Thursday, September 24, 2009

இன்னொரு இமெயில் கதை!

காலை விழித்ததிலிருந்தே இனம் புரியாத பதட்டமாக இருந்தது சந்தியாவிற்கு. மணி வேறு ஆகி விட்டது. தாமதமாக எழுந்து பர பரவென ரெடியாகி, எரிச்சலூட்டிய கணவனுக்கு பதில் சொல்லாமல் அலுவலகம் கிளம்பினாள். இன்றைக்குப் பார்த்து மீட்டிங் வேறு இருக்கிறதே என்ற நினைப்பே அடைத்து வைத்திருந்த துக்கமெல்லாம் வெடித்துக் கிளம்பும் போலிருந்தது.

வங்கி, அரசு வேலை என்றில்லாமல் பொட்டிதட்ட வந்ததற்கு நொந்து கொண்டாள். ப்ரோஜக்ட், டார்ஜட், ரெவியூ என்று உயிரெடுப்பான் மீட்டிங்கில். நல்ல காலம் தன்னுடைய செயல்பாடு மிகத் திருப்தியாக இருப்பதாக தலை சொன்னதில் கொஞ்சம் ஆறுதலும் கூடவே இருப்பினும், தனியாக உட்கார்ந்து ஓவென்று அழவேண்டும் போல் வந்தது.

மீட்டிங் முடிய தன் இருக்கைக்கு வந்து கண்ணை மூடிக்கொண்டு, கடவுளே! ஏன் இப்படி சோதிக்கிறாய்? என்று அரற்றியவாறே சேரில் சாய்ந்துக் கொண்டாள். கணவன் மீது வெறுப்பாக வந்தது. சரியான முசுடு. காசுதான் குறி. எல்லாவற்றிற்கும் அவன் கையை எதிர் நோக்கி இருக்க வேண்டும்.

ரொம்ப நல்ல பையன் என்று கட்டி வைத்த அப்பாவின் மேல் கோபமாக வந்தது. நான்கு நாள் முந்தி ரொம்பப் பாசமாக வழிந்து கொண்டு, வெளியே சாப்பிடலாமே இன்றைக்கு என்ற போதே எதற்கோ அடி போடுகிறான் என்ற நினைப்பே மனதில் எழுந்தது.

வேண்டாமென்று சொல்லி விட முடியுமா?  சாப்பிட்டுக் கொண்டே, உன் அலுவலகத்தில் கார் லோன் எவ்வளவு கிடைக்கும் என்றான். இப்பொழுது கடன் எல்லாம் நிறுத்தி வைத்திருக்கிறார்கள், கிடைக்காது என்றதுமே முகம் மாறி விட்டது. பிடிவாதக்காரன். சரி பரவாயில்லை. சேமிப்பில் இருப்பதைப் போட்டு தவணையில் வாங்கி விடலாம். மாதா மாதம் உன் சம்பளத்தில் கட்டி விடலாம் என்று தீர்மானமாகச் சொன்னான்.

இப்போது இந்தக் கடன் தேவையா என்று மனதில் தோன்றிய கேள்வியை விழுங்கியபடி வீடு திரும்பினாள். சோதனை போல் இரண்டு நாட்களுக்கு முன் அவள் தந்தை போன் செய்தார். தங்கைக்கு ஒரு நல்ல வரன் குதிர்ந்திருக்கிறதாம்.

அவசரமாக நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ள சொல்லி இருக்கிறார்களாம். திருமணம் தைமாதத்திற்கு மேல் வைத்துக் கொள்ளலாமாம். அவள் திருமணத்திற்காக சேமித்து வைத்தது நிரந்தர வைப்பில் இருக்கிறதாம். இப்போது  கணக்கு முடித்தாலோ, கடன் என்று போனாலோ ஆகும் நஷ்டத்திற்கும் வட்டிக்கும் ஒன்றிரண்டு சவரனாவது வாங்கலாமாம்.

ஐம்பதினாயிரம் கடனாகக் கொடுத்தால், திருமணத்துக்கு முன்பு தந்து விடுவாராம். நல்ல மனுஷனம்மா. மாப்பிள்ளையிடம் பேசிப் பார். உன் பதில் கிடைத்ததும் நானே வந்து கேட்கிறேன் என்று சொன்ன போது, அப்பா அப்பா என்று மனதிற்குள் சிரித்தாலும்,  கணவனைக் கேட்கவும் முடியாமல், அப்பாவுக்கு இல்லை என்று சொல்லவும் முடியாமல் மனதிற்குள் குமைந்தபடி இருந்தாள் சந்தியா.

 ஸ்ரீதர் அவளைப் போலவே இன்னோரு ப்ரோஜக்டின் பொறுப்பாளர். டென்ஷன் என்பதே இல்லாமல் எப்படி இருக்கிறான் என்று ஆச்சரியமாக இருக்கும். மனம் விட்டுப் பேசக்கூடிய நல்ல நண்பன். நேற்று ஏதோ வேலையாக வந்த ஸ்ரீதர், இவள் முகத்தைப் பார்த்ததும், என்ன சந்தியா? ஏதாவது பிரச்சினையா? நான் ஏதாவது உதவ முடியுமா என்றான்.

அடைத்து வைத்திருந்ததெல்லாம் மொத்தமும் கொட்டி விட்டாள். கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதர், கவலைப் படாதே சந்தியா, ஏதாவது வழி இருக்கும். நிதானமாக யோசித்துப் பார் என்றபடி திடீரென்று எழுந்து போய் விட்டான்.

நனவுக்கு மீண்ட சந்தியா, கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு மின்னஞ்சலில் புகுந்தாள்.  ஸ்ரீதரிடமிருந்து மின்னஞ்சல். பார்த்ததும், தன்னையறியாமல் புன்னகைத்தாள். மின்னஞ்சலைத் திறந்தவள் உறைந்து போனாள்.

சே! ஸ்ரீதரா இப்படி? நல்ல நண்பன் என்று நினைத்து நொடி கூட ஆகவில்லை. அத்தனை நம்பிக்கையிலும் மண்ணடித்து விட்டு இந்த மாதிரி ஒரு மெயில் அனுப்பி இருக்கிறான்.  நேற்று அவனிடம் தன் மனப் பாரத்தை இறக்கி வைத்த போதே எங்கே பணம் கேட்டு விடுவேன் என்று நினைப்பானோ எனத் தயங்கினாலும், சே சே! அவன் ஜெண்டில்மேன். ஆறுதலுக்குப் பகிர்ந்து கொள்வது புரியும் என்று நினைத்தாளே தவிர இவ்வளவு சீப்பாக நடந்து கொள்வான் என்று நினைக்கவே இல்லை.

திறந்த பிறகு முட்டாள் தனமான அறிவிப்போடு தொடங்கியது கடிதம்.  இதை 10 பேருக்கு அனுப்ப முடியாவிட்டால் திறக்காதே என்று எழுதியிருந்தான். ஏதோ ஒரு சுவாமி படம். அதை 24 மணி நேரத்தில் 10 பேருக்கு அனுப்பினால் 4 நாட்களில் ஒரு அதிசயம் நிகழுமாம். 12 மணி நேரத்தில் அனுப்பினால் 2 நாட்களில் எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வருமாம்.  6 மணி நேரத்திற்குள் அனுப்பினால் நிச்சயமாக மனதில் நினைத்திருக்கும் காரியம் நடக்குமாம்.

அனுப்பாமல் விட்டாலோ, டெலிட் செய்தாலோ நிச்சயம் கெடுதல் நிகழும். சொந்தங்கள் விலகிப் போகும். நஷ்டம் ஏற்படும் என்று என்னெல்லாம் உண்டோ அத்தனையும் எழுதியிருந்தது.

இப்படியா செய்வான்? என்று வெறுப்பாக வந்தது. கோபத்தில் ஃபோன் எடுத்து அவன் எண்ணுக்கு அழுத்தினாள். அவன் இன்னும் மீட்டிங்கில் என்பது கவனம் வர, வரட்டும் சாவடிக்கிறேன் என்று கறுவிக் கொண்டு நிதானமாக ஸ்ரீதர் பெயருக்கே பத்து மெயில் அனுப்பிவிட்டு அவன் முகவரியை ஸ்பாமில் போட்டாள் சந்தியா.


(டிஸ்கி: பாதி கதையில வக்கிரமா மனச அலைய விட்டுபோட்டு முடிவில பரதேசின்னு என்ன வஞ்சா நிர்வாகம் பொறுப்பில்லை. அப்பாடா. நானும் டிஸ்கி போட்டுட்டேன்.)

34 comments:

சூர்யா ௧ண்ணன் said...

சூப்பர் தலைவா!

வானம்பாடிகள் said...

சூர்யா ௧ண்ணன்

/சூப்பர் தலைவா!/

நன்றி.

கதிர் - ஈரோடு said...

//வக்கிரமா மனச அலைய விட்டுபோட்டு //

க்க்கும்.... இது வேறயா!

//பரதேசின்னு என்ன வஞ்சா நிர்வாகம் பொறுப்பில்லை.//

ச்சீ ச்சீ.... இவ்வளவு டீசண்டா திட்ட மாட்டோம்...

கதிர் - ஈரோடு said...

அன்புள்ள சந்தியாவுக்கு
நலம், நலமறியா ஆவல்

அந்த மெயிலில் ஒரு 10001 காப்பி அண்ணன் பாலாவுக்கு அனுப்பவும்

நன்றி

இப்படிக்கு
செயலாளர்,
வெண்ணை ஆதரவாளர் அமைப்பு

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு

டிஸ்கிக்கே பின்னூட்டம் வாங்கின பதிவர் நானாத்தான் இருப்பேன் போல. :))

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு

/அந்த மெயிலில் ஒரு 10001 காப்பி அண்ணன் பாலாவுக்கு அனுப்பவும்/

நமக்கு வந்த மெயில ட்ராஷ்ல போட்டுதான் கத எழுதினதே. நம்மகிட்டயேவா:))

தியாவின் பேனா said...

நல்ல கதை
அருமையான நடை
வாழ்த்துகள் நண்பா

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

பாலாண்ணே, உங்க மின்னஞ்சல் கதையும் கலக்கல்.

அந்த டிஸ்கியை மிகவும் ரசித்தேன் :)

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.

டிஸ்கின்னா என்னங்க அர்த்தம்? அது எந்த மொழியில இருந்து வந்த வார்த்தை?

வானம்பாடிகள் said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028)

/ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.

டிஸ்கின்னா என்னங்க அர்த்தம்? அது எந்த மொழியில இருந்து வந்த வார்த்தை?/

Disclaimer செல்லமா சொல்றாங்களாமா. :))

வானம்பாடிகள் said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028)
/பாலாண்ணே, உங்க மின்னஞ்சல் கதையும் கலக்கல்.

அந்த டிஸ்கியை மிகவும் ரசித்தேன் :)/

நன்றி செந்தில் :))

வானம்பாடிகள் said...

தியாவின் பேனா
/நல்ல கதை
அருமையான நடை
வாழ்த்துகள் நண்பா/
நன்றி தியா.

ஆரூரன் விசுவநாதன் said...

சிறுகதைப் போட்டி வைத்துவிடலாம் போலிருக்கிறது.

ஆளாளிற்கு பின்னியெடுக்கிறீர்கள்...

அடுத்தது யாரு?

வானம்பாடிகள் said...

ஆரூரன் விசுவநாதன்

/சிறுகதைப் போட்டி வைத்துவிடலாம் போலிருக்கிறது.

ஆளாளிற்கு பின்னியெடுக்கிறீர்கள்...

அடுத்தது யாரு?/

சந்தேகமே இல்லாம நீங்கதான் ஆரூரன். :)). நன்றி

நாடோடி இலக்கியன் said...

நல்ல ஃப்ளோ,

இடையில் வக்கிரமா சிந்திக்க வைத்து நீங்க வெற்றிபெற்றுவிட்டீர்கள்.

:)

வானம்பாடிகள் said...

நாடோடி இலக்கியன்
/நல்ல ஃப்ளோ,

இடையில் வக்கிரமா சிந்திக்க வைத்து நீங்க வெற்றிபெற்றுவிட்டீர்கள்.

:)/

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க ஐயா.

க.பாலாஜி said...

நான் காலையில பாத்துக்கிறேன். கொஞ்சம் பிஸி....இப்போதைக்கு ஓட்டுமட்டும்....

இராகவன் நைஜிரியா said...

// திறந்த பிறகு முட்டாள் தனமான அறிவிப்போடு தொடங்கியது கடிதம். இதை 10 பேருக்கு அனுப்ப முடியாவிட்டால் திறக்காதே என்று எழுதியிருந்தான். ஏதோ ஒரு சுவாமி படம். அதை 24 மணி நேரத்தில் 10 பேருக்கு அனுப்பினால் 4 நாட்களில் ஒரு அதிசயம் நிகழுமாம். 12 மணி நேரத்தில் அனுப்பினால் 2 நாட்களில் எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வருமாம். 6 மணி நேரத்திற்குள் அனுப்பினால் நிச்சயமாக மனதில் நினைத்திருக்கும் காரியம் நடக்குமாம். //

இந்த மாதிரி லொள்ளு மெயில் மாசம் ஒரு 10 வது வந்துகிட்டு இருக்கு. தாங்க முடியல சாமி...

இராகவன் நைஜிரியா said...

// (டிஸ்கி: பாதி கதையில வக்கிரமா மனச அலைய விட்டுபோட்டு முடிவில பரதேசின்னு என்ன வஞ்சா நிர்வாகம் பொறுப்பில்லை. அப்பாடா. நானும் டிஸ்கி போட்டுட்டேன்.) //

பழமை பேசி ஐயா அவர்கள் பாணியில் சொல்வதென்றால்

டிஸ்கி = பொறுப்பி = பொறுப்பு அறிவித்தல்.

வானம்பாடிகள் said...

க.பாலாஜி
/நான் காலையில பாத்துக்கிறேன். கொஞ்சம் பிஸி....இப்போதைக்கு ஓட்டுமட்டும்..../

:). நன்றி.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா
/இந்த மாதிரி லொள்ளு மெயில் மாசம் ஒரு 10 வது வந்துகிட்டு இருக்கு. தாங்க முடியல சாமி.../

ஆமாம் சார். இன்னைக்கு ஒண்ணு வரவும் அத டெலீட் பண்ணிட்டு தான் இதை எழுதினேன்.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா

/பழமை பேசி ஐயா அவர்கள் பாணியில் சொல்வதென்றால்

டிஸ்கி = பொறுப்பி = பொறுப்பு அறிவித்தல்./

இது நல்லாருக்கே. இது வரைக்கும் யாரும் பொருப்பேத்துண்டதே இல்லை. பொறுப்பில்லைன்னு சொல்றது தானெ இது:))

பழமைபேசி said...

இராகவன் ஐயாவிற்கு நன்றி!

பாலாண்ணே.... எங்கயோ போய்ட்டீங்க....மகிழ்ச்சி!

லவ்டேல் மேடி said...

சந்தியா வந்தனம் .... நல்லாத்தேன் இருக்குங்க தலைவரே....!! நல்ல வேல சிறுகதைன்னு முடுச்சுட்டீங்க....!! நன்றிங்கோவ்.....!!

வானம்பாடிகள் said...

பழமைபேசி
/இராகவன் ஐயாவிற்கு நன்றி!/
ஆமாங்க
/பாலாண்ணே.... எங்கயோ போய்ட்டீங்க....மகிழ்ச்சி!/
நன்றி

வானம்பாடிகள் said...

லவ்டேல் மேடி
/சந்தியா வந்தனம் .... நல்லாத்தேன் இருக்குங்க தலைவரே....!! நல்ல வேல சிறுகதைன்னு முடுச்சுட்டீங்க....!! நன்றிங்கோவ்.....!!/

:)) நன்றி

பிரியமுடன்...வசந்த் said...

suuppeer..............

க.பாலாஜி said...

ச்ச்ச....அந்த மெயில்ல எதாவது கில்மா இருக்கம்ணு ரொம்ப ஆர்வமா அந்த மெயில படிச்சா....இப்டி காமடி பண்ணிட்டீங்களே...

பர்சனல் மெயில் ஐ,டி,க்கு இதமாதிரி வந்தாலும் பரவாயில்ல...சில நேரங்கல்ல ஆபிஸ் ஐ.டி.க்கு கூட வருது...என்ன பண்றது....

கதையில் நல்ல ஓட்டம் ஆட்டம்....நல்லாருக்கு தலைவா....

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த்

/suuppeer............../

thank you vasanth

வானம்பாடிகள் said...

க.பாலாஜி
/கதையில் நல்ல ஓட்டம் ஆட்டம்....நல்லாருக்கு தலைவா..../

:)) நன்றி தலைவா

கார்த்திகைப் பாண்டியன் said...

கிளைமாக்ஸ் ஓகே தான்.. மத்தபடி கதையோட பிலோ சூப்பர்..

வானம்பாடிகள் said...

கார்த்திகைப் பாண்டியன்

/கிளைமாக்ஸ் ஓகே தான்.. மத்தபடி கதையோட பிலோ சூப்பர்../

நன்றிங்க.

துபாய் ராஜா said...

இயல்பான எழுத்துநடை.

சின்னக்கதையில் பல சம்பவங்கள் அருமை.

கிளைமாக்ஸ் ஜூப்பரு.... :))

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா
/இயல்பான எழுத்துநடை.

சின்னக்கதையில் பல சம்பவங்கள் அருமை.

கிளைமாக்ஸ் ஜூப்பரு.... :))

ஹெ ஹெ. நன்றிங்க