Friday, October 16, 2009

காய்த்த மரத்தில் கல்லடி!

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். கடந்த வாரத்தில் ஒரு நாள் அனைவருக்கும் நெருக்கமாகவும் இரண்டு தினங்களாக வெறுப்போடும் சித்தரிக்கப்படும் ஒருவர். சில பல பத்திரிகைகள், இடுகைகள், பின்னூட்டங்களில் படித்தபோது நியாயமோ இல்லையோ ஒரு சின்ன ஆதங்கத்தின் வெளிப்பாடு பகிர்ந்து பகிர்ந்து, இந்தியனா, தமிழனா என்பதையும் தாண்டி ஜாதி வரை போய்விட்டது வருந்தக்கூடிய விடயம்.

இதில் கூட‌ பார‌ப‌ட்ச‌ம‌ற்ற‌ த‌ன்மையைக் காண முடிய‌வில்லை.மூன்று வ‌ய‌திலேயே நான் குஜ‌ராத் சென்றுவிட்டேன். பின்னெப்ப‌டி கோவிந்த‌ராஜ‌ன் போன்றோர் நான் அண்ணாம‌லைப் ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌த்தில் ப‌டித்தேன் என‌க் கூற‌முடியும் என்ற‌ அவ‌ரின் வ‌ருத்த‌ம் எவ‌ராலும் க‌ண்டுக் கொள்ள‌ப் ப‌ட‌வேயில்லை. அண்ணாம‌லைப் ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌ம் இது குறித்து ம‌றுத்தோ ஆமோதித்தோ அறிக்கை விட்ட‌தாக‌ நான் எங்கும் பார்க்க‌வில்லை.

இத்துணை வெறுப்புக்கு கார‌ண‌ம், திரு வெங்க‌ட்ராம‌ன், தன்னைப் பாராட்டி வ‌ரும் மின்ன‌ஞ்ச‌ல்க‌ள் குறித்துக் கூறிய க‌ருத்தும், த‌ன‌க்கு மிக‌ப் பிடித்த‌மான‌ ப‌ணிபுரியும் சூழ‌ல் உள்ள‌ ஆக்ஸ்ஃபோர்ட் ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌த்தைத் த‌விர்த்த‌ வேறோர் இட‌த்தை த‌ன்னால் க‌ற்ப‌னை செய்து கூட‌ பார்க்க‌ முடியாது என‌க் கூறியதும்தான். பார்க்க‌ப் போனால் இது குறித்து நாம் க‌ருத்துக் கூறுவ‌து கூட‌ அவ‌ர‌து த‌னிமையில் நாம் செய்யும் அத்துமீற‌ல் என‌க் க‌ருதுகிறேன்.

உதார‌ண‌த்துக்கு பதிவுலகை எடுத்துக் கொள்ளுங்க‌ள். தின‌மும் சில‌ நூறு பேர்க‌ளாவ‌து வ‌ருகிறார்க‌ள். ஒன்றோ இர‌ண்டோ இடுகைக‌ள் ப‌டிக்கிறார்க‌ள். அது ஒரு நாளோ, அல்ல‌து சில‌ நாட்க‌ளோ, அத்த‌னை பேரும் பாராட்டியோ எதிர்த்தோ பின்னூட்ட‌ம், மின்ன‌ஞ்ச‌ல் என‌ க‌ருத்துத் தெரிவிப்பார்க‌ளானால், அத்த‌னையையும் ப‌டிக்க‌வில்லை, ப‌தில‌ளிக்க‌வில்லை. என‌வே அவருக்கு த‌லைக்க‌ன‌ம் என்ற‌ தீர்மான‌த்துக்கு வ‌ருவோமேயானால் அது எவ்வ‌ள‌வு த‌வ‌று.

உங்க‌ள் குழ‌ந்தை மாநில‌த்தில் ப்ள‌ஸ் டூவில் முத‌லாவ‌தாக‌ வ‌ந்திருக்கிற‌து என‌ வைத்துக் கொள்ளுவோம். முத‌லில் எங்க‌ள் ப‌ள்ளி என‌ ஆர‌ம்பித்து, எங்க‌ள் வீதி, எங்க‌ள் ஊர், எங்க‌ள் அலுவ‌ல‌க‌ ந‌ண்ப‌ரின் குழ‌ந்தை என‌ அனைவ‌ரும் பாராட்டியே தீருவேன் என‌ உங்க‌ள் வீட்டில் வ‌ந்து அடைகிறார்க‌ள். ஒரு புற‌ம் நிருப‌ர்க‌ள். இவையெல்லாம் தாண்டி ஒரு தொலைபேசி அழைப்பு வ‌ருகிற‌து. உங்க‌ள் பெற்றோர் செய்தி கேட்டு வ‌ந்திருக்கிறார்க‌ள். உள்ளே வ‌ர‌ முடியாம‌ல் அவ்வ‌ள‌வு நெரிச‌ல்.

என்ன‌ செய்வீர்கள்? எல்லாரும் போன‌ பிற‌கு வாருங்க‌ள் என்பீர்க‌ளா? கொஞ்ச‌ம் வ‌ழி விடுங்க‌ள் என் பெற்றோர் வ‌ந்திருக்கிறார்க‌ள் என‌க் கேட்க‌லாம். ச‌ரியென்று வ‌ழிவிட்டால் ப‌ர‌வாயில்லை. நாங்க‌ளும் பாராட்ட‌த்தானே வ‌ந்தோம் என்றால் உங்க‌ள் எதிர்வினை எப்ப‌டி இருக்கும்? ஒரு க‌ட்ட‌த்தில் இனி முடியாது, நாளை பார்க்க‌லாம் என‌க் க‌த‌வ‌டைத்தால் அத‌ன் பெய‌ர் திமிரா?

நேற்று க‌திரின் இடுகையில் அவ‌ர் தாத்தா கேட்ட‌து போல் (அவ‌ருக்கு உரிமை இருந்தாலும்) கதிர் விவ‌சாய‌ம் செய்ய‌ப் போவதில்லை என‌ ஒரு நிலைப்பாடு எடுப்பாரேயானால் அது குறித்த‌ விம‌ரிச‌ன‌ம் செய்ய‌ யாருக்கு உரிமை இருக்கிற‌து? அத‌னால் அவ‌ர்க‌ள் ஊரில் விவ‌சாயிக‌ள் சேர்ந்து க‌ண்ட‌ன‌ம் தெரிவிப்பார்க‌ளேயானால் என்ன‌ நியாய‌ம் இருக்கிற‌து?

இதில் ந‌ம் த‌வ‌று எதுவுமே இல்லையா? ஒரு க‌டையில் துணி எடுக்க‌ப் போகிறோம். ப‌ண‌ம் செலுத்துகையில் ஒரு ப‌டிவ‌த்தை நீட்டுகிறான். உங்க‌ள் குடும்ப‌ விப‌ர‌ம், முக‌வ‌ரி, கைபேசி எண், அலுவ‌ல‌க‌ முக‌வ‌ரி, மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரி, அனைவ‌ர‌து பிற‌ந்த‌ நாள் த‌க‌வ‌ல் அத்த‌னையும் கேட்டிருக்கிற‌து அதில். வாய் பேசாம‌ல்   ச‌ந்தோச‌மாக‌ நிர‌ப்புவோம்.

ஒரு சில‌ர் எத‌ற்கு இது என‌க் கேட்டால் ஒரு கார்ட் த‌ருவோம். நீங்க‌ ள் வாங்கும்போதெல்லாம் 1 ச‌த‌வீத‌ம் த‌ள்ளுப‌டி என்றால் போதும். ம‌று பேச்சே இல்லாம‌ல் நிர‌ப்புவோம். ஆனால், க‌ட‌ன் அட்டை எண் உட்ப‌ட‌ ந‌ம் சொந்த‌த் த‌க‌வ‌ல் அத்த‌னையும் யாரோ ஒருவ‌னிட‌ம் என்பதை உணருவதில்லை.

தெரியாத‌ ஒருவ‌ன் ந‌ம் வீட்டு முக‌வ‌ரி கேட்டால் த‌ருவோமா? ஆனால், ப‌ஸ்ஸிலோ ர‌யிலிலோ மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரி, கைபேசி எண் எதுவானாலும் க‌வ‌லையே இன்றி சொல்லுவோம். வீட்டு முக‌வ‌ரி மாதிரி இதுவும் மிக‌த் தேவைப்ப‌ட்டால் ம‌ட்டுமே, தேவைப்ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமேயான‌து என்ப‌தை ஏன் நாம் உண‌ருவ‌தில்லை? என‌க்கு ஒரு முக‌வ‌ரி தெரியுமென்ப‌தாலேயே மின்ன‌ஞ்ச‌ல் செய்துவிட்டு அந்த‌ ஆள் எத‌ற்காக‌ என‌க்கு மின்ன‌ஞ்ச‌ல் செய்தீர்க‌ள் என‌க் கேட்பாரேயானால் கோபிப்ப‌து நியாய‌மா?

ராஜீவ் காந்தி காலத்தில் அயல்நாட்டில் பணி புரியும் விஞ்ஞானிகள் தாய்நாடு திரும்ப வேண்டும். எல்லா வசதிகளும் தரப்படும் என்பதை நம்பி வந்து,  விட்டால் போதும் என ஓடியவர்கள் எத்தனை பேர்?

நம் வீட்டுப் பிள்ளையை எங்கோ தொலைத்து விட்டோம். யாரோ ஒருவர் எடுத்து வளர்த்து படிக்க வைத்து எல்லா வசதியும் செய்து கொடுத்து அந்தப் பிள்ளை ஒரு சாதனை செய்கையில் அதுவரை கவலையே படாத, அல்லது காணோம் என நினைத்து அழுதது தவிர வேறெதுவும் செய்யாத நாம், இப்போது போய் என் பிள்ளை நீ, எங்களோடு தான் இருக்க வேண்டும், மாட்டேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது என்பது நியாயமா?

அமெரிக்கக் குடிமகனான வெங்கட்ராமன் இங்கிலாந்தில் பணி புரிந்து இந்த சாதனை செய்ததற்கு அமெரிக்கர்கள் வேண்டுமானால் குறைபட்டுக் கொள்ளலாம். நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

இது குறித்து வெங்கட்ராமனின் விரிவான விளக்கம். இப்போது என்ன சொல்லப் போகிறோம்? வழக்கம்போல தலைகுனிய வேண்டியதுதான்.

49 comments:

துபாய் ராஜா said...

நியாயமான எண்ணங்கள்.

பிரபாகர் said...

நான் தமிழன், இந்தியன் எனச் சொல்லாதவரை எந்த ஒரு பரிசு பெற்ற ஒருவரையும் 'தாங்காமல்' இருப்பது உத்தமம்.

நீங்கள் சொல்வதில் நூறு சதம் நியாயம் இருக்கிறது.

பிரபாகர்.

ரோஸ்விக் said...

அவரது நியாயமான கோபம்.
பிரபகார் சொன்னதை வழிமொழிகிறேன்.

ஈ ரா said...

தலைப்பு சரிதான்.....

விதை இங்கிருந்து காற்றுவாக்கில் பறவைகளால் எங்கோ சென்று தூவப்பட்டு முளைத்த மரத்தில் அறுவடையை நாம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் முடியவில்லை... சரி கல்லையாவது அடிப்போம் என்று ஆகி விட்டது..

அதனால் என்ன இனிமேல் இங்கேயே விதை போட்டு மரம் வளர்த்து, அதையும் காய்த்த பிறகு கல்லடிப்போமாக ...

Radhakrishnan said...

நல்ல எண்ணங்கள் ஐயா. ஆனால் சில நேரங்களில் மனதில் உள்ளதைச் சொல்லாமல் வேஷம் போட்டால்தான் நன்றாக இருக்கும் என்பதை அறியாது போய்விட்டார் அவர்.

vasu balaji said...

துபாய் ராஜா said...

/நியாயமான எண்ணங்கள்./

நன்றிங்க. கை கோர்த்தமைக்கு

vasu balaji said...

பிரபாகர் said...

/நான் தமிழன், இந்தியன் எனச் சொல்லாதவரை எந்த ஒரு பரிசு பெற்ற ஒருவரையும் 'தாங்காமல்' இருப்பது உத்தமம்.

நீங்கள் சொல்வதில் நூறு சதம் நியாயம் இருக்கிறது./

அப்படி இல்லை. நான் தாங்குகிறேன்னு அவர் கிட்ட தம்பட்டம் அடிக்காமல் தாங்கலாமே.

vasu balaji said...

ரோஸ்விக் said...

/அவரது நியாயமான கோபம்.
பிரபகார் சொன்னதை வழிமொழிகிறேன்./

ஆமாங்க.

vasu balaji said...

ஈ ரா said...
/அதனால் என்ன இனிமேல் இங்கேயே விதை போட்டு மரம் வளர்த்து, அதையும் காய்த்த பிறகு கல்லடிப்போமாக .../

அதாஞ்செரி. :))

vasu balaji said...

Rads said...

/நல்ல எண்ணங்கள் ஐயா. ஆனால் சில நேரங்களில் மனதில் உள்ளதைச் சொல்லாமல் வேஷம் போட்டால்தான் நன்றாக இருக்கும் என்பதை அறியாது போய்விட்டார் அவர்./

அதுவும் சரிதான்.

ப்ரியமுடன் வசந்த் said...

அந்த நியூஸ் என்னான்னு தெரியலையே சுட்டி குடுத்தா படிச்சுட்டு பின்னூட்டம் போடுறேனே....நைனா....

கலகலப்ரியா said...

நல்ல பதிவு சார்..


//Rads Says:
October 16, 2009 5:36 PM

நல்ல எண்ணங்கள் ஐயா. ஆனால் சில நேரங்களில் மனதில் உள்ளதைச் சொல்லாமல் வேஷம் போட்டால்தான் நன்றாக இருக்கும் என்பதை அறியாது போய்விட்டார் அவர்.//

அதே..!

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்

இதுதான் வசந்த்:
http://www.vikatan.com/vccms/vcunicode.asp?artid=2051

அவரின் விளக்கம் இடுகையில்

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ நல்ல பதிவு சார்.. /

நன்றி ப்ரியா.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பாலாண்ணே, நல்ல பார்வை. அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அத்துமீறல்கள் செய்வது தவறே. அவரது வளர்ச்சிக்கும் சாதனைக்கும் புதிதாகச் சொந்தம் கொண்டாட நினைப்பதும் தவறே.

ஆனால் கடைசி வரியில் எனக்கு உடன்பாடு இல்லை!!

என்ன தான் அவரை வளர்த்தது வெளிநாடு என்றாலும் "நம் நாட்டுக்காரர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்" என்ற ஆர்வத்தில் "பாராட்ட மட்டும்" வருபவர்களிடம் "இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள்" என்று கேட்பது சரியாகப்படவில்லை.

அவர்கள் எதிர்பார்ப்பது என்ன? இந்த மனிதரைப் போல தன் மகனும் மகளும் வெற்றிகள் பெற வேண்டும் என்பது தானே?

இன்று நம் நாட்டிற்குத் தேவை "நல்ல உதாரண புருஷர்கள்". உதாரண புருஷர்கள் நம் நாட்டில் இல்லை என்பதே இதெல்லாவற்றிற்கும் காரணம்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பாலாண்ணே, அவரது கருத்தைப் படித்த பிறகு நாம் செய்தது எவ்வளவு தவறென்று புரிகிறது.

vasu balaji said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028)

/ஆனால் கடைசி வரியில் எனக்கு உடன்பாடு இல்லை!!

என்ன தான் அவரை வளர்த்தது வெளிநாடு என்றாலும் "நம் நாட்டுக்காரர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்" என்ற ஆர்வத்தில் "பாராட்ட மட்டும்" வருபவர்களிடம் "இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள்" என்று கேட்பது சரியாகப்படவில்லை./

என் கடைசி வரி இதற்கல்ல. அதற்கான விளக்கம் அவரே தந்திருக்கிறார்.

vasu balaji said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

/ பாலாண்ணே, அவரது கருத்தைப் படித்த பிறகு நாம் செய்தது எவ்வளவு தவறென்று புரிகிறது./

ஆமாம்.

Unknown said...

///விதை இங்கிருந்து காற்றுவாக்கில் பறவைகளால் எங்கோ சென்று தூவப்பட்டு முளைத்த மரத்தில் அறுவடையை நாம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் முடியவில்லை... சரி கல்லையாவது அடிப்போம் என்று ஆகி விட்டது..

அதனால் என்ன இனிமேல் இங்கேயே விதை போட்டு மரம் வளர்த்து, அதையும் காய்த்த பிறகு கல்லடிப்போமாக ...///

ஈ.ரா. சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன்

ராஜ நடராஜன் said...

இங்கே ஆங்கில செய்திப் பத்திரிகைகளில் வெங்கட்ராமனை அமெரிக்கன் என்றே குறிப்பிடுகிறார்கள்.

ஒருவரை விமான நிலையத்துக்கு வழியனுப்ப இங்கே ஒரு கூட்டமே வண்டி கட்டிகிட்டு விமான நிலையம் போகிறார்கள்.மக்கள் நெருக்கடியான சில தினங்களில் ஆடு மாடுகளை அடித்து விரட்டுவது மாதிரிதான் விமான நிலையத்தில் நடந்து கொள்கிறார்கள்.
மேற்கத்தியர்கள் ஒரே ஆள் பெட்டியை எடுத்துகிட்டு ஸ்டார்பக்ஸில் உட்கார்ந்து காபி குடித்து விட்டு அமைதியாக பயணம் செய்கிறான்.

சிதம்பரத்தில் குறுகிய காலமே தான் இருந்தாலும் நீ என்கிட்டதான் படித்தாய் என்று மெயில் அனுப்புவதும்,மெயில் பெட்டியின் குப்பைகளை சுத்தம் செய்ய ஒரு மணி நேரத்துக்கும் மேல் எடுத்துக் கொள்வது சாதித்த மனிதனுக்கு அலுப்பை தரவே செய்யும்.

குப்பன்.யாஹூ said...

good post. Yes we want to share only in victory and we did not help when he suffered .

இராகவன் நைஜிரியா said...

மிகச் சரியாகச் சொல்லியிருக்கீங்க அண்ணே..

vasu balaji said...

Kiruthikan Kumarasamy said.
/ஈ.ரா. சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன்/

:)

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

உங்கள் கருத்து அப்படியே என் எண்ணங்களின் பிரதிபலிப்பு. நன்றி நடராஜன் சார்.

vasu balaji said...

குப்பன்.யாஹூ said...

/good post. Yes we want to share only in victory and we did not help when he suffered ./

Thank you sir. Exactly. Even, one may not mind that as long as it is within a bearable limit.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/மிகச் சரியாகச் சொல்லியிருக்கீங்க அண்ணே../

நன்றிங்கண்ணே. அவர் விளக்கமளிக்க நேர்ந்ததே மிச்சம் மீதி ஏதாவது பற்றுதல் இருந்தாலும் துடைத்து விட்டிருக்குமென அஞ்சுகிறேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

//இந்தியா மற்றும் இதர பல நாடுகளில் மிகச் சிறந்த அறிவியல் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் இன்னும் நோபல் பரிசை வெல்லவில்லை. ஆனால், அந்த விஞ்ஞானிகள் பணிகள் அனைத்துமே மனித நலன் நிரம்பியது.//

இது அங்கே அவர் கூறிய விளக்கம் உண்மைதான் இந்தியர்கள் மனித நலம் மிக்கவர்கள்தாம் என்ன அது கொஞ்சம் சுயநலமாய் மாறிவிட்டதுன்னு நினைக்கிறேன்...

மற்றபடி அவரின் ஆதங்கம் உண்மையானது

சில நாட்களுக்கு முன்பு நம்ம ரஹ்மானுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டதும் நினைவிருக்கலாம்

என்ன அவரு அமெரிக்கா போனாரு இவரு மும்பை போனாரு...அவரு இந்தியன் இவரு தமிழன் இப்பிடி பிரிச்சு பிரிச்சு பேசித்தானே நாம நாசமா போயிட்டு இருக்கோம்.....

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...
/இந்தியர்கள் மனித நலம் மிக்கவர்கள்தாம் என்ன அது கொஞ்சம் சுயநலமாய் மாறிவிட்டதுன்னு நினைக்கிறேன்.../

அவசரப்பட்டு ஒருவரை எடை போடுவதில் நம்மள அடிச்சிக்க ஆளில்லை.

/அவரு இந்தியன் இவரு தமிழன் இப்பிடி பிரிச்சு பிரிச்சு பேசித்தானே நாம நாசமா போயிட்டு இருக்கோம்...../

இப்புடியேதான் இருப்போமா? அவ்வ்வ்வ்வ்

நன்றி வசந்த்.

நெத்தியடி முஹம்மத் said...

இவரின் பேட்டி பற்றி வந்த விமர்சன பதிவுகளிலேயே இதுதான் முழுமையான சரியான அலசலுடன் கூடிய சிறந்த பதிவாக எனக்கு தெரிகிறது. நன்றி. என்னுடைய நீண்ட நாள் பிரச்சாரம் : வேற்று கிரகவாசி நம் உலகை அழிக்க வரும் முன் (கற்பனையாக வைத்துக்கொண்டால்!) உலகில் உள்ள ஒவ்வொருவனும் தன்னை "உலகக்குடிமகன்" என்று சொல்லிக்கொள்ளும் நாள் எதுவோ அதுதான் உலகத்திற்கு நன்னாள்; அதுவே பொன்னாள். இந்த விஞ்ஞானியை நாம் ஒரு "citizen of world" என்றே பார்ப்போம்.

அது சரி(18185106603874041862) said...

வெற்றிக்கு ஆயிரம் தகப்பன்கள்...தோல்வி ஒரு அனாதைப் பிள்ளை...

அமெரிக்காவில் பாபி ஜின்டால் ஒரு மாகாண கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அமெரிக்க கவர்னராக இந்தியர் தேர்வு என்று எழுதி கிழித்தவை இந்த ஊடகங்கள்...இத்தனைக்கும் அவர் அமெரிக்காவில் பிறந்து அமெரிக்காவிலேயே வளர்ந்த மூன்றாம் தலைமுறை!

அது சரி(18185106603874041862) said...

//
ராஜீவ் காந்தி காலத்தில் அயல்நாட்டில் பணி புரியும் விஞ்ஞானிகள் தாய்நாடு திரும்ப வேண்டும். எல்லா வசதிகளும் தரப்படும் என்பதை நம்பி வந்து, விட்டால் போதும் என ஓடியவர்கள் எத்தனை பேர்?
//

இங்கே யாரையும் ஸார் என்று கூட அழைக்க வேண்டியதில்லை...அதிக பட்ச மரியாதையே மிஸ்டர்.எக்ஸ் ஒய் தான்...ஆனால் இந்தியாவில் நிலைமை அப்படியா இருக்கிறது??

அது சரி(18185106603874041862) said...

//
அமெரிக்கக் குடிமகனான வெங்கட்ராமன் இங்கிலாந்தில் பணி புரிந்து இந்த சாதனை செய்ததற்கு அமெரிக்கர்கள் வேண்டுமானால் குறைபட்டுக் கொள்ளலாம். நமக்கு என்ன உரிமை இருக்கிறது?
//

இதில் ஓரளவு (ஓரளவு மட்டும் தான்) பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்றால் அது பிரிட்டன் மட்டுமே...ஏனெனில் அவர் ஆராய்ச்சி செய்யும் கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி....நாங்களே சும்மா இருக்கும் போது சும்மா இந்தியர் இந்தியர்னு எழுதி அவரை கடுப்பேத்தி விட்டுட்டாங்க :0))

அது சரி(18185106603874041862) said...

//
ஒரு தேசத்தில் பிறந்தது என்பது எதிர்பாராத நிகழ்வு என்று சொல்லப்பட்டதையும் இந்திய மக்கள் தவறாக புரிந்துகொண்டனர்.
//

இது அவர் சொன்னது...

உண்மையில் எந்த ஒரு தேசத்திலும் பிறப்பது எதிர்பாராத நிகழ்வே...இதை இந்தியர்கள் ஏன் தப்பாக புரிந்து கொள்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை...

நசரேயன் said...

பெரியவங்க பேசும்போது நான் கருத்து சொல்லா என்ன இருக்கு

பழமைபேசி said...

பாலாண்ணே, வணக்கம்! இந்த வாரம் கடுமையான வேலை...அதான் வலைப்பக்கம் சரிவர வர முடியலை... இனிதான் எல்லாம் படிக்கணும்!

vasu balaji said...

நெத்தியடி முஹம்மத் said...

/இவரின் பேட்டி பற்றி வந்த விமர்சன பதிவுகளிலேயே இதுதான் முழுமையான சரியான அலசலுடன் கூடிய சிறந்த பதிவாக எனக்கு தெரிகிறது./

பாராட்டுக்கும் முதல் வரவுக்கும் நன்றிங்க.

vasu balaji said...

அது சரி said...

/வெற்றிக்கு ஆயிரம் தகப்பன்கள்...தோல்வி ஒரு அனாதைப் பிள்ளை.../

அருமையாச் சொன்னீங்க.
அது சரி said...

/ஆனால் இந்தியாவில் நிலைமை அப்படியா இருக்கிறது??/

இந்தியா என்னங்க. இலங்கைக்கு போயும் கலக்டர இன்னும் முந்திரி நினைப்பில் அத்தனை பேர் எதிரில் எகிறி குறைந்த பட்சம் மன்னிப்பு கூட கேட்கத் தெரியாத எம்.பி.

/இதில் ஓரளவு (ஓரளவு மட்டும் தான்) பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்றால் அது பிரிட்டன் மட்டுமே...ஏனெனில் அவர் ஆராய்ச்சி செய்யும் கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி....நாங்களே சும்மா இருக்கும் போது சும்மா இந்தியர் இந்தியர்னு எழுதி அவரை கடுப்பேத்தி விட்டுட்டாங்க :0))/

:). இவ்வளவும் போதாதுன்னு நாகரீகமா அவர் மன்னிப்புன்னு விளக்கம் கொடுத்தா, என்னமோ பண்ணாத குத்தம் அவர் பண்ணி பொதுமன்னிப்பு கேட்டா மாதிரி எல்லா பத்திரிகையிலும் விஞ்ஞானி மன்னிப்பு கேட்டார்னு தலைப்பு போடும் வக்கிரம், தமிழனின் தனிச் சொத்து.

நன்றிங்க

vasu balaji said...

பழமைபேசி said...

/பாலாண்ணே, வணக்கம்! இந்த வாரம் கடுமையான வேலை...அதான் வலைப்பக்கம் சரிவர வர முடியலை... இனிதான் எல்லாம் படிக்கணும்!/

:). வாங்க பழமை. படிச்சிட்டு சொல்லுங்க.

vasu balaji said...

நசரேயன் said...

/பெரியவங்க பேசும்போது நான் கருத்து சொல்ல என்ன இருக்கு/

அப்புடியெல்லாம் சொன்னா தமிழனான்னு கேட்றுவாய்ங்கண்ணே. எதுனாலும் கருத்து சொல்லியே ஆவணும்.

கிரி said...

சார் அருமையா எழுதி இருக்கீங்க..

நானும் இதை பற்றி எழுத நினைத்து இருந்தேன் நேரமில்லாததால் எழுத முடியவில்லை..

எழுத முயற்சிக்கிறேன் ..உங்களை விட சிறப்பாக எழுத முடியும் என்று தோன்றவில்லை.

vasu balaji said...

கிரி said...

/சார் அருமையா எழுதி இருக்கீங்க../

நன்றி கிரி

தமிழ் நாடன் said...

அருமையான அலசல்! அவர் தரப்பிலும் நியாயம் இருக்கிறது. ஆனால் இதையே அவர் முதலில் செய்திருந்தால் இவ்வளவு தூரத்துக்கு போயிருக்காது என்பது எனது கருத்து. நானும் பல வெளிநாட்டு இந்தியர்களை சந்தித்து இருக்கிறேன். சில நேரம் அவர்களின் சில வார்த்தைகள் செருக்கின் வெளிப்பாடாக இருந்ததை பார்த்திருக்கிறேன். அந்த அனுபவத்தை கொண்டே அவரின் முதல் பேட்டியை நான் நோக்கினேன். நம்மவர்களுக்கும் இது தேவைதான். ரகுமானின் ஆசுகார் விருடைக்கொண்டு இளையராசாவின் தரத்தை ஆய்வது போன்ற பத்தாம்பசலித்தனங்களை நம்மவர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

Maheswaran Nallasamy said...

அதுதான் என்னுடைய கருத்தும். எவனாவது அவார்ட் வாங்கிட்ட அவன் அப்பன் ஆத்தா பத்தி நோண்டுறது. அப்புறம் ஒன்னு விட்ட பாட்டி இந்தியா ல பிறந்தவ.. அதனால இந்தியனுக்கு பெருமை-ன்னு சொல்லி அவன நொங்கு எடுக்கிறது.. பாலா ..இல்ல பாழா போன கூட்டம் சார்..

vasu balaji said...

@@ தமிழ் நாடன்
@@ மஹேஸ்

நன்றிங்க

மா.குருபரன் said...

//இந்தியனா, தமிழனா.....//

இது தான் யதார்த்தம்.... இது பற்றி என் பல எண்ணங்களை ஒரு பதிவில் பதிவிடுகிறேன்.

//நம் வீட்டுப் பிள்ளையை எங்கோ தொலைத்து விட்டோம். யாரோ ஒருவர் எடுத்து வளர்த்து படிக்க வைத்து எல்லா வசதியும் செய்து கொடுத்து அந்தப் பிள்ளை ஒரு சாதனை செய்கையில் அதுவரை கவலையே படாத, அல்லது காணோம் என நினைத்து அழுதது தவிர வேறெதுவும் செய்யாத நாம், இப்போது போய் என் பிள்ளை நீ, எங்களோடு தான் இருக்க வேண்டும், மாட்டேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது என்பது நியாயமா?

அமெரிக்கக் குடிமகனான வெங்கட்ராமன் இங்கிலாந்தில் பணி புரிந்து இந்த சாதனை செய்ததற்கு அமெரிக்கர்கள் வேண்டுமானால் குறைபட்டுக் கொள்ளலாம். நமக்கு என்ன உரிமை இருக்கிறது?//

வென்றான்... வாழ்த்த வேண்டும்....
அதன் உரிமை பற்றி வென்றவன் தான் சொல்ல வேண்டும்.

நல்ல பதிவு..

ராமலக்ஷ்மி said...

அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.

vasu balaji said...

ராமலக்ஷ்மி said...

/அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்./

நன்றிங்கம்மா.

ஜோதிஜி said...

மிக நல்ல கருத்துள்ள இடுகை. எனக்கு ஒரு சந்தேகம். ஒவ்வொரு முறையும் வெளிநாட்டில் போய் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற ஒருவர் ஒரு பதக்கம் அல்லது பாராட்டு அல்லது சிறப்பு பெற்றதும் அவரின் அத்தனை பூர்விகத்தை நோண்டி எடுத்து நாலைந்து வாரங்களுக்கு சிறப்பு கட்டுரை போடுவதும், அதிகார வர்க்கம் அறிக்கை அக்கப்போர் விடுவதும் எல்லாமே சரி. ஆனால் அவர்களுக்கு அது பொன் நகையாக இருக்காது. வெறும் புன்னகையுடன் தான் அடுத்த வேலைக்கு சென்று விடுவார்கள். இதைப் பார்த்துக்கூட இங்குள்ள சிதைக்கப்பட்டுள்ள அத்தனை கட்டுமானத்தையும், விளையாட்டு, கல்வி, ஆராய்ச்சி, தொழில் போன்றவற்றில் எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் இருப்பவர்களையும், அதைக்குறித்து அக்கறைப்படாமல் அத்தனை அக்கப்போர்களையும் நாம் ஊன்றிபடித்துக்கொண்டுருப்பதும் ஏன்? நான் பார்த்த பத்து ஏழு பேர்கள் இந்தியாவில் பிறந்தேன் என்பதைக்கூட வெளியிட மிகுந்த தயக்கம் அடைகிறார்கள். அது தான் புரியாத காரணமாக இருக்கிறது.

vasu balaji said...

ஜோதிஜி. தேவியர் இல்லம். said.

/மிக நல்ல கருத்துள்ள இடுகை./

நன்றிங்க.

/எனக்கு ஒரு சந்தேகம். ஒவ்வொரு முறையும் வெளிநாட்டில்... நாம் ஊன்றிபடித்துக்கொண்டுருப்பதும் ஏன்?/

தெரிந்து கொள்வதில் தவறில்லை ஐயா. அதனாலேயே உரிமை கொண்டாடி அதற்கு மாறாக நிகழ்வு இருப்பின் தாழ்த்திப் பேசுவது தான் சரியில்லை என்பது என் கருத்து.