Tuesday, August 25, 2009

மூர் மார்கெட்

எனக்கு மூர்மார்க்கட் அறிமுகமானது என்னுடைய 17ம் வயதில்.(சென்னைல அஞ்சாம்புல இருந்து படிச்ச ஒரு புள்ள 17 வயசுலதான் மூர்மார்க்கட்ட பார்த்துச்சுன்னா தெரிஞ்சிக்கிங்க எவ்வளவு அப்புராணின்னு). என் தம்பி ஒரு விபத்தில் சென்னை பொது மருத்துவ மனையில் மாநகராட்சியினால் சேர்க்கப் பட்டதால் இந்த பாக்கியம் கிடைத்தது. தனியாக பஸ்ஸில் ஏறியதும் அடுத்த ஸ்டாப்பிலிருந்தே அண்ணா மூர்மார்கட் வந்தா சொல்லுங்கன்னு ஆரம்பிச்சி, மறந்துட்டா என்ன செய்யன்னு டிக்கட் குடுக்க அவரு போற இடமெல்லாம் சொக்காய பிடிக்காத குறையா போனத நினைச்சா இப்பக் கூட சிரிப்பு வரும்.


சனியன் தொலஞ்சதுன்னு கவனமா இறக்கி விட்டாங்க. அவ்வளவு கூட்டத்தை முதல் முறையா பார்க்கிறது ஒரு பக்கம், பொது மருத்துவ மனையில் தனியா வார்டத்தேடி எப்படிப் போகப்போறேன்னு ஒரு பக்கம், திருவிழால காணாம போன மாதிரியே போய்க்கிட்டிருந்தேன். மூர்மார்க்கட் உள்ள போகாமலே என்னத் தேடி வந்து அதிர வைத்தது ஒரு அங்கம். நடை பாதையில் நின்றிருந்தார்கள் 2 பேர். ஒருவர் கையில் 10 -15 பேனாக்கள். மற்றவர் ஒரு பேனாவை திரும்ப நீட்டிக் கொண்டிருந்தார். நான் கடந்து போகவும் படக்கென தோளைத் தொட்டிழுத்து, தம்பி இதில எழுதி இருக்கிறத படிச்சி சொல்லுன்னாரு விக்கிறவர். ஆகா, நம்மளையும் படிக்க சொல்லி கேக்க ஒரு விசிறின்னு மண்டைக்கு கர்வம் ஏற, ஹீரோ, மேட் இன் சைனானு படிச்சி பக்கத்து ஆளைத் திரும்பி பார்க்கவும், அவரு போய்க்கிட்டே இருந்தாரு.


இந்தாங்கண்ணா என்று திரும்பக் கொடுக்க, வாங்கிக்க தம்பி 15ரூ தான் என்றார். பாட்டியிடம் வாங்கிக் கொண்டு வந்த 1ரூபாயில் பஸ்ஸூக்கு போக வர 50 பைசா. போனதும் 50 பைசா திருப்பிக் கொடுக்க வேண்டிய ஆளுட்ட போய் 15ரூ பேனா வாங்க சொன்னா திகைச்சிப் போச்சி. இல்லண்ணா வேணாம் என்றேன். நல்ல பேனாப்பா. வாங்கிக்க என்றார். வேணாங்க காசு இல்லைன்னு சொன்னேன். படிக்கிறியா? நல்ல மார்க் வரும்னு செண்டிமெண்டா அடிச்சாரு. இல்லைங்க வேணாம்னதும், விலை கேளு என்று அன்பாக சொன்னார். அடி விழுந்தாலும் பரவாயில்லை 50 பைசான்னு கேக்கலாமான்னு தோணினாலும் இல்லைங்க வேண்டாம், காசு இல்லைன்னு சேர்த்து சொல்லிப் பார்த்தேன். டேய். எவ்ளோ முடியுமோ கேளு. கட்டுப்படியானா குடுக்குறேன். இல்லைன்னா போயிக்கன்னு மரியாதையா சொன்னாரு. அட வேணாம்னு சொல்றப்ப விலையேன் கேக்குறதுன்னு கண்ணு தளும்ப வேணாண்ணா காசு இல்லைன்னேன். அடிக்காத குறையா விலை கேளுன்னு மிரட்டுறான். 75 பைசா காண்பிச்சி 25 பைசா பஸ்ஸுக்கு வேணும். 50 பைசா வீட்ல குடுக்கணும். என்ன விட்றுங்கண்ணான்னு அழுதுட்டேன். தேறாதுன்னு தெரிஞ்சதும் பிடுங்கிக்கிட்டு கேட்டான் பாருங்க கேள்வி, காசு இல்லைன்னா ஏண்டா கைல வாங்கினன்னு. இந்த டெக்னிக் கிட்டதட்ட 3 வருசம் கழிச்சி தான் பாரீஸ் கார்னர்ல புரிஞ்சது. விக்கிறவனும் வாங்குறவனும் ஒரே டீம். கொஞ்ச நேரம் இவரு விக்க மத்த ஆளு வாங்குறா மாதிரி நடிக்கிறது. அப்புறம் இவரு விக்க மத்தவரு நடிக்கிறது. நடுவில போற வர என்னை மாதிரி கேனையன புடிச்சி படிச்சி சொல்லுன்னு ஆட்டய போடுறது.


அப்புறம் வேலைக்கு சேர்ந்து பக்கத்துலயே மூர்மார்கட் அமைஞ்சதால, நெளிவு சுளிவு தெரிஞ்சி வேடிக்க பார்க்கன்னே போறது. என்னமால்லாம் ஏமாத்துவானுங்க தெரியுமா? அடுத்த ஆட்டை செண்டர் செருப்புகடை. மாட்றது பெரும்பாலும் வெளியூர் பார்ட்டிகளும் வெள்ளந்தி கிராமத்து ஆளுங்களும். அப்போல்லாம் ஏரோப்ளேன் டயர் சோல்னா உழைக்கும்னு நம்பிக்கை. சைக்கிள் டயர்ல தெச்சி கூட ஏரோப்ளேன் டயரும்பானுங்க. கோந்து தடவி ஒட்டுவானுவளா தெரியாது. மாடு ஒன்னுக்கடிச்சத மிதிச்சாலே வாய பொளக்கும். மழைக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க. அதுமில்லாம, தோல்ல சோல் இருக்கிற (காபூலின்னு சொல்றாங்களே அது) அதுக்கு லாடம் வேற அடிப்பான் நம்மாளு. தேஞ்சிறப்படாதுன்னு. விவரமா போய் வேடிக்கை பார்த்தாலே பாசமா கூப்பிட்டு செருப்பு காட்டுவானுங்க. சொல்ற விலை பாட்டா மாதிரியே ரூ50.99னு ஆரம்பிக்கும். நம்ம கிட்டயேவான்னு 30ரூபாய்க்கு கேட்டு, அவன் தங்கச்சி புருஷன் கடன் கேட்டா எவ்ளோ கஷ்டம்னாலும் இல்லைன்னு சொல்ல முடியுமா மாதிரி ஃபீல் பண்ணி 45 ரூன்னா குடுக்குறேன்னு போராடி 40ரூபாய்க்கு குடுப்பான். கொடுமை என்னன்னா, அங்கனயே உக்காந்திருப்பாரு ஒரு ஆளு செருப்பு தைக்க. அவர காட்டி, ஆணி அடிச்சிக்கிங்க நாள்பட வரும்னு சொல்லுவாரு. செருப்பையும் நம்மட்ட குடுக்காம அங்க குடுத்துடுவாரு. வேணான்னு வர நினைக்கிற ஆளுங்களுக்கு தாவு தீர்ந்துடும்.


அந்தாளு கூசாம சொல்லுவான். ஆணி அடிக்கலைன்னா ஆறுமாசம் கூட வராதுன்னு. எவனாவது அப்படின்னா வேணாம் துட்ட குடுய்யான்னு கேப்பானான்னு நானும் பார்க்குறது. ஒரு வீரன் கூட இல்லை. ரொம்ப விவரமா எவ்ளோ ஆணிக்குன்னா, பித்தள ஆணி மேலுக்கு ஒன்னு 20 பைசாதான், கீழ லாடம் 4 வரும் ஒன்னுக்கு ஒரு ரூபாம்பான். நாம என்ன நினைப்போம் மிஞ்சி போனா 10 அல்லது 15 ஆணின்னு. எப்படி அடிப்பானோ தெரியாது. புள்ளிக்கோலம் மாதிரி, இண்டு இடுக்கெல்லாம் அடிச்சிடுவான் சிமிட்ற நேரத்துல. 30ரூ குடுங்கறப்பதான் மயக்கம் வரும். ஏண்டா செருப்பே 40ரூ ஆணிக்கு 30ரூ எப்டிடான்னு. எண்ணிக்கம்பான். வேணாம்னா அடிச்சதுக்கப்புறம் எப்படி புடுங்கறது. அடிக்க சொல்லவே வாய்ல என்னா வெச்சிறுந்தன்னு மிரட்டல் வரும். விதியடான்னு கெஞ்சி கூத்தாடினா 20ரூனு ஒத்துக்குவானுங்க. திட்ற திட்டு இலவசம்.


வெயில்கால ஸ்பெஷல் ஆட்டை டெக்னிக் இது. சர்பத் வண்டியும் குச்சி ஐஸ்காரனும் போடுற ஆட்டை. என்னதான் உசாரா எவ்ளோ நன்னாரி சர்பத்னாலோ, சேமியா ஐஸ்நாலோ ஒன்னு அம்பது பைசா, ஒன்னு இருவத்தஞ்சு பைசான்னு விலைய கேட்டப்புறம் வாங்கினாலும் ஆளிருந்தா அவங்க கிட்ட என்ன வேணும்னு கேட்டு, இல்லைன்னா எதையோ நோண்டிகிட்டிருப்பாங்க. வெயில்ல கைல வெச்சிகிட்டு சும்மாவா இருக்க முடியும். உறிஞ்சிட்டு காச நீட்டுனா இன்னாது மெட்ராஸ்கு புச்சா. அம்பது பைசா/நால்னா குடுக்குற. ஒரு ரூபா உங்கப்பன் குடுப்பானான்னு குண்ட போடுவானுவ. அதிர்ந்து போய், ஏம்பா விலை கேட்டுத்தானே வாங்கினதுன்னா, ஆமாம் ஒரு ரூபாய் அம்பது காசு, ஒரு ரூபா இருவத்தியஞ்சு காசுன்னு சொன்னேன்னு சாதிப்பானுவ. வாய்ல வெச்சப்புறம் காச கக்காம முடியுமா? காசு இல்லைன்னா அடி கூட விழும். சாவு கிராக்கின்னு.


இத்தனையும் தாண்டித்தான் மூர்மார்கட் என்ற அந்த உலகத்துக்குள்ள போக முடியும். அது ஒரு தனி உலகம்.

24 comments:

shahul said...

nice experience and thanks to share with us. kolko

யூர்கன் க்ருகியர் said...

அடப்பாவிகளா .... இப்படி ஏமாத்தி பிழைப்பவர்கள் கடைசி வரை பேனா, ஐஸ் வித்துக்கிட்டும், செருப்புல ஆணி அடிசிக்கிட்டும் இருக்க வேண்டியது தான்.

Quality Never comes Cheap.

vasu balaji said...

welcome shahul. thank you for your comments

vasu balaji said...

யூர்கன் க்ருகியர் said...
/Quality Never comes Cheap./
=)) wait for the second part.

இது நம்ம ஆளு said...

ஒரு ரூபா உங்கப்பன் குடுப்பானான்னு குண்ட போடுவானுவ. அதிர்ந்து போய், ஏம்பா விலை கேட்டுத்தானே வாங்கினதுன்னா, ஆமாம் ஒரு ரூபாய் அம்பது காசு, ஒரு ரூபா இருவத்தியஞ்சு காசுன்னு சொன்னேன்னு சாதிப்பானுவ. வாய்ல வெச்சப்புறம் காச கக்காம முடியுமா? காசு இல்லைன்னா அடி கூட விழும். சாவு கிராக்கின்னு.

என்ன கொடுமை சார் !

ஈரோடு கதிர் said...

அற்புதமான... இடுகை

அந்த ஏமாற்று வியாபாரிகளை கண்முன் நிறுத்துகிறீர்கள்

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், முடிவில்..........!!!!?? (இரண்டாவது பகுதிய சீக்கிரம் எழுதுங்க)

vasu balaji said...

/இது நம்ம ஆளு said...

என்ன கொடுமை சார் !//

ஆமாங்க. பாவமா இருக்கும். யாரும் கண்டுக்காம போவாங்க. :)

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

/ அற்புதமான... இடுகை
(இரண்டாவது பகுதிய சீக்கிரம் எழுதுங்க)/
நன்றிங்க. எழுதுவேன்.

க.பாலாசி said...

//போற வர என்னை மாதிரி கேனையன புடிச்சி படிச்சி சொல்லுன்னு ஆட்டய போடுறது.//

தலைவரே... இதலாமா வெளியில சொல்றது.. பரவால்ல விடுங்க...

நல்லாயிருக்கு உங்களின் அனுபவப்பதிவு...மற்றும் சில கருத்துரைகளும்...

க.பாலாசி said...

உங்களின் ‘சாரம் போனாலென்ன சக்கை தான் முக்கியம்’ பதிவை காணவில்லையே...

vasu balaji said...

க. பாலாஜி said...
/தலைவரே... இதலாமா வெளியில சொல்றது.. பரவால்ல விடுங்க...

நல்லாயிருக்கு உங்களின் அனுபவப்பதிவு...மற்றும் சில கருத்துரைகளும்.../

:)) நன்றி.

vasu balaji said...

க. பாலாஜி said...

/உங்களின் ‘சாரம் போனாலென்ன சக்கை தான் முக்கியம்’ பதிவை காணவில்லையே...//

திரும்பப் படித்த பொழுது தவறான புரிதலுக்கு வழி வகுக்கும் எனத் தோன்றியது. நீக்கிவிட்டேன். மன்னிக்கவும்.

இராகவன் நைஜிரியா said...

மூர்மார்கெட்.. நான் கேள்விப் பட்டுத்தான் இருக்கேன். பார்த்ததில்லை.
அதனால் நீங்கள் எழுதியுள்ளதைப் படிக்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது. இப்படியெல்லாம் கூட ஏமாற்றுவாங்களான்னு?

பழமைபேசி said...

சாயுங்காலம் வந்து படிக்கிறேன் அண்ணே!

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/அதனால் நீங்கள் எழுதியுள்ளதைப் படிக்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது. இப்படியெல்லாம் கூட ஏமாற்றுவாங்களான்னு?//

பெரும்பாலும் அப்படியானாலும் வியப்பான மனிதர்களையும் அங்குதான் பார்த்தேன். அதனால் தான் சொல்கிறேன். அது ஒரு தனி உலகம்.

vasu balaji said...

பழமைபேசி said...

சாயுங்காலம் வந்து படிக்கிறேன் அண்ணே!

வாங்க பழமை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இலங்கையில் சிங்களப் பிரதேசங்களில் இப்படியான ஏமாற்றுகள் அதிகம்.குறிப்பாக மொழிதெரியாதோரைக் குறிவைத்து ஏமாற்றுவார்கள்.
அன்றைய காலங்களில் "யாழ்தேவி"- தொடர் வண்டியில் ஒரு கூட்டம் இளநீர்;குளிர்பானம் விற்று ஏமாற்றும்; 2 ரூபா இளநீருக்கு ;10 ரூபா கொடுத்தவர் மிச்சப்பணம் வாங்கியதாகச் சரித்திரமே இல்லை.
சில்லறை இல்லை எனக் கூறி வண்டி புறப்படும் வரை தண்ணி காட்டி விட்டு ,புறப்படும் போது
சற்று தூரத்தில் நின்று சிரிப்பார்கள். இளநீர் குடித்தவர் முகத்தில் ஈயுமாடாது.
குளிப்பானப் கண்ணாடிப்புட்டிகள் இலங்கையில் திரும்பிக் கொடுப்பது வழமை. இவர்களிடம் வாங்கும் போது புட்டிக்கு 2 ரூபா அதிகமாக அறவிடுவார்கள். குடித்ததும் புட்டியைக் கொடுத்து விட்டு 2 ரூபாவை வாங்கலாம். ஆனால் இவர்கள் குளிர்பானத்தைக் கொடுத்து விட்டுக் காசையும் வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள்.குடித்தவர் வண்டிபுறப்படும் முன் விற்றவரைத் தேடினால் ஆள் வரமாட்டார்.
வண்டியும் புறப்பட்டு விடும். சிலர் புட்டியை வண்டிக்கு வெளியே போட்டு விடுவார்கள். அதை அவர்கள்
பின் சேகரிப்பார்கள். வண்டுக்குள் போடுவதைக்கூட அவர்களின் எடுபிடிகள் பின்பு சேகரித்துக் கொடுத்து
விடும்.
இதற்குத் தோதாக வண்டியும் சுமார் 15 - 20 நிமிடம் அவ்விடம் நின்று அவர்களுக்கு உதவும். இந்த
ஏமாற்று வேலைகள் தொடர் வண்டித் திணைக்களம் அறியும்; ஏமாற்றப் படுவது தமிழர் என்பதால்
காலம் காலமாக அதைக் கண்டு கொள்வதேயில்லை.
பலர் இந்த அனுபவங்களின் பார்வையாளர்களாக இருந்ததால்; எங்களுடன் பகிர்ந்து கொண்டதாலும்
என் பிரயாண காலங்களில் அவதானமாக காலம் தள்ளினேன்.

இப்படியானவை தமிழ்ப் பகுதிகளில் வெகுகுறைவு.இதைப் பெருமையாகக் கூறுவேன்;
ஆனால் இன்று எப்படியோ ஈசனே அறிவான்.

vasu balaji said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

/இப்படியானவை தமிழ்ப் பகுதிகளில் வெகுகுறைவு.இதைப் பெருமையாகக் கூறுவேன்;/

பெருமையா இருக்கு யோகன். வெள்ளந்தியான மக்கள், உழைப்பை நம்புற மக்கள் மாறமாட்டாங்க. எவ்ளோ கஷ்டம் வந்தாலும்.

Unknown said...

அட... இதுக்குப் பேரும் வியாபாரமா??

ஜெட்லி... said...

அதாங்க மூர் மார்க்கெட்....
ஏமாறாமல் யாரும் வெளிய வர முடியாது....

SUBBU said...

நல்ல வேலை நான் இன்னும் அங்க போனது இல்லை ;)

vasu balaji said...

/ Kiruthikan Kumarasamy said...

அட... இதுக்குப் பேரும் வியாபாரமா??/

இதுக்குப் பேர்தான் வியாபாரம். :)

vasu balaji said...

/ ஜெட்லி said...

அதாங்க மூர் மார்க்கெட்....
ஏமாறாமல் யாரும் வெளிய வர முடியாது..../

முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!.

vasu balaji said...

/ SUBBU said...

நல்ல வேலை நான் இன்னும் அங்க போனது இல்லை ;)//

வாங்ணா. எங்க நெம்ப நாளா ஆளக்காணோம்.