Saturday, October 24, 2009

பதிவராகிறார் வடிவேலு-2

நிஜமாவே  பேப ஆயிட்டார் வடிவேலு.  யூத்ஃபுல் குட் ப்ளாக்ஸில்

(நேற்றைய தொடர்ச்சி)

நான்: அண்ணே! பின்னூட்டம் வந்திருக்கு பாரு.

வடிவேலு: அட ஆமப்பா! அந்த புள்ள பேரு வெடிவேலுன்னு இருக்கட்டுன்னிரிச்சி.

நான்: சொன்னேன்ல. சரி கதை எழுத ஆரம்பிங்க. அங்க என்ன பண்றீங்க?

வடிவேலு:வெற்றி! வெற்றி! எனக்கு ஒரு ஓட்டு விளுந்திரிச்சி. எனக்கு ஒரு ஓட்டு விளுந்திரிச்சி.

நான்: அட சை. அது உங்க ஓட்டண்ணே!

வடிவேலு: அய்ங். நான் எப்ப போட்டேன்.

நான்: அது இடுகை திரட்டில சேர்த்தா வரும். இன்னொன்னு நாம அமுக்கணும். அது நான் பண்ணேன்.

வடிவேலு: ஏன்யா? அப்ப நீ உன் ஓட்டே போடாம இவ்ளோ நேரம் இருந்திருக்க.

நான்: நல்ல ஆரம்பம்ணே. ஓட்டு பைத்தியம் பிடிச்சிடுச்சி உனக்கும். இப்ப கதை எழுதப் போறியா?  நான் போகவா?

வடிவேலு: இருய்யா இருய்யா. வந்து, வந்து, அண்ணனுக்கு புதுசா? பர பரன்னு இருக்கு. கொஞ்சம் விலாஆஆவரியா சொல்லிடுப்பா. நான் எளுதிக்குவேன்.

நான்: அட சாணைக்கு பொறந்த சோணன்னு சரியாதான்யா சொன்னான் அந்தாளு. சரி. அப்பத்தாட்ட காசு சுட்டாச்சி. மெட்ராஸ் போகணும். பஸ்ல டிக்கட் இல்லாம போனா என்னாகும்னு தெரியும்ல.

வடிவேலு:நல்லாத் தெரியுமே. காது ஙொய்னு கேட்டுகிட்டே இருக்கும்.

நான். ட்ரெயினெல்லாம் புடிச்சி உனக்கு போவத் தெரியாது. நீ என்னா பண்ற, பரோட்டா கட வாசல்ல நிறுத்தி இருக்கிற ஒரு லாரி டாப்புல ஏறி படுக்குற.

வடிவேலு: அது மெட்ராஸு போவுன்னு எப்டிப்பா தெரியும்.

நான்: ய்ங். போய் ட்ரைவர கேட்டு ஏறுன. போறது திருட்டுத்தனமா. இதுக்கு கேள்வி வேற.

வடிவேலு: ச்சரிப்பா சரிப்பா. கோச்சிக்கிறாத. சொல்லு சொல்லு.

நான்: அப்புடி கேளு. பசி மயக்கத்துல அசந்து போய் தூங்கிர்ர. லாரி போய்க்கிருக்கு. நெடுஞ்சாலையில ரெண்டு பக்கம் மரம்.இருட்டுல இலையெல்லாம் கருப்பா, கேப்புல வெளிச்சம்னு டெர்ரரா இருக்கு.

வடிவேலு:(நல்லவன் மாதிரியே சொல்றானே! கால வாரவான்னு தெரியலையே. சரி கேப்போம்) ஏம்ப்பா, நாந்தான் தூங்கிட்டேனே. அப்புறம் இதெல்லாம் எப்புடி தெரியும்? ஒரு லாஜிக் வேணாம்?

நான்: ணே. வேன்ல வெச்சி கிட்னி எடுத்துட்டான்னு நடிச்சியே. அது லாஜிக்கா? கதைன்னா ஒரு த்ரில் வேணாமா. அதுக்குதாண்ணே. அது எங்களுக்கு. எங்களுக்கு.

வடிவேலு:(பயந்தபடி) சரி சொல்லு.

நான்: அப்புடியே போய்க்கிருக்க திடீர்னு காத்துல 'ரா ரா' பாட்டு மிதந்து வருது.

வடிவேலு: நிப்பாட்டு நிப்பாட்டு. இப்போ ஏன்யா அத இளுத்து விடுற? ஐவேசுல சாங்கு.ய்ங். தெலுங்கு படத்த விட மோசமா இருக்குய்யா உன் கத.

நான்: யோவ் வெண்ண. ட்ரைவர் லாரில எஃப்.எம் ரேடியோ போட்டாருய்யா. நீ ரொம்ப லாஜிக் பேசுற, நான் போறேன்.

வடிவேலு: அட இருய்யா. அண்னன் தெரியாமதான கேட்டேன். இது எதுக்குன்னு சொல்லுய்யா.

நான்: த்ரில்லுக்கு எஃபெக்டுப்பா. நீ விட்டா முழு கதையும் என்ன எழுத வெச்சிடுவ. நீ பார்க்காத சிச்சுவேசனா. அதெல்லாம் சேர்த்துக்க. போய்க்கிட்டே இருந்த வண்டி சடார்னு வலப்பக்கம் திரும்பி கோயம்பேடு மார்கட்ல வந்து நிக்குது.

வடிவேலு: ஏண்டா ஏன்?

நான்: யோவ். நான் பின்னூட்டத்தில எதிர் பாராத திடுக்கிடும் திருப்பம்னு போடணும்லயா வெண்ண. அதுக்குதான். அப்புறம் எங்க போகுதுன்னே தெரியாம ஏறிப் படுத்த வண்டி சரியா கோடம்பாக்கம் பக்கத்துல வந்து நின்னா நல்ல முடிவா இல்லையா?

வடிவேலு: அட நீ அப்புடி வாரியா. ச்சேரி ச்சேரி. இனிமே நம்ம சொந்த பிட்ட போடுவம்ல.

நான்: அண்ணே. இது சிறுகதையா போடு. மத்ததெல்லாம் சேர்த்தா பெருசாயிரும். அப்புறமா தொடர் இடுகையா போட்டுக்கலாம்.

வடிவேலு: அதுஞ்செரிதான்.

நான்: யோவ். நான் சொல்லிகிட்டே இருக்கேன். அங்க என்ன பண்ற.

வடிவேலு: அட நீதானப்பா சொன்ன. ஓட்டு விளுந்திருக்கா. பின்னூட்டம் வந்திருக்கான்னு பார்த்தேன்.

நான். அடிங்கொய்யாலே. இப்பதான்யா புரியுது நீ எப்புடி இவ்ளோ வளர்ந்தன்னு. நெளிவு சுளிவெல்லாம் டக்னு புடிச்சிர்ற.

வடிவேலு: சரி தம்பி. கவிதையாச்சி, கட்டுரையாச்சி. அப்புறம்?

நான்: ய்ங். டீ குடிக்க போற. அங்க 2 பேரு நாட்டு நடப்ப பேசுவாய்ங்கல்ல. அத அப்புடியே உம்பிட்டா போடு. அரசியல் இடுகையாயிரும். கோயம்பேட்டுல கத்திரிக்கா கிலோ 30 ரூ அனியாயம்னு பேசிட்டு போவாங்க. அத எழுது. நாட்டு நடப்பாயிரும். ஊர்ல உங்கப்பா விரட்டி விட்டாருன்னு பக்கத்தூட்டுல திருட்டு சோறு சாப்டது எழுது. ஏழு தெரு தாண்டி ஒரு ஊட்டு மாடியில நின்னு எம்.சி. ஆர பார்த்தத அவரு கூட டிப்பன் சாப்டேன்னு எழுது. இனிமே உன் ராச்சியம்தான்.

வடிவேலு: அட அட பர பரங்குதுப்பா. ராவெல்லாம் தூங்காம அத்தனையும் எழுதிர்ரேன். ஆமா. நான் அடுத்த இடுகை எப்போ எப்புடி போடுறது. அதச் சொல்லப்பா.


நான்: பாருண்ணே. சிலது பர பரன்னு சேல்ஸ் ஆய்க்கிரும். சிலது போணியாவாது. சூனா பானாவ நினைச்சிகிட்டு போட்டுகிட்டே இருக்கறதுதான்.

வடிவேலு:அப்ப பரபரன்னு சேல்ஸ் ஆனா நான் பிரபலமா? சாரி சாரி பேமஸா.

நான்: அய். தோடா. அவ்ளோ சுளுவில்லண்ணே.  அது நிறைய கடக்கணும். ஆரம்பத்துல வளைச்சு வளைச்சு எதிரோட்டு போடுவாய்ங்க. அப்புறம் உனக்கு ஒன்னும் ஓடலையின்னா அந்த கவிதை எழுதினல்ல. அது இப்போ கொஞ்சம் மாத்தி போடலாம்.

வடிவேலு: ஏம்பா. தெரிஞ்சிராது?

நான்: அது மீள் இடுகைன்னு போட்டுக்கலாம்ணே.  அப்புறம் இது பேரு இப்போ கவிதை இல்ல. ஐக்கூ. நீ போடு.
              கண்விழித்து காபி
              கக்குசு
              காத்து.

வடிவேலு: அய்யோ. சினிமாலதான் என்ன நாறடிக்கிறாங்கன்னா இவனும் சேர்ந்துக்குறானே. நான் என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்? ஏய்யா என்னையே சுத்தி சுத்தி இப்புடி பண்றீங்க. சரி. போட்டு தொலைடா வெடிவேலு.

நான்: இரு பின்னூட்டம் போடுறேன். "அண்ணே. கவுஜ சூப்பர். "

வடிவேலு: அதென்னாது கவுஜ.

நான்: யாருக்கு தெரியும். அது நெற‌யா இருக்கு. நீ அப்பாலிக்கா தண்டோரா அண்ணன படி.

வடிவேலு: அடிங்கொய்யாலே. என்னாமா அளக்குறான்யா.

நான்: இருண்ணே இருண்ணே. ஒரு பின்னூட்டம். படி படி. அட அனானி.

வடிவேலு: அது யாரு அனானி?

நான்: அது யாராவது திட்றது, போட்டுக்குடுக்கறதுக்கு யார்னே தெரியாம போடுவாங்கண்ணே. அதான்.

வடிவேலு: சரி பார்க்கலாம். அய்ங். அதென்னாது எதிர்கவுஜ?

நான்: இரு பார்க்கிறேன். இங்க சொடக்குண்ணே. இப்போ பாரு. ம்ம்ம்ம்.  ஆமா. உங்கவுஜக்கு எதிர்கவுஜ போட்டிருக்குண்ணே.

சோத்துக்கில்லை
சோம்பிப் படுத்தான்
காத்து.

வடிவேலு: என்னாது. சோத்துக்கில்லையா. சோம்பிப் படுத்தனா? அண்ணே விடாதண்ணே. சரியா பதில் குடுக்கணும். நீ ஒரு எதிர் கவுஜ போடு.

நான்:அண்ணே. நல்லா வருவண்ணே. அவன் போட்டு குடுத்ததும் பொங்கிட்ட பார்த்தியா. இப்புடியே போய்க்கிரு. பேப ஆய்டுவ. நான் என் பொழப்ப பார்க்கணும்.


வடிவேலு: ஏன் என்ன இப்புடி டார்ச்சர் பண்ற. நான் பேபன்னு எப்ப தெரிஞ்சிக்கிறது?

நான்: (அய்யோ. இதுக்கு பதிலே இல்லையே. நான் என்ன சொல்லுவேன்). நீ இப்பதான ஆரம்பிச்சிருக்க. நானும் பாலோ பண்றன்ல. நானே வந்து சொல்றேன். இல்லன்னா போன் பண்றேன். (எனக்கே தெரியாதுடி. இப்போ ஆளவிடு.)

வடிவேலு: அண்ணன் நம்பியிருக்கேன் . கண்டிப்பா சொல்லணும் என்னா? டேங்ஸ். போய்ட்டு வா.

நான்: சரி வரேண்ணே. (வெளிக் கதவு வரை வந்து டரியலாகி) அண்ணே. போச்சா வந்திச்சா புரியலயேண்ணே!

வடிவேலு: என்னாது?

நான்: அங்க பாரு. விசயகாந்த் வீட்டுள்ள இருந்து யாரு போறதுன்னு.

வடிவேலு: அட ஆமா! அன்னைக்கு பதிவர் கூடல்ல ஆட்டிகிட்டு போனானே அவனா இவன்!

நான்:  அடப்பாவி. நேத்து இவன் இடுகைய பார்த்தப்பவே டவுட்டா இருந்திச்சி. அவருக்கு இவன் பதிவராக வழி சொல்லிட்டான் போலண்ணே. அந்தாளுக்கு காலேசெல்லாம் வேற‌ இருக்கே. எல்லாப் பயகளுக்கும் ஒரு பிரியட் ஓட்டு குத்த, பின்னூட்டம் போடன்னு விட்டா அந்தாளு பேப ஆயிடுவாருண்ணே.

சொந்தமா திரட்டி கூட வச்சிக்குவாரு. வேணான்னா கேட்டியா? இப்ப பாரு. விடவும் முடியாம அவஸ்தைப்  படப்போற. ஹூம். அவன் அவன் எடுக்குற முடிவு உனக்கு பாதகமா இருந்தா என்ன பண்ணுவ. வர்ட்டா.

(பொறுப்பி: நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. தண்டோரா அண்ணன், வசந்து புள்ளையாண்டான் இடுகையை உரிமையாக கோர்த்திருக்கிறேன். மன்னிக்கவும்)

__________/\__________

95 comments:

நாஞ்சில் பிரதாப் said...

ஒரே காமெடிதான் சார் போங்க... அதுலயும் எல்லா ஹைக்கூவும் சூப்பர்.

எப்படி சார் எழுத்துபிழையே இல்லாம எழுதுறீங்க...?

பிரபாகர் said...

//யோவ். நான் பின்னூட்டத்தில எதிர் பாராத திடுக்கிடும் திருப்பம்னு போடணும்லயா வெண்ண//
அய்யா, திருப்பம்னு கேள்விப்பட்டிருக்கேன், இப்போதான் லைவா புரியுது.

எப்படிங்கய்யா? இடுகையிடறதுல இருக்கிற மர்மத்தையெல்லாம் காமெடியா விட்டு கலக்குறீங்க? அருமை அய்யா.

பிரபாகர்.

க.பாலாசி said...

முதல்ல வோட்டு....கொஞ்சம் லேட்டா வர்ரேன். இன்னைக்கு இங்க பொங்கல் உண்டா?

கதிர் - ஈரோடு said...

//அப்ப பரபரன்னு சேல்ஸ் ஆனா நான் பிரபலமா//

நீ பிரபலம்டி.... ஆனா அப்புறம் இருக்கு உனக்கு பிராபளம்டி

வானம்பாடிகள் said...

/ நாஞ்சில் பிரதாப் said...

ஒரே காமெடிதான் சார் போங்க... அதுலயும் எல்லா ஹைக்கூவும் சூப்பர்./

நன்றி ப்ரதாப்.

வானம்பாடிகள் said...

பிரபாகர் said...

/எப்படிங்கய்யா? இடுகையிடறதுல இருக்கிற மர்மத்தையெல்லாம் காமெடியா விட்டு கலக்குறீங்க? அருமை அய்யா.
/

அட நீங்க வேற. நாமளே கத்துகுட்டி. அதெல்லாம் தெரிஞ்சிருமா.=))

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

/முதல்ல வோட்டு....கொஞ்சம் லேட்டா வர்ரேன். இன்னைக்கு இங்க பொங்கல் உண்டா?/

அது. குழம்புல பாகக்கா மறக்கலாம். ஓட்ட மறந்துறாதீங்க=))

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு said...

/நீ பிரபலம்டி.... ஆனா அப்புறம் இருக்கு உனக்கு பிராபளம்டி/

ஹாஹா. விட்ருவமா. சொல்லிட்டம்ல.

கதிர் - ஈரோடு said...

//அது மீள் இடுகைன்னு போட்டுக்கலாம்ணே. //

நம்ம தலயில கை வைக்கிறியே தலைவா

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு said...

/நம்ம தலயில கை வைக்கிறியே தலைவா/

அட இல்லீங். நாம எழுதி போணியாவாதத நைசா தள்ளி விடலாம்னு பார்க்குறேன். நீங்க வேற=))

கதிர் - ஈரோடு said...

ஆமா...
www.vedivelu.blogspot.com

போட்ட பிளாக் ஓப்பன் ஆஹ மாட்டேங்குது....

வடிவேலுவ ஏமாத்திப்புட்டீங்களோ!

நான் வேணா
www.பிச்சு.com போட்டு பாக்கட்டுமா?

பழமைபேசி said...

எல்லாம் நல்லா இருங்க சாமியோவ்... _/\_

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு said...
/போட்ட பிளாக் ஓப்பன் ஆஹ மாட்டேங்குது....

வடிவேலுவ ஏமாத்திப்புட்டீங்களோ!

நான் வேணா
www.பிச்சு.com போட்டு பாக்கட்டுமா?/

he he vedivalunnu paarunga

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

/எல்லாம் நல்லா இருங்க சாமியோவ்... _/\_/

வாங்க பழமை. ஆஹா இதென்னா? ரொம்ப வேலையாட்ருக்கு.

க.பாலாசி said...

//வடிவேலு: அட அட பர பரங்குதுப்பா. ராவெல்லாம் தூங்காம அத்தனையும் எழுதிர்ரேன். ஆமா. நான் அடுத்த இடுகை எப்போ எப்புடி போடுறது.//

ஆகா...இப்பவே கண்ண கட்டுதே....

//வடிவேலு: நிப்பாட்டு நிப்பாட்டு. இப்போ ஏன்யா அத இளுத்து விடுற? ஐவேசுல சாங்கு.ய்ங். தெலுங்கு படத்த விட மோசமா இருக்குய்யா உன் கத.//

அவருக்கும் தெரிஞ்சுபோச்சா?....

//வடிவேலு:அப்ப பரபரன்னு சேல்ஸ் ஆனா நான் பிரபலமா? சாரி சாரி பேமஸா.•//

இல்ல...இல்ல... மைனஸ் ஓட்டுல்லாம் வாங்கினாத்தான் இப்ப பேமஸே....

:)))

இராகவன் நைஜிரியா said...

வணக்கம்... வந்தனம்.. சுஸ்வாகதம்... நம்ஸ்கார்...

நான் வந்துட்டேன்... யாராவது லைன்ல இருக்கீங்களா... கும்மி அடிக்கலாமா... வசதி எப்படி... சொன்னா ரெடி, ஸ்டெடி, ம்யூஜிக் சொல்ல வசதியா இருக்கும்..

இராகவன் நைஜிரியா said...

// தமிழ்மணம் பரிந்துரை : 7/7 //

எப்பூடி இது... 7 ஓட்டு விழற வரைக்கும், உங்க நண்பர் நெகடிவ் ஓட்டு குத்தாம இருக்காரு..

இராகவன் நைஜிரியா said...

// நான்: அண்ணே! பின்னூட்டம் வந்திருக்கு பாரு. //

ஓ.. அவருக்கு பின்னூட்ட பைத்தியம் பிடிக்க வைக்காம இருக்க முடியாது நம்மாள... ம் நடக்கட்டும் உங்க திருவிளையாடல்..

இராகவன் நைஜிரியா said...

// நான்: சொன்னேன்ல. சரி கதை எழுத ஆரம்பிங்க. //

அண்ணே ஏன் இந்த விஷப் பரிட்சை.. கதை எல்லாம் எழுதச் சொல்லிட்டு...

இராகவன் நைஜிரியா said...

// வெற்றி! வெற்றி! எனக்கு ஒரு ஓட்டு விளுந்திரிச்சி. எனக்கு ஒரு ஓட்டு விளுந்திரிச்சி. //

ஒழுங்கா பார்க்கச் சொல்லுங்க... அது துபாயில் இருந்து வந்த நெகட்டிவ் ஓட்டா இருக்கும்.

இராகவன் நைஜிரியா said...

// நான்: அட சை. அது உங்க ஓட்டண்ணே! //

அவசரத்தில அவர் ஓட்டையும் நெகட்டிவ் ஓட்டா போட்டு விடுவாருங்க..

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/வணக்கம்... வந்தனம்.. சுஸ்வாகதம்... நம்ஸ்கார்.../

அண்ணே வாங்க வணக்கம்.

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

/இல்ல...இல்ல... மைனஸ் ஓட்டுல்லாம் வாங்கினாத்தான் இப்ப பேமஸே....

:)))/

வாங்க ஜூனியர்:)) வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

// வடிவேலு: ஏன்யா? அப்ப நீ உன் ஓட்டே போடாம இவ்ளோ நேரம் இருந்திருக்க. //

ஆஹா.. எப்பூடி கண்டுபிடிச்சாரு...

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

// தமிழ்மணம் பரிந்துரை : 7/7 //

எப்பூடி இது... 7 ஓட்டு விழற வரைக்கும், உங்க நண்பர் நெகடிவ் ஓட்டு குத்தாம இருக்காரு..//

வீகெண்ட்ல எஸ்கேப்புண்ணே.

இராகவன் நைஜிரியா said...

// வடிவேலு: இருய்யா இருய்யா. வந்து, வந்து, அண்ணனுக்கு புதுசா? பர பரன்னு இருக்கு. கொஞ்சம் விலாஆஆவரியா சொல்லிடுப்பா. நான் எளுதிக்குவேன். //

விலாஆஆவரியா சொல்லி கொடுக்கும் நேரத்தில் நீங்களே எழுதிடலாம் என்றுச் சொல்ல வேண்டியதுதானே அண்ணே..

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ஓ.. அவருக்கு பின்னூட்ட பைத்தியம் பிடிக்க வைக்காம இருக்க முடியாது நம்மாள... ம் நடக்கட்டும் உங்க திருவிளையாடல்../

பின்ன:))

சி. கருணாகரசு said...

கலக்குங்க.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said

/ஒழுங்கா பார்க்கச் சொல்லுங்க... அது துபாயில் இருந்து வந்த நெகட்டிவ் ஓட்டா இருக்கும்./

ஆமாண்ணே. காத்திருந்து போட்றாய்ங்க.

இராகவன் நைஜிரியா said...

// நான்: ய்ங். போய் ட்ரைவர கேட்டு ஏறுன. போறது திருட்டுத்தனமா. இதுக்கு கேள்வி வேற. //

ஆஹா.. இது பதில்...

வானம்பாடிகள் said...

சி. கருணாகரசு said...

/ கலக்குங்க./

=))

கதிர் - ஈரோடு said...

வெடிவேலு முதல் இடுகையிலேயே "குட் பிளாக்ல" வந்துட்டாரு...

இது சூப்பருண்ணே...

இராகவன் நைஜிரியா said...

// நான்: அப்புடி கேளு. பசி மயக்கத்துல அசந்து போய் தூங்கிர்ர. லாரி போய்க்கிருக்கு. நெடுஞ்சாலையில ரெண்டு பக்கம் மரம்.இருட்டுல இலையெல்லாம் கருப்பா, கேப்புல வெளிச்சம்னு டெர்ரரா இருக்கு. //

அப்படியில்ல அண்ணே பரோட்டா கடையில், பரோட்டாவும், சால்னாவும் சாப்பிட்டு வந்த உண்ட மயக்கம் அண்ணே...

இராகவன் நைஜிரியா said...

// நான்: ணே. வேன்ல வெச்சி கிட்னி எடுத்துட்டான்னு நடிச்சியே. அது லாஜிக்கா? கதைன்னா ஒரு த்ரில் வேணாமா. அதுக்குதாண்ணே. அது எங்களுக்கு. எங்களுக்கு. //

வடிவேலு அண்ணன் லாஜிக் பற்றி உங்க கிட்ட கேட்டாரு பாருங்க அவரைச் சொல்லணும்.

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு said...

// வெடிவேலு முதல் இடுகையிலேயே "குட் பிளாக்ல" வந்துட்டாரு...

இது சூப்பருண்ணே...//

வெடிவாலுண்ணே=)). அதான் தம்பட்டம் போட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

// நான்: அப்புடியே போய்க்கிருக்க திடீர்னு காத்துல 'ரா ரா' பாட்டு மிதந்து வருது. //

அய்யோ... ஏன்.. இந்த கொலை வெறி...

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said

/வடிவேலு அண்ணன் லாஜிக் பற்றி உங்க கிட்ட கேட்டாரு பாருங்க அவரைச் சொல்லணும்./

=)).அதானே.

இராகவன் நைஜிரியா said...

// நான்: யோவ் வெண்ண. ட்ரைவர் லாரில எஃப்.எம் ரேடியோ போட்டாருய்யா. நீ ரொம்ப லாஜிக் பேசுற, நான் போறேன்.//

அண்ணே வெண்ணையை எதுக்கு அண்ணே இங்க இழுக்கிறீங்க... அந்த வெண்ண பார்ட்டி ஏற்கனவே குமறிகிட்டு இருக்காங்க... இப்ப இத வேற இழுத்து விட்டுடீங்களே..

இராகவன் நைஜிரியா said...

// நான்: யோவ். நான் பின்னூட்டத்தில எதிர் பாராத திடுக்கிடும் திருப்பம்னு போடணும்லயா வெண்ண. //

அய்யோ அண்ணே திரும்பவும் வெண்ணயா?

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said

/அண்ணே வெண்ணையை எதுக்கு அண்ணே இங்க இழுக்கிறீங்க... அந்த வெண்ண பார்ட்டி ஏற்கனவே குமறிகிட்டு இருக்காங்க... இப்ப இத வேற இழுத்து விட்டுடீங்களே../

சார் கண்டுக்காதிங்க சார். அவ்வ்வ்வ்

இராகவன் நைஜிரியா said...

// அப்புறம் எங்க போகுதுன்னே தெரியாம ஏறிப் படுத்த வண்டி சரியா கோடம்பாக்கம் பக்கத்துல வந்து நின்னா நல்ல முடிவா இல்லையா? //

ரொம்ப நல்ல முடிவு அண்ணே... திரைக்கதைக்கு ரொம்ப பொருத்தமான சிச்சுவேஷன்..

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said.
/அய்யோ அண்ணே திரும்பவும் வெண்ணயா?/

அண்ணே கதிர் கணக்கு வெச்சி கண்டனம் சொல்லுவாருண்ணே. போட்டுக்குடுக்குறீங்களே.

இராகவன் நைஜிரியா said...

// அண்ணே. இது சிறுகதையா போடு. மத்ததெல்லாம் சேர்த்தா பெருசாயிரும். அப்புறமா தொடர் இடுகையா போட்டுக்கலாம். //

ஆஹா.. தொடர் இடுகை... தாங்க முடியலடா சாமி..

இராகவன் நைஜிரியா said...

// வடிவேலு: அட நீதானப்பா சொன்ன. ஓட்டு விளுந்திருக்கா. பின்னூட்டம் வந்திருக்கான்னு பார்த்தேன். //

பின்னூட்டம் போட நாங்க இருக்கோம் அப்படின்னு ஒரு பிட்ட போட்டுவிட்டு வர வேண்டியது தானே அண்ணே..

இராகவன் நைஜிரியா said...

// நான். அடிங்கொய்யாலே. இப்பதான்யா புரியுது நீ எப்புடி இவ்ளோ வளர்ந்தன்னு. நெளிவு சுளிவெல்லாம் டக்னு புடிச்சிர்ற. //

அத மட்டும் கரெக்டா பிடிச்சுக்குவாருங்க..

இராகவன் நைஜிரியா said...

// : ய்ங். டீ குடிக்க போற. அங்க 2 பேரு நாட்டு நடப்ப பேசுவாய்ங்கல்ல. அத அப்புடியே உம்பிட்டா போடு. அரசியல் இடுகையாயிரும். //

அரசியல் இடுகையா... அண்ணே அவர் அரசியல் இடுகை எழுதினா அது காமெடியா இல்ல இருக்கும்.

இராகவன் நைஜிரியா said...

// கண்விழித்து காபி
கக்குசு
காத்து. //

பின் நவீனத்துவ கவுஜ..!!! :-)

இராகவன் நைஜிரியா said...

// அது நெற‌யா இருக்கு. நீ அப்பாலிக்கா தண்டோரா அண்ணன படி. //

சரியான வழி காட்டியிருக்கீங்க.

இராகவன் நைஜிரியா said...

// வடிவேலு: அது யாரு அனானி? //

அட நீங்க வேற அண்ணே... அதை அண்ணா அண்ணி அப்படின்னு படிச்சு இருப்பாரு அவரு..

இராகவன் நைஜிரியா said...

50

இராகவன் நைஜிரியா said...

ஹையா... மீ த 50

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/பின்னூட்டம் போட நாங்க இருக்கோம் அப்படின்னு ஒரு பிட்ட போட்டுவிட்டு வர வேண்டியது தானே அண்ணே../

ச்சூ. அது பதிவர் சந்திப்பு 4த் பார்ட் பெண்டிங்ல வருதுண்ணே.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ஹையா... மீ த 50/

ம்கும். நேத்தே மிஸ் நு விட்டு வச்சேன்.

இராகவன் நைஜிரியா said...

// நான்: (அய்யோ. இதுக்கு பதிலே இல்லையே. நான் என்ன சொல்லுவேன்). நீ இப்பதான ஆரம்பிச்சிருக்க. நானும் பாலோ பண்றன்ல. நானே வந்து சொல்றேன். இல்லன்னா போன் பண்றேன். (எனக்கே தெரியாதுடி. இப்போ ஆளவிடு.)//

இஃகி... இஃகி... நமக்குத் தெரியாத போது, எப்படி சமாளிக்கணும் அப்படின்னு நல்லாவே சொல்லியிருக்கீங்க

இராகவன் நைஜிரியா said...

// நான்: அடப்பாவி. நேத்து இவன் இடுகைய பார்த்தப்பவே டவுட்டா இருந்திச்சி. //

ஆமாம் அண்ணே நேத்தே நினைச்சேன் உங்க இடுகைக்கு எதிர்(ரி) இடுகை அப்படின்னு... நீங்களே சொல்லிட்டீங்க..

இராகவன் நைஜிரியா said...

// எல்லாப் பயகளுக்கும் ஒரு பிரியட் ஓட்டு குத்த, பின்னூட்டம் போடன்னு விட்டா அந்தாளு பேப ஆயிடுவாருண்ணே. //

ஓ இப்படி எல்லாம் வேற வழியிருக்குதா அண்ணே...

இராகவன் நைஜிரியா said...

// க.பாலாசி said...
முதல்ல வோட்டு....கொஞ்சம் லேட்டா வர்ரேன். இன்னைக்கு இங்க பொங்கல் உண்டா? //

பொங்கலா... பொங்கலோ பொங்கல் ஓடிகிட்டு இருக்குங்க அண்ணே..

இராகவன் நைஜிரியா said...

// கதிர் - ஈரோடு said...
//அப்ப பரபரன்னு சேல்ஸ் ஆனா நான் பிரபலமா//

நீ பிரபலம்டி.... ஆனா அப்புறம் இருக்கு உனக்கு பிராபளம்டி //

ஆஹா இதுவல்லவோ பதில்..

இராகவன் நைஜிரியா said...

// கதிர் - ஈரோடு said...
//அது மீள் இடுகைன்னு போட்டுக்கலாம்ணே. //

நம்ம தலயில கை வைக்கிறியே தலைவா //

உங்க தலையிலையா... சான்சே இல்லீங்க..

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said..

/அரசியல் இடுகையா... அண்ணே அவர் அரசியல் இடுகை எழுதினா அது காமெடியா இல்ல இருக்கும்./

அது காமெடியா தானே போய்க்கிருக்கு.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே எல்லாருக்கும் என்ன ஆச்சு.. ஒருத்தரையும் காணுமே...

தனியா டீ ஆத்திகிட்டு ரொம்ப போரடிக்கது அண்ணே..

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...
/ஓ இப்படி எல்லாம் வேற வழியிருக்குதா அண்ணே.../
=))

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
க.பாலாசி said...

/இல்ல...இல்ல... மைனஸ் ஓட்டுல்லாம் வாங்கினாத்தான் இப்ப பேமஸே....

:)))/

வாங்க ஜூனியர்:)) வாழ்த்துகள். //

வாழ்த்துகள் எதுக்கு அண்ணே... மைனஸ் ஓட்டு வாங்கவா?

இராகவன் நைஜிரியா said...

எதோ என்னால முடிஞ்சது 15 ல் இருந்து 63 க்கு கொண்டு வந்துட்டேன்...

யாராவது வாங்கப்பா.. நொம்ப போரடிக்குது...

தம்பி வசந்த் எங்கய்யா போயிட்டே..
உன் பின்னூட்டத்தை காண ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே வசந்த்.

பின்னூட்டம் போடு வசந்த், பின்னூட்டம் போடு..

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/வாழ்த்துகள் எதுக்கு அண்ணே... மைனஸ் ஓட்டு வாங்கவா?/

வாங்கிட்டாருண்ணே வாங்கிட்டாரு. இன்னைல இருந்து பிரபலம்.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/ஹையா... மீ த 50/

ம்கும். நேத்தே மிஸ் நு விட்டு வச்சேன். //

அதுக்குத்தான் உங்கள மாதிரி ஒரு அண்ணன் வேண்டும் என்கிறது.

என்ன தவம் செய்தனோ உங்களை அண்ணனாக அடைய..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/வாழ்த்துகள் எதுக்கு அண்ணே... மைனஸ் ஓட்டு வாங்கவா?/

வாங்கிட்டாருண்ணே வாங்கிட்டாரு. இன்னைல இருந்து பிரபலம். //

அப்படி போடு அருவாள..

பிரபலம் ஆயிட்டாரா... வாழ்த்துகள்

வானம்பாடிகள் said...

இன்னைக்கு யூத்ஃபுல் விகடன் ஃபுல்லா நம்ம டீம்ணே. =))

கதிர் படைப்புகள்ள, ப்ரியா, நான், வசந்த் கவிதையில , வடிவேலு குட்ப்ளாக்ஸ்ல.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இன்னைக்கு யூத்ஃபுல் விகடன் ஃபுல்லா நம்ம டீம்ணே. =))

கதிர் படைப்புகள்ள, ப்ரியா, நான், வசந்த் கவிதையில , வடிவேலு குட்ப்ளாக்ஸ்ல. //

அப்படியா... வாழ்த்துகள்... கவனிக்காம விட்டுடேனா..

பிரியமுடன்...வசந்த் said...

பாவம் அவரையாவது விட்டுடு நைனா...

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/ பாவம் அவரையாவது விட்டுடு நைனா.../

யார. வா ராசா. என்னா கொழுப்பிருந்தா விடையில்லாம அவமானம் கவிதை அனுப்பி இருப்ப=))

கலகலப்ரியா said...

hihihihi... sirichitten sir..

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/ hihihihi... sirichitten sir../

:>. இப்டி சொன்னா எப்புடி சிரிச்சிருப்பன்னு தெரியும். வெடிவாலு தான் இன்ஸ்பிரேஷன். ஹிஹி.

துபாய் ராஜா said...

//அண்ணே. இது சிறுகதையா போடு. மத்ததெல்லாம் சேர்த்தா பெருசாயிரும். அப்புறமா தொடர் இடுகையா போட்டுக்கலாம்.//

இது நம்மளை தாக்குற மாதிரி இருக்கு... :))

துபாய் ராஜா said...

//யோவ். நான் பின்னூட்டத்தில எதிர் பாராத திடுக்கிடும் திருப்பம்னு போடணும்லயா வெண்ண. அதுக்குதான். அப்புறம் எங்க போகுதுன்னே தெரியாம ஏறிப் படுத்த வண்டி சரியா கோடம்பாக்கம் பக்கத்துல வந்து நின்னா நல்ல முடிவா இல்லையா?//

வடிவேலுவையே திடுக்கிட வைத்த திருப்பம்.... :))

அருமை சார் .

துபாய் ராஜா said...

நான்தான் 75.நூறடிக்கப்போவது யாரு..
:))

துபாய் ராஜா said...

//நான். அடிங்கொய்யாலே. இப்பதான்யா புரியுது நீ எப்புடி இவ்ளோ வளர்ந்தன்னு. நெளிவு சுளிவெல்லாம் டக்னு புடிச்சிர்ற.

வடிவேலு: சரி தம்பி. கவிதையாச்சி, கட்டுரையாச்சி. அப்புறம்?

நான்: ய்ங். டீ குடிக்க போற. அங்க 2 பேரு நாட்டு நடப்ப பேசுவாய்ங்கல்ல. அத அப்புடியே உம்பிட்டா போடு. அரசியல் இடுகையாயிரும். கோயம்பேட்டுல கத்திரிக்கா கிலோ 30 ரூ அனியாயம்னு பேசிட்டு போவாங்க. அத எழுது. நாட்டு நடப்பாயிரும். ஊர்ல உங்கப்பா விரட்டி விட்டாருன்னு பக்கத்தூட்டுல திருட்டு சோறு சாப்டது எழுது. ஏழு தெரு தாண்டி ஒரு ஊட்டு மாடியில நின்னு எம்.சி. ஆர பார்த்தத அவரு கூட டிப்பன் சாப்டேன்னு எழுது. இனிமே உன் ராச்சியம்தான். //

புதிய பதிவர்களுக்கு அருமையான யோசனைகளை அள்ளி விடுறீங்க... அசத்துங்க சார்... :))

துபாய் ராஜா said...

சாரை எங்க காணோம் ??!! வீட்ல சொல்லாம வீக்எண்ட் பார்ட்டி போயிட்டாரா... ??!! :))

துபாய் ராஜா said...

சரி. நம்ம வயித்துல காத்து ஏறிட்டு... போய் இரை எடுத்திட்டு வந்திடுறோம்.. :))

துபாய் ராஜா said...

80ம் நான்தான்... :))

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா said...

/சாரை எங்க காணோம் ??!! வீட்ல சொல்லாம வீக்எண்ட் பார்ட்டி போயிட்டாரா... ??!! :))/

=)) இல்லைங்க.

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா said...

/சரி. நம்ம வயித்துல காத்து ஏறிட்டு... போய் இரை எடுத்திட்டு வந்திடுறோம்.. :))//

ஹி ஹி. சாப்பிட்டு வாங்க.

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா said...

/இது நம்மளை தாக்குற மாதிரி இருக்கு... :))/

:).இதுவே தொடர் இடுகைதானே.

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா said...

/வடிவேலுவையே திடுக்கிட வைத்த திருப்பம்.... :))

அருமை சார் ./

நன்றிங்க ராஜா.

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா said...

/புதிய பதிவர்களுக்கு அருமையான யோசனைகளை அள்ளி விடுறீங்க... அசத்துங்க சார்... :))/

நீங்க வேற. நம்ம பொழப்ப இப்புடித்தானே ஓட்டுறம்.

அன்புடன் மலிக்கா said...

நல்ல கமெடியாய் இருக்கு. சிரிச்சி வயிறு வலிச்சுப்போச்சி

வானம்பாடிகள் said...

அன்புடன் மலிக்கா said...

/நல்ல கமெடியாய் இருக்கு. சிரிச்சி வயிறு வலிச்சுப்போச்சி/

நன்றிங்க.

Tamilmoviecenter said...

தலிவா தெரியாமல் மைனஸ் வோட்டு போட்டுவிட்டேன் மனிக்கவும்

வானம்பாடிகள் said...

Tamilmoviecenter Says:


/தலிவா தெரியாமல் மைனஸ் வோட்டு போட்டுவிட்டேன் மனிக்கவும்/

=)).உன் நேர்மைய நான் பாராட்ரேன். ஃப்ரீயா உடு தல. இதுக்கு போய் மன்னிப்பு எல்லாம் கேக்காத. மொத வாட்டி வந்ததுக்கு டாங்ஸ்.

Tamilmoviecenter said...

ரொம்ப நன்றி தலிவா என்னை புரிந்து கொண்டமைக்கு. நான் தங்கள் தளதிற்கு பல முறை வந்தது உண்டு ஆனால் இதுவே முதல் பின்னுட்டம் .

வானம்பாடிகள் said...

Tamilmoviecenter said...

/ரொம்ப நன்றி தலிவா என்னை புரிந்து கொண்டமைக்கு. நான் தங்கள் தளதிற்கு பல முறை வந்தது உண்டு ஆனால் இதுவே முதல் பின்னுட்டம் ./

நன்றி தலைவா. அடிக்கடி வாங்க.

தமிழ் நாடன் said...

இவ்வளவுதானா இன்னும் இருக்கா? விட்டுடுங்கோ அழுதுருவோம்? சிரிச்சி சிரிச்சி வயத்து வலிக்குது.

வானம்பாடிகள் said...

தமிழ் நாடன் said...

/இவ்வளவுதானா இன்னும் இருக்கா? விட்டுடுங்கோ அழுதுருவோம்? சிரிச்சி சிரிச்சி வயத்து வலிக்குது./

=)). அதெப்பூடி

Maheswaran Nallasamy said...

எனக்கு என்னவோ நீங்க வடிவேல பக்கத்துல வச்சிக்கிட்டு எழுதுறீங்களோன்னு தோணுது..

வானம்பாடிகள் said...

Maheswaran Nallasamy said...

/எனக்கு என்னவோ நீங்க வடிவேல பக்கத்துல வச்சிக்கிட்டு எழுதுறீங்களோன்னு தோணுது../

ஹி ஹி. நன்றி