Friday, September 4, 2009

துளித் துளியாய் துயரம்..

நீதியின் கண்கட்டி
நீச்சன் சுட்டதில்
நிர்வாணமானது..மனிதம்.

உயிர்காட்சிச் சாலைகளில்
மனிதர்கள் வண்டிக்குள்
நாங்களேன் வலயத்துள்?

அரசு துக்கம்
அலுவலகத்துக்கு விடுமுறை
கலக்கும் காமெடி சானல்கள்

ரேஷன் அட்டை பார்த்து
கலர் டி.வி கொடுத்த பின்
போலி அட்டை சோதனையா?

விநாயகர் கரைப்பு ஊர்வலம்
விமரிசையாய் தொடங்கி வைத்தார்
சுற்றுச்சூழல் நல அமைச்சர்.

நீதிக் கொலைஞனுக்கு
நிவாரணப் பரிசு மழை
நீயா நானா போட்டி..

எங்களுக்காய் போராடிய
எல்லோரும் போனபின்
எங்களுக்காய் போராட எவருமில்லை.

சாதனையில் தொடங்கியது
ரோதனையாய் மாறிடவும்
வேதனையானதெங்கள் வாழ்வு.

அரசியல் டாஸ்மாக்கின்
பதவிச் சாராயத்துக்கு
தொட்டுக்கொள்ள தமிழன்.

இணைய வர்த்தகத்தில் மட்டுமே
இனி எங்கள் ஒட்டு
இடைத்தரகர்கள் மன்னிக்க!

எலக்சன் முடிந்தது
எடுத்து வை ஈழத்தை
எப்போதாவது உதவும்.

இத்தாலி பேசுது இந்தி
இளிச்ச வாயன் தமிழனா
இனிப் படிப்போம்.

பதவித் துண்டுக்குள்
பரிமாரிய பேரம்
உயிர்கள்!
****

22 comments:

சூர்யா ௧ண்ணன் said...

//ரேஷன் அட்டை பார்த்து
கலர் டி.வி கொடுத்த பின்
போலி அட்டை சோதனையா?//

அருமையான கவிதை தலைவா!

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன்
/அருமையான கவிதை தலைவா!/

நன்றி தலைவா.

ஈரோடு கதிர் said...

//அரசு துக்கம்
அலுவலகத்துக்கு விடுமுறை
கலக்கும் காமெடி சானல்கள்//

த்த்த்தூதூ....

//இத்தாலி பேசுது இந்தி
இளிச்ச வாயன் தமிழனா
இனிப் படிப்போம்.//

ஷ்ஷ்ஷ்... குத்துது

//எலக்சன் முடிந்தது
எடுத்து வை ஈழத்தை
எப்போதாவது உதவும்.//

சரிதான்

அருமையான கவிதைகள் நண்பரே

vasu balaji said...

கதிர் - ஈரோடு

/அருமையான கவிதைகள் நண்பரே/

நன்றிங்க கதிர்.

vasu balaji said...

/இத்தாலி பேசுது இந்தி
இளிச்ச வாயன் தமிழனா
இனிப் படிப்போம்./

சரியாப் புரிஞ்சிக்கோங்க நண்பர்காள். இது நான் சொன்னதல்ல.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல கவிதைகள்

இராகவன் நைஜிரியா said...

// அரசு துக்கம்
அலுவலகத்துக்கு விடுமுறை
கலக்கும் காமெடி சானல்கள் //

அரசு துக்கம் என்பது, காமெடியாகிவிட்டது. காசு ஒன்றே குறி என்றால் இப்படித்தான். எவன் செத்தா என்ன என்ற மனப்பாங்கு.

இராகவன் நைஜிரியா said...

// ரேஷன் அட்டை பார்த்து
கலர் டி.வி கொடுத்த பின்
போலி அட்டை சோதனையா? //

நெத்தியடி...

இராகவன் நைஜிரியா said...

// எலக்சன் முடிந்தது
எடுத்து வை ஈழத்தை
எப்போதாவது உதவும். //

ஈழம் என்பது இவங்களுக்கு கறிவேப்பிலை போன்று ஆகிவிட்டது.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

vasu balaji said...

SUREஷ் (பழனியிலிருந்து)

/நல்ல கவிதைகள்/

நன்றி சுரேஷ்

vasu balaji said...

இராகவன் நைஜிரியா

/அரசு துக்கம் என்பது, காமெடியாகிவிட்டது. காசு ஒன்றே குறி என்றால் இப்படித்தான். எவன் செத்தா என்ன என்ற மனப்பாங்கு./

மனச தேத்திக்கட்டும்னு பண்றானுங்க போல பன்னாடைங்க.

/நெத்தியடி.../
ம்ம்ம்

/ஈழம் என்பது இவங்களுக்கு கறிவேப்பிலை போன்று ஆகிவிட்டது./

சரியா சொன்னீங்க சார்.

க.பாலாசி said...

//அரசியல் டாஸ்மாக்கின்
பதவிச் சாராயத்துக்கு
தொட்டுக்கொள்ள தமிழன்.//

சாட்டையடி வரிகள்...

நல்ல கவிதை...அன்பரே....

vasu balaji said...

க.பாலாஜி

/சாட்டையடி வரிகள்...
நல்ல கவிதை...அன்பரே..../

வாங்க பாலாஜி. நன்றி

கலகலப்ரியா said...

கொஞ்சம் காரம்.. கொஞ்சம் சுமார்.. கொஞ்சம் சப்..!

மொத்தம்... பரவால்ல..

சராசரி.. : சராசரி..

vasu balaji said...

கலகலப்ரியா

/கொஞ்சம் காரம்.. கொஞ்சம் சுமார்.. கொஞ்சம் சப்..!

மொத்தம்... பரவால்ல..

சராசரி.. : சராசரி../

அப்படின்னா முதல் வகுப்பு. சிறப்புக்கு முயற்சிக்கிறேன்.நன்றி.

பழமைபேசி said...

கவிஞர்கள் கூட்டணி மெருகேற்றம்!

vasu balaji said...

பழமைபேசி

/கவிஞர்கள் கூட்டணி மெருகேற்றம்!/

நன்றி பழமை.

Unknown said...

///எலக்சன் முடிந்தது
எடுத்து வை ஈழத்தை
எப்போதாவது உதவும்///
கவனம் பாலா.. அரசியல்வாதிகளைத் தற்கொலைக்குத் தூண்டியதற்கு சட்டம் உங்கள் மேல் பாயலாம்

vasu balaji said...

Kiruthikan Kumarasamy

/கவனம் பாலா.. அரசியல்வாதிகளைத் தற்கொலைக்குத் தூண்டியதற்கு சட்டம் உங்கள் மேல் பாயலாம்/

:)). நன்றி கிருத்திகன்

ப்ரியமுடன் வசந்த் said...

//அரசு துக்கம்
அலுவலகத்துக்கு விடுமுறை
கலக்கும் காமெடி சானல்கள்//


//விநாயகர் கரைப்பு ஊர்வலம்
விமரிசையாய் தொடங்கி வைத்தார்
சுற்றுச்சூழல் நல அமைச்சர்.//

இப்பிடி மானத்த வாங்குனாலும் அதகண்டுகிடாம சிரிச்சுட்டே வாழும் ஒரு இ.வ.தானே இவர்கள்

எல்லாமே காரசாரமாய் நல்லாஇருக்கு பாலாசார்

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்

/எல்லாமே காரசாரமாய் நல்லாஇருக்கு பாலாசார்/

நன்றி வசந்த்.