Sunday, August 23, 2009

யாராவது சொல்லுங்கப்பு!

தம்மாத்தூண்டு கவிதையை 'ஹை'கூன்னு ஏன் சொல்றாங்க?
__________
ஆளு ஓட்டினாதானே ஓடுது கார். அப்புறமென்ன ஆட்டோமொபைல்னு பேரு?
__________
மாசத்துக்கு ஏத்தா மாதிரி தேதி மாறாத கடிகாரத்த ஆட்டோமேடிக் வாச்னு வித்தா மோசடி இல்லையா?
__________
பரீட்சைல எல்லாமே தப்பா எழுதினாலும் ஒண்ணுமே எழுதாம வெத்து பேபர் குடுத்தாலும் ஒரே மாதிரி முட்டை மார்க் போடுறது சரியா?
__________
படிச்சி வாங்குறது, பணம் குடுத்து வாங்குறது, பாராட்டிக் குடுக்கிறது எல்லாத்துக்கும் பட்டம்னே சொன்னா வில்லங்கமா இல்லை?
__________
ராசிக்கல்லு விக்கிறவன் எந்த கல்லு போட்டா வியாபாரம் நல்லா நடக்கும்னு யாரையாவது கேப்பானா? தானே போட்டுக்குவானா?
__________
கடற்கரையும், காதலர்களும், கடலை விக்கிறவனும் காலம் காலமா இருந்தாலும் கடல போடுறதுன்னு இப்போ எப்படி கண்டு புடிச்சாங்க?
__________
சிடி படிக்க மாட்டங்குறான், எழுத மாட்டங்குறான், ஹேங்க் ஆயிட்டான்னு நம்மாளுங்க மட்டும்தான் சொல்றாங்களே. கம்ப்யூட்டர் ஆண்பால்னு தமிழன் எப்படி கண்டு புடிச்சான்?
__________
பயணப்படுறது நாமளா இருந்தாலும், ஊரு வந்துடுச்சா, வீடு வந்துடுச்சான்னு தானே கேக்குறோம். ஏன்?
__________
செல்லுல பேசினாலும் முடிக்கிறப்ப வெச்சிடுறேன்னு கொள்ள பேரு சொல்றாங்களே. ஏன்?
__________
யூரின் டெஸ்ட்னு போனா லேப்ல எந்தஅளவில கண்டெயினர் குடுத்தாலும் அவனவனும் நிரப்பி குடுத்து, போவாதவன் இவ்வளவு தான் போச்சுன்னு மன்னிப்பு கேக்குறா மாதிரி பண்றாங்களே. ஏன் ஒரு அளவு வைக்கிறதில்லை?
__________
ஹோட்டல்ல மெனுகார்ட் பார்த்து ஆர்டர் பண்றவங்க விலையை பார்க்காம ஆர்டர் பண்ணுவாங்கன்னு நம்புறீங்க?
__________
பிரபாகரன் சாயல்ல பிள்ளையார் வைக்கிறாங்களாமே. போலீஸ் பிரபாகரன்னு புடிக்குமா? பிள்ளையார்னு உட்ருமா?
__________
உலகத்துல எல்லா பிரதமருக்கும், ஜனாதிபதிக்குமாவது அவங்க அவங்க நாட்டு அரசியல் சட்டம் நல்லா தெரியுமா?
__________
பின்னூட்டத்துக்கு பதில் போட்டா அது என்ன ஊட்டம்?
__________

23 comments:

kumar said...

எந்த லாட்ஜ்ல ரூம் போட்டு யோசிச்சதப்பு?

priyamudanprabu said...

ராசிக்கல்லு விக்கிறவன் எந்த கல்லு போட்டா வியாபாரம் நல்லா நடக்கும்னு யாரையாவது கேப்பானா? தானே போட்டுக்குவானா?\....



ஹாஅ ஹா

இராகவன் நைஜிரியா said...

// பின்னூட்டத்துக்கு பதில் போட்டா அது என்ன ஊட்டம்? //

பின்பின்னூட்டம் அப்படின்னு வச்சுகலாங்க

இராகவன் நைஜிரியா said...

// ராசிக்கல்லு விக்கிறவன் எந்த கல்லு போட்டா வியாபாரம் நல்லா நடக்கும்னு யாரையாவது கேப்பானா? தானே போட்டுக்குவானா? //

ராசிக்கல்லு விக்கறவன் எவனுமே கல்லு போட்டுகிறது இல்லையாம். போட்டோக்கு போஸ் கொடுக்கும் போது மட்டும் கைல கிடைக்கின்ற மோதிரத்தை எடுத்துப் போட்டுகிட்டு போஸ் கொடுப்பாங்க...

இராகவன் நைஜிரியா said...

// உலகத்துல எல்லா பிரதமருக்கும், ஜனாதிபதிக்குமாவது அவங்க அவங்க நாட்டு அரசியல் சட்டம் நல்லா தெரியுமா? //

அய்யோ ... அய்யோ.. எப்படிங்க இது...

அவங்களுக்கு எதுவுமே தெரியாதுங்க... தெரிஞ்சு இருந்தா அவங்க பிரதமராகவோ / ஜனாதிபதியாகவோ ஆகியிருக்க மாட்டாங்க

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆளு ஓட்டினாதானே ஓடுது கார். அப்புறமென்ன ஆட்டோமொபைல்னு பேரு?//

எனக்கும் ரொம்ப நாளா டவுட்?

ப்ரியமுடன் வசந்த் said...

/பரீட்சைல எல்லாமே தப்பா எழுதினாலும் ஒண்ணுமே எழுதாம வெத்து பேபர் குடுத்தாலும் ஒரே மாதிரி முட்டை மார்க் போடுறது சரியா?//

அதுதானே.....

ப்ரியமுடன் வசந்த் said...

//ராசிக்கல்லு விக்கிறவன் எந்த கல்லு போட்டா வியாபாரம் நல்லா நடக்கும்னு யாரையாவது கேப்பானா? தானே போட்டுக்குவானா?//

அடிதூள்

அவனே சூனியம் வச்சுக்கிடுவானா?

ப்ரியமுடன் வசந்த் said...

//பின்னூட்டத்துக்கு பதில் போட்டா அது என்ன ஊட்டம்?//

ரிப்ளைஊட்டம்

ஈரோடு கதிர் said...

அய்ய்ய்ய்ய்ய்யோ முடியல

யூர்கன் க்ருகியர் said...

Funny thinking. enjoyed a lot. Thx!

சுதந்திரன் said...

தங்களுக்கு எளிய ஒரு விருது... ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்...

http://sethiyathope.blogspot.com/2009/08/blog-post_24.html

vasu balaji said...

/ (ஆம்லெட்) BASHEER said...

எந்த லாட்ஜ்ல ரூம் போட்டு யோசிச்சதப்பு?//

முதல் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி.

vasu balaji said...

வாங்க பிரபு! நன்றி

vasu balaji said...

/இராகவன் நைஜிரியா said...
பின்பின்னூட்டம் அப்படின்னு வச்சுகலாங்க

:)) வாங்க ராகவன் சார்

vasu balaji said...

/இராகவன் நைஜிரியா said

ராசிக்கல்லு விக்கறவன் எவனுமே கல்லு போட்டுகிறது இல்லையாம். போட்டோக்கு போஸ் கொடுக்கும் போது மட்டும் கைல கிடைக்கின்ற மோதிரத்தை எடுத்துப் போட்டுகிட்டு போஸ் கொடுப்பாங்க...//

அதான் சரி. அந்தக் கல்லையும் எவனாவது இளிச்ச வாயனுக்கு வித்தா காசாச்சே.

vasu balaji said...

/இராகவன் நைஜிரியா said...
அய்யோ ... அய்யோ.. எப்படிங்க இது...

அவங்களுக்கு எதுவுமே தெரியாதுங்க... தெரிஞ்சு இருந்தா அவங்க பிரதமராகவோ / ஜனாதிபதியாகவோ ஆகியிருக்க மாட்டாங்க//

ஜனதா ஆட்சியில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் முயற்சியில் வெரும் ரூ 1க்கு கான்ஸ்டிட்யூஷன் ஆஃப் இண்டியா எங்கள் அலுவலகத்தில் விற்றார்கள். ஒரு நாள் குப்பை குப்பையாக விழுந்து கிடந்தது. சும்மாவாவது கொடுத்திருக்கலாம்.

பதவி ஏற்பின்போதாவது இதனைப் படித்து இதற்கு முரண்படாமல் நடப்பேன் என்ற உறுதி மொழி எடுக்கப் பட வேண்டும். ரொம்ப சின்ன புத்தகம் அது.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/எனக்கும் ரொம்ப நாளா டவுட்?//

ஆஹா. உங்களுக்குமா!

/அதுதானே.....//

இதுலயும் கூட்டா:))

/அவனே சூனியம் வச்சுக்கிடுவானா?//

இதத்தான் கூலி குடுத்து சூனியம் வச்சிக்கிறதுன்னு சொல்றதா?

/ரிப்ளைஊட்டம்//

தமிழில் பதிலூட்டம்னு மாத்திக்கலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வசந்த்!

vasu balaji said...

/கதிர் - ஈரோடு said...

அய்ய்ய்ய்ய்ய்யோ முடியல/

வாங்க கதிர். =))

vasu balaji said...

/யூர்கன் க்ருகியர் said...

Funny thinking. enjoyed a lot. Thx!/

நன்றி யூர்கன்!

vasu balaji said...

/ Thamizhan said...

தங்களுக்கு எளிய ஒரு விருது... ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்...//

மிக்க நன்றி. இத்தனைப் பாராட்டுக்கு ஏற்புடையவனாக வேண்டும்.

க.பாலாசி said...

//பரீட்சைல எல்லாமே தப்பா எழுதினாலும் ஒண்ணுமே எழுதாம வெத்து பேபர் குடுத்தாலும் ஒரே மாதிரி முட்டை மார்க் போடுறது சரியா?//

அட ஆமாங்ணே.. நான் படிக்கறச்சயும் இப்படிதான் பண்ணாங்க... என்ன கொடுமையிது..

vasu balaji said...

/க. பாலாஜி said...

அட ஆமாங்ணே.. நான் படிக்கறச்சயும் இப்படிதான் பண்ணாங்க... என்ன கொடுமையிது..//

வாங்க.=))