Monday, September 7, 2009

சாப்பிடலாம் வாங்க ...

காலைல பத்திரிகையில் ஒரு செய்தி. ஒரு கலியாணமே நின்னு போச்சாம். விசயம் என்னன்னா மாப்பிள்ளை வீட்டில காலை விருந்து சரியில்லையாம். மதிய சாப்பாட்டுக்கும் ஏற்பாடு சரியில்லைன்னு பெண்ணுக்கு அப்பாக்கு கோவமாம்.(என்னாங்கடா. அவனவன் பெண்ணுக்கு கலியாணம் ஆவலையேன்னு தவிக்கிற தவிப்பென்ன. இவருக்கு ஏத்தத்த பாரு). அப்புறம் சமாதானம் பண்ணியும் முஹூர்த்த நேரம் நெருங்க பெண்ணோட அக்கா வீட்டுக்காரரு பொண்ண எழுப்பி கூட்டி வந்துட்டாராம். போலீசெல்லாம் சமாதானம் பண்ணியும் கலியாணம் நின்னு போச்சாம். இவனுவள என்னா பண்ணா தகும்?.

கலியாணத்தில சாப்பாடு ஒரு முக்கியமான விஷயம்தான். அதில் தகராரு வருவதும் சகஜம்தான். ஆனா பாருங்க கலியாண சாப்பாட்டுல கூட நம்ம பெருசுங்கள நினைச்சா பெருமையா இருக்குங்க. வாழையிலைய கழுவிபோடத் தெரியாமலா அப்படியே போட்டாங்க. அதுக்கு மருத்துவ குணமுண்டு. விஷத்த முறிக்கும்னு சொல்லுவாங்க. அந்த நேரத்துக்கு தண்ணிய தெளிச்சி அழுத்தி துடைக்கிறப்போ அதுக்கொரு குணம் உண்டு. பரிமாருவாங்க பாருங்க.

கீழ் வலக்கையோரம் ஒரு ஒரு ஸ்பூன் பாயசம் வெச்சிட்டே போவாங்க. சும்மா நாக்க சீண்ட்றதுக்கு. அதுக்கு நேர்மேல தயிர் பச்சடி. நேர்மாறான ருசி. நாக்கு தத்தளிச்சி போகும். பக்கத்துல கூட்டு. காரமே இல்லாம. பக்கத்துல பச்சைக் காய்கறி வதக்கல். லேசான காரமும் உப்பும் கலந்திருக்கும். பக்கத்துல கிழங்கு வகையில ஒரு பொரியல். காரம் கொஞ்சம் தூக்கலா. அடுத்து உப்பு. தேவைன்னா ஏத்திக்கிங்க ராசான்னு. அப்புறம் காரமா ஊறுகாய் இடது மேல் மூலையில. அதுக்கு கீழ இனிப்பு அல்லது பழங்கள். முடிக்கிறப்ப பாயசம்.

சாப்பாட்டுலயும் முதல்ல பருப்பும் நெய்யும், அப்புறம் சாம்பார். அதுக்கும் மேல காரம் தேடுற நாக்குங்களுக்கு காரக் குழம்பு, அய்யய்யோ பத்திக்கிச்சிக்கு மோர்க் குழம்பு. அப்புறம் செரிமானத்துகு ரஸம். நாக்குக்கு காரம் கேட்டாலும் வயித்துக்கு சமாதானமா தயிர்னு உடம்பை எப்படி ஆராதிச்சிருக்காங்க. வடை, அப்பளம் எல்லாமும் இடது கோடிக்குதான். ஆகாதப்பு. பார்த்து சாப்பிடுன்னு. இடதுன்னா இளக்காரமாதானே சொல்றது. பாயசத்தையும் பச்சடியையும் நக்கினதுமே பக பகன்னு பசி பிச்சிக்க சாதம் வைப்பா முதல்லன்னு பறப்பாங்களா இல்லையா?

அம்மா கிராமத்துக்கு போறதுன்னா தனி குஷி. வீட்டில ஆரேழு பசுமாடு. பின்னாடி தொழுவம். ஒண்ணர அடி உசாரத்துக்கு ஒரு தொட்டி நீளமா. அளவா தண்ணி கிணத்துல இருந்து நிரப்பி, தவிடு, பிண்ணாக்குன்னு கலந்து வச்சி திமிறிட்டிருக்கிற மாடுங்கள அவிழ்த்து விடுவாரு தாத்தா. பிச்சிக்கிட்டு ஓடி புஸ்ஸூ புஸ்ஸூன்னு உறியும். குடிக்க குடிக்க கலந்து விடுவாங்க. அங்க முடிச்சி வரதுக்குள்ள தளை கிட்ட புல்லு, வைக்கோலுன்னு அளவா பரத்தி வைப்பாங்க. அப்புறம் புடிச்சி கட்றது. அது அங்க இருக்கிறத மேயும்.

கிறுக்குப்பய புள்ள கலியாண சாப்பாடுன்னு சொல்லிண்டு மாட்டுக்கு தீனி வைக்கிறத ஏண்டா சொல்றான்னு பார்க்கறீங்களா. தாலி கட்டின கையோட மத்த சடங்க செய்ய விடாம கைய குலுக்கி (பெரிய சாதனை பாருங்க) கவரை திணிச்சிட்டு, இல்ல வரவேற்புன்னா கண்ணெல்லாம் டைனிங் ஹால் பக்கம் வச்சிகிட்டு அங்க ரெடின்னா ஃபோடோக்கு நின்னுட்டு அடிச்சி பிடிச்சி போக , அங்க ஒருத்தன் கைய பரத்திட்டு நிப்பான். இருங்க இருங்கன்னு. இலைய போட்டு எல்லாம் பரிமாறி வச்சிட்டு, அனுப்பலாமான்னு கேட்டு அப்புறம் விடுவான். நம்மாளுங்க இளைக்க இளைக்க ஓடி, நாலு சீட்டு, பக்கதுல ரெண்டு போட்டு வைங்கன்னு போய் உட்க்காற்ற‌தும், பால் பாயசத்தை தயிர்னு நினைச்சு கவிழ்த்து வழியறதும், வெளிய பீடாக் கடைக்காரன் கிட்ட தழை மெல்றதும் பார்த்தா மாட்டு கதை கவனம் வராம போகுமா சொல்லுங்க?

இப்போல்லாம் பிச்சைக்காரனாக்கிட்டாங்க. தோசைக் கடை, பரோட்டாக் கடை, பீடாக் கடைன்னு போட்டு வைக்கிறானுங்க. சம்பந்தமில்லாம ஐஸ்கிரீம்ல சூடா குலாப்ஜாமுன். வாழையிலை போயே போச்சு. பீங்கான் தட்டை வெச்சுகிட்டு, கலந்த சாதம். அதுலயும் நம்மாளுங்க பண்ற லந்து இருக்கே. பூரியோ பரோட்டாவோ பாய்ஞ்சி எடுத்து அதுக்கு கிழங்கா குருமாவான்னு குழம்பி ஏதோ ஒண்ண அள்ளிப் போட்டுக்கிட்டு இருப்பானுவ. அத முடிக்கலாமா இல்லையா. மாட்டானுவ. ஏதாவது விட்டுப் போனா சாமி குத்தமாயிடும்னு இருக்கிறதெல்லாம் அள்ளிப் போட்டுகிட்டு குழம்புல குருமா கலக்கும். பொரியல்ல ஊறுகாய் ஊறும். அத்துனூண்டு தட்டு குடைசாயும்.

அத விட கொடுமை அடியில மாட்டிக்கிட்ட பூரிய எடுக்கறேன்னு போராடி போராடி ஒரு வழியா பிச்சி உள்ள தள்றதுக்குள்ள காம்பினேஷன் அடிபட்டு போகும். அப்போவே கையில மத்ததெல்லாம் ஒட்டி இருக்குமா இல்லையா. விரல் தோல் வழண்டு போறா மாதிரி அதை நக்கி உறிஞ்சி சுத்தம் பண்ணிக்கிட்டு (மாடு மூக்குல ஒட்டி இருக்கிற புண்ணாக்க நக்குறது ஏனோ கவனம் வந்து தொலையுது) ரொம்ப ஸ்டைலா அப்புறம் ஸ்பூன பிடிக்கிற ஜோர் இருக்கே. ஒருத்தன் குழம்பு கிளர்றா மாதிரி புடிப்பான், ஒருத்தன் பேனா புடிக்கிறா மாதிரி புடிப்பான், ஒருத்தன் மண்ணு குத்துறா மாதிரி பிடிப்பான்.

ஓபாமாவுக்கு ஃபினான்ஸ் மேனேஜ் பண்ணத் தெரியலன்னு பீட்டர் விட்டுக்கிட்டே ஒண்ணு இந்தப் போராட்டத்தில நிக்கிறவன் முழங்கைய ஒரு தட்டு தட்டி திரும்பிப் பார்க்காம,ஓஹ் அம் ரீயல்லி சாழினு போய்டும். இவரு குடைசாஞ்சதில மேல கொட்டினதக் கூட துடைக்காம அய்யோ போச்சேன்னு ஓடிப் போய் நிறப்புவாரு. அதுக்குள்ள ஒண்ணு ரொம்ப ஸ்டைலா வந்து கொட்டினதுல காலை வச்சி ஒலிம்பிக்ல ஜிம்னாஸ்டிக் கோல்ட் மெடல் வாங்கினா மாதிரி ஒரு கால் முன்னையும் ஒரு கால் பின்னையுமா நீட்டி விழுந்து என்ன நடந்துச்சுன்னே தெரியாம ஞேனு கெடக்கும். அதப் பார்த்து சிரிக்கிறதில பாதி கொட்டும். தட்டை வெச்சா க்ளீன் பண்ண சுத்திக்கிட்டிருக்கிற ஆளு (இவனப் பார்த்தாலும் வேற ஒண்ணு கவனம் வரும். சாப்பாடு பத்தி பேசுறமேன்னு தவிர்க்கிறேன்) லவட்டிட்டு போய்டுவானேன்னு யாரும் தூக்கக் கூட மாட்டாம மூஞ்சிய திருப்பிக்குவாங்க. இதுக்குப் பேரு விருந்தாங்க?

இதில வேற கம்பேர் பண்ணுவானுங்க பாருங்க, ரமேஷ் கலியாணத்துல 46 ஐட்டம் வெச்சானாம். ஏண்டா எவ்வளவு இருந்தாலும் வயிறு எல்லாமா அடைக்கும்னு அப்பலாம் போல வரும். இது சரியில்லைன்னு கலியாணத்த நிறுத்துறானாம்ல.

சரி இவ்வளவும் சொல்லிட்டு சாப்பிடாம போறதா. இங்க கொஞ்சம் சுட்டுங்க சாமிகளா. ரெகார்ட் பண்ணி மேலேத்தம் செய்யலாம்னா பேப்பர மைக் மாதிரி சுத்திகிட்டு பாடினா மாதிரி வருது. கொஞ்சம் சிரமம்னாலும் மிஸ் பண்ணாதீங்க. கலியாண வீட்டுல சொல்லிக்காம போறது தப்பு. பின்னூட்டத்தில சொல்லிட்டு போங்க மக்களே.

19 comments:

ஈரோடு கதிர் said...

வழக்கமா கல்யாணத்துல சாப்பிடுறவன் தான் குறை சொல்லுவாங்க..

இங்க பொண்ணோட அப்பாவா

சரியான திண்ணி குடும்பமா இருக்குமோ


எருமை தண்ணி குடிக்கிற தாழிய சொல்லாம விட்டுட்டூங்க

vasu balaji said...

கதிர் - ஈரோடு

/எருமை தண்ணி குடிக்கிற தாழிய சொல்லாம விட்டுட்டூங்க/

அது சரி. இஃகி இஃகி. இதுக்கே டின்னு கட்டுவாங்களோன்னு இருக்கு.

பழமைபேசி said...

ஆகா, பாலாண்ணே இப்பிடி விலேவாரியா பிரிச்சி வேய்ஞ்சிட்டீங்க... இஃகி!

//ஓபாமாக்கு//

ஒபாமாவுக்கு

//சரியான திண்ணி குடும்பமா இருக்குமோ//

ஒன்று - ஒன்னு
மூன்று - மூனு
கன்று - கன்னு
கண் - கண்ணு
பன்றி - பன்னி
தின்றி - தின்னி

இது போதும்னு நினைக்கேன் இன்னைக்கு! மாப்பு வீட்டுத் திண்ணையில ஒரு ‘லொல்’, அண்ணை வீட்ல ‘மருலொல்’... இஃகிஃகி!!

சூர்யா ௧ண்ணன் said...

தலைவா! உங்க பின்னூட்டம் வரலையே!

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன்

/தலைவா! உங்க பின்னூட்டம் வரலையே!/

என்னாச்சு தெரியலையே. ஆஹா. சூர்யாவ இன்னோரு விண்டோல பார்க்கிறது ரொம்ப அழகா இருக்கு. ஏன் நிறுத்திட்டீங்க? எழுதுங்கன்னு போட்டது.

vasu balaji said...

பழமைபேசி
/ஆகா, பாலாண்ணே இப்பிடி விலேவாரியா பிரிச்சி வேய்ஞ்சிட்டீங்க... இஃகி!/

வாங்க பழமை. இஃகி இஃகி. ரொம்ப நாள் எரிச்சல் இது.
/விலேவாரியா/

இது விலாவரி இல்லையா?

/திண்ணி-தின்றி-தின்னி/

இது மாப்புக்கு ஆப்பு

/ஒபாமாவுக்கு/

திருந்திட்டேன். திருத்திட்டேன். நன்றி

பழமைபேசி said...

//இது விலாவரி இல்லையா?//

அப்பப்ப பழைய இடுகைகளைப் படிக்கிறது இல்லையா? (இதுவும் ஒரு ‘லொல்’தான்) இஃகி!

http://maniyinpakkam.blogspot.com/2008/12/blog-post_1033.html

vasu balaji said...

/பழமைபேசி/

அப்பப்ப பழைய இடுகைகளைப் படிக்கிறது இல்லையா? (இதுவும் ஒரு ‘லொல்’தான்) இஃகி!

அட ஆமாம். கேக்குறப்பவே மாட்டப்போறன்னு பட்சி சொல்லிச்சி. இனிமே தினம் ஒன்னு ரெண்டு படிப்பம்.

vasu balaji said...

யாருமேவா சாப்புடாம போய்ட்டாங்க. ஒருத்தரும் ஒன்னுஞ்சொல்லக் காணோம். அவ்வ்வ்.

ஈரோடு கதிர் said...

// /திண்ணி-தின்றி-தின்னி/

இது மாப்புக்கு ஆப்பு/

ஆப்பு... ச்ச்ச்சீ மாப்பு

கம்மியான தின்னா தின்னி
நிறையா திண்ணா திண்ணி

எப்படித்தான் சமாளிக்கிறியோட கதிரு..
ம்ம்ம்ம்... நீ கிரேட்றா

vasu balaji said...

/கதிர் - ஈரோடு

எப்படித்தான் சமாளிக்கிறியோட கதிரு..
ம்ம்ம்ம்... நீ கிரேட்றா/

அதுல சந்தேகமேயில்ல. அம்மாடி முடியல:))

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

விருந்து சூப்பர்! பரிமாரியவிதம் அதைவிட சூப்பர் !!

vasu balaji said...

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்

/விருந்து சூப்பர்! பரிமாரியவிதம் அதைவிட சூப்பர் !!//

நன்றி சரவணக்குமார்

க.பாலாசி said...

//அத விட கொடுமை அடியில மாட்டிக்கிட்ட பூரிய எடுக்கறேன்னு போராடி போராடி ஒரு வழியா பிச்சி உள்ள தள்றதுக்குள்ள காம்பினேஷன் அடிபட்டு போகும்.//

சரியாப்போச்சு போங்க...

//அப்போவே கையில மத்ததெல்லாம் ஒட்டி இருக்குமா இல்லையா. விரல் தோல் வழண்டு போறா மாதிரி அதை நக்கி உறிஞ்சி சுத்தம் பண்ணிக்கிட்டு (மாடு மூக்குல ஒட்டி இருக்கிற புண்ணாக்க நக்குறது ஏனோ கவனம் வந்து தொலையுது)//

ஆகா நல்ல ஒப்பீடல். சாப்பிடுறப்ப என்னமா யோசிச்சிருக்காருப்பா..

நல்லாருக்கு அன்பரே...உங்களின் அனுபவம்...

vasu balaji said...

க.பாலாஜி

/
நல்லாருக்கு அன்பரே...உங்களின் அனுபவம்.../

கலியாணம் மாதிரி எல்லா விசேஷத்துக்கு போறவங்களுக்கும் இந்த அனுபவம்தான்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வானம்பாடிகள் ஐயா, சிறப்பான பதிவுங்க. நீங்க சொல்றது உண்மை தாங்க.. இப்பல்லாம் மனிதம் மங்கி வருவதற்கான எடுத்துக்காட்டு தான் நீங்க சொன்ன கல்யாண நிகழ்வு.

நீங்க சாப்பாட்டப் பத்தி சொன்னது நாக்கு ஊருது :)

vasu balaji said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028)

/வானம்பாடிகள் ஐயா, சிறப்பான பதிவுங்க. நீங்க சொல்றது உண்மை தாங்க.. இப்பல்லாம் மனிதம் மங்கி வருவதற்கான எடுத்துக்காட்டு தான் நீங்க சொன்ன கல்யாண நிகழ்வு./

ஆமாம் செந்தில்வேலன். ஒரு சின்ன விஷயத்துக்கு எவ்வளவு மோசமான விளைவு?

/நீங்க சாப்பாட்டப் பத்தி சொன்னது நாக்கு ஊருது :)/

ஹி ஹி நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

சாப்பிட்டாச்சு மொய் யார் வாங்குறாங்கன்னும் சொல்லிருந்தா மொய்யெழுதிருக்கலாம்.........

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்

/சாப்பிட்டாச்சு மொய் யார் வாங்குறாங்கன்னும் சொல்லிருந்தா மொய்யெழுதிருக்கலாம்......./

ஆஹா. வாங்க வசந்த். கிட்ட தட்ட 6 மணி நேரமா சாப்பாட்டுக்கு யாருமே வரல. சாப்பிட்டதே சந்தோஷம். :)) நன்றி வசந்த்.