Monday, September 14, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 2.4

அரசாங்கத்தின் போர் குற்றங்கள் தொடர்பான செய்மதிப்படங்கள் அமெரிக்க அமைப்பினால் சேகரிப்பு

ஆல்பம் போடவா. உருப்படியா ஏதாவது பண்ணுங்கையா. படம் வந்தப்பவே புடுங்கி இருந்தா எத்த உயிர் பிழைச்சிருக்கும்.
_____________________________________________________________________________________________
பொய்யென நிரூபிக்க சிறிலங்கா அரசு பயன்படுத்திய வீடியோ போலியானது

பொய்யிலயும் போலியிலையுமே பிழைக்குது ஒரு அரசு. போகிற உயிர் என்னமோ நிஜம்.
_____________________________________________________________________________________________
இலங்கை இடம்பெயர் முகாம்களில் ஊட்டசத்து குறைந்த குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுவதில்லை: இந்திய மருத்துவர்

அட போய்யா. உணவே இல்லையாம் அதில ஊட்டமும் சத்தும் இல்லைன்னு இவரு சொல்ல வந்துட்டாரு. ஊட்டத்துக்கு தனியா நிவாரணம் குடுப்பா சூனியா.
_____________________________________________________________________________________________
குமரன் பத்மநாதனிடம் பாகிஸ்தான் அதிகாரிகளும் விசாரணைகளை நடத்தவுள்ளனர்

3 கேள்விக்கு இவ்வளவுன்னு ரேட் போட்டு லாட்ஜ்ல ரூம் போட்டு குடுங்கப்பு. மேச்செலவுக்கு காசு தேத்தலாம். வந்துட்டானுவ.
_____________________________________________________________________________________________
வெளிநாடுகளில் தங்கியுள்ள த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்: அரசாங்கம்

நடவடிக்கை எடுக்க வேண்டியதெல்லாம் கெடப்புல. இவருக்கு இது இப்போ அவசரம்.
_____________________________________________________________________________________________
புலி உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்ய பிரத்தியேக நீதிமன்றம்: அமெரிக்காவின் உதவி பெற திட்டம்

இதுக்கு மட்டும் அமெரிக்கா உதவி தேவையோ? இந்த சாக்குலயும் காசு பார்க்கலாம்.
_____________________________________________________________________________________________

கச்சதீவுக் கடலில் சிறீலங்கா கடற்படை கொலைவெறியாட்டம்

இன்னும் ரெண்டு கப்பல் குடுப்பாங்க. தலைவரு தந்தி அடிச்சிருப்பாரு இன்னேரம். இன்னும் என்ன பண்ண முடியும்?
_____________________________________________________________________________________________
போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறீலங்கா அரசிடம் ஐ.நா. விளக்கம் கோரல்

தோ. முதல்ல குடுத்துட்டு தான் மறு வேலை. அத வாங்கினதும் மட மடன்னு இவங்க வேலை ஆரம்பிச்சிடுவாங்க.
_____________________________________________________________________________________________
தமிழர் தாயகத்தில் படைமுகாம்கள் அகற்றப்படமாட்டா - மகிந்த ராஜபக்ச

அது படை இல்லை. புற்றுநோய். அகற்ற முடியாது. என்னா உள்குத்தோ. யாருக்குத் தெரியும்.
_____________________________________________________________________________________________
கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் எனப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

அவன் போர் நிறுத்திட்டேன்னு சொன்னப்ப சொல்லிட்டான்னு நம்புனீங்களே, இப்ப தொலைச்சி கட்டிட்டேன்னு சொல்றான்ல. இத ஏண்டா நம்ப மாட்டீங்க?
_____________________________________________________________________________________________

ஈழத்துக்காக அனைவரும் குரல் கொடுக்கும்போது பாரதிராஜாவின் மௌனம் கலையும்: சேரன்

நாயகன் பட வசனமா? ஆக இனிமே இவரு பேசவே மாட்டாரா?
_____________________________________________________________________________________________
இலங்கை மீனவர்கள் 12 பேர் விடுதலை

ஆமாம்பா. அவன் என்ன தமிழ்நாட்டு மீனவனா? அப்பிடியே 4 பீரங்கியும்  குடுத்து கண்ணு துடைச்சி விட்டு அனுப்புங்கடா.
_____________________________________________________________________________________________
நதிகள் இணைப்பை ஆதரித்தவர் இந்திரா காந்தி: கலைஞர்

அந்தம்மா ஆதரித்ததெல்லாம் உங்களுக்குச் சரின்னா சரித்திரம் வேற மாதிரி இல்ல மாறி இருக்கும்.
_____________________________________________________________________________________________
தமிழர்களுக்கு எந்த ஒரு ஆபத்து வந்தாலும் போராடுவேன்: விஜய்

அய். இனிமே தமிழனுக்கு கவலையே இல்ல. சும்மா சுத்தி சுத்தி அடிச்சி கிழிச்சிடுவாரு.
_____________________________________________________________________________________________
இந்தியர்களின் கறுப்பு பணம் எதுவும் இல்லை: சுவிஸ் வங்கிகள் அறிவிப்பு

ஹய்யோ ஹய்ய்ய்ய்ய்ய்யோ. நம்பீஈஈஈட்டம்ல.
_____________________________________________________________________________________________
தமிழ்நாட்டில் 15 லட்சம் போலி ரேஷன் கார்டுகள்.

அப்புடியா? 15 லட்சம் போலி கார்டுக்கு வெள்ள நிவாரணம் கார்டுக்கு 2000 ரூ, கலர் டெலிவிஷன் ரூ 3000. எத்தன பூச்சியம் வருது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா கண்ண கட்டுதே.
_____________________________________________________________________________________________

20 comments:

கதிர் - ஈரோடு said...

//அது படை இல்லை. புற்றுநோய்.//

நீங்கள் இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக பேசுகிறீர்கள்... அதை இந்தியர்கள் பொறுத்துகொள்ள மாட்டோம்...

இது கட்டளை அல்ல.... எச்ச்ச்சரிக்க்க்கைஐஐஐஐஅ... ச்சீ குட்டிக்கரணமுங்க

இராகவன் நைஜிரியா said...

// இந்தியர்களின் கறுப்பு பணம் எதுவும் இல்லை: சுவிஸ் வங்கிகள் அறிவிப்பு

ஹய்யோ ஹய்ய்ய்ய்ய்ய்யோ. நம்பீஈஈஈட்டம்ல.//

2009 - ன் தலை சிறந்த ஜோக்..

இராகவன் நைஜிரியா said...

// தமிழ்நாட்டில் 15 லட்சம் போலி ரேஷன் கார்டுகள்.

அப்புடியா? 15 லட்சம் போலி கார்டுக்கு வெள்ள நிவாரணம் கார்டுக்கு 2000 ரூ, கலர் டெலிவிஷன் ரூ 3000. எத்தன பூச்சியம் வருது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா கண்ண கட்டுதே. //

காலங்கார்த்தால எழுந்து இத படிச்ச உடன மயக்கம் வராத குறைதான். இனிமே ஆபிஸ் போய் நான் வேலை செஞ்ச மாதிரிதான்.

இராகவன் நைஜிரியா said...

// அரசாங்கத்தின் போர் குற்றங்கள் தொடர்பான செய்மதிப்படங்கள் அமெரிக்க அமைப்பினால் சேகரிப்பு

ஆல்பம் போடவா. உருப்படியா ஏதாவது பண்ணுங்கையா. படம் வந்தப்பவே புடுங்கி இருந்தா எத்த உயிர் பிழைச்சிருக்கும். //

அது Archive செய்வதற்காக தொகுக்கப்பட்டது...

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு
/நீங்கள் இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக பேசுகிறீர்கள்... அதை இந்தியர்கள் பொறுத்துகொள்ள மாட்டோம்...

இது கட்டளை அல்ல.... எச்ச்ச்சரிக்க்க்கைஐஐஐஐஅ... ச்சீ குட்டிக்கரணமுங்க/

தென்ன மரத்தேளு பனமரத்து நெறியோ. காலையில குட்டிக்கரணம் உடம்புக்கு நல்லது

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா

/2009 - ன் தலை சிறந்த ஜோக்../

இத இப்புடியே மேண்டேன் பண்ணி யாருமே போடலயேடான்னா ரொம்ப நல்லா இருக்கும். போட்டவன்லாம் போய் சேர்ந்துடுவான்.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா
/காலங்கார்த்தால எழுந்து இத படிச்ச உடன மயக்கம் வராத குறைதான். இனிமே ஆபிஸ் போய் நான் வேலை செஞ்ச மாதிரிதான்./

என்ன பார்த்து மனச தேத்திக்கிங்க சார்.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா

/அது Archive செய்வதற்காக தொகுக்கப்பட்டது.../

புதைச்சத புதைக்கறதுக்குங்கறீங்க. அதும் சரிதான்.

க.பாலாஜி said...

//பொய்யென நிரூபிக்க சிறிலங்கா அரசு பயன்படுத்திய வீடியோ போலியானது

பொய்யிலயும் போலியிலையுமே பிழைக்குது ஒரு அரசு. போகிற உயிர் என்னமோ நிஜம்.//

ஒரு அரசு மட்டுமில்லீங்க தலைவரே...நம்ம நாட்லையும் இப்படித்தான்...

//போகிற உயிர் என்னமோ நிஜம்..//

ஆமாம்....
_____________________________________________________________________________________________
//இலங்கை இடம்பெயர் முகாம்களில் ஊட்டசத்து குறைந்த குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுவதில்லை: இந்திய மருத்துவர்//

அவர் இந்திய மருத்துவர்தானே...அப்படித்தான் சொல்லுவாரு....

//அட போய்யா. உணவே இல்லையாம் அதில ஊட்டமும் சத்தும் இல்லைன்னு இவரு சொல்ல வந்துட்டாரு. ஊட்டத்துக்கு தனியா நிவாரணம் குடுப்பா சூனியா.//

இது நச்....ஆனா அவங்க காதுல விழனுமே....

______________________________________________________________________

அ. நம்பி said...

//தமிழர்களுக்கு எந்த ஒரு ஆபத்து வந்தாலும் போராடுவேன்: விஜய்

அய். இனிமே தமிழனுக்கு கவலையே இல்ல. சும்மா சுத்தி சுத்தி அடிச்சி கிழிச்சிடுவாரு.//

அனைத்தையும் `இளைய தளபதி' கவனித்துக்கொள்வார்; எல்லாக் கவலைகளையும் விட்டொழித்துவிட்டுத் தமிழர்கள் இனி நிம்மதியாகத் திரைப்படம் பார்க்கலாம்;பார்த்துவிட்டு உறங்கலாம்;உறங்கி எழுந்த பின்னர் மீண்டும் திரைப்படம் பார்க்கலாம்; பார்த்துவிட்டு உறங்கலாம்; உறங்கி எழுந்த பின்னர் மீண்டும்......

வானம்பாடிகள் said...

க.பாலாஜி
/ஒரு அரசு மட்டுமில்லீங்க தலைவரே...நம்ம நாட்லையும் இப்படித்தான்.../

நாம வாங்கி வந்த வரம் அப்படி.:(

வானம்பாடிகள் said...

க.பாலாஜி

/அவர் இந்திய மருத்துவர்தானே...அப்படித்தான் சொல்லுவாரு..../

இத எப்படி சொல்ல விட்டாய்ங்கன்னே பெரிய குழப்பம்.

வானம்பாடிகள் said...

அ. நம்பி
/அனைத்தையும் `இளைய தளபதி' கவனித்துக்கொள்வார்; எல்லாக் கவலைகளையும் விட்டொழித்துவிட்டுத் தமிழர்கள் இனி நிம்மதியாகத் திரைப்படம் பார்க்கலாம்;பார்த்துவிட்டு உறங்கலாம்;உறங்கி எழுந்த பின்னர் மீண்டும் திரைப்படம் பார்க்கலாம்; பார்த்துவிட்டு உறங்கலாம்; உறங்கி எழுந்த பின்னர் மீண்டும்....../

அய். ஓட்டு போடணுமே நடுவில.

கிரி said...

//இன்னும் ரெண்டு கப்பல் குடுப்பாங்க. தலைவரு தந்தி அடிச்சிருப்பாரு இன்னேரம். இன்னும் என்ன பண்ண முடியும்?//

:-))) நல்லா கொடுக்கறாங்கய்யா டீடைலு

//நாயகன் பட வசனமா? ஆக இனிமே இவரு பேசவே மாட்டாரா?//

சூப்பரு!... நடக்கிற (பேசுற) கதைய சொல்லுங்கப்பா!

//தமிழர்களுக்கு எந்த ஒரு ஆபத்து வந்தாலும் போராடுவேன்: விஜய்

அய். இனிமே தமிழனுக்கு கவலையே இல்ல. சும்மா சுத்தி சுத்தி அடிச்சி கிழிச்சிடுவாரு//

;-)

வானம்பாடிகள் said...

கிரி

வாங்க கிரி. :))

பிரியமுடன்...வசந்த் said...

//வதமிழர்களுக்கு எந்த ஒரு ஆபத்து வந்தாலும் போராடுவேன்: விஜய்

அய். இனிமே தமிழனுக்கு கவலையே இல்ல. சும்மா சுத்தி சுத்தி அடிச்சி கிழிச்சிடுவாரு.//

எங்க தலைவர கிண்டல் பண்ணுனதுக்காக வன்மையா கண்டிக்கிறேன் சார்

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த்

/எங்க தலைவர கிண்டல் பண்ணுனதுக்காக வன்மையா கண்டிக்கிறேன் சார்/

:)) அய்யோ சாரி சாரி.

ஆரூரன் விசுவநாதன் said...

அனைத்தும் அருமை.

//கதிர்,,,,//
இது கட்டளை அல்ல.... எச்ச்ச்சரிக்க்க்கைஐஐஐஐஅ... ச்சீ குட்டிக்கரணமுங்க/

தமிழனாக இருப்பவன் இந்தியனாக இருக்கமுடியாது. என்ற குரல் வலுத்துவருகிறது.வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்

வானம்பாடிகள் said...

ஆரூரன் விசுவநாதன்
/தமிழனாக இருப்பவன் இந்தியனாக இருக்கமுடியாது. என்ற குரல் வலுத்துவருகிறது.

வாழ்த்துக்கள்//

அது தாங்க வருத்தமா இருக்கு. ஏன் இப்படித் தனிமைப் படுத்தப் படுகிறோம்?

Kiruthikan Kumarasamy said...

லேட்டா வந்திட்டன்... ஆனா சொல்லி வேலையில்லை பாலா. மறுபடியும் நறுக்கிட்டீங்க