Sunday, September 27, 2009

அவள், அவன் & அது!

பெண்!

அம்மாவுக்குப் பெண்ணாய்
அனைவருக்கும் தோழியாய்
அடுத்துப் பிறந்தோர்
அன்புச் சகோதரியாய்
அவனுக்கு மனைவியாய்
அனைவருக்கும் தாயாய்
அவள் காலம் முடியக் காத்திருக்கையில்
அவள் மனம் கேட்கிறது
அரைநொடியாவது
அவளுக்காய் வாழ்ந்தாளா என!

*****

நியாயம்தானே!

கடைக்குப் போனேன்
கத்தரிக்கா வாங்கினேன்
வீட்டுக்கு வந்து
வெட்டிப் பார்த்தேன்
அத்தனையும் சொத்தை
அதனாலென்ன?
கடைக்காரனுக்குத் தந்ததும்
கள்ள நோட்டு தானே!

*****

நீதி!

எழும்பூர் கோர்ட்டில்
முன் நிறுத்தச் செல்கையில்
பேருந்து நிலையத்தில்
ஏட்டு சொன்னார்.
ஏய் பி.பி.
இந்தாடா ப்ளேடு
எனக்கும் சேர்த்து
எட்டுப் பேருக்கு
எப்புடியாவது தேத்துடா
பிரியாணிக்கும் குவார்ட்டருக்கும்.
இவன் குடுக்கிறது
எனக்கே ஃபுல்லுக்கு போதாது!

*****                                                                                                                                                                                                                                      

37 comments:

கலகலப்ரியா said...

நல்லா இருக்குங்க.. உங்க நீதியும்.. நியாயமும்..

vasu balaji said...

கலகலப்ரியா

/நல்லா இருக்குங்க.. உங்க நீதியும்.. நியாயமும்../

அவ்வ்வ். இது என் நீதி இல்லீங்கோ. உலக நியதி. பெண்ணைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே. சொல்ல வார்த்தைகளில்லைன்னு சொன்னதா வெச்சிக்கவா.

கலகலப்ரியா said...

அந்த நியாயத்தையும் சேர்த்துதானுங்க சொல்றது... 'எழுதுக எழுத்தற.. எழுதியபின் நிற்க அதற்குத் தக.."

vasu balaji said...

கலகலப்ரியா
/அந்த நியாயத்தையும் சேர்த்துதானுங்க சொல்றது... 'எழுதுக எழுத்தற.. எழுதியபின் நிற்க அதற்குத் தக.."/
இந்தக் கதையெல்லாம் வேணாம். கம்பர் சண்டைக்கு போனாரா?

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் Says:
September 27, 2009 2:35 PM

கலகலப்ரியா
/அந்த நியாயத்தையும் சேர்த்துதானுங்க சொல்றது... 'எழுதுக எழுத்தற.. எழுதியபின் நிற்க அதற்குத் தக.."/
இந்தக் கதையெல்லாம் வேணாம். கம்பர் சண்டைக்கு போனாரா?//

கத்தரிக்காய்க்கும்.. கம்பருக்கும் என்ன சம்மந்தம்.. நல்லா சாம்பார் பண்ணுவாரா அந்தாளு..

vasu balaji said...

கலகலப்ரியா

/கத்தரிக்காய்க்கும்.. கம்பருக்கும் என்ன சம்மந்தம்.. நல்லா சாம்பார் பண்ணுவாரா அந்தாளு../

அய்யய்யோ. வசந்து. உங்களால கலகலா சாம்பாருன்னே புலம்புதே.:))

இராகவன் நைஜிரியா said...

// அவள் மனம் கேட்கிறது
அரைநொடியாவது
அவளுக்காய் வாழ்ந்தாளா என!//

சத்தியமான வரிகள்.

இராகவன் நைஜிரியா said...

// நியாயம்தானே! //

நல்லாயிருக்கு நியாயம்.

இராகவன் நைஜிரியா said...

// எட்டுப் பேருக்கு
எப்புடியாவது தேத்துடா
பிரியாணிக்கும் குவார்ட்டருக்கும்.
இவன் குடுக்கிறது
எனக்கே ஃபுல்லுக்கு போதாது! //

அரசு இயந்திரம் அவ்வளவு மோசமாகிவிட்டது..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா

/சத்தியமான வரிகள்./

வாங்க இராகவன் சார். நன்றி.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள்
September 27, 2009 3:11 PM
இராகவன் நைஜிரியா

/சத்தியமான வரிகள்./

வாங்க இராகவன் சார். நன்றி //

வந்துட்டோமில்ல.. கூப்பிடாமயே வருவோம். கொஞ்சம் பார்த்துப் போட்டு கொடுங்க

vasu balaji said...

இராகவன் நைஜிரியா
/நல்லாயிருக்கு நியாயம்./

=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா

/எட்டுப் பேருக்கு
எப்புடியாவது தேத்துடா
பிரியாணிக்கும் குவார்ட்டருக்கும்.
இவன் குடுக்கிறது
எனக்கே ஃபுல்லுக்கு போதாது! //

அரசு இயந்திரம் அவ்வளவு மோசமாகிவிட்டது../

ஆமாம் சார். இது ஒரு பிக் பாக்கட் பேட்டில சொன்னதுதான்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா

/வாங்க இராகவன் சார். நன்றி //

வந்துட்டோமில்ல.. கூப்பிடாமயே வருவோம். கொஞ்சம் பார்த்துப் போட்டு கொடுங்க/

சார்.இது உங்களுக்கே நல்லாருக்கா. இடுகைய ‘பார்த்து’ வோட்டைப் ‘போட்டு’ ஊட்டம் ‘கொடுக்கறதே’ நீங்க தானே.

ப்ரியமுடன் வசந்த் said...

//கடைக்குப் போனேன்
கத்தரிக்கா வாங்கினேன்
வீட்டுக்கு வந்து
வெட்டிப் பார்த்தேன்
அத்தனையும் சொத்தை
அதனாலென்ன?
கடைக்காரனுக்குத் தந்ததும்
கள்ள நோட்டு தானே!//

யக்கா பிரியாக்கா இப்பிடி விளக்க உரையே தேவையில்லாம கவிதையெழுதனும்...

ப்ரியமுடன் வசந்த் said...

//எழும்பூர் கோர்ட்டில்
முன் நிறுத்தச் செல்கையில்
பேருந்து நிலையத்தில்
ஏட்டு சொன்னார்.
ஏய் பி.பி.
இந்தாடா ப்ளேடு
எனக்கும் சேர்த்து
எட்டுப் பேருக்கு
எப்புடியாவது தேத்துடா
பிரியாணிக்கும் குவார்ட்டருக்கும்.
இவன் குடுக்கிறது
எனக்கே ஃபுல்லுக்கு போதாது!//

நச் சூப்பர் சார்

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்
/யக்கா பிரியாக்கா இப்பிடி விளக்க உரையே தேவையில்லாம கவிதையெழுதனும்./

=)). ஆஹா இது வேறயா.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்
/நச் சூப்பர் சார்/

நன்றி வசந்த்.

துபாய் ராஜா said...

அருமை அய்யா.

சமூக அவலங்கள் சொல்லும் அனைத்து கவிதைகளும் அழகு.

தொடருங்கள்.தொடர்கிறோம்.

வாழ்த்துக்கள்.

vasu balaji said...

துபாய் ராஜா
/அருமை அய்யா.

சமூக அவலங்கள் சொல்லும் அனைத்து கவிதைகளும் அழகு.

தொடருங்கள்.தொடர்கிறோம்.

வாழ்த்துக்கள்./

நன்றிங்க.

அன்புடன் மலிக்கா said...

அழகான அனுபவமான பதிவு
தொடர்ந்து எழுதுங்கள் அய்யா வாழ்த்துக்கள்

vasu balaji said...

அன்புடன் மலிக்கா

/அழகான அனுபவமான பதிவு
தொடர்ந்து எழுதுங்கள் அய்யா வாழ்த்துக்கள்/

நன்றிங்க.

அப்பாவி முரு said...

اٹھو اٹھوا وراٹھا، اللی تھانہ وراٹھا؟


மொழி விளக்கம் \

இது அதுவா தொனினதா? இல்லை அதுவா வருதா?

vasu balaji said...

அப்பாவி முரு

/இது அதுவா தொனினதா? இல்லை அதுவா வருதா?/

அதுவா தோணி வந்தது:)).

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் Says:
September 27, 2009 3:35 PM

//கடைக்குப் போனேன்
கத்தரிக்கா வாங்கினேன்
வீட்டுக்கு வந்து
வெட்டிப் பார்த்தேன்
அத்தனையும் சொத்தை
அதனாலென்ன?
கடைக்காரனுக்குத் தந்ததும்
கள்ள நோட்டு தானே!//

யக்கா பிரியாக்கா இப்பிடி விளக்க உரையே தேவையில்லாம கவிதையெழுதனும்...//

vanampaadi aiyaa nursery illa nadaththuraaru..

Unknown said...

// பெண்! //

உண்மையான அழகு வரிகள்....




// நியாயம்தானே! //

அராஜகம்




// நீதி! //

செத்துப்போச்சு

ஆரூரன் விசுவநாதன் said...

எளிய வரிகளில்
வலியும், இயலாமையும்,ஆச்சரியமும், அதிர்வும்.....


வாழ்த்துக்கள்

vasu balaji said...

லவ்டேல் மேடி
/உண்மையான அழகு வரிகள்..../

நன்றி

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன்

/எளிய வரிகளில்
வலியும், இயலாமையும்,ஆச்சரியமும், அதிர்வும்.....


வாழ்த்துக்கள்/

நன்றி ஆரூரன்

ஈரோடு கதிர் said...

//அரைநொடியாவது
அவளுக்காய் வாழ்ந்தாளா//

வலிக்கும் வரிகள்

அவளுக்காய் யார் வாழ வைத்தனர்

vasu balaji said...

கதிர் - ஈரோடு

/வலிக்கும் வரிகள்

அவளுக்காய் யார் வாழ வைத்தனர்/

நன்றி கதிர்.

க.பாலாசி said...

//அவள் மனம் கேட்கிறது
அரைநொடியாவது
அவளுக்காய் வாழ்ந்தாளா என!//

நியாயமான கேள்வி....ஆனாலும் பதில் எனும் இடத்தில் ஒரு வெற்றிடம் மட்டுமே உள்ளது...

//வெட்டிப் பார்த்தேன்
அத்தனையும் சொத்தை
அதனாலென்ன?
கடைக்காரனுக்குத் தந்ததும்
கள்ள நோட்டு தானே!//

நீங்க தானா அது....

//எப்புடியாவது தேத்துடா
பிரியாணிக்கும் குவார்ட்டருக்கும்.
இவன் குடுக்கிறது
எனக்கே ஃபுல்லுக்கு போதாது!//

கத்திய கொடுத்திருந்தா ஃபுல்லாவே தேரும்...புத்திகெட்ட போலீஸ்....

க.பாலாசி said...

100 பின்தொடர்பவர்கள்.....வாழ்த்துக்கள் அன்பரே...

vasu balaji said...

க.பாலாஜி
/நியாயமான கேள்வி....ஆனாலும் பதில் எனும் இடத்தில் ஒரு வெற்றிடம் மட்டுமே உள்ளது.../

ஆமாம்.
/நீங்க தானா அது..../

ஆஹா. கத்திரிக்கா உங்க கிட்டயா வாங்கினேன்=))

/கத்திய கொடுத்திருந்தா ஃபுல்லாவே தேரும்...புத்திகெட்ட போலீஸ்..../

அவருக்கு ஃபுல்லுக்கு தேத்திட்டாரு. ஸ்டார்டருக்கு குவார்டர். மட்டையாய்ட்டா அப்புறம் இவங்கள திரும்ப கூட்டிப் போகவேணாமா?

vasu balaji said...

க.பாலாஜி

/100 பின்தொடர்பவர்கள்.....வாழ்த்துக்கள் அன்பரே.../

எனக்கும். ஆச்சரியக் குறி. நன்றி பாலாஜி.

ப்ரியமுடன் வசந்த் said...

//கலகலப்ரியா
September 27, 2009 9:51 PM
//பிரியமுடன்...வசந்த் Says:
September 27, 2009 3:35 PM

//கடைக்குப் போனேன்
கத்தரிக்கா வாங்கினேன்
வீட்டுக்கு வந்து
வெட்டிப் பார்த்தேன்
அத்தனையும் சொத்தை
அதனாலென்ன?
கடைக்காரனுக்குத் தந்ததும்
கள்ள நோட்டு தானே!//

யக்கா பிரியாக்கா இப்பிடி விளக்க உரையே தேவையில்லாம கவிதையெழுதனும்...//

vanampaadi aiyaa nursery illa nadaththuraaru..//

அப்போ நீங்க காலேசு நடத்துறீகளோ?

நசரேயன் said...

//கடைக்காரனுக்குத் தந்ததும்
கள்ள நோட்டு தானே!//

இப்படி எவ்வளவு நாளா நடக்கு !!