Monday, July 27, 2009

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் ..

வாழ்க பாரதம்.

மூளை வடிகால் (Brain Drain) [என்ன மொழி பெயர்ப்பு எழவுன்னு தலைல அடிச்சிக்க வேணாம் கீழே வாழ்க தமிழ் படிச்சுக்குங்க ஏன்னு புரியும்], இந்திய மக்கள் வரிப்பணத்துல படிச்சிட்டு அயல்நாட்டுல காசு தேட போறாங்க. நாட்டுப் பற்றில்லன்னு எல்லாம் சீறும் தேசிய வாதிகள் பதில் சொல்லட்டும்.

கைநாட்டு அரசியல் வாதிக்கு கைகட்டி நின்னாலும் நம்ம நாட்டுல கலக்டர்னா ஒரு கெத்து தானே. அதை ஒரு குறிக்கோளா வெச்சி தாயாராகிற‌வங்கள பார்த்திருக்கீங்களா? தவம்னா அப்படி ஒரு தவமுங்க. சாப்பாடு, தூக்கம், பொழுது போக்கு எல்லாம் தொலைச்சி, நூலகம் நூலகமா அலைஞ்சி, இலவச ஆலோசனை, காசு குடுத்து பயிற்சின்னு உலகத்துல இது ஒண்ணுதான்னு இருப்பாங்க. அப்படி இருந்தும் தேர்ச்சி அடையறது ரொம்ப கொஞ்சம். தேறினதுல சிலது ஐ. ஏ.எஸ் வரல ஐ.பி.எஸ் குடுத்தான்னு திரும்ப எழுதி ஊத்திக்கும்.

ராஜஸ்தானைச் சேர்ந்த மணிராம் சர்மா ஒண்ணில்ல மூணு தரம், 2005, 2006 மற்றும் 2009ம் வருடங்களில் தேர்ச்சி அடைந்தும் வேலைக்கு தகுதி இல்லையாம். காரணம் அவருக்குக் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டிருக்காம். காரித்துப்ப தயாரா எச்சி கூட்டி வெச்சிருப்பீங்களே. இருங்க இன்னும் இருக்கு கேவலம். 2005 ல தேறி நேர்முகத்தேர்வுக்குப் போகிற போது இந்த மாதிரி ஆளுங்கள என்ன பண்ணுறதுன்னு சட்டமே இல்லையாம். (காதுகேக்காம, கண்ணு தெரியாம இருக்கிறவனெல்லாம் கலக்டராவரதான்னு திமிரா தெரியல). அதுக்கப்புறம் மகா மேதாவிகள் மண்டைய குடைஞ்சி 70% க்கு குறைவா காது கேக்காட்டி பரவால்ல குடுக்கலாம்னு சட்டம் போட்டாங்களாம். 2006 ல தேறினப்ப இவருக்கு 100 சதம் கேட்கும் திறன் குறைவுன்னு காரணம் காட்டி கை விரிச்சிட்டானுவளாம்.

மனுசன் அசராம கிட்ட தட்ட 7.5 லட்சம் செலவு பண்ணி கோஷ்லியர் கருவியை காதுக்குள்ள பதிஞ்சி 2009 ல தேர்ச்சியான 791 பேரில முதல் ஐம்பதுக்குள்ள தேர்வானார். 220/300க்கு மதிப்பெண். அதுவும் முதல் இரண்டு முறையும் நேர்முகத் தேர்வில் விடியோ மூலம் கேள்விக்கு பதில் சொன்ன இவர் இந்த முறை நேரடியாக கேள்விக்கு பதில் கூறி தேர்ச்சி அடைந்தவர். விட்ருவமா? மருத்துவ சோதனையில தேவைக்கு அதிகமா 70% சதவீதம் கேக்கலன்னு சொல்லவே தேர்ச்சியில்லைன்னு சொல்லிட்டாங்களாம். இத விட கொடுமை பணத்த வாங்கிகிட்டு அறுவை சிகிச்சை செய்த RML ஆசுபத்திரி இப்போ 100 சதவீதம் கேக்காதுன்னு சான்றிதழ் தராங்களாம். ராஜஸ்தான் மாநிலத்தில அமைக்கப் பட்ட காது மூக்கு தொண்டை மருத்துவர் குழு மீள் பரிசோதனை செய்ய அரசு ஆசுபத்திரியில வசதி இல்லைன்னு சொல்லிட்டாங்களாம். கேட்டது காதில விழாமலா இவ்வளவு மதிப்பெண் வாங்க முடியும்?

தெரியாமதான் கேக்குறேன். ஒரு மேட்சுல செஞ்சுரி போட்டவன், மூணாவது ஓடினது தடுக்கி விழுந்ததால வெண்கலப் பதக்கம் வாங்கினது, அரசியல் காரணமா பாதி தேசம் புறக்கணிச்ச போட்டியில சொத்த அணியை வென்று பரிசு வாங்கின குழுவில துண்டு நீட்டிகிட்டு நின்னது, தண்ணில விழுந்தா கைய கால உதைச்சி முங்காம பிழைச்சத எல்லாம் அரசுத் துறை, வங்கித்துறைன்னு போட்டி போட்டுகிட்டு அதிகாரி ஆக்குவாங்க. அவன் சொந்ததில கோச்சிங்னு போய்ட்டு காசு பார்த்து ஒரு நாள் அலுவலக வேலைபார்க்க மாட்டான். திறமை இருக்கோ இல்லையோ காசு குடுத்து வேலை வாங்கலாம். மந்திரி மண்ணாங்கட்டின்னு ஆளு அம்பு இருந்தா என்ன வேணும்னாலும் நடக்கும். திறமைக்கு மட்டும் மதிப்பில்லை.

அப்படியே வேலை குடுத்தா என்ன? கோப்பு அல்லது மனு அதை வச்சுத் தானே நடவடிக்கை எடுக்க முடியும்? கலைக்டரைய்யா காப்பாத்துன்னு அலறினாலும் மனு குடுய்யான்னு தானே விரட்டுவானுவ. அப்புறம் என்னய்யா கேக்காம போனா? கனவு காணச் சொன்ன கலாம் ஐயா. கனவு கண்டதுக்கு பலன் இதுதான். காது கேக்க முடிஞ்சும் கேட்டுறப்படாதுன்னு தலைப்பாகையில மறைச்சிருக்கிற மன்மோகன் சிங் ஐயா. உங்க காதில விழ வேணாம். கண்ணில படாமலா போயிருக்கும். குடுத்துதான் பாருங்களேன்.

மாட்டானுவ. இப்படி திறமை சாலிய எல்லாம் விட்டுடுவானுங்க. குடி கெடுக்கிற சவ சங்கரன், நாராயணன் எல்லாம் பதவிக்காலம் முடிஞ்சாலும் சங்கூதற வரைக்கும் இவனுங்கள விட்டா ஆளில்லை. பதவி நீட்டிப்புன்னு எவ்வளவு வருடம் வேணும்னாலும் குடுப்பானுவ. வாழ்க பாரதம்!


வளர்க தமிழ்:

Deadline: படைத்துறை சிறைச் சாலையில் கைதி கடந்து சென்றால் சுட்டு வீழ்த்துவதற்குரிய கோடு

Chairman: தூக்கு நாற்காலியை சுமந்து செல்பவர்

kidney: உட்காருமிடத்தில் வரும் கட்டி

Arrest: பின் துறத்திச் செல்.

நான் நக்கலடிக்கலைங்க. சென்னைப் பல்கலைக் கழகம் சென்ற வாரம் வெளியிட்ட ஆங்கிலத் தமிழகராதியில இருக்குதாம் இப்படி. நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த செய்தி. இதுக்கு வியாக்கியானம் வேற. 1911 ல வெளியான ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியை அடிப்படையா வெச்சி 1950ல வந்த சுருக்கமான ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியின் மறு பதிப்பாம். நாளுக்கொரு புது வார்த்தை வரும்போது 59 வருடமா இந்த இழவைப் படிச்சி தமிழன் உருப்படுறது எங்க? பல்கலைக்கழக பதிப்பாச்சே தப்பாவா சொல்லப் போறாங்கன்னு தானே நம்புவோம்? இந்தக் கட்டுரையில பஞ்ச் நக்கல் வேற. ரஜினி சொன்னா மாதிரி டாக் இங்கிலீஷ், வாக் இங்கிலீஷ், லாஃப் இங்கிலீஷ் பண்ற தமிழனுக்கு கஷ்டமாம். மு.வ. சொன்ன அமாவாசை விருந்து சாமியாருங்க இன்னும் மாறலை பாருங்க.

22 comments:

பழமைபேசி said...

பத்தி பிரிச்சு அழகா இருக்கு... இருங்க படிச்சுட்டு வர்றேன்...

பழமைபேசி said...

ஆகா...அகராதி விசயம்... மிகவும் வருத்தமான விசயம்...

vasu balaji said...

/ஆகா...அகராதி விசயம்... மிகவும் வருத்தமான விசயம்.../

ஆமாங்க பழமை. அதிர்ச்சியா இருந்தது.

vasu balaji said...

/பத்தி பிரிச்சு அழகா இருக்கு.../

வழிகாட்டலுக்கு நன்றி.

SUBBU said...

வாழ்க பாரதம்!
:((((((((

SUBBU said...

அந்த அகராதி விஷயம் எனக்கு விளங்கல ஏன்னா ஆங்கிலத்துல நான் வீக் :(((((((((((((

vasu balaji said...

வாங்க சுப்பு. :)))

கலகலப்ரியா said...

wot.. kidney னா மூளைன்னு இல்ல நினைச்சேன்.. whtz da naaansense aaf da idiots aaf da.. dsjdsjfds+"*%&/%/(...

vasu balaji said...

/ கலகலப்ரியா said...

wot.. kidney னா மூளைன்னு இல்ல நினைச்சேன்.. whtz da naaansense aaf da idiots aaf da.. dsjdsjfds+"*%&/%/(.../

வாங்க. சுகமா இருக்கீங்களா. அப்படி நினைச்சிருந்தாலும் பரவால்ல. கட்டி எங்க இருந்து வந்திச்சி.அவ்வ்வ்வ்

துபாய் ராஜா said...

கொலைகாரனும்,கொள்ளைக்காரனும் அரசியல்வாதியாகி ஆட்சிக்கு வரலாம். ஆனால் திறமையுள்ளவர்கள் அரசுப்பணிக்கு வரமுடியாது. இது இந்தியாவின் தலையெழுத்து. மருத்துவத்திற்கு செலவழித்த பணத்தை தேர்வுகுழு உறுப்பினர் ஒருவரிடம் கொடுத்திருந்தால் உடனே பணிஆணை கிடைத்திருக்கும்.

கலகலப்ரியா said...

நீங்க ஏன் கட்டி வந்து உக்கார முடியாம உக்காந்த மாதிரி "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்" னு முனகறீங்க.. நான் கண்டு புடிக்கறேன்.. கட்டிய.. ச்சே.. கிட்னிய.. ஐ மீன் கிட்னிக்கும் கட்டிக்கும் உள்ள தொடர்ப.. :ப

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...//

அப்டின்னா அரசுப் பணில உக்காந்திருக்கிறவங்க எல்லாம் ஹிஹி.. நேரிடையா சொல்லலைனாலும் நிஜத்த சொல்லி இருக்கீங்க ராஜா..

vasu balaji said...

வாங்க துபாய் ராஜா. அப்படியும் நடக்கலாம்.

யூர்கன் க்ருகியர் said...

இப்பெல்லாம் "வாழ்க பாரதம்" என்று சொல்வதற்குள் சரத் பவார் வாய் மாதிரி எனக்கும் கோணிக்கொள்கிறது!

துபாய் ராஜா said...

//கலகலப்ரியா said...அப்டின்னா அரசுப் பணில உக்காந்திருக்கிறவங்க எல்லாம் ஹிஹி.. நேரிடையா சொல்லலைனாலும் நிஜத்த சொல்லி இருக்கீங்க ராஜா..//

எல்லாம் சொந்த அனுபவம்தான்.

தமிழ்நாட்டில இப்ப அரசு பணியெல்லாம் ஃபிக்ஸட் ரேட்தான். ஆசிரியர் பணி 7 லட்சம். பேராசிரியர் பணி 12 லட்சம்.பொதுப்பணிதுறை, மின்வாரியம் எல்லா இடத்திலயும் சிலபல லட்சங்கள் கொடுத்தா உடனே வேலை வாங்கிடலாம்.

தேர்தல் அறிவிப்பிற்கு முன் எல்லாதுறையிலும் பணிநியமனம் மூலம் பல நூறு கோடிகள் வசூல் செய்ய உத்தரவு.

சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்த பொழுது பல தரகர்களை நேராகவே சந்தித்தேன்.அவர்களது மேலிடத் தொடர்பு கண்டு அதிச்சியானேன்.

துரைமுருகன் பதவி பறிக்கப்பட்டதன் காரணமே பணிநியமனம் மூலம் வந்த பல கோடிகளில் சில கோடியை தலைமைக்கு கப்பம் கட்டாததுதான்.

கிருஷ்ண மூர்த்தி S said...

ஒரு முப்பது, முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னாலேயே, கோவையிலும், வேறு சில இடங்களிலும் தூய தமிழில் தான் விளம்பரப் பலகை வைக்க வேண்டும் என்று'அன்பான' கவனிப்பு வந்தபோது, காப்பிக் கடை இப்படியானது:
"கொட்டை வடிநீர் குழம்பியகம்"

ராதா&கோ --ராதாவும் குழுமமும்

அரசியல்வாதிகள் Pro Chancellor ஆக இருக்கும் போது, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கட்சி அனுதாபிகளாக இருக்கும்போது, வேறு எப்படி இருக்கும்?

vasu balaji said...

வாங்க யூர்கன்.

vasu balaji said...

/கிருஷ்ணமூர்த்தி said...

அரசியல்வாதிகள் Pro Chancellor ஆக இருக்கும் போது, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கட்சி அனுதாபிகளாக இருக்கும்போது, வேறு எப்படி இருக்கும்?/

வாஸ்தவம்.

sakthi said...

அருமையான பகிர்வு பாலா சார்

Deadline: படைத்துறை சிறைச் சாலையில் கைதி கடந்து சென்றால் சுட்டு வீழ்த்துவதற்குரிய கோடு

Chairman: தூக்கு நாற்காலியை சுமந்து செல்பவர்

kidney: உட்காருமிடத்தில் வரும் கட்டி

Arrest: பின் துறத்திச் செல்.

ஆனால் இது கொடுமை

vasu balaji said...

வாங்க. நன்றி சக்தி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அவர்கள் அகராதியில் தப்புத் தப்பாகப் போடுவது கண்டனத்துக்கு உரிய விடயம்.
நல்ல பதிவு பாலா.

vasu balaji said...

வாங்க ஜெஸ்வந்தி.