Thursday, September 10, 2009

சொல்லாமல் மறைத்த பதில்கள்..

அம்மா: மண்ணுல படுத்து புரண்டு எழுந்து வருவியா. யூனிஃபார்ம்லாம் இவ்வளவு அழுக்கா வந்தா யாரு துவைக்கிறது?
மகன்: (வாஷிங் மெஷின் தான். நீங்க ஸ்கூல்ல விளையாடும் போது தரைல கம்பளம் விரிச்சிட்டா விளையாடினீங்க)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா: கண்ணுல்ல. டாக்டர் சொன்னாங்கல்ல. நிறைய காய் சாப்பிடணும்னு. சாப்புடும்மா.
மகன்: ( நம்ம வீட்ல ஒரு நாளாவது சாப்பிட்டிருந்தா அப்படி சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறீங்க?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: ஆங்கிலத்துல என்ன மார்க் எடுத்திருக்க? இதெல்லாம் ஒரு மார்க்கா?
மகன்: (அன்னைக்கு அந்த அங்கிள் கலியாணத்தில உங்களுக்கு ரெண்டு வரி ஒழுங்கா ஆங்கிலத்தில எழுத வராதுன்னு உங்க பாஸ் யார் கிட்டயோ சொல்லிண்டிருந்தாங்களே. நான் கேட்டேனா?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: ஆயிரம் ஆயிரமா ஃபீஸ் கட்டுறோம்ல. நல்லா படிச்சா என்ன?
மகன்: (லட்சம் லட்சமா சம்பளம் தராங்களே. நீங்க வேலை செஞ்சா என்ன?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா: விளக்கு வெச்சாச்சி. இன்னும் காமெடி சானல் பார்த்துண்டிருக்காம போய் படி.
மகள்: (சீரியல் ஆரம்பிச்சிடும். ரிமோட்ட குடுன்னு நேர்மையா கேட்டா என்ன குறைஞ்சிடும்)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: என்னேரமும் டிவி, விளையாட்டுன்னு இல்லாம நிறைய படிக்கலாமே. அறிவு வளரும்ல?
மகன்: (நீங்க எனக்கு அப்பாவாகி இத்தன வருஷத்தில ஒரு நாளும் படிச்சி நான் பார்க்கலையே.)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: புக், கைட்னு எல்லாம் வாங்கிக் குடுத்திருக்கேன்ல. ஒரு நாளாவது படிக்கிறியாடா?
மகன்: (வாங்கிக் கொடுக்கிறதுக்கு ஒரு மணிநேரம் ஆகி இருக்குமா? வருஷம் புல்லா நான் படிக்கணும்னு எதிர்பார்த்தா என்ன நியாயம்)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா: கணேஷ் எவ்ளோ மார்க் வாங்கறான். உனக்கென்ன கேடு?
மகன்: (கணேஷ் ஸ்கூலுக்கு கார்ல வரான். அவனுக்கு லேப்டாப் இருக்கு. அதுக்கு ஏற்பாடு பண்ண முடியுமா)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: அந்த அங்கிள் ஏதோ கேட்டா  பதில் சொல்லாம போறது மேன்னர்ஸ் இல்லை. தெரிஞ்சதா?
மகன்:(அவங்க போனப்புறம் சரியான சாவுகிராக்கின்னு சொல்றது மேன்னர்சாப்பா?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டீச்சர்: கணக்குப் பரீட்சைல எவ்வளவு சுலபமா கணக்கு குடுத்தும் இவ்வளவு பேர் தப்பு தப்பா பண்ணி இருக்கீங்களே?
மாணவன்:(எங்கண்ணனுக்கும் நீங்கதான் டீச்சராமே. சிலபஸ் மாறிடுச்சின்னு கணக்கெல்லாம் நீங்களும் திணறி திணறிதான் போடுறீங்கன்னு சொல்றான்.)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டீச்சர்: பசங்களா, நானும் ஒரு அப்துல் கலாம் மாதிரி வருவேன்னு வெறியோட படிக்கணும்.
மாணவன்:( சே. இந்த கலாம் அங்கிள் நீங்க படிக்கும் போதே விஞ்ஞானியாகி இருக்கலாம்)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டீச்சர்: பரிட்சைல காபி அடிச்சா அப்புறம் பரீட்சை எழுத முடியாது, சாக்கிறதை.
மாணவன்:(சாக்கிறதையா அடிச்சா நீங்க புடிக்கவே முடியாதே.)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: அரை வருச பரீட்சைல கணக்குல 100 வாங்கினா உனக்கொரு ஜீன்ஸ் வாங்கித் தரேன்.
மகன்:( அதே பேப்பர் நீங்க எழுதி 50 மார்க் வாங்கினா நான் ஒரு மாசம் டி.வி. பார்க்காம இருக்கேன்.)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா: எப்போ பார்த்தாலும் பிஸா, நூடில்ஸ்னு ஃபாஸ்ட்ஃபுட் உடம்புக்கு நல்லதில்ல.
மகன்:(எங்கயாவது போய்ட்டு , ஏங்க ரொம்ப டயர்ட், பிஸா வாங்கிண்டு போலாம்னு சொல்றப்போ நல்லதோ?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: டெய்லி அகராதி எடுத்து ஒரு பத்து வார்த்தை பார்த்து அர்த்தம் தெரிஞ்சிக்கடா.
மகன்:(தாத்தாக்கு அவங்கப்பா குடுத்தது மூலை மடியாம இருக்கே அதாப்பா?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: கழுத வயசாச்சி. எப்பவும் தங்கச்சி கூட சண்டையா? விட்டுக்குடுத்தா என்ன?
மகன்:(ங்கொய்யாலே. காலைல சாக்ஸக் காணோம்னு எனக்கு சாப்பாடு கூட கட்டவிடாம‌ சண்டபோட்டதுக்கு நான் ஏதாவது சொன்னேன்?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: தினம் டீச்சர் கிட்ட இருந்து கம்ப்ளெயின்ட். மானம் போவுது.
மகன்:( ராத்திரி 9 மணிக்கு மேல ப்ரோஜக்ட் மேனஜர் கிழிக்கிறது பால்கனில நின்னாலும் கேக்குதே. ஒரு வார்த்த நான் இப்படி கேட்டிருப்பேன்?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: மணி பத்தாகுது. போய் படு. எப்போ பார்த்தாலும் நெட்ல
மகன்:(உருப்படாத இடுகை போடுறதுக்கு அலம்பல பாரு.)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

30 comments:

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

இராகவன் நைஜிரியா said...

உள் மனசு... பேசுது... மகன் ரூபத்தில... நடக்கட்டும்..

இராகவன் நைஜிரியா said...

// அப்பா: கழுத வயசாச்சி. எப்பவும் தங்கச்சி கூட சண்டையா? விட்டுக்குடுத்தா என்ன?
அம்மா:(ங்கொய்யாலே. காலைல சாக்ஸக் காணோம்னு எனக்கு சாப்பாடு கூட கட்டவிடாம‌ சண்டபோட்டதுக்கு நான் ஏதாவது சொன்னேன்?) //

இரண்டாவது வரி மகன் என்று இருக்க வேண்டாமோ.....???!!! :-)

இது நம்ம ஆளு said...

அப்பா: மணி பத்தாகுது. போய் படு. எப்போ பார்த்தாலும் நெட்ல
மகன்:(உருப்படாத இடுகை போடுறதுக்கு அலம்பல பாரு.)
:)
:)
:)

இராகவன் நைஜிரியா said...

// அப்பா: டெய்லி அகராதி எடுத்து ஒரு பத்து வார்த்தை பார்த்து அர்த்தம் தெரிஞ்சிக்கடா.
மகன்:(தாத்தாக்கு அவங்கப்பா குடுத்தது மூலை மடியாம இருக்கே அதாப்பா?) //

நல்ல அகராதி பிடிச்ச பையனா இருப்பார் போலிருக்கு/

இராகவன் நைஜிரியா said...

// அம்மா: மண்ணுல படுத்து புரண்டு எழுந்து வருவியா. யூனிஃபார்ம்லாம் இவ்வளவு அழுக்கா வந்தா யாரு துவைக்கிறது?
மகன்: (வாஷிங் மெஷின் தான். நீங்க ஸ்கூல்ல விளையாடும் போது தரைல கம்பளம் விரிச்சிட்டா விளையாடினீங்க) //

சரியான கேள்வி... ஆனா கேட்கத்தான் முடியாதே

இராகவன் நைஜிரியா said...

// அம்மா: கண்ணுல்ல. டாக்டர் சொன்னாங்கல்ல. நிறைய காய் சாப்பிடணும்னு. சாப்புடும்மா.
மகன்: ( நம்ம வீட்ல ஒரு நாளாவது சாப்பிட்டிருந்தா அப்படி சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறீங்க?)//

இது மகன் கேட்கிற மாதிரி இல்லையே... அப்பா சொல்லி கொடுத்து மகன் கேட்காமல் விட்ட கேள்விங்க இது..

இராகவன் நைஜிரியா said...

// அப்பா: ஆயிரம் ஆயிரமா ஃபீஸ் கட்டுறோம்ல. நல்லா படிச்சா என்ன?
மகன்: (லட்சம் லட்சமா சம்பளம் தராங்களே. நீங்க வேலை செஞ்சா என்ன?)//

அண்ணே எங்க அண்ணே லட்சத்தில் சம்பளம் தர்றாங்க... 5 இலக்க எண் கிடைப்பதே ரொம்ப கஷ்டமா இருக்கண்ணே/

இராகவன் நைஜிரியா said...

// அப்பா: என்னேரமும் டிவி, விளையாட்டுன்னு இல்லாம நிறைய படிக்கலாமே. அறிவு வளரும்ல?
மகன்: (நீங்க எனக்கு அப்பாவாகி இத்தன வருஷத்தில ஒரு நாளும் படிச்சி நான் பார்க்கலையே.)//

ஓ அப்பா படிச்சாத்தான் மகன் படிப்பாரா? நல்லா இருக்குங்க நியாயம்...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா

/உள் மனசு... பேசுது... மகன் ரூபத்தில... நடக்கட்டும்../

சான்ஸே இல்லை.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா
/இரண்டாவது வரி மகன் என்று இருக்க வேண்டாமோ.....???!!! :-)/
:)) ஆமாம் சார். மாத்திட்டேன்.

vasu balaji said...

இது நம்ம ஆளு
/:)
:)
:)/

:))

இராகவன் நைஜிரியா said...

// அம்மா: கணேஷ் எவ்ளோ மார்க் வாங்கறான். உனக்கென்ன கேடு?
மகன்: (கணேஷ் ஸ்கூலுக்கு கார்ல வரான். அவனுக்கு லேப்டாப் இருக்கு. அதுக்கு ஏற்பாடு பண்ண முடியுமா) //

இந்த கேள்விகளை நிறைய குழந்தைகள் வாய்விட்டே இப்போதெல்லாம் கேட்டு விடுகின்றன. பெற்றோர்க்கு அழகு பிள்ளைகளை மற்ற பிள்ளைகளுடன் கம்பேர் செய்யாமல் இருப்பது.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா
/நல்ல அகராதி பிடிச்ச பையனா இருப்பார் போலிருக்கு/

இல்லை. அகராதி பி(ப)டிக்காத பசங்க:))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா
/சரியான கேள்வி... ஆனா கேட்கத்தான் முடியாதே/
ஆமாங்க. சலவச் சட்டன்னா ரொம்ப பிடிக்கும். போட்டுகிட்டு கைய தொங்க விட்டா மடிப்பு கலைஞ்சிடும்னு சோளக்கொல்ல பொம்ம மாதிரியே திரியிறது. அழுக்கு பண்ணா சலைவைக்கு போடமாட்டேன்னு மிரட்டல் வரும். அவ்வ்வ்

vasu balaji said...

இராகவன் நைஜிரியா
/
அண்ணே எங்க அண்ணே லட்சத்தில் சம்பளம் தர்றாங்க... 5 இலக்க எண் கிடைப்பதே ரொம்ப கஷ்டமா இருக்கண்ணே/

வருஷத்துக்கு சார்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா
/இது மகன் கேட்கிற மாதிரி இல்லையே... அப்பா சொல்லி கொடுத்து மகன் கேட்காமல் விட்ட கேள்விங்க இது../

சே சே. என்னால முடியாதத சாதிச்சிட்ட மகனேன்னு அப்பா மனசார பாராட்டுற ஒரே சான்ஸ் இது.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள்
September 10, 2009 3:31 PM
இராகவன் நைஜிரியா
/
அண்ணே எங்க அண்ணே லட்சத்தில் சம்பளம் தர்றாங்க... 5 இலக்க எண் கிடைப்பதே ரொம்ப கஷ்டமா இருக்கண்ணே/

வருஷத்துக்கு சார். //

அப்ப சரி...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா
/ஓ அப்பா படிச்சாத்தான் மகன் படிப்பாரா? நல்லா இருக்குங்க நியாயம்.../

இல்லியா பின்ன.

vasu balaji said...

/பெற்றோர்க்கு அழகு பிள்ளைகளை மற்ற பிள்ளைகளுடன் கம்பேர் செய்யாமல் இருப்பது./

ஆமாம் சார்

க.பாலாசி said...

//அம்மா: விளக்கு வெச்சாச்சி. இன்னும் காமெடி சானல் பார்த்துண்டிருக்காம போய் படி.
மகள்: (சீரியல் ஆரம்பிச்சிடும். ரிமோட்ட குடுன்னு நேர்மையா கேட்டா என்ன குறைஞ்சிடும்)//

ஆகா...பல நேரங்கள்ல அனுபவிச்சிருப்பீங்க போல....

எல்லாமே சூப்பர்...

vasu balaji said...

க.பாலாஜி

/ஆகா...பல நேரங்கள்ல அனுபவிச்சிருப்பீங்க போல..../

:)).

Unknown said...

அனுபவம் பேசுதோ பாலா??? :))))

சூர்யா ௧ண்ணன் said...

அப்பா: மணி பத்தாகுது. போய் படு. எப்போ பார்த்தாலும் நெட்ல
மகன்:(உருப்படாத இடுகை போடுறதுக்கு அலம்பல பாரு.)
சூப்பர் தலைவா!

vasu balaji said...

Kiruthikan Kumarasamy

/அனுபவம் பேசுதோ பாலா??? :))))/

:)))

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன்

/சூப்பர் தலைவா!/

நன்றி தலைவா.

ப்ரியமுடன் வசந்த் said...

கலக்கல் காமெடிங் சார்

:)

ஆரூரன் விசுவநாதன் said...

தினம் வீட்டுல நடக்கறத இவ்வளவு அனுபவிச்சு எழுதிருக்கறீங்க.....

சூப்பர்....

அன்புடன்
ஆரூரன்

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன்

/தினம் வீட்டுல நடக்கறத இவ்வளவு அனுபவிச்சு எழுதிருக்கறீங்க.....

சூப்பர்..../

வாங்க ஐயா. நன்றிங்க

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்
/கலக்கல் காமெடிங் சார்

:)/

:)) நன்றி வசந்த்