Sunday, September 13, 2009

உக்காந்து யோசிப்பாய்ங்களோ?..

இந்தியாவின் அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் குப்பை பொறுக்கி பிழைக்கும் சிறுவர்களிடமும், மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்யும் சிறுவர்களிடமும் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் பெருமைப் பட முடியவில்லை.

உங்கள்ள டூ வீலர் வெச்சிருக்கிறவங்க மெகானிக் ஷாப்ல சர்வீசுக்கு விடும்போது பார்த்திருப்பீங்க. பெட்ரோல் டாங்க்ல இருந்து பெட்ரோல் எடுக்க வாண்டுப் பசங்க போட்டி போட்டுகிட்டு ஓடி வருவாங்க. விஷயம் என்ன தெரியுமா? பெட்ரோல் உரியறதில ஒரு ட்ரிக் கண்டு பிடிச்சிருக்குங்க பரதேசிப் பயபுள்ளைங்க. உசுக்குனு உரியறபோதே கொஞ்சம் ஆவியாகி நுரையீரலுக்குள்ள போறா மாதிரி உறிஞ்சா, போதை வருமாம். அதுக்குத்தான் போட்டா போட்டி. ஏண்டா இப்புடின்னா மெகானிக் அண்ணன் ஸ்பேன்னர்ல அடிக்கிற வலி. வேல செய்யிற வலி தெரியாம இருக்கவாம். இந்த போதைல 12ம் நம்பர் ஸ்பேன்னர் கேட்டா 14 குடுத்துட்டு அதுக்கும் வாங்குவானுங்க.

ஃபெவி பாண்ட்னு ஒன்னு. சைகிள் டியூப், ஓட்ட ஒடசல் ஒட்றதுக்கு கண்டு பிடிச்சது. கண்டு பிடிச்சவன் நினைச்சிருப்பானா. இந்தப் பய புள்ளைங்க இதுலயும் போதை வர வைப்பானுங்கன்னு. இன்னைக்கு தினத்தந்தில ஃபோடோ  கூட செயல் முறை விளக்கம். ஒரு 12 வயசு பயபுள்ள அண்ணா நகர்ல நடு வீதில ஒரு பாலிதீன் கவர்ல ஃபெவிபாண்ட் பசைய பிதுக்கி கசக்கி அப்பப்ப வாய வெச்சி உறிஞ்சி கொஞ்ச நேரத்துல போதை தலைக்கேற தானே பேசிண்டு பாடிண்டுன்னு இருந்திச்சாம். நம்மூர்லதான் காகா கரண்ட் கம்பில அடிபட்டு விழுந்தாலே நாட்டாமைய கூட்டி நாள் கணக்கா கூட்டம் போட்டு பேசுவமே. அப்படி இவனையும் சுத்திகிட்டாங்களாம்.

அய்யா போதை தெளிஞ்சி டெமோ பண்ணி காண்பிச்சி விளக்கினாராம். வீட்டாண்ட 8, 9 வயசு பசங்க கத்து குடுத்தாங்களாம். கோட்டர் காசு அதிகமாம். பசங்களுக்கு குடுக்க மாட்டாங்களாம். இது சீப்பாம். போதை அதிகமாம். கைல ரேஷன் கார்டு வச்சிருந்தானாம். அது எதுக்குடான்னு ஒரு மண்டையனுக்கு குடைச்சல். கேட்டதுக்கு பயபுள்ள சொல்லி இருக்கு. அம்மா ரேஷன் வாங்க சொல்லி காசு குடுத்திச்சாம் 100 ரூ. 20 ரூபாய்க்கு ஃபெவிபாண்ட் வாங்கிட்டானாம். ரேசன் வாங்க மாட்டானாம். கேட்டா தொலைஞ்சி போச்சின்னு பொய் சொல்லிக்குவானாம். வர்ட்டான்னு சொல்லாம போய்ட்டானாம்.

இனிமே ஃபெவிபாண்ட் பிச்சிக்கும். பான்பராக்கும், கைனியும் தடை செய்யப்பட்டதுன்னு சொல்லியும் 5 வயசு பையன்ல இருந்து எல்லாரும் அதோடயே அலைறாங்க. மாவா கடை ஒண்ணுதான் லோகத்துலயே போர்ட் இல்லாம நடக்குறது போல. கார் டியூப்ல கண்ட கசமாலத்தையும் போட்டு வரட்டு வரட்டுன்னு தேய்ச்சி, சவரன் கணக்கா குடுக்குறான். போலிசுக்காரங்களுக்கு தனி பேக்கேஜ் ரெடியா எடுத்து வைக்கிறான். ஓசிக்கே, டாய், சும்மா ஏதோ கலக்குறியா? சப்பையா இருக்குன்னு ஓபனா மிரட்டல் விட்டு வாங்கிக்கிறானுங்க.  போற போக்க பார்த்தா அரசாங்கமே இப்படி கண்டதையும் உபயோகிச்சி பசங்க கெட்டு போகுதுங்க,அதனால சின்ன பசங்களுக்குன்னே டாஸ்மாக் ஜூனியர் ஆரம்பிச்சாலும் ஆரம்பிக்கலாம்.
****

34 comments:

பழமைபேசி said...

//சின்ன பசங்களுக்குன்னே டாஸ்மாக் ஜூனியர் ஆரம்பிச்சாலும் ஆரம்பிக்கலாம்.
//

இஃகிஃகி... வேதனையான விசயந்தான்... ஆனா சிரிப்பு மூட்டிறீயளே?

☀நான் ஆதவன்☀ said...

:(

பிரியமுடன்...வசந்த் said...

பாவிப்பசங்க பிஞ்சு வயித்துல நஞ்ச விதைக்கிறாய்ங்களே...

கொடுமை சார்

துபாய் ராஜா said...

//போற போக்க பார்த்தா அரசாங்கமே இப்படி கண்டதையும் உபயோகிச்சி பசங்க கெட்டு போகுதுங்க,அதனால சின்ன பசங்களுக்குன்னே டாஸ்மாக் ஜூனியர் ஆரம்பிச்சாலும் ஆரம்பிக்கலாம்..//

அதுவும் இலவசமாகவே கொடுப்பார்கள் சீக்கிரம்..... :((

வானம்பாடிகள் said...

பழமைபேசி
/இஃகிஃகி... வேதனையான விசயந்தான்... ஆனா சிரிப்பு மூட்டிறீயளே?/

துன்பம் வரும் வேளையிலே... அது சரி, மாப்பு ஆளையேக் காணோம். கண்டா முடுக்கி உடுங்க இந்தப்பக்கம்.

கலகலப்ரியா said...

பெவி... பாண்டு... ஓட்ட உடைசல்... டெமோ.. ரேஷன் கார்டு... ஷாப்பு சர்வீசு.. பான்பராக்.. கைனி... மாவா கடை.. கார் டியூப்பு... ஓசி.. பக்கேஜ்.. டாஸ்மாக்... ஜூனியரூ..

பிரபு தேவா சார்.. உங்களுக்கு ஒரு பாட்டு ரெடிங்கன்னோவ்...

புதிய வானம்... உங்கள் புலம்பல்கள் தொடரட்டும்... பலன் கிட்டட்டும்... என்று கொட்டும் முரசு... er... damilla eluthinaa ennai ariyaama vaarththai kottuthu... saaringa... varttaa...! bai bai..

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா
/புதிய வானம்... உங்கள் புலம்பல்கள் தொடரட்டும்... பலன் கிட்டட்டும்... என்று கொட்டும் முரசு... er... damilla eluthinaa ennai ariyaama vaarththai kottuthu... saaringa... varttaa...! bai bai../

அதென்ன புதிய வானம்.

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா..
/பெவி... பாண்டு... ஓட்ட உடைசல்... டெமோ.. ரேஷன் கார்டு... ஷாப்பு சர்வீசு.. பான்பராக்.. கைனி... மாவா கடை.. கார் டியூப்பு... ஓசி.. பக்கேஜ்.. டாஸ்மாக்... ஜூனியரூ../

இதுல தாங்க இன்னைக்கு பசங்க தினசரி வாழ்வு ஓடுது.

வானம்பாடிகள் said...

☀நான் ஆதவன்☀
/:(/
வாங்க ஆதவன்

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த்
/பாவிப்பசங்க பிஞ்சு வயித்துல நஞ்ச விதைக்கிறாய்ங்களே...

கொடுமை சார்/

இதுங்களே கண்டு புடிக்குதுங்க. அதான் புடி படல.

அப்பாவி முரு said...

என்ன சொல்றீங்க...

படிக்கவே வேதனையா இருக்கு, படிக்கும் போதே கண்ணீர் வருது.


வாழ்க ஜனநாயகம்....

வாழ்க அரசியல்வாதிகள்.

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா
/அதுவும் இலவசமாகவே கொடுப்பார்கள் சீக்கிரம்..... :((/

இதமட்டும் இலவசமா குடுக்கவே மாட்டங்க ராஜா.

வானம்பாடிகள் said...

அப்பாவி முரு
/என்ன சொல்றீங்க...

படிக்கவே வேதனையா இருக்கு, படிக்கும் போதே கண்ணீர் வருது.


வாழ்க ஜனநாயகம்....

வாழ்க அரசியல்வாதிகள்./

ஆமாங்க முரு. தினத்தந்தில ஒரு பெரிய பத்தி. ரொம்ப விலாவாரியா இருக்குது. இங்க போடப்போய் அதனால யாராவது ஒருத்தராவது திசை திரும்பிடுவாங்களோன்னு பயம்மா இருந்தது. அதான் போடல. இப்பிடி நிறைய வழி வெச்சிருக்குதுங்க இந்த வாண்டுகள்.

இராகவன் நைஜிரியா said...

ஆம் நீங்க சொன்ன விச்யம பல வருடங்களுக்கு முன்பே ஒரு பத்திரிக்கையில் படித்த ஞாபகம் வருது. பெட்ரோல் பங்கில் வேலை செய்பவர்களுக்கு, அந்த வாசனை ஒரு போதை மாதிரி என்று அப்போது படித்த ஞாபகம். ஆனால் மெக்கானிக்கிடம் வேலை செய்யும் பையன்கள் பற்றி நெஞ்சு பதற வைக்குது.

ஃபெவிபாண்ட் மாதிரி, டைப் அடித்தது தவறாக அடித்துவிட்டால், அதை சரி செய்வதற்கு எரேச்கஸ் என்று ஒன்று உண்டு. அதை வைத்தும் போதைக்கு உபயோகப் படுத்துவதாக கேள்விப் பட்டதுண்டு.

உலகம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு. அசோகா பாக்கு போட்டாலே தப்பு என்று அடிவாங்கிய காலம் போய், இப்ப எங்கேயோ போயிட்டு இருக்கு.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா

/ஃபெவிபாண்ட் மாதிரி, டைப் அடித்தது தவறாக அடித்துவிட்டால், அதை சரி செய்வதற்கு எரேச்கஸ் என்று ஒன்று உண்டு. அதை வைத்தும் போதைக்கு உபயோகப் படுத்துவதாக கேள்விப் பட்டதுண்டு.

உலகம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு. அசோகா பாக்கு போட்டாலே தப்பு என்று அடிவாங்கிய காலம் போய், இப்ப எங்கேயோ போயிட்டு இருக்கு./

ஆமாம் சார். பெட்ரோலியம் பேஸ்டு ப்ராடக்ட்ஸ், நெயில் பாலிஷ் ரிமூவர் கூட. யாரும் கண்டுக்கறதில்லை சார். கவுண்டர் எட்டாம நின்னு அண்ணா சாந்தி பாக்குன்னு வாங்கி உரிச்சி லாவகமா இடுக்கிக்கிட்டு ஸ்கூல் போகுதுங்க.

கதிர் - ஈரோடு said...

டைப் ரைட்டிங்ல உபயோகிக்கிற ஒயிட்னர் செம கிக் தருமாம்...

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு
/டைப் ரைட்டிங்ல உபயோகிக்கிற ஒயிட்னர் செம கிக் தருமாம்.../
ம்ம்ம். இராகவன் ஐயாவும் இதான் சொன்னாரு. எங்க ஆளக் காணோம்.

லவ்டேல் மேடி said...

வால் பையன் மாதிரி...... எல்லாம் பிஞ்சுலையே பழுத்துருதுங்க... என்ன பண்ணுறது....!!

நசரேயன் said...

நான் இப்படி யோசித்ததே இல்லை

வானம்பாடிகள் said...

லவ்டேல் மேடி
/வால் பையன் மாதிரி...... எல்லாம் பிஞ்சுலையே பழுத்துருதுங்க... என்ன பண்ணுறது....!!/

வாங்க மேடி:)).அந்த தம்பிய பார்த்தா அப்புடி தெரியலையே. குசும்பன்னு தெரியுது அவ்ளோதான்.

வானம்பாடிகள் said...

நசரேயன்

/நான் இப்படி யோசித்ததே இல்லை/

வாங்க நசரேயன். எத சொல்றீங்க. இடுகையவா, பசங்களையா?

Thirumathi Jaya Seelan said...

ஆக்கத்துக்கு விஞ்ஞானியாகச் சொன்னா இந்த பசங்க இப்பவே போதைக்கு விஞஞானியாகியிருவாங்களோ?
நீரில்லாமல் கருகும் நாற்றுகள்
வயலில்
போதையில் கருகும் சிறுசுகள்
வீட்டில்
நினைத்தாலே பயமாயிருக்கு.....

வானம்பாடிகள் said...

Thirumathi Jaya Seelan

/நினைத்தாலே பயமாயிருக்கு...../
ஆமாங்க.

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//இந்தியாவின் அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் குப்பை பொறுக்கி பிழைக்கும் சிறுவர்களிடமும், மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்யும் சிறுவர்களிடமும் இருப்பதாகத் தெரிகிறது//

இந்த வரிகளை படித்த போது இருந்த சந்தோசம்....

//சின்ன பசங்களுக்குன்னே டாஸ்மாக் ஜூனியர் ஆரம்பிச்சாலும் ஆரம்பிக்கலாம்.//

இந்த வரிகளை படித்த போது அந்த சந்தோசத்தை காலம் திருடிக்கொண்டு போயிருந்தன..!

வானம்பாடிகள் said...

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்
/இந்த வரிகளை படித்த போது அந்த சந்தோசத்தை காலம் திருடிக்கொண்டு போயிருந்தன..!/

ஆமாங்க. என்ன கொடுத்தாலும் கிடைக்காத சிறு பிராயத்தை தொலைக்கிறார்களே என்ற ஆதங்கம்.

JesusJoseph said...

:((
i can't read your blog.
its dark blue background and the letters are black color.
can you please change it

i am selecting all the text and reading.

joseph
www.sirippuulagam.com

வானம்பாடிகள் said...

JesusJoseph

/:((
i can't read your blog.
its dark blue background and the letters are black color.
can you please change it/

sure sir, i will try. thank you so much

SUBBU said...

:((((((((

கனககோபி said...

தலைப்பைப் பார்த்ததும் நகைச்சுவை என்று நினைத்தேன்.
இது வேதனைப்பட வேண்டிய விடயம்.
சிரிக்க முடியாதே...
நல்ல

வானம்பாடிகள் said...

SUBBU Says:

/:((((((((/

mmm. yes subbu

வானம்பாடிகள் said...

கனககோபி
/தலைப்பைப் பார்த்ததும் நகைச்சுவை என்று நினைத்தேன்.
இது வேதனைப்பட வேண்டிய விடயம்.
சிரிக்க முடியாதே...
நல்ல/

ஆமாங்க சார். நன்றிங்க வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்.

பிரியமுடன் பிரபு said...

நம்மூர்லதான் காகா கரண்ட் கம்பில அடிபட்டு விழுந்தாலே நாட்டாமைய கூட்டி நாள் கணக்கா கூட்டம் போட்டு பேசுவமே
//
நல்ல சொன்னீங்க

வானம்பாடிகள் said...

பிரியமுடன் பிரபு
/நல்ல சொன்னீங்க/
நன்றி பிரபு.

அஹமது இர்ஷாத் said...

:))