Thursday, August 13, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 92

வன்னியில் பாரிய மனித புதைகுழிகள் இருக்கின்றமை செய்மதி படங்களின் மூலம் அம்பலமாகியுள்ளது : சர்வதேச மன்னிப்பு சபை

இதுக்கு வேற செய்மதிப் படம் வேண்டுமா. அவ்வளவு மக்களும் காத்துலயா காணாம போய்ட்டாங்க. இந்த படமும் பொய்னு சொல்லுவான்.
_______________________________________________
அமெரிக்க அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடித் தொடர்புகள் காணப்பட்டதாக குமரன் பத்மநாதன் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்: லக்ஸ்மன் யாபா

ஒபாமாவுக்கு ஆதரவுன்னா உடனே இப்படியா? உனக்கு மத்த நாடெல்லாம் நேரடி உதவி இல்லன்னா இப்படி உளறுவியா?
_______________________________________________
நிபுன ராமநாயக்க என்ற மாணவர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும்: கோத்தபாய

லட்சக்கணக்குல சாவடிச்ச நாயி பேசுது பாரு. சிங்களவன் உசுருதான் உசுரா. மத்ததெல்லாம்?
_______________________________________________
மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை கண்டு பிடிக்க முன்னாள் புலி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு: இராணுவ தளபதி

எல்லாம் நீங்க குடுத்ததா இருக்கும் செட்டப் செல்லப்பா.
_______________________________________________
குண்டு பொருத்திய வான் கண்டு பிடித்ததாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் வெளியிடும் கருத்துக்களில் உண்மையில்லை: பிரதி பொலிஸ் மா அதிபர்

பேராவது நிஜமா சொல்லுவானுங்களா தெரியல. ராணுவத்தாந்தான் புளுகலாமான்னு இவன் பங்குக்கு புளுகறானுங்களா?
_______________________________________________
கே.பி. மூலம் புலிகளின் நிதியினைப் பெற்று அபிவிருத்திக்குப் பயன்படுத்த வேண்டும்: எல்லாவல மேதானந்த தேரர்

யார் அபிவிருத்திக்கு? சாமியாருன்னாலும் நிதின்னா ஆசை விடாதே. சரியான சோதானந்தர்.
_______________________________________________
சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமையவே பத்மநாதன் கைது செய்யப்பட்டார்: அரசாங்கம் அறிவிப்பு

ரொம்பதான்டா நக்கல். சர்வதேச சட்டத்தை அப்படியே மதிக்கிறவன் மாதிரி பேச்சு.
_______________________________________________
நான் தோற்றதைப் பற்றிக் கவலைப்படவில்லை இதனால் நாட்டுக்குத் தான் இழப்பு : வீ.ஆனந்தசங்கரி

வயசாயிட்டா உளர்ரது சகஜம்தான். பத்திரிகைக்காரன் எதிரில உளறலாமா?
_______________________________________________
தமிழர்களின் சுதந்திரக் கனவு இன்னமும் மிச்சம் இருக்கிறது: 'ரைம்'

ஆமாம். அது மட்டும்தான் இருக்கிறது.
_______________________________________________
இலங்கை தமிழர் பிரச்சனை: அமெரிக்கா ஆலோசனை

நீங்களும் புலிதான்னுட்டான். அப்புறமென்ன. பார்த்து பண்ணுங்கப்பு.
_______________________________________________
கே.பிக்கு உலகம் முழுவதிலும் ஆயிரத்து 582 வங்கி கணக்குகள் :அரசாங்கம்

அத்தனையும் மண்டைக்குள்ள வெச்சிருந்து சொன்னாரா? ஏண்டா அளவில்லாம புழுகுவிங்க. கின்னஸ் சாதனையிது சாமிகளா.
_______________________________________________
இளைஞர்கள் அனைவரும் தலைவர்களாக உருவாக வேண்டும்: அப்துல் கலாம்

நடக்கிற கதையா ஐயா. முதியவர்கள் விட வேண்டாமா? எல்லாரும் தலைவரானா தொண்டர் வேண்டாமா?
_______________________________________________
சர்வக்ஞர் சிலை திறப்பில் பங்கேற்பது தமிழர்களின் கடமை: இல.கணேசன்

அங்க இருக்கிற ஜால்ரா சொல்லி பார்க்கட்டும் திருவள்ளுவர் சிலை திறப்பில் பங்கேற்பது கன்னடர்கள் கடமைன்னு? ஏன்யா இப்படி?
_______________________________________________
தந்தையை வெட்டிக்கொன்ற மகன் :செய்தி

அப்போ இன்னோரு கேரளா உருவாகுமா?
_______________________________________________
பொறியியல் கல்லூரிகளில் 30,199 இடங்கள் காலி!

எஞ்சினியர் ப்ரொடக்ஷன் பண்ணா அது சரி. இன்சினீயருங்கள ப்ரொடக்ஷன் பண்ணா இதான் நிலமை.
_______________________________________________
ஆகஸ்ட் 15: டெல்லியில் விமானங்கள் பறக்க தடை

காத்தாடி, காக்கா குருவியெல்லாம் பறக்கலாமா?
_______________________________________________
தனிக்குடித்தனம் வர மறுத்ததால் கணவர் மீது புகார்:செய்தி

போற போக்கில சினிமாக்கு கூட்டிட்டு போகலைன்னாலும் பெண்வதைச் சட்டத்துல போட்டுத் தள்ளிருவாய்ங்க போல.
_______________________________________________

5 comments:

Unknown said...

நல்லாருக்கு .....

sakthi said...

பொறியியல் கல்லூரிகளில் 30,199 இடங்கள் காலி!

எஞ்சினியர் ப்ரொடக்ஷன் பண்ணா அது சரி. இன்சினீயருங்கள ப்ரொடக்ஷன் பண்ணா இதான் நிலமை.

ஆமாம் கொடுமையான நிலை தான்

vasu balaji said...

நன்றி மேடி, சக்தி.

யூர்கன் க்ருகியர் said...

//சர்வக்ஞர் சிலை திறப்பில் பங்கேற்பது தமிழர்களின் கடமை: இல.கணேசன்
//

தலைக்கு நூறு ரூபாயும் ஒரு பிரியாணி பொட்டலமும் கொடுத்தா.தன்மான தமிழர்கள் அனைவரும்.ஜரூர் ஆஜர் !

vasu balaji said...

:)) சரியாச் சொன்னீங்க யூர்கன்