Thursday, July 23, 2009

சுவாரசிய பதிவர் விருது

சுவாரசிய பதிவர் விருது நம்மளுக்கும் கிடைச்சிருக்கு. கொடுத்தவங்க சக்தி. இப்பொழுது என் கடமையை நான் செய்தாகணும். ஆறு பேருக்குதான் தரணுமாம். அவங்க மூலம் மத்தவங்களுக்கு சேரும் என்ற நம்பிக்கையுடன் நான் பகிரும் பதிவர்கள் இதோ:
1:ராஜ நடராசன்: தெளிவான நடை, பரவலான விஷயங்கள், தீர்மானமான கருத்துக்களின் பதிவு இவருடையது.
2: மகேஸ்வரன்:அத்தி பூத்தாற்போல் எழுதினாலும் நச்சென இருக்கும் இடுகைகள். நிறைய எழுதவேண்டும் என்ற கோரிக்கையுடன்.
3: சுப்பு: தல விசிறி. கல கலப்பான இடுகைகள்
4:கிரி:இது அதுன்னு வளையத்துக்குள்ள இல்லாம எல்லாத்துலயும் அசத்தும் இடுகைகளின் பிரம்மா.
5:மயாதி: கவிதையில் கலக்கியவர். இப்போது உரைநடையிலும். எனக்குத் தகுதி இருக்கிறதா என்ற பயத்துடன்.
6: யூர்கன் க்ரூகியர்: அசத்தல் பதிவர்

இதுல ஒரு ரகசியம். இவங்க போற பதிவுக்கெல்லாம் நானும் போவேன். விட்டுப் போனவங்களுக்கு இவங்க குடுக்கிரப்போ இன்னும் பெருமை சேரும்ல.
மீண்டும் ஒரு முறை சக்திக்கு நன்றியுடன்..
(படத்தைச் சேமித்து உங்கள் பதிவில் ஒட்டிக்கிடுங்க)


14 comments:

sakthi said...

ம்ம்ம்ம்

நடக்கட்டும்

வாழ்த்துக்கள் விருதினை பெற்றவர்களுக்கு

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

விருது பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

கிரி said...

பாலா உங்கள் அன்பிற்கு நன்றி ..மிகைப்படுத்தி கூறிட்டீங்க

vasu balaji said...

நன்றி ஜஸ்வந்தி.

vasu balaji said...

/பாலா உங்கள் அன்பிற்கு நன்றி ..மிகைப்படுத்தி கூறிட்டீங்க/

உங்கள் சமீபத்திய இடுகையின் பின்னூட்டங்களே சான்று.

யூர்கன் க்ருகியர் said...

என்னால நம்பவே முடியல நண்பரே..
உங்களுக்கு அன்பு கலந்த நன்றிகள்.

SUBBU said...

me the 7th

அட விருது எனக்குமா..

பாலா உங்கள் அன்பிற்கு நன்றி ..மிகைப்படுத்தி கூறிட்டீங்க...

SUBBU said...

இந்த விருத எப்படி என்னோட பிளாக்ல கொண்டுவரது ??

:(((((((((((

vasu balaji said...

படத்துல ரைட் கிளிக் பண்ணி சேமிச்சிக்கோங்க சுப்பு. உங்க பதிவில போட முடியும். வாழ்த்துகள்.

vasu balaji said...

மிகையே இல்லை யூர்கன்.

Maheswaran Nallasamy said...

கத்து குட்டி எனக்கும் விருதா?..மிக்க நன்றி....

vasu balaji said...

/ Maheswaran Nallasamy said...

கத்து குட்டி எனக்கும் விருதா?/

நீங்க கத்துக் குட்டியா. அடிக்கடி எழுதுங்க. பார்க்கிறவங்களுக்குத் தெரியும்.

ராஜ நடராஜன் said...

பாலா!வந்து வந்து எட்டிப் பார்த்துட்டு மட்டும் போயிட்டுருக்கேன்.அதுவும் மே 18க்குப் பிறகு எழுதுவதின் அர்த்தம் கூட இல்லாமல் போன மாதிரி உணர்வு.அடிச்சு ஆடிகிட்டு இருக்கும் பயில்வான்களையெல்லாம் விட்டு விட்டு கைப்புள்ளய புடிச்சு முன்னுக்கு நிறுத்தறது நல்லாவேயில்ல:)அப்புறம் தோத்தவனுக்குத்தான் பரிசுன்னு பரிசுக் கோப்பைய கையில தூக்கிட்டுப் போக வேண்டி வரும்.சொல்லிப்புட்டேன்.

(பெயர் சுட்டியமைக்கு நன்றியுடன்)

vasu balaji said...

/கைப்புள்ளய புடிச்சு முன்னுக்கு நிறுத்தறது நல்லாவேயில்ல:)/

கைப்புள்ள சொல்றா மாதிரி அடின்னா அடி என்னா அடின்னு நச்சுன்னு எழுதுற உங்களச் சுட்டாம எப்படி.