Wednesday, September 2, 2009

தொலைந்து போனவர்கள் - 2

மும்பையின் டப்பா வாலாக்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். அந்த அளவு பிரபலம் இல்லாவிடினும் சென்னையிலும் இவர்கள் இருந்தார்கள். இவர்கள் வெறும் பணியாளர்கள் மட்டுமல்ல. ஒரு சமுதாயத்தின் பற்சக்கரமாக இருந்தவர்கள். சம்பாத்தியம் முக்கியமாக இருப்பினும் மனித நேயத்திற்கு இவர்களின் பங்களிப்பு அதிகமென நினைக்கிறேன். இவர்களைத் தொலைத்து விட்டோமே ஏன்? எங்கு போனார்கள் இவர்கள்?

சிறிய வயதில் நாங்கள் குடி இருந்த வீட்டில் 10 குடித்தனங்கள். பெரும்பாலும் இரயில்வேயில் பணியாற்றுபவர்கள். அவர்களூக்கு மதிய உணவு எடுத்துச் செல்ல ஒரு அம்மா வரும். வந்தோமா, சாப்பாடு கொடுத்தால் கொண்டு போவதும் திரும்ப டப்பாவை கொண்டு வந்து கொடுத்தோமா என்றிருக்க மாட்டார்கள். சாப்பாடு தயாரில்லை என்றால் முடியவில்லையாம்மா? எவ்வளவு நேரமாகும்? நீ கட்டி வையம்மா நான் அடுத்த வீட்டில் போய் எடுத்துக் கொண்டு திரும்பப் போகும்போது எடுத்துக் கொள்கிறேன் என்று போவார்கள். சமைக்காமல் இருந்தால் அல்லது நேரமாகும் போல் இருந்தால், நீ டப்பாவைக் கொடம்மா, நான் கடையில் வாங்கி கொண்டு போய் கொடுக்கிறேன். அய்யாட்ட சொல்லிக்கலாம். வேலையில எப்படியோ என்னமோ, பசியோட வரும்போது சாப்பாடு இல்லை என்றால் வருத்தமாயிருக்கும் என்று வாங்கிக் கொண்டு போவார்கள். நானும் வேலைக்குப் போகும்போது இப்படி சாப்பிட வேண்டும் என நினைத்ததுண்டு.

நான் வேலைக்குப் போக ஆரம்பித்ததும் அலுவலகத்தில் இவர்களைப் போன்றோரை ஒரு சேரக் காண முடிந்தது. சாப்பாட்டுக் கூடையுடன் வாழையிலையும் வாங்கிக் கொண்டு வந்து விற்பார்கள். சூடான உணவு, சுவையாகவும் இருந்து வாழையிலையில் விருந்து மாதிரி சாப்பிடக் கசக்குமா என்ன? சாப்பாடு வாங்க ஐயா நேரத்துக்கு வரவில்லையெனில் அவர் நண்பரோ, அதே அலுவலகத்து ஆட்களோ தென்பட்டால் விசாரிப்பு நடக்கும். ஐயாவுக்கு வேலை அதிகமா? வெளிய போய் இருக்கிறார்களா என்று. பல நேரம் தேடிக் கொண்டு வந்து இருக்குமிடத்திலேயே கொடுப்பதும் உண்டு. எழுதாத ஓர் சட்டம் இவர்களுக்கிருந்தது. சாப்பாடு கொண்டு வர கூலி பேசும் போதே தினசரி கொஞ்சம் சாதம், குழம்பு, பதார்த்தம் ஆகியவை மிச்சம் வைக்கப் பட வேண்டும். அதிலும் ஒரு கண்டிப்பு. கலந்த பிறகு பிடிக்கவில்லை என்றோ, அதிகமென்றோ வைக்கக் கூடாது. தனித் தனியாகவே வைக்க வேண்டும். சாப்பாடு நேரம் முடிய டப்பா இவர்கள் கைக்கு வந்துவிடும். வாங்கும் வேகத்திலேயே கனப்பதை வைத்து ஏன் சாப்பிடலை? உடம்பு சரி இல்லையா? சாப்பாடு சரியில்லையா என்ற விசாரிப்பு நடக்கும்.

அக்காலத்தில் வெள்ளந்தி மனிதர்கள். வெடிகுண்டு கலாச்சாரம் எல்லாம் கேள்விப் பட்டதே இல்லை. எனவே செக்யூரிட்டி என்று பெயருக்கு இருந்தாலும், சாதாரணமாக யார் வேண்டுமானாலும் அலுவலக வளாகத்துக்குள் வருவார்கள். நடைபாதை வாசிகள், ரிக்ஷாக்காரர்கள், பிச்சைக்காரர்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக வருவார்கள். இவர்களிடம் மீதம் வைத்த சாப்பாட்டை சைவ சாப்பாடு தனியாக, அசைவச் சாப்பாடு தனியாக என்று சிலர், எல்லாம் கலந்து என்று சிலர் கொடுப்பார்கள். யானைக்குக் கொடுக்கும் கவளம் போல் பெரிய உருண்டையாக உருட்டிக் கொடுப்பார்கள். மிகுந்த வாழையிலைத் துண்டில் பொரியலோ, ஊறுகாயோ ஏதோ ஒன்று தருவார்கள்.

அங்கும் இவர்களின் கரிசனம் தெரியும். சாராய நெடியுடன் வந்து உட்காருபவருக்கு திட்டு விழும். ஒரு உருண்டை உண்டுவிட்டு தள்ளாடியபடி எழும்ப எத்தனிக்கையில், இப்படி குடி குடின்னு நாசமா போறியே. சாப்பாடாவது சாப்பிட்டு தொலை. அதுலயும் மிச்சம் புடிச்சி குடிக்கலாம்னு சாவுறியா? இந்தா துண்ணு என்று அடுத்த உருண்டை வைப்பார்கள். சற்று தூரத்தில் காசின்றி பசி வயிற்றிலும், உயிர் கண்ணிலும் வைத்துக் கொண்டு சிலர் நின்றிருப்பார்கள். இருப்பதை வழித்து அவர்களுக்கும் கொடுத்துவிட்டு, நாளைக்கு காசு கொடுக்கணும். தினம் சும்மா குடுப்பேன்னு நினைக்காத என்பார்கள். எதுனா வேலை செய்யேன். சும்மா எப்படி காசு வரும் என்று கண்டிப்பார்களே தவிர அடுத்த நாள் நேற்று சாப்பிட்டதற்கு காசு எங்கே என்று கேட்டு நான் பார்த்ததில்லை.

எனக்கு அந்த வயதில் ஆச்சரியம் என்னவென்றால், யாருக்கு சாப்பாடு கொண்டு போகிறார்களோ அவர்கள் பெரும்பாலும் நோஞ்சானாக, அல்லது நேர்மாறாக ஊற வைத்த உளுந்து மாதிரி ஊதிப்போய் இருப்பார்கள். இந்த உருண்டைச் சாப்பாடு ஆட்களெல்லாம் அர்னால்டு மாதிரி இருப்பார்கள். எல்லாச் சத்தும் கலந்து அப்படி இருந்தார்களா என்று நினைப்பதுண்டு. இப்போது இவர்களைத் தொலைத்துவிட்டு ஹாட் பேக், டப்பர்வேர் என்று காலையிலேயே கட்டிக் கொண்டு வந்து நெஞ்சடைக்கச் சாப்பிடுகிறோம். உருண்டை சாதம் சாப்பிட்ட பயில்வான்கள் இன்று நெஞ்சுக் கூடு தெரிய உழைக்கிறார்கள். குடிமட்டும் அழியாமல் அப்படியே இருக்கிறது.

(பி.கு.: இதெல்லாம் சரி. நீ வேலைக்குப் போனால் இப்படி சாப்பிடணும்னு நினைச்ச கதை என்னாச்சின்னு கேக்குறீங்களா? நம்ம வீட்டில் காலை 8.30 கே குழம்பு, ரசம் என முழுச் சாப்பாடுதான். மதியம் குழம்பு சாதமோ, மோர் சாதமோ. இதுக்கெதுக்கு கேரியர். கையில கொண்டு போனா போதாதான்னு ஆப்பு வெச்சிட்டாங்க. அவ்வ்வ்வ்)

33 comments:

க.பாலாசி said...

டெம்ளேட்ஸ் நல்லாருக்கு...இருங்க பதிவை படித்துவிட்டு வருகிறேன்...

ஈரோடு கதிர் said...

இந்த மனிதர்கள் பற்றி எனக்கு எதுவும் அனுபவமில்லை. ஆனாலும் நயம் மிகு இடுகை மூலம் அவர்கள் பற்றிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளீர்கள்.

//கைல கொண்டு போனா போதாதான்னு ஆப்பு வச்சிட்டாங்க//

இஃகிஃகி

vasu balaji said...

க.பாலாஜி said...

/ டெம்ளேட்ஸ் நல்லாருக்கு...இருங்க பதிவை படித்துவிட்டு வருகிறேன்.../

படிங்க படிங்க. நன்றி.

vasu balaji said...

/ கதிர் - ஈரோடு said...

இந்த மனிதர்கள் பற்றி எனக்கு எதுவும் அனுபவமில்லை. ஆனாலும் நயம் மிகு இடுகை மூலம் அவர்கள் பற்றிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளீர்கள்./

நன்றி கதிர்.சிவாஜி நடித்த பாபு படத்தில் 'வரதப்பா வரதப்பா' என்ற பாடலிலும், எம்.ஜி.ஆரின். ரிக்ஷாக்காரனில் பத்மினியின் பாத்திரமும் இவர்கள்தான்.

க.பாலாசி said...

//இப்படி குடிச்சி நாசமா போறியே. சாப்பாடாவது சாப்பிட்டு தொலை. அந்தக்காசுக்கும் குடிக்கலாம்னு சாவுறியா. இந்தா துண்ணு என்று அடுத்த உருண்டை வைப்பார்கள்.//

என்ன கொடுமை பாருங்கள்...சாப்பாடு சாப்பிட காசு இருக்காது, ஆனா குடிக்கமட்டும் சிலபேருக்கு எங்கிருந்துதான் காசு வருமோ தெரியல...

//மதியம் குழம்பு சாதமோ, மோர் சாதமோ இதுக்கெதுக்கு கேரியர். கைல கொண்டு போனா போதாதான்னு ஆப்பு வச்சிட்டாங்க.)//

நீங்களும் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க போல...

Maheswaran Nallasamy said...

இந்த தடவை இடுகை மட்டுமல்ல டெம்ப்லேட் கூட நல்ல இருக்கு

இராகவன் நைஜிரியா said...

அண்ணே... தொலைந்து போனவர்கள் பாகம் 2 ...

ஆம் உலகத்தில் தொலைந்து போனவர்களில் இவர்களும் ஒருவர் அண்ணே..

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க.

வீட்டில அப்ப அப்ப ஆப்பு விழும் போலிருக்கு... (அப்பாடா நமக்கு ஒரு சகா கிடைச்சுட்டாருன்னு இப்பத்தான் ரொம்ப திருப்தியா இருக்கண்ணே...)

இராகவன் நைஜிரியா said...

அண்ணே... பாலாண்ணெ...

புது டெம்பேளேட் போட்டீங்க நல்லா இருக்கு..

தமிழ்மணம் ஓட்டுப் பட்டை எங்கண்ணே...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ அண்ணே... பாலாண்ணெ...

புது டெம்பேளேட் போட்டீங்க நல்லா இருக்கு..

தமிழ்மணம் ஓட்டுப் பட்டை எங்கண்ணே.../

நன்றிங்க இராகவன். இது வர்ட்ப்ரெஸ் டெம்ப்ளேட் ப்ளாக்கருக்கு மாத்தினது. அது ஏனோ தமிழ்மணம் ஓட்டுப் பட்டை வருதில்ல. நாளைக்குத்தான் கோடிங்க் பார்க்கணும்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/வீட்டில அப்ப அப்ப ஆப்பு விழும் போலிருக்கு... (அப்பாடா நமக்கு ஒரு சகா கிடைச்சுட்டாருன்னு இப்பத்தான் ரொம்ப திருப்தியா இருக்கண்ணே...)/

ஆமாங்க. ஆப்புன்னு ஒண்ணே எனக்காகத்தான் படைச்சான்னு நினைக்கிறது. நீங்களும் நம்ம கட்சிதானா?:))

vasu balaji said...

Maheswaran Nallasamy said...

இந்த தடவை இடுகை மட்டுமல்ல டெம்ப்லேட் கூட நல்ல இருக்கு

நன்றி மஹேஸ்.

vasu balaji said...

க.பாலாஜி said...

/நீங்களும் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க போல.../

:)).

கலகலப்ரியா said...

template is pretty good..!

vasu balaji said...

கலகலப்ரியா said...

template is pretty good..!

அப்போ இடுகை தண்டமா? நன்றீஈஈஈஈஈஈஈ:((

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ அண்ணே... பாலாண்ணெ...

புது டெம்பேளேட் போட்டீங்க நல்லா இருக்கு..

தமிழ்மணம் ஓட்டுப் பட்டை எங்கண்ணே.../

ஒரு வழியா போட்டுட்டேன் சார்.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள்
September 3, 2009 12:11 AM
இராகவன் நைஜிரியா said...

/ அண்ணே... பாலாண்ணெ...

புது டெம்பேளேட் போட்டீங்க நல்லா இருக்கு..

தமிழ்மணம் ஓட்டுப் பட்டை எங்கண்ணே.../

ஒரு வழியா போட்டுட்டேன் சார் //

நானும் தமிழ் மணத்தில் ஒரு போட்டுட்டேண்ணே...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

நானும் தமிழ் மணத்தில் ஒரு போட்டுட்டேண்ணே...

நன்றிங்க இராகவன்.

ப்ரியமுடன் வசந்த் said...

டெம்ப்ளேட் நல்லாயிருக்க பாலா சார்

கலகலப்ரியா said...

//September 2, 2009 11:51 PM

கலகலப்ரியா said...

template is pretty good..!

அப்போ இடுகை தண்டமா? நன்றீஈஈஈஈஈஈஈ:((//

அத யார் படிச்சா..:P... இடுகை தண்டமோ இல்லையோ.. என்னோட ரெண்டு ஓட்டு தண்டம்..

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்

டெம்ப்ளேட் நல்லாயிருக்க பாலா சார்

நன்றி வசந்த்.

vasu balaji said...

கலகலப்ரியா said...

/அத யார் படிச்சா..:P... இடுகை தண்டமோ இல்லையோ.. என்னோட ரெண்டு ஓட்டு தண்டம்../

பரவால்ல பரவால்ல. பொழச்சிப் போறேன்.

பழமைபேசி said...

ஆகா...பாலாண்ணே...புது அகம் அழகோ அழகு...

vasu balaji said...

பழமைபேசி

/ஆகா...பாலாண்ணே...புது அகம் அழகோ அழகு.../

இஃகி இஃகி நன்றி பழமை.

இது நம்ம ஆளு said...

இப்போது இவர்களைத் தொலைத்துவிட்டு ஹாட் பேக், டப்பர்வேர் என்று காலையிலேயே கட்டி கொண்டு வந்து நெஞ்சடைக்க சாப்பிடுகிறோம். உருண்டை சாதம் சாப்பிட்ட பயில்வான்கள் இன்று நெஞ்சுகூடு தெரிய உழைக்கிறார்கள். குடி மட்டும் இருக்கிறது.

அருமை

SUBBU said...

டெம்ளேட்ஸ் நல்லாருக்கு ..........
:)))))))))))
:)))))))))))
:)))))))))))
:)))))))))))
:)))))))))))

vasu balaji said...

இது நம்ம ஆளு

/அருமை/

நன்றிங்க.

vasu balaji said...

SUBBU

/டெம்ளேட்ஸ் நல்லாருக்கு ..........
:)))))))))))
:)))))))))))
:)))))))))))
:)))))))))))
:)))))))))))/

அதுக்காக ஸ்மைலி இம்போசிஷன் எழுதவா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

யாசவி said...

nice

but morning meals?

:-)

vasu balaji said...

யாசவி

nice

but morning meals?

:-)

ஆமாங்க. நெறய வீட்ல இப்புடித்தான்.

சூர்யா ௧ண்ணன் said...

Template Super Thalaivaa!

சூர்யா ௧ண்ணன் said...

Thlaivaa! Remove the Blogger Banner..,
http://blogger-templates.blogspot.com/2005/01/remove-navbar.html

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன்

Template Super Thalaivaa!

நன்றி தலைவா.

vasu balaji said...

Thlaivaa! Remove the Blogger Banner..,
http://blogger-templates.blogspot.com/2005/01/remove-navbar.html

codingla hide nu than irunthathu. nan than maththinen. then how to login?