Friday, September 11, 2009

தூண்டிற்புழுவினைப் போல்

பன்னிக்காய்ச்சல் பீதியெல்லாம் ஒன்னுமே இல்லங்கறா மாதிரி கொஞ்ச நாளா பேப்பர் வாங்க கடைக்குப் போனா தவறாம காதுல விழற கேள்வி. இன்னைக்கு எத்தன பேருப்பா மாட்டினான்னு. பக்கத்துக்கு பக்கம் லஞ்ச ஊழலில் கைதுன்னு ஒரு நியூஸ். தவராம ஒரு சுமாரான மீன் மாட்டினாலும், ஆண், பெண், பியூனிலிருந்து பெரிய அதிகாரின்னு ஒரு துறை விட்டு வைக்காம லஞ்சம் வாங்கி மாட்டிகிட்டுதானிருக்காங்க. அட பிடிக்கிறாங்கப்பா, கொஞ்சம் கேப் விடுவோம்னு கூட எவனுக்கும் உறைக்காதுபோல. எவனோ மாட்டப்போறான். நான் மாட்ட மாட்டேன்னு திண்ணக்கம்.

சாதாரணமா யாரோ ஒரு புகார் குடுத்துட்டாங்க, போய் ரெய்ட் அடின்னு அடிக்க மாட்டாங்க. தீவிரமான கண்காணிப்பு, விசாரிப்பு, அதுவும் ஒரு எல்லை மீறிப்போய் குடுக்கலைன்னான்னு கொலக்கேசு ரேஞ்சுக்கு போறப்பதான் கஞ்சி காச்சுவாய்ங்க. பரதேசிப் பய புள்ளைய கொட்டித்தான் குடுக்குறான் சம்பளம். அதுக்கு உக்காந்து தின்னாலே ரெண்டு பேருக்கு உதவலாம். அப்படி இருந்தும் இப்படிப் பேராசை பிடிச்சி எல்லாம் இழந்து, பிச்சை எடுக்கிற நிலமைக்கு வந்தும் எவனுக்கும் எப்படி உறைக்காம போகுது? எனக்காகவா வாங்கினேன், பொண்டாட்டி புள்ளகுட்டின்னு கதை விட்டாலும் மனுபோட்டு பார்க்க கூட வருவாங்களானு சந்தேகம்.

இது நிறைய சலிக்க சலிக்க படிச்சாலும், நேற்றும் இன்றும் மாட்டின ரெண்டு கேஸ் ரொம்பவே கேவலமா இருக்கு. காசநோய் ஒழிப்புக்கு உதவியாளருக்கு ஆள் எடுக்கிறாங்களாம். 180க்கும் மேல வேலை காலின்னு, பக்காவா ஏஜண்ட் வச்சி வாங்கி இருக்கிறாரு ஒரு உயரதிகாரி. பேப்பர்காரன் பங்குக்கு இந்தியத் தொலைக்காட்சியிலேயே மாதிரி இந்தத் துறையில் உயர் அதிகாரி மாட்டினதுன்னு (வாங்கினதில்லை) சிறப்பா வேற சிலாகிச்சுக்கிறான். சின்ன வயசோ? கன்னா பின்னான்னு செலவுக்கு காசு போதாதுன்னனு வாங்கி இருக்குமோன்னு பார்த்தா கழுதைக்கு 52வயசு. மனைவி கோவையில் விரிவுரையாளர். மகனும் மகளும் படிக்கிறார்களாம். ரூம் போட்டு லஞ்சம் வாங்கியிருக்காரு அய்யா.

எங்க பார்த்தாலும் கார்டு தேய்க்கிற நாள்ள, பெரிய மகாராஜா மாதிரி 2லட்சத்து 30ஆயிரம் மாட்டின காசை செலவுக்கு வெச்சிருந்தேன்னு சொல்லுறானாம். புடிச்ச பிறகு மூஞ்சில கர்சீப்பைபோட்டு மூடிக்க இருக்கிற அறிவு, தன் செயலால ஒரு ஆசிரியத் தொழில்ல இருக்கிற மனைவிக்கும், படிக்கிற பிள்ளைகளுக்கு கல்லூரியில் ஏற்படும் அவமானத்தை நினைச்சுப் பார்க்க முடியாமலா காசு கண்ணை மறைச்சுடும்?  ஆள் நியமனத்துக்கே இப்படி வாங்கினான்னா, மருந்து வாங்குறதுல எவ்வளவு அடிப்பான்? இவனுக்கு லஞ்சம் குடுத்தவன் காசநோய் ஒழிக்கவா வேலை செய்வான்? அவன் ஒன்னுக்கு பத்தா போட்ட முதல் எடுக்க நினைக்க மாட்டானா? காச நோய் சாவடிக்குதோ இல்லையோ இந்தக் காசு நோயை ஒழிக்கக் கூட காசு தேத்துவாங்களாட்ருக்குது.

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்னு சொல்லுவாங்கல்ல. அடுத்த கேஸ் கோவில்ல. சேலம் சுகவனேஸ்வரர் கோயில் அறநிலையத்துறை அதிகாரி (காசு வாங்கறதே அறம் போல இவருக்கு). இந்தக் கோயில் கட்டுப்பாட்டில் இருக்கும் ராஜகணபதி கோவில் அர்ச்சகர், தட்டில் விழும் காசை தானே வைத்துக் கொள்ளவும், தனி உதவியாளரை நியமித்துக் கொள்ளவும் 10ஆயிரம் ரூபாய் தரணும். இல்லைன்னா காசு வராத கோவில்ல மாத்திடுவேன்னு மிரட்டி காசு வாங்கி இருக்காரு. விட்டா, சாமிதான் வாங்க சொன்னாருன்னே சொல்லுவானுங்க போல. மனசு சரியாயில்லை கோவிலுக்காவது போலாம்னா காசு குடுத்தாத்தான் சாமி பார்க்கலாம்னு மறிப்பானுங்க போல.

நெஞ்சு பொறுக்குதில்லையேன்னு பாட்டு கவனம் வரும்போது பாரதியும் கவனம் வருமில்லையா? இன்னைக்கு அவரோட நினைவுநாள். நாம ஏன் இந்தப் பாட்டை நினைச்சி இன்னும் நொந்து போகணும். அழகா பாரதி பாடின ஒரு காதல் பாட்டு எவ்வளவு கஷ்டமிருந்தாலும் கடைசியில் நாமளே தேத்திக்க வேண்டியதுதான்னு சொல்றா மாதிரி அழகான பாட்டு. கேட்க மனசிருந்தா கேட்டுப் பாருங்க.

19 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//எவனோ மாட்டப்போறான். நான் மாட்ட மாட்டேன்னு திண்ணக்கம்.//

ஆனா ஒரு நாளைக்கு மாட்டுவானுங்க சார்

ப்ரியமுடன் வசந்த் said...

பாம்பே ஜெயஸ்ரீ குரலில் அந்த தூண்டிற்புழுவினைப்போல் பாடல் கேட்டுட்டு இருக்கேன் மனசு வலிக்குது....சார்

vasu balaji said...

//எவனோ மாட்டப்போறான். நான் மாட்ட மாட்டேன்னு திண்ணக்கம்.//

ஆனா ஒரு நாளைக்கு மாட்டுவானுங்க சார்//

ஆமாம் வசந்த். அது நடந்தாலும் இது நின்ன பாடில்லையே.

க.பாலாசி said...

//காசு போதாதுன்னனு வாங்கி இருக்குமோன்னு பார்த்தா கழுதைக்கு 52வயசு.//

இதுல ஏதுங்கய்யா வயசு வித்யாசமெல்லாம்...சொல்லப்போனா காரு, பங்களான்னு செட்டிலானவன்தான் இன்னும் இந்த பிச்சையை அதிகமா எடுத்துகிட்டு இருக்கானுங்க....இவனுங்க கையில உள்ள பிச்ச பாத்திரத்த புடுங்கிட்டா எல்லாம் சரியாயிடும்...

ஈரோடு கதிர் said...

அய்யா இந்த வேட்டை பெரிய அளவில நடக்குதுங்க

என் சிற்றறிவுக்கு எட்டிய ஒரு செய்தி

மத்தியப் புலானாய்வுத்துறையில் லஞ்ச ஒழிப்புத்துறையில் தமிழ்நாடு, புதுவைக்கான உயர் அதிகாரியா இருக்கிற நபர், மிக மிக நேர்மையான அதிகாரியாம். அவருக்கு மேல் மட்டத்திலிருந்து மிகப் பெரிய சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கு, இன்னும் அவர் முழு வீச்சில் இறங்க வில்லை. அவரின் எண்ண ஓட்டம் புரிந்துதான் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கொஞ்சம் அட்வான்சாக பின்னி பெடலெடுத்துக் கொண்டிருக்கிறது.
இதுவரைக்கும் மாட்டியது வெறும் சாம்பிள்தான்.... இன்னும் நிறைய வரும், காத்திருப்போம், கர்சீப் போட்டு முகம் மூடி போஸ் கொடுக்கும் கதாநாயகர்களை தரிசிக்க

vasu balaji said...

க.பாலாஜி
/இவனுங்க கையில உள்ள பிச்ச பாத்திரத்த புடுங்கிட்டா எல்லாம் சரியாயிடும்.../

இல்லைங்க. அது எச்சைப் பாத்திரமா அடுத்தவன் உபயோகிப்பான். என்ன, இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா பண்ணுவானுங்க.

vasu balaji said...

கதிர் - ஈரோடு

/அவருக்கு மேல் மட்டத்திலிருந்து மிகப் பெரிய சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கு, இன்னும் அவர் முழு வீச்சில் இறங்க வில்லை. /

கதிர். இந்த வரிகளோட தாக்கம் புரிகிறதா? ஆமாம். மேல் மட்டத்தின் சம்மதம் இதில் முக்கியம். சட்டம் எல்லாம் ஒண்ணுமே இல்லை. திமிங்கிலங்கள் திரியும். சட்டம் இருக்கு நான் கடமை செய்கிறேன்னு இருக்க முடியல பார்த்தீங்களா. நியாயமா இந்தத் துறையில் இருக்கும் ஒரு நேர்மையான அதிகாரின்னு சுட்டுதலே இந்த அமைப்பில் உள்ள குறைபாடு.

அப்பாவி முரு said...

மாட்டுறவங்களோட சதவீதம் 0.0001க்கும் குறௌவுதானே. இதெல்லாம் ஒதுக்கக்கூடிய அளவு.

அப்ப மிச்சமிருக்குற 99.9999 சதவீதத்தினரெல்லாம் யோக்கியவான்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!!

யூர்கன் க்ருகியர் said...

இடுகை அபாரம் ...


ஏதோ என்னாலான உதவி :-

If a central Government employee seeks bribe for official work, pls inform SP, CBI, ACB, Mumbai on 9820185123, 22882794 (Pune, mumbai - circle )

இராகவன் நைஜிரியா said...

அன்பு நண்பரே... முன்பு ஒரு இடுகையில் நான் சொன்னது போல, லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தப்பு என்ற நிலை வரவேண்டும். எப்படியாவது வேலை முடிந்தால் போதும் என்ற நிலை இருக்கும் வரை, இதை ஒழிப்பது என்பது மிகக் கடினம். காசு வாங்கி ஓட்டும் போடும் வரை, அரசு இலவசத்தை தேவை இல்லாத இடங்களில் ஒழிக்கும் வரை, இதை ஒழிப்பது கடினம். கல்வியைத் தவிர வேறு எங்கு இலவசம் என்றாலும், அதில் எதோ விசயம் இருக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும். Nothing is free in this world.

vasu balaji said...

அப்பாவி முரு
/மாட்டுறவங்களோட சதவீதம் 0.0001க்கும் குறௌவுதானே. இதெல்லாம் ஒதுக்கக்கூடிய அளவு.

அப்ப மிச்சமிருக்குற 99.9999 சதவீதத்தினரெல்லாம் யோக்கியவான்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!!/

வாங்க முரு. நல்ல காலத்துக்கு மிகப் பெரும்பான்மை ஒழுங்கா வேலை பார்த்து சாவற வரைக்கும் கஞ்சிக்கு வேட்டு வெச்சிக்காம இருந்தா போதும் ரகம். ரொம்ப கொடுமையெல்லாம் நடக்கும் சார். சொன்னா இப்படிக் கூடவான்னு நினைப்பீங்க.

vasu balaji said...

யூர்கன் க்ருகியர்

/இடுகை அபாரம் ...


ஏதோ என்னாலான உதவி :-

If a central Government employee seeks bribe for official work, pls inform SP, CBI, ACB, Mumbai on 9820185123, 22882794 (Pune, mumbai - circle )/

வாங்க யூர்கன். நல்லா இருக்கீங்களா. நன்றிங்க. இங்கயும் இந்த ஏற்பாடு இருக்கு.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா
/அரசு இலவசத்தை தேவை இல்லாத இடங்களில் ஒழிக்கும் வரை, இதை ஒழிப்பது கடினம். கல்வியைத் தவிர வேறு எங்கு இலவசம் என்றாலும், அதில் எதோ விசயம் இருக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும். Nothing is free in this world./

சரியாச் சொன்னீங்க சார்.

அப்பாவி முரு said...

//அப்பாவி முரு
/மாட்டுறவங்களோட சதவீதம் 0.0001க்கும் குறௌவுதானே. இதெல்லாம் ஒதுக்கக்கூடிய அளவு.

அப்ப மிச்சமிருக்குற 99.9999 சதவீதத்தினரெல்லாம் யோக்கியவான்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!!/

வாங்க முரு. நல்ல காலத்துக்கு மிகப் பெரும்பான்மை ஒழுங்கா வேலை பார்த்து சாவற வரைக்கும் கஞ்சிக்கு வேட்டு வெச்சிக்காம இருந்தா போதும் ரகம். ரொம்ப கொடுமையெல்லாம் நடக்கும் சார். சொன்னா இப்படிக் கூடவான்னு நினைப்பீங்க.//

தவறாக புரிந்து கொண்டதாக உணர்கிறேன்.

இன்னும் மாட்டாதவர்களே அதிகம் என்கிறேன்.

vasu balaji said...

//அப்பாவி முரு

/தவறாக புரிந்து கொண்டதாக உணர்கிறேன்.

இன்னும் மாட்டாதவர்களே அதிகம் என்கிறேன்/

ஆமாம் முரு. சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க முடியாது. தொலையட்டும் பரவாயில்லை என்ற அளவு முறை இருக்கிறது. அதைத் தாண்டுபவர்கள் மட்டும், அதுவும் புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பது எந்த விதத்திலும் சரியில்லை.

அப்பாவி முரு said...

அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழி...

vasu balaji said...

அப்பாவி முரு

/அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழி.../

கடைசியில் அதுதான்.

கிரி said...

//எவனோ மாட்டப்போறான். நான் மாட்ட மாட்டேன்னு திண்ணக்கம்.//

ரொம்ம்ம்ப நம்பிக்கை :-)

vasu balaji said...

கிரி

/ரொம்ம்ம்ப நம்பிக்கை :-)/

:))