Saturday, October 31, 2009

நானும் தீபாவளியும்!

பதிவுலகப் பாசமலர் நைஜீரியா இராகவன் நானும் தீபாவளியும் என்ற தலைப்பில் எழுதிய தொடர் இடுகைக்கான அழைப்பை ஏற்று என் இடுகை இது. அண்ணன் சொன்னா மாதிரியும் சொல்லலாம். இதில் பொய் சொல்ல ஒன்றும் வழியில்லாததால் அனைத்தும் உண்மைன்னும் சொல்லலாம்.இஃகி இஃகி.

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

    பெருசா எழுதினாலும் இவ்வளவுதான். 52 வயது. தென்னக இரயில்வேயில் மூத்த துணை நிதி ஆலோசகர். தங்கமணி அறிமுகம் முடிந்தது முன்னமே.  மகன் மெகானிகல் எஞ்ஜினீயர் தற்போது அரிஜோனாவில் எம்.எஸ் படிக்கிறார். மகள் இரண்டாம் ஆண்டு பொறியியல் சிவில் படிக்கிறார்.

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

பத்து வயதில் ஒரு ஆம்பிளைப்பிள்ளைக்கு வெறும் மத்தாப்பு வாங்கிக் கொடுக்கிறார்களே என்ற கடுப்பில், புத்தாடையணிந்து உர்ரென வாசலில் நின்றிருக்க, எதிர் வீட்டு மாமா ஏரோப்ளேன் வெடிக்க பயப்பட்டு என்னை அழைக்க, ஆஹா வாழ்க்கையில் மத்தாப்பு தவிர கண்டிராத எனக்கு ஏரோப்ளேன் பட்டாசா என்ற குஷியில், சரியாக அதற்கு மேல் குனிந்து கொண்டு வைக்க, அது என்னையே சுற்றி வந்து சட்டை, நிஜார்,உடம்பு என்று கரியடித்தது.

அம்மா கொன்னுடுவான்னு அழுத என்னைக் கடத்திப்போய், துணியை உருவித் துவைத்து, டேபிள் ஃபேனில் அரைகுறையாய்க் காய வைத்து வெளியில் விட்டார்கள். அது வரை துண்டு கட்டிக்கொண்டிருந்த புத்தாடை களைய வைத்த தீபாவளி.

3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

   சென்னையில்தான்.

4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

    எப்பொழுதும் போல் அடுத்தவரைப் பற்றிக் கவலைப் படாத பட்டாசு வெடிப்புகள். வயது வேறு பாடில்லாத டாஸ்மாக் படையெடுப்புகள். தொலைக்காட்சி அடிமைகள்.

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

    நான் கொண்டாடவில்லை. வாங்கவும் இல்லை. மனைவியும் மகளும் எங்கு வாங்கினார்களோ தெரியாது.

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

   ரெண்டுமில்லை. ஓசியில் வந்த க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா.

7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல்,   தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

   இல்லை. எதிர்பாராத விதமாக யாரும் வாழ்த்துச் சொல்லி கடனே என்று சொல்ல வேண்டிய நிர்பந்தமும் வரவில்லை.

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

    அதிகபட்சம் பட்டிமன்றம் பார்ப்பதுண்டு. சாப்பாடு, தூக்கம், படித்தல் இப்போது வலைமனை.

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

அலுவலகத்தில் ஒரு சமூக சிந்தனையாளர் ஒருங்கிணைத்து உதவுவதில் பங்கேற்பது. இராம கிருஷ்ண ஆத்மாலயம்  என்ற தொண்டு நிறுவனத்தில் இந்த முறை கொண்டாடினார்கள்.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

     நான் அழைக்காமல் தவிர்க்கும் காரணம் கலகலப்ரியா, கதிர், பிரபாகர் அவர்களுக்குப் புரியும்.  எனவே இளைய தலைமுறை க. பாலாசி, நைனா என என்னை அழைக்கும் பாசமுடன்....வசந்த்  ஆகியோர் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தொடர அழைக்கிறேன்.

Friday, October 30, 2009

வடிவேலு! த ஒன் மேன் ஜூரி! Final.

வடிவேலு: அது சரி. சண்டை முடிஞ்சதும் ஒரு வாட்டி வந்து பார்த்தியே முகாம்லாம் வசதியா இருந்திச்சா.

பங்கி: எஸ். சூப்பர்ப்.

வடிவேலு: இந்த வெள்ளக் கொடி விவகாரம் என்னா?

பங்கி: இட்ஸ் ஃஃபார் மை ஐஸ் சாரி இயர்ஸ் ஒன்லி.

வடிவேலு: ஓஹோ. இன்னைக்கு ராத்திரில இருந்து நாஞ்சொல்லுற வரைக்கும் சூப்பர் கேம்ப்ல போய் உக்காரு போ.

ப‌ங்கி: நோஓஓஓஒ. ஐம் ப‌ங்கி.

வ‌டிவேலு: நீ போய்ய்யா ம‌ங்கி. உன‌க்கெல்லாம் ஒரு போஸ்டு. நெக்ஸ்ட்

நான்: அந்தா நிக்க‌முடியாம‌ ரெண்டு பொண்ணுங்க‌ தோள்ள‌ தொங்கிட்டு வாரான் பாரு எட்ட‌ப்பன். அவ‌ந்தான். கூப்டுக்க‌

வ‌டிவேலு:இங்க‌ வாய்யா இங்க‌. பேச‌ முடியுமா உன்னால‌.

க‌ருநாய்:ஓஓஓ. பேழுவேனே. த‌மிழ‌ன் குழியும் குட்டியுமா இருக்க‌ணும்னா ம‌கிந்த‌ சிந்த‌னை ஒன்னுதான் வ‌ழி. என்ன‌ விழுங்க‌. ஜெர்ம‌னில‌ போய் த‌ண்ணி அடிச்சிட்டு சோக்கு ப‌ண்ண‌னும். நான் முந்திரி.

வடிவேலு:இழுத்துட்டு போக சொல்லுய்யா இவன. டிச்சிப்பன்னி. கருப்பா இருக்கிறவன் பேரக் கெடுக்கன்னே பொறந்தான் போல. வாந்தி வருது எனக்கு. அந்த வலையக் கொலைஞன் வந்தானே எங்க.

நான்: அங்க பாரு. நம்மூரு போலிஸ் ஸ்டேசன் மாதிரியே குத்த வச்சி உக்கார வச்சிருக்கேன்.

வடிவேலு: கெளப்பி கூட்டியா. வலயத்த பார்த்துட்டு கிளம்பலாம். இங்க இத்தன ராச்சசனுங்க கூட இருந்தா நம்மளுக்கும் அந்த புத்தி வந்துரும்.

(அங்கு போய் பார்த்து அழுறாரு)

ப‌சிலு: திஸ் இஸ் மானிக் ஃபார்ம். நைஸ் ப்ளேஸ்.

வ‌டிவேலு: அடிங்கொய்யாலே. மானிக் பாஷாவாயிடுவேன் இப்போ. பொத்திக்கிட்டிரு. இப்ப‌ என்ன‌ செய்யிற‌, இங்க‌ன‌ நின்னு குளிக்கிற‌. அப்புற‌ம், இருக்குற‌ க‌க்குசெல்லாம் சுத்த‌மா க‌ழுவி விட்டு, இங்க‌யே சாப்டு தூங்கிட்டு நாளைக்கு காலைல‌ வ‌ந்து என்ன‌ பாக்குற‌.

ப‌சிலு: நோஓஓஓ. ஐ வில் டை. ஐ கான்ட் ஸ்டே ஹிய‌ர். யூ ஆர் ஜூரி. யூ கான்ட் ப‌னிஷ் மீ.

வ‌டிவேலு: டேஏஏஏஏய் டேஏஏய் தெரியும்டா. ஏன் இப்புடி இருக்குன்னேன் அவ‌னே க‌ழுவினான். சாப்பாடு ந‌ல்லா இருக்கான்னேன். நான் சாப்டு காட்றேன்னு சாப்டான்னு எழுதிக்குவேன். நீஈஈ போய் வேலைய‌ப்ப்ப்ப் பாரு.

(திரும்ப‌ என்கொய‌ரி ரூம்)

வ‌டிவேலு: வ‌ந்துட்டான‌ய்யா பெரிய‌ எச்ச‌.வாய்யா! பிச்சை கிடைச்ச‌தா?

பிச்ச‌:(முறைப்பாக‌) எனிதிங் எல்ஸ்?

வ‌டிவேலு: (இனிமேதான்டி இருக்கு) வ‌ய் யூ கீப் பீபில் இன் காம்ப்?

பிச்ச‌: ஃபார் தேர் சேஃப்டி. அன்ட் வி ஹேவ் டு ஃபைன்ட் அவுட் டைக‌ர்ஸ்.

வ‌டிவேலு:வாட் சேஃப்டி? யூஊஊ சென்ட் தெம் டு தேர் ப்ளேஸ்

பிச்ச‌: நோ. லாட் ஆஃப் லேன்ட் மைன்ஸ். வீ ஹேவ் டு ரிமூவ்.

வ‌டிவேலு: ஹூ புட் லேன்ட் மைன்ஸ்?

பிச்ச‌: டைக‌ர்ஸ் அன்ட் ஆர்மி.

வ‌டிவேலு: ஆர்மி வெச்ச‌த‌ அவ‌ன‌ எடுக்க‌ சொல்லு. புலி வெச்சிருந்தா இவிங்க‌ளே எடுத்துப்பாய்ங்க‌. உங்காளுங்க‌ போனா வெடிக்காத‌து இவிங்க‌ போனா வெடிக்குதோ? இல்ல‌ன்னா சொல்லு ஒபாமா அண்ண‌ன்ட‌ சொல்றேன். ஒரே நைட்ல‌ எல்லாம் தூக்கிற‌லாம்.

பிச்ச‌: நோஓஓஓஓ. வி ஹாவ் வி வி வி..

நான்: (ஐய்யோ) யோவ் வி இல்ல‌ இ...

பிச்ச‌:யேஸ். இ றை யாண் ம .யூ டோன்ட் டெல் ஆல் திஸ் டு மீ.

வ‌டிவேலு:ஸோ. டெல் மி. யுவ‌ர் பிர‌த‌ர் அன்ட் டோப் கேஸ் செட் யூ கில்ட் இன்னோச‌ன்ட் பீபில்.

பிச்ச‌:(கோவ‌மாகி)ஐ வோண்ட் அக்ஸ‌ப்ட் திஸ் என்கொய‌ரி. யூ ஆர் டைக‌ர். யூ வில் பி அர்ரெஸ்டட்.

வ‌டிவேலு: என்னாய்யா சொல்றான் இவ‌ன்.

நான்: வ‌ச்சான்யா ஆப்பு. பாலு ச‌ங்கு கூட‌ இல்ல‌. அடியேய். ஜெயிலுக்கு அனுப்புறானாம். அப்புற‌ம் சொன்னா கேக்க‌ல‌, பாக்க‌ற‌ன்னு போனாங்க‌. லேன்ட்மைன்ல‌ போய்ட்டாங்க‌ன்னு க‌த‌ய‌ முடிச்சிடுவான்.

வ‌டிவேலு: அட‌ப்பாவிக‌ளா. ச‌ண்டாலனுங்க‌ளா. நான் என்னா ப‌ண்ணுவேன் என்னா ப‌ண்ணுவேன். இப்புடி அநாதையா போற‌து கூட‌ பெருசில்ல‌. இவ‌னுங்க‌ எஸ்கேப் ஆய்டுவானுங்க‌ளே. ய‌ப்பா வ‌ழி சொல்லுப்பா,.

நான்: யோவ். போய் சேர‌லாம் போய்யா. பெருமைதான். ஆனா ஆப்பு வைக்கிற‌ சான்ஸ் போய்டுமே.ம்ம்ம். இரு.நாய் சேக‌ர பிர‌காஷ்ராஜ் லாக்க‌ப்ல‌ போட‌ சொன்ன‌ப்ப‌ சொன்ன‌ ட‌ய‌லாக்க‌ இங்கிலீசுல‌ ப‌வ்ய‌மா சொல்லிப்பாரு.

வ‌டிவேலு:அய்ங். ஓஓக்கே. ஹ‌லோ. ஹி ஹி. யூ புட் ல‌ய‌ன் இன் ஜெயில். ஜெயில் டேமேஜ். ஓகே வா?

பிச்ச‌:யூ செட் ல‌ய‌ன்? ஹூ?

வ‌டிவேலு:லயன். இட்ஸ் மீஈஈஈஈஈ

பிச்ச‌: யூ? ல‌ய‌ன்? மை க்ரேட் க்ராண்ட்ஃபாத‌ர்? நாட் டைக‌ர்? ஐ வோன்ட் பிலீவ் யூ.

நான்: யூ சீ திஸ் ஃபில்ம். (சிங்க‌ம் க‌ள‌மிற‌ங்கிருச்சேய் பிட்டு) பிகாஸ் ஹிஸ் ச‌ப்போர்ட‌ர் செட் ல‌ய‌ன் ஹ‌வ் ஹி ஈஸ் பீட்ட‌ன். சீ ஹ‌வ் ப்ரேவ் ஹி ஈஸ் இன்ஸ்பைட் ஆஃப் சோ ம‌ச் ப்ள‌ட்?

பிச்ச‌:ஓஹ். ஐ ஆம் க்ளாட். (வ‌டிவேலுவ‌ பார்த்து)தென் யூ ரைட் NOT GUILTY இன் யுவ‌ர் ரிபோர்ட் அன்ட் கோ.

வ‌டிவேலு: என்னாயா சொல்றான்?

நான்: நிர‌ப‌ராதின்னு எழுத‌ச் சொல்றான்யா. ப‌டுபாவி. இல்லைன்னா விட‌மாட்டானாம்.

வடிவேலு: நோஓஓ. ஐ மீட் ஓபாமா. ஐ மீட் சென‌ட். ஐ வில் ரெகார்ட். த‌ஸ் வாட் ஒபாமா டோல்ட். யூ டோன் ஒர்ரி.

பிச்ச‌:ஈஈஈஈ(இளிப்பு)குட். ஆயுபோவான்.

வ‌டிவேலு:ஆமாடா. நீ குடுத்த‌ குடுல‌ க‌ல‌க்கிட்டு வ‌ருது. நானே போவேன். வ‌ர்ட்டா.

(ஒரு வழியாக எஸ்கேப்பு)

வடிவேலு: என்னா டெர்ரரு.  ஆமா. அதென்னா நாய் சேகர் டயலாக் சொன்னா தாத்தாங்குறான்?

நான்:  அது சிங்களவன் சிங்கத்துக்கும் பொம்பளைக்கும் பொறந்தவனாம். நீ சிங்கம்னா தாத்தான்னுட்டான்.

வடிவேலு: இதுக்கு செத்தே போயிருக்கலாமடா. போயும் போயும் இப்படி உசிர் பிளைச்சி என்னா பண்ணப் போரம். அவ்வ்வ்வ்.

நான்: யோவ். அவ‌ன் அவ‌ன் ச‌ம்ப‌ந்த‌ம் பேச‌ப் போனா மாதிரி க‌ட்டித் த‌ழுவிட்டு நெஞ்ச‌ நிமித்திகிட்டு வாராய்ங்க‌. நீர் என்ன‌மோ அழுவறீரு. அவ‌ன் வெள்ளைக் கொடி புடிச்சிட்டு வான்னு சொல்லி சுடலை? வ‌ல‌ய‌த்துக்குள்ள‌ வா சுட‌மாட்டேன்னு சுட‌லை? நீயும் போய் சேர்ந்தா என்ன ஆயிடும். பார்க்க‌லாம்ல‌ ஓபாமா என்னா ப‌ண்றாருன்னு.

அப்புற‌ம் ஒரு சின்ன‌ ரிக்வ‌ஸ்ட். இனிமே தேவைன்னா நான் உன்ன‌ கூப்டுக்குறேன். நீ என்னைக் கூப்பிட்டு ஆப்பு வைக்காத‌. புண்ணிய‌மா போகும்.அவ்வ்வ்வ்வ்.வ‌ர்ட்டா.

Wednesday, October 28, 2009

வடிவேலு! த ஒன் மேன் ஜூரி! 2

(தொடர்கிறது)

வடிவேலு: ஊஊஊஊ ஈஸ் நெஸ்ட்

நான்: இதோ இவந்தான்! இவன நீயே கூப்டுக்க. நான் கூப்டா கொலக்கேசாயிரும்.

வடிவேலு:ஏஏஏஏய் செக்கடரி. ஐ ஜூரி. யூஊஊ கால் மேன்.

நான்: (நீ வாடி! ஏறிப்போச்சோ.ஸ்லிப் கொடுத்து அழைக்கிறேன்)

வ‌டிவேலு: ஹேய். வாஸ் யுர் நாம்.

அவ‌ன்: கோத்த‌பாய‌

வ‌டிவேலு: நோஓஓ நோ பேட் வேர்ஸ். மீ பாவ‌ம். நான் பாவ‌ம். பேர‌க் கேட்டா இஷ்ட‌மிருந்தா சொல்ல‌ணும். இல்லாட்டி பொத்திக்கிட்டு போஓஓஓவியா! அதென்ன‌ கெட்ட‌ வார்த்த‌ சொல்லி போயாங்க‌ற‌து. ப‌க்கிப் ப‌ய‌லெ. பிக்காளிப்ப‌லே. போஓஓஓ. ஸ்டேன்ட‌ப் ஆன் த‌ பெஞ்ச்.

நான்: யோவ். இவ‌ன் வெறி பிடிச்ச‌ சொறி நாயி. சூதான‌மா இருந்துக்க‌ சொல்லிட்டேன்.

வ‌டிவேலு:ஓஓஓக்க்க்கே ஓக்கே. யுவ‌ர் பிர‌த‌ர் டெல். யூ கில் இன்னோச‌ன்ட் பீப்பிள். வாட் யூஊஊ சே. க‌மான் டெல் டெல். சுருக்க‌மா டெல்.

அவ‌ன்: இஃப் யூ ச‌ப்போர்ட் தோஸ் பீப‌ல் யூ ஹேவ் ப்ல‌ட் இன் யுவ‌ர் ஹான்ட். த‌ட்ஸ் வாட் ஐ டெல் பிபிசி.

வ‌டிவேலு:ஒய் ஒய் ஒய். யா! ப்ளட். சாம் ப்ளட். டமில் ப்ளட். (ஏய்யா. என்ன‌ விட‌ ச‌ண்டாள‌மா பேச‌றான். என்னா எள‌வு சொல்றான், சொல்லு.

நான்:(ங்கொய்யால‌ இதுக்குத்தான் காத்துகிட்டிருந்தேன்) அது ஆல‌ ம‌ர‌த்துல‌ சாஞ்சி நின்னா கைல‌ ர‌த்த‌ம் வ‌ர‌வைப்பானாம்.

வ‌டிவேலு:(கோப‌மாகி) யூ ஆன்ஸ‌ர் மேன். வெள்ள‌ கொடி புடிச்சி வ‌ந்தா சுட‌ சொன்னியாமே?

அவ‌ன்: இட் ஈஸ் ஆல் லை. முல்லி வாய்க்கால் சோ ம‌ச் ப்ள‌ட். வைட் ஃப்ளாக் இஸ் நாட் பாசிபல். மை பீப‌ல் கான்ட் ஸீ ரெட் ஃப்ளாக் இன் த‌ டார்க். த‌ட் இஸ் த‌ ட்ரூத்.

வ‌டிவேலு:ஏஏஏஏய். நோ டாக். சே யெஸ் ஆர் நோ. ஒய் யூ கில் ஸோ மெனி சில்ர‌ன், பிர‌க்ன‌ன்ட் லேடீஸ்.

நான்:(அப்புடி போடு. எஸ் ஆர் நோ சொல்ற கேள்வியா இது?)

அவ‌ன்: இட் ஈஸ் நாட் கில்லிங். வீ வேர் ஃபைடிங் ஃபார் இன்னோச‌ன்ட் பீப‌ல். ஐ ஹேவ் ந‌திங்க் மோர் டு சே. ஒயிட் வேன் ஈஸ் வெய்ட்டிங். தேங்க் யூ (போய்ட்டான்)

வ‌டிவேலு:என்னாய்யா அவன் பாட்டுக்கு போய்க்கிருக்கான், ஒயிட் வேனுங்க‌றான்?

நான்: உன்ன‌ ஓட‌ உட்டு ஒயிட் வேன்ல‌ கிட்னி எடுத்தாங்க‌ல்ல‌. அதான் இவ‌ன் இங்க‌ பெரிய‌ ரேஞ்ச்ல‌ ப‌ண்றான். உன்ன‌ கிட்னிய‌ எடுத்துட்டு உசிரோட‌ உட்டானுங்க‌. இவ‌ன் உசிர‌ எடுத்துட்டு கிட்னி, க‌ண்ணெல்லாம் சுடுவான் போல‌. மெர‌ட்டிட்டு போறான்யா. மெர‌ட்டிட்டு போறான்.

வ‌டிவேலு:அய்ங். கொல‌கார‌ப்பாவி. வ‌ச்சிக்கிறேன்டி உன்னிய‌. நேஏஏஏஏஏஸ்ட்.

நான்:தோ. கூப்டுறாரு வாடா வெண்ண‌.

வ‌டிவேலு: இவ‌ன் யாரு? ம‌யில்சாமி மாதிரியே இருக்கான். குழ‌ந்த‌ மாதிரி சிரிக்கிறான‌ய்யா?

நான்:யோவ். ந‌ல்லா வ‌ருது வாயில‌. இது அவ‌ந்த‌ம்பி. வ‌லைய‌த்துக்குள்ள‌ வச்சி வாட்ற‌ நாயி இது. இவ‌ன‌ அங்க‌ கூட்டிபோய் க‌க்குசு க‌ழுவ‌ விடு.

வ‌டிவேலு: ஒய் யூ ஆர் கீப்பிங் பீப்பிள் இன் வேலி?

அவ‌ன்: சேஃப்டி.

வ‌டிவேலு: ஓஓஒ. அதுக்குதான் குளிக்க‌ கூட‌ ம‌றைப்பு இல்லையோ. வ‌க்கிர‌ம் புடிச்ச‌ ப‌ரதேசிங்க‌. வ‌ச்சிக்கிற‌ன்டா உன்னிய‌. யூ ஃபூலாஃபனிடியடாபனேஸ். போஓஒ போஒய் அங்க‌ உக்காரு. நெஸ்ட்.

நான்:புண்சேகா. சை. ஃபொன்சேகா.

வ‌டிவேலு: ஏய்யா க‌ஞ்சா விக்கிற‌வ‌னுக்கு ஆர்மி ட்ரெஸ் போட்டா மாதிரி இருக்கான்.இவ‌னா அவ‌ன்?

நான்: ஆமாம். நீ இவ‌ன‌ கேட்டு முடி. பைத்திய‌மாய்டுவ‌.

வ‌டிவேலு: ஒய் யூ யூஸ் கொத்து குண்டு?

புண்சேகா: நோ கொத்து குண்டு. ஒன்லி கொத்தும‌ல்லி. வி நெவ‌ர் யூஸ்ட் பாம்ஸ். புல்ல‌ட்ஸ். ஒன்லி கூழாங்க‌ல். இண்டியா ஹெல்ப்ட்

வ‌டிவேலு: இண்டியா?

புண்சேகா: பாகிஸ்தான்.

வ‌டிவேலு: பாகிஸ்தான்?

புண்சேகா: சைனா, ர‌ஷ்யா

வ‌டிவேலு: ஏய் நிறுத்து நிறுத்து. என்ன‌மோ அள‌ந்துட்டே போற‌.

புண்சேகா: இட்ஸ் விக்ட‌ரி ஃபார் ஆர்மி.

வ‌டிவேலு: அப்புடி ஒத்துக்க‌.

புண்சேகா:இட்ஸ் விக்ட‌ரி ஃபார் ம‌கிந்த‌ தாட்ஸ்.

வ‌டிவேலு: இவ‌ன‌ புடிச்சி அடைங்க‌ய்யா. ஃபுல்லா டோப் அடிச்சிட்டு வ‌ந்துட்டான். நேஏஏஸ்ட்

நான்: தோ அந்த சப்ப‌

வ‌டிவேலு:கூஊஊஊப்டு. ஐ அங்க பாருய்யா சுருதி.

நான்: தோ ப‌ன்னாட‌. அது சுருதி இல்லை. அந்த‌ம்மா பிள்ளேனு ஒரு அதிகாரி.

வ‌டிவேலு: ஓஓஓஹோ. ச‌ரி ச‌ரி. ஹேய் டெல் யுர் நேம்

ச‌ப்ப‌: ப‌ங்கி மூன்

வ‌டிவேலு: யூ மீன் ப‌ங்கி? நாஆஆஆஆஆளை ந‌ம‌தே! இந்த‌ நாஆஆஆளும் ந‌ம‌தே!

நான்: அட‌ த்தூ. ஆர‌ம்பிச்சிட்டான்டா. யோவ் இது அவ‌னில்லைய்யா.

வ‌டிவேலு: ச‌ரி ச‌ரி. உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டுட்டேன். யோவ் ப‌ங்கி. ஸ்டேன்ட‌ப் ஆன் த‌ பெஞ்ச்.

ச‌ப்ப‌: நோ. ஐம் ப‌ங்கி

வ‌டிவேலு: நாங்க‌ யாரு தெரியும்ல‌? ச‌ங்கி ம‌ங்கி. யூ ஒன். மீ டூ. விச் பிக்

ச‌ப்ப‌: டூ.

வ‌டிவேலு: அப்ற‌மென்ன‌. ஏறுடா என் வெண்று. ஒய் யூ நாட் ஸ்டாப் ப‌டுகொலை.

ச‌ப்ப‌: ஐ அப்பீல்ட். ஹி சீட்ட‌ட். அகைன் ஐ அப்பீல்ட். ஹி சீட்ட‌ட். செவெர‌ல் டைம்ஸ். ஃபைன‌ல்லி வார் ஈஸ் ஓவ‌ர்.

வ‌டிவேலு:க‌டுதாசி எழுதிட்டு க‌க்குசு தொடைச்சி போட்டிங்க‌ளோ. அதான்டா உனுக்கு க‌ண்ணுக்கு ரெப்ப‌ வெக்காம‌ ஜிப்ப‌ வெச்சிருக்கு.

நான்: நேத்தே ரொம்ப‌ நீள‌ம்னு கிண்ட‌ல் ப‌ண்ணிட்டாரு பாண்டிய‌ரு. நிறுத்திக்குவ‌ம். நாளைக்கு முடிச்சிற‌லாம்.



Tuesday, October 27, 2009

வடிவேலு! த ஒன் மேன் ஜூரி!

(பொறுப்பி: நறுக்கெல்லாம் எழுதியும் தீராத கோவத்த தணிக்க தமாஷா சொறிஞ்சிகிட்டது. நோ பர்சனல் எபெக்ட். ஒன்லி டமாஸ்)

வடிவேலு: அல்ல்லோவ். யாரு பேசுறது?

நான்: நீதாய்யா பேசுற!

வடிவேலு: ஹேஏஏஏய்! ஹூ ஆர் யூஊஊஊ மேன்?

நான்: நீ யாருன்னு சொல்றியா நான் ஃபோன கட் பண்ணவா?

வ‌டிவேலு:அட இருப்பா இருப்பா. நாந்தாம்பா அண்ணம் பேசறேன் வானம்பாடி. சோமா இருக்கியாப்பா.

நான்: அட நீங்களாண்ணே. சொல்லுங்க. என்ன விஷயம்.

வடிவேலு: அதெல்லாம் கான்பிடென்ஸ்ணே. போன்ல எல்லாம் சொல்ல முடியாது. கார் வந்துக்கிருக்கு. உடனே கிளம்பி வாரீய.

நான்: யோவ். எனக்கு வேல இருக்கு. அதெல்லாம் முடியாது.

வடிவேலு: யோவ் சொல்றேன்லயா என் வெண்ட்று, கான்பிடன்ஸ்னு. நீ வார அம்புட்டுதான்.தல போற விசியம். அந்தா கார் வந்துடிச்சி பாரு. ட்ரைவர் போன் பண்ணாரு. நீ சட்டுபுட்டுன்னு கிளம்பி வாற.

நான்:சரி வந்து தொலையுறேன். (போய் தொலைஞ்சாச்சி)

வ‌டிவேலு: வாண்ணே வாண்ணே. என்ன‌ அண்ண‌ங்கூப்டா ச‌ல‌ம்புற‌. வா வா. உள்ள‌ போய் உக்காந்து பேசுவோம்டி செல்ல‌ம்.

நான்: என்னா? ஒரு மாதிரியாதான் இருக்கு இன்னைக்கு?

வ‌டிவேலு: ஹெ ஹெஹ‌ஹே. அண்ண‌ன் யாரு தெரியும்ல‌. வ‌டிவேலு. த‌ ஒன் மேன் ஜூரி.

நான்:(என்னா எழ‌வுடா. தெளிய‌லையோ?) என்ன‌ண்ணே சொல்றீங்க‌. ஒரு ம‌ண்ணும் புரிய‌ல‌. இங்க‌ ஜூரியெல்லாம் போய் எவ்ளோ கால‌மாச்சு. எதுனா சூட்டிங் நினைப்பா?

வ‌டிவேலு: நோஓஓஓஓ. நோ. யெஸ்ட‌ர்டே ஒபாமா டாக் மீ. ஹீஈ வாண்ட் மீ த‌ ஜூரி.

நான்: இங்க‌ பாருண்ணே. என‌க்கு வேலைக்கு போணும். உன் அல‌ப்ப‌ற‌ தாங்க‌ல‌. ஒழுங்கா விச‌ய‌த்த‌ சொல்ற‌துன்னா சொல்லு. இல்லாட்டி விடு.

வ‌டிவேலு: அட‌ இருப்பா இருப்பா. பேப்ப‌ர் பார்த்த‌ல்ல. அமெரிக்கா போர் குற்ற‌ப் ப‌ட்டிய‌ல் வெளியிட்டிருக்கு. அத‌ விசாரிக்க‌ ந‌ம்ம‌ள‌ ஜூரியா இருக்க‌ச் சொல்லி ஒரே அழுவாச்சி.

நான்:அண்ணே. இப்ப‌டியெல்லாம் ஊத்தாத‌. நான் ஏதாவ‌து த‌ப்பா பேசி இருந்தா ம‌ன்னிச்சிக்க‌. நாம்போறேன்.

வ‌டிவேலு:ந்ந்ந்நோஓஓ மேன். யூ நோ கோ. அய் அப்பாயின் யூ செக்ர‌ட்ரி.

நான்: இன்னாது? ம‌ப்பா? விளையாடாத‌. அப்புற‌ம் அண்ண‌ன்னு கூட‌ பாக்காம‌ வ‌ஞ்சிருவேன்.

வ‌டிவேலு: ச‌ரி ச‌ரி. நோ ப்ளே. ஒன்லி மேட்ட‌ர். ந‌ல்லா தூங்கிக்கிருக்க‌ ஓபாமா அண்ண‌ன்ட‌ இருந்து போனு. வ‌டிவேலு இந்த‌ போர்குத்த‌ம்லாம் லிஸ்டு ப‌ண்ணிட்டானுவ‌ ந‌ம்ம‌ ப‌ச‌ங்க‌. நீதான் சாரிச்சி ச‌ரியா இல்லையான்னு சொல்ல‌ணும்னு சொல்லிட்டாரு

நானே ந‌ம்ப‌ல‌ண்ணே. என்ன‌ எப்புடி தெரியும். எதிரூட்டு ஆளுதான் ரொம்ப‌ நாளாச்சே கொட‌ச்ச‌ல் குடுத்துன்னு ராவைக்கு தூங்க‌வுடாம‌ ப‌ண்றானான்னே ட‌வுட்டு. உன‌க்கு தெரியும்ல‌ அந்தாளு ந‌ம்ம‌ ஆஞ்சனேய‌ ப‌க்த‌ரு. எப்ப‌வும் ஒரு சின்ன‌ ஆஞ்ச‌நேய‌ர் கைல‌யே வ‌ச்சிருக்குமாம்.

நேத்து ராத்திரி தூங்க‌ போகுற‌ப்ப லிஸ்ட‌ ப‌டிச்சிகிட்டே ஒன்னும் புரியாம‌, ஆஞ்ச‌னேயா நீதாப்பா ஒரு வ‌ழி சொல்ல‌ணும்னு வேண்டிகிட்டு...

நான்: ஏண்ணே! உன‌க்கு என்ன பார்த்தா எப்புடி தெரியுது. சிவ‌னேன்னு வேலைக்கு போற‌வ‌ன புடிச்சாந்து இதெல்லாம் சொல்லிக்கிருக்க‌.

வ‌டிவேலு: ஹேஏஏய். மீ டாக். யூ லிச‌ன். யூ நோ டாக். அப்புற‌ம் அப்புடியே தூங்கி போச்சாம். க‌ன‌வுல‌ ஆஞ்ச‌னேய‌ர் வ‌ந்து, மை டிய‌ர் ஓபாமா. சுவிச் ஆன் த‌ டிவின்னிச்சாம்.

ந‌ம்மாளும் டிவி ஆன் பண்ணி இருக்காரு. பார்த்தா ஆதித்யா சேன‌ல்ல‌ ந‌ம்ம‌ வெடிமுத்து. அதான் நானு.  இவ‌ன்தான் ச‌ரியான‌ ஆளுன்னு சொல்லிட்டு ம‌றைஞ்சிடிச்சாம். உட‌னே சி.ஐ.ஏவ‌ கூப்டு, அவ‌ன் சுவாமி கிட்ட‌ பேசி ந‌ம்ம‌ள‌ புடிச்சி ஒரே கெஞ்சுறான், நீதான் ப‌ண்ண‌னும்னு.

நான்:இதெல்லாம் ந‌ம்ப‌றா மாதிரியா இருக்கு. ஏண்ணே. நான் உன‌க்கு என்னா கெடுத‌ல் ப‌ண்ணேன்? என்னிய‌ ஏன் இப்புடி பைத்திய‌மாக்குற‌.

வ‌டிவேலு: ஐ சீ யூ நோடாக். நானே கேட்டேன் இந்த‌ கேள்விய. அதுக்கு அந்தாளு என்னா சொல்லிச்சி தெரியுமா? சீ வ‌டிவேலு. ஒன் சீதா? ஒன் ராவ‌ணா? ப‌ட் ஒன்லி ஒன் அனுமான். ஸ்ரீல‌ங்கா ப‌ய‌ர். ராமா ஃபைட் அன்ட் ராவ‌ணா கில்.

ந‌வ் ராமா அன்ட் ராவ‌ணா ப்ர‌ண்ட்ஸ். ஸோ மெனி சீதாஸ். ப‌ட் அனுமான்? த‌ஸ் யூஊஊ மேன்.

ஒன்லி யூ ஃபைன்ட‌வுட் ராவ‌ணா அக்கிஸ்ட். அண்ண‌ன் மேக்கொண்டு பாத்துக்க‌றேன்னு சொல்லிட்டாரு. ஐ அப்பாயின் யூ ஜூரின்னுட்டாரு.

இதுக்கு மேல‌யும்...(தொண்டை அடைக்குது). அண்ண‌ன் ச‌ரின்னுட்டேம்பா உன்னிய‌ ந‌ம்பி. நீதான் ந‌றுக்க‌றேன் கிளிக்கிறேன்னு எளுதிதான் என்னா க‌ண்டே. ந‌வ் ஆக்ஸ‌ன். போ. போய் துணிம‌ணி எடுத்துகிட்டு வ‌ந்துரு. எலிகாப்ட‌ர் வ‌ரும். போய்க்கிற‌லாம்.

நான்: ஏண்ணே. அவ‌னுங்க‌ளுக்கு த‌மிழ் தெரியாது. அவ‌னுங்க‌ இங்கிலீசு உன‌க்கு புரிய‌ணுமே. ஒபாமா பேசினா என‌க்கே புரியாது. நீ என்ன‌ல்லாமோ சொல்ற‌. ஆண்ட‌வா!

வ‌டிவேலு:நாங்க‌ எலிஜ‌பெத்துக்கே இங்கிலீசு சொல்லி குடுக்குற‌ ப‌ர‌ம்ப‌ரைடி. நீ பொத்திகிட்டு வ‌ந்து சேரு.

(எப்படியோ கொழும்பு போய் ந‌டுங்கிகிட்டே போய்ட்ட‌ம்ல‌. அய்யாக்கு த‌னி ஆபீசு. வெளிய‌ அமெரிக்க‌ன் செக்யூரிட்டி. அய்யா வரவும் அடிச்சான் பாருங்க சல்யூட்டு ஆடிப்போய்ட்டேன்)

வடிவேலு: நவ் யு சீ (ரெண்டு மூணு வாட்டி உள்ள போறதும் வெளிய வாரதும்னு அலம்பல்)

நான்: என்னா பண்றீங்க.

வடிவேலு: அட சும்மா இருப்பா. இப்புடி ஒரு சல்யூட்டு நம்மளுக்கு எவன் அடிக்க போறான். சூனா பானா நீ கில்லாடிடா.

(அய்யா போய் தன் இடத்துல உக்கார்ராரு. கீழ நானு)

வடிவேலு: மொத ஆள கூப்டு. எவன் அவன்.

நான்: வேற‌ யாரு. ராஜ‌ பிச்ச‌தான்

வ‌டிவேலு: கால் ராஜ‌ பிச்ச‌.

அந்தாளு: ஆயு போவான். நோ பிச்ச‌. ப‌க்சே.

வ‌டிவேலு:(கோப‌மாக‌) நோ ஆய். ஒன்லி யூரின்.

நான்: யோவ். ஆயு போவான்னு வ‌ண‌க்க‌ம் சொல்றாரு.

வ‌டிவேலு: அப்புடியா? நான் ந‌ம்ம‌ள‌த்தான் கிண்ட‌ல் ப‌ண்றாருன்னு சொல்லிட்ட‌ன‌ப்பா. ஓக்க்க்கே ஓக்கேஏஏ. ஆயு ஆயு

அந்தாளு: ஆயு போவான்

வடிவேலு: யோவ் பிச்ச. அவன் வந்தா போவான். யூ டெல் டெல்.

அந்தாளு: (கை விரிச்சிகிட்டு கிட்ட‌ வ‌ந்து) ஐ ல‌வ் ட‌மில்ஸ். வீ ப்ர‌த‌ர்ஸ். யூ புட் சால்வா. த‌ட் இஸ் ட்ரெடிஷ‌னல் ரெஸ்பெக்ட்.

வ‌டிவேலு: கோவ‌மாக‌. கிவ் ர‌ஸ்பெக்ட் அன்ட் டேக் ரெஸ்ப‌க்ட். மீ ஜூரி, யூ அக்கிஸ்ட். சால்வ‌ வேணுமா சால்வ‌. என் கோவண‌ம் கூட போத்த‌மாட்ட‌ன்டா நானு. ப‌க்கிப் ப‌ய‌லே. ப‌ர‌தேசிப் ப‌ய‌லே. பன்னாடப் பயலே.

அந்தாளு: வாட் கோவணம்? (கோபமாகிறார்)

நான்: நாட் கோவணம். கோவளம். அடுத்த வாட்டி சனீஸ்வரன் கோவிலுக்கு வரப்ப கோவளம் பீச்ச பார்க்க சொல்றாரு. (வடிவேலுவிடம், யோவ் இவன் வெறிபுடிச்சவன். அமைதிப் போர்னு போட்டு தள்ளிட்டு புத்தருக்கு பாலபிசேகம் பண்ணுவான். பொத்திகிட்டு வேலய பாரு ஹி ஹி)

வடிவேலு: ச்சேரி ச்சேரி. ஒக்க்கேஏஏஏ. யூ ஸ்டேன்டப் ஆன் தி பெஞ்ச்.

அந்தாளு: வாட்? நோ ஸ்டேன்டப் ஆன் தி பெஞ்ச்.

வடிவேலு: அப்புடின்னா ஸ்டேன்ட் டவுன் இன் தி பெஞ்ச். ஹ ஹாஆ எப்புடீ.

அந்தாளு: (முகம் கடுக்க கூண்டில் நிற்கிறார்.) நவ் யூ ஆஸ்க் குயிக்லி. அய் ஹேவ மீட்டிங்

வடிவேலு: யூ ஷட் அப். ஒன்லி ஐ ஆஸ்க். யூ ஆன்சர். ஆமாம். நீ என்னா தார் போட்டு தலை வாருவியா. ச்ச்சும்மா பள பளன்னு பறக்காம கொள்ளாம வரைஞ்சி விட்டா மாதிரியே இருக்கே? அதென்னா எப்போ பாரு மப்ளரு. ஆஸ்மாவா உனக்கு.

அந்தாளு: நோஓஓ. இட்ஸ் அவர் ட்ரெடிஷினல் டை.

வடிவேலு: ஹே ஹே. டையீ. ய்ங். நாங்கூடத்தான் பேன்டுக்குள்ள இன்டியன் டை கட்டியிருக்கேன். உன்ன மாதிரி ஷோ காட்றனா? யூ அக்கிஸ்ட். ரிமூவ் மேன்.

(என் பக்கம் திரும்பி ஏப்பா ஓவராதான் போய்க்கிருக்கனோ. சேரி சேரி. நீ சமாளிச்சுக்குவடா சூனா பானா)

நவ் யூ டெல். ஒய் யூ கில் சோ மெனி சில்ரன், உமன், ஓல்ட் மேன் அன் லேடீஸ்.ஒய் ஒய்?

அந்தாளு:ஐ ஹேவ் நாட். ஒன்லி ஃபொன்சேகா அன்ட் மை ப்ரதர் ரெஸ்பான்சிபிள்.  நவ் ஐ ஹேவ் டு அர்ஜென்ட்லி அட்டண்ட் எ மீட்டிங்க் ஃபார் பிச்ச (சை) ரிலீஃப்.

வடிவேலு: ச்சேரி ச்சேரி. அப்புறம் வெச்சிக்கிறேன் உன்னிய. நவ் யூ கோ. நேஏஏஏக்ஸ்ட்.

நான்: யோவ். இதுக்கு மேல‌ வ‌ள‌ர்த்தா இராக‌வ‌ன் அண்ண‌னே சொல்லிட்டாரு. இடுகை பெருசானா ப‌டிக்க‌ க‌ஷ்ட‌ம்னு.நாளைக்கு பார்த்துக்க‌லாம்.


Monday, October 26, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 3.2

இராணுவப் புரட்சி என்ற பீதி ஒன்றை கிளப்ப கோத்தபாய திட்டம்

ஏன்! வெள்ளை வேன்லாம் அலுத்துப் போச்சோ. இப்படி சொல்லி மிச்சம் மீதிய சாவடிக்கவா?
_________________________________________________________________________________________________
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து ஆராய, பசில் விரைவில் டில்லி விஜயம்

இப்போ இறையாண்மை பாதிக்காதோ? இது கூட வசதிக்குதான் இல்லை?
_________________________________________________________________________________________________
இனப்பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், வெளிநாட்டு முதலீட்டு சாத்தியங்கள் குறைவடையலாம்: உலக வங்கி

அதப்பத்தி யாரு கவலைப் படுறா. நீ கடன் குடுப்பல்ல?
_________________________________________________________________________________________________
இலங்கை மீதுள்ள போர்க்குற்றங்களைப் பட்டியலிட்டுள்ளது அமெரிக்கா

ஒன்னொன்னா பொய்னு சொல்லுவான். டிக்கடிச்சிட்டு உக்காரு. போய்யா போக்கத்த வேலை.
_________________________________________________________________________________________________
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை விசாரித்து பொய்யென நிரூபிப்போம்: அரசாங்கம் அறிவிப்பு; ஐ.நா. மனித உரிமை பேரவையின் கோரிக்கைக்கும் கண்டனம்

பாரு பதில் சொல்லிட்டான். முடிவா பொய்னு நிரூபிப்பானாம். இதுல இவரு விசாரிக்கப் போறாரு.
_________________________________________________________________________________________________
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்

இவரு டப்பாவே டேன்சாடுது. இவரு வந்து தூக்கிப் பிடிக்கப் போறாரு.
_________________________________________________________________________________________________
ஐ.நா. வின் அமைதி காக்கும் பணிகளுக்கு அதிக படைவீரர்களை அனுப்ப முடியும்: இலங்கை அரசாங்கம்

ஒரு வாட்டி அனுப்பி சின்னப் புள்ளைங்களை கற்பழிச்ச எக்ஸ்பர்ட்சாச்சே. அட நீங்க அநியாயம் பண்ணப்பவே அவன் யாரையும் அனுப்பல. இதுல உங்கள வேற சேர்த்து என்ன பண்ண?
_________________________________________________________________________________________________
வடக்கு கிழக்கு இடம்பெயர் முகாம்களின் நிலைமை திருப்தி அளிக்கின்றது: அமெரிக்கத் தூதுவர்

ங்கொய்யாலே. உள்ளயாச்சும் போயிருக்குமா இந்தம்மா? வண்டிக்குள்ள டிஷ்யூ பொத்திண்டு போயிட்டு ,கிருமி நாசினில ஊறிட்டு சொல்லுது.சை.
_________________________________________________________________________________________________
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அகதிகளாக வெளியேறுகின்றவர்களுக்கு, இலங்கை பாதுகாப்பு தரப்பினர் உதவி வழங்குவதாக அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சொன்ன நாய் எப்புடி வந்துச்சோ. அப்படியாவது தப்பிக்கட்டுமே. இவனுக்கேன் காண்டு.
_________________________________________________________________________________________________
திருகோணமலைக்கு அனுப்பட்டவர்களில் புலி உறுப்பினர்கள் கைது - இலங்கை இராணுவம்

அனுப்புனா மாதிரி அனுப்புறது. அப்புறம் திரும்ப இப்புடி சொல்லி புடிச்சிக்கலாம். என்னா பொழப்புடா இது.
_________________________________________________________________________________________________
இலங்கை விடயத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

அது கேட்டுகிட்டேதான் இருக்காங்க அப்பப்ப. பதில் யாரு சொல்றா?
_________________________________________________________________________________________________
தமிழர்களுக்கு எதிராக தபால் திணைக்களத்தில் முறைகேடு

அவன் எப்புடி பங்கு போடுறது. மனுசன எப்புடியெல்லாம் வதைச்சிருக்கானுவ பேப்பயலுவ.
_________________________________________________________________________________________________
ஓசியன் லேடி கப்பல் புலிகளுடையது என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

கப்பல் திருட இது ஒரு வழியாடா?
_________________________________________________________________________________________________
அமெரிக்க அரச நிகழ்வில் பங்குபற்ற பொன்சேகாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு அந்நாட்டு அரசினால் ரத்து

சந்தோசம் சாமிகளா. எங்காளுங்க மாதிரி இல்ல.
_________________________________________________________________________________________________
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அனைவரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர்: டி.ஆர்.பாலு

என்னா துறை தரேன்னாங்க தலிவா? என்னமோ இவரு லிஸ்ட் வெச்சிகிட்டு இவருட்ட சொல்லிட்டு அனுப்பினா மாதிரி.

_________________________________________________________________________________________________
உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்போம்: இலங்கை அமைச்சர்

ங்கொய்யாலே. இனக்காவலன், மொழிக்காவலன், அதும் செம்மொழி (எவ்ளோ ரத்தம்) நீதாண்டி. கண்டிப்பா கூப்டுவானுங்கோ.
_________________________________________________________________________________________________

இலங்கை பிரச்னைகளில் பெரிய நாடு என்பதால் இந்தியா தலையிட முடியாது. அதைவிட பெரிய நாடு என்ற வகையில்தான் சீனா தலையிடுகிறது’’ அமைச்சர்முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

ஜப்பான், பாகிஸ்தான் எல்லாம் ஆயுதம் குடுத்தானே எந்த கணக்கில. அமைதின்னா மட்டும் சைசாய்யா தமிழ் நண்டே.
_________________________________________________________________________________________________

சென்னை: சரவணா செல்வரத்தினம் கடைக்கு சீல்

தீபாவ‌ளி க‌ல்லா க‌ட்டியாச்சி. கிறிஸ்ம‌ஸ்குள்ள‌ ஸ்டே வாங்கிடுவாங்க‌. 
 _________________________________________________________________________________________________
டிக்கெட் எடுக்காமல் வந்த போலீஸ்காருக்கு சிறை

பெயிலில்லாம‌ வெளிய‌ வ‌ந்துடுவாரு. ஹெ ஹெ.
_________________________________________________________________________________________________
மொட்டை அடித்து பெண் சித்ரவதை : கணவர், மாமியார் கைது

எந்த‌ சீரிய‌ல்ல‌ முத‌ல்ல‌ இத‌ சுட‌ப்போறானோ.

_________________________________________________________________________________________________

Sunday, October 25, 2009

மனக்குளம்...







மனக் குளம்

நிறைந்த மனக் குளத்தில்
என் முகம் பார்க்க
உன் முகம் கண்ட நாள் எத்தனை?

கரையோர ஆலமரக் கனி விழ
சிற்றலையாய்த் தோன்றிய கலங்கலுக்கு
காரணம் நானெப்படியாவேன்?
விழுந்த ஆலங்கனி விஷ வித்தாய்!

குளம் குழம்பி குட்டையாக
முகம் பார்க்க முயலும்
முட்டாள் நான்
முழுதாய்த் தொலைந்து போனேன்.

உன் முகம் காண முயன்று
முற்றாய்த் தோற்று
என் உயிர் தேடும்
பிரயத்தினத்தில் மூச்சடைக்கிறது!

ஏன் என் உயிர் என்னை
வெறுப்பதாய்ச் சொல்கிறது?
என் ஏக்கம் மறுத்தேன்
எள்ளி நகைக்கிறது?

நானறிவேன்! என் உயிருக்கு
வெறுக்கத் தெரியாது.
உயிர்ப்பிக்கும் தேவதைக்கு
உயிர்வாங்கத் தெரியாது

உயிர் அளிப்பது இறைவனெனில்
நீயும் அதுவன்றோ?
ஏங்கி அழாமல் நீங்கள்
எப்பொழுது வந்தீர்கள்?

வரமளிப்பது இறைவனெனில்
நீயும் அது தான்
ஆரத் தழுவி
தன்னுள்ளடக்கையில்!


               __/\__                                                                                                                

Saturday, October 24, 2009

பதிவராகிறார் வடிவேலு-2

நிஜமாவே  பேப ஆயிட்டார் வடிவேலு.  யூத்ஃபுல் குட் ப்ளாக்ஸில்

(நேற்றைய தொடர்ச்சி)

நான்: அண்ணே! பின்னூட்டம் வந்திருக்கு பாரு.

வடிவேலு: அட ஆமப்பா! அந்த புள்ள பேரு வெடிவேலுன்னு இருக்கட்டுன்னிரிச்சி.

நான்: சொன்னேன்ல. சரி கதை எழுத ஆரம்பிங்க. அங்க என்ன பண்றீங்க?

வடிவேலு:வெற்றி! வெற்றி! எனக்கு ஒரு ஓட்டு விளுந்திரிச்சி. எனக்கு ஒரு ஓட்டு விளுந்திரிச்சி.

நான்: அட சை. அது உங்க ஓட்டண்ணே!

வடிவேலு: அய்ங். நான் எப்ப போட்டேன்.

நான்: அது இடுகை திரட்டில சேர்த்தா வரும். இன்னொன்னு நாம அமுக்கணும். அது நான் பண்ணேன்.

வடிவேலு: ஏன்யா? அப்ப நீ உன் ஓட்டே போடாம இவ்ளோ நேரம் இருந்திருக்க.

நான்: நல்ல ஆரம்பம்ணே. ஓட்டு பைத்தியம் பிடிச்சிடுச்சி உனக்கும். இப்ப கதை எழுதப் போறியா?  நான் போகவா?

வடிவேலு: இருய்யா இருய்யா. வந்து, வந்து, அண்ணனுக்கு புதுசா? பர பரன்னு இருக்கு. கொஞ்சம் விலாஆஆவரியா சொல்லிடுப்பா. நான் எளுதிக்குவேன்.

நான்: அட சாணைக்கு பொறந்த சோணன்னு சரியாதான்யா சொன்னான் அந்தாளு. சரி. அப்பத்தாட்ட காசு சுட்டாச்சி. மெட்ராஸ் போகணும். பஸ்ல டிக்கட் இல்லாம போனா என்னாகும்னு தெரியும்ல.

வடிவேலு:நல்லாத் தெரியுமே. காது ஙொய்னு கேட்டுகிட்டே இருக்கும்.

நான். ட்ரெயினெல்லாம் புடிச்சி உனக்கு போவத் தெரியாது. நீ என்னா பண்ற, பரோட்டா கட வாசல்ல நிறுத்தி இருக்கிற ஒரு லாரி டாப்புல ஏறி படுக்குற.

வடிவேலு: அது மெட்ராஸு போவுன்னு எப்டிப்பா தெரியும்.

நான்: ய்ங். போய் ட்ரைவர கேட்டு ஏறுன. போறது திருட்டுத்தனமா. இதுக்கு கேள்வி வேற.

வடிவேலு: ச்சரிப்பா சரிப்பா. கோச்சிக்கிறாத. சொல்லு சொல்லு.

நான்: அப்புடி கேளு. பசி மயக்கத்துல அசந்து போய் தூங்கிர்ர. லாரி போய்க்கிருக்கு. நெடுஞ்சாலையில ரெண்டு பக்கம் மரம்.இருட்டுல இலையெல்லாம் கருப்பா, கேப்புல வெளிச்சம்னு டெர்ரரா இருக்கு.

வடிவேலு:(நல்லவன் மாதிரியே சொல்றானே! கால வாரவான்னு தெரியலையே. சரி கேப்போம்) ஏம்ப்பா, நாந்தான் தூங்கிட்டேனே. அப்புறம் இதெல்லாம் எப்புடி தெரியும்? ஒரு லாஜிக் வேணாம்?

நான்: ணே. வேன்ல வெச்சி கிட்னி எடுத்துட்டான்னு நடிச்சியே. அது லாஜிக்கா? கதைன்னா ஒரு த்ரில் வேணாமா. அதுக்குதாண்ணே. அது எங்களுக்கு. எங்களுக்கு.

வடிவேலு:(பயந்தபடி) சரி சொல்லு.

நான்: அப்புடியே போய்க்கிருக்க திடீர்னு காத்துல 'ரா ரா' பாட்டு மிதந்து வருது.

வடிவேலு: நிப்பாட்டு நிப்பாட்டு. இப்போ ஏன்யா அத இளுத்து விடுற? ஐவேசுல சாங்கு.ய்ங். தெலுங்கு படத்த விட மோசமா இருக்குய்யா உன் கத.

நான்: யோவ் வெண்ண. ட்ரைவர் லாரில எஃப்.எம் ரேடியோ போட்டாருய்யா. நீ ரொம்ப லாஜிக் பேசுற, நான் போறேன்.

வடிவேலு: அட இருய்யா. அண்னன் தெரியாமதான கேட்டேன். இது எதுக்குன்னு சொல்லுய்யா.

நான்: த்ரில்லுக்கு எஃபெக்டுப்பா. நீ விட்டா முழு கதையும் என்ன எழுத வெச்சிடுவ. நீ பார்க்காத சிச்சுவேசனா. அதெல்லாம் சேர்த்துக்க. போய்க்கிட்டே இருந்த வண்டி சடார்னு வலப்பக்கம் திரும்பி கோயம்பேடு மார்கட்ல வந்து நிக்குது.

வடிவேலு: ஏண்டா ஏன்?

நான்: யோவ். நான் பின்னூட்டத்தில எதிர் பாராத திடுக்கிடும் திருப்பம்னு போடணும்லயா வெண்ண. அதுக்குதான். அப்புறம் எங்க போகுதுன்னே தெரியாம ஏறிப் படுத்த வண்டி சரியா கோடம்பாக்கம் பக்கத்துல வந்து நின்னா நல்ல முடிவா இல்லையா?

வடிவேலு: அட நீ அப்புடி வாரியா. ச்சேரி ச்சேரி. இனிமே நம்ம சொந்த பிட்ட போடுவம்ல.

நான்: அண்ணே. இது சிறுகதையா போடு. மத்ததெல்லாம் சேர்த்தா பெருசாயிரும். அப்புறமா தொடர் இடுகையா போட்டுக்கலாம்.

வடிவேலு: அதுஞ்செரிதான்.

நான்: யோவ். நான் சொல்லிகிட்டே இருக்கேன். அங்க என்ன பண்ற.

வடிவேலு: அட நீதானப்பா சொன்ன. ஓட்டு விளுந்திருக்கா. பின்னூட்டம் வந்திருக்கான்னு பார்த்தேன்.

நான். அடிங்கொய்யாலே. இப்பதான்யா புரியுது நீ எப்புடி இவ்ளோ வளர்ந்தன்னு. நெளிவு சுளிவெல்லாம் டக்னு புடிச்சிர்ற.

வடிவேலு: சரி தம்பி. கவிதையாச்சி, கட்டுரையாச்சி. அப்புறம்?

நான்: ய்ங். டீ குடிக்க போற. அங்க 2 பேரு நாட்டு நடப்ப பேசுவாய்ங்கல்ல. அத அப்புடியே உம்பிட்டா போடு. அரசியல் இடுகையாயிரும். கோயம்பேட்டுல கத்திரிக்கா கிலோ 30 ரூ அனியாயம்னு பேசிட்டு போவாங்க. அத எழுது. நாட்டு நடப்பாயிரும். ஊர்ல உங்கப்பா விரட்டி விட்டாருன்னு பக்கத்தூட்டுல திருட்டு சோறு சாப்டது எழுது. ஏழு தெரு தாண்டி ஒரு ஊட்டு மாடியில நின்னு எம்.சி. ஆர பார்த்தத அவரு கூட டிப்பன் சாப்டேன்னு எழுது. இனிமே உன் ராச்சியம்தான்.

வடிவேலு: அட அட பர பரங்குதுப்பா. ராவெல்லாம் தூங்காம அத்தனையும் எழுதிர்ரேன். ஆமா. நான் அடுத்த இடுகை எப்போ எப்புடி போடுறது. அதச் சொல்லப்பா.


நான்: பாருண்ணே. சிலது பர பரன்னு சேல்ஸ் ஆய்க்கிரும். சிலது போணியாவாது. சூனா பானாவ நினைச்சிகிட்டு போட்டுகிட்டே இருக்கறதுதான்.

வடிவேலு:அப்ப பரபரன்னு சேல்ஸ் ஆனா நான் பிரபலமா? சாரி சாரி பேமஸா.

நான்: அய். தோடா. அவ்ளோ சுளுவில்லண்ணே.  அது நிறைய கடக்கணும். ஆரம்பத்துல வளைச்சு வளைச்சு எதிரோட்டு போடுவாய்ங்க. அப்புறம் உனக்கு ஒன்னும் ஓடலையின்னா அந்த கவிதை எழுதினல்ல. அது இப்போ கொஞ்சம் மாத்தி போடலாம்.

வடிவேலு: ஏம்பா. தெரிஞ்சிராது?

நான்: அது மீள் இடுகைன்னு போட்டுக்கலாம்ணே.  அப்புறம் இது பேரு இப்போ கவிதை இல்ல. ஐக்கூ. நீ போடு.
              கண்விழித்து காபி
              கக்குசு
              காத்து.

வடிவேலு: அய்யோ. சினிமாலதான் என்ன நாறடிக்கிறாங்கன்னா இவனும் சேர்ந்துக்குறானே. நான் என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்? ஏய்யா என்னையே சுத்தி சுத்தி இப்புடி பண்றீங்க. சரி. போட்டு தொலைடா வெடிவேலு.

நான்: இரு பின்னூட்டம் போடுறேன். "அண்ணே. கவுஜ சூப்பர். "

வடிவேலு: அதென்னாது கவுஜ.

நான்: யாருக்கு தெரியும். அது நெற‌யா இருக்கு. நீ அப்பாலிக்கா தண்டோரா அண்ணன படி.

வடிவேலு: அடிங்கொய்யாலே. என்னாமா அளக்குறான்யா.

நான்: இருண்ணே இருண்ணே. ஒரு பின்னூட்டம். படி படி. அட அனானி.

வடிவேலு: அது யாரு அனானி?

நான்: அது யாராவது திட்றது, போட்டுக்குடுக்கறதுக்கு யார்னே தெரியாம போடுவாங்கண்ணே. அதான்.

வடிவேலு: சரி பார்க்கலாம். அய்ங். அதென்னாது எதிர்கவுஜ?

நான்: இரு பார்க்கிறேன். இங்க சொடக்குண்ணே. இப்போ பாரு. ம்ம்ம்ம்.  ஆமா. உங்கவுஜக்கு எதிர்கவுஜ போட்டிருக்குண்ணே.

சோத்துக்கில்லை
சோம்பிப் படுத்தான்
காத்து.

வடிவேலு: என்னாது. சோத்துக்கில்லையா. சோம்பிப் படுத்தனா? அண்ணே விடாதண்ணே. சரியா பதில் குடுக்கணும். நீ ஒரு எதிர் கவுஜ போடு.

நான்:அண்ணே. நல்லா வருவண்ணே. அவன் போட்டு குடுத்ததும் பொங்கிட்ட பார்த்தியா. இப்புடியே போய்க்கிரு. பேப ஆய்டுவ. நான் என் பொழப்ப பார்க்கணும்.


வடிவேலு: ஏன் என்ன இப்புடி டார்ச்சர் பண்ற. நான் பேபன்னு எப்ப தெரிஞ்சிக்கிறது?

நான்: (அய்யோ. இதுக்கு பதிலே இல்லையே. நான் என்ன சொல்லுவேன்). நீ இப்பதான ஆரம்பிச்சிருக்க. நானும் பாலோ பண்றன்ல. நானே வந்து சொல்றேன். இல்லன்னா போன் பண்றேன். (எனக்கே தெரியாதுடி. இப்போ ஆளவிடு.)

வடிவேலு: அண்ணன் நம்பியிருக்கேன் . கண்டிப்பா சொல்லணும் என்னா? டேங்ஸ். போய்ட்டு வா.

நான்: சரி வரேண்ணே. (வெளிக் கதவு வரை வந்து டரியலாகி) அண்ணே. போச்சா வந்திச்சா புரியலயேண்ணே!

வடிவேலு: என்னாது?

நான்: அங்க பாரு. விசயகாந்த் வீட்டுள்ள இருந்து யாரு போறதுன்னு.

வடிவேலு: அட ஆமா! அன்னைக்கு பதிவர் கூடல்ல ஆட்டிகிட்டு போனானே அவனா இவன்!

நான்:  அடப்பாவி. நேத்து இவன் இடுகைய பார்த்தப்பவே டவுட்டா இருந்திச்சி. அவருக்கு இவன் பதிவராக வழி சொல்லிட்டான் போலண்ணே. அந்தாளுக்கு காலேசெல்லாம் வேற‌ இருக்கே. எல்லாப் பயகளுக்கும் ஒரு பிரியட் ஓட்டு குத்த, பின்னூட்டம் போடன்னு விட்டா அந்தாளு பேப ஆயிடுவாருண்ணே.

சொந்தமா திரட்டி கூட வச்சிக்குவாரு. வேணான்னா கேட்டியா? இப்ப பாரு. விடவும் முடியாம அவஸ்தைப்  படப்போற. ஹூம். அவன் அவன் எடுக்குற முடிவு உனக்கு பாதகமா இருந்தா என்ன பண்ணுவ. வர்ட்டா.

(பொறுப்பி: நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. தண்டோரா அண்ணன், வசந்து புள்ளையாண்டான் இடுகையை உரிமையாக கோர்த்திருக்கிறேன். மன்னிக்கவும்)

__________/\__________

Friday, October 23, 2009

பதிவராகிறார் வடிவேலு-1

(பதிவர் கூடலில் பாதியில் விட்ட வடிவேலு எப்படியோ காரனுப்பி என்னை அழைக்க நான் போய் மாட்டிகிட்டேன். ஏன், எப்படின்னு லாஜிக்கலா கேள்வியெல்லாம் வரப்படாது. படிச்சமா சிரிச்சமா, ஓட்டு, பின்னூட்டம் போட்டமான்னு இருக்கணும். ச்ச்செரியா.)

நான்: வணக்கம்ணே. எப்புடிண்ணே என்ன புடிச்சீங்க.

வடிவேலு:இல்ல. நீயெல்லாம் மனுசந்தானா. அன்னைக்கு சத்திரத்தில மட்டையாக்கிட்டு போய்ட்டியே. !

நான்: சூ. அதெல்லாம் நான் இன்னும் யாருக்கும் சொல்லல. இப்போ எப்படி புடிச்சீங்க அத சொல்லுங்க.

வ‌டிவேலு: அதெல்லாம் க‌ம்பேனி சீக்குர‌ட்டு. சொல்ற‌துக்கில்ல‌. இப்ப‌ எதுக்கு கூப்புட்ட‌ன்னா தோ பாரு.  க‌ம்பீட்ட‌ர் பொட்டி வாங்கியாச்சி. நானும் ப‌திவ‌ராகி பிர‌ப‌ல‌மாவ‌ணும். அம்புட்டுதேன். என‌க்கு சொல்லிக்குடு வா.

நான்: ஐயோ அந்த‌ வார்த்தைக்கு வாஸ்து ச‌ரியில்ல‌ண்ணே.

வடிவேலு:ஏண்டா இப்புடி. உங்களுக்கெல்லாம் நான் பதிவராயி பேமசாயிறப்படாது. அம்புட்டுதானே.

நான்:(ஒரு படம் விடாம அங்கயே அடி விழுந்தும் திருந்த மாட்டியே நீயி)அதெல்லாமில்ல. நீ பேப ஆயிக்கண்ணே.

வ‌டிவேலு: இருய்யா இருய்யா. இப்ப‌ என்ன‌ கேட்டேன்னு பேப்ப‌ய‌ங்க‌ற‌.

நான்:பேய்ப‌ய‌ இல்ல‌ண்ணே. பே.ப‌. பேம‌ஸ் ப‌திவ‌ர். வாஸ்து ச‌ரியில்ல‌ன்னு மாத்திட்டேன்.

வ‌டிவேலு: ஹ‌ய்யோ ஹ‌ய்ய்ய்யோ. அது வாஸ்து இல்ல‌ய்யா பேப்ப‌லே. நேஏஏமால‌ஜி.

நான்:(என் நேர‌ம். ஐ சீ கெட் அவுட் சொல்ற‌தெல்லாம் இத‌ சொல்ல‌ நான் கேக்க‌ணும்) ச‌ரிண்ணே. இது ரொம்ப‌ தேவையா இப்போ. அதான் விஜ‌ய‌காந்த் இருக்காரு. பேப்ப‌ர்கார‌ய்ங்க‌ இருக்காங்க‌. கூப்டு ஏதாவ‌து சொன்னா நால‌ஞ்சு பிட்ட‌ சேர்த்து போட்டு இழுத்து விடுவாங்க‌. அத‌ விட்டு இது ஏண்ணே.

வ‌டிவேலு: தோபார். இந்த‌ வேலையெல்லாம் வேணாம். அண்ண‌ன் பாச‌மா கேக்குறேன். ப‌திவ‌ தொட‌ங்கு. அருவாள‌ தூக்க‌ வெச்சிறாத‌ என்னிய‌.

நான்: ச‌ரிண்ணே. த‌ல‌யெழுத்த‌ யாரு மாத்துற‌து. வ‌லைம‌னைக்கு பேரு சொல்லுங்க‌ண்ணே.

வ‌டிவேலு:தோ. அந்த புள்ளகிட்ட சொல்லாத. வெடிவேலுன்னு வெச்சிரு. டெர்ரரா இருக்கும்.

நான்: அப்புடியெல்லாம் முடியாது. நாளைக்கு அந்த புள்ள படிக்கவந்தா தெரிஞ்சிடும். கேட்டா சரிங்க போவுது.

வடிவேலு: ச்சேரி சேரி.அப்புறம்?

நான்: இதுல உங்களப்பத்தி போடணும். ஒரு படம் வேணும்.

வடிவேலு:போஓஓடு போஓடு. நாய் சேகர் படம் போடு.

நான்: துப்புவாய்ங்க. ஒரு பய படிக்க வரமாட்டான். அலட் ஆறுமுகம் போடலாம்.

வடிவேலு: ஹூம். அவன் அவன் எடுக்குற முடிவு உனக்கு சாதகமாத்தான் அமையுதுடா வடிவேலு. சரி போட்டுக்க.

நான்: இப்ப தொண்டய்ங்க.

வடிவேலு: ஏய் ஏய். என்ன பார்த்த எப்புடி தெரியுது. தொண்டய்ங்கன்னு என் படத்த போடுற. நக்கல்தானே. நானே தலைவன். நானே தொண்டன். என்ன நம்பி ஒரு பய வரமாட்டான்னு தான போடுற ராஸ்கல்

நான்: யோவ். நீரு முன்னாடி போனாதான தொண்டய்ங்க பின்னாடி வர. அதான். பொத்திக்கிட்டிரு

வடிவேலு: ஓஓஓஓ. அப்புடியா. தஸ் நாயீஈஈஈஸ்.

நான்: (இது வேற)இப்போ ஓட்டு பட்ட வைக்கணும்னே.

வடிவேலு: வந்ததில இருந்தே ராங்காதான் போய்க்கிருக்க நீ. நான் தேர்தல்லயா நிக்க போறன். ஓட்டு கீட்டுன்னு பேசிகிட்டு. சல்லிக்காசு தரமாட்டேன்.

நான்: யோவ் வெண்ண. பேபவா இல்லையான்னு எப்புடி தெரிஞ்சிக்கிர்ரது. அதுக்குதான் ஓட்டு.

வடிவேலு: அய்ய்ய்ங். இது தெரியாம் ஏசிப்புட்டனப்பா. சரி ச்சாரி.

நான்: சரி இப்போ ஒரு இடுகை போடணும்.

வடிவேலு: போடு போடு.

நான்: யோவ். நீர் போடணும். நான் என் பதிவுல போடுவேன். இதுல நீர் போடணும்.

வடிவேலு:கோச்சிக்கிறாதப்பா. அண்ணன் புதுசில்ல. சரி என்ன போடலாம் சொல்லு.

நான்: எந்த குப்பய வேணும்னாலும் போடலாம். பாட்டு, கதை, கவிதை, நடந்தது, நடக்காதது எதுனாலும்.

வ‌டிவேலு: அப்போ எம்.சி.ஆர்து ந‌ல்ல‌ ந‌ல்ல‌ பிள்ளைக‌ளை ந‌ம்பி சாங் போடு.

நான்: அதெல்லாம் தேடிக்குவாங்க‌. சொந்த‌மா எழுதுங்க‌. முத‌ல்ல‌யே சுடுற‌தா?

வ‌டிவேலு:ஆஹா. இத்தினி நாளும் சொல்லிக்குடுத்த‌த‌ தான‌ப்பா ப‌ண்ணிகிருந்துருக்கேன். இப்ப‌டி சிக்க‌ வெச்சிட்டியே.ய‌ப்பா ய‌ப்பா. ஒன்னு ரெண்டு சொல்லிகுடுப்பா. நான் க‌த்துக்குறேன்.

நான்: (என் த‌ல‌ எழுத்து. நானே க‌த்துகுட்டி. இதுல‌ சொல்லி வேற‌ குடுத்து உருப்ப‌ட்ரும்) நீயே சொல்லுண்ணே. க‌விதை எழுதுறீயா?

வ‌டிவேலு: ஏப்பா இந்த‌க் கொல‌வெறி. ஆர‌ம்ப‌த்துல‌யே ச‌மாதி க‌ட்ட‌ பாக்குற‌ நீ.

நான்: அட‌ இல்ல‌ண்ணே. எழுத‌லாம். இன்னைக்கு என்ன‌ ந‌ட‌ந்துச்சு சொல்லுங்க‌.

வ‌டிவேலு:காலைல‌ எழுந்தேன்.

நான்: அத‌ அப்புடியே போடுண்ணே.

வ‌டிவேலு: இத‌யா? ச‌ரி போட்டேன்.

நான்: அப்புற‌ம்?

வ‌டிவேலு: காபி குடிச்சேன்.

நான்: அத‌யும் போடுண்ணே அடுத்த‌ வ‌ரில‌.

வ‌டிவேலு: இத‌யுமா? ச‌ரி போட்டேன். என்ன‌ வெச்சி காமெடி கீமெடி ப‌ண்ண‌ல‌யே

நான்: சே சே இல்ல‌ண்ணே (ம்கும் வேற‌ எதுக்கு இப்புடி மாங்கு மாங்குன்னு த‌ட்டுறேன்)அப்புற‌ம்?

வ‌டிவேலு:(க‌டுப்பாகி) க‌க்குசு போன‌ய்யா. க‌க்குசு போனேன். இத‌யும் போடுற‌தா?

நான்: போடுங்க‌ண்ணே.அப்பிடியே போடாம கழிப்பறைனு போடுங்க. அடுத்த‌தா கால்தான் வ‌லித்த‌துன்னு போடுங்க‌ண்ணே. இப்ப‌ ப‌டிங்க‌.

வ‌டிவேலு:காலையில் எழுந்தேன்
          காபி குடித்தேன்
          க‌ழிப்ப‌றை போனேன்
          கால்தான் வ‌லித்த‌து!
ஏன்யா. நான் சொன்னனா. கால் வ‌லித்த‌துன்னு. இது க‌விதை? உன்னிய‌.

நான்: இருண்ணே. நான் பின்னூட்ட‌ம் போடுவ‌ன் பாரு. முத‌ல்ல‌ இத‌ அமுக்கி திர‌ட்டில‌ சேரு.

வ‌டிவேலு: என்னா எழ‌வோ. ப‌ண்ணியாச்சி ப‌ண்ணியாச்சி.

நான்:(பின்னூட்ட‌ம் போட்டு) இப்போ என் பின்னூட்ட‌ம் ப‌டிண்ணே.

வ‌டிவேலு:வான‌ம்பாடிக‌ள் said: அண்ணே! முதல் கவிதையே பிரமாதம்ணே. அசத்திட்டீங்கண்ணே./காலையில் எழுந்தேன் காபி குடித்தேன்/ கண்ணு முன்னாடி தெரியுதுண்ணே. /கழிப்பறை போனேன் கால்தான் வலித்தது/ வலி தெரியுதுண்ணே கவிதைல. படிமக் கவிதைண்ணே. உள்ள ஆள் இருந்துச்சுன்னு நினைக்கலாம். வராம உக்காந்து வலிச்சதுன்னும் வெச்சிக்கலாம். கொஞ்சம் ’பின்’ நவீனத்துவமாவும் தெரியுதுண்ணே. அசத்துங்க நான் தொடர்ரேண்ணே.     

நான்: எப்புடிண்ணே.

வடிவேலு: அட ஆமாய்யா. கவிதை மாதிரி தான் தெரியுது. இவ்வளவு விஷயமிருக்கா இதில. அண்ணன் மேல எவ்வளவு பாசம்பா உனக்கு.

நான்:(ஆடு வளர்க்குறது அழகு பார்க்கறதுக்கில்ல. கோழி வளர்க்கிறது கொஞ்சறதுக்கில்லடி.)ப‌திலுக்கு நீங்க‌ என் ப‌திவுக்கு வ‌ந்து பின் தொட‌ர்ந்து, ப‌டிச்சி, ஓட்டு போட‌ணும்னே. பின்னூட்ட‌மும் போட‌ணும்னே.

வ‌டிவேலு: ஏப்பா. என் க‌விதையில‌ இவ்ளோ மேட்ட‌ர் இருக்கு. நீ ந‌ல்லா இருக்குன்ன. நீ ச‌ப்ப‌ இடுகை போட்டாலும் நான் இப்ப‌டி சொல்ல‌ணுமோ?

நான்:(அட்றா ச‌க்க‌) அப்புடியெல்லாம் இல்ல‌ண்ணே. ந‌ல்லால்ல‌ன்னா ந‌ல்லால்ல‌ன்னு சொல்ல‌ணும்னே. ஆனா கொஞ்ச‌ம் பாலிசா, இது ச‌ரியில்ல‌.இது இப்ப‌டி ப‌ண்ண‌லாம்னு சொல்ல‌ணும்னே. நீங்க‌ பாட்டுக்கு இங்க‌ பேச‌றா மாதிரி, இதெல்லாம் இடுகையாடா வெண்ண‌ன்னு எல்லாம் போட‌ப்ப‌டாது. ச‌ரியா.

வ‌டிவேலு: அவ்ளோதானா.

நான்: தோடா! இனிமே உக்காந்து அப்ப‌ப்ப ஃப்ரெஸ் ப‌ண்ணி எவ்ளோ ஓட்டு வ‌ந்திச்சின்னு பார்க்க‌ணும். என் பின்னூட்ட‌த்துக்கு ந‌ன்றி சொல்லி ப‌தில் போட‌ணும்.

வ‌டிவேலு: ஓஓ. அதெல்லாம் வேற‌ இருக்கோ!

நான்:ஆமாம். சும்மாவா. ராவெல்லாம் க‌ண்ணு விழிச்சி பார்த்துட்டே இருக்க‌ணும். சூட்டிங் ந‌டுவுல‌ பார்க்க‌ணும்.

வ‌டிவேலு: அட‌ வேல‌ செய்யிற‌ இட‌த்துல‌ எப்புடிப்பா?

நான்: கொள்ள‌ பேரு வேல‌ செய்யிற‌ இட‌த்துல‌தான் இத‌ ப‌ண்ற‌தே. ராத்திரி ஃபுல்லா எத்தினி ஓட்டு வ‌ந்திருக்கும்னு தூக்க‌ம் இல்லாம‌ காலையில‌ சீக்கிர‌மா ஆஃபீஸ் போற‌து. இப்புடியாச்சும் நேர‌த்துக்கு வ‌ராய்ங்க‌ளேன்னு கொள்ள‌ ஆபீசில‌ விட்டு வெச்சிருக்காய்ங்க‌.

வ‌டிவேலு:இங்கார்ரா!இய்ய்ங். இதுல‌ இவ்வ‌ளவு விச‌ய‌மிருக்கா.

நான்: ச‌ரி. நீ நின‌ச்ச‌ப்பல்லாம் நான் வ‌ர‌ முடியாது. ஒரு நால‌ஞ்சு இடுகை போட்டு சேர்த்து வையி. ஒரு ந‌ளைக்கு ஒன்னுன்னு போட‌லாம்.

வ‌டிவேலு: ச‌ரிப்பா. இப்போ என்ன‌ போட‌லாம் சொல்லு.

நான்: ஒரு க‌தை எழுத‌லாம்.

வ‌டிவேலு: (அது தெரிஞ்சா ஃபீல்டுல‌ சொல்லி காசு பார்க்க‌மாட்ட‌னா. ஏண்டா இப்புடி)ச‌ரி சொல்லு.

நான்:வ‌ரிக்கு வ‌ரியெல்லாம் சொல்ல‌ மாட்ட‌ன். ஒன் லைன் சொல்றேன். நீ வ‌ளைச்சு வ‌ளைச்சு எழுது.

வ‌டிவேலு: ச‌ரி சொல்லு

நான்: உன்னிய‌ மாதிரி ஒருத்த‌ன் ஆயா தூங்குற‌ப்ப‌ சுருக்குப் பைய‌ க‌ள‌வாண்டுட்டு மெட்ராசுக்கு சினிமால‌ ந‌டிக்க‌ போறான். 

வ‌டிவேலு: அடிங்கொய்யாலே. நான் சொன்ன‌ பிட்ட‌ என‌க்கே திருப்பி போடுறியா.

நான்: அட‌ இருண்ணே. உன்னிய‌ மாதிரி ப‌ஸ்ல‌ வ‌ந்தேன். ட்ரெயின்ல‌ க‌க்கூசில‌ டிக்க‌ட் எடுக்காம‌ வ‌ந்தன்னா ஒரு ப‌ய‌ ப‌டிப்பானா? த்ரில் வேணும்னே.

வ‌டிவேலு:ஸ்டார்டிங் ஸ்ட்ராங்காதான் இருக்கு. பினிசிங் ச‌ரியில்ல‌ன்னா பிச்சிப்புடுவேன்.

(தொடரும்)

(நான் மட்டும் தொடர் இடுகை எழுத வேணாமா. அதான். ஒழுங்கா பின்னூட்டம் வந்தா தொடரும். இல்லாட்டி சுபம்)

Thursday, October 22, 2009

என் செல்லக் கண்ணம்மா!

உனக்காய் காத்திருக்கையில்
இறந்த நேரம் காட்டும் கடிகாரம்
கலங்கிய கண்ணோ
காண மறுக்கிறது!

நொடி முள்ளாய் மனம் துடிக்க
நிமிட முள்ளாய் நான் தேட
மணி முள்ளாய்ச் சேர மறுக்கிறாய் நீ!

களைத்த மனத்துக்கு
அடிக்கும் மணி
சாவு மணியாய்
ஒலிக்கிறது

நிமிடங்களெனக்கு நாளாய் பறக்க
நீ ஏனோ மணியாய் கடத்துகிறாய்
உன்னோடிருக்கும் நேரம் மட்டும்
அடிக்கும் மணி கோவில் மணியாகிறது!
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாமிருவ‌ரும் ஒருநாள்
கோவிலுக்குப் போனோம்
நினைவிருக்கிற‌தா?
அத‌ன் பிற‌கு என்னால்
கோவிலுக்குப் போக‌ முடிய‌வில்லை
ஆம். க‌ண்மூடி நின்றால்
சிமிழ்போல் மூடிய‌ உன் க‌ண்க‌ளும்
தாம‌ரையாய்க் குவிந்த‌
உன் க‌ர‌ங்க‌ளும்
காற்றில் சிலும்பும்
ரோஜா இத‌ழ்க‌ள் போல்
துதி செய்த‌ உன் இத‌ழ்க‌ளும்
க‌ர்ப‌க்கிர‌க‌ விளக்காய்
உன் முக‌த்திருந்த‌ அமைதியும்
நினைவைச் சிதைக்கையில்
என்ன‌ பிரார்த்திப்ப‌து?

                                                                 

Wednesday, October 21, 2009

திருப்பதிக்கே மொட்டை!

கிரியின் குழலினிது யாழினிது படிக்கப் போய் மண்டைக்குப் பின்னாடி கொசுவத்தி சுத்த ஆரம்பித்தது. வெண்ணைகிட்ட பாதி நொந்து நூடுல்ஸ் ஆனதுன்னா நம்ம ஜூனியர் மிச்சம் மீதி வைக்காம டரியலாக்கினாரு.

நாம இருந்தது சென்னையில். தங்கமணியோட அம்மா வீடு பெங்களூரு. தங்கமணிக்கு பிரசவ நேரம் நெருங்க, அவங்கம்மா இது ரெண்டுமில்லாம பெரிய பொண்ணு வீடு பெருசு. திருப்பதில தண்ணி கஷ்டமில்லை. அதனால அங்கதான் டெலிவரின்னு ஜட்ஜ்மென்ட் குடுத்துட்டாங்க.

தல எழுத்து தப்புமா? அப்போ கிரிக்கட் பைத்தியம் வேற இருந்துச்சி.  வோர்ல்ட் சீரீஸ் கப் மேட்ச் நடந்துட்டிருக்க பிரசவ நேரம் சரியா அப்போதான் சொன்னாங்க. 

தங்கமணி டென்ஷன் பார்ட்டி. அதாவ்து டென்ஷன் குடுக்கிறதில. ஒரு முறை டாக்டர் ஒரு மணி நேரம் உக்கார வச்சு ரத்த அழுத்தம் எத்தனை முறை எடுத்தாலும் வலக்கையில் ரத்த அழுத்தக் குறைவு, இடக்கையில் அதிகம்னு பைத்தியம் புடிக்க வச்ச பார்ட்டி.

ஒன்ன‌ரை ம‌ணி, 2 ம‌ணின்னு எழுந்து மேட்ச் பார்த்து, 10.30 ம‌ணிக்கு சாப்பிடாம‌ ப‌ஸ் புடிச்சி சென்னை வ‌ந்து, ஆஃபீஸ் போய் வேலைய‌ பார்த்து ராத்திரி ப‌ஸ் புடிச்சி திருப்ப‌தி போய்னு ஒரே நாப்பொழ‌ப்பா போச்சு.

டாக்ட‌ரம்முனிக்கு வைத்திய‌ம் தெரிஞ்சிருக்க‌லாம். த‌ங்க‌ம‌ணிய‌ தெரியாதே. அத‌னால‌ இந்த ப‌த்து நாள்ள‌ எப்போ வேணும்னாலும் பிற‌ந்துடும். தொட‌ர்ந்து இடுப்பு வ‌லி இருந்தா வந்து அட்மிட் ஆயிடுன்னாங்க‌.

அடுத்த‌ நாளே த‌ங்க‌ம‌ணி வ‌லிக்குதுன்னு ஆர‌ம்பிச்ச‌து. கொஞ்ச‌ம் பார்க்க‌லாம் இருன்னு க‌வ‌னிக்க‌ ஆர‌ம்பிச்சேன். 10 நிமிச‌த்துக்கு ஒரு வாட்டி இடுப்ப‌ புடிச்சிகிட்டு ரொம்ப‌ வ‌லிக்குதுன்னு சொல்ல‌வும் சிரிப்ப‌ அட‌க்க‌ நான் பட்ட‌ க‌ஷ்ட‌மிருக்கே. ஒரு க‌ட்ட‌த்தில‌ சிரிச்சே தொலைச்சிட்டேன். அவ‌ங்க‌ம்மாவுக்கு சுர்ருனு வ‌ந்துடுச்சு. எம்புள்ள‌ வ‌லிங்குது, சிரிக்கிறீங்களே! டாக்ட‌ர் கிட்ட‌ கூட்டிட்டு போங்க‌ன்னு க‌த்துறாங்க‌ .

தாங்காதுடா சாமின்னு, போனா, அந்த‌ம்மா ஜெலுசில் மாத்திரை குடுத்து விட்டுச்சி, இது வ‌லி இல்ல‌ம்மான்னு. ஆஹா இப்போ ந‌ம்ம‌ கை மேல‌ன்னு, வீட்ல‌ போய் க‌ட்ட‌ம் ச‌ரியில்லாம‌ எகிறிட்டேன். ஒரே வார்த்தையில‌ அவ‌ங்க‌ம்மா வேட்டு வெச்சிட்டாங்க‌. முதுகு ப‌க்க‌ம் தொட்டு இங்க‌ வ‌லிச்சா சொல்லும்மான்னுட்டாங்க‌. டாக்ட‌ருக்கு த‌ங்க‌ம‌ணிய‌ தெரிய‌ வேணாம். அவ‌ங்க‌ம்மாக்கு தெரிய‌ வேணாமா.

ஒரு ம‌ணி நேர‌த்துல‌ ச‌ரியா அங்க‌ வ‌லிக்க‌ ஆர‌ம்பிச்சிடிச்சி. ஆகா நீ அப்புடி வறியான்னு, மெதுவா, அங்க‌ இல்ல‌, இங்க வலிக்கணும்னு ஒரு இட‌ம் காண்பிச்சா அங்க‌தாங்குது. கொஞ்ச‌ம் க‌ழிச்சி அதுக்கு நேர் எதிர்ல‌ இங்க‌ வ‌லிச்ச‌தான்னா அங்க‌தாங்குது.

விடிய‌ 1.30க்கு ஆஸ்திரேலியா இந்தியா மேட்ச். ம‌னுச‌ன் என்ன‌தாங்க‌ ப‌ண்றது? லேட்டானா மேச்சுக்கு ஆப்புன்னு போனா, டாக்டரம்மா இப்போல்லாம் பிறக்காது, 2 மூணு நாளாவ‌து ஆவும்னு விர‌ட்டுச்சி. அலைச்ச‌லானாலும் ப‌ர‌வால்ல, 3 நாள் மேட்ச் பார்க்க‌லாம்னு ச‌ந்தோச‌மா வ‌ந்தேன்.

அதென்னா ரெண்டு மூணு நாளுன்னு நீ சொல்ற‌துன்னு, தீர்மான‌மா அடுத்த‌ நாளே வ‌லியோ வ‌லின்னு ஆர‌ம்பிக்க‌, திரும்ப‌ டாக்ட‌ர்கிட்ட‌ போனா அந்தம்மா பார்வையே ச‌ரியில்லை. க‌ழுத்து, கையின்னு பார்த்துகிட்டு ச‌ரி அட்மிட் ஆயிடுங்க‌வும் லேசா பொறி த‌ட்டுச்சி.

ஏங்க‌ பிர‌ச்ச‌னையான்னா, இல்ல‌ ஊசி போட்டா டெலிவ‌ரியாயிடும்னாங்க‌. அட‌ப்பாவிங்க‌ளா, மாட்டுக்குதான் ஊசி போட்டு பால் க‌ற‌க்குறாங்க‌, ம‌னுச‌னுக்கு ஊசிய‌ போட்டு டெலிவ‌ரியே பார்க்குறாங்க‌டான்னு அப்போதான் தெரிஞ்சிகிட்டேன்.

எப்புடியோ, இவ‌ரு தானா வ‌ர‌மாட்டாரு வ‌ன்முறைதான்னு அலைய‌விட்டு, 5 ம‌ணிக்கு இப்போவே கையெழுத்து போடு, எம‌ர்ஜ‌ன்ஸின்னாங்க‌. ஆடிப்போய் கையெழுத்து போட்டுட்டு அல்லாடிகிட்டிருந்தா, மெதுவா 9 மணிக்கு இளிச்சிகிட்டு வ‌ந்து க்யூட் அன் ஹெல்தி பாய்னு சொல்லிட்டு போச்சு. எப்ப‌டா பாக்கப் போறோம்னு இருந்த‌தில‌ ராவெல்லாம் கொசுக்க‌டில‌ தூங்காம‌ இருந்த‌து, ப‌சி ஒன்னுமே தெரிய‌ல‌.

ந‌ர்ச‌ம்மா ட‌வ‌லுக்குள்ள‌ பொதிஞ்சி தூக்கிட்டு வ‌ந்த‌த‌ பார்த்த‌தும், ப‌த‌றிபோச்சு. த‌ல‌ கீழா தூக்கிட்டு வாராளே,  குழ‌ந்தையை காட்ற‌துன்னா முக‌த்த‌ ம‌றைச்சா கொண்டு வ‌ருவாங்க‌ன்னு அவ‌ச‌ர‌மா ட‌வ‌ல‌ பிரிச்சி பார்க்கிறேன்.

அந்த‌ம்மா " ஏ ஐய்யா, ம‌க‌ பில்லகாயனி செப்ப‌லேதா, குக்க‌னு சூசின‌ட்டு சூஸ்தாவேன்னிச்சி"(ஏன்யா ஆம்பிள‌ புள்ள‌ன்னு சொல்ல‌ல‌யா, நாய் குட்டி  ஆணா பெண்ணான்னு பார்க்குறா மாதிரி பார்க்குறியே).

அப்புற‌ம் தான் பார்க்குறேன் பாட்ட‌ம் மாதிரியே இருக்கு டாப்பு. ஒரே ஒரு முடியில்லை.பொம்மை மாதிரி இருக்காரேன்னு ஒரு ப‌க்க‌ம் ச‌ந்தோஷ‌ம், ஒரு ப‌க்க‌ம் விய‌ப்பு, இதென்னாங்க‌டான்னு. டாக்ட‌ர‌ம்மாட்ட‌ முத‌ முத‌ல்ல பைய‌னுக்கு முடி வ‌ள‌ருமா வ‌ளராதான்னு க‌வ‌லைப் ப‌ட்ட‌ த‌க‌ப்ப‌ன் நானாதான் இருப்பேன். அவ‌ங்க என்னைப் பார்த்த பார்வைல நீயெல்லாம் இந்த கேள்வி கேக்கலாமான்னு கேட்டா மாதிரி இருந்திச்சி. ஆனா அதெல்லாம் வ‌ரும்னாங்க‌.

த‌ங்க‌ம‌ணி அவ‌ங்க‌ம்மா வ‌ந்து பார்த்து சொன்னாங்க‌ பாருங்க‌ ஒரு வார்த்த‌. க‌ருவுற்றிருக்க‌ற‌ப்ப‌ தேங்கா சாப்புட்ட‌தால இப்புடி பொறந்துச்சின்னு. ஏங்க, கேர‌ளால‌ எல்லாம் மொட்டையாவா அலையுறாங்க‌ன்னு ம‌ன‌சுக்குள்ள‌ கேட்டுகிட்டேன்.வீட்டுக்கு வ‌ந்த‌ப்புற‌ம் தூங்கி எழுந்து முத‌ல் வேலை செடில‌ மொட்டு விட்டிருக்கான்னு பார்க்க‌றா மாதிரி, துணிக்க‌டைல துணி க‌ல‌ர் சூரிய‌ வெளிச்ச‌த்தில‌ பார்க்கிறா மாதிரியெல்லாம் பார்த்தாலும் முடின்னு ஒண்ணு கூட‌ காணோம்.

திருப்ப‌தியாச்சா, அங்க‌ன‌யே அட‌ எஞ்சாமி, உன‌க்கு குடுக்க‌ற‌துக்காவ‌து இவ‌னுக்கு முடிய‌க் குடுப்பான்னு வேண்டிகிட்டு வ‌ந்தோம். ஒரு வ‌ய‌சு வ‌ரைக்கும் ராத்திரில‌ சிணுங்கினா பால் க‌ல‌ந்து நானே குடுக்க‌ற‌து. த‌ங்க‌ம‌ணி தூக்க‌க் க‌ல‌க்க‌த்துல பாட்டிலை தல எங்கன்னு தெரியாம மாத்தி வெச்சிட்டு குடிக்க‌ மாட்ட‌ங்குறான்னு தூங்கிட்டா என்ன‌ ப‌ண்ற‌து.

ஒரு வ‌ய‌சுல‌ திருப்ப‌திக்கு போய் மொட்டை அடிச்சாவணுமே. இவர தூக்கிக்கிட்டு ஒரு ஆளுட்ட போய் நின்னா, குழந்தைய குடுத்துட்டு உக்காருங்கறான். இல்லப்பா இவருக்குதான் அடிக்கணும்னா என்னிய அடிக்க‌ வ‌ரான்,  ந‌க்க‌லாடான்னு.

அப்புற‌ம், கெஞ்சி கூத்தாடி வெறும் மொட்டைய‌ க‌த்தியால‌ வ‌ழிச்சி,இல்லாத முடிய வழிச்சதுக்கு அவருக்கு காசும் குடுத்துட்டு, நீ வழிக்கிற வழிசல்ல அவருக்கு நல்லா வெள்ளாமையாவணும்னு டிப்சும் குடுத்தேன். சாமிகிட்ட போய் இருந்தத குடுத்தாச்சி, இன்னும் முடி வேணும்னா நீதான் குடுக்கணும்னு கும்பிடும் போட்டு வந்தேன். அப்புறம் 3 வயசு வாக்குலதான் மண்டை தெரியாம முடி வந்தது.

இப்போ வ‌ள‌ர்ந்தப்புறம் ஒரு நாள் கேட்டேன். ஏம்பா, இப்புடி மைதானமாயிட்டு வ‌ருதே. ஏதாச்சும் வைத்திய‌ம் பார்க்க‌லாம‌டான்னேன். ஒன்னும் பேசாம, எங்க‌ப்பா ப‌ட‌த்தை ஒரு பார்வை, என் த‌லையை ஒரு பார்வை பார்த்துகிட்டு, த‌ன் த‌லைய‌ த‌ட‌வி ப‌ர‌ம்ப‌ரை சொத்தை கட்டிக்காக்கறதுதான் பேரனுக்கு அழகுன்னு சிரிக்காம‌ சொல்லிட்டு போவுது ப‌ன்னாட‌.
 

நீ சிலையா ஓவியமா?


(படம்: நன்றி யூத்ஃபுல் விகடன்)
யூத்ஃபுல் விகடன் படைப்புகளில் வெளிவந்த என் கவிதை.


ஓராயிரம் முறை நான் எனக்குள் வைத்த பட்டிமன்றத்தில்
தீர்ப்பானது,  நீ ஓவியம்!
உன் உதடெழுதி பிரமனிட்ட கையெழுத்தின்
கடைசிப் புள்ளி உன் கன்னத்தில்.

உன் உதட்டோரம் தொடங்கி காதோரம் போக‌
கண்களால் பயணித்தேன் உன் கன்னச் சாலையில்
கண்டு கொண்ட நீ நாணிப் புன்னகைத்தாய்
கனவாய்த் தோன்றிய கன்னக் குழியில் நான் காணாமல் போனேன்.

அட்சய பாத்திரத்துக்கு
எதிர்ப்பதமா உன் கன்னம்?
எத்தனை முத்தங்களால் நிறைத்தாலும்
அது நிறைவதில்லையே!

அழகு நிலையப் பெண்கள்
அன்றாடம் திட்டுகிறார்கள்..
உன்னைப் போல் அழகாக்க வேண்டுமென‌
உயிரெடுக்கிறார்களாம் வருபவர்கள்.

காவல் துறையும்
கலங்கி நிற்கிறது.
நீ கடந்து செல்கையில்
போக்குவரத்து நெரிசலாம்.

உன் ஊரில் கலியாணத் தரகர்கள்
காணாமல் போனார்கள்!
எல்லோரும் உன்னைப் போல்
பெண் தேடச் சொன்னதால்.

அடிக்கடி நீ உன்
உதடு கடிப்பாய்..
அதனால் சிவப்பது உன் உதடா?
அல்லது ஜொலிப்பதுன் பற்களா?

என்னைப் பித்தனாக்கிய  தத்தையே
நான் கொடுத்த ஒற்றை ரோஜா
இன்னும் அழகாய்த் தெரிகிறது!
நீ ஏற்றுக் கொண்டதால்!

______/\______                                                                                                                            

Tuesday, October 20, 2009

முகூர்த்தம் யதார்த்தம்!

அவன்: வெள்ளிக்கிழமை அப்பாவிடமிருந்து அவசரமாக வரச்சொல்லி தொலை பேசி வந்தது மச்சான். அங்க போனப்புறம் தான் தெரியும். மூணு இடத்தில பெண் பார்க்க போகணுன்னாங்க. ஃபோட்டோ காண்பிச்சாங்க. மூணுமே அழகா இருந்தாங்க. நேர்ல போய் பார்க்கணும். ஏதோ ஒரு இடத்துல முடியணும்னு ஒரே பிடிவாதமா சொல்லிட்டாங்க.

ஒருத்தர் லெக்சரரா ஒர்க் பண்றாங்க. நேர்ல பார்க்க சுமார்தான். ஆனா வசதியான இடம். அடுத்தவங்க பேங்க்ல ஒர்க் பண்றாங்க. ஒரு அக்காக்கு கலியாணமாயிடிச்சி. தம்பி படிக்கிறான். அவங்கப்பா அரசாங்க அதிகாரி. அவ்வளவு வசதி இல்லை. அமைதியா இருப்பாங்க மாதிரி தெரியுது.

மூணாவது ரொம்ப அழகா இருக்காங்க. ஐ.டி.ல ப்ரோஜக்ட் மேனேஜர். கொஞ்சம் வசதி குறைவான குடும்பம். ஒரே பொண்ணு. எனக்கு பிடிச்சிருந்திச்சி. அம்மாக்கு லெக்சரர் பொண்ணு பிடிச்சிருக்கு. அப்பா வங்கி பொண்ணு குடும்பத்துக்கு ஏத்ததுன்னு பிடிவாதம் பண்றாங்க.

எதுனாலும் எனக்கு ஓகே. ஆனா கண்டிப்பா பைக் வேணுன்னு சொல்லிட்டு வந்தேன். சீக்கிரமே முடிவு தெரிஞ்சிடும்டா.மச்சான் நெட் ஓபன் பண்ணுடா. நல்ல பைக் செலக்ட் பண்ணனும்.

அவள்: சனி, ஞாயிறு ரெண்டு நாளும் ரெஸ்டே இல்லைடி. பெண் பார்க்க வந்தாங்க. ஒருத்தர் கொஞ்சம் குள்ளம். பெர்ஸனாலிடி இல்லை. ஆனா நல்ல வேலைல இருக்காங்க. அக்கா அமெரிக்கால இருக்காங்க. அவங்க அம்மா அப்பாவும் மகள் கூட அங்கதான் இருக்காங்க.

அடுத்தவன் இன்கம்டேக்ஸ் ஆஃபீசரா இருக்காங்களாம். ரொம்ப அம்மாஞ்சி டைப் போலடி. கர்னாடிக் ம்யூசிக் பிடிக்குமா. பாடுவியான்னு ஒரே அலப்பறை. ஆளு கொஞ்சம் கலர் கம்மி. இப்போவே தலைல ப்ளாட் போட்டு வெச்சிருக்கு. அம்மாக்கு அவந்தான் சரிவருவான்னு படுதாம்.

மூணாவது ஆள் நல்லா ஸ்மார்டா இருக்காங்க. ரொம்ப ஃப்ரீ டைப். சொந்தமா பிசினஸ் பண்றாங்களாம். குஜராத்ல இருக்காங்க. அவ்ளோ தூரமான்னு அப்பாக்கு யோசனை. ஜ்வல்ஸ் கொஞ்சம் அதிகம் கேக்கறாங்க.

பார்க்கலாம் என்ன டிசைட் பண்ணுவாங்களோ. நான் உங்க இஷ்டம்னு சொல்லிட்டேன். நீ ஃப்ரீன்னா அரை நாள் லீவ் போட்டு வரியாடி. நல்லதா 2 டிசைனர் சூடி வாங்கணும்.

பத்திரிகை: .......ரின் மகனுக்கும் .....ரின் மகளுக்கும் கடவுள் அனுக்கிரகத்தை முன்னிட்டு, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு,  நிகழும்.... கன்னிகாதானம் நடைபெறவிருப்பதால் .........

Monday, October 19, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 3.1

யுத்த களத்தின் வீரத்தை வெளியிடங்களிலும் பேணிக் கொள்ள வேண்டும் : ஜனாதிபதி

ங்கொய்யாலே. வீரமாம்ல. அதுக்கு மத்த 9 நாட்டு எடுபிடி ராணுவத்தலைவனும் கூட நிக்கணும்லே. உங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் வேற. அத வெளியிடத்துல பண்ணா ஜனங்களே அறுத்துடுவானுங்க.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உண்யைமான அறிக்கைகள் எதுவுமில்லை : ரோஹித்த

சத்தியம்டா இது நாயே. நீ மனுசனா நினைச்சிருந்தாதானே. அப்புறம் மீறலு மசிரு எல்லாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊருக்குச் சென்று நிம்மதியாக வாழ்வதே எனது நோக்கம் : கோதபாய ராஜபக்ஷ

எத்தனை பேரு நிம்மதியை குலைச்சிட்டு ஆசையப்பாரு. பைத்தியம் புடிச்சி கல்லடி பட்டே நீ சாவணும் என்பது எல்லாரோட பிரார்த்தனை.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையில் சதிப்புரட்சி நேர்ந்தால் இந்தியா எப்படி நடந்துகொள்ளும்?

இஃகீ இஃகீ. விட்றுவமா. களவாணிப்பசங்க அத்தன பேரும் வந்துருவம்ல மாமு. நீ டோன்ட் ஒர்ரி.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம்; ப.சிதம்பரம்-கருணாநிதி சந்தித்து ஆலோசனை

வெள்ளை நரியும் குள்ள நரியும் ஆலோசனை. கோழிங்க பாடு திண்டாட்டம். நரிங்க பாடு கொண்டாட்டம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெனரல் சரத் பொன்சேகா ஓய்வு பெறத் திட்டம்

உனக்கே வெச்சிட்டாங்களா ஆப்பு. டீலு.ம்ம்ம்ம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யுத்த வெற்றியை பறைசாற்றும் வகையில் நாடெங்கிலும் பௌத்த தூபிகள்

மவனே. புத்தர் இருந்தா இன்னேரம் தீவிரவாதியாயிருப்பாரு. எதையுமே மதிக்க மாட்டீங்களாடா?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சனல் 4 வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது : அமெரிக்க வல்லுநர்கள்

இத வெச்சி சூப்பு காச்ச கூட முடியாது. எவ்வளவு உண்மையெல்லாம் தெரிஞ்சி என்னடா புடுங்கினது?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கைக்கு வர்த்தக சலுகைகள் ரத்து: ஐரோப்பியா

அவந்தான் வேணாம் வெச்சிக்கன்னு சொல்லிட்டான்ல. அப்புறம் ஏன் கிடந்து கூவுறீங்க.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கைக்கு மேலும் ரூ.500 கோடி உதவி: ப.சிதம்பரம்

ரொம்ப அவசரம் இப்போ இது. இதுக்கு பேரு உதவியா? கப்பம் கட்றதுன்னு சொல்லுவாங்கய்யா இதை. உள்துறை அமைச்சரா உள்குத்துத் துறையா?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தங்கச்சி மடம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

அவன் மெரினால வந்து அடிச்சா கூட சிதம்பரம் இல்லைம்பாரு. வேலயப் பாருங்கப்பு.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழக எம்பிக்களிடம் புகார் கூறிய தமிழர்கள் கடத்தப்பட்டதாக கூறுவது பொய்: ப.சி.

சண்டை நிறுத்தம்னு அப்பட்டமா நிஜம் சொன்னவரு. இதையும் நம்பீட்டோம். ஆமா. இதையேன் இவரு சொல்றாரு?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மின்வெட்டு அதிகரிக்கும் என அஞ்ச வேண்டாம்: மின்வாரியம்

அஞ்சினா மட்டும்? அதெல்லாம் பயப்பட மாட்டம்டி. டார்ச் வெச்சிகிட்டு போய்ட்டு வந்துட்டுதான் இருப்போம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகத்தமிழ்மாநாடு:அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு

ஒன்னு ரெண்டு தமிழன பார்க்க மட்டும் நாங்க மட்டும் போய்க்குவோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு:கலைஞர் உத்தரவு

இலங்கை தவிரன்னு மறக்காம போடுங்கையா. அப்புறம் பக்ஸே ஒரு போன் போட்டா சொக்கு சொக்குன்னு சாவணும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரசியலில் குதிக்கிறார், நடிகை மனீஷா கொய்ராலா

இறங்கினா போறாதோ?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்களை காப்பாற்றுவதற்காக சேலை கட்டுவதில்லை: நமீதா

கடவுளே! உனக்கேன் இந்தக் கொலை வெறி. எவனுக்காவது உறைக்குமா?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நயன்தாரா மீது நமீதா கடும் தாக்கு

ஏன் சேலை கட்டுதுன்னா? அடங்குதுங்களா பாரு.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Sunday, October 18, 2009

ரங்கமணின்னா ஈஸி இல்ல தெரியுமா..

நேற்றைய பண்டா இடுகையில் அந்தாளு ஏதோ கேக்கப் போக நம்ம லகலக கம்பேனி சீக்ரட்ட வெளிய சொல்லிருச்சி. எம் போறாத காலம், சொக்காய் கவிதை போட்டு பல பேர சொக்காய கிழிச்சிகிட்டு ஓடவிட்ட லொல்லின் மொத்த குத்தகைதாரர் வசந்த் கூட சேர்ந்துட்டாரு. நான் இல்லாம போய்ட்டனேன்னு இராகவன் அய்யா வருத்தப் படுற அளவுக்கு கும்மி.

சரி. நம்ம அவஸ்தைய பார்க்கறதில இவ்வளவு பேருக்கு சந்தோசம் கிடைக்கிறதுன்னா அத தடுக்க நாம யாரு? ஆனா ஒரு கண்டிசனு. யாரும் போட்டுக் குடுத்துறாதிய. ஏன் இப்புடி அலர்ரேன்னு இப்பவே சொறிய வேணாம். போக போகத் தெரியும்.

வேலைக்கு சேர்ந்த புதிசில இன்னைக்கு ஒரு ரூ கொடுத்தா போக வர 60 காசு பஸ் டிக்கட் போக அடுத்த நாள் 20 காசு வாங்கிகிட்டு ஆஃபீஸ் போய்ட்டு வந்தவன். அப்புறம், அம்மா ஏண்டா சீசன் வாங்கினா இன்னும் கம்மியாமேன்னு மாச சீசன் 20ரூன்னு வாங்கினது.

எம்.ஜி.ஆர். நடிச்ச நேற்று இன்று நாளை சினிமா பார்க்க போய் ஆளு தெரியாம போலீஸ் காரன் பூந்துட்டேன்னு விட்ட அறைல நொந்து நூலாகி (அப்போல்லாம் நூடில்ஸ்னு ஒன்னு இருக்கிறதே தெரியாது) அழுதுகிட்டே படம் பார்த்து, இனிமே படமே பார்க்கறதில்லைன்னு வைராக்கியமா 6 வருசம் இருந்த பய புள்ள.

காபி டீ குடிக்க, ஆஃபீஸ்ல லேட்டா வெலைன்னா டிஃபன் சாப்பிடன்னு கைக்காசுன்னு ஒரு பத்து ரூபா அம்மா குடுக்க ஆரம்பிச்சது. கணக்கு சொல்லிட்டு மிச்சம் வாங்கிக்கலாம். ஆக கைல மொத்தமா பத்து ரூபா நிக்கும். மெதுவா ஆங்கிலப் படம் பார்க்க ஆரம்பிச்சி, ஆஃபீஸ் பக்கத்துல மினர்வா தியேட்டர் வாகா அமைஞ்சு போச்சு.

11.15 க்கு மெதுவா செக்ஷன் ஆஃபீஸர் கிட்ட சார் பாரீஸ் கார்னர் போய்ட்டு வந்துடறேன்னு சொல்லிட்டு பஸ் புடிச்சி அங்க போனா 11.45 கு  டிக்கட் குடுப்பாங்க. 12க்கு  படம் போடுவாங்க. விளம்பரம்லாம் போடமாட்டாங்க. சரியா 1.30கு முடிஞ்சிடும். சத்தம் போடாம வந்து சாப்பிட்டு வேல பார்க்குறது.

எப்புடியோ செலவுன்னு ஆரம்பிச்சி, ஒரு கட்டத்துல அகவிலைப்படி அரியர்சு, சம்பளத்துல சொச்சப் பணம் (சொச்சம்னா என்னாமோ கற்பனை வேணாம், 219 ரூபாய்ன்னா 210 ரூ கறாரா குடுத்துடணும்)னு தேத்தி தேவி தியேட்டரு, சஃபையர்னு போக ஆரம்பிச்சி வாழ்க்கை வளமா போய்க்கிட்டிருந்தது ஒரு ரெண்டு மூணு வருசம்.

அதே அலுவலகத்தில வேலை செய்யிறவங்க தங்கமணியா வாய்ச்சது ஆரம்பத்துல நல்லாத்தான் இருந்திச்சி. இந்த சினிமா சமாசாரம்லாம் ஓரங்கட்டியாச்சி. அப்புடியே இருந்துட முடியுமா? நாள் கடக்க, ஒரு நாள் நண்பர்களெல்லாம் குற்றாலம் போறதா முடிவு பண்ணாங்க. நானும் ஒரு ஊக்கமா சரின்னுட்டேன். வீட்டில வந்து குற்றாலம் போறோம்னு சொன்னதுதான். ஏன் நாங்க வந்தா குற்றாலத்துல சேர்க்க மாட்டாங்களான்னு ஆரம்பிச்சது.

நாம எல்லாருமா தனியா போனாலும் குற்றாலம் குற்றாலம் தானேன்னு பிட்ட போட்டு, அம்மா, வெண்ணெய் எல்லாரையும், சேர்த்து கூட்டணி அமைச்சு ஆப்பு வெச்சாச்சி. அடுத்த நாள் போய் நான் வரலைடான்னா, அவனவன் ரொம்ப நக்கலா, நாங்க குற்றாலம் போறோன்னா சொல்லிட்டு வரோம். ஃப்ரென்டு கலியாணத்துக்குன்னு சொல்லிட்டு வரோம்னு சொன்னப்பதான் ஆகா, இந்த வாய்ப்பு போச்சேன்னு திகிலடிச்சது.

அவனவனும், போர் அடிக்குதுடா, சினிமா போலாம்னு கிளம்புவாய்ங்க. நான் போய்ட்டு வாங்கடான்னு ஙே நு நிப்பேன். வேற என்ன பண்ண டி.வி.எஸ். 50 ல ஒன்னா ஆஃபீஸ் வந்துட்டு நான் சினிமா போறேன். நீ பஸ்ல போய்க்கன்னா சோத்துக்கு எங்க போறது?

எப்புடியோ ஆண்டவன் புண்ணியத்துல ஒரே ஆஃபீஸ்னாலும் ஆஃபீஸ் விஷயமாவது சம்பந்தமில்லாம போய்க்கிட்டிருந்தது. ஒரே ஒரு விஷயம் தவிர. பி.எஃப். செக்ஷன்ல இருந்தாங்க அவங்க. அதனால சத்தம் போடாம காசு எடுக்க முடியாது. போறாத காலம் வந்து, எனக்கு ப்ரொமோஷன் வர  தங்கமணிக்கு வேற செக்ஷனுக்கு ட்ரேன்ஸ்ஃபர் வந்துச்சு.

மனுசனுக்கு கட்டம் சரியில்லைன்னா எப்படியெல்லாம் அமையுது பாருங்க. சரியா, நம்ம சம்பளக் கணக்கு, லீவ் கணக்கு எல்லாம் அவங்க கைல சிக்கிரிச்சி.  சரி, நாம என்ன பண்றோம். பொறந்த பொறப்புக்கு வேலைக்கு போய்ட்டு வரது கடமை. முன்ன மாதிரி சம்பளம் கைல குடுக்கறதும் போய் பேங்க்னு ஆகிப்போச்சு. சொச்சதுட்டுக்கும் வழியில்லைன்னு மனச தேத்திகிட்டு இருந்தேன்.

கடவுளுக்கு என் மேல என்ன கோவமோ? அவுங்க செக்ஷனுக்கே அதிகாரியா அனுப்பி விட்டான். கதறாத குறையா கெஞ்சுனேன், வேணாம்யான்னு. ஒரே செக்ஷன்ல இருக்கப்படாதுய்யான்னு சொன்னா 24 மணி நேரமும் கைதியா இருன்னு சிரிச்சிகிட்டே கையெழுத்து போட்டுட்டான் பாஸ்.

போன வருசங்க. இன்கம் டேக்ஸ் ஒரு 13 ரூ கம்மியா புடிச்சிட்டான். விடுங்கம்மா. 100 ரூ வரைக்கும் வித்தியாசமிருக்கலாம்னா, அதெப்புடி ஊட்டுக்காரன்னு கம்மியா புடிச்சியான்னு எனக்கு ஓலை வரும்னு 10 இடத்துல கரெக்ஷன் பண்ணி, கையெழுத்து போடுன்னு குடுத்தாங்க பாருங்க டார்ச்சரு.  எங்க போய் சொல்ல?

சம்பள பில்லு நேரமா இருக்கும். ஏதோ வேலை, இல்லாட்டி பொண்ணுக்கு உடம்பு சரியில்லைன்னா அப்பாவியா, நான் என்ன பண்ண? நீங்க லீவ் போடுறீங்களா?  எனக்கு பில் இருக்குன்னா சரின்னு சொல்லவா? உனக்கு உன் பில் மட்டும்தான், நான் மத்தவங்க பில்லெல்லாம் பார்க்கணுமே. நீ லீவ் எடுமா, நானே உன் பில் போடுறேன்னு பண்ணனும். அவ்வ்வ்.

இதெல்லாமாவது பரவாயில்லைங்க மக்கா. பாலியல் வன்முறைச்சட்டம்னு ஒன்னு இருக்கு. படுபாவி சட்டம்னு போட்டானே தவிர எது எதுல்லம் வன்முறைல வரும்னு சொல்லாம விட்டான். எப்போ பார்த்தாலும் என்ன திட்டுறான்னு ஒரு கம்ப்ளெயின்ட் போனா போதும்.  இந்த ஒரு பொம்பள தவிர இன்னும் 2 பொம்பளைங்க விசாரணை அதிகாரியா உக்காந்துடுவாங்க. மீள முடியுமா? அவுங்க வூட்டுகாரன் மேல இருகிற கடுப்பெல்லாம் சேர்த்து வெச்சி நம்மள ரேகிங்க் பண்ண மாட்டாங்களா?

கேனத்தனமா எதாவது எழுதி வெச்சாலோ, என்ன இதுன்னு கேக்க கூட கூப்ட மாட்டனே! கடுப்புல, என்னாடி வேல பார்க்குறன்னு கேட்டு தொலைஞ்சா, திட்டீட்டான்னு ஒரு வரி எழுதி குடுத்தா போதும். 4 சிட்டிங்ல மனுசன நாறடிச்சி அப்புறம், சரி சரி தொலையுறான், கம்ப்ளெயின்ட் வித்ட்ரா பண்றேன்னு சொன்னா போதாது?

ஒரு நாள் தயிர் சாதம் கட்டிட்டு ஊறுகா வைக்கலயேம்மான்னு கேட்டேன் ஆஃபீஸ்ல. இந்த ஃபைல் அர்ஜண்டா கேக்கறாங்க. கையெழுத்து போடுறீங்களான்னாங்க. அஃபிஷியலா பேசறாங்களாமா! இன்னோரு நாள், ஃபைல்ல காண்பிச்சி, இந்த ரூல் கிளியராதானே இருக்கு. நீங்க என்னா எழுதியிருக்கிங்கங்கறேன், சாரி, வெறும் ரசம் வெச்சிருக்கேன். புடலங்கா கூட்டு உங்களுக்குப் பிடிக்காதில்லை. சைட் டிஷ் ஏதாவது வாங்கிக்கோங்கன்னு போறாங்க.  லஞ்ச் டைம் ஆயிடுச்சாம்.

நீ அப்புடி வரியான்னு, வீட்ல வந்து என்னாம்மா பண்ண, அவ்ளோ புரியாம போக அதில என்ன இருக்குன்னு ஆரம்பிக்கவே, ஆஃபீஸ் வேலைய வீட்டுக்கு கொண்டு வராதீங்கன்னு அட்வைசு! இவ்வளவு சோகத்த சுமந்துகிட்டு பெக்கு போடாம ப்ளாக் போடுறான் ஒருத்தன். பாராட்டாம மிறட்ராய்ங்க வசந்து. அவ்வ்வ்வ்..

Saturday, October 17, 2009

பாண்டா Vs பில் கேட்ஸ்

(பொறுப்பி: மின்னஞ்சலில் வந்தது தான். ஆனா கூட நம்ம பங்குக்கு நாலஞ்சு பிட்டு சேர்த்து போட்டிருக்கோம்ல. ஹி ஹி!)


டியர் Mr. பில் கேட்ஸ்,

எங்கள் இல்லத்திற்கு ஒரு கணினி வாங்கினோம். அதில் காணப்படும் சில குறைபாடுகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்

1.கணினியில் ஸ்டார்ட் பட்டன் மட்டும் இருக்கிறது, ஸ்டாப் பட்டன் இல்லை. இதை உடனடியாக கவனிக்கவும்.

2.சிஸ்டத்தில் ரீ ஸ்கூட்டர் கிடையாதா? ரி சைகிள் மட்டும் தானே இருக்கிறது. என்னிடம் ஸ்கூட்டர் உள்ளதே?

3. கணினியில் காணப்படும் ‘தேடு’ சரியாக வேலை செய்வதில்லை. ஏனெனில் என் மனைவி வீட்டுச் சாவியை தொலைத்த போது இதன் மூலம் கண்டு பிடிக்க முயன்றோம். ஆனால் கிடைக்கவில்லை. இந்தக் குறையை நிவர்த்தி செய்யுங்கள்.

4. என் குழந்தை ‘மைக்ரோ சாஃப்ட் வோர்ட்’ கற்று விட்டான். இப்போது ‘மைக்ரோசாஃப்ட் செண்டன்ஸ்’ படிக்க விரும்புகிறான். எப்பொழுது கிடைக்கும்?

5. நான் ஒரு கணினி, CPU,மவுஸ், கீ போர்ட் எல்லாம் வாங்கினேன். ஆனால் கணினியில் ‘மை கம்ப்யூட்டர்’ மட்டும் காட்டுகிறது. மற்றவை எப்பொழுது தெரியும்?

6. விண்டோஸ் ‘மை பிக்சர்ஸ்’ என்று கூறினாலும், என்னுடைய படம் ஒன்று கூட இல்லையே? எப்பொழுது என்னுடைய படத்தை அங்கு வைப்பீர்கள்?

7. ‘மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ்’ மட்டும் கிடைக்கிறது. நான் என் கணினியை வீட்டில் மட்டும் உபயோகிப்பதால் ‘மைக்ரோசாஃப்ட் ஹோம்’ எப்பொழுது கிடைக்கும்.

8. ‘மை ரீசண்ட் டாக்குமெண்ட்’ மட்டும் வைத்திருக்கிறீர்கள். எப்பொழுது ’மை பாஸ்ட் டாக்குமெண்ட்’ கிடைக்கும்?

9. ‘மை நெட்வர்க் ப்ளேசஸ்’ கொடுத்திருக்கிறீர்கள். தயவு செய்து ‘மை சீக்ரெட் ப்ளேசஸ்’ வைத்து விடாதீர்கள். நான் அலுவலகம் முடிந்து எங்கு செல்கிறேன் என்பது என் மனைவிக்கு தெரிய வேண்டாம்.

10. ‘நம்பர் லாக்’ ‘கேப்ஸ் லாக்’ , ‘ஸ்க்ரால் லாக்’ என்று இருக்கிறது. சாவியே கொடுக்க வில்லை. அதே போல் விண்டோஸ் சி.டி.யில் கீ மட்டும் இருக்கிறது. லாக் தரவில்லை. உடனடியாக அனுப்பித் தரவும்.

11. ‘ஷிஃப்ட்’ என்று பட்டன் இரண்டு இருக்கிறதே தவிர எது காலை எது மாலை என்பது இல்லை. குழப்பமாக இருக்கிறது.

12. மூன்று ‘எண்டர்’ பட்டன் இருக்கிறது கீ போர்டில். ஒன்று கூட ‘எக்ஸிட்’ என்று இல்லையே எப்படி?

13. மவுசில் ‘சக்கரம்’ மேல் பக்கம் இருக்கிறது. முன்பிருந்தது போல் கீழ் பக்கம் வைக்கச் சொல்லவும்.

14. ஒரு பட்டனில் ’ப்ரேக்’ என்றிருக்கிறதே. அதை அழுத்தினால் நின்று விடுமா? உடைந்து விடுமா?

15. விண்டோஸ் 7 வரப்போகுதாமே. கூட 6 மானிட்டர் வாங்கினால் போதுமா? என் வீட்டில் 4 பேர் தான் இருக்கிறோம். விண்டோஸ் 4 கிடைக்குமா?

16. கடன்காரன் வரும்போதெல்லாம் எஸ்கேப் பட்டன் அழுத்தினால் விண்டோதான் எஸ்கேப் ஆகிறது. நான் எஸ்கேப் ஆகும் வழி சொல்வதில்லை. ஏன்?

அன்புடன்
பண்டா

பி.கு. கடைசியாக ஒரு கேள்வி. நீங்கள் எப்படி கேட் என்று பெயர் வைத்துக் கொண்டு விண்டோஸ் விற்பனை செய்கிறீர்கள்?

நாங்களே மேல் போங்கடே!

ஐந்தறிவுப் பாசம்..




இனமில்லை! மதமில்லை!
இதயமுண்டு! அதில் இறையுண்டு!
ஆடை வேண்டாம். மானம் வேண்டாம்
மனம் போதும்! மனம் போதும்!


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆறறிவு மோசம்.



இனமழித்த அரக்கனுக்கு
இனமளிக்கும் பாராட்டு!
இதயமற்ற இவர்களுக்கு
இதுவும் ஒரு விளையாட்டு!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
____/\____

Friday, October 16, 2009

காய்த்த மரத்தில் கல்லடி!

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். கடந்த வாரத்தில் ஒரு நாள் அனைவருக்கும் நெருக்கமாகவும் இரண்டு தினங்களாக வெறுப்போடும் சித்தரிக்கப்படும் ஒருவர். சில பல பத்திரிகைகள், இடுகைகள், பின்னூட்டங்களில் படித்தபோது நியாயமோ இல்லையோ ஒரு சின்ன ஆதங்கத்தின் வெளிப்பாடு பகிர்ந்து பகிர்ந்து, இந்தியனா, தமிழனா என்பதையும் தாண்டி ஜாதி வரை போய்விட்டது வருந்தக்கூடிய விடயம்.

இதில் கூட‌ பார‌ப‌ட்ச‌ம‌ற்ற‌ த‌ன்மையைக் காண முடிய‌வில்லை.மூன்று வ‌ய‌திலேயே நான் குஜ‌ராத் சென்றுவிட்டேன். பின்னெப்ப‌டி கோவிந்த‌ராஜ‌ன் போன்றோர் நான் அண்ணாம‌லைப் ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌த்தில் ப‌டித்தேன் என‌க் கூற‌முடியும் என்ற‌ அவ‌ரின் வ‌ருத்த‌ம் எவ‌ராலும் க‌ண்டுக் கொள்ள‌ப் ப‌ட‌வேயில்லை. அண்ணாம‌லைப் ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌ம் இது குறித்து ம‌றுத்தோ ஆமோதித்தோ அறிக்கை விட்ட‌தாக‌ நான் எங்கும் பார்க்க‌வில்லை.

இத்துணை வெறுப்புக்கு கார‌ண‌ம், திரு வெங்க‌ட்ராம‌ன், தன்னைப் பாராட்டி வ‌ரும் மின்ன‌ஞ்ச‌ல்க‌ள் குறித்துக் கூறிய க‌ருத்தும், த‌ன‌க்கு மிக‌ப் பிடித்த‌மான‌ ப‌ணிபுரியும் சூழ‌ல் உள்ள‌ ஆக்ஸ்ஃபோர்ட் ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌த்தைத் த‌விர்த்த‌ வேறோர் இட‌த்தை த‌ன்னால் க‌ற்ப‌னை செய்து கூட‌ பார்க்க‌ முடியாது என‌க் கூறியதும்தான். பார்க்க‌ப் போனால் இது குறித்து நாம் க‌ருத்துக் கூறுவ‌து கூட‌ அவ‌ர‌து த‌னிமையில் நாம் செய்யும் அத்துமீற‌ல் என‌க் க‌ருதுகிறேன்.

உதார‌ண‌த்துக்கு பதிவுலகை எடுத்துக் கொள்ளுங்க‌ள். தின‌மும் சில‌ நூறு பேர்க‌ளாவ‌து வ‌ருகிறார்க‌ள். ஒன்றோ இர‌ண்டோ இடுகைக‌ள் ப‌டிக்கிறார்க‌ள். அது ஒரு நாளோ, அல்ல‌து சில‌ நாட்க‌ளோ, அத்த‌னை பேரும் பாராட்டியோ எதிர்த்தோ பின்னூட்ட‌ம், மின்ன‌ஞ்ச‌ல் என‌ க‌ருத்துத் தெரிவிப்பார்க‌ளானால், அத்த‌னையையும் ப‌டிக்க‌வில்லை, ப‌தில‌ளிக்க‌வில்லை. என‌வே அவருக்கு த‌லைக்க‌ன‌ம் என்ற‌ தீர்மான‌த்துக்கு வ‌ருவோமேயானால் அது எவ்வ‌ள‌வு த‌வ‌று.

உங்க‌ள் குழ‌ந்தை மாநில‌த்தில் ப்ள‌ஸ் டூவில் முத‌லாவ‌தாக‌ வ‌ந்திருக்கிற‌து என‌ வைத்துக் கொள்ளுவோம். முத‌லில் எங்க‌ள் ப‌ள்ளி என‌ ஆர‌ம்பித்து, எங்க‌ள் வீதி, எங்க‌ள் ஊர், எங்க‌ள் அலுவ‌ல‌க‌ ந‌ண்ப‌ரின் குழ‌ந்தை என‌ அனைவ‌ரும் பாராட்டியே தீருவேன் என‌ உங்க‌ள் வீட்டில் வ‌ந்து அடைகிறார்க‌ள். ஒரு புற‌ம் நிருப‌ர்க‌ள். இவையெல்லாம் தாண்டி ஒரு தொலைபேசி அழைப்பு வ‌ருகிற‌து. உங்க‌ள் பெற்றோர் செய்தி கேட்டு வ‌ந்திருக்கிறார்க‌ள். உள்ளே வ‌ர‌ முடியாம‌ல் அவ்வ‌ள‌வு நெரிச‌ல்.

என்ன‌ செய்வீர்கள்? எல்லாரும் போன‌ பிற‌கு வாருங்க‌ள் என்பீர்க‌ளா? கொஞ்ச‌ம் வ‌ழி விடுங்க‌ள் என் பெற்றோர் வ‌ந்திருக்கிறார்க‌ள் என‌க் கேட்க‌லாம். ச‌ரியென்று வ‌ழிவிட்டால் ப‌ர‌வாயில்லை. நாங்க‌ளும் பாராட்ட‌த்தானே வ‌ந்தோம் என்றால் உங்க‌ள் எதிர்வினை எப்ப‌டி இருக்கும்? ஒரு க‌ட்ட‌த்தில் இனி முடியாது, நாளை பார்க்க‌லாம் என‌க் க‌த‌வ‌டைத்தால் அத‌ன் பெய‌ர் திமிரா?

நேற்று க‌திரின் இடுகையில் அவ‌ர் தாத்தா கேட்ட‌து போல் (அவ‌ருக்கு உரிமை இருந்தாலும்) கதிர் விவ‌சாய‌ம் செய்ய‌ப் போவதில்லை என‌ ஒரு நிலைப்பாடு எடுப்பாரேயானால் அது குறித்த‌ விம‌ரிச‌ன‌ம் செய்ய‌ யாருக்கு உரிமை இருக்கிற‌து? அத‌னால் அவ‌ர்க‌ள் ஊரில் விவ‌சாயிக‌ள் சேர்ந்து க‌ண்ட‌ன‌ம் தெரிவிப்பார்க‌ளேயானால் என்ன‌ நியாய‌ம் இருக்கிற‌து?

இதில் ந‌ம் த‌வ‌று எதுவுமே இல்லையா? ஒரு க‌டையில் துணி எடுக்க‌ப் போகிறோம். ப‌ண‌ம் செலுத்துகையில் ஒரு ப‌டிவ‌த்தை நீட்டுகிறான். உங்க‌ள் குடும்ப‌ விப‌ர‌ம், முக‌வ‌ரி, கைபேசி எண், அலுவ‌ல‌க‌ முக‌வ‌ரி, மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரி, அனைவ‌ர‌து பிற‌ந்த‌ நாள் த‌க‌வ‌ல் அத்த‌னையும் கேட்டிருக்கிற‌து அதில். வாய் பேசாம‌ல்   ச‌ந்தோச‌மாக‌ நிர‌ப்புவோம்.

ஒரு சில‌ர் எத‌ற்கு இது என‌க் கேட்டால் ஒரு கார்ட் த‌ருவோம். நீங்க‌ ள் வாங்கும்போதெல்லாம் 1 ச‌த‌வீத‌ம் த‌ள்ளுப‌டி என்றால் போதும். ம‌று பேச்சே இல்லாம‌ல் நிர‌ப்புவோம். ஆனால், க‌ட‌ன் அட்டை எண் உட்ப‌ட‌ ந‌ம் சொந்த‌த் த‌க‌வ‌ல் அத்த‌னையும் யாரோ ஒருவ‌னிட‌ம் என்பதை உணருவதில்லை.

தெரியாத‌ ஒருவ‌ன் ந‌ம் வீட்டு முக‌வ‌ரி கேட்டால் த‌ருவோமா? ஆனால், ப‌ஸ்ஸிலோ ர‌யிலிலோ மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரி, கைபேசி எண் எதுவானாலும் க‌வ‌லையே இன்றி சொல்லுவோம். வீட்டு முக‌வ‌ரி மாதிரி இதுவும் மிக‌த் தேவைப்ப‌ட்டால் ம‌ட்டுமே, தேவைப்ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமேயான‌து என்ப‌தை ஏன் நாம் உண‌ருவ‌தில்லை? என‌க்கு ஒரு முக‌வ‌ரி தெரியுமென்ப‌தாலேயே மின்ன‌ஞ்ச‌ல் செய்துவிட்டு அந்த‌ ஆள் எத‌ற்காக‌ என‌க்கு மின்ன‌ஞ்ச‌ல் செய்தீர்க‌ள் என‌க் கேட்பாரேயானால் கோபிப்ப‌து நியாய‌மா?

ராஜீவ் காந்தி காலத்தில் அயல்நாட்டில் பணி புரியும் விஞ்ஞானிகள் தாய்நாடு திரும்ப வேண்டும். எல்லா வசதிகளும் தரப்படும் என்பதை நம்பி வந்து,  விட்டால் போதும் என ஓடியவர்கள் எத்தனை பேர்?

நம் வீட்டுப் பிள்ளையை எங்கோ தொலைத்து விட்டோம். யாரோ ஒருவர் எடுத்து வளர்த்து படிக்க வைத்து எல்லா வசதியும் செய்து கொடுத்து அந்தப் பிள்ளை ஒரு சாதனை செய்கையில் அதுவரை கவலையே படாத, அல்லது காணோம் என நினைத்து அழுதது தவிர வேறெதுவும் செய்யாத நாம், இப்போது போய் என் பிள்ளை நீ, எங்களோடு தான் இருக்க வேண்டும், மாட்டேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது என்பது நியாயமா?

அமெரிக்கக் குடிமகனான வெங்கட்ராமன் இங்கிலாந்தில் பணி புரிந்து இந்த சாதனை செய்ததற்கு அமெரிக்கர்கள் வேண்டுமானால் குறைபட்டுக் கொள்ளலாம். நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

இது குறித்து வெங்கட்ராமனின் விரிவான விளக்கம். இப்போது என்ன சொல்லப் போகிறோம்? வழக்கம்போல தலைகுனிய வேண்டியதுதான்.

Thursday, October 15, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 3.0



ஒன்னொன்னு மூஞ்சிலயும் பாரு எவ்வளவு சோகம். பரதேசிங்க. இழவு வீட்ல கலியாணம் பேச போனா மாதிரி இருக்கு.


வரது மழைக்காலமாம். ஒரே சேறா இருக்குமாமே. சேத்துக் கால்வாய் திட்டம்னு அண்ணண்ட சொல்லி அதுக்கு என்ன மந்திரியா போடுங்கப்பா. கை அரிக்குது.



உங்கள எல்லாம் பார்த்தப்புறம் நான் என்ன வேணா பண்ணலாம், ஒருத்தனும் ஒன்னும் கேக்க முடியாதுன்னு பூரிச்சி போவுது. 



அதே மூஞ்சிங்க! என்னாமா சீன் போடுதுங்க எழவுக்கு போய்ட்டு வந்தா மாதிரி!

கலைஞர்: அவனுக்கு போத்துனா மாதிரி ஒரு நாளாவது சிரிச்சிகிட்டு எனக்கு போர்த்துனீங்களா? சரி சரி. இலங்கைக்கு தூதனுப்பிய இனமானக் காவலர் விருதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. டேன்ஸ் முக்கியம்.



மக்களுக்கு குடிநீர் இல்லை; மாற்று ஆடைகூட இல்லாமல் ஒரே ஆடையில் பல நாட்களாக இருப்பதைக் கண்டோம்: இந்திய தூதுக்குழு முதல்வரிடம் அறிக்கை

பாருங்க. செட்டப்புலயே இவ்வளவு தெரியுதே. இன்னும் மிச்சமிருக்கிறது எவ்வளவு இருக்கும்..
____________________________________________________________________________________________
பிரபாகரன் மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு தள்ளிவைப்பு: இறப்பு சான்றிதழ் கிடைத்தவுடன் 17 ஆண்டு விசாரணை முடிவுக்கு வரும்

மாவீரர் நாள்ள வருவாருன்னு நெடுமாறன் ஐயா சொன்னாரே. அதானா? ஜனங்கள ஏமாத்தலாம். கோர்ட்ட கூமாங்குன்னு நினைச்சா குவாட்டரோச்சி கேசும் திரும்ப தொறக்க வேண்டி வருமேன்னு உசாராய்ட்டாங்க போல.
____________________________________________________________________________________________

ஊழல் மோசடிகளை இல்லாதொழித்தன் மூலமே யுத்த வெற்றி ஈட்டப்பட்டது: சரத் பொன்சேகா

ஆமாம். டைர‌க்ட் டீலிங்ல‌ ஊழ‌ல் எப்புடி வ‌ரும். அப்ப‌டின்னா நீ புடிங்கின‌தால‌ன்னு ப‌த‌வி உய‌ர்வெல்லாம் எதுக்கு குடுத்தானுவ‌?
____________________________________________________________________________________________

இடம்பெயர்ந்துள்ள மக்களின் மன்றாட்டத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தோம்: முகாம்களின் நிலைமை திருப்திகரமாக இல்லை: திருமா

தெரியாம‌தான் கேக்குறேன். அவ‌ங்க‌ளுக்கு திருப்திக‌ர‌மா இல்லையான்னு முடிவு செய்ய‌ நீங்க‌ யாரு?
____________________________________________________________________________________________

இரண்டரை லட்சம் மக்களில் 58 ஆயிரம் பேர் 15 நாட்களில் மீள்குடியேற்றப்படுவர்: மு. கருணாநிதி

ஹ‌ய்ய்ய்ய்யோ. ஹ‌ய்ய்ய்ய்யோ. இதெல்லாம் ந‌ம்ப‌ப்போறாங்க‌ளான்னு கூசாம‌ எப்பிடி ஐய்யா பேசுறீங்க‌.
____________________________________________________________________________________________

விடுதலைப் புலிகள் என 11,000 பேர் இனங்காணப்பட்டமையின் சுயாதீனத்தன்மை தொடர்பாக கேள்வி எழுப்புகின்றது பிரித்தானியா

கேளுங்க‌ கேளுங்க‌ கேட்டுகிட்டே இருங்க‌. துட்ட‌ குடுக்குற‌வ‌ன் கேட்ட‌ கேள்விக்கே ப‌தில் சொல்லாம‌ போயாங்குறான். இவ‌ருக்கு ப‌தில் சொல்லிட்டுதான் ம‌று வேலை.
____________________________________________________________________________________________

இலங்கை தமிழர்கள் அவதிப்பட வேண்டும் என்றே ஜெயலலிதா விரும்புகிறார்: கலைஞர்

அவ‌ங்க‌ என்ன‌ விரும்புறாங்க‌ன்னு அவ‌ங்க‌ சொல்லுவாங்க‌. நீங்க‌ என்ன‌ விரும்பினீங்க‌ன்னு சொல்லுங்க‌ய்யா.
____________________________________________________________________________________________

ராஜபக்சேவின் நகைச்சுவை: திருமாவளவன்



சிரிச்சிகிட்டே செருப்பால அடிப்பேன்னா நகைச்சுவையா. உங்க முகத்தப் பார்த்தா கிலியடிச்சி போய் இருக்கே.
____________________________________________________________________________________________

முகாம்களில் இருந்து 58 ஆயிரம் பேர் வெளியேற்றம்: எங்களுடைய பயணத்தால் கிடைத்த வெற்றி: திருமா

ஏங்க‌? நீங்க‌ அப்பாவியா? இல்ல‌ அட‌ப்பாவியா?
____________________________________________________________________________________________

இலங்கை முகாம்களில் தமிழர்கள் குறைபாட்டோடு தான் இருக்கிறார்கள்: கலைஞர்

ஆமாங்க. எல்லாம் கிடைக்குதாம். நல்லா இருக்காங்களாம். இலவச தொலைக்காட்சி பெட்டில கலைஞர் டிவி பார்க்கமுடியாதது தான் பெரும் குறையாமுங்க.
____________________________________________________________________________________________

ராஜபக்சே அழைப்பை ஏற்று இலங்கை செல்லாதது ஏன்?: ஜெயலலிதாவுக்கு தங்கபாலு கேள்வி

நிஜம்மா சொல்லுங்க டங்குவாலு. நல்லகாலம் நான் ஜெயிக்கல. இல்லன்னா நீயேன் போகலன்னு டரியலாக்கி இருப்பாங்கன்னு குசியாதானே இப்புடி கேக்குறீங்க?
____________________________________________________________________________________________

தீபாவளி: டாஸ்மாக் கடைகளில் அதிக சரக்குகள்

அது முக்கியம். கட்டிங் வரவேணாமா?
____________________________________________________________________________________________

மைசூர் மகாராஜா வழங்கிய ஒட்டியாணத்தை புரட்டிப் பார்த்த ஜெயலலிதா: கலைஞர்

இதென்னாங்க அனியாயம். ரெண்டுபேரும் ஒரே மாதிரியாச்சா. பெல்டக் குடுத்துட்டாரோன்னு பார்த்திருப்பாங்க.
____________________________________________________________________________________________

தமிழக மக்களுக்கு உழைக்க என்னை வழங்கியிருப்பதே என் பெற்றோர் செய்த தியாகம்: கலைஞர்

அப்படின்னா எது நாங்க செய்த பாவம்?
____________________________________________________________________________________________


Wednesday, October 14, 2009

பெற்றால் மட்டும் பிள்ளையா?

தத்தெடுப்பது குறித்த எனது போன இடுகையில் இது சம்பந்தமான சட்ட விதிகளைப் படித்த போது ஒரு வார்த்தை மிகவும் உறுத்தியது. அந்த விதிமுறைகள் வகுக்கப்பட்ட காலக் கட்டத்தில் வேண்டுமானால் அந்த வார்த்தை சட்டப்படி சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைக்கான அர்த்தமோ, அதன் வலியோ உணரப்படவில்லை எனக் கருதுகிறேன். அந்த வார்த்தை 'சட்டத்திற்குப் புறம்பாக' பிறந்த குழந்தை என்பதாகும் (Illegitimate child).

அப்ப‌டியானால் ச‌ட்ட‌ப்ப‌டி பிற‌ந்த‌ குழ‌ந்தைக‌ள் யார் என‌ப் பார்த்தால் திரும‌ண‌மான‌ ஒரு த‌ம்ப‌திய‌ருக்குப் பிற‌ந்த‌ குழ‌ந்தை அவ்வாறு அழைக்க‌ப் ப‌டுகிற‌து. பிற‌ப்புச் சான்றித‌ழ் பெறுவ‌த‌ற்கான‌ ப‌டிவ‌த்தைப் பார்த்திருப்பீர்க‌ள். குழ‌ந்தையின் பெய‌ர், தாயின் பெய‌ர், த‌ந்தையின் பெய‌ர் என்று இருக்குமே த‌விர‌ திரும‌ண‌மான‌வ‌ரா?, அத‌ற்குரிய‌ அத்தாட்சி இருக்கிற‌தா என்று யார் செய்த‌ புண்ணிய‌மோ கேட்காம‌ல் விட்டார்க‌ள்.

அடுத்த‌தாக‌ ப‌ள்ளியில் சேர்க்கையில் அந்த‌ப் ப‌டிவ‌த்திலும் த‌ந்தை பெய‌ர், தாயின் பெய‌ர் என்றிருக்குமே த‌விர‌ ச‌ட்ட‌ப்பூர்வ‌மான‌ பிள்ளையா? ச‌ட்ட‌த்திற்குப் புற‌ம்பான‌ பிள்ளையா என‌க் கேட்க‌ப் ப‌டுவ‌தில்லை. உத்தியோக‌ம், இன்சூர‌ன்ஸ் இன்னும் என்ன‌வெல்லாம் இருக்கிற‌தோ எங்குமே ச‌ட்ட‌ப்ப‌டியான‌/அற்ற‌ குழ‌ந்தையா என்ற‌ கேள்வியே எழும்புவ‌தில்லை.

இர‌ண்டு உதார‌ண‌ங்க‌ள் பார்ப்போம்:

1. 'அ'வும் 'ஆ'வும் காத‌ல‌ர்க‌ள். திரும‌ண‌ம் செய்துக் கொள்வ‌து என்ற‌ தீர்மான‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ள். வரம்பு மீறிய ஒரு நாளில் 'அ'வின் வீட்டில் தெரிய‌வ‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ 'இ'யுட‌ன் திரும‌ண‌ம் ந‌ட‌த்தி வைக்க‌ப்படுகிற‌து. அந்த‌ உற‌வினால் 'அ'க‌ருவுற்றிருப்ப‌து ம‌றைக்க‌ப்ப‌டுகிற‌து. அவ‌ர்க‌ளுக்குப் பிற‌க்கும் குழ‌ந்தைக்கு தாய் 'அ' என‌வும் த‌ந்தை 'இ' என‌வும் ப‌திவாகிற‌து.

2. 'A'யும் 'B'யும் திரும‌ண‌ம் என்ற‌ ஓர் உற‌வு அவ‌சிய‌மில்லை என்ற‌ க‌ருத்துடைய‌வ‌ர்க‌ள். சேர்ந்து வாழ்கிறார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு 'C' என்ற‌ ஒரு குழ‌ந்தை இருக்கிற‌து. தாய் 'A ' என‌வும் த‌ந்தை 'B' என‌வும் ப‌திவாகிற‌து.

ச‌முதாய‌த்தின் க‌ண்ணில் முத‌ல் உதார‌ண‌த்தில் பிற‌ந்த‌ குழ‌ந்தை ச‌ரியான‌து. இர‌ண்டாவ‌து பிற‌ந்த‌ குழ‌ந்தை முறைய‌ற்ற‌ உற‌வில் பிற‌ந்த‌ குழ‌ந்தையாக‌ க‌ருத‌ப்ப‌டும். பிற‌கு ச‌ட்ட‌ப்ப‌டி என்ற‌ கேள்வி எப்போது எழுகிற‌து?

உதார‌ண‌த்துக்கு 'இ' த‌ன் சுய‌ ச‌ம்பாத்திய‌த்தில் உண்டாக்கிய‌ சொத்து அவ‌ருக்குப் பின் யாருக்குச் சேரும் என‌க் குறிப்பிடாத‌ ப‌ட்ச‌த்தில் ஏதாவ‌து வில்ல‌ங்க‌ம் ஏற்ப‌டின் நீதிம‌ன்ற‌த்தை நாடி ச‌ட்ட‌பூர்வ‌மான‌ பிள்ளை என‌ நிரூபிக்க‌ தாயும் த‌ந்தையும் திரும‌ண‌ம் செய்த‌ ஆதார‌ம், த‌ன்னுடைய‌ பிற‌ப்புச் சான்றித‌ழ் ஆகிய‌வ‌ற்றைக் காட்டினால் போதும்.

'அ' ம‌ற்றும் 'ஆ'வின் உற‌வை அறிந்த‌வ‌ர்க‌ள் எவ‌ரேனும், 'ஆ' உயிருட‌னிருக்கும் ப‌ட்ச‌த்தில் நீதிம‌ன்றத்தில் எதிர் முறையீடு செய்து, ம‌ர‌ப‌ணு சோத‌னை செய்ய‌ப்ப‌டல் வேண்டும் என‌க் கோரினாலே ஒழிய‌ ச‌ட்ட‌த்தின் முன்னும் ச‌ட்ட‌ப்ப‌டியான‌ குழ‌ந்தைதான்.

இர‌ண்டாவ‌து உதார‌ண‌த்தில், சமூகத்தின் பார்வையில் திரும‌ண‌ உற‌வில்லாம‌ல் பிற‌ந்த‌ குழ‌ந்தையாத‌லால் தாயும் தந்தையும் ஒப்புக் கொண்டாலும், விஞ்ஞான பூர்வ‌மாக‌, 'B'யின் குழ‌ந்தை என‌ நிரூபிக்க‌ முடிந்தாலும் ச‌ட்ட‌ப்ப‌டி ச‌ட்ட‌ விரோத‌மாக‌ பிற‌ந்த‌ குழ‌ந்தையாக‌த்தான் க‌ருத‌ப்ப‌டும்.

முத‌ல் உதார‌ண‌த்தில் திரும‌ண‌ம் செய்யாவிடினும், எதிர்க்கப் பட்டாலே ஒழிய‌ த‌க‌ப்ப‌ன் 'ஆ' என்று ஒத்துக் கொள்ளும் ச‌ட்ட‌ம், இர‌ண்டாவ‌தில் எதிர்ப்பில்லாவிடினும் ம‌றுப்ப‌து எப்படி? திரும‌ண‌ம் என்ற‌ உற‌வு தான் கார‌ண‌மா? அது உண்மைக்குப் புறம்பானதாக இருந்தாலும் பரவாயில்லையா? அப்ப‌டியாயின் ச‌ட்ட‌ப் பிற‌ழ்வு நேராம‌லிருக்க‌ என்ன‌ ச‌ட்ட‌மிருக்கிற‌து?

எனவே சொத்து குறித்த அல்லது தவிர்க்க முடியாத ஏதோ ஒரு தேவையில் தந்தை யார் என நிரூபிக்க முடியாத கால கட்டத்தில் சமுதாயச் சீர் கேட்டைத் தடுக்கத்தான் திருமணம் என்பது முக்கியமாகக் கருதப்பட்டதா?

ஒரு கால கட்டத்தில் தாய் யார் என்பதிலாவது குழப்பமில்லாமல் இருந்தது. இப்போதோ மருத்துவ மனையிலேயே குழந்தைத் திருட்டும் தாய் யார் என்பதை நிரூபிக்க நீதி மன்றத்தை நாடும் நிலை உண்டாகிவிட்டதே. இந்நிலையில் திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாகவே அமைகிறது. மேலும், சட்டப் பிறழ்வை மறைக்கும் ஒரு கருவியாகவும் பயன் படுகிறது.

இந்த நிலையில் விஞ்ஞான பூர்வமாகவே குழந்தையின் தாய் தந்தை யார் என்பது ஏற்றுக் கொள்ளப் படும்.இனி பிற‌க்கும் குழ‌ந்தைக‌ள் பிற‌ந்த‌வுட‌ன் ம‌ர‌ப‌ணுப் ப‌ரிசோத‌னை மூல‌மே ச‌ட்ட‌ப்ப‌டி பிற‌ந்த‌ குழ‌ந்தையாக‌ ப‌திய‌ப்பட வேண்டும் என‌ச் ச‌ட்ட‌ம் வ‌ர‌ ச‌முதாய‌மோ, ச‌ட்ட‌மிய‌ற்றும் அதிகார‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளோ முன் வ‌ருவார்க‌ள் என்றா நினைக்கிறீர்க‌ள்?

சமுதாய‌க் க‌ட்ட‌மைப்பு குருடா? ச‌ட்ட‌ம் குருடா?

Tuesday, October 13, 2009

தீப ஒளி!

அதர்மம் தலை தூக்கும்
ஒவ்வோர் யுகத்திலும்
அதர்மமழிக்க தோன்றுவேன்
என்றவனே! என் கண்ணனே!

எங்களுக்கு வீடிருந்த போது
நீயில்லாத வீடில்லை தெரியுமா?
இப்போதோ எங்களுக்கு
வீடேயில்லை.

உன்னைக் கொண்டாடியதால் தானோ
எங்கள் வாழ்வு தினமும் தீபாவளியானது?
வேட்டுச் சத்தமும் வான வேடிக்கையும்
வழமையாகிப் போனது?

ராவணனை அழித்த உன் அண்ணன்
ஏனோ ராவணன்களோடு கூட்டமைத்தான்
அதர்மமழிப்பேன் என்றாயே
அழிந்ததென்னமோ நாங்கள்தானே!

அண்ணனுக்குப் பின் தானே நீ சொன்னாய்
அதர்மமழிப்பேன் யுகம் யுகமாகவென்று!
மீண்டும் கம்சவதம் செய்ய வருவாயா?
இல்லை நீயும் சக்கராயுதம் தருவாயா?

நீ அவதரித்தால்
அதர்மமழித்தால்
எங்களுக்கு வேண்டியது தீபாவளியல்ல
தீபமேற்ற எங்கள் வீடு! எங்கள் மண்ணில்!


__________/\__________