Tuesday, October 20, 2009

முகூர்த்தம் யதார்த்தம்!

அவன்: வெள்ளிக்கிழமை அப்பாவிடமிருந்து அவசரமாக வரச்சொல்லி தொலை பேசி வந்தது மச்சான். அங்க போனப்புறம் தான் தெரியும். மூணு இடத்தில பெண் பார்க்க போகணுன்னாங்க. ஃபோட்டோ காண்பிச்சாங்க. மூணுமே அழகா இருந்தாங்க. நேர்ல போய் பார்க்கணும். ஏதோ ஒரு இடத்துல முடியணும்னு ஒரே பிடிவாதமா சொல்லிட்டாங்க.

ஒருத்தர் லெக்சரரா ஒர்க் பண்றாங்க. நேர்ல பார்க்க சுமார்தான். ஆனா வசதியான இடம். அடுத்தவங்க பேங்க்ல ஒர்க் பண்றாங்க. ஒரு அக்காக்கு கலியாணமாயிடிச்சி. தம்பி படிக்கிறான். அவங்கப்பா அரசாங்க அதிகாரி. அவ்வளவு வசதி இல்லை. அமைதியா இருப்பாங்க மாதிரி தெரியுது.

மூணாவது ரொம்ப அழகா இருக்காங்க. ஐ.டி.ல ப்ரோஜக்ட் மேனேஜர். கொஞ்சம் வசதி குறைவான குடும்பம். ஒரே பொண்ணு. எனக்கு பிடிச்சிருந்திச்சி. அம்மாக்கு லெக்சரர் பொண்ணு பிடிச்சிருக்கு. அப்பா வங்கி பொண்ணு குடும்பத்துக்கு ஏத்ததுன்னு பிடிவாதம் பண்றாங்க.

எதுனாலும் எனக்கு ஓகே. ஆனா கண்டிப்பா பைக் வேணுன்னு சொல்லிட்டு வந்தேன். சீக்கிரமே முடிவு தெரிஞ்சிடும்டா.மச்சான் நெட் ஓபன் பண்ணுடா. நல்ல பைக் செலக்ட் பண்ணனும்.

அவள்: சனி, ஞாயிறு ரெண்டு நாளும் ரெஸ்டே இல்லைடி. பெண் பார்க்க வந்தாங்க. ஒருத்தர் கொஞ்சம் குள்ளம். பெர்ஸனாலிடி இல்லை. ஆனா நல்ல வேலைல இருக்காங்க. அக்கா அமெரிக்கால இருக்காங்க. அவங்க அம்மா அப்பாவும் மகள் கூட அங்கதான் இருக்காங்க.

அடுத்தவன் இன்கம்டேக்ஸ் ஆஃபீசரா இருக்காங்களாம். ரொம்ப அம்மாஞ்சி டைப் போலடி. கர்னாடிக் ம்யூசிக் பிடிக்குமா. பாடுவியான்னு ஒரே அலப்பறை. ஆளு கொஞ்சம் கலர் கம்மி. இப்போவே தலைல ப்ளாட் போட்டு வெச்சிருக்கு. அம்மாக்கு அவந்தான் சரிவருவான்னு படுதாம்.

மூணாவது ஆள் நல்லா ஸ்மார்டா இருக்காங்க. ரொம்ப ஃப்ரீ டைப். சொந்தமா பிசினஸ் பண்றாங்களாம். குஜராத்ல இருக்காங்க. அவ்ளோ தூரமான்னு அப்பாக்கு யோசனை. ஜ்வல்ஸ் கொஞ்சம் அதிகம் கேக்கறாங்க.

பார்க்கலாம் என்ன டிசைட் பண்ணுவாங்களோ. நான் உங்க இஷ்டம்னு சொல்லிட்டேன். நீ ஃப்ரீன்னா அரை நாள் லீவ் போட்டு வரியாடி. நல்லதா 2 டிசைனர் சூடி வாங்கணும்.

பத்திரிகை: .......ரின் மகனுக்கும் .....ரின் மகளுக்கும் கடவுள் அனுக்கிரகத்தை முன்னிட்டு, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு,  நிகழும்.... கன்னிகாதானம் நடைபெறவிருப்பதால் .........

46 comments:

பிரபாகர் said...

யாருக்கும் யாருக்கும் கல்யாணம் அய்யா? மன ஓட்டங்களை பிரதிபலித்தது அருமை.

ஈரோடு கதிர் said...

//கடவுள் அனுக்கிரகத்தை முன்னிட்டு, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு//

என்னா....ஆஆஆஆ ஒரு வில்லத்தனம்

vasu balaji said...

பிரபாகர் said...

/யாருக்கும் யாருக்கும் கல்யாணம் அய்யா? மன ஓட்டங்களை பிரதிபலித்தது அருமை./

அப்படி ஒரு பையனுக்கும் இப்படி ஒரு பெண்ணுக்கும். யாரையும் குறிப்பிட முடியாது. பொதுவாக சொன்னது.:))

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

//கடவுள் அனுக்கிரகத்தை முன்னிட்டு, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு//

என்னா....ஆஆஆஆ ஒரு வில்லத்தனம்

முகூர்த்தம்னு தலைப்பு குடுத்தாச்சே. வேற என்ன பண்ண=))

ஊடகன் said...

யதார்த்தமான பதிவு ஐயா..........
காட்சிகள் கண்முன்வந்து போகின்றன........

க.பாலாசி said...

//எதுனாலும் எனக்கு ஓகே. ஆனா கண்டிப்பா பைக் வேணுன்னு சொல்லிட்டு வந்தேன். சீக்கிரமே முடிவு தெரிஞ்சிடும்டா.மச்சான் நெட் ஓபன் பண்ணுடா. நல்ல பைக் செலக்ட் பண்ணனும்.//

அடக்கொடுமையே....இப்டிதான் எல்லாரும் பண்றாங்க...இதவிட கொடுமை என்னன்னா ஃபாரின்ல இருக்குறவன் பைக் கேட்கிறான். எங்க ஓட்டப்போறான்னு தெரியல.

//பார்க்கலாம் என்ன டிசைட் பண்ணுவாங்களோ. நான் உங்க இஷ்டம்னு சொல்லிட்டேன்.நீ ஃப்ரீன்னா அரை நாள் லீவ் போட்டு வரியாடி. நல்லதா 2 டிசைனர் சூடி வாங்கணும்.//

அதானே எவன் எப்படி போனா என்ன.ஓட்ட சட்டியா இருந்தாலும் கொழுக்கட்டை வெந்தாகனும்....

நிதர்சனம்....

ஒரு கவிதை படித்தேன்....

உயிருள்ள ஒரு பொருளுக்கு
உயிரற்ற பல பொருட்கள் இலவசம்...
வரதட்சினை....

சூர்யா ௧ண்ணன் said...

யதார்த்தமான பதிவு தலைவா!

vasu balaji said...

க.பாலாசி said...
/உயிருள்ள ஒரு பொருளுக்கு
உயிரற்ற பல பொருட்கள் இலவசம்...
வரதட்சினை..../

அருமை. நன்றி பாலாஜி

vasu balaji said...

ஊடகன் said...

/யதார்த்தமான பதிவு ஐயா..........
காட்சிகள் கண்முன்வந்து போகின்றன......../

நன்றிங்க

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன் said...

/யதார்த்தமான பதிவு தலைவா!/
நன்றிங்க சூர்யா

தமிழ் நாடன் said...

யதார்த்தத்தை அருமையா சொல்லீட்டீங்க!

இராகவன் நைஜிரியா said...

நிதர்சனம் வரிகளில் விளையாடி இருக்குங்க.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/நிதர்சனம் வரிகளில் விளையாடி இருக்குங்க./

அண்ணே வாங்க. நன்றிங்க. கதிர் ஆப்பு வைக்கிறாராம். இருங்க சித்த சப்போர்டுக்கு.

ஈரோடு கதிர் said...

ஏண்ணே...

எதுக்கு இந்த உள்குத்து..

கதாநாயகன் மூனு பேரையும் அவங்க / இவங்கனு மருவாதியா சொல்றாரு..

ஆனா அந்த பிள்ள ஏன் ஒருத்தர்/ இன்னொருத்தன் / மூணாவது ஆள் இப்படி வித்தியாச வித்தியாசமா சொல்லுது...

அவர்...அவன்...அது...

vasu balaji said...

தமிழ் நாடன் said...

/யதார்த்தத்தை அருமையா சொல்லீட்டீங்க!

நன்றிங்க

Rekha raghavan said...

அருமையான சிந்தனை.

ரேகா ராகவன்.

ஈ ரா said...

என்னத்த சொல்ல,, இப்பிடித்தான் இருக்காங்க பல பேரு...

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...
/ஆனா அந்த பிள்ள ஏன் ஒருத்தர்/ இன்னொருத்தன் / மூணாவது ஆள் இப்படி வித்தியாச வித்தியாசமா சொல்லுது...

அவர்...அவன்...அது.../

பதில் 1. பொம்பள மனசு யாருக்குங்க புரியும்?

பதில் 2: முதல் ஆளை அந்தம்முனிக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, பிக்கல் பிடுங்கல் இல்லை, இரண்டாவதும் ஓ.கே. மூணாவது தூரம், செலவு.

தோழிகிட்ட இப்படியாவது பகிர்ந்தாலும் தன்னோட முடிவில் ஒன்றுமில்லை என்ற யதார்த்தம்

vasu balaji said...

KALYANARAMAN RAGHAVAN said...

/அருமையான சிந்தனை.

ரேகா ராகவன்./

நன்றிங்க.

vasu balaji said...

ஈ ரா said...

/என்னத்த சொல்ல,, இப்பிடித்தான் இருக்காங்க பல பேரு.../

அதுதான் யதார்த்தம்.

பழமைபேசி said...

இயல்பா இருக்கு.... இஃகிஃகி... கல்யாண நினைப்பு....

கார்த்திகைப் பாண்டியன் said...

திருமணம் என்ற பெயரில் சமூகத்தில் நடக்கும் நயவஞ்சகம்..:-(((

vasu balaji said...

பழமைபேசி said...

/இயல்பா இருக்கு.... இஃகிஃகி... கல்யாண நினைப்பு..../

க்கும். நெனப்பு வேறயாக்கு. அது சேரி. ஃபண்டு கம்பெனி காரன் மாதிரி பரிசுன்னு சொல்லிட்டு கண்டுக்காமலே இருந்தா எப்புடி. வசந்து, நானு, இராகவன் ஐயால்லாம் பதில் சொல்லியிருக்கமாக்கு.

vasu balaji said...

கார்த்திகைப் பாண்டியன் said...

/திருமணம் என்ற பெயரில் சமூகத்தில் நடக்கும் நயவஞ்சகம்..:-(((/

ஆமாங்க

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லாருக்கு.

vasu balaji said...

ஸ்ரீ said...

/நல்லாருக்கு./

நன்றிங்க

கலகலப்ரியா said...

:-?? nnnggehh..!

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ :-?? nnnggehh..!/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:((

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள்
October 20, 2009 4:25 PM
பழமைபேசி said...

/இயல்பா இருக்கு.... இஃகிஃகி... கல்யாண நினைப்பு..../

க்கும். நெனப்பு வேறயாக்கு. அது சேரி. ஃபண்டு கம்பெனி காரன் மாதிரி பரிசுன்னு சொல்லிட்டு கண்டுக்காமலே இருந்தா எப்புடி. வசந்து, நானு, இராகவன் ஐயால்லாம் பதில் சொல்லியிருக்கமாக்கு. //

அதானே... முதல்ல பரிசு கொடுங்கப்பு...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said..

/அதானே... முதல்ல பரிசு கொடுங்கப்பு.../

வேலைக்கு போட்டு வந்து அலசுவாராமா. பார்க்கலாம்.

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆனா கண்டிப்பா பைக் வேணுன்னு சொல்லிட்டு வந்தேன்//

பரதேசி..

உன்னால உழைச்சு வாங்க முடியாதாடா?

இவனெல்லாம் ?

சரி பொழைச்சுப்போங்கடி பொட்டை பசங்களா

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒருத்தர் கொஞ்சம் குள்ளம். பெர்ஸனாலிடி இல்லை. ஆனா நல்ல வேலைல இருக்காங்க.//

ஏன் வேலை இருக்குற ஒரு தகுதி பத்தாதா உங்க ஆசைக்கு ஒரு அளவே இல்லியா?

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...
/பரதேசி..

உன்னால உழைச்சு வாங்க முடியாதாடா?

இவனெல்லாம் ?

சரி பொழைச்சுப்போங்கடி பொட்டை பசங்களா/

வாங்க வசந்த்.ஹி ஹி. இப்புடித்தான இருக்கனானுங்க

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ஏன் வேலை இருக்குற ஒரு தகுதி பத்தாதா உங்க ஆசைக்கு ஒரு அளவே இல்லியா?/

அவனுங்களும் இப்படி நினைக்குறானுவளா? அவனுவளுக்கு இதாஞ்செரி.

vasu balaji said...

எங்க புள்ளாண்டான காணோம். :-?

ப்ரியமுடன் வசந்த் said...

ஏன் ? நான்பாட்டுல விளையாண்டுட்டு இருக்குறவன சாரி விவசாயம் பண்ணிட்டு இருக்குறவன கூப்புட்டு வாங்கிக்கட்டிக்கிற?

துபாய் ராஜா said...

எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும் நிகழ்ச்சியை இயல்பான வார்த்தைகளில் எளிமையாக வெளிப்படுத்தியிருப்பது நன்று. முடிவும் அருமை.

வாழ்த்துக்கள் சார்...

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ஏன் ? நான்பாட்டுல விளையாண்டுட்டு இருக்குறவன சாரி விவசாயம் பண்ணிட்டு இருக்குறவன கூப்புட்டு வாங்கிக்கட்டிக்கிற?/

வாடி செல்லம். இன்னைக்கு உன் தூக்கம் போச்சு.

vasu balaji said...

துபாய் ராஜா said...

/எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும் நிகழ்ச்சியை இயல்பான வார்த்தைகளில் எளிமையாக வெளிப்படுத்தியிருப்பது நன்று. முடிவும் அருமை.

வாழ்த்துக்கள் சார்.../

நன்றிங்க ராஜா.

ப்ரியமுடன் வசந்த் said...

//இன்னைக்கு உன் தூக்கம் போச்சு. //

அது போயி ரொம்ப நாளாச்சு நைனா அத ஏன் கேக்குற இப்ப...உனக்கு தூக்கம் வரலியா இன்னிக்கு...

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/அது போயி ரொம்ப நாளாச்சு நைனா அத ஏன் கேக்குற இப்ப...உனக்கு தூக்கம் வரலியா இன்னிக்கு.../

வயசு புள்ளைங்கல்லாம் சொக்கா, விரலுன்னு கவிதை எழுதுவீங்க. இப்போ சொல்லு பார்க்கலாம் நைனான்னு=))

ப்ரியமுடன் வசந்த் said...

நான் எப்போ கவிதை எழுதுனேன்?

கொஞ்சம் அப்பிடியே முன்னாடி போயிப்பாரு மூணே மூணு கவிதைதான் எழுதிருக்கேன்...அதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்...நீயும் என்னை கவிதைன்னு சொல்லி என்னோட வயித்தெரிச்சல வாங்கிகிடாத நைனா போ போயி இருக்குற டேப்லட்டெல்லாம் போட்டுட்டு தூங்கு ....திரும்ப வம்பிக்கிழுக்காத...ஜி மெயில் இருந்தா நாளைக்கு சாட்ட்ல வா இங்க வேணாம் பப்லிக்கா கூச்சமா இருக்கு....

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...
/கொஞ்சம் அப்பிடியே முன்னாடி போயிப்பாரு மூணே மூணு கவிதைதான் எழுதிருக்கேன்...அதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்...நீயும் என்னை கவிதைன்னு சொல்லி என்னோட வயித்தெரிச்சல வாங்கிகிடாத நைனா போ போயி இருக்குற டேப்லட்டெல்லாம் போட்டுட்டு தூங்கு ....திரும்ப வம்பிக்கிழுக்காத...ஜி மெயில் இருந்தா நாளைக்கு சாட்ட்ல வா இங்க வேணாம் பப்லிக்கா கூச்சமா இருக்கு..../

நீ இடுகையப்பாரப்பு. =))

ப்ரியமுடன் வசந்த் said...

//நீ இடுகையப்பாரப்பு. =)) //

சரி...வெள்ளிகிழமை யாஹூலயாச்சும் சாட்ல வாங்க...அன்னிக்குத்தான் பகல் பூரா ஃப்ரீஈஈஈஈஈஈஈஈஈஈஈ

பின்னோக்கி said...

ஜோக்கா...சீரியசான ஒரு விஷயம் சொல்லிருக்கீங்க.

என் அண்ணன் 10 கண்டிஷன் போட்டு பொண்ணு தேடி..கடைசியில...2..11/2..1 ரேஞ்சுக்கு போய் கல்யாணமாச்சு

vasu balaji said...

பின்னோக்கி said...

/ஜோக்கா...சீரியசான ஒரு விஷயம் சொல்லிருக்கீங்க.

என் அண்ணன் 10 கண்டிஷன் போட்டு பொண்ணு தேடி.. கடைசியில ...2..11/2..1 ரேஞ்சுக்கு போய் கல்யாணமாச்சு/

அப்புடித்தாங்க பெரும்பாலும். நன்றிங்க கருத்துக்கு