Wednesday, October 28, 2009

வடிவேலு! த ஒன் மேன் ஜூரி! 2

(தொடர்கிறது)

வடிவேலு: ஊஊஊஊ ஈஸ் நெஸ்ட்

நான்: இதோ இவந்தான்! இவன நீயே கூப்டுக்க. நான் கூப்டா கொலக்கேசாயிரும்.

வடிவேலு:ஏஏஏஏய் செக்கடரி. ஐ ஜூரி. யூஊஊ கால் மேன்.

நான்: (நீ வாடி! ஏறிப்போச்சோ.ஸ்லிப் கொடுத்து அழைக்கிறேன்)

வ‌டிவேலு: ஹேய். வாஸ் யுர் நாம்.

அவ‌ன்: கோத்த‌பாய‌

வ‌டிவேலு: நோஓஓ நோ பேட் வேர்ஸ். மீ பாவ‌ம். நான் பாவ‌ம். பேர‌க் கேட்டா இஷ்ட‌மிருந்தா சொல்ல‌ணும். இல்லாட்டி பொத்திக்கிட்டு போஓஓஓவியா! அதென்ன‌ கெட்ட‌ வார்த்த‌ சொல்லி போயாங்க‌ற‌து. ப‌க்கிப் ப‌ய‌லெ. பிக்காளிப்ப‌லே. போஓஓஓ. ஸ்டேன்ட‌ப் ஆன் த‌ பெஞ்ச்.

நான்: யோவ். இவ‌ன் வெறி பிடிச்ச‌ சொறி நாயி. சூதான‌மா இருந்துக்க‌ சொல்லிட்டேன்.

வ‌டிவேலு:ஓஓஓக்க்க்கே ஓக்கே. யுவ‌ர் பிர‌த‌ர் டெல். யூ கில் இன்னோச‌ன்ட் பீப்பிள். வாட் யூஊஊ சே. க‌மான் டெல் டெல். சுருக்க‌மா டெல்.

அவ‌ன்: இஃப் யூ ச‌ப்போர்ட் தோஸ் பீப‌ல் யூ ஹேவ் ப்ல‌ட் இன் யுவ‌ர் ஹான்ட். த‌ட்ஸ் வாட் ஐ டெல் பிபிசி.

வ‌டிவேலு:ஒய் ஒய் ஒய். யா! ப்ளட். சாம் ப்ளட். டமில் ப்ளட். (ஏய்யா. என்ன‌ விட‌ ச‌ண்டாள‌மா பேச‌றான். என்னா எள‌வு சொல்றான், சொல்லு.

நான்:(ங்கொய்யால‌ இதுக்குத்தான் காத்துகிட்டிருந்தேன்) அது ஆல‌ ம‌ர‌த்துல‌ சாஞ்சி நின்னா கைல‌ ர‌த்த‌ம் வ‌ர‌வைப்பானாம்.

வ‌டிவேலு:(கோப‌மாகி) யூ ஆன்ஸ‌ர் மேன். வெள்ள‌ கொடி புடிச்சி வ‌ந்தா சுட‌ சொன்னியாமே?

அவ‌ன்: இட் ஈஸ் ஆல் லை. முல்லி வாய்க்கால் சோ ம‌ச் ப்ள‌ட். வைட் ஃப்ளாக் இஸ் நாட் பாசிபல். மை பீப‌ல் கான்ட் ஸீ ரெட் ஃப்ளாக் இன் த‌ டார்க். த‌ட் இஸ் த‌ ட்ரூத்.

வ‌டிவேலு:ஏஏஏஏய். நோ டாக். சே யெஸ் ஆர் நோ. ஒய் யூ கில் ஸோ மெனி சில்ர‌ன், பிர‌க்ன‌ன்ட் லேடீஸ்.

நான்:(அப்புடி போடு. எஸ் ஆர் நோ சொல்ற கேள்வியா இது?)

அவ‌ன்: இட் ஈஸ் நாட் கில்லிங். வீ வேர் ஃபைடிங் ஃபார் இன்னோச‌ன்ட் பீப‌ல். ஐ ஹேவ் ந‌திங்க் மோர் டு சே. ஒயிட் வேன் ஈஸ் வெய்ட்டிங். தேங்க் யூ (போய்ட்டான்)

வ‌டிவேலு:என்னாய்யா அவன் பாட்டுக்கு போய்க்கிருக்கான், ஒயிட் வேனுங்க‌றான்?

நான்: உன்ன‌ ஓட‌ உட்டு ஒயிட் வேன்ல‌ கிட்னி எடுத்தாங்க‌ல்ல‌. அதான் இவ‌ன் இங்க‌ பெரிய‌ ரேஞ்ச்ல‌ ப‌ண்றான். உன்ன‌ கிட்னிய‌ எடுத்துட்டு உசிரோட‌ உட்டானுங்க‌. இவ‌ன் உசிர‌ எடுத்துட்டு கிட்னி, க‌ண்ணெல்லாம் சுடுவான் போல‌. மெர‌ட்டிட்டு போறான்யா. மெர‌ட்டிட்டு போறான்.

வ‌டிவேலு:அய்ங். கொல‌கார‌ப்பாவி. வ‌ச்சிக்கிறேன்டி உன்னிய‌. நேஏஏஏஏஏஸ்ட்.

நான்:தோ. கூப்டுறாரு வாடா வெண்ண‌.

வ‌டிவேலு: இவ‌ன் யாரு? ம‌யில்சாமி மாதிரியே இருக்கான். குழ‌ந்த‌ மாதிரி சிரிக்கிறான‌ய்யா?

நான்:யோவ். ந‌ல்லா வ‌ருது வாயில‌. இது அவ‌ந்த‌ம்பி. வ‌லைய‌த்துக்குள்ள‌ வச்சி வாட்ற‌ நாயி இது. இவ‌ன‌ அங்க‌ கூட்டிபோய் க‌க்குசு க‌ழுவ‌ விடு.

வ‌டிவேலு: ஒய் யூ ஆர் கீப்பிங் பீப்பிள் இன் வேலி?

அவ‌ன்: சேஃப்டி.

வ‌டிவேலு: ஓஓஒ. அதுக்குதான் குளிக்க‌ கூட‌ ம‌றைப்பு இல்லையோ. வ‌க்கிர‌ம் புடிச்ச‌ ப‌ரதேசிங்க‌. வ‌ச்சிக்கிற‌ன்டா உன்னிய‌. யூ ஃபூலாஃபனிடியடாபனேஸ். போஓஒ போஒய் அங்க‌ உக்காரு. நெஸ்ட்.

நான்:புண்சேகா. சை. ஃபொன்சேகா.

வ‌டிவேலு: ஏய்யா க‌ஞ்சா விக்கிற‌வ‌னுக்கு ஆர்மி ட்ரெஸ் போட்டா மாதிரி இருக்கான்.இவ‌னா அவ‌ன்?

நான்: ஆமாம். நீ இவ‌ன‌ கேட்டு முடி. பைத்திய‌மாய்டுவ‌.

வ‌டிவேலு: ஒய் யூ யூஸ் கொத்து குண்டு?

புண்சேகா: நோ கொத்து குண்டு. ஒன்லி கொத்தும‌ல்லி. வி நெவ‌ர் யூஸ்ட் பாம்ஸ். புல்ல‌ட்ஸ். ஒன்லி கூழாங்க‌ல். இண்டியா ஹெல்ப்ட்

வ‌டிவேலு: இண்டியா?

புண்சேகா: பாகிஸ்தான்.

வ‌டிவேலு: பாகிஸ்தான்?

புண்சேகா: சைனா, ர‌ஷ்யா

வ‌டிவேலு: ஏய் நிறுத்து நிறுத்து. என்ன‌மோ அள‌ந்துட்டே போற‌.

புண்சேகா: இட்ஸ் விக்ட‌ரி ஃபார் ஆர்மி.

வ‌டிவேலு: அப்புடி ஒத்துக்க‌.

புண்சேகா:இட்ஸ் விக்ட‌ரி ஃபார் ம‌கிந்த‌ தாட்ஸ்.

வ‌டிவேலு: இவ‌ன‌ புடிச்சி அடைங்க‌ய்யா. ஃபுல்லா டோப் அடிச்சிட்டு வ‌ந்துட்டான். நேஏஏஸ்ட்

நான்: தோ அந்த சப்ப‌

வ‌டிவேலு:கூஊஊஊப்டு. ஐ அங்க பாருய்யா சுருதி.

நான்: தோ ப‌ன்னாட‌. அது சுருதி இல்லை. அந்த‌ம்மா பிள்ளேனு ஒரு அதிகாரி.

வ‌டிவேலு: ஓஓஓஹோ. ச‌ரி ச‌ரி. ஹேய் டெல் யுர் நேம்

ச‌ப்ப‌: ப‌ங்கி மூன்

வ‌டிவேலு: யூ மீன் ப‌ங்கி? நாஆஆஆஆஆளை ந‌ம‌தே! இந்த‌ நாஆஆஆளும் ந‌ம‌தே!

நான்: அட‌ த்தூ. ஆர‌ம்பிச்சிட்டான்டா. யோவ் இது அவ‌னில்லைய்யா.

வ‌டிவேலு: ச‌ரி ச‌ரி. உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டுட்டேன். யோவ் ப‌ங்கி. ஸ்டேன்ட‌ப் ஆன் த‌ பெஞ்ச்.

ச‌ப்ப‌: நோ. ஐம் ப‌ங்கி

வ‌டிவேலு: நாங்க‌ யாரு தெரியும்ல‌? ச‌ங்கி ம‌ங்கி. யூ ஒன். மீ டூ. விச் பிக்

ச‌ப்ப‌: டூ.

வ‌டிவேலு: அப்ற‌மென்ன‌. ஏறுடா என் வெண்று. ஒய் யூ நாட் ஸ்டாப் ப‌டுகொலை.

ச‌ப்ப‌: ஐ அப்பீல்ட். ஹி சீட்ட‌ட். அகைன் ஐ அப்பீல்ட். ஹி சீட்ட‌ட். செவெர‌ல் டைம்ஸ். ஃபைன‌ல்லி வார் ஈஸ் ஓவ‌ர்.

வ‌டிவேலு:க‌டுதாசி எழுதிட்டு க‌க்குசு தொடைச்சி போட்டிங்க‌ளோ. அதான்டா உனுக்கு க‌ண்ணுக்கு ரெப்ப‌ வெக்காம‌ ஜிப்ப‌ வெச்சிருக்கு.

நான்: நேத்தே ரொம்ப‌ நீள‌ம்னு கிண்ட‌ல் ப‌ண்ணிட்டாரு பாண்டிய‌ரு. நிறுத்திக்குவ‌ம். நாளைக்கு முடிச்சிற‌லாம்.61 comments:

கதிர் - ஈரோடு said...

என்னனே....

கருத்துப்போடலாம்னு வந்தா '0'கருத்துனு இருக்கு

கருத்துப் போடவா... வேணாமா?

கதிர் - ஈரோடு said...

//நோஓஓ நோ பேட் வேர்ஸ்.//

அந்த நாயே ஒரு பேட் வேர்டுதானுங்களே

// வ‌க்கிர‌ம் புடிச்ச‌ ப‌ரதேசிங்க‌//

ப‌ரதேசிங்க‌...ப‌ரதேசிங்க‌

//ரெப்ப‌ வெக்காம‌ ஜிப்ப‌ வெச்சிருக்கு.//

ஆமாங்க

பிரபாகர் said...

அய்யா, நீங்க காமெடிக்காக பண்றத அந்த நாயிங்களை புடிச்சிட்டு வந்து நேர்ல செய்யணும். வழக்கம்போல வடிவேலு வானம்பாடி காம்பினேஷன் நல்லருக்கு.

பிரபாகர்.

இது நம்ம ஆளு said...

ஊஊஊஊ ஈஸ் நெஸ்ட்


:)
அருமை

கலகலப்ரியா said...

tamil manam vote + reading + comment.. appalikkaa... bye..

புலவன் புலிகேசி said...

ஐயா நீங்க நகைச்சுவாயா சொன்னத நெஸமா செஞ்சா நல்லா இருக்கும்.........

பழமைபேசி said...

வடிவேலுங்ற சொல்லுக்குண்டான காப்புரிமை யாரோ வாங்கிட்டாங்களாம்... காத்து வாக்குல ஒரு சேதி... அது நீங்களாண்ணே? அப்படித்தான் போல இருக்கு.... வாழ்த்துகள்! இஃகி!!

க.பாலாசி said...

அப்டியே சந்தடி சாக்குல ராஜபக்சேவ உங்க மனசார திட்டிட்டீங்க. ஆனாலும் மனசு ஆறலையே....

தமிழ் நாடன் said...

நல்லா போட்டுத்தாக்குங்க அண்ணே!

தமிழ் நாடன் said...

நல்லா போட்டுத்தாக்குங்க அண்ணே!

கார்த்திகைப் பாண்டியன் said...

விளையாட்டாக சிரித்துக் கொண்டே சொன்னாலும் வார்த்தைகளின் பின்னால் ஒளிந்திருக்கும் வருத்தம் தெரிகிறது..

வானம்பாடிகள் said...

/ கதிர் - ஈரோடு said...

என்னனே....

கருத்துப்போடலாம்னு வந்தா '0'கருத்துனு இருக்கு

கருத்துப் போடவா... வேணாமா?/

அட முட்ட போட சொன்னா முடியாதுங்கலாம். கருத்து போட என்னா கஷ்டம்.=))

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு said...

/அந்த நாயே ஒரு பேட் வேர்டுதானுங்களே/

அதத்தான டிஸ்கில அப்புடி சொன்னது.

வானம்பாடிகள் said...

பிரபாகர் said...

/அய்யா, நீங்க காமெடிக்காக பண்றத அந்த நாயிங்களை புடிச்சிட்டு வந்து நேர்ல செய்யணும். வழக்கம்போல வடிவேலு வானம்பாடி காம்பினேஷன் நல்லருக்கு.

பிரபாகர்./


காமெடிக்காக பண்ணல. ட்ராஜடிய காமெடியா சொல்லி ஆத்திக்கிறது..அவ்வ்வ்

வானம்பாடிகள் said...

இது நம்ம ஆளு said...

/ஊஊஊஊ ஈஸ் நெஸ்ட்


:)
அருமை/

சின்ன இடுகை சிறப்பான இடுகை
சின்ன கமெண்ட் சிறப்பான கமெண்ட்
இதுதான் இது நம்ம ஆளு:) நன்றிங்க

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/tamil manam vote + reading + comment.. appalikkaa... bye../

போஓஓஓட்டாவணும் கமெண்டு. ஹிஹி.

வானம்பாடிகள் said...

புலவன் புலிகேசி said...

/ஐயா நீங்க நகைச்சுவாயா சொன்னத நெஸமா செஞ்சா நல்லா இருக்கும்........./

ஹூம். கலாம் சொன்னா மாதிரி கனவு காணுவோம்.

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

/வடிவேலுங்ற சொல்லுக்குண்டான காப்புரிமை யாரோ வாங்கிட்டாங்களாம்... காத்து வாக்குல ஒரு சேதி... அது நீங்களாண்ணே? அப்படித்தான் போல இருக்கு.... வாழ்த்துகள்! இஃகி!!/

அடியாத்தீ. இங்கார்ரா லொள்ள.இஃகி இஃகி.

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

/அப்டியே சந்தடி சாக்குல ராஜபக்சேவ உங்க மனசார திட்டிட்டீங்க. ஆனாலும் மனசு ஆறலையே..../

புள்ள கவிதை எழுதிட்டு கலங்கி போய் இருக்கு. இதுல எங்க ராஜ பக்சே வந்தாரு?

வானம்பாடிகள் said...

தமிழ் நாடன் said...

/நல்லா போட்டுத்தாக்குங்க அண்ணே!/

என்னா தாக்கினாலும் ஆறுதில்லைங்க.

வானம்பாடிகள் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

/விளையாட்டாக சிரித்துக் கொண்டே சொன்னாலும் வார்த்தைகளின் பின்னால் ஒளிந்திருக்கும் வருத்தம் தெரிகிறது../

புரிதலுக்கு நன்றி.

தண்டோரா ...... said...

வானம்பாடி-வெடிவேலு நல்லா ஒர்க்வுட்டாகுது

T.V.Radhakrishnan said...

சிறப்பான இடுகை

வானம்பாடிகள் said...

தண்டோரா ...... said...

/வானம்பாடி-வெடிவேலு நல்லா ஒர்க்வுட்டாகுது/

ஹி ஹி. நன்றிங்கண்ணே.

Anonymous said...

சும்மா அடிச்சு விளையாடுங்க தல

க.பாலாசி said...

//வானம்பாடிகள் Says:
புள்ள கவிதை எழுதிட்டு கலங்கி போய் இருக்கு. இதுல எங்க ராஜ பக்சே வந்தாரு?//

மொதப் பேரத்தான் பேட் வேர்ட்ஸ்னு சொல்லிட்டீங்க. அதனாலத்தான் இரண்டாவது பேர சொன்னேன். கவித எழுதிட்டு கலங்கிட்டமாம்ல. நாங்கல்லாம் இடியே விழுந்தாலும் எந்திருச்சி நின்னு என்னான்னு பாப்போம். ஹா...ஹா....

வானம்பாடிகள் said...

tamilmoviecenter said...

/சும்மா அடிச்சு விளையாடுங்க தல/

நன்றி தல. என்ன யாரும் அடிச்சி விளையாடாம இருந்தாச் செரி.

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...
/மொதப் பேரத்தான் பேட் வேர்ட்ஸ்னு சொல்லிட்டீங்க. அதனாலத்தான் இரண்டாவது பேர சொன்னேன். /

ஹய்ய்யோ ஹய்ய்ய்யோ. அது பசிலு. அவந்தம்பின்னா பிச்சையா?

/கவித எழுதிட்டு கலங்கிட்டமாம்ல. நாங்கல்லாம் இடியே விழுந்தாலும் எந்திருச்சி நின்னு என்னான்னு பாப்போம். ஹா...ஹா..../

யாருக்காவது விழுந்தாலா=))

பிரியமுடன்...வசந்த் said...

அதான் வருவோம்ல அதென்ன வந்தவங்கள ஆரத்தியெடுத்து வரவேற்க்காமா வெறுமனே வான்றது ...

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/அதான் வருவோம்ல அதென்ன வந்தவங்கள ஆரத்தியெடுத்து வரவேற்க்காமா வெறுமனே வான்றது/

நியாயம் தான் ராசா. நீ வரும்போது எடுக்குறேன் ஆரத்தி. :))

பிரியமுடன்...வசந்த் said...

//அவ‌ன்: கோத்த‌பாய‌

வ‌டிவேலு: நோஓஓ நோ பேட் வேர்ஸ். மீ பாவ‌ம். நான் பாவ‌ம். பேர‌க் கேட்டா இஷ்ட‌மிருந்தா சொல்ல‌ணும். இல்லாட்டி பொத்திக்கிட்டு போஓஓஓவியா! அதென்ன‌ கெட்ட‌ வார்த்த‌ சொல்லி போயாங்க‌ற‌து. ப‌க்கிப் ப‌ய‌லெ. பிக்காளிப்ப‌லே. போஓஓஓ. ஸ்டேன்ட‌ப் ஆன் த‌ பெஞ்ச்.//

ஹ ஹ ஹா

நைனா செம்ம பிக்கப்..

தியாவின் பேனா said...

சிரிப்பு சிரிப்பா வருது என்று சொல்லுவோம் என்று நினைத்தேன்
சிரிப்பு சிரிப்பா வராம அழுகையாக வருமா என்று நீங்க கேட்டாலும் என்று ஒருவித பயம்
சூப்பெர் தலைவா

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/ஹ ஹ ஹா

நைனா செம்ம பிக்கப்../

ம்ம்.

வானம்பாடிகள் said...

தியாவின் பேனா said...

/சிரிப்பு சிரிப்பா வருது என்று சொல்லுவோம் என்று நினைத்தேன்
சிரிப்பு சிரிப்பா வராம அழுகையாக வருமா என்று நீங்க கேட்டாலும் என்று ஒருவித பயம்
சூப்பெர் தலைவா/

ஹி ஹி. நன்றி தியா.

கலகலப்ரியா said...

v.good.. keep it up sir.. sry.. damned tired.. bye..

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/v.good.. keep it up sir.. sry.. damned tired.. bye../

வெடிவாலு: நோ சாரி. நோ பை. இப்போ டயர்ட்னா அப்புறம் படிச்சிட்டு சொல்லணும். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு டீய கீய சாப்டு நாலு வார்த்த சொல்லாத்தா. உசிர பணயம் வெச்சி இவனுவள ஒரு வழி பண்ணிட்டிருக்கேன். நீ இப்புடி சொன்னா எப்புடி. அய்ங்.

அது சரி said...

//
ச‌ப்ப‌: ஐ அப்பீல்ட். ஹி சீட்ட‌ட். அகைன் ஐ அப்பீல்ட். ஹி சீட்ட‌ட். செவெர‌ல் டைம்ஸ். ஃபைன‌ல்லி வார் ஈஸ் ஓவ‌ர்.
//

ஐ.நா ஒரு மனமகிழ் மன்றம்...பான் கி மூன் அங்க சீனியர் டான்ஸர்....இந்த மாதிரி நாறப் பொழைப்பு பொழைக்கிறதுக்கு அவனெல்லாம் ஆம்பளை விபச்சாரியா போயிடலாம்....

ஜெரி ஈசானந்தா. said...

ரசித்தேன்..

அன்புடன் மலிக்கா said...

சிரிப்பிலும் சிந்தனையிருக்கு..

அகல் விளக்கு said...

ஜீப்பரு....

வானம்பாடிகள் said...

அது சரி said...
/ஐ.நா ஒரு மனமகிழ் மன்றம்...பான் கி மூன் அங்க சீனியர் டான்ஸர்....இந்த மாதிரி நாறப் பொழைப்பு பொழைக்கிறதுக்கு அவனெல்லாம் ஆம்பளை விபச்சாரியா போயிடலாம்..../

அப்படித்தானே ஸார் இருக்கான்.இன்னும் போறதெதுக்கு. அடுத்த டெர்ம்கு இன்னும் கீழ இறங்கி நாறிப்போவான்.

வானம்பாடிகள் said...

ஜெரி ஈசானந்தா. said...

/ரசித்தேன்../

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

அன்புடன் மலிக்கா said...

/சிரிப்பிலும் சிந்தனையிருக்கு../

நன்றிங்க

வானம்பாடிகள் said...

அகல் விளக்கு said...

/ ஜீப்பரு..../

தாங்க்ஸ்

சத்ரியன் said...

//ச‌ப்ப‌: ப‌ங்கி மூன்///

சூஊஊஊப்ப்ப்பரு...!

இராகவன் நைஜிரியா said...

வந்துட்டோமில்ல...

// நான்: இதோ இவந்தான்! இவன நீயே கூப்டுக்க. நான் கூப்டா கொலக்கேசாயிரும். //

நம்ம வாயல சொல்வதற்கு கூட லாயக்கிள்ளத பேருங்க..

இராகவன் நைஜிரியா said...

அண்ணே இங்கு நெட் சூப்பர் லொள்ளு பண்ணிகிட்டு இருக்கு... அதனால அப்பாலிக்கா வரேன்...

கோச்சுகிடாதேயும்.. சொல்லிபுட்டேன்..

ராஜ நடராஜன் said...

முந்தைய இடுகைக்கு போயிட்டு திரும்ப வருகிறேன்.

ராஜ நடராஜன் said...

இப்பத்தானே மேட்டரே புரியுது:)

ராஜ நடராஜன் said...

//வ‌டிவேலு: ஓஓஓஹோ. ச‌ரி ச‌ரி. ஹேய் டெல் யுர் நேம்

ச‌ப்ப‌: ப‌ங்கி மூன்//

இவன நினச்சா பத்திகிட்டு வர்ற ஆத்திரத்துக்கு அளவே இல்ல போங்க.

என்னைக்காவது வட கொரியாக்காரன் ஆப்பு வைக்கும் போது தெரியும் மனித நேயத்தின் வலி என்னவென்று உனக்கு.

ராஜ நடராஜன் said...

Mr.Ban Ki-moon!

I Would like to record here my anger and agony and wish google will bring this statement to your naked eyes one day.

A day might come ( I wish not)when North Korea will respond its anger in some form on South Korea and you will know what is the real human pain.

Touch your soul and ask whether you have respected human values as a UNSS?You are disgusting really for the UN Secretary General Chair with your biased nosy look.

ராஜ நடராஜன் said...

UNSS to be read as UNSG.Spell regretted.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...
/நம்ம வாயல சொல்வதற்கு கூட லாயக்கிள்ளத பேருங்க../

சொல்லமாட்டனே அப்புடியே. தமிழ்மணம் இகான் சேத்துதான் சொல்லுவேன்.

/அண்ணே இங்கு நெட் சூப்பர் லொள்ளு பண்ணிகிட்டு இருக்கு... அதனால அப்பாலிக்கா வரேன்...

கோச்சுகிடாதேயும்.. சொல்லிபுட்டேன்../

ஹி ஹி. வாங்கண்ணே.

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...

/முந்தைய இடுகைக்கு போயிட்டு திரும்ப வருகிறேன்./

வாங்கண்ணே.

/இப்பத்தானே மேட்டரே புரியுது:)/

:)

/இவன நினச்சா பத்திகிட்டு வர்ற ஆத்திரத்துக்கு அளவே இல்ல போங்க.

என்னைக்காவது வட கொரியாக்காரன் ஆப்பு வைக்கும் போது தெரியும் மனித நேயத்தின் வலி என்னவென்று உனக்கு./

வீணா அப்பாவிங்கதான் போய் சேருவாங்க சார். இவன மாதிரி ஆளுங்க ஏதோ ஒரு நாட்டுல ஏதோ ஒரு போஸ்ட்ல இருப்பான். உறைக்காது.

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...
/Touch your soul and ask whether you have respected human values as a UNSG?You are disgusting really for the UN Secretary General Chair with your biased nosy look./

soul sold for post.

எதிர்கட்சி..! said...

:-!

அவிய்ங்க ராசா said...

hehe.....kalakkal annachi....

ஊடகன் said...

தமாதத்திர்க்கு வருதிதுகிறேன் ஐயா, மிக அருமையான பதிவு.........

திரையில் நகைச்சுவை பகுதிக்கு வசனம் எழுதலாமெ.............

வானம்பாடிகள் said...

எதிர்கட்சி..! said...

/:-!/

:))

வானம்பாடிகள் said...

அவிய்ங்க ராசா said...

/hehe.....kalakkal annachi..../

அண்ணே வாங்க.:)) நன்றி.

வானம்பாடிகள் said...

ஊடகன் said...

/தமாதத்திர்க்கு வருதிதுகிறேன் ஐயா, மிக அருமையான பதிவு.........

திரையில் நகைச்சுவை பகுதிக்கு வசனம் எழுதலாமெ............./

நன்றி. ஆஹா. இது வேற. வடிவேலுக்கு ஏத்தி விட்றா மாதிரியே ஏத்தி விட்றாய்ங்கப்பா.