Sunday, July 19, 2009

இங்கிவளை யான் பெறவே...

ரொம்ப வருடங்கள் கழித்து நான் பார்த்த திரைப்படம் நாடோடிகள். அதில வரும் வசனம் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி இவங்கள்ளாம் அவங்களா மட்டுமே இருக்க முடியும். நண்பந்தான் எல்லாமுமா இருக்க முடியும்ங்கறா மாதிரி. கிட்டத்தட்ட 5 வாரம் அதை அனுபவிக்கிற வரம் கிடைத்தது எனக்கு.

பரீட்சைக்கு போகும் அவசரம். சிற்றுண்டிச் சாலையில் கொறித்து காஃபி சாப்பிட்டு கிளம்பும் நேரம் அந்த அவசரத்திலும் மேசையில் சிந்திய காஃபியை காகிதத் துவாலையில் துடைத்து, நாற்காலியை மேசை அடியில் தள்ளிவிட்டு சர்வரைப் பார்த்து நன்றி சொல்லி கிளம்பிய போது அவர் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியில்

குற்றாலத்தில் வயதான பாட்டி முறுக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். வாங்குவார் எவருமில்லை. ஓடிச் சென்று 10 ரூபாய் நீட்டி அவர்களின் உழைப்பை மதிக்கும் விதமாய் ஒரே ஒரு முறுக்கு எடுத்துக்கறேன் என்று நகர்ந்தபோது அந்த கிழவியின் முகத்தின் வியப்பில்

தென்காசியில் ஒரு உணவு விடுதியில் தனியாக வேறு மேசையில் உணவருந்த உட்கார்ந்த ஆட்டோ ஓட்டுனரை எங்கள் மேசையில் அமர வைத்து என்ன வேணுமோ சாப்பிடுங்க என்ற போது அவர் முகத்தில் தோன்றிய பெருமிதத்தில்

தெருவோரம் 3 கொய்யா பத்து ரூபாய் என்ற பெண்ணிடம் நாலு தர பேரம் பேசிய போது கடிந்து கொண்டு கடைகளில் கேட்ட விலை கொடுத்து வாங்குவீங்க. ஒரு கொய்யா கம்மியா கொடுத்து அந்தம்மா கோட்டை கட்டப் போகுதா என்று என்னைக் கிழித்த போது மனிதம் போதித்த ஆசானாய்

திருத்தணி மலையில் கோவில் யானைக்கு காசு கொடுக்க நடுங்கி நெட்டித் தள்ளாத குறையாய் தள்ள யானையே இது சரி வராது என்று ஒரு அடி முன் வைத்து தலையைத் தொட நடுங்கிய படி நின்று கனிவாய் பார்த்து பாவம் இப்படி பண்ணி வெச்சிருக்காங்க என்று நெகிழ்ந்த போது

குமுளி சாலையோரம் மாம்பழத் தோப்புக்குள் இருந்த நாய்க்குட்டியை தூக்கலாமா என்று கேட்டு அள்ளி அணைத்து நாம் கொண்டு போய்டலாமா என்று தவியாய் தவித்து அரை மனதாய் விட்டு வந்த போது

மெரினாவில் குதிரைக்காரன் சத்தியம் பண்ணாத குறையாய் குதிரைக்கு வலிக்காது என்று சொல்லியும் வற்புறுத்தலில் ஏறி ஒரு நிமிடம் உட்கார்ந்து இறங்கிய மறு நொடி அதை மன்னிப்பு கேட்காத குறையாய் தடவிக் கொடுத்து, பாவம் வலிச்சிருக்கும் என்று சுணங்கிய போது தேவதையாய்

தேக்கடியில் படகில் போகும்போது தூங்கி வழிந்த என்னை புகைப்படம் எடுத்துக் காட்டி சிரித்த போது

குற்றாலத்தில் விடுதியில் சாரல் மழையை கையிலேந்தி சின்ன வயது நினைவைச் சொன்ன போது

ஈர மணலில் கால் பதித்து அது காய்வதற்குள் புகைப்படம் எடுத்த போது

வலது புறம் பார்த்துப் பார்த்து கார் கதவைத் திறந்து இற‌ங்கி நடக்க மோட்டார் சைக்கிளில் போன ஒரு ஆள் தேவையே இல்லாமல் ஏதோ சொல்ல யோவ் போய்யா என்று சத்தம் வராமல் சொல்லி ஓடி வா திரும்பி வந்து திட்டப்போறாங்க என்ற போது

காரையாரில் படகில் இருந்து தண்ணீரில் அளைந்த படி வந்த போது குழந்தையாய்

கவனக் குறைவாய் எங்கேயோ கிரீஸ் என் சட்டையில் பட்டிருக்க ஸ்பென்சர் ப்ளாசாவில் ஒரு டி சர்ட் தேடி எடுத்து வாங்கி போடவைத்த போது

ஆசை ஆசையாய் வகை வகையாய் சமைத்து வாழை இலையில் சாப்பிடலாம் என்று கனிவோடு பரிமாரியபோது

சாப்பிடும் போது மேலே சிந்தாமல் சாப்பிட மாட்டிங்களா என்று கடிந்த போது

நேரமில்லாம போய்டுத்து. பச்சைக் கரை வேட்டி வாங்கிக்கோங்க அந்த டி சர்ட் கூட போட நல்லா இருக்கும் என்று சொன்ன போது என் அம்மாவாய்

எதற்கோ என் மகளைக் கடிந்து கொள்ள நேர்ந்த போது அப்படி பண்ணாதீங்க, அவளுக்கு வலிக்கும் என்ற போது

சாரல் மழையில், மலைப் பாதையில் மனம் விட்டுப் பேசி நடந்த போது

மகாபலிபுரம் நாமக்கல் என்று மலைக் கோவில்களில் வியந்தபோது தோழியாய்

காரில் இருந்த படி இரண்டு இளநீர் சாப்பிட அந்த மூதாட்டியை யாரோ அலக்கழித்த போது நீங்க குடுங்க நான் கொண்டு போய் கொடுக்கிறேன் என்று சிறுமை கண்டு பொங்கிய ரௌத்திரம் பழகும் அவள் தன் கூட்டுக்குத் திரும்பும் நாள்.

விமான நிலையத்தில் திரும்பித் திரும்பிப் பார்த்த படி அவள் செல்கிறாள். சொல்லாமல் விட்டது எத்தனையோ. மனம் கனக்க கண் தளும்ப வெளியில் வருகையில் அவளுக்குப் பிடித்த பாரதியின் வரிகள், சீர்காழியின் குரலில், என் மனதில்..

இங்கிவளை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்..

***

22 comments:

பழமைபேசி said...

படிச்சிட்டு வர்றேன்...

பழமைபேசி said...

மனசைத் தொட்டீங்க போங்க.... கலக்கல் நனவோடை கலகலப்புக்கு...

பாலா... said...

நன்றி பழமை.

கலகலப்ரியா said...

ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாய்ங்க..! ரொம்ப தேவை! ஏன் தினமும் எழுந்து, பல்லு விளக்கி, காபி சாப்ட்டு, இட்லி சாப்ட்டு, மறக்காம மத்யான சாப்பாடு சாப்டுன்னு இதெல்லாம் விட்டுட்டீங்களே!!!!! ராவணா.. ராவணா!

பாலா... said...

/கலகலப்ரியா said

ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாய்ங்க..! ரொம்ப தேவை! /

இதெல்லாம் நேர சொல்ல முடியலீங். மனசுக்குள்ள சுமந்த சுகங்களுங்க. சொல்லத்தான் வேணும்.

ச.செந்தில்வேலன் said...

அழகான பதிவு..

முறுக்குக்காரம்மா, கொய்யாப்பழக்காரம்மா, என பல விஷயங்களை அழகாக தொகுத்துள்ளீர்கள். இது போன்றவற்றை நாம் கவனிக்க மறப்பது சோகமானது

யூர்கன் க்ருகியர் said...

மனது நெகிழ வைக்கும் தொகுப்பு .. பகிர்வுக்கு நன்றி

ஒவ்வொரு நாளும் நம்முள் புதுப்புது அனுபவவங்களை விட்டு செல்கிறது.
பல நேரங்களில் பெருமிதம் அடைந்தாலும் சில நேரங்களில் குறுகவும் வேண்டியிருக்கிறது.

Maheswaran Nallasamy said...

Taxi driver-kku tips kodukka sandai pottatha vittuteengale...

பாலா... said...

நன்றி செந்தில்வேலன்.

பாலா... said...

/ யூர்கன் க்ருகியர் said...

மனது நெகிழ வைக்கும் தொகுப்பு .. பகிர்வுக்கு நன்றி /

நன்றி .

பாலா... said...

/ Maheswaran Nallasamy said...

Taxi driver-kku tips kodukka sandai pottatha vittuteengale.../

வாங்க மகேஸ். ஆமாம். அது சொல்ல நிறைய இருக்கு. ஒரு ஒரு நாளும் பார்த்து பிரமிச்சது ஏராளம். இதுக்கே கத்துறாங்க என்ன இதுன்னு. ஆனாலும் சொல்லாம முடியுங்களா?

கலகலப்ரியா said...

//Maheswaran Nallasamy said...

Taxi driver-kku tips kodukka sandai pottatha vittuteengale...//

ஆஹா வாங்க வாங்க.. இன்னும் எத்தன பேருய்யா கிளம்பி இருக்கீங்க.. என்னோட பொழைப்ப இப்டி ப்ளொக்-ல போட்டு பஞ்சு பஞ்சா பிச்சு போடுறீங்களே.. சாமிங்களா.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. இத போயீ செய்தியா போடுறீங்களே சாமிங்களா.. இது அடுக்குமா.. :(((((.. இது போதும்டா சாமி.. இனிமே தாங்காது.. வேணாம்.. அழுதுடுவேன்.. :((((

கலகலப்ரியா said...

//ஒரு ஒரு நாளும் பார்த்து பிரமிச்சது ஏராளம்//

ஐயா பாலா.. இது உமக்கே அடுக்குமா... பிரமிப்புங்கிறது எவ்ளோ பெரிய வார்த்தை.. ஏன்யா ஏன்? ஏன் இந்தக் கொலைவெறி.. :((

பாலா... said...

/பிரமிப்புங்கிறது எவ்ளோ பெரிய வார்த்தை.. ஏன்யா ஏன்? ஏன் இந்தக் கொலைவெறி.. :((/

ஏனுங். ஏதோ நான் மட்டும் சொன்னா அது என்னோட எண்ணப் பிரதிபலிப்புன்னு விடலாம். கூட இருந்த மகேசும்தானே சொல்றாரு.

கலகலப்ரியா said...

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.....ள விடுங்க சாமிங்களாஆஆஆஆஆஆஆ

ராஜா | KVR said...

கொஞ்சம் மென்மையான மனசு உள்ள எல்லோருமே செய்யிற விஷயங்கள் தான். ரொம்ப ஃபீலிங்ஸ் ஆகி எழுதி இருக்கிற மாதிரி தோணுது. நட்புல அதீத ஃபீலிங்ஸ் உடம்புக்கு ஆகாது :-)

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

சுவையான நல்ல பதிவு. மனத்தில் ஈரமிருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அத்தகைய அனுபவங்கள்.

பாலா... said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மருத்துவரய்யா.

கலகலப்ரியா said...

//ராஜா | KVR said...//

பாலா.. ஐயா நல்லா கேட்டுக்கிடுங்க.. இதெல்லாம் சாதாரணமய்யா.. KVR போன்ற மனசு படைத்தவர்களின் பின்னூட்டம் காணோமே என்று யோசித்தேன்.. =)).. நட்பு என்றால் இன்னைக்கு ஹாய் சொல்லி.. நாளைக்கு ஹோட்டல்ல உட்காந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வில் இருப்பவர்களுக்கு இது புரிவது கஷ்டம் ஐயா.. இனிமேலாவது இப்டி இடுகை போடாதீங்கோ.. ரோஜா இலையில் எச்சம் விழுந்து ரோஜாவின் அழகை ரசிக்க விடாமல் பண்ணும் அபாயம் இங்கு நிறைய்ய உண்டு.. வேணாம்மா..

Keith Kumarasamy said...

///தென்காசியில் ஒரு உணவு விடுதியில் தனியாக வேறு மேசையில் உணவருந்த உட்கார்ந்த ஆட்டோ ஓட்டுனரை எங்கள் மேசையில் அமர வைத்து என்ன வேணுமோ சாப்பிடுங்க என்ற போது அவர் முகத்தில் தோன்றிய பெருமிதத்தில்///

பின்னிட்டீங்க

ராஜா | KVR said...

ப்ரியா,

//நட்பு என்றால் இன்னைக்கு ஹாய் சொல்லி.. நாளைக்கு ஹோட்டல்ல உட்காந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வில் இருப்பவர்களுக்கு இது புரிவது கஷ்டம் ஐயா..//

என்னுடைய பின்னூட்டத்தை வைத்து இப்படி எப்படி கணித்தீர்கள் என்று புரியவில்லை. அதிகம் பழக்கம் இல்லாதவர்களின் பதிவில் அவசியமில்லாமல் பின்னூட்டம் இடக்கூடாது என்று எனக்கு பாடம் கற்பித்து இருக்கிறீர்கள். நன்றி.

வாழ்க வளமுடன்.

கலகலப்ரியா said...

//ராஜா | KVR said...//
அதீத பீலிங் பத்தி சொன்னதால உண்டான பீலிங்தானுங்கோ.. நாம பட்டு பட்டுன்னு மனசில தோணுறத போடுற டைப்பு.. பின்னாடி வருத்தப்பட தயாராத்தான் போடணும்.. ம்ம்.. நன்றிங்கோ.. நீங்களும் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..=)