../

இதுக்கு மட்டுமே 100 நன்றி வசந்த்.

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/வானம்பாடி சார்.. ஏன் சார் நறுக்குக் போட்டு நரம்ப அறுக்கிறது போதாதுன்னு.. இந்த சோளக்கொல்ல பரதேசிங்க படத்த எல்லாம் போட்டு வேற கடுப்பேத்துறீங்க...! ஆஆஆஆஆஆஆஆஆஆ.....நறநற நறநற.. நறநற../

நான் தனியாவே எவ்வளவுதான் குமையுறது. அவ்வ்வ்வ்வ்

அகல் விளக்கு said...

நிஜத்த நினைச்சு அழுறதா,
இல்ல இவங்களப் பாத்து சிரிக்கிறதா

கனக்கும் துக்கத்திற்கு இடம் விட்டு
மனது வெறுமையாகிறது....

வானம்பாடிகள் said...

அகல் விளக்கு said...

/ நிஜத்த நினைச்சு அழுறதா,
இல்ல இவங்களப் பாத்து சிரிக்கிறதா

கனக்கும் துக்கத்திற்கு இடம் விட்டு
மனது வெறுமையாகிறது..../

ஒரு பக்கம் இந்த நாடகம் எதுக்குன்னு கலக்கமா இருக்குங்க

ராஜ நடராஜன் said...

கனடா பத்திரிகை ஆசிரியர் ஜொனாதன் கே (Jonathan k(G)ay (பின்னூட்டத்தில் அவரை விளித்தவர்கள்)ஒபாமாவுக்கு கொடுத்த நோபல் பரிசுக்கு தகுதியானவர் ராஜபட்சிதான் என்று எழுதியிருந்தார்.அவர் பொன்னாடை படத்தைப் பார்த்து ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்.

விடுதலைப் புலிகளின் களத் தோல்வியாலும்,உயிர் பலியாலும் எதுவெல்லாம் நடக்குமென்று மனதுக்குள் பயக்கும் அத்தனையும் ஒவ்வொன்றாக அரங்கேறப் போவதற்கான சாட்சியாக காட்சிப் படலங்கள் ஒவ்வொன்றும் நிறைவேறுகின்றன.

விடுதலைப் புலிகளின் துப்பாக்கிகள் தமது சத்தத்தை ஓய்வெடுத்தாலும் உண்மையான பயங்களாய் ராஜபட்சிக்கும் இலங்கை அரசுக்கும் எதிராய் உறங்கிக் கொண்டிருக்கும் கனல்கள் தமிழகத்தின் ஈழச்சார்பான உணர்வுகளும்,புலம்பெயர்ந்த மக்களின் விடுதலை புலிகளின் ஆதரவு நிலையுமே.

இதில் தமிழக உணர்வை மழுங்கடிப்பதில் இலங்கை அரசு வெற்றி கொள்ள செய்யும் முயற்சியே இந்தப் பயணம்.

புலம்பெயர் மக்களின் புதிய அரசாங்க கனவுகளையும் தோல்வியடையச் செய்யும் நோக்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் நார்வே போன்ற நாட்டுக்கு பயணம் செய்துள்ளார்.

எந்த விதத்திலாவது முட்கம்பி வாழ்க்கை முற்றுப் பெறவேண்டும் என்ற நல்லாசை இருந்தாலும் நிழல் நிகழ்வுகள் ஏன்,எதற்கு என்ற கேள்விகளையும் எழுப்புகிறது.

ஜீவன் said...

நெறைய இருக்கு சொல்ல.....!
எரிச்சல்ல ஒன்னும் சொல்ல தோனல..!

கார்த்திகைப் பாண்டியன் said...

மக்களின் வயித்தெரிச்சல் இவங்களை சும்மா விடாது.. வேற எதுவும் சொல்றதுக்கு இல்லை.. மனசு வலிக்குது.. :-(((((

Nakkiran said...

vaireriya solren.. ivangalukku nalla saave varaathu...

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...

/எந்த விதத்திலாவது முட்கம்பி வாழ்க்கை முற்றுப் பெறவேண்டும் என்ற நல்லாசை இருந்தாலும் நிழல் நிகழ்வுகள் ஏன்,எதற்கு என்ற கேள்விகளையும் எழுப்புகிறது./

ஒரு விளக்கமான பின்னூட்டம் மூலம் எங்கள் உணர்வுகளை கவலையோடு சொல்லி இருக்கிறீர்கள். உண்மையான உணர்வாளர் அனைவருக்கும் இந்தப் பயம் இருக்கிறது சார்.
நன்றி.

வானம்பாடிகள் said...

ஜீவன் said...

/நெறைய இருக்கு சொல்ல.....!
எரிச்சல்ல ஒன்னும் சொல்ல தோனல..!/

ம்ம்

வானம்பாடிகள் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

/மக்களின் வயித்தெரிச்சல் இவங்களை சும்மா விடாது.. வேற எதுவும் சொல்றதுக்கு இல்லை.. மனசு வலிக்குது.. :-(((((/

ஆமாங்க.

வானம்பாடிகள் said...

Nakkiran said...

/vaireriya solren.. ivangalukku nalla saave varaathu.../

வரக்கூடாது.

ஆரூரன் விசுவநாதன் said...

நறுக்....நறுக்....நறுக்...நறுக்.....


ஹி....ஹி.....
எத்தன அடி அடிச்சாலும் தாங்கறாங்கலே......இந்த அரசியல் வாதிகள்......


வாழ்த்துக்கள்


அன்புடன்
ஆரூரன்

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

ஒன்னும் சொல்வதற்கில்லை. இதெல்லாம் பாக்கறதுக்கு நம்ம என்ன அப்பாவிங்களா? இல்ல அடப்பாவிங்களா?

rajesh said...

எப்படிச் சிரிக்க முடிகிறது இவர்களால்.
தம்பிகளைக் கொன்றவர்களுடன்..

எப்படி கட்டியணைக்க முடிகிறது இவர்களால்.
தங்கைகளை வன்கலவி செய்தவர்களுடன்..

எப்படி சொரனையற்று உட்காரமுடிகிறது இவர்களால்.
எம் உறவுகளின் குருதி படிந்த ஆசனத்தில்..

எங்களூர் கிழவியை அனுப்பியிருந்தால்
காறி உமிழ்ந்து விட்டாவது வந்திருப்பாள்..

பிரபாகர் said...

அய்யா,

எனக்கு எல்லையில்லா எரிச்சலும் கோபமும் தலை தூக்குகிறது புகைப்படங்களை பார்த்தால். வெக்கங்கெட்டவர்கள்.... நாகரிகம் கருதி இந்த ஒரு வார்த்தையோடு முடிக்கிறேன்.

பிரபாகர்.

வானம்பாடிகள் said...

ஆரூரன் விசுவநாதன் said...

/நறுக்....நறுக்....நறுக்...நறுக்..../

வாங்க ஆரூரன். நன்றி.

/எத்தன அடி அடிச்சாலும் தாங்கறாங்கலே......இந்த அரசியல் வாதிகள்....../

இதென்னா புதுக்கதை. அடிக்கிறது அவிய்ங்க. தாங்குறது நாம.

வானம்பாடிகள் said...

rajesh said...
/எப்படிச் சிரிக்க முடிகிறது இவர்களால்.
எப்படி கட்டியணைக்க முடிகிறது இவர்களால்.
எப்படி சொரனையற்று உட்காரமுடிகிறது இவர்களால்./

அரசியல் என்ற போதையால் மழுங்கடிக்கப்பட்ட உணர்வுகளால்.

/எங்களூர் கிழவியை அனுப்பியிருந்தால்
காறி உமிழ்ந்து விட்டாவது வந்திருப்பாள்../

அவள் மனுஷி. அப்படித்தான் செய்வாள்.

வானம்பாடிகள் said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

/ஒன்னும் சொல்வதற்கில்லை. இதெல்லாம் பாக்கறதுக்கு நம்ம என்ன அப்பாவிங்களா? இல்ல அடப்பாவிங்களா?/

:)

வானம்பாடிகள் said...

பிரபாகர் said...

/ அய்யா,

எனக்கு எல்லையில்லா எரிச்சலும் கோபமும் தலை தூக்குகிறது புகைப்படங்களை பார்த்தால். வெக்கங்கெட்டவர்கள்.... நாகரிகம் கருதி இந்த ஒரு வார்த்தையோடு முடிக்கிறேன்.

பிரபாகர்./

இப்படித்தான் நினைத்திருப்பார் பக்ஸே

தமிழ் நாடன் said...

//அப்படின்னா எது நாங்க செய்த பாவம்?//

நறுக்!

இதுங்க ஒடம்புல என்ன ஓடுது சாமி! அதுவும் திரு திரு ஒரு ஆளு இருக்காரே அவரு பேரா கில்மான்னு மாத்தி வெச்சுக்கலாம்.

இது நம்ம ஆளு said...

நறுக்....நறுக்....நறுக்...நறுக்.....

இராகவன் நைஜிரியா said...

அண்ணே வேலை மிக அதிகம். நேத்து வந்து படிச்சுட்டு ஓட்டு மட்டம் போட்டுவிட்டு ஒட்டிட்டேன். பின்னூட்டம் போடலை. மன்னிக்கவும்.

// ஒன்னொன்னு மூஞ்சிலயும் பாரு எவ்வளவு சோகம். பரதேசிங்க. இழவு வீட்ல கலியாணம் பேச போனா மாதிரி இருக்கு. //

சரியாச் சொன்னீங்க. இவங்களை என்னா செஞ்சா தகும்.

// ஊழல் மோசடிகளை இல்லாதொழித்தன் மூலமே யுத்த வெற்றி ஈட்டப்பட்டது: சரத் பொன்சேகா //

எதை எதையோ நம்பிட்டோம். இத நம்ப மாட்டோமா என்ன..

// தீபாவளி: டாஸ்மாக் கடைகளில் அதிக சரக்குகள்

அது முக்கியம். கட்டிங் வரவேணாமா?//

அது சரி... இலவசங்கள் கொடுக்க காமதேனுவே, டாஸ்மாக் கடைகள் தாங்க. வெல்ல பிள்ளையாரை கிள்ளி நைவேத்தியம் செஞ்ச மாதிரி, அப்பன்கிட்ட காசு பிடுங்கி, அதுல கொஞ்சமா பிள்ளைகளுக்கு கொடுக்கிற மாதிரி பாவ்லாங்க.

// அப்படின்னா எது நாங்க செய்த பாவம்?//

தமிழ் நாட்ல பிறந்துதான்.

துபாய் ராஜா said...

என்னத்தை சொல்ல....

நெஞ்சு பொறுக்குதில்லை
இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்....

வானம்பாடிகள் said...

தமிழ் நாடன் said...

//அப்படின்னா எது நாங்க செய்த பாவம்?//

நறுக்!

இதுங்க ஒடம்புல என்ன ஓடுது சாமி! அதுவும் திரு திரு ஒரு ஆளு இருக்காரே அவரு பேரா கில்மான்னு மாத்தி வெச்சுக்கலாம்.//

நன்றிங்க. எனக்கென்னமோ அவர் ஒருத்தரு தான் மனசாட்சி உறுத்தலோட இருந்திருக்கிறார்னு தோணுது.

வானம்பாடிகள் said...

இது நம்ம ஆளு said...

/நறுக்....நறுக்....நறுக்...நறுக்...../

நன்றி

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே வேலை மிக அதிகம். நேத்து வந்து படிச்சுட்டு ஓட்டு மட்டம் போட்டுவிட்டு ஒட்டிட்டேன். பின்னூட்டம் போடலை. மன்னிக்கவும்./

நீங்க பின்னூட்டம் போடலைன்னா வேலைன்னு தெரியுமே அண்ணே. ஒரு சின்ன பாராட்டு கூட போடாம போன பதிவே இல்லைன்னு சொல்லுவேன்.
/தமிழ் நாட்ல பிறந்துதான்./

இது ஒன்னு போதும்.

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா said...

/என்னத்தை சொல்ல....

நெஞ்சு பொறுக்குதில்லை
இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்..../

ம்ம்.

எதிர்கட்சி..! said...

இந்த நாய்களை செருப்பால அடிக்கணும்.,புடுங்கீக லங்கால போய் தமிழன காப்பாத்தப்போறாங்கலாம் , இத நம்பனுமாம், இன்னும் நீங்க செய்றத பாத்துக்கிட்டு கம்முனு இருக்கற எங்களையும் உதைக்க ஆளில்லை ..

வானம்பாடிகள் said...

எதிர்கட்சி..! said...

/இந்த நாய்களை செருப்பால அடிக்கணும்.,புடுங்கீக லங்கால போய் தமிழன காப்பாத்தப்போறாங்கலாம் , இத நம்பனுமாம், இன்னும் நீங்க செய்றத பாத்துக்கிட்டு கம்முனு இருக்கற எங்களையும் உதைக்க ஆளில்லை ../

அய்யா வாங்க. உதைச்சா எல்லாம் நடந்துடும்னா மாத்தி மாத்தி அடிச்சிகிட்டே தானுங்க இருக்கணும். அவங்க அப்படித்தான். நாம இப்படித்தான்.:(

யூர்கன் க்ருகியர் said...

//இந்திய தூதுக்குழு முதல்வரிடம் அறிக்கை//

இது தூதுக்குழு மாதிரி தெரியல ....சூதுகுழுவாய் படுகிறது !!

யூர்கன் க்ருகியர் said...

//ராஜபக்சேவின் நகைச்சுவை: திருமாவளவன்//

23 ஆம் புலிகேசி படத்தில் வடிவேலுக்கு பதில் நீ நடித்திருக்கலாம் ...தூ !

யூர்கன் க்ருகியர் said...

//தமிழக மக்களுக்கு உழைக்க என்னை வழங்கியிருப்பதே என் பெற்றோர் செய்த தியாகம்: கலைஞர்//

"அலேக்"கிரி ,, ஸ்டோலன் , "காணா" மொழி ...... ஒன்னுக்கு மூணா வழங்கி நீங்களும் தியாகி ஆயிட்டீங்க ......
இதுக்கும் எவனாவது விருது கொடுத்தாலும் கொடுப்பான்

வானம்பாடிகள் said...

யூர்கன் க்ருகியர் said...
/இது தூதுக்குழு மாதிரி தெரியல ....சூதுகுழுவாய் படுகிறது !!/

அட அட. டச் விட்டு போகலை யூர்கன். சூப்பர்.

/23 ஆம் புலிகேசி படத்தில் வடிவேலுக்கு பதில் நீ நடித்திருக்கலாம் ...தூ !/

மஞ்சத்தண்ணி தெளிச்ச ஆடு போலங்க.

/"அலேக்"கிரி ,, ஸ்டோலன் , "காணா" மொழி ...... ஒன்னுக்கு மூணா வழங்கி நீங்களும் தியாகி ஆயிட்டீங்க ......
இதுக்கும் எவனாவது விருது கொடுத்தாலும் கொடுப்பான்/

அய்யோ சாமி. அசத்திட்டீங்க:))

அஹோரி said...

//தமிழக மக்களுக்கு உழைக்க என்னை வழங்கியிருப்பதே என் பெற்றோர் செய்த தியாகம்: கலைஞர்

அப்படின்னா எது நாங்க செய்த பாவம்?//

அந்த ஆளுக்கு தமிழ் தெரிஞ்சது.

THANGAMANI said...

"இனமானக் காவலர் விருதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. டேன்ஸ் முக்கியம்."

கிரி said...

சார் போட்டோ போட்டு தைரியமா தான் திட்டி இருக்கீங்க.. :-)

நாம இப்படி சொல்லிட்டே இருக்க வேண்டியது தான் போல..என்னமோ போங்க!

Maheswaran Nallasamy said...

சாரே..கொஞ்ச்சம் தைரியம் ஜாஸ்தி. ஆட்டோ வெளிய நிக்குதான்னு பாருங்க... ...

வானம்பாடிகள் said...

கிரி said...

/சார் போட்டோ போட்டு தைரியமா தான் திட்டி இருக்கீங்க.. :-)

நாம இப்படி சொல்லிட்டே இருக்க வேண்டியது தான் போல..என்னமோ போங்க!//

வேற என்ன பண்றது. இங்க இருக்கிற பேப்பர் காரன் இந்த ஃபோட்டோல்லாம் போடலையே. அதான்.

வானம்பாடிகள் said...

Maheswaran Nallasamy said...

/சாரே..கொஞ்ச்சம் தைரியம் ஜாஸ்தி. ஆட்டோ வெளிய நிக்குதான்னு பாருங்க... .../

அதென்னா நான் இளக்காரமா. சூமோல வந்தாதான் அடி வாங்குவேன்.

நாஞ்சில் பிரதாப் said...

சார் எல்லாமே சரவெடி...நெத்தியடி. நல்லாக்கேட்டீங்க நாக்க புடுங்கறமாதிரி.
நம்ம மக்கள் ரொம்ப நல்லவங்க சார்... எல்லாத்தையும் நம்புவாய்ங்க