Thursday, September 10, 2009

9/9/09 - இந்தியப் பதிப்பு

9/9/09னு நிறைய இடுகையில பார்க்க நேர்ந்தது. என்னதான் இருக்கும்னு தேடினா நம்மளுக்கும் கிடைக்கும்ல. கிடைச்சது இது. பிரமிப்பா வியப்பா இருந்த விடயங்கள் இதிகாசச் சரித்திரத்தில் இருந்து:

தேவ அசுர யுத்தங்கள் நடந்த ஆண்டுகள் 18 ---1+8=9
ராம ராவண யுத்தங்கள் 18 மாதம் = 9
மஹா பாரதப் போர் நடந்த காலம் 18 நாட்கள்=9
மஹா பாரதத்தில் உள்ள பருவங்கள் 18=9
பகவத் கீதையில் அத்தியாயங்கள் 18 = 9
பாரதப் போரில் ஈடுபட்ட சேனைகள் 18 = 9
பீஷ்மர் தருமருக்குச் சொன்ன அரசனின் கடமைகள் 18=9
போரில் ஈடுபட்ட ரதங்கள் 21870=9
யானைகள் 21870=9
காலாட்கள் 1,09,350=9
குதிரைகள் 65,610=9
அரச இலச்சினைகள் 18=9
அரச தண்டனை வகைகள் 18=9
ஜராசந்தன் கிருட்டிணனிடம் சண்டையிட்டு தோற்றது 18 தடவைகள் =9
கிருத யுகத்தில் ஆண்டுகள் 17,28,000=9
த்ரேதாயுகத்தில் ஆண்டுகள் 12,96,000=9
த்வாபரயுகத்தில் ஆண்டுகள் 8,64,000=9
கலியுகத்தில் ஆண்டுகள் 4,32,000=9

நான்கு யுகங்களின் மொத்த ஆண்டுகள் 43,20,000=9
திருதராட்டிரன் பாரதப் போருக்குப் பிறகு வாழ்ந்த ஆண்டுகள் 18=9
காந்தாரி கிருட்டிணனும் அவன் உறவினர்களும் பாரத யுத்தம் முடிந்த 36ம் ஆண்டில் கொல்லப் படுவர் எனச் சபித்தாளாம். இதுவும் 9
யுதிட்டிரன் போருக்குப் பிறகு ஆண்டது 36 வருடங்கள் =9
நல்ல அரசனின் குணங்கள் 36 =9
தமிழ் சங்க நூல்கள் பதினெண்கீழ் கணக்கு, பதினெண் மேல் கணக்கு
கலம்பகத்தில் உறுப்புகள் 18=9
சித்தர்கள்  18=9
காவிரி பெருக்கெடுப்பது ஆடி 18 =9
விதை விடும் சுபநாள் ஆடி 9
கஜினி முகம்மது இந்தியாவின் மீது போர்தொடுத்து தோற்றது 18 தடவை = 9**
(நன்றி :  Your Family Friend September 2009)
(இந்தக் கணக்கெல்லாம் சரின்னு என்ன ஆதாரம்னு கேக்காதிங்கப்பு.  புள்ளையார் லேப்டாப்ல எழுதினது பொய்யாவா இருக்கும். )

போர் தொடுத்தது 17 முறை என்றும் தோற்கவில்லை என்பதும் கூறப்படுகிறது

----------------------:*:----------------------

19 comments:

Unknown said...

கஜினி முஹம்மது எந்த முறையும் தோற்கவில்லை. ஒவ்வொரு முறையும் பெரும் செல்வதுடன் தான் சென்று இருக்கிறான்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல பகிர்வு.
ஒரு அரசியல் தலைவருக்குப் பிடித்த எண்ணும் 9 தான் ;)

ப்ரியமுடன் வசந்த் said...

ஆஹா இவ்ளோ இருக்கா தேடித்தந்தமைக்கு நன்றிகள் பாலா சார்

அப்பாவி முரு said...

1*9=9 ->9
2*9=18 ->9
3*9=27 ->9
4*9=36 ->9
5*9=45 ->9
6*9=54 ->9
7*9=63 ->9
8*9=72 ->9
9*9=81 ->9
10*9=90 ->9




இப்பிடி எந்த எண் கூடவும் ஒன்பதை பெருக்கி அதை கூட்டினால் ஒன்பது தான் வரும்.


அப்பாட ஒன்பதுக்கான என்னோட கயமை முடிஞ்சது

ஈரோடு கதிர் said...

அதுதான் அந்த அம்மா இப்படி பிடிச்சிக்கிச்சா!!

vasu balaji said...

Rakesh

/கஜினி முஹம்மது எந்த முறையும் தோற்கவில்லை. ஒவ்வொரு முறையும் பெரும் செல்வதுடன் தான் சென்று இருக்கிறான்./

நன்றிங்க தகவலுக்கு

vasu balaji said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028)
/நல்ல பகிர்வு.
ஒரு அரசியல் தலைவருக்குப் பிடித்த எண்ணும் 9 தான் ;)/
நன்றி:))

vasu balaji said...

நன்றி டி.வி.ஆர்

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்
/ஆஹா இவ்ளோ இருக்கா தேடித்தந்தமைக்கு நன்றிகள் பாலா சார்/

நன்றி வசந்த்

vasu balaji said...

அப்பாவி முரு

/அப்பாட ஒன்பதுக்கான என்னோட கயமை முடிஞ்சது/

:)). ரொம்ப ஈசியான வாய்ப்பாடும் 9 தான்

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/அதுதான் அந்த அம்மா இப்படி பிடிச்சிக்கிச்சா!!/

அப்புடி இல்லாம 2னு இருந்ததால தான் புடிச்சிட்டாங்களோ?:))

இராகவன் நைஜிரியா said...

தங்களின் 200 வது இடுகைக்கு வணகங்கள். (வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகின்றேன்..)

vasu balaji said...

இராகவன் நைஜிரியா

/தங்களின் 200 வது இடுகைக்கு வணகங்கள். (வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகின்றேன்..)/

ஆஹா. ஆமாம்ல. நன்றிசார். எதிர்பாராம உருப்படியான ஒரு இடுகை. :))

Unknown said...

இவ்வளவு இருக்கா பாலா.... அடி சக்கை

vasu balaji said...

Kiruthikan Kumarasamy

/இவ்வளவு இருக்கா பாலா.... அடி சக்கை/

இன்னமும் இருக்கு.:)

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நல்ல பதிவு! பதிவிடும்முன் விஜயகாந்த் படம் பார்த்திங்களா???? 200-வது பதிவிற்கும், வரப்போற 2000-மாவது பதிவிற்கும் (ஒரு "0" தான் "+") வாழ்த்துக்கள்!!

vasu balaji said...

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்
/நல்ல பதிவு! பதிவிடும்முன் விஜயகாந்த் படம் பார்த்திங்களா???? 200-வது பதிவிற்கும், வரப்போற 2000-மாவது பதிவிற்கும் (ஒரு "0" தான் "+") வாழ்த்துக்கள்!!/

:)). நன்றி சரவணக்குமார்

கிரி said...

நல்லா சுவாராசியமா தான் இருக்கு

vasu balaji said...

கிரி

/நல்லா சுவாராசியமா தான் இருக்கு/

நன்றி கிரி.