Wednesday, September 23, 2009

வெண்ணையின் லீலையை வென்றார் உண்டோ...

நம்ம வெண்ணெய் ஆதரவாளர்கள் கதிர், பாலாஜி இவங்களுக்கு இந்த இடுகை டிடிகேட் பண்றேன்(பண்பலைல இப்புடிதாங்க சொல்றாங்க).

கண்ணன் லீலையெல்லாம் தூக்கி சாப்டுடும் நம்ம வெண்ணெய் லீலை. பய புள்ளைக்கு பக்தின்னா அப்புடி ஒரு பக்தி. பண்டிகை வருதுன்னா பர பரன்னு ஆய்டுவான். பய புள்ளைக்கு பிரசாதம்னா அப்புடி ஒரு ஆசை. குற்றாலம் போய்ட்டு குளிக்காமன்னாலும் வருவான் கோவிலுக்கு போகாம வரமாட்டான்.

ஒரு மார்கழி மாசம் அண்ணா நகர் ஐயப்பன் கோவில்ல அபிஷேகத்துக்கு குடுத்திருந்தான். நல்ல பனி. காலைல 4 கே அபிஷேகம். பனியில போக வேணாம்டா. விடிஞ்சி மெதுவா போய் பிரசாதம் வாங்கிக்கன்னேன். பயபுள்ளட்ட ஒரு குணம் என்னன்னா, எதிர்த்தே பேசமாட்டான்.

காலைல எழுந்து பார்த்தா ஆளக்காணோம். சரி மணி ஏழாச்சே. கோவிலுக்கு போய் இருப்பான்னு, நான் காலைக்கடன் முடிச்சி, குளிச்சிட்டு வர‌ அய்யா வந்துட்டாரு. நெத்தியில சந்தனம் இருந்தாலும் சாந்தம் மிஸ்ஸிங். நம்மள பார்த்தா பம்முறான். அம்மா முகத்திலயும் என்னமோ ஒரு அவஸ்தை. சாப்பிட்டு அலுவலகம் கிளம்பி ஃப்ரிட்ஜ் மேல வச்சிருந்த கடிகாரத்த தேடினா காணோம்.

எங்க போச்சி?  இங்க தான வெச்சேன். காலைல மணி பார்த்து தானெ குளிக்கப் போனேன்னா கோரசா அம்மாவும் வெண்ணையும் அவனாங்கறாங்க. வா ராசா, உக்காரு. என்னாச்சின்னா ஒருத்தர ஒருத்தர் பார்த்துகிட்டு நீ சொல்லு நீ சொல்லுங்கறாங்க. அட சொல்லுடான்னா, முதல் நாள் சரின்னு போய் படுத்தவரு, அதென்ன நீ சொல்லி நான் விடிஞ்சப்புறம் போறதுன்னு அஞ்சரைக்கே கிளம்பி போயிருக்காரு.

இவரு சைக்கிள்ள போய்ட்டு வந்துண்டிருக்க ஒருத்தன் பின்னடி வந்து முட்டி விளுந்தா மாதிரி விளுந்து, பாக்கட்ல கை விட்டு ஒரு உடைஞ்சி போன ஊசி மருந்து வயால், ஒரு ப்ரிஸ்கிரிப்ஷன் நனைஞ்சது வெச்சிகிட்டு, மவனே எங்கம்மாக்கு கேன்ஸர். மருந்து வாங்கிட்டு போறேன். இடிச்சி நாசம் பண்ணிட்டியே. 600 ரூபா மருந்து போச்சி. அம்மா உசிரும் போய்டும் நாயேன்னு ரெண்டு வெச்சிருக்கான். மதன் பாப் மாதிரி, அடிக்கிற வேலைல்லாம் வெச்சிக்காத.   காசு தர மாட்டேன்னா சொன்னேன்னு சொல்லிட்டான் நம்மாளு.

அவனும் சரின்னு கூடவே வந்தவன், ஐ.சி.எஃப். குவார்டர்ஸ் வந்ததும் ஒரு வீட்டைக் காண்பிச்சி ஐயரூட்டுல சைக்கிள‌ வச்சி பூட்டுடான்னு சொல்லி சாவிய புடிங்கிட்டான். இவரும் விட்டுட்டு, அவன் வண்டில வந்து , யம்மா கிட்ட பஞ்சாயத்து வெச்சிருக்காரு. அந்தாளு அய்யோ எங்கம்மாக்கு என்னாச்சோன்னு சீன் போடவும், பதறிப் போய், இருப்பா காசு தரேன்னு உள்ள வந்த நேரம் பார்த்து, இவனும் உள்ள வந்து லவட்டிட்டான் போல.

இப்புடி ஒரு அம்மாக்கு, இப்படி ஒரு புள்ளையாடான்னு (என்னா நக்கலு) திட்டி, வாடான்னு இழுத்துண்டு போய் சைக்கிள‌ கொண்டு போக சொல்லிட்டு, மவனே மருந்து வாங்கிட்டு போறேன். எங்கம்மாக்கு ஏதாவது ஆச்சோ, சும்மா விடமாட்டேன்னு ஒரு பிட்ட போட்டு போய்ட்டான். அதான் ரெண்டு பேருக்கும் அவ்வளவு கவலை. ஒரு ரெண்டு நாள் மந்திரிச்சி விட்டா மாதிரியே இருந்தாங்க.

ஒரு சந்தோஷமான விஷயம். அந்தம்மாக்கு ஒன்னும் ஆவக் கூடாதுன்னு எந்த சாமிக்கும் வேண்டிகிட்டு அபிஷேகத்துக்கு குடுக்கலை. அவ்வளவு சோகத்துலையும் ஏந்தம்பி, அவன் அய்யரூட்டுல வெய்ன்னா வெச்சிட்டு வந்துட்டியே, எப்புடிடா? எடுக்கப் போறப்ப அவங்க கிட்டயும் மல்லுக் கட்டவான்னா, ரொம்ப பெருமையா சொல்றான். வைக்கறப்பவே பார்த்தானாம். பெயர் பலகைல ஏதோ ஐயர்னு பேரு இருந்திச்சாம். காசுதான் குடுத்தாச்சில்ல. நீயே வண்டிய எடுத்துக் குடுன்னு சொல்லிதான் எடுத்துண்டு வந்தானாம். வெவரமான பையனா இல்லையா?


18 comments:

கதிர் - ஈரோடு said...

வாச்சுதானே போச்சு...

ஃபிரண்ட்ஸ் படத்தில வர்ற மாதிரி உங்கள கட்டிலோட தூக்கிட்டுப்போக பார்த்துக்கிட்ட தம்பி நன்றி சொல்லறத விட்டுப்போட்டு

பேச்சப்பாரு, பழமையப்பாரு


இனிமே இடுகை போடறப்போ ஸ்ரீ வெண்ணை துணைனு போடுங்க... அல்லது எல்லாச் சிரிப்பும் அவருக்கே சமர்ப்பணம்னு போடுங்க....


சரியா?
இல்லாங்காட்டி ரசிகர் மன்றத்தில இருந்து நெகடிவ் ஓட்டு போட வச்சிராதீங்க

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு
/வாச்சுதானே போச்சு.../

த்தோடா. அந்த 600 ரூபா என்னவாம்?

/ஃபிரண்ட்ஸ் படத்தில வர்ற மாதிரி உங்கள கட்டிலோட தூக்கிட்டுப்போக பார்த்துக்கிட்ட தம்பி நன்றி சொல்லறத விட்டுப்போட்டு

பேச்சப்பாரு, பழமையப்பாரு/

அதானே. :))

/இனிமே இடுகை போடறப்போ ஸ்ரீ வெண்ணை துணைனு போடுங்க... அல்லது எல்லாச் சிரிப்பும் அவருக்கே சமர்ப்பணம்னு போடுங்க..../

அதுக்கும் ப்ரசாதம் கேப்பானே.

/இல்லாங்காட்டி ரசிகர் மன்றத்தில இருந்து நெகடிவ் ஓட்டு போட வச்சிராதீங்க/

இது வேறயா.

அதுக்கப்புறம் ஒரு வேலைல சேர்ந்து அலுவலக பக்கமா வரும்போதெல்லாம், எங்கடான்னா முதுகுல ஒரு பைல 3 லட்சம், ஆறு லட்சம்னு கேஷ் வெச்சிகிட்டு பேங்க்ல கட்டப்போறேன்னு போவான். இத்தன காசு எப்புடிடா தேத்தப் போறேன்னு நான் 2 வருஷம் தவிச்ச தவிப்பு எனக்கில்ல தெரியும்.

இது நம்ம ஆளு said...

பெயர் பலகைல ஏதோ ஐயர்னு பேரு இருந்திச்சாம். காசுதான் குடுத்தாச்சில்ல. நீயே வண்டிய எடுத்துக் குடுன்னு சொல்லிதான் எடுத்துண்டு வந்தானாம். வெவரமான பையனா இல்லையா?
:)

இராகவன் நைஜிரியா said...

வீட்டுக்கொரு தம்பி இப்படி இருப்பாங்களா?

ம்... என்னா சொல்வது...

வெண்ணை ரசிகர் மன்றமா? மன்றம் கட்சியாகும் போது சொல்லி அனுப்புங்கப்பா... பொருளாலர் பதவிக்கு நான் ரெடி.

வானம்பாடிகள் said...

இது நம்ம ஆளு

வாங்க :))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா
/வெண்ணை ரசிகர் மன்றமா? மன்றம் கட்சியாகும் போது சொல்லி அனுப்புங்கப்பா... பொருளாலர் பதவிக்கு நான் ரெடி./

கதிருக்கு போட்ட பின்னூட்டம் பார்த்ததுக்கப்புறமுமா. :))

க.பாலாஜி said...

//நீயே வண்டிய எடுத்துக் குடுன்னு சொல்லிதான் எடுத்துண்டு வந்தானாம். வெவரமான பையனா இல்லையா?//

நல்ல வெவரம்தான்...

போயும் போயும் அவரு உங்களுக்கு தம்பியா பொறந்துட்டாரே....அத நெனச்சாதான் கஷ்டமா இருக்கு...

//ஃபிரண்ட்ஸ் படத்தில வர்ற மாதிரி உங்கள கட்டிலோட தூக்கிட்டுப்போக பார்த்துக்கிட்ட தம்பி நன்றி சொல்லறத விட்டுப்போட்டு//

அதானே...இதை நான் மென்மையாக கண்டிக்கிறேன்...

வானம்பாடிகள் said...

க.பாலாஜி
/நல்ல வெவரம்தான்.../

அது
/போயும் போயும் அவரு உங்களுக்கு தம்பியா பொறந்துட்டாரே....அத நெனச்சாதான் கஷ்டமா இருக்கு.../

அட நீங்க வேற. கதிர் சொன்னாரேன்னு கூப்டு காட்டுனேன். எப்பவும் போல மதன் பாப் வெடிச்சிரிப்பு சிரிச்சான்.:))

/அதானே...இதை நான் மென்மையாக கண்டிக்கிறேன்.../

இதை நான் வன்மையாக ஆமோதிக்கிறேன்:))

ஆரூரன் விசுவநாதன் said...

என்னங்கண்ணா......ஆதரவாளர்கள் லிஸ்ட்ல் என் பேரை உட்டுட்டீங்க....

இதெல்லாம் நல்லால்ல....சொல்லிபுட்டேன்...


அன்புடன்
ஆரூரன்

வானம்பாடிகள் said...

ஆரூரன் விசுவநாதன்

/என்னங்கண்ணா......ஆதரவாளர்கள் லிஸ்ட்ல் என் பேரை உட்டுட்டீங்க....

இதெல்லாம் நல்லால்ல....சொல்லிபுட்டேன்.../

அட நீங்கதான தலைவருன்னு நினைச்சேன்.:))

பிரியமுடன்...வசந்த் said...

என்னா நடக்குது சார்?

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த்
/என்னா நடக்குது சார்?/

:))காமெடிதான்

பழமைபேசி said...

நெம்ப வெவரந்தான்!

இரசிகை said...

:)

வானம்பாடிகள் said...

பழமைபேசி
/நெம்ப வெவரந்தான்!/

அட நிசமாத்தான். அடுத்த வெண்ணையில சொல்லுறேன் மிச்சத்த.

வானம்பாடிகள் said...

இரசிகை
/:)/

:)

வானம்பாடிகள் said...

ஐ. எனக்கும் நூறு பேரு இருக்காங்கப்பா. நன்றி!

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//பயபுள்ளட்ட ஒரு குணம் என்னன்னா, எதிர்த்தே பேசமாட்டான்.

காலைல எழுந்து பார்த்தா ஆளக்காணோம்.//

சூப்பர் தம்பி உங்களுக்கு.....

நல்ல வேலை எனக்குத் தம்பி இல்லை.. அண்ணன் மட்டும்தான்..