Monday, August 3, 2009

கை போனாலென்ன நம்பிக்'கை' இருக்கும் வரை



எனக்குள் நான் கண்ட என் திறமை உலகில் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது என நம்பச் செய்கிறது. ஒவ்வொருவரும் தனக்குள் ஏதோ ஒரு திறனை அடையாளம் காண முடியும்.. டக் லான்டிஸ்.

இந்தப் படங்களை வரைந்தவர் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டக் லான்டிஸ். 15 வயதில் உயர் நிலைப் பள்ளியில் மல்யுத்தப் போட்டியில் கழுத்தின் கீழ்ப்பகுதிகள் செயலிழந்தவர். தொலைக்காட்சி பெட்டிமுன் அதிக நேரம் செலவழிப்பதைக் கண்ட இவர் சகோதரர் மான்டி படம் வரைய போட்டி போட அழைத்து வாயில் பென்ஸிலை வைத்த நேரத்தில் தொடங்கியது தேடல். மிகப் பொறுமையாக தனக்கேயுரித்தான பாணியை வளர்த்துக் கொண்ட இவரின் படங்கள் பிரமிப்பூட்டுகின்றன. குறிப்பாக கண்களும், உடலமைப்பும்.

இறைவனோ இயற்கையோ ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் என்னவெல்லாம் ஒளித்திருக்கிறது! அடையாளம் காணாமல் நாம் தான் தொலைக்கிறோம் போல.

மற்ற ஓவியங்களைக் காண காணொளியை சொடுக்கி முழுத்திரையில் கண்டு பிரமியுங்கள்:


Doug Landis



இவரின் பேட்டியைக் காண இங்கே சொடுக்கவும் :
http://www.mouthart.com/mouthart/frame_info.html

லாண்டிஸ் வரைந்துக் கொண்டே அளிக்கும் பேட்டி:




***

6 comments:

Suresh Kumar said...

நல்ல தகவல்

குப்பன்.யாஹூ said...

ஊக்கம் அளிக்க கூடிய பதிவு.

நன்றிகள் பல

vasu balaji said...

நன்றி சுரேஷ் குமார், குப்பன் யாஹு, ராம்.

sakthi said...

நல்ல பகிர்வு பாலா

vasu balaji said...

sakthi said...

நல்ல பகிர்வு பாலா

நன்றி.

ராஜ நடராஜன் said...

இடைவெளி விட்டு வர்றதிலேயும் ஒரு நன்மை இருக்கும் போல தெரியுதே!யானைப் பசிக்கு மொத்தமா முழுங்கிட்டுப் போகலாம் போல தெரியுதே!