Saturday, October 3, 2009

கரு ஒன்னு! கத ரெண்டு!

கூச்சலும் கும்மாளமுமாய் இருந்தது அந்த வீடு. நாளை மாலினி கிளம்புகிறாள். சோஃபாவில் உலகச் சோகம் முழுதும் முகத்தில் தேக்கியவாறு பார்த்துக் கொண்டிருந்தார் மகாதேவன். மற்றவர்கள் யாரும் விசனித்ததாய் தெரியவில்லை.  ஓரக்கண்ணால் இவரைப் பார்த்து குசு குசு என்ற கமென்டும் அதற்கு கொல்லென்ற சிரிப்பும் இன்னும் எரிச்சலூட்டியது.

இமையோரம் இதோ காட்டிக் கொடுப்பேன் எனத் திரண்டிருந்தது கண்ணீர். என்ன கும்மாளம் வேண்டிக் கிடக்கு என்று அலற வேண்டும் போல் வந்தது. வாயைத் திறந்தால் உடைந்து விடுவாய் மகாதேவா, வேண்டாம் என மனது எச்சரித்தது. மகள் மாலினையைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தார்.

இந்த மாலினிக் கழுதை இவ்வளவுதானா?  பிஞ்சு விரல் பற்றி அவளை L.K.G.   சேர்த்து முதல் நாள் வகுப்பில் விட்டு வெளியில் எப்போது வருவாள் என பதைக்கப் பதைக்கக் காத்திருந்தது நினைவில் வந்தது. அப்பாவே உலகம் என்றிருந்த பெண்ணா இவள்?   ஒரு நண்பன் மாதிரியல்லவா இருந்தேன்.  இது வரை ஒரே ஒரு நாள் கூட பிரிந்ததில்லையே. பதினெட்டு வயது கடந்து விட்டாலே எல்லாம் தெரிந்து விடுமா?

அதெப்படி சுயநலம் வந்து ஒட்டிக் கொள்ளும்? அம்மாடி! அப்பாவுக்கு உன்னைப் பார்க்காமல் இருக்க முடியாதுடா. சென்னையிலே இருந்தால் வாரா வாரம் என் மாலிக்குட்டிய பார்க்க ஓடி வந்துடுவேனல்லடா ப்ளீஸ் என்று எவ்வளவோ கெஞ்சினார். கல்நெஞ்சுக் காரி, லெம்மி டிசைட் மை ஃஃப்யூச்சர் அப்பா. ஐ வான்னா செட்டில் இன் கான்பூர். என் லைஃப் முக்கியமில்லையா என்ற போது அதிர்ந்து போனார்.

ஒரு விதத்தில் தானும் காரணம் என்ற உணர்வு மேலோங்கியது. ஆரம்பத்திலேயே உள்ளூர்தான் என்ற பிடிவாதமின்றி மகள் தன் சொல் தட்ட மாட்டாள், பார்க்கலாம் என்று மும்பை, கான்பூர் என்று கொள்கையளவில் ஒப்புக் கொண்டது தவறாகி விட்டது. நம்பி இருந்த மூத்த மகளும் அவளுக்காவது அவள் ஆசைப்படி நடக்கட்டும் அப்பா என்ற போது திகைத்துப் போனார். பத்தாவது படிக்கும் மகனும் மாலி சொல்றது தான் சரி என்று எகிறுமளவுக்கு எதிரியானான்.

அவர் நண்பர் கோபி என்ன, எல்லாம் ரெடியா?  என்றபடி வந்தார். அந்தப் பாவியாவது புரிந்து கொள்ள வேண்டாமா. உலகம் முழுதும் ஒரு புறம். மகாதேவன் தனிமரம் போலானார். வந்தவர் காஃபியைக் குடித்து விட்டு போகாமல், டேய் என்னடா இது இப்படி இருக்கே. பெண் குழந்தை எப்பவும் கூடவே இருக்க முடியுமா? இங்க தானே கான்பூர் . பார்க்கணும்னு தோணுறப்போ போய் பார்க்க முடியுமேடா. அவளும் முடிகிறபோது வரப் போகிறாள். பொம்பிளை மாதிரி அழுறான் பாரு என்று கிண்டல் செய்தார்.

எல்லாக் களேபரமும் ஓய, காலை 7.30க்கு ட்ரெயின், கொஞ்சம் தூங்குடி என்று போன மனைவியை கொலை செய்ய வேண்டும் போல் வந்தது. சை, பெத்தவளா இவள்?  மாலி கிளம்பின பிறகு புலம்பட்டும். அப்போ இருக்குடி உனக்கு என்று கறுவினார். மாலி! எல்லாம் எடுத்து வெச்சிண்டாச்சா? எதாவது மறந்திருப்பம்மா என்றவரை பெரிய மனுஷி மாதிரி, அப்பா இனிமே நாந்தான் எல்லாம் பார்த்துக்கணும், நீங்க தூங்குங்க என்றாள்.

விடிய விடிய உறங்காமல் கிடந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு வார்த்தை பேசாமல் போனார்.  வண்டி கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க மனது தவிக்க‌ , கைக்குட்டையால் கண்ணைத் துடைத்துக் கொண்டு நின்றிருந்தார். அவரிடம் வந்த மாலினியின் கை பிடித்துக் கொண்டு, அம்மாடி எப்போ எது வேணுமானாலும் ஃபோன் பண்ணுடா. மாமா, மாமி நல்லா பார்த்துப்பாங்க. ஒரு பேச்சு வரப்படாது. பொறுப்பான பெண் நீ, இருந்தாலும் பார்த்து நடந்துக்கம்மா என்று சொல்லும் போது  உடைந்தே விட்டார்.

எங்கோ நின்றிருந்த சூர்யா வந்தான். மாமா என்ன மாமா இது. நாங்க பார்த்துக்க மாட்டமா உங்க செல்லப் பெண்ணை. அம்மா மாலி வரான்னு அங்க ஒரே களேபரம் பண்ணிண்டிருக்காங்க. நீங்க இப்படி இருக்கிங்களே என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே சிக்னல் விழ,  கிளம்பும்மா என்றவர் மனமில்லாமல் வண்டி கிளம்பியும் நின்றவாறிருந்தார்.

திரும்பி வருகையில்,   மிஞ்சி மிஞ்சி நாலு வருடம். ஐ.ஐ.டி கான்பூர்ல இடம் கிடைக்கிறது பெரிய விஷயம். போறாததற்கு உன் தங்கை, சூர்யா எல்லாம் அங்குதானே இருக்கிறார்கள்? உன் விருப்பத்துக்கு அவள் மெட்ராஸில் சேர்ந்திருக்கலாம் என்றெல்லாம் வருத்தப் படலாமா? அவள் எதிர்காலத்துக்கு எது நல்லதோ அவள்தான் முடிவெடுக்க வேண்டும். இது முடிய அமெரிக்கா போகிறேன் என்று பறந்து விடலாம். அப்போ என்னடா செய்வாய்? சந்தோஷமா இருக்கப் பாருடா என்ற மனதோடு வேறு வழியின்றி சமரசமாகிப் போனார் மகாதேவன்.

(பொறுப்பிலி 1:  பொண்ணு கலியாணம் பண்ணி போகுதுன்னு நினைச்சீங்களே தவிர இப்புடி  நினைச்சீங்களா? இஃகிஃகி)     

(பொறுப்பிலி 2: அதென்ன கத ரெண்டுன்னு கேக்கறீங்களா? அம்மா கதைய உல்டா பண்ணிட்டேன்னு யாரோ சொல்றதுக்கு பதில் நாமளே சொல்லிட்டா நல்லதில்லையா. இஃகி)                          
_____________________________


71 comments:

பழமைபேசி said...

தலைவருகை நம்முதா இருக்கட்டு!

பழமைபேசி said...

இப்பெல்லாம் பொண்ணுங்க கூடவே அம்மா அப்பாவையும் அழைச்சிக்குறாங்களாமே, உம்மையாங்க பாலாண்ணே?

வானம்பாடிகள் said...

பழமைபேசி
/தலைவருகை நம்முதா இருக்கட்டு!/

வாங்க பழமை.:)

வானம்பாடிகள் said...

பழமைபேசி
/இப்பெல்லாம் பொண்ணுங்க கூடவே அம்மா அப்பாவையும் அழைச்சிக்குறாங்களாமே, உம்மையாங்க பாலாண்ணே?/

ஐ.ஐ.டிலயா? இதென்னா கூத்து?:))

பழமைபேசி said...

அய்ய, கல்யாணம் முடிஞ்சவுட்டுங்க....

//பெண் குழந்தை எப்பவும் கூடவே இருக்க முடியுமா? //

அப்ப ஆண்பிள்ளைக கூடவே இருந்து காப்பாத்துறாங்களா? இஃகிஃகி!

நம்ம சிரிப்பானைப் பிரபலமாக்கிய நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்!! இஃகிஃகி!!

பழமைபேசி said...

//ஒண்ணு-தல் oṇṇu- : (page 590)

பெண். (வீரசோ. வேற்று மை. 3.)

ஒண்ணு-தல் oṇṇu-
1. To be possible, feasible; இயலுதல்
//

கன்று - கன்னு
ஒன்று - ஒன்னு
பன்றி - பன்னி
கண் - கண்ணு
கன்று - கன்னு
மூன்று - மூனு
ஒன்று - ஒன்னு

ஏன், எல்லாரும் ஒண்ணுன்னே எழுதுறீங்க?

கதிர் - ஈரோடு said...

உள்ளேன் அய்யா!

வானம்பாடிகள் said...

பழமைபேசி
/அய்ய, கல்யாணம் முடிஞ்சவுட்டுங்க..../

அட அத ஏன் கேக்குறீங்க. பச்ச அட்டையோ இல்ல அங்க தங்க வேற ஏதோ இருக்கோ தெரியல. அது அப்பன் ஆயிக்கு கிடைக்கற வரைக்கும் இருந்து அப்புறம் வரதட்சிண கொடுமையில செமித்தியா புடுங்கறாங்கன்னு பேப்பர்ல எல்லாம் நாறிச்சி.

பழமைபேசி said...

அன்று - அன்னிக்கு
இன்று - இன்னிக்கு
மண் - மண்ணு
பின்பும் - பின்னும்

பழமைபேசி said...

இஃகிஃகி, அண்ணன் மாத்திட்டாரு... நன்றி!

வானம்பாடிகள் said...

பழமைபேசி
/ஏன், எல்லாரும் ஒண்ணுன்னே எழுதுறீங்க?/

எப்பவும் தெரிஞ்சோ தெரியாமலோ ஒன்னு தான் எழுதுவேன். இன்னைக்கு இப்படி. அவ்வ்வ்வ்

பழமைபேசி said...

//கதிர் - ஈரோடு Says:
October 3, 2009 8:37 PM
உள்ளேன் அய்யா!
//

வாங்க மாப்பு!

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு
/உள்ளேன் அய்யா!/
வாங்க ஐயா

பழமைபேசி said...

//அப்புறம் வரதட்சிண கொடுமையில செமித்தியா புடுங்கறாங்கன்னு பேப்பர்ல எல்லாம் நாறிச்சி.///

அஃகஃகா... எல்லா நெலவரமும் தெரிஞ்சிதான் வெச்சி இருக்கீங்க.... பாலாண்ணனா கொக்கா??

//எப்பவும் தெரிஞ்சோ தெரியாமலோ ஒன்னு தான் எழுதுவேன். இன்னைக்கு இப்படி. அவ்வ்வ்வ்//

நம்ம பொழப்பு ஓடணும்ல?

கதிர் - ஈரோடு said...

//பழமைபேசி Says:
வாங்க மாப்பு//

வந்துட்டேன் மாப்பு

//வானம்பாடிகள் Says:
வாங்க ஐயா//

வந்துட்டேன் அண்ணா!

இருங்கப்பா............ படிச்சுட்டு வரேன்

வானம்பாடிகள் said...

பழமைபேசி
/அஃகஃகா... எல்லா நெலவரமும் தெரிஞ்சிதான் வெச்சி இருக்கீங்க.... பாலாண்ணனா கொக்கா??/

பின்ன!
/நம்ம பொழப்பு ஓடணும்ல?/

இஃகி

கதிர் - ஈரோடு said...

முதல் பத்தி படிக்கிறப்பவே அந்த புள்ள காலேஜ்க்கு தான் படிக்க போகுதுனு கெஸ் பண்ணிட்டேன் ( அட மெய்யாலுமேதேனுங்க... நம்புங்க)

அதனால பொறுப்பிலி... வெரும் பருப்பாகிவிட்டது இஃகிஃகி

என்ன பாலா அண்ணா.. நீங்களும் வெட்டாப்பு விடறீங்க...

அதோட நாங்க ஆதரிக்கிற உங்க தம்பி பற்றி இடுகை சமீபமா வரல... இது நல்லாயில்ல.. ஆமா சொல்லிட்டேன்

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு
/இருங்கப்பா............ படிச்சுட்டு வரேன்/

ம்கும். அதுக்குள்ள அந்த புள்ள படிப்ப முடிச்சிட்டே வந்துடும்.

கதிர் - ஈரோடு said...

மாப்பு இருக்காற.... சரி எனக்கும் இப்போ ஆப்பு வரப்போகுது

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு

/முதல் பத்தி படிக்கிறப்பவே அந்த புள்ள காலேஜ்க்கு தான் படிக்க போகுதுனு கெஸ் பண்ணிட்டேன் ( அட மெய்யாலுமேதேனுங்க... நம்புங்க)

அதனால பொறுப்பிலி... வெரும் பருப்பாகிவிட்டது இஃகிஃகி/

:)) நிஜம்மாவா?

/என்ன பாலா அண்ணா.. நீங்களும் வெட்டாப்பு விடறீங்க...

அதோட நாங்க ஆதரிக்கிற உங்க தம்பி பற்றி இடுகை சமீபமா வரல... இது நல்லாயில்ல.. ஆமா சொல்லிட்டேன்/

அது செரி. ஆமாம்ல. பார்க்கலாம்.

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு
/மாப்பு இருக்காற.... சரி எனக்கும் இப்போ ஆப்பு வரப்போகுது/

அட இத எழுதறப்போவாவது கவனம் வேணாமா? :))

கதிர் - ஈரோடு said...

நாங்கதான் ஆப்பைத் தேடிப்போவோம்ல... எப்பூடி...

சரிங்க எங்க மாப்ளய இன்னும் காணோம்?

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு

/நாங்கதான் ஆப்பைத் தேடிப்போவோம்ல... எப்பூடி...

சரிங்க எங்க மாப்ளய இன்னும் காணோம்?/

அதான!

கதிர் - ஈரோடு said...

4/4 ஒப்புமையிட்ட சிங்கப்பூர் சிங்கம் பிரபாகருக்கு நன்றி

தண்டோரா ...... said...

பரிந்துரைத்த கதிருக்கு நன்றி..இத்தனை நாள் தவற விட்டதற்கு வருந்துகிறேன்

கதிர் - ஈரோடு said...

//தண்டோரா ...... Says:
October 3, 2009 9:33 PM
பரிந்துரைத்த கதிருக்கு நன்றி..இத்தனை நாள் தவற விட்டதற்கு வருந்துகிறேன்//

ச்சே... விளம்பரம் வேண்டாம்னா கேக்குறாய்ய்ய்ங்களா...

ஓ... தண்டோரா கையால விளம்பரம்னா...ம்ம்ம் சூப்பர்... கலக்குடா கைப்புள்ள

பிரபாகர் said...

கதிரோட பின்னுட்டத்த படிச்சிட்டு படிச்சதால நானும் முன்னாடியே கெஸ் பண்ணிட்டேன்...

இது எனது முதல் பின்னுட்டம். உங்களின் நடை மிக அருமை...

பிரபாகர்.

கதிர் - ஈரோடு said...

//பிரபாகர் Says:
October 3, 2009 9:39 PM
கதிரோட பின்னுட்டத்த//

ச்சே... திரும்பவும் விளம்பரமா....

அண்ணே எங்கே எங்க மாப்பு

வருவாரா... மாட்டாரா...

சரி நீங்க எங்க போயிட்டீங்க

பிரபாகர் said...

கதிர் முதல் பாராவில முடிவ கெஸ் பண்ணிநீன்னு சொன்னத மட்டும்தான் படிச்சேன்.

பிரியமுடன்...வசந்த் said...

நானும் வந்துட்டேன்.....

பழமைபேசி said...

மாப்பு, நான் அலுவலக வேலையா இருக்கேன்.. இடையில அப்பப்ப வந்து போறேன்.... அண்ணனா, கொக்கா?, நீ என்ன பெரிய கொக்கா? இப்படியெல்லாம் கேக்குறமே, இங்க கொக்கான்னா என்ன? விடை சொல்லுங்க பாப்போம்!

பிரபாகர் said...

கெஸ் பண்ணிட்டு படிச்சாலும் கொண்டு போன விதம் மிக அருமை. சரளமான நடை...

பிரபாகர் said...

சிறியதோர் விஷயம்
சிறப்பான பாராட்டு
இதுதான் எங்கள்
ஈரோடு கதிர்

பிரபாகர் said...

கல்யாணம் செய்திட்டு
கிளம்பி செல்லுதற் போல்
நல்லதோர் நடையினிலே
நளினமாய் நகர்த்திட்டு

கல்லூரி செல்லுதல் போல்
கதையினை முடித்திருக்கும்
அழகான கதையிதற்கு
அடியேனும் ரசிகன்தான்...

பிரபாகர்.

கதிர் - ஈரோடு said...

//பழமைபேசி Says:
அண்ணனா, கொக்கா?, நீ என்ன பெரிய கொக்கா? இப்படியெல்லாம் கேக்குறமே, இங்க கொக்கான்னா என்ன? விடை சொல்லுங்க பாப்போம்!//

பெரியோர்களே, தாய்மார்களே...
என்னை கேள்வி கேட்டு ஃப்யூஸ் பிடுங்கிய மாப்புக்கு கண்டனத்தை தெரிவித்து , இந்த கேள்விக்கு பதில் சொல்லத்தெரியுமா என பிரபாகருக்கும், வசந்துக்கும் சவால் விட்டு வடை பெறுகிறேன்... இல்லை விடை பெறுகிறேன்...

பசிக்குதுங்க

(ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பாபா, தப்பிச்சுக்கடா)

பிரபாகர் said...

//தண்டோரா ......
October 3, 2009 9:33 PM
பரிந்துரைத்த கதிருக்கு நன்றி..இத்தனை நாள் தவற விட்டதற்கு வருந்துகிறேன்//

தன்மான சிங்கம் தண்டோரா அண்ணே வணக்கம்...

கதிர் - ஈரோடு said...

//பிரபாகர் Says:
October 3, 2009 9:51 PM
கல்யாணம் செய்திட்டு //

கல்யாணம் செய்திட்டு, தங்கமணியை இந்தியாவுக்கு அனுப்பிட்டு ஜாலியாக இருக்கும் பிரபாகரைக்கண்டு பொறாமையாக இருக்கிறது...

அட.. மாப்புக்கு அம்மிணி கோயமுத்தூர்ல இருக்காங்கல்லல

பிரபாகர் said...

கடவுள் சந்தோஷத்துக்கு அப்புறம் துன்பத்த கொடுப்பான், எனக்கு சந்தோசத்துக்கு அப்புறம் சந்தோசத்தையே கொடுத்திருக்கான்.... புரியுதா கதிர்....

பிரபாகர் said...

////பழமைபேசி Says:
அண்ணனா, கொக்கா?, நீ என்ன பெரிய கொக்கா? இப்படியெல்லாம் கேக்குறமே, இங்க கொக்கான்னா என்ன? விடை சொல்லுங்க பாப்போம்!//

பெரியோர்களே, தாய்மார்களே...
என்னை கேள்வி கேட்டு ஃப்யூஸ் பிடுங்கிய மாப்புக்கு கண்டனத்தை தெரிவித்து , இந்த கேள்விக்கு பதில் சொல்லத்தெரியுமா என பிரபாகருக்கும், வசந்துக்கும் சவால் விட்டு வடை பெறுகிறேன்... இல்லை விடை பெறுகிறேன்...

பசிக்குதுங்க

(ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பாபா, தப்பிச்சுக்கடா)

//


'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா' ன்னு ஒரு முனிவர் சொன்னதா ஒரு கதை தெரியும்... அதுதான் இதற்கு பதிலா?

பிரபாகர்...

பிரபாகர் said...

கொக்கு உறுமீன் வரும் வரையில் வாடியிருப்பது போல், மதுரைக்காரர்கள் தகுந்த சந்தர்ப்பம் வரும் வரை காத்திருப்பார்கள் என்று சொல்லியிருப்பார். எனக்குத் தெரிந்து நிஜமாகவே மதுரைக்காரர்கள் பொறுமையாகக் காத்திருந்து, வேளை வந்ததும் 'லபக்' என்று கொத்திக் கொண்டு பறந்திருக்கிறார்கள். 'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா' என்று தனிப்பாடல் ஒன்று உண்டு. ஆகாத கொக்கை சித்தர் ஒருத்தர் வெறும் கண்ணாலேயே பார்த்து எரித்தாராம். அது போல் பத்தினி ஒருத்தியைக் கோபம்கொண்டு அவர் பார்த்தபோது, 'அப்படியெல்லாம் என்னை பஸ்மம் பண்ணிவிட முடியாது. நானா கொக்கான்னேன்‘ என்று அந்த சித்தரைப் பார்த்து பத்தினி டபாய்த்ததாகக் கேள்வி.

நன்றி சுஜாதா....

இராகவன் நைஜிரியா said...

இது மாதிரி கடைசியில திருப்பம் வைப்பதால், இந்த கதை படிக்கும் போது, எந்த விதமான எண்ணமும் வைக்காமல்தான் படிச்சேங்க..

நல்லா எழுதியிருக்கீங்க.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

பாலாண்ணே, நல்ல இடுகை.

பொறுப்பி 1 : ஊகிக்க முடிந்தது. பொறியியல் துறையில் படிக்க விரும்புபவர்களுக்கு கான்பூரும், காரக்பூரும் கனவு நகரங்கள் :)

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு
/4/4 ஒப்புமையிட்ட சிங்கப்பூர் சிங்கம் பிரபாகருக்கு நன்றி/

:)) ஆமாம். நன்றிங்க பிரபாகர். இவ்வளவு கும்மி இருந்திருக்கு. நான் தூங்கிட்டேனே. அவ்வ்வ்

வானம்பாடிகள் said...

தண்டோரா ......
/பரிந்துரைத்த கதிருக்கு நன்றி..இத்தனை நாள் தவற விட்டதற்கு வருந்துகிறேன்/

வாங்க அய்யா. நன்றி.

மாப்புக்கு தனியா ரொம்ப நன்றி.

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு
/ச்சே... விளம்பரம் வேண்டாம்னா கேக்குறாய்ய்ய்ங்களா...

ஓ... தண்டோரா கையால விளம்பரம்னா...ம்ம்ம் சூப்பர்... கலக்குடா கைப்புள்ள/

அதானே! கைப்புள்ள...

வானம்பாடிகள் said...

பிரபாகர்
/கதிரோட பின்னுட்டத்த படிச்சிட்டு படிச்சதால நானும் முன்னாடியே கெஸ் பண்ணிட்டேன்...

இது எனது முதல் பின்னுட்டம். உங்களின் நடை மிக அருமை...

பிரபாகர்./

:). நன்றிங்க பிரபாகர்.

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு
/அண்ணே எங்கே எங்க மாப்பு

வருவாரா... மாட்டாரா...

சரி நீங்க எங்க போயிட்டீங்க/

முதுகு வலின்னு படுத்தேன். தூங்கிட்டேன்.

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த்
/நானும் வந்துட்டேன்...../

ஆஹா. மிஸ் பண்ணிட்டேன். அவ்வ்வ்

வானம்பாடிகள் said...

பழமைபேசி
/மாப்பு, நான் அலுவலக வேலையா இருக்கேன்.. இடையில அப்பப்ப வந்து போறேன்.... அண்ணனா, கொக்கா?, நீ என்ன பெரிய கொக்கா? இப்படியெல்லாம் கேக்குறமே, இங்க கொக்கான்னா என்ன? விடை சொல்லுங்க பாப்போம்!/

கோழின்னா சொல்லி இருப்பாரு. கொக்குன்னா என்ன பண்ண?

வானம்பாடிகள் said...

பிரபாகர்
/கெஸ் பண்ணிட்டு படிச்சாலும் கொண்டு போன விதம் மிக அருமை. சரளமான நடை.../

ரொம்ப நன்றிங்க பிரபாகர்.

வானம்பாடிகள் said...

பிரபாகர்
/சிறியதோர் விஷயம்
சிறப்பான பாராட்டு
இதுதான் எங்கள்
ஈரோடு கதிர்/

ரிபீட்டேய். அப்பாடா. இதுதான் போடாம இருந்தேன். போட்டாச்சு.

வானம்பாடிகள் said...

பிரபாகர்
/கதையினை முடித்திருக்கும்
அழகான கதையிதற்கு
அடியேனும் ரசிகன்தான்.../

ஆஹா. ரொம்ப நன்றி! கரு ஒன்னு! கத ரெண்டு! பிரபாகர் பாராட்டு மூணு.

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு
/பெரியோர்களே, தாய்மார்களே...
என்னை கேள்வி கேட்டு ஃப்யூஸ் பிடுங்கிய மாப்புக்கு கண்டனத்தை தெரிவித்து , இந்த கேள்விக்கு பதில் சொல்லத்தெரியுமா என பிரபாகருக்கும், வசந்துக்கும் சவால் விட்டு வடை பெறுகிறேன்... இல்லை விடை பெறுகிறேன்...

பசிக்குதுங்க

(ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பாபா, தப்பிச்சுக்கடா)/

கைப்புள்ள எஸ்கேப்புக்கு ஈடு சோடே இல்ல.

Suresh Kumar said...

சந்தோஷமா இருக்கப் பாருடா என்ற மனதோடு வேறு வழியின்றி சமரசமாகிப் போனார் மகாதேவன். //////////


எப்படா சமரசமாகிட்டாரு நல்ல கதை

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு
/கல்யாணம் செய்திட்டு, தங்கமணியை இந்தியாவுக்கு அனுப்பிட்டு ஜாலியாக இருக்கும் பிரபாகரைக்கண்டு பொறாமையாக இருக்கிறது...

அட.. மாப்புக்கு அம்மிணி கோயமுத்தூர்ல இருக்காங்கல்லல/

இதுக்கப்புறமும் மாப்புக்கு ராத்திரி சாப்பாடு கிடைச்சிருக்குமா என்னா?

வானம்பாடிகள் said...

பிரபாகர்
/கடவுள் சந்தோஷத்துக்கு அப்புறம் துன்பத்த கொடுப்பான், எனக்கு சந்தோசத்துக்கு அப்புறம் சந்தோசத்தையே கொடுத்திருக்கான்.... புரியுதா கதிர்..../

புரிஞ்சா சொல்லுங்க கதிர். நாமளும் தெரிஞ்சிக்கலாம்.

வானம்பாடிகள் said...

பிரபாகர்
/'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா' ன்னு ஒரு முனிவர் சொன்னதா ஒரு கதை தெரியும்... அதுதான் இதற்கு பதிலா?/

அதேதானாம். பாராட்டுகள்.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா
/இது மாதிரி கடைசியில திருப்பம் வைப்பதால், இந்த கதை படிக்கும் போது, எந்த விதமான எண்ணமும் வைக்காமல்தான் படிச்சேங்க..

நல்லா எழுதியிருக்கீங்க./

நன்றி சார்.

வானம்பாடிகள் said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028)

/பாலாண்ணே, நல்ல இடுகை.

பொறுப்பி 1 : ஊகிக்க முடிந்தது. பொறியியல் துறையில் படிக்க விரும்புபவர்களுக்கு கான்பூரும், காரக்பூரும் கனவு நகரங்கள் :)/

நன்றி செந்தில்.

வானம்பாடிகள் said...

Suresh Kumar
/
எப்படா சமரசமாகிட்டாரு நல்ல கதை/

நன்றி

யாழினி said...

கல்யாணம் பண்ணி போறா எண்டு நினைக்கவில்லை, மேற் படிப்புக்காக தான் போற எண்டு தான் நினச்சனான். ஆனாலும் கதையை நகர்த்தியிருக்கும் விதம் நல்லாயிருக்கு! :)

வானம்பாடிகள் said...

யாழினி

/கல்யாணம் பண்ணி போறா எண்டு நினைக்கவில்லை, மேற் படிப்புக்காக தான் போற எண்டு தான் நினச்சனான். ஆனாலும் கதையை நகர்த்தியிருக்கும் விதம் நல்லாயிருக்கு! :)/

நன்றிங்க.

கதிர் - ஈரோடு said...

அண்ணே முதுகு வலி சரியாயிடுச்சா...

இருங்க பிரபாகரையும் வரச்சொல்றேன்..

மீண்டும் கும்மியடிப்போம்

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு

/அண்ணே முதுகு வலி சரியாயிடுச்சா.../

இல்லைங்க. பிளக்குது. அப்பப்ப படுத்து எழும்பறதுதான் வைத்தியம்.

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு
/இருங்க பிரபாகரையும் வரச்சொல்றேன்..

மீண்டும் கும்மியடிப்போம்/

ஐயோ. சாரி. நான் பார்க்கவே இல்லை.

கதிர் - ஈரோடு said...
This comment has been removed by the author.
துபாய் ராஜா said...

ஒரு தகப்பனின் பார்வையிலே கதை சொல்லியிருப்பது அருமை.

18 வயது பொண்ணு,கான்பூர்ன்னதுமே ஐ.ஐ.டி தான் படிக்கப்போகுதுன்னு ஊகிச்சுட்டேன் சார். இருந்தாலும் எழுத்துநடை அட்டகாசம்.....

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு

மெயில் பண்ணி இருக்கேன்.

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா

/ஒரு தகப்பனின் பார்வையிலே கதை சொல்லியிருப்பது அருமை.

18 வயது பொண்ணு,கான்பூர்ன்னதுமே ஐ.ஐ.டி தான் படிக்கப்போகுதுன்னு ஊகிச்சுட்டேன் சார். இருந்தாலும் எழுத்துநடை அட்டகாசம்...../

நன்றி. இனிமே இன்னும் உசாரா எழுதுவேன். ஹி ஹி

சி. கருணாகரசு said...

இந்த‌ பயணம் நல்லாயிருக்கு.

வானம்பாடிகள் said...

சி. கருணாகரசு Says:
/இந்த‌ பயணம் நல்லாயிருக்கு./

நன்றிங்க.